Wednesday, June 11, 2014

தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் முகாமுக்கு குண்டுவீச்சு!


தமிழ்நாட்டில் மேட்டுப்பட்டிக்கு அருகிலுள்ள திருவாலங்குளத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதி முகாமின் மீது சனிக்கிழமை  பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன என்ற செய்தி Times of Indiaவிலும் இலங்கையின் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளிலும்  பரபரப்பான செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது

*சிங்களவர்கள் பங்குபற்றும் ஆங்கில இணையத் தளங்களிலும் இந்தச் செய்தி வெளியிடப்பட்டு தமிழ்நாட்டில், ஈழத் தமிழர்களின்சகோதரர்களிடம்அவர்கள்  படும் பாட்டை நக்கலடிக்கின்றனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சால்   ஈழத் தமிழ் அகதிகள் வசித்து வந்த வீடுகள் முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளனவாம்.

அந்தக் கிராமத்திலுள்ள ஓலைக் குடிசை  வீடுகளில் இலங்கைத் தமிழ் அகதிகள் வசித்து வந்தனர். திருமதி இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில் ஈழத் தமிழ் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்துக்கு அந்தக் கிராமவாசிகளில் ஒருபகுதியினர் சொந்தம் கொண்டாடத் தொடங்கியதிலிருந்து அங்கு பிரச்சனை இருந்து வருகிறது. சில தமிழ் அகதிகள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்த பின்னர், அங்கு வாழும் ஈழத் தமிழர்களை அந்தக் கிராம வாசிகளில் ஒரு பகுதியினர் தொடர்ந்து பயமுறுத்தி வந்துள்ளனர்.

அண்மைக்காலமாக, அந்த கிராம மக்களில் ஒரு குழுவினர் இலங்கை அகதிகளைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்தது மட்டுமன்றி, அவர்களை அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறுமாறும் வற்புறுத்தி வந்துள்ளனர். பல ஆண்டுகளாக இலங்கை அகதிகள் அங்கு  வாழ்ந்து வருவதுடன், அந்த மாவட்டத்திலுள்ள பல கிராமங்களில் கூலி வேலையும் செய்கின்றனர். ஈழ அகதிக் குடும்பங்களின் குழந்தைகளும் அந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலேயே கல்வி கற்று வருகின்றனர்.

இந்தப் பிரச்சனை குறிப்பிட்ட காலமாக தொடர்ந்து வருகிறது, அதைச் சாக்காக வைத்து சில விசமிகள் பெட்ரோல் குண்டுகளை இலங்கைத் தமிழ் அகதிகளின் குடிசைகளின் மீது வீசியுள்ளனர். அதனால் அந்தப் பகுதியிலிருந்த அத்தனை குடிசைகளும் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன. SUV வாகனத்தில் வந்த ஐந்து பேரைக் கொண்ட குழு ஒன்றே குண்டுகளை வீசியதாகக் கூறுகிறது காவல்துறை.

கூலி வேலைக்குக் சென்று வீடு திரும்பி நித்திரையில் ஆழ்ந்திருந்த ஈழத் தமிழர்கள் வாகனங்களின் பலத்த சத்தத்தை(screeching sound) கேட்டு விழித்துப் பார்த்த போது, முகமூடி அணிந்திருந்த மனிதர்கள் பெற்றோல் நிரப்பப்பட்ட கான்(Cans)களை குடிசைகளின் மீது எறியத்தொடங்கியதுடன் , அதற்கு நெருப்பையும் பற்ற வைத்துள்ளனர். அதனால் அங்கிருந்த குடிசைகள் அத்தனையும்  முற்றாக தீக்கிரையாகின. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்கிறது காவல் துறை


இந்தச் செய்தியைப் பற்றி சில சிங்களவர்களின் கருத்துக்கள்: 
* Sinhala Comments: 
"Ammandi Jaltara lalitha is so concerned abt the tamils in Sri Lanka... LOL!
and seems to be her own people.. are harrassing..
Now that the war is over.. if they decide to return to Lanka.. they can have much more decent & safe life than in the poop garbage land!
Truly speaking I want our gov make arrangements to get them back"
 
"Monkeys were robbing and destroying their 'brothers' ' fishing resources.
Now they're burning their houses!"



Ref:
Gang hurls bombs on Lankan refugee camp

http://www.dailymirror.lk/news/48222-gang-hurls-bombs-on-lankan-refugee-camp.html

http://timesofindia.indiatimes.com/city/trichy/Gang-hurls-bombs-on-Lankan-refugee-camp/articleshow/36330906.cms

http://www.lankanewspapers.com/news/2014/6/88356_space.html

No comments: