Saturday, May 17, 2014

இரண்டாயிரமாண்டுகளின் பின்பும் தமிழர்கள் மாறவில்லை?


இந்திய தேர்தல் முடிவுகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்தியாவில் பாரதீய ஜனதாக் கட்சி வென்ற மாநிலங்களைக் கொண்ட இந்தியாவின் வரைபடத்தைக் காட்டினார்கள், அந்தப் படம் வட இந்திய மாமன்னன் அசோகன் ஆண்ட நிலப்பரப்பின் படத்தை தான் எனக்கு நினைவூட்டியது. :-)


அசோகன் ஆண்ட நிலப்பரப்பையும், நரேந்திர மோடி வென்ற மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அதில்  பெரியளவில் வேறுபாடு தெரியவில்லை. இங்கே நான் மோடியையும், மாமன்னன் அசோகனையும் ஒப்பிடவில்லை ஆனால் இந்திய வரலாற்றில் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்குமென தனித்துவம் உண்டென்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகும். அசோகன் தமிழ்மண்ணைக் கைப்பற்ற முடியாமல் போனதற்குக் காரணம், கலிங்கப் போர், புத்தசமயம் என்று பல சாக்குப்  போக்குகளைச் சிலர்  கூறினாலும், தமது தாய் மண்ணை விட்டுக் கொடுக்காத தமிழர்களின் வீரம் கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா. யார் என்ன காரணங்களைக் கூறினாலும், இந்தியா முழுவதையுமாண்ட  வடநாட்டரசன் அசோகன் தமிழ்மண்ணையும், தமிழர்களையும் ஆளவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது.  அதாவது அக்காலத்திலும் தமிழர்கள் தமது தனித்துவத்தை இழக்கவில்லை அதே போல் இன்றும் இந்தியா முழுவதும் வீசிய மோடி என்ற சுனாமி தமிழ்மண்ணில் (முற்காலத் தமிழ்மண்ணாகிய சேரநாடு உட்பட) ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடாமல் அப்படியே அடங்கிப் போய் விட்டது. 

Moral of the story: அரசியலில் தமிழ்நாட்டுத் தமிழர்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.  :-) 


18 comments:

குட்டிபிசாசு said...

//அரசியலில் தமிழ்நாட்டுத் தமிழர்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது//

இது வியாசன் எழுதியது தானா? :)

அசோகப் பேரரசிற்கு தமிழகம் நட்புநாடாக விளங்கியது. அப்படியே பௌத்தமும் உள்ளே வந்துவிட்டது.

//முற்காலத் தமிழ்மண்ணாகிய சேரநாடு உட்பட//

அவர்கள் தேசியத்தில் முன்பே கலந்துவிட்டார்கள். கேரளாவில் காங்கிரஸ், கம்யுனிஸ்ட் போன்ற தேசியக்கட்சிகள்தான் ஆட்சியைப் பிடிக்கின்றன.

2009 தேர்தலின்போதே இது நடந்திருக்க வேண்டியது. விஜயகாந்த் திமுகவிற்கு எதிரான ஓட்டுகளைப் பிரித்துவிட்டார். ஆனால் ஜெயா அப்போது அதிக இடங்கள் ஜெயித்திருந்தாலும் ஈழத்தில் நடந்த போரை தடுக்க உதவி இருக்குமா என்பதை சொல்ல இயலாது.

நந்தவனத்தான் said...

நாற்பது தொகுதிகளையும் தமிழக மக்கள் தனக்கு வழங்கினால், பிரதமர் பதவியே தன் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்றும், ஒபாமாவுடன் ராசபட்சே ஓடி வந்து காலில் விழுவார், அடுத்த கணமே ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழ் ஈழத்தை வாங்கி கொடுத்தவிடுவதாகவும் ஆத்தா சொன்னார். வீணாப்போன தமிழ்நாட்டுக்காரனுக ஆத்தாளுக்கு 40 இடங்களையும் தந்திருக்கலாம். 3 இடத்தை விட்டுட்டானுக. இப்ப ஆத்தானால ஏதும் செய்ய முடியாது...ஸோ சேட்! ;))

ஆத்தா வாஜ்பாயை பாடாய் படுத்தியதையும், தாத்தா மக்களுக்காக எதையும் கேட்காமல் வருமானம் வரும் அமைச்சத்தை கேட்டு போராடியதையும் நினைத்தால், அதிமுகவை சார்ந்திருக்காமல் முழு மெஜாரிட்டி கொடுத்து நிலையான அரசினை அமைத்த பிற மாநில வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல தோன்றுகிறது.

ஆனால் இப்படி வைகோவை கூட தோற்கடித்து ஈழமக்களுக்கு ஏற்படும் சின்ன நன்மையையும் கவிழ்த்து விட்டார்கள் என உங்களுக்கு கடுப்புதான் வரவேண்டும். ஆத்தா ஈழத்துக்காக சீன்தான் போடுவார். வைகோ அமைச்சராக வந்திருந்தால் பாஜ தலைவர்களுடன் பேசி நிச்சயம் ஏதாவது செய்திருப்பார்.

நந்தவனத்தான் said...

@குபி

//இது வியாசன் எழுதியது தானா? //

எனக்கும் மலையாளிகளை பற்றி அவரு எழுதிய

// தமிழ்மண்ணில் (முற்காலத் தமிழ்மண்ணாகிய சேரநாடு உட்பட)//

வரிகளை படித்ததும் அதே டவுட்தான் வந்தது!

viyasan said...

//இது வியாசன் எழுதியது தானா? //

தமிழ்நாட்டுத் தமிழர்களின் மேல் எனக்கும் பல விடயங்களில் நன்மதிப்பும், பாசமும் உண்டு. ஆனால் நான் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஏனைய நாட்டவர்களுடன் அல்லது தமிழரல்லாத இந்தியர்களிடம் பேசும் பொது நான் தமிழ்நாட்டுத் தமிழர்களை ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை.

//அசோகப் பேரரசிற்கு தமிழகம் நட்புநாடாக விளங்கியது. அப்படியே பௌத்தமும் உள்ளே வந்துவிட்டது. //

உண்மை, ஆனால் தமிழ்நாட்டை அசோகா சக்கரவர்த்தி ஆளவில்லை.

//அவர்கள் தேசியத்தில் முன்பே கலந்துவிட்டார்கள். கேரளாவில் காங்கிரஸ், கம்யுனிஸ்ட் போன்ற தேசியக்கட்சிகள்தான் ஆட்சியைப் பிடிக்கின்றன.//

எனக்குத் தெரிந்த மலையாளிகள் தமது முன்னோர்கள் தமிழர்கள் என்பதையே ஒப்புக் கொள்வதில்லை. ஆனால்மோடியின் அலை அவர்களிடமும் பெரிதாக எடுபடவில்லை, அதைத் தான் குறிப்பிட்டேன். உங்களின் கருத்துக்கு நன்றி.

varagan said...
This comment has been removed by a blog administrator.
varagan said...

”இந்தியா முழுவதும் வீசிய மோடி என்ற சுனாமி தமிழ்மண்ணில் (முற்காலத் தமிழ்மண்ணாகிய சேரநாடு உட்பட) ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடாமல் அப்படியே அடங்கிப் போய் விட்டது. ”

நெருக்கடி நிலைக்குப் பின்னர் ஜனதாகட்சிக்கு தமிழ்நாடு 3 இடங்களைத் தந்தது.

அதுபோல் தற்போதும் நாகர்கோவில்,தர்மபுாி மற்றும் புதுவையிலுமாக 3 இடங்களை மோடி அணிக்கு பலம் சேர்த்துள்ளது.

மேலும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாம் இடத்திற்கு வந்து திமுகாவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி உள்ளது.

கொங்கு மண்டலம் இதற்கு உதாரணம்.

புதுவையிலும் இதே நிலைதான். அதிமுகா மற்றம் திமுகாவிற்கு மூன்றாம் மற்றும் நான்காம் இடம் தான்.

மோடி அலையை சாியாக பயன்படுத்தாது தான் தமிழ் நாட்டில் மோடி அணிக்கு பலவீனம்.

மேலும் அதிமுகா வின் தலைவருக்கு அளிக்கும் வாக்கு மோடியின் நண்பருக்கு அளிக்கும் வாக்காகும் என நிணைப்பு மக்களுக்கு இருந்ததும் ஒரு காரணமாகும். தேர்தலில் அதிமுக மோடியை எதிர்த்தாலும் மக்கள் அவ்வாறு நிணைக்க வில்லை என்பதே நிதர்சணம் ஆகும்.

viyasan said...

// ஒபாமாவுடன் ராசபட்சே ஓடி வந்து காலில் விழுவார், அடுத்த கணமே ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழ் ஈழத்தை வாங்கி கொடுத்தவிடுவதாகவும் ஆத்தா சொன்னார். வீணாப்போன தமிழ்நாட்டுக்காரனுக ஆத்தாளுக்கு 40 இடங்களையும் தந்திருக்கலாம். 3 இடத்தை விட்டுட்டானுக. இப்ப ஆத்தானால ஏதும் செய்ய முடியாது...ஸோ சேட்! ;))//


என்ன செய்வது அவர் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்றை நினைத்து விட்டது. :-)


//அதிமுகவை சார்ந்திருக்காமல் முழு மெஜாரிட்டி கொடுத்து நிலையான அரசினை அமைத்த பிற மாநில வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல தோன்றுகிறது.//

எப்படியிருந்தாலும், இன்னும் ஐந்து வருடத்தில் மோடி சுனாமி மீண்டும் வராது, அதனால் ஆத்தாவின் தயவு தேவைப்படும் என்பதை மோடி மறக்க மாட்டார்.


//ஆனால் இப்படி வைகோவை கூட தோற்கடித்து ஈழமக்களுக்கு ஏற்படும் சின்ன நன்மையையும் கவிழ்த்து விட்டார்கள் என உங்களுக்கு கடுப்புதான் வரவேண்டும். ஆத்தா ஈழத்துக்காக சீன்தான் போடுவார். வைகோ அமைச்சராக வந்திருந்தால் பாஜ தலைவர்களுடன் பேசி நிச்சயம் ஏதாவது செய்திருப்பார்.//

ராஜபக்ச ஆதரவு சுஸ்மா சிவராஜூம், சு.சுவாமியும் பாஜகவில் இருக்கும் வரை வைக்கோவால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் செல்வி. ஜெயலலிதா செய்தாலென்ன செய்து விட்டாலென்ன, அவருக்கு Clout இருக்கிறது. முதலமைச்சர் என்ற முறையில் அவரது செயலும், கருத்துக்களும், ஈழத்தமிழர் ஆதரவும் இந்தியாவில் மட்டுமல்ல, வெளியுலகிலும் ஓங்கி எதிரொலிக்கும். ஆத்தாவுக்கு 39 , வைக்கோவுக்கு 1 கிடைக்க வேண்டுமென்று நான் எப்பவோ கருத்துத் தெரிவித்தேன். அது நடக்கவில்லை.

உங்களை நீண்ட நாளாக இந்தப்பக்கம் காணவில்லையே?

viyasan said...

// தமிழ்மண்ணில் (முற்காலத் தமிழ்மண்ணாகிய சேரநாடு உட்பட)//
//வரிகளை படித்ததும் அதே டவுட்தான் வந்தது!//

எனக்குத் தெரிந்த மலையாளிகள் எவரும் அவர்களின் முன்னோர்கள் தமிழர்கள் என ஒப்புக் கொள்வதில்லை. அதிலும் கிறித்தவ மலையாளிகள் மிகவும் மோசம், அத்துடன் Goan Catholics போன்றே ஐரோப்பிய மோகமும் அதிகம். தமிழர்களை விட அவர்கள் உயர்ந்தவர்கள் என்ற மாதிரி கதை விடுவார்கள்.

நந்தவனத்தான் said...

/உங்களை நீண்ட நாளாக இந்தப்பக்கம் காணவில்லையே?//

(ஜனநாயக கடமை ஆத்த) இந்தியாவிற்கு போயிருந்த காரணத்தாலும் வேலைபளுவாலும் பின்னாட்டம் இட முடியவில்லை. அவ்வளவுதான். மற்றபடி நேரம் கிடைத்த போது உங்களின் பதிவுகளை படித்தபடிதான் இருந்தேன்.


//தமிழர்களை விட அவர்கள் உயர்ந்தவர்கள் என்ற மாதிரி கதை விடுவார்கள்.//

ஒரு இனத்திலிருந்து இன்னொரு இனம் உருவாகும் போது இப்படி உயர்வாக நினைப்பது, தனது இனத்தின் ஐடென்டியை காக்க உதவும் ஒரு மனப்பாங்குதான் அது. மேலும் சேரநாட்டு ஆட்களுக்கு பாண்டிய நாட்டு ஆட்களுக்கும் எப்போதும் சண்டைதானே. இப்போதும் அவர்கள் தமிழரை பாண்டி என எள்ளுவது உண்டே?அதே போல பல தமிழர்கள் மலையாளிகள் மீது ஒரு இனம் புரியாத வெறுப்பில் இருப்பதை பார்த்திருக்கிறேன். நல்லோரும் கெட்டோரும் கலந்ததுதானே எல்லா இனமும்.

மேலும் பாரதி அனுபவித்து பாடியது போல சேரன நாட்டிளம் பெண்களை கண்டபிறகு அவர்களை வெறுக்க முடியுமா என்ன? :)

Anonymous said...

நண்பரே நீங்கள் எத்தனை மலையாளிகளோடு பழகி உள்ளீர்கள். வெளிநாட்டுக்கு வேலைக்கு போன ஒரு சில சிரியன் கத்தோலிக்க மலையாளிகளோடு பழகிவிட்டு ஒட்டு மொத்த மலையாளிகளை குறை சொல்லாதீர்கள்.

நானும் மலையாளி தான், என் சொந்த ஊர் காயங்குளம், நாங்க எப்போதுமே மலையாளம் உயர்ந்தது தமிழ் தாழ்ந்தது என சொல்றதே இல்லை.

கேரளாவில் ஒரு சில தமிழன்மார் தப்பு பண்ணிட்டு இருந்தாங்க, முக்கியமா நாடார்மார் அதனால் சிலருக்கு தமிழன் என்றால் பயம் இருந்துச்சு. ஆனா இப்போ அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது.

அதே போல மலையாளி தமிழன் ஒரே இனம் தான் எனத் தான் நாங்க சொல்லிட்டு வரோம். எங்க ஊரில் எந்த தமிழனையும் நாங்க அடிச்சது கிடையாது, துரத்தினது கிடையாது.

இடுக்கி, பீர்மேடு, திருவினந்தாபுரம், எர்ணாகுளம், பத்தனம் திட்டா என நிறைய தமிழன் வசிக்கிறாங்க. முல்லைப் பெரியாறு பிரச்சனை வந்த போது அது தமிழன் மலையாளி பிரச்சனையா யாரும் பார்தது கிடையாது. அது கேரளா தமிழ்நாட்டு பிரச்சனையா தான் பார்த்தோம்.

சொல்லப் போனா கேரளாவில் இடுக்கியில இருக்க எல்லா தமிழனும் அதற்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க. ஒரு வேளை அணை உடைஞ்சா மலையாளி மட்டுமில்ல கேரளாவில் இருக்கிற தமிழனுக்கு கூட ஆபத்து என்பதை சொன்னோம்.

எங்களுக்குத் தெரியும் முல்லைப் பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டு ரொம்பவே முக்கியம். மதுரைப் பக்கத்திலே அதை நம்பி தான் வாழ்றாங்க. அதை மறுக்கல, தண்ணீர் தரமாட்டோம் என கருநாடக போல பேசினது இல்லை. ஆனா அணையோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க என சொன்னோம்.

ஆனா இதை தமிழன் மலையாளி பிரச்சனையா ஊதி பெரிசாக்கிட்டாங்க. முக்கியமா வைகோ ராமதாஸ் போன்றோர்.

ஆனா கூட எந்த ஒரு தமிழனையும் அடிக்கவோ துன்புறுத்தவோ மலையாளி மக்கள் நினைச்சது கிடையாது. ஏன்னா தமிழ் எங்க தாய் மொழிக்கு தாய் மொழி, தமிழ்நாடு எங்களோட இரண்டாவது தாய்நாடு. நிறைய மலையாளிக்கு வாழ்க்கைக் கொடுத்த பூமி தமிழ்நாடு. அதை நாங்க மறுக்கிறதே இல்லை.

தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப அன்பானவங்க, தமிழன் மலையாளி என பிரிச்சு பார்க்கிறது இல்லை.

இதே போல கேரளாவிலும் தமிழன் மலையாளி என பிரிச்சுப் பார்க்கிறது இல்லை.

ஒரு சில கட்சிக்காரங்க அப்படி இப்படி பேசுவாங்க ஆனா மக்கள் பேசுறதில்லை.

எங்கப்பா கோயம்புத்தூரில் வாத்தியாரா இருந்தவர். அதனால் எங்களுக்கும் மலையாளத்தை விட தமிழையே படிக்க வச்சார்.

திருவினந்தாபுரத்தில் சிலோன் காரங்க கூட இருக்காங்க. ரொம்ப அன்பானவங்க. சில பேர் இங்கேயே செட்டில் ஆயிட்டாங்க. முக்கியமா யாழ்ப்பாணம் ஊரில் இருந்து வந்தவங்க சிலர் இங்க இருக்காங்க, அவங்க எப்போமே யாழ்ப்பாணமும் கேரளாவும் ஒரே கலாச்சாரம், சாப்பாடு, என சொல்லுவாங்க.

Anonymous said...


ஆனா சிலோன் அரசியல் பேசுற நிறைய பேரு மலையாளிகளை தப்பா பேசியும் எழுதியும் வறாங்க. ஏன் இந்த கோபம் என எனக்கு இன்னும் புரியல?

கேரளா வரலாற்று புத்தகத்தில் எங்கேயும் மலையாளி தமிழர்கள் இல்லை என சொன்னது இல்லை. வரலாற்றில் 9 ம் நூற்றாண்டு வரை கேரளாவும் தமிழ்நாடா இருந்துச்சு எனத் தான் படிக்கின்றோம். இதை யாரும் மறுக்கிறதில்லை.

சங்க இலக்கியத்தில கேரளாவைச் சேர்ந்தவங்க நிறைய பாட்டு எழுதி இருக்காங்க. இளங்கோவடிகள் கூட கேரளாவின் திருக்கோவிலூர் பகுதியில் வாழ்ந்தவர்.

ஏன் பட்டணம் திட்டாவில் வள்ளுவர் ஞானமடம் என ஒன்று இருக்கு. எல்லோருமே மலையாளிங்க, ஆனா வள்ளுவரை ஸ்வாமியா கும்பிடுறோம்.

தமிழன்மார் புரிஞ்சிக்க வேண்டியது, கேரளா தமிழாக இருந்த போது கூட ஒரு சில தனிப் பண்பாடு வழக்கு மொழி இங்கே இருந்துச்சு. காலப் போக்கிலே அது தனியா பிரிஞ்சி வளர்ந்துடுச்சு. அவ்வளவு தான். அதற்கு எழுத்து வடிவம் கொடுத்தது தான் நம்பூதிரிமார்.

இன்னு வரைக்கும் மலையாளி தமிழை சுலபமா படிச்சு எடுக்கிறோம். பேசுறோம். தமிழ் படம் பார்க்கிறோம், விஜய், சூர்யா ஃபான்ஸ் கிளப் கூட இருக்கு. மலையாள டிவியில் தமிழ்பாட்டு வராத நிகழ்ச்சியே இல்லை.

இன்னும் கூட கேரளாவில் நிறைய தமிழ் பள்ளிகள் கூட இருக்கு, மலையாளம் மட்டுமே படிங்க என தமிழனை கட்டாயப்படுத்துறது கூட இல்லை.

கேரளாவுக்கு தமிழ்நாடு துணை எப்போதுமே வேண்டும். அதே சமயம் எங்க மாநிலத்தோடு நலனைப் பற்றியும் நாங்க பேசித்தானே ஆக வேண்டும். அது எதார்த்தமான ஒன்று.

என்னைக்குமே தமிழ்நாட்டை அன்பா ஸ்நேகிக்கிறோம். ஆனா சில தமிழன்மார் மலையாளி ஒட்டுமொத்தமா திட்டுறது கஷ்டமா இருக்கு.

முனைவர் இரா.குணசீலன் said...

தாங்கள் சொல்வது உண்மைதான்.

Anonymous said...

தமிழ்நாட்டு மக்கள் கேரளா மக்கள் என்னைக்குமே ஐக்கியமா இருக்கணும், நமக்குள் இருக்கிற பிரச்சனைய நாம் பேசி தீர்த்துக்கணும். நன்றி.

பிஜூ பாலச்சந்திரன்,

காயங்குளம்

viyasan said...

//தாங்கள் சொல்வது உண்மைதான்.//

@முனைவர் குணசீலன்,

நன்றி.

viyasan said...

@விஜூ பாலச்சந்திரன்,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களின் கேள்விகள் பலவற்றுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் அந்தக் கேள்விகளைக் கேளுங்கள்.

//நண்பரே நீங்கள் எத்தனை மலையாளிகளோடு பழகி உள்ளீர்கள்.//

நிறையப் பேரைத் தெரியாது. ஒரு சில மலையாளிகளைத் தான் எனக்குத் தெரியும். அதனால் தான் “எனக்குத் தெரிந்த மலையாளிகள்” என்று நான் குறிப்பிட்டேன். “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பார்கள். அது போல் தான் இதுவும்.


//வெளிநாட்டுக்கு வேலைக்கு போன ஒரு சில சிரியன் கத்தோலிக்க மலையாளிகளோடு பழகிவிட்டு ஒட்டு மொத்த மலையாளிகளை குறை சொல்லாதீர்கள். //

அவர்கள் சிரியன் கத்தோலிக்கர்கள் அல்ல. தமிழர்களுக்கும் அவர்களுக்கும் தோற்றத்தில் வேறுபாடு எதுவும் கிடையாது..

//நானும் மலையாளி தான், என் சொந்த ஊர் காயங்குளம், நாங்க எப்போதுமே மலையாளம் உயர்ந்தது தமிழ் தாழ்ந்தது என சொல்றதே இல்லை. //

நன்றி. தமிழ் தாழ்ந்தது அல்ல, ஆனால் தமிழ் original language, மலையாளம் derivative language. அதனால் இரண்டும் சமமாக இருக்க முடியாது. :))


//திருவினந்தாபுரத்தில் சிலோன் காரங்க கூட இருக்காங்க. ரொம்ப அன்பானவங்க. சில பேர் இங்கேயே செட்டில் ஆயிட்டாங்க. முக்கியமா யாழ்ப்பாணம் ஊரில் இருந்து வந்தவங்க சிலர் இங்க இருக்காங்க, அவங்க எப்போமே யாழ்ப்பாணமும் கேரளாவும் ஒரே கலாச்சாரம், சாப்பாடு, என சொல்லுவாங்க. //

சிலோன் காரங்க அன்பாக பழகிறவங்களோட ரொம்ப அன்பா இருப்பாங்க. யாழ்ப்பாணக் கலாச்சாரமும், உணவுப் பழக்க வழக்கங்களும் ஒரே மாதிரி இருப்பதற்குக் காரணம். இரண்டு இடங்களிலும் அதிகளவில் தேங்காய் கிடைப்பது தான். அதை விட, கேராளாவிலுள்ள ஈழவர்களும், தீயார் அல்லது தீவார் என்ற சாதியினரும் இலங்கையிலிருந்து கேரளாவில் குடியேறியவர்கள் என்றும் கூறுகிறார்கள். அதனால். கேரளா அல்லது சேரநாட்டுத் தொடர்பு, ஈழத்தமிழர்களுக்கிருந்திருக்கலாம்.


//ஆனா சிலோன் அரசியல் பேசுற நிறைய பேரு மலையாளிகளை தப்பா பேசியும் எழுதியும் வறாங்க. ஏன் இந்த கோபம் என எனக்கு இன்னும் புரியல?//

அது சாதாரண மலையாளிகளின் மீதுள்ள கோபத்தினால் அல்ல. பல சிங்களச் சார்பு மலையாளிகளுக்கு, ஈழத்தமிழர் அழிவில் பெரும்பங்குண்டு, அதனால் தான்.

Anonymous said...

மோதிக்கு வாக்கு விழாத பகுதிகள் எல்லாம், Non-Hinduism மற்றும் Non-Brahmanical Hinduism சார்ந்த பகுதிகள் என்பது தான் உண்மை. அந்த மேப்பை நன்றாகப் பாருங்கள் புரியும். Non-Brahmanical Hinduism சார்ந்த அரசியல் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளான தமிழகம், கேரளம், வங்காளம் ஆகிய பகுதிகளில் பாஜக வெல்ல முடியவில்லை. அடிப்படைக்காரணம் இது தான்.

Anonymous said...

//அது சாதாரண மலையாளிகளின் மீதுள்ள கோபத்தினால் அல்ல. பல சிங்களச் சார்பு மலையாளிகளுக்கு, ஈழத்தமிழர் அழிவில் பெரும்பங்குண்டு, அதனால் தான்.//

மலையாளிகளை விட ஈழத்தமிழர் அழிவில் சிங்கள சார்புடைய இலங்கைத் தமிழர்களின் பங்கு மிக மிக அதிகம். அதனால் ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்களையும் வெறுக்கலாமா? என்ன லாஜிக் இது.

ஈழத்தமிழர் அழிவில் முக்கிய பங்கே ஈழத்தமிழர்கள் தான். ஒன்று புலிகளின் பாசிசக் கொள்கை மற்றும் அரசியல் ஞானமின்மை. மற்றொன்று சிங்களவரோடு இணைந்து கொண்ட ஈழத்தமிழர்கள்.

மற்றவனை குற்றம் சொல்ல முன் தமக்குள் இருக்கும் குறைபாடுகளை களைவதே ஈழத்தமிழர்களின் இன்றைய தேவை. இதை உணராத வரை நாடோடிக் கூட்டமாகத் தான் வாழ வேண்டி வரும்.

viyasan said...

//மலையாளிகளை விட ஈழத்தமிழர் அழிவில் சிங்கள சார்புடைய இலங்கைத் தமிழர்களின் பங்கு மிக மிக அதிகம். அதனால் ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்களையும் வெறுக்கலாமா? என்ன லாஜிக் இது. ///

சிங்கள சார்புத்தமிழர்களை பெரும்பான்மை தமிழர்கள் இன்றும் வெறுக்கிறார்கள். ஆனால் அவர்களும் தம்மைத் தமிழர்கள் அல்ல என்று கூறுவதில்லை. அவர்கள் எல்லோரும் குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்புகளாக இருந்தாலும் கூட, தமிழர்கள் அல்ல என்று ஒதுக்கி வைக்கவும் முடியாது, ஏனென்றால் அவர்களும் பிறப்பால் தமிழர்கள் தான். ஆனால் ஒரு சில மலையாளிகளின் தமிழின் எதிர்ப்பு நடவடிக்கைகளினால் மலையாளிகள் அனைவர் மீதும் வெறுப்பு அல்லது சந்தேகம் வருவது இயற்கை.


//ஈழத்தமிழர் அழிவில் முக்கிய பங்கே ஈழத்தமிழர்கள் தான். ஒன்று புலிகளின் பாசிசக் கொள்கை மற்றும் அரசியல் ஞானமின்மை. மற்றொன்று சிங்களவரோடு இணைந்து கொண்ட ஈழத்தமிழர்கள். ///

அதை யாரும் மறுக்கவில்லை. பிரபாகரனுக்கு வீரம் இருந்தளவுக்கு விவேகமிருக்கவில்லை. கெரில்லாப் போரைத் தொடங்கியவர், சிந்திக்காமல்தொடர்ந்து conventional war ஐ நடத்தி உள்ளதையும் இழந்தது தான் மிச்சம். சிங்கள அரசு உலகநாடுகளுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்து, அவர்களின் உதவிகளைப் பெற்று, ஈழத்தமிழர்களை நசுக்கி விட்டு, உதவி செய்தவர்களை ஏமாற்றி விட்டது. அத்துடன் தமிழ்நாட்டுத் தமிழர்களின் கையாலாகத்தனமும், தமிழரல்லாத இந்தியர்களின் பெரியாரிய, தமிழின எதிர்ப்பும் ஈழத் தமிழர்களைப் பழி வாங்கி விட்டது. ஈழத்தமிழர்கள் மலையாளிகளாகவோ அல்லது ஹிந்தியர்களாகவோ இருந்திருந்தால், இநதியா இலங்கையில் தனிநாட்டை உருவாக்கியிருக்கும்.


///மற்றவனை குற்றம் சொல்ல முன் தமக்குள் இருக்கும் குறைபாடுகளை களைவதே ஈழத்தமிழர்களின் இன்றைய தேவை. இதை உணராத வரை நாடோடிக் கூட்டமாகத் தான் வாழ வேண்டி வரும். ///

எல்லாவற்றையும் விட தமிழர்களுக்குக் கூடவிருந்தே குழி பறிக்கும் சொம்பு தூக்கிகள், தமிழர்கள் மத்தியில் வாழும் வரை, ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தமிழர்களும் கூடத் தான் தமது சொந்த மாநிலத்திலேயே, இரண்டாந்தரக் குடிமக்களாக, வந்தான் வரத்தான்களிடம் ஆட்சியையும், பொருளாதார ஆதிக்கத்தையும் இழந்து விட்டு, அவர்களிடம் கடன் வாங்கி, அவர்களிடம் நகை வாங்கி, அவற்றை அவர்களிடமே அடகு வைத்து விட்டு அவர்களுக்கு வட்டி கட்டும் கூலிகளாக இருப்பார்கள்.