Monday, May 19, 2014

பிரதமர் மோடிக்கு மகிந்த ராஜபக்சவின் செய்தி (எச்சரிக்கை)?






இந்தியாவில் திரு. நரேந்திர மோடி  பிரதமர் பதவிக்கு வெற்றி பெற்ற அதே நாளில் சீனாவின் அதி உயர்மட்ட இராணுவ தூதுக்குழு (The highest level military delegation from China)  வின் இலங்கை வருகையும், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியதையும் மோடிக்கு மகிந்த ராஜபக்ச விடுத்த எச்சரிக்கையாகக் கருதுகின்றனர் அரசியல் அவதானிகள்.  

யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் மட்டுமன்றி இலங்கை முழுவதிலும் எல்லாத் துறைகளிலும் சீனா முதலீடு செய்துள்ளது. அத்துடன் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் துறைமுகங்களை அமைத்து தனது இருப்பை நிலைநாட்டிக் கொண்டுள்ளது என்பது யாவரும் அறிந்த விடயமே. ஆனால் சீனாவின் அதி உயர்மட்ட  இராணுவ தூதுக் குழு இலங்கைக்கு வருகை செய்வதற்கு தேர்ந்தெடுத்த நாளின் பின்னணியில் தான் அதன் முக்கியத்துவம் தங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய இராணுவ ஆணைக் குழுவின் பிரதித் தலைவரும், இராணுவ ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஜெனரல் சூ கிலியாக் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது. 

இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள நல்லுறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சீன தூதுக்குழு பாராட்டியுள்ளதாகவும், சீனா தொடர்பில் இலங்கை வகிக்கும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலுரைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.


இலங்கை -சீன இராணுவத் தொடர்புகள் மேலும் அதிகரிக்கப்படுமென சீனா உறுதியளித்துள்ளது. 


China assures military ties with Sri Lanka will be taken to a new level.




The Highest Level Military Delegation From China Meets the President.

The Highest Level Military Delegation From China Meets the President.
           Saturday, 17 May 2014 07:48
Saturday, 17 May 2014 07:48
The highest level military delegation from China has met the President Mahinda Rajapaksa at the Temple Trees last evening. Head of the team of representatives, vice chairman of the Chinese Central Military Commission Air Chief Martial Shu Killiang said that the aim of his visit is to elevate the bilateral military relations and to further strengthen strategic mutual understanding. He added that the Sri Lankan armed forces are appropriately trained and properly managed force. As a result prominent should be given for enhance the military relations between the two countries. The delegates have commended the president for defeating terrorism and achieving rapid development. 
They have identified the president as a 'Great War Hero' who has defeated the world's most brutal form of terrorism. The president has pledged to continuously extend support to China in international and regional issues. He has sighted the cases of One China policy and the developments surrounding the South China Sea in this connection. Sri Lanka's policies pertaining to China will never change. The president has also expressed gratitude for the cooperation extended by China in the development of infrastructure development in the country. A special tribute was made regarding the Chinese assistance at the United Nations Human Rights Council. The Chinese embassy officials say that the delegation was the highest level Chinese military team which met the president.

Top of Form

Ref: Hirunews.lk
Picture courtesy: Hirunews.lk

No comments: