Sunday, June 22, 2014

இலங்கையில் ‘பொட்டு’ தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம்!


நெற்றியில் போட்டு வைப்பது தமிழ்ப்பண்பாடல்ல அது ஆணாதிக்கத்தின் அடையாளம் எனவும், அல்ல, அல்ல, அது பெண்களுக்கெதிரான வன்முறையின் ஆரம்பம் என்றும் சிலர்  தமது கருத்தைத் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில்  தமிழரல்லாதவர்களும் மத அடிப்படையில், பொட்டு அணிவதால் , பொட்டு அணிவது தமிழரின் அடையாளம் அல்ல என்று சிலர் வாதாடலாம். ஆனால் இலங்கையில் நிலைமை அப்படி அல்ல.  அங்கு சிங்களவர்களும் முஸ்லீம்களும் பொட்டணிவதில்லையாதால், பொட்டு தமிழர்களின் அடையாளமாக, தமிழ்ப்பண்பாட்டின் அடையாளமாக மட்டும் தான் கருதப்படுகிறது.  

“In Sri Lanka, however, Sinhalese and Muslim women do not wear the point. Therefore, in this country in which one’s ethnic background has become a primary means of identification, the pottu has become an ethnic marker par excellence. Tamil women in present-day Sri Lanka face a dilemma: should they stress their Tamilness by applying the pottu, or should they hide their ethnicity for security reasons?” 

வடமாகாண முதலமைச்சர்
தமிழ்நாட்டைப் போல். தமிழர்களின் வரலாற்றை, அவர்களின் மன்னர்களின் வரலாற்றைத் திரித்து, தமிழ்ப் பண்பாட்டை,  மொழியை, இலக்கியங்களை, தேவார திருவாசகங்களை  எல்லாம் கொச்சைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து தமிழர்களை ஒன்றுமேயில்லாதவர்களாக்கும், முற்போக்குகளும், பகுத்தறிவுவாதிகளும், திராவிடியனிஸ்ராக்களும், பெரியாரியர்களும், திராவிட எச்சங்களும் இலங்கையில் கிடையாது. அந்தவகையில் நாங்கள் ஈழத்தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

இலங்கையில் சைவத்தமிழர்கள் மட்டுமல்ல, கிறித்தவ தமிழர்களும் எந்த மத வேறுபாடுமின்றி பொட்டணிவதன் காரணம் அது தமிழர்களின் பண்பாட்டின்  அடையாளமாகக் கருதப்படுவதால் தான், இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் நடந்த இனக்கலவரங்களில் எல்லாம், தமிழர்களை பொட்டை வைத்துத் தான் அவர்களை சிங்களவர்களிடமிருந்தும் முஸ்லீம்களிடமிருந்தும் வேறுபடுத்தித் தாக்கினார்கள் சிங்களவர்கள் என்பதை இனக்கலவரங்களில் நேரடியாகத் தாக்கப்பட்டு தப்பிப் பிழைத்தவர்கள் மட்டுமல்ல, அதை இலங்கையில் நடந்த தமிழர்களுக்கெதிரான இனகலவரங்கள் பற்றிய நூல்களிலும் காணலாம். 

புலம்பெயர்ந்த ஈழத் தமிழ்க் கிறித்தவ பெண்கள் மட்டுமல்ல சில பாதிரிமார்கள் கூட தேவாலயத்தில் ஆராதனைகளில் கலந்து கொள்ளும் போது பொட்டு அணிந்து கொள்கின்றனர் ஏனென்றால், ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரையில் அது தமிழர்களின் பண்பாட்டின் அடையாளம் என்பதால் தான் (காணொளி). 

இன்றும் கொழும்பிலும்,தென்னிலங்கையிலும் வாழும் தமிழர்கள்,  பொட்டு வைப்பதைத் தமிழர்களின் பண்பாட்டின் அடையாளமாக மட்டுமல்ல, அதை தமிழர்களின் துணிச்சலைக் காட்டும், சிங்கள இராணுவத்தை எதிர்க்கும் ஆயுதமாக,  தமிழர்களை அடக்கி விட முடியாது என்பதைக் காட்டும், ஒருவகையான எதிர்ப்பு போராட்டத்தின் அடையாளமாகக் கூட அணிகிறார்கள். இதையெல்லாம் உணராமல், பொட்டு அணிவது தமிழ்பண்பாட்டின்  அடையாளமல்ல, அப்படிக் கூறுவது வன்முறையின் ஆரம்பம், பெண்களை அடிமைப்படுத்தும் செயல் எனக் கூறுவோரைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. 

சில நேரங்களில் தமிழ்நாட்டு ‘முற்போக்குகள்’ சிலரின் கருத்தைக் கேட்கும் போது, அவர்களுக்கு தமிழ்நாட்டுக்கு வெளியேயும் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதே தெரியாதென்று எண்ணத் தோன்றுகிறது.











5 comments:

பக்ரு பாபா said...

எங்கட பெட்டையள் இப்ப பொட்டு வைக்கிறதேயில்ல, கனடாவிலும் இலண்டனிலும் பொட்டு வைக்கிறது பசனில்ல எண்டு சொல்லுகினம், கோவிலுக்கு மட்டும் சிலர் சம்பிரதாயமா பொட்டு வைக்கிறவ மத்தபடி பொட்டு எல்லாம் தமிழர் அடையாளம் எண்டு சொல்லிட முடியாது, ஏனெண்டால் இந்தியாவிலும் பங்களாதேசிலும் சில எல்லோரும் பொட்டு வைக்கிறவ, சில முஸ்லிம் ஆக்களும் பொட்டு வைக்கிறவ தான்.

பக்ரு பாபா said...

எங்கட பெட்டையள் இப்ப பொட்டு வைக்கிறதேயில்ல, கனடாவிலும் இலண்டனிலும் பொட்டு வைக்கிறது பசனில்ல எண்டு சொல்லுகினம், கோவிலுக்கு மட்டும் சிலர் சம்பிரதாயமா பொட்டு வைக்கிறவ மத்தபடி பொட்டு எல்லாம் தமிழர் அடையாளம் எண்டு சொல்லிட முடியாது, ஏனெண்டால் இந்தியாவிலும் பங்களாதேசிலும் சில எல்லோரும் பொட்டு வைக்கிறவ, சில முஸ்லிம் ஆக்களும் பொட்டு வைக்கிறவ தான்.

viyasan said...

@பக்ருபாபா,

கனடாவில, லண்டனில மட்டுமில்லை, யாழ்ப்பாணத்தில கூட எங்கட பெட்டையள் தமிழில பேசாமல், இங்கிலீசில பேசுகினம் அதால அவையள் எல்லாம் தமிழர் இல்லை எண்டு கருத்தா? இலங்கையில தமிழர்களைத் தவிர மற்றவர்கள் - சிங்களவரும், முஸ்லீம்களும் பொட்டு வைக்கிறதில்லை, அதால பொட்டு, இலங்கையில் தமிழர்களைக் குறிக்கிற அடையாளம் என்றதுக்கு, பங்களாதேசிலயும், இந்தியாவிலயும் கூட போட்டு வைக்கிறவ, என்றதைப் பார்த்து எனக்கு அழுவதா சிரிப்பதா, என்று தெரியவில்லை, வேறு எங்கேயும், எந்த நாட்டிலும் யாரும் போட்டு வைப்பதில்லை என்று நான் சொன்னேனா???

உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. :-)

ஊர்சுற்றி said...

வியாசன் நீங்கள் என்ன சொன்னாலும் தொடர்பில்லாமல் பின்னூட்டம் எழுதி சொம்புதூக்கும் கேசுகள் இருக்கத்தான் செய்யும். குதிரைக்கு தண்ணி காட்டலாம் குடிக்கப்பண்ன ஏலாது. தூங்கிறவனை தட்டி எழுப்பலாம் பாசாங்கு செய்பவனை ஒன்றும் செய்ய ஏலாது. அதேபோலத்தான் சொம்பு கேசுகளும். சொம்படிக்கிரதெண்டு டிசைட் பண்ணின கேசுகள் எப்படி எண்டாலும் அடிச்சுக்கொண்டே இருக்கும்.
உங்கள் அயராத எழுத்துகளுக்கு நன்றிகள்.

viyasan said...

@ஊர்சுற்றி,

நன்றி. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.