Wednesday, May 14, 2014

ஜனாதிபதி ஒபாமாவை வளர்த்த அரவாணி!தமிழ்நாட்டில் கூவாகம் என்ற ஊரில் அரவாணி அல்லது திருநங்கைகளின் திருவிழா நடைபெற இருக்கிறது என்ற செய்தியைப் பார்த்ததும், இந்தோனேசியாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைக் கூட குழந்தைப் பருவத்தில் கவனித்துக் கொண்ட ஆயா  கூட ஒரு அரவாணி தான் என்ற செய்தி தான் நினைவுக்கு வருகிறது. உலகின் செல்வாக்கும், அதிகாரமும் படைத்த ஒரு தலைவரின் வாழ்க்கையில், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு திருநங்கையின் பங்களிப்பும் உள்ளது என்பது பலருக்கும் தெரியாது.

ஜனாதிபதி ஒபாமா தனது குழந்தைப் பருவத்தை இந்தோனேசியாவில் கழித்தார் என்பது யாவரும் அறிந்ததொன்று. அவர் ஜாகர்த்தாவில் வாழ்ந்த காலத்தில் அவரை கவனித்துக் கொள்ளவும், பாடசாலைக்கு கூட்டிச் செல்வது அழைத்து வருவது போன்ற வேலைகளுக்காக நியமிக்கப்பட்ட ஆயா, ஒரு திருநங்கை ஈவி Eevi என்பது சில வருடங்களுக்கு முன்னால் தான் பலருக்கும் தெரியவந்தது.  வறுமையில் உழன்ற ஈவிக்கு, இந்தச் செய்தியால் புகழும், பிரபலமும், நண்பர்கள் மட்டுமல்ல வேலையும் கிடைத்திருக்கிறது. அவரை ஒதுக்கிய அவரது உறவினர்கள் கூட இன்று அவரைத் தேடி வருகிறார்களாம்ஆனால் இந்தோனேசியாவில் பரவி வரும் தீவிரவாத இஸ்லாம் அவர்களை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.
This is what Evie told the press about her story: 
 "I have always been proud that the person I cared for, that I drove to school, and cooked for, ended up being the number one in the world, the President of America. Barack Obama did not know I was a transgender because I had never dressed up (as a woman) or teased men in front of Barack."
Read more: http://www.nydailynews.com/news/politics/president-Barack-Obama-transgender-nanny-living-Indonesia-overwhelmed-celebrity


 


திருநங்கைகளுக்கு இன்றும் பல பிரச்சனைகள் உண்டு அவை தீர்க்கப்பட்டு, அவர்கள் சுதந்திரமாக மனித உரிமைகளுடன் வாழ வழி செய்யப்பட வேண்டுமென்பது முற்றிலும் உண்மை. ஆனால் உலகின் பெரும்பான்மையான  நாடுகளில், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் அவர்களுக்கு மதரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதற்கு இந்துக்களின் மனிதநேயமும்  சகிப்புத் தன்மையுமே முக்கிய காரணமாகும்.  கடவுளாகிய விஸ்ணு மோகினியாக வந்து அரவானைத் திருமணம் செய்தார் என்ற புராணக் கதையெல்லாம், அக்கால வாழ்ந்த ஓரினச் சேர்க்கையாளர்களையும், திருநங்கைகளையும்,  சமுதாயம் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக இயற்றப்பட்ட வெறும் கதைகளாகத் தானிருக்க வேண்டும்.. இக்காலத்தில் கூட, கடவுளை இணைத்து விட்டால் மக்கள் எதையும் நம்பி விடுகிறார்கள்.  

மத அடிப்படையில் திருநங்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது அல்லது அது மதத்துக்கு எதிரானதென எந்த  இந்துவும் திருங்கைகளை துன்புறுத்தியதாக கேள்விப்பட்டதில்லை மாறாக,  அவர்களையும் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு சிறப்பான, ஏதோ தெய்வீக சக்தி இருப்பதாக ஒரு கதையை உருவாக்கி திருநங்கைகளுக்கும்  சமுதாயத்தில் உரிய இடத்தை அளிக்க இந்துமதம் முயன்றிருக்கிறது. இந்த மனிதாபிமானமும், சகிப்புத்தன்மையும்  வேறெந்த மதத்திலும் காணப்படாததொன்றாகும். ஆபிரகாமிய மதங்கள் இக்காலத்திலும் திருங்கைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது, இந்துமதம் பல ஆயிரமாண்டுகளுக்கு முன்பே  அவர்களுக்கு அங்கீகாரம் அளித்து   ஏற்றுக் கொண்டது மிகவும் பாராட்ட வேண்டிய விடயமாகும். இந்துமதத்தில் எவ்வளவோ குறைபாடுகள் இருந்தாலும், ஏனைய மதங்களுடன் ஒப்பிடும் போது பொறுமையிலும், சகிப்புத் தன்மையிலும் அது உயர்ந்து நிற்கிறது என்பதற்கு இது நல்லதொரு உதாரணமாகும்.


No comments: