Saturday, May 10, 2014

தமிழில் இலங்கையின் தேசிய கீதம்!



தமிழர்கள் உலகில் பல்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் கூட, இலங்கைத் தமிழர்கள் மட்டும் தான் தமது நாட்டின் தேசிய கீதத்தை தமிழில் பாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு (1948) ஈழத் தமிழர்கள் இலங்கையின் தேசிய கீதத்தை (தேவையேற்படும் போது) தமிழில் தான் பாடி வருகின்றனர். இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை எல்லாம் பெரும்பான்மைச் சிங்களவர்களுடனும் அவர்களின் இனவாத அரசியலுடனும் தானே தவிர, தமது தாய்நாடாகிய அழகிய இலங்கைத் தீவுடன் அல்ல.

அண்மையில் மகிந்த ராஜபக்சவின் அரசும், வடக்கு கிழக்கை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள இராணுவமும் தமிழில் தேசிய கீதம் பாடுவதை நிறுத்த முயற்சித்தாலும் கூட, இன்றும் ஈழத் தமிழர்களின் பாடசாலைகளில் தமிழில் தான் இலங்கையின் தேசிய கீதம் பாடப்படுகிறது. இலங்கைத் தமிழர்கள் தமிழில் தேசிய கீதம் பாடுவதைத் தடுத்தால், தேசிய கீதத்தைப் பாடாமல் தமிழர்கள் தவிர்ப்பார்களே தவிர, சிங்களத்தில், அதாவது புரியாத மொழியில் பாடமாட்டார்கள் எனத் தமிழ் தேசிய முன்னணியினர்  (திரு. சுமந்திரன்) இலங்கைப் பாராளுமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கை அரசு நிறுவிய LLRC ஆணைக்குழுவும் தமிழில் தேசிய கீதம் பாடுவதைத் தடுக்கும் முயற்சியைக் கண்டித்ததுடன், இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாட வேண்டுமெனக் கூறியுள்ளது.  

இலங்கைக்கு வெளியே வாழும் பல தமிழர்கள் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில்  கேட்டிருக்க மாட்டார்கள்.  சிங்களத் தேசிய கீதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பாகவே இருந்தாலும் கூட சில வரிகள், உதாரணமாகஈழ சிரோமணி வாழ்வுறு பூமணிஎன்ற வரி சிங்களத்தில் கிடையாது.  இசையும் தமிழிலும் சிங்களத்திலும் ஒரே மாதிரியானவை.


ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதேர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதார் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா
">
நமோ நமோ நமோ நமோ தாயே


தமிழ் -சிங்கள தேசிய கீதம் (Bilingual version) 


No comments: