Monday, May 12, 2014

திராவிட கலாச்சார நடனம் - தமிழ்நாடு







தமிழ்நாடு மாணவ, மாணவிகளால் தமிழ்நாட்டின் உலகப்புகழ் பெற்ற  பாரம்பரிய நகரமாகிய காரைக்குடியில்  அரங்கேற்றப்பட்ட திராவிட  நாட்டியக் கலைவடிவங்களிலொன்று.  காணொளி முழுவதையும் (12: 23) பார்த்தால் தான் தமிழர்களின் கலை, கலாச்சாரத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) போன்ற பாரம்பரிய வீர விளையாட்டுக்களுக்கும், பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், தவில், நாதஸ்வரம்  போன்ற தமிழர்களின் கலைகளுக்கும் 'ஜாதீய பின்னணி' இருப்பதால் அவற்றை முற்றாக தடை செய்து இப்படியான, எந்த வித சாதீயப் பின்னணியுமில்லாத, தமிழர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஆடக் கூடிய  திராவிடக் கலைகளை தமிழர்கள் ஊக்குவிக்க வேண்டுமென்பது  பெரியாரிய சிந்தனையுள்ள முற்போக்கு எழுத்தாளர்களின் கருத்தாகும் என்பது குறிப்பிடத் தக்கது.   :-)

இந்தக் காணொளியில் (15:24) இரண்டு சிறுவர்கள் குத்தாட்டம் ஆடுகிறார்கள் ஆனால்  குழந்தைகளை இப்படியான ஆட்டத்தில், இந்த முறையில் பாவிப்பது (abuse) தவறு என்று கூடத் தெரியாத நிலையில் தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவர்கள் இருக்கிறார்களா, என்பதை நினைக்க வியப்பாக இருக்கிறது. அதை விட அந்த ஆட்டத்தை வாயெல்லாம் பல்லாக பார்த்துக் கொண்டிருக்கிறவர்களுக்கும், இதைத் துணிச்சலுடன் உலகம் முழுவதும் பார்க்க YOUTUBE இல் வெளியிட்டவர்களுக்கும் கூட தெரியவில்லை என்பதை நம்ப முடியவில்லை.

No comments: