Friday, May 30, 2014

மாயா ஆஞ்சலூ – அமெரிக்காவின் ஆஸ்தான கவிஞர் காலமானார்!

அமெரிக்காவின் ஆஸ்தான கவிஞரும் (Poet Laureate)  எழுத்தாருமாகிய செல்வி. மாயா ஆஞ்சலூ காலமானார். அமெரிக்காவின் தென்பகுதியில் நிறவெறி தாண்டவமாடிய காலத்தில் அவரது குழந்தைப் பருவத்தைச் சித்தரிக்கும் கதையாகிய “I Know Why the Caged Bird Sings” என்ற அவரது நாவல்(1969 ) புகழ் பெற்றது. இருபதாம் நூற்றாண்டில் ஒரு கறுப்பினப் பெண்ணின் சுயசரிதையைச் சித்தரிக்கும் அந்த நாவல் உலகம் முழுவதும் பலரால் வாசிக்கப்பட்டது. பல கவிதைகளையும் எழுதியது மட்டுமன்றி அமெரிக்காவின் ஆஸ்தான் கவிஞராகவும் விளங்கிய மாயா ஆஞ்சலூ அவர்கள் நேற்று காலமானார், அவருக்கு அகவை 86.


1993 இல் ஜனாதிபதி பில் கிளின்ரனின் பதவியேற்பு வைபவத்தில் "On the Pulse of the Morning" என்ற தனது கவிதையை அவர் வாசித்தார். அமெரிக்காவில் பல தேசிய விருதுகளைப் பெற்ற புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவர் அவர். அமெரிக்காவில்  கறுப்பின மக்களின்  உரிமைகளுக்காக அமெரிக்க கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் இன் போராட்டங்களில் கலந்து கொண்டவர். அவரது ஆழ்ந்த குரலும், ஆழமான கருத்துக்களைக் கொண்ட கவிதைகளாலும் அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

மாயா ஆஞ்சலூவின் வாழ்க்கை லட்சக்கணக்கான மக்களை வியப்பில் ஆழ்த்தியதொன்று. திருமணம் செய்யாமலே தாயான ஆதரவற்ற, பெண்ணாகிய அவர்  தனது இளமைக் காலத்தில் மதுபானக் கொட்டகைகளில் நடனம் ஆடுபவராகவும், பாடகியாகவும் வாழ்ந்தார். ஆதரவற்ற, ஏழைக் கறுப்பரினப் பெண்ணாகிய மாயா ஆஞ்சலூ தனது வாழ்க்கையில் பல துன்ப துயரங்களைக் கடந்து வந்தவர். அவர் குழந்தைப் பருவத்திலேயே கற்பழிக்கப்பட்டு,  தனது இளமைக் காலத்தில் வாழ்க்கையின் அடிமட்டத்துக்கே தள்ளப்பட்டு, கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையானார், ஆண்களுக்காக  நடனமாடும் table dancer ஆக மட்டுமன்றி, பெண்-பெண் ஓரினச் சேர்க்கை விபச்சாரிகளுக்கு தலைவியாகவும் இருந்தவர். அவரது பழைய வாழ்க்கையை அவர் ஒருபோதும் மறைத்ததில்லை. “என்னுடைய அந்த வாழ்க்கையை நான் யாருக்கும் பரிந்துரை செய்ய மாட்டேன் ஆனால் வாழ்க்கையில் அப்படியான நிலைக்கு தள்ளப்பட்டால், உன்னை நீயே மன்னித்துக் கொள்ள வேண்டும்...” அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய கேள்விக்கு அவரளித்த வெளிப்படையான பதிலைக் கீழே காணலாம்.

 You've done a lot of things in your life that most people would judge as wrong. You’ve smoked pot, taken drugs, you were a madam for lesbian prostitutes, a teenage mom, a table dancer - you didn’t follow the straight and narrow. All these experiences gave you a rich life? 

Dr. Angelou: Yes, but I wouldn’t suggest it for anybody. I mean, if you happen to fall into that sort of experience, what you have to do is forgive yourself. If you’re in the very gutter, see where you are and admit it. As soon as you admit it, you can be like the prodigal son, the prodigal daughter. Get up and go home - wherever home is. Get up and go to a safe place, someplace where your spirit is not kicked and brutalized and your body not misused and abused. Get up. But you can’t get up unless you see where you are and admit it. I wrote about my experiences because I thought too many people tell young folks, “I never did anything wrong. Who, Moi? - Never I. I have no skeletons in my closet. In fact, I have no closet.” They lie like that and then young people find themselves in situations and they think, “Damn I must be a pretty bad guy. My mom or dad never did anything wrong.” They can’t forgive themselves and go on with their lives. So I wrote the book Gather Together in My Name. Meaning that all those grown people, all those adults, all those parents and grandparents and teachers and preachers and rabbis and priests who lie to the children can gather together in my name and I will tell them the truth. Wherever you are, you have got to admit it and set about to make a change. That’s why I wrote that book. It’s the most painful book I’ve ever written.

Thursday, May 22, 2014

ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா?


ஈழத் தமிழர்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள், தமிழ்நாட்டில் ஈழத்தமிழருக்குள்ள ஆதரவை இல்லாமல் செய்யத்துடிக்கும் சிங்களவர்களின் சொம்பு தூக்கிகள், இணையத்தளங்களில் ஈழத்தமிழர்களிடம் வாயைக் கொடுத்து, ஆத்தாமல் போனவர்கள், இணையத்தளங்களில் வலம் வரும் குருவிகள், கோட்டான்கள் எல்லாம் ஈழத்தமிழர்களின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது என்னவென்றால் ஈழத்தமிழர்கள் அதாவது இலங்கையின் பூர்வீக தமிழர்கள் இந்திய வம்சாவழித் தமிழர்களை அதாவது மலையகத் தமிழர்களை பாரபட்சமாக நடத்தினார்கள், அவர்களின் குடியுரிமையைப் பறிக்க சிங்களவர்களுக்கு உதவினார்கள் என்பது தான்

அதிலும் வேடிக்கை என்னவென்றால் நான்கு யாழ்ப்பாணத் தமிழர்களின் வாக்குகள் இல்லாது விட்டால் சிங்களவர்கள் ஒரு மில்லியனுக்கு அதிகமான இந்தியத் தமிழர்களுக்கு  குடியுரிமை கொடுத்திருப்பார்கள், ஈழத் தமிழர்கள் தான் அதைக் கெடுத்து விட்டார்கள் என்பது போல் வெறும் பச்சைப் பொய்களை இன்றும் பரப்புவது தான்

இந்தியர்-பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்ட  மசோதாவுக்கு இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், அதாவது யாழ்ப்பாணத் தமிழர் வாக்களித்திருக்காவிட்டால் அது பாராளுமன்றத்தில் தோல்வியடைந்திருக்கும் என்று ஒரு வறான கருத்து நிலவி வருகிறது. இலங்கைப் பாராளுமன்றத்தில் இந்தச் சட்ட மசோதாவுக்குச் சாதகமாக பாராளுமன்றத்தில் 52 பேர்கள் வாக்களித்தனர். எதிராக 32 பேர் வாக்களித்தனர். எனவே 20 அதிகப்படியான வாக்குகளினால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழ் காங்கிரஸ் அங்கத்தவரின் நான்கு வாக்குகளும் அரசாங்கத்தை ஆதரித்த ஏனைய தமிழ் அங்கத்தவர்களின் வாக்குகளும் எதிர்க்கட்சி வாக்குகளுடன் சேர்ந்தாலும் எவ்வித மாற்றத்தையுமுண்டாக்கி இருக்க முடியாது. பாராளுமன்றத்திலிருந்த எல்லா தமிழ் உறுப்பினர்களும்  மசோதாவுக்கு எதிராக  வாக்களித்திருந்தாலும்  அது தோல்வியடைந்திருக்க மாட்டாது என்பது குறிப்பிடத் தக்கது

தமிழ்நாட்டிலே இன்றும் சாதிக்கொடுமைகள் நடைபெறுகின்றன, ஒருகாலத்தில் ஈழத்தமிழர்களிடம் சாதிப்பிரிவினைகளும், சாதிக் கொடுமையும் தமிழ்நாட்டில் இப்பொழுதுமுள்ளதை விட மோசமான நிலையில் இருந்தனவடக்கு கிழக்கு தமிழர்களிடமே சாதிப்பாகுபாடுகளைக் காட்டி பாரபட்சமாக நடத்திய ஆதிக்க சாதி ஈழத்தமிழர்கள், தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பெரும்பான்மையினராக  கொண்ட மலையகத் தமிழர்களை பாரபட்சமாக நடத்தவில்லை, என்று நான் வாதாடப் போவதில்லை அப்படி வாதாடவும் முடியாது. ஆனால் ஈழத்தமிழர்கள் வேண்டுமென்றே மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்க உதவினார்களா இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் உண்மையில் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக்கி தமிழ்நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய- பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு அவர்கள் சார்ந்திருந்த சிங்களக் கட்சியுடன் சேர்த்து வாக்களித்தார்களா அல்லது தமிழர்களிடமிருந்து 'இலங்கை மண்ணைக் கைப்பற்ற தனது *சொந்த தாயைக் கூடஒரு தமிழனுக்குக் கொடுத்த  துட்டகைமுனுவின்' வழிவந்ததாக கூறும் சிங்களவர்கள் ஈழத் தமிழ்த் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை மட்டுமல்ல, இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கும் விடயத்தில் ஏமாற்றினார்களா என்பதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. *த‌மிழ‌ர்க‌ளின் நில‌த்தைப் ப‌றிக்க‌ பெற்ற‌ தாயையும் கொடுப்பார்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் - ம‌காவ‌ம்ச‌ம்.

உலகப் புகழ் பெற்ற வழக்கறிஞராகிய கணபதி காங்கேயர் பொன்னம்பலமும், அவரது கட்சியினரும்  தீர்க்க தரிசனமின்றி, முட்டாள்தனமாக இந்தியர்-பாகிஸ்தானியர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது தவறு என்பதை எந்த ஈழத்தமிழனும் மறுத்ததில்லை. ஆனால் அவர் மட்டும் சிங்களவர்களால் ஏமாற்றப்படவில்லை, இந்த விடயத்தில் ஜவகர்லால் நேருவும் தான் ஏமாற்றப்பட்டார். இந்திய வம்சாவழித் தமிழர்களின் குடியுரிமை சம்பந்தமாக இலங்கை அரசுடன் கடிதப் போக்குவரத்தும் பேச்சு வார்த்தையும் நடத்திக் கொண்டிருந்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் இந்த சட்டத் திருத்தத்துக்கு சம்மதித்து விட்டார் என்று சிங்களவர்கள் உறுதியளித்தால் தான் ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆதரவாக வாக்களித்தார்

ஜீ.ஜீ. பொன்னம்பலத்தைமட்டுமல்ல,  ஈழத்தமிழர்களனைவரையும் வசைபாடும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஜவஹர்லால் நேருவைத் திட்டுவதில்லை,அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதைக் கேள்வி கேட்பதில்லை. உண்மையில் திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகமும் தமிழரசுக் கட்சியினரும் கூட இந்த விடயத்தில் உண்மையைக் கூறுவதற்குப் பதிலாக, அரசியல் லாப நோக்கத்துக்காக ஜீ.ஜி. பொன்னம்பலத்தை வில்லனாக்கினர் என்கிறதுமலைநாட்டுத் தமிழருக்கு துரோகம் இழைத்தது யார்? என்ற நூல். ஜவகர்லால் நேருவின் எதிர்பாராத மறைவின் பின்னர், சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் இந்தியா எப்படி நடந்து கொண்டது என்பதை ஆராயாமல் இந்த விடயத்தில் ஈழத்தமிழர்களைப் பழி கூறுவது வெறும் அபத்தம்.

 தந்தை செல்வா நினைவுத்தூண்,யாழ்ப்பாணம் 


இந்த விடயத்தில் ஈழத்தமிழர்களை  வசைபாடுவதும், பொய்ப்பிரச்சாரம் செய்து ஈழத் தமிழர்களை தமிழக மக்கள் மத்தியில், வில்லன்களாக்க முனைவதும் முறையா  என்று பார்ப்போம்

சிங்களத் தலைவர்கள் ஏமாற்றினார்களா அல்லது உண்மையில்  ஜீ. ஜீ. பொன்னம்பலம் தனது சுயநல அரசியலுக்காக இந்தியர்பாகிஸ்தானியர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தாரா என்றெல்லாம் ஆய்ந்து பார்க்காமல், மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் "பறிக்க உதவிய" ஈழத் தமிழர் தலைவர் ஜி. ஜீ. பொன்னம்பலத்தை, அதற்குத் தண்டனையாக  அடுத்த தேர்தலில் கட்டுப்பணத்தையும் இழக்கச் செய்தார்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள்.  சைவவசமயத்தவராகிய ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை ஒதுக்கி, அவரது அரசியல் வாழ்வையே அத்தமிக்கச் செய்து, மலையகத் தமிழர்களின் குடியுரிமையை 'பறிக்க' ஜீ.ஜீ துணை போய்விட்டார் என்பதைக்காரணம்காட்டி, கட்சியை விட்டு விலகி, தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த, ஒரு கிறித்தவராகிய சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தை தமது தலைவராக ஏற்று இன்றும் அவரைதமிழீழத் தந்தைஎன்று போற்றும் பெரும்பான்மைச் சைவர்களாகிய ஈழத் தமிழர்களை, சிங்களவர்கள்  மலையகத் தமிழர்களின்  குடியுரிமையைப் பறித்த விடயத்தில் குற்றஞ்சாட்டுவதும், பழிவாங்கத் துடிப்பதும் முறையானதா என்பதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். சொம்புதூக்கிகள் மாறப்போவதில்லை ஏனென்றால் அவர்களின் வேலைத்திட்டமே ஈழத்தமிழர்களை வில்லன்களாக்குவது தான்.


இந்தியவம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களின் தொழிற்சங்கங்களும் கம்யூனிச கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்ததும், இலங்கை அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு இலங்கையில் குடியுரிமை அளிக்கத் தயங்கியமைக்கு ஒரு காரணமாகும் என்பது குறிப்பிடத் தக்கதுஇலங்கைப் பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவல, இலங்கை இந்தியக் குடியுரிமை ஒப்பந்த விவாதத்தில் இலங்கைப் பாராளுமன்றத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

 "Ceylon is a small country with eight million people. I am not frightened of immigrants but I am frightened of immigrants going Communist; for us to exist we must keep them away from Communist influence." (Hansard, March 5, 1954, 3275)


உண்மையில் இலங்கைத் தமிழர் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தாரா?


  பிரித்தானியர் ஆண்ட காலனித்துவ நாடுகளில் வாழ்ந்த மக்கள் அனைவரும் பிரித்தானியக் குடிமக்களாக கருதப்பட்டதால், அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் ஆண்ட நாடுகளில் குடியுரிமைப் பிரச்சனை எழவில்லை. ஆனால் அந்த நாடுகள் சுதந்திரமடைந்ததும், ஒவ்வொரு நாடும் அந்தந்த நாட்டுக் குடியுரிமைச் சட்டங்களை இயற்றுவதும், தமது நாட்டின் குடிமக்களின் உரிமைகளையும்கடமைகளையும் வரையறுத்து, அதே வேளையில் அந்தந்த நாட்டின் குடிவரவு, குடியகல்வு மற்றும் நாட்டின் எல்லைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது முதல் கடமையென உணர்ந்தனர். 
  இவ்வாறே இலங்கையும்  1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சுதந்திரம் அடைந்ததும் 1948ம் ஆண்டின் இலங்கைப் பிரசை அல்லது குடிமகன்  யாரென வரையறுக்கும் சட்டத்தை உருவாக்கியது. 
இச்சட்டத்தின் படி :- 
·          இலங்கையில்  பிறந்த ஒருவருடைய தந்தை  இலங்கையில் பிறந்தவராகவோ, அல்லது.
·         அவருடைய தந்தை வழிப் பேரனும், தந்தை வழிப்பாட்டனும் இலங்கையிற் பிறந்தவர்களாகவோ இருந்தால், அவர் இலங்கைப் பிரஜையாகவே கருதப்படுவர். அத்துடன் 
·         இலங்கைக்கு வெளியே பிறந்தவர் இலங்கைப் பிரஜையாக மதிக்கப்பட வேண்டுமேயானால் அவருடைய தந்தையும், தந்தை வழிப் பேரனும் இலங்கையிற் பிறந்திருத்தல் வேண்டும், அல்லது, 
·         அவரின் தந்தை வழிப்பேரனும், பாட்டனும், இலங்கையில் பிறந்திருத்தல் வேண்டும். 

 இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபடியினால் தான் மலைநாட்டுத் தமிழரின் பிரஜாவுரிமை பறிபோனது. 
   இச் சட்டத்திற்கு முன் இலங்கையிலுள்ள சிங்களவர். இலங்கைத் தமிழர், இஸ்லாமியர் ஆகியோரைப் போலவே மலைநாட்டுத் தமிழரும் பிரித்தானியப் பிரஜைகளாக இருந்தபடியால் அவர்களுக்குப் பிரஜாவுரிமை இருந்தது. மேற்குறித்த சட்டம் நடைமுறைக்கு வந்தபின் பிரித்தானிய பிரஜைகள் என்ற காரணம் மட்டும் கொண்டு இலங்கைப் பிரஜாவுரிமை பெற முடியாதிருந்தது.

இலங்கை சுதந்திரமடைந்த வேளையில்  கடந்த ஐம்பது தொடக்கம் நூறு வருடங்களுக்குள் இலங்கையில் வந்து குடியேறிய இந்திய வம்சாவழித்தமிழர்கள்  இலங்கையிற் பிறவாதவர்களாகவும்,  அல்லது அவர்களின் தந்தையர் அல்லது பாட்டன்மார் இலங்கையில் பிறவாதவர்களாகவும்  இருந்தனர். அதனால் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இயற்றப்பட்ட இலங்கைக்  குடியுரிமைச் சட்டத்தின் கீழ் அவர்களால் இலங்கைக் குடியுரிமையைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது

இந்தச்சட்டத்திற்கு எதிராக திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலமும், ஏனைய தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் போர் தொடுத்தனர். அத்துடன் அச்சட்டத்தை எதிர்த்தும் வாக்களித்தனர். மலைநாட்டுத் தமிழரின் பிரஜாவுரிமையைப் பறித்தது இந்தச் சட்டம்தான். இதை எதிர்த்துப் பாராளுமன்றத்தில் திரு. பொன்னம்பலம் அவர்கள் வாதாடி, அதற்கு எதிராக வாக்களித்தார். இவ்வியம் பற்றி திரு. பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய பேச்சு 1948ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ம் திகதி கேன்சாட்டில்’ (Hansart) 1821ம் பக்கம் தொடங்கி 1861ம் பக்கம் வரை காணப்படுகிறது. அதனை வாசித்தால் உண்மை விளங்கும்.  
(மலைநாட்டுத் தமிழருக்கு
 துரோகம் இழைத்தது யார்? ) 
 திரு. பொன்னம்பலம் சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து மலைநாட்டுத் தமிழரின் பிரஜாவுரிமையைப் பறிக்கும் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தாரென்று சில தமிழ் அரசியல் கட்சிகள் பொய்ப் பிரசாரம் செய்துவருகின்றன. திரு. பொன்னம்பலம் அவர்களின் பிரசங்கங்களை மேற்குறித்த கேன்சாட்புத்தகத்தில் வாசித்தவர்கள் அவர் விடாப்பிடியாகவும், உறுதியாகவும் இச்சட்டத்தை எதிர்த்து மலைநாட்டுத் தமிழரின் உரிமைக்காக வாதாடியதை அறிவார்கள்.
    இந்தச் சட்டம் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பல நாட்களுக்குப் பின்னரே தமிழ்க் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்தது. இவ்வாறு தமிழ்க் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைவதற்கு முன்னால் மேற்குறித்த சட்டத்தின் பயனாக பிரஜாவுரிமையை இழந்த மலைநாட்டுத் தமிழர் உரிமை பற்றி திரு. பொன்னம்பலம் திரு. டி. எஸ். சேனநாயகாவுடன் ஆலோசனை செய்தார். இவ்வாலோசனையின் பயனாக ஏற்பட்ட உடன்படிக்கையின் படி இந்தியப்பிரதமர் பண்டிதர் நேருவின் சம்மதத்துடன் மலைநாட்டுத் தமிழர்களுக்குப் பிரஜா உரிமை வழங்குவதற்கு ஒரு சட்டத்தைப் பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவேனென்று திரு. டீ. எஸ். சேனநாயக்கா தமிழ் காங்கிரசிற்கு வாக்குறுதியளித்தார். அதன் பின்னரே தமிழ் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்ந்தது. இதே சமயத்தில் சிங்களத்திற்கும் தமிழுக்கும் சம அந்தஸ்து அளிப்பதென்ற கொள்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மந்திரிகளிற் சிலர் எதிராக நடத்தி வந்த கிளர்ச்சியை நிறுத்தி விடுவதாகவும் திரு. டீ. எஸ் சேனநாயக்கா மேலும வாக்குறுதியளித்தார். 

  இந்தியர்- பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம்

  தமிழ்க் காங்கிரஸ் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் ஜீ. ஜீ. பொன்னம்பலத்திற்கும், தமிழ் காங்கிரஸ் ஏனைய அங்கத்தவர்களுக்கும், அளித்த வாக்குறுதியை திரு. டி. எஸ் சேனநாயக்கா 1948-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றிவைத்தார். இந்த வாக்குறுதி என்ன? 1948ம் ஆண்டில் 18ம் இலக்கத்தைப் கொண்ட இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தின்படி பிரஜாவுரிமையை இழந்த இந்தியர்களுக்கு அவ்வுரிமையை வழங்கபாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை விரைவிற் கொண்டு வருவதாகவும், அதற்கு பண்டித நேருவின் சம்மதத்தைப் பெற்றுக் கொடுப்பதாகவும் வாக்களித்தமையே. இவ்வாக்கை நிறைவேற்றும் முகமாக 1948ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியர்- பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையில் திரு. ஜி. ஜீ. டி. எஸ். சேனநாயக்காவின் அழைப்பின் பேரில் அரசாங்கத்தில் சேர்ந்து 1948-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைத்தொழில். கைத்தொழில் ஆராய்ச்சி, கடல்தொழில் மந்திரியாகப் பதவியேற்றார். 

அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்ட இரு தினங்களுக்குள் திரு. ஜீ. ஜீ. சாம்ராச்சிய நாடுகளின் பாராளுமன்ற மாநாட்டுக்குச் சமுகமளிக்கும் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்று இலண்டன் சென்றார். அவர் இங்கிலாந்திலிருக்கும் போது மந்திரிசபை, இந்திய பாகிஸ்தானிய குடியிருப்பு பிரிஜாவுரிமை மசோதாவை ஆலோசனை செய்து ஏற்றுக் கொண்டது. இம் மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு சில தினங்கள் இருக்கும் போதே திரு. ஜீ. ஜீ. இலங்கை வர முடிந்தது. 
இம் மசோதா மந்திரிசபையினால் ஆராயப்படும்போது திருவாளர்கள் சிற்றம்பலமும், சுந்தரலிங்கமும் மந்திரிசபையிலிருந்தனர்திரு. சுந்தரலிங்கம் இம்மசோதா பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபொழுது அதற்கெதிராக வெளிநடப்பு செய்தமையால் மந்திரிசபையிலிருந்து திரு. டி. எஸ். சேனாநாயக்காவினால் விலக்கப்பட்டார்.  இந்த மசோதாவுக்கு திரு. பொன்னம்பலம் சாதகமாக வாக்களித்ததை ஆதாரமாகக் கொண்டே சில அரசியற் சாகசக்காரர்கள் பொய்யாகவும் கெட்ட பெயரை திரு. ஜீ. ஜீ. க்குத் தேடிக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்துடனும், உண்மையைத் திரித்துப் பிரசாரஞ் செய்யத் தொடங்கினார்கள். 
  மலைநாட்டுத் தமிழரின் பிரசா உரிமையைப் பறித்த சட்டம். இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டம் அதைத் திரு. பொன்னம்பலம் மிகக் கடுமையாக எதிர்த்துப் பேசி வாதாடியதுமல்லாமல் அதற்கெதிராக வாக்களித்த விஷயமெல்லாம் முந்திய அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ளன. 
  இந்தியா, பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை மசோதாவின்படி இலங்கையிற் குடும்பமாக ஏழு வருடங்கள் வசித்தவர்களும், விவாகமாகாமல், பத்து வருடங்கள் வசித்தவர்களும் பிரஜா உரிமை பெறுவதற்கு உரிமை பெற்றார்கள் இலங்கை இந்தியக் காங்கிரசும், தமிழ் காங்கிரசும் குடியுரிமை பெறுவதற்கு ஐந்து வருடவாசம் போதுமானதென வாதாடின. ஆனால் அரசாங்கம் ஏழு வருட வாசம் அவசியமெனக் கொண்டது. இவ்விடயத்தில் திரு. பொன்னம்பலம் அரசாங்கத்துடன் ஒத்துப்போனார். இது ஒரு பெரிய குற்றமா? நேர்மையும் உண்மையுமுடையவர்கள் இவ்வாறு வெளிப்படையாக சமரசம் செய்த கொண்டமையை ஒரு பெருங் குறையாகக் கருத மாட்டார்கள். 
   இந்தியர்-பாகிஸ்தானியர் பிரஜா உரிமை மசோதா, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படு முன்னர். பண்டிதர் நேருவிடம், திரு. டீ. எஸ் சேனநாயக்காவால் சமர்ப்பிக்கப்பட்டது. நேருஜீ அவர்கள் ஆதரித்த மசோதாவை திரு. பொன்னம்பலம் சம்மதித்தமைக்காக சில அரசியற் குட்டுணிகள் நாளும் பொழுதுமாக ஓலமிட்டு விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
  இம் மசோதாவிற் காணப்படும் சில அம்சங்கள் விஷயமாக நேருஜிக்கும், சேனநாயகாவுக்குமிடையில் நீண்ட கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. இரண்டு சிறு விஷயங்கள் பற்றி அபிப்பிராயபேதம் இருந்த போதிலும், மலைநாட்டுத் தமிழரில் பெரும் பகுதியினருக்கு இம்மசோதாவின் பயனாக  குடியுரிமை கிடைக்குமென உணர்ந்த நேருஜி. தாமதமின்றி இம் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு திரு. சேனநாயக்காவைக் கேட்டுக் கொண்டார். 
 இவ்வேண்டுகோள் 1948ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ந் தேதி நேருஜீ, டி. எஸ். சேனநாயக்காவிற்கு எழுதிய கடிதத்தில் காணப்படுகிறது.
"இலங்கையில் வசிக்கும் இந்தியர்கள் பிரசா உரிமை பெறுவதற்கு எவ்வித தாமதமுமின்றி ஒழுங்கு செய்யப்பட வேண்டுமென்பதில் நான் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதால், இம் மசோதாவின் சரத்துக்ளை ஆராய்ச்சி செய்வதில் நீண்ட காலம் செலவு செய்ய விரும்பவில்லை. மேலும் வாதித்துக் கொண்டிருப்பதால் அதிகப் பயன் கிடையாது. நீங்கள் சொல்ல வேண்டியதைச் செல்லி விட்டீர்கள். நானும் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். இலங்கையில் வசிக்கும் இந்தியரின் ஆவலைத் தீர்ப்பதற்கு ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இலங்கை இந்தியர்கள் பிரஜா உரிமை பெறுவதற்கு சட்டமியற்ற உடனடியாக வாக்கை எடுக்குமாறு மிகுந்த ஆர்வத்துடன் வேண்டிக் கொள்கிறேன்

       மலையகத் தமிழர் பிரஜா உரிமை பெறாததற்கு மூலகாரணம் யார்?
  இந்தியா-பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டத்தின் படி 75 வீதத்திற்கும் அதிகமான மலை நாட்டுத் தமிழர் இலங்கை பிரசா உரிமை பெறுவார்களென்பதை பண்டிதர் நேரு, திரு. மோத்தா, திரு. பெரியசுந்தரம் போன்ற பொறுப்பு வாய்ந்த தலைவர்கள் ஒப்புக்கொண்டார்களென்பதையும் இச்சட்டம் சரியானபடி அமுல் நடத்தப்பட்டால் அந்நிலைமை உண்டாயிருக்கு மென்பதையும். இவ்வண்ணம் மலைநாட்டுத் தமிழருக்கு பிரஜாவுரிமை கொடுத்த மசோதாவையே திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் ஆதரித்து வாக்களித்தாரென்பதையும், நீதி மனப்பான்மையுள்ள எவரும் ஜீ. ஜீ. பொன்னம்பலத்தை இதற்காகக் கண்டிக்க மாட்டார்கள். 
 எழுபத்தைந்து வீதத்திற்கு அதிகமானோர் பிரசா உரிமை பெறுவார்கள் என்று பொன்னம்பலமும் ஏனைய இந்தியத் தலைவர்களும் உண்மையாக நம்பியிருந்தார்கள். ஆனால் கடைசியில் பதினைந்து வீதமானோரே பிரசா உரிமை பெற்றனர். இதற்குக் காரணமென்ன?

    குடியுரிமைக்கு விண்ணப்பஞ் செய்விக்காமல் இடையூறாயிருந்தவர்கள் யார்?

   குடியுரிமை பெற விரும்புவோர் மசோதா நிறைவேறி இரண்டு வருடங்களுக்குள் விண்ணப்பஞ் செய்து கொள்ள வேண்டுமென்பது அச்சட்டத்தின் ஐந்தாவது பிரிவிற் காணப்படும் நிபந்தனையாகும். இவ்விஷயத்தில் மலைநாட்டுத் தமிழரின் பிரதிநிதியாகிய இலங்கை-இந்தியக் காங்கிரஸ் செய்ததென்ன?


விண்ணப்பங்களை நேர காலத்திற்குள் அனுப்பி வைத்தார்களா? இதற்கான நடவடிக்கைகளை உடனே எடுத்தார்களா? இவ்வாறு செய்யாது சட்டத்தைப் பகிஷ்கரித்து சிரிப்பதற்கு இடமானதோர் சத்தியாக்கிரகத்தை நடத்தினார்கள். இத்தகைய முட்டாள்தனமான, பயனற்ற நடவடிக்கையை எடுக்குமாறு சமஷ்டிக்கட்சித்(தமிழரசுக்கட்சி) தலைவர்கள் அவர்களை ஊக்கினார்கள். பண்டித நேரு இந்த நடவடிக்கையை அங்கிகரிக்கவில்லை. 

இப்பயனற்ற சத்தியாக்கிரகத்தைக் கைவிட்டு பிரஜாவுரிமை விண்ணப்பங்களைப் பெருவாரியாகப் பதிவு செய்திருந்தால் நேரு. ஜீ. ஜீ. போன்றவர்கள் எதிர்பார்த்த நலன்கள் கிடைத்திருக்கும். ஆனால் அவர்கள் ஒன்றரை வருடக் காலத்தை இச்சத்தியாக்கிரகத்தில் செலவு செய்தார்கள். இப் பகிஷ்காரத்தினாலும் சத்தியாக்கிரகத்தினாலும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. தீமையே ஏற்பட்டது. சட்டத்தின் ஏற்பாடுகள் ஓரு அணுவளவும் மாற்றப்படவில்லை. 
  பண்டிதர் நேருவுடன் இவ் விஷயம் பற்றி நீண்டகாலமாகக் கடிதப் போக்குவரத்துச் செய்த திரு. டீ. எஸ். சேனநாயகா இம்மசோதாவின் ஏற்பாடுகளில் மேலதிகாமாக எவ்விதமாற்றமும் செய்யவிரும்பாதபொழுது இவர்களுடைய சத்தியாக்கிரகத்தினாலோ, பகிஷ்கரிப்பினாலோ ஏதுஞ் செய்து விடுவாரென்று அசீஸ், தெண்டமான், செல்வநாயகம் போன்றோர் நினைத்தது முட்டாள்தனமாகும். 
  வேறு மாற்றங்கள் செய்ய மாட்டாரென்பதை நன்றாக உணர்ந்தபடியால் தான் நேருஜி இம் மசோதாவை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு தாமெழுதிய கடைசிக்கடிதத்தில் கேட்டுக் கொண்டார். இக்காரணங்களைக் கொண்டே திரு. பொன்னம்பலமும் இம் மசோதாவை ஆதரித்தார்.
இவ்வாறு ஒன்றரை வருடங்கள் சத்தியாக்கிரகங்களிலும், போராட்டங்களிலும் கழிந்த பின்னர் தமது பிழையை உணர்ந்த இத்தலைவர்கள் சத்தியாக்கிரகக் கைகைவிட்டு பிரசா உரிமை கோரி விண்ணப்பஞ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் ஆறு மாதங்களில் எத்தனை விண்ணப்பங்களைத் தான் அனுப்பலாம்? 
  அன்றியும், எவ்வளவு காலம் இலங்கையில் வாழ்ந்தமைக்கான  தகுதி முதலியவற்றை உறுதிப்படுத்தும் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்குப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை. எனவே தேவையான அத்தாட்சிப் பத்திரங்களின்றி பல விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன. சமாதான நீதவானின் ஒப்பமின்றியும், ஏனைய அத்தாட்சிப் பத்திரங்களின்றியும், அனுப்பப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களை நிருவாக உத்தியோகத்தர்கள் இலகுவாக  நிராகரித்து விட்டார்கள். இதனால் எத்தனையோ ஆயிரம் மலையகத் தமிழர்கள்  பிரசா உரிமை பெறும்சந்தர்ப்பத்தை இழந்தனர். 

பிழையானதும் பூர்த்தியற்றதுமான தகவல்கள். கொடுக்கப்பட்ட காரணத்தினால், அரசாங்க உத்தியோகத்தர்களினால் பெருந்தொகையான குடியுரிமை மனுக்கள் நிராகரிக்கப்பட்டனவென்பதை திருமலையில் 1964ம் ஆண்ட ஆவணி மாதம் நடைபெற்ற சமஷ்டிக் கட்சியின் 9வது தேசிய மாநாட்டின் போது நிகழ்த்திய தலைமையுரையில், செல்வநாயகம் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதோ அவரது கூற்று:- 

அன்று 8 இலட்சமாயிருந்து, இன்று 10 இலட்சத்துக்கும் மேற்பட்டிருக்கும். ஒரு முழுச் சமுதாயத்தையே குடியுரிமையற்றவர்கள் ஆக்கும் திருப்பணி நிறைவேறியது. டீ. எஸ். சேனநாயக்கா அரசாங்கம், இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் என ஒரு சட்டம் இயற்றியது. இச்சட்டத்தின் பிரகாரம் ஒரே தொடர்பாக விவாகமாகாத ஒருவர் 7 வருடமும் (10 வருடங்களென இருத்தல் வேண்டும். எனது திருத்தம்) விவாகமான ஒருவர் 10 வருடமும் (7 வருடங்களென்பதே சரி எனது திருத்தம்) வாசகாலத்தகைமை காட்டினால் இவர்கள் மீண்டும் பிரஜைகளாகப் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவுக் குடியுரிமை கோரியவர்களின் மனுக்கள் மிகப் பெருந்தொகையில் நிர்வாக வழிகள் மூலம் நிராகரிக்கப்பட்டன. இதன் விளைவாக மனுப் பண்ணியவர்களில் வெறும் 10 சதவிகிதத்தினரே குடியுரிமை பெற முடிந்தது. 90 சதவிகதிதமான மனுக்களும் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் அம் மனுப் பத்திரங்களில் தெரிவித்த தகைமை. விபரங்கள் சரியற்றவை அல்லது போதாதவை என்பதுவல்ல@ எழுத்து வாசனையறிவற்ற தோட்டத் தொழிலாளிகள், அவ்விபரங்களை மனுப்பத்திரங்களில் நிரப்பிய நுண்முறைகள் சரியற்றவை. என்ற விதண்டாவாதமேயாகும் - சுதந்திரன் 13-9-64 

மலைநாட்டுத் தமிழர் இவ்வளவு குறைவாக பிரசா உரிமை பெறுவதற்கு, அரசாங்கமும், காரணமாக இருந்தது. போலி நியாயங்களைக் காட்டி ஏராளமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இது கொத்தலாவலை அரசாங்கத்தின் தூண்டுதலால் உத்தியோக வர்க்கம் செய்த பெருங்கெடுதியாகும். சுப்றீங் கோட்டுக்கும், பிறிவிக் கவுன்சிலுக்கும் அனுப்பப்பட்ட அப்பீல் வழக்குகளிலிருந்து இந்த உத்தியோகத்தர்கள் அநீதியாகவும், சட்டத்திற்கு விரோதமாகவும். நேர்மையற்ற முறையில் பல விண்ணப்பங்களைத் தள்ளுபடி செய்தார்களென்பது தெரிய வருகின்றது.
  இவ்வாறு உத்தியோகத்தர்கள் அநீதியாகத் தள்ளுபடி செய்ய முற்பட்டமை திரு. பொன்னம்பலம் மந்திரி சபையை விட்டு விலகிய பின்னரே! 

நேருஜிடட்லி சமரச முயற்சி 

   இச்சட்டப்படி பிரஜாவுரிமை பெறத் தக்க தகைமை இல்லாதவர்களுக்கு நிரந்தரவாச அனுமதி கொடுக்க ஒரு திட்டத்தை வகுக்குமாறும் அக்காலத்தில் பிரதம மந்திரியாயிருந்த டட்லி சேனநாயகாவிடம் திரு. பொன்னம்பலம் வற்புறுத்தினார். இதன் பயனாக டட்லி சேனநாயகா 250,000 மலைநாட்டுத் தமிழருக்கு நிரந்தர வாச அனுமதி கொடுக்க உடன்பட்டார். அதாவது பிரஜாவுரிமை பெற்றவர்கள் போக, பிரஜாவுரிமை பெறத் தவறிய 250,000 மலைநாட்டுத் தமிழர்க்கு நிரந்தரகுடியுரிமை  அனுமதி வழங்க உடன்பட்டார். 

இந்தத் திட்டத்தை டட்லி சேனநாயகா 1953ம் ஆண்டு ஜுன் மாதத்தில் லண்டன் சென்றிருந்த போது மகாராணியாரின் முடிசூட்டு விழாவுக்கு அங்கே சமுகந்தந்திருந்த பண்டிதர் நேருவுடன் விவாதித்தார். பண்டித நேரு 300,000 மலைநாட்டுத் தமிழருக்கு நிரந்தர குடியுரிமை அனுமதி கொடுக்குமாறு கேட்டார். அதற்கு டட்லி சேனநாயக்கா உடன்படாததால் திட்டம் கைவிடப்பட்டது. நேருஜி இத் திட்டத்தை ஆதரித்திருந்தால் திட்டம் நிறைவேறியிருக்கும். அவ்வாறு அத்திட்டம் நிறைவேறியிருக்குமானால் அதற்கு மூலகாரணராய் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலமே இருந்திருப்பார். 

நேருஜிக்கும் டட்லி சேனநாயகாவுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில், டட்லி சேனநாயகா இந்தியர் பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டத்தின் பிரகாரம் 400,000 மலைநாட்டுத் தமிழருக்குப் பிரஜா உரிமை வழங்கப்படுமென வாக்குறுதியளித்திருந்தார். இவ்விடயத்தை இலங்கைப் பாராளுமன்றத்திலே பீட்டர் கெனமன் எடுத்துக் காட்டிய பொழுது அது உண்மையென்பதை திரு. டட்லி சேனநாயகா பகிரங்கமாக ஒப்புக் கொண்டார் 
  இவ்விடயம் 1960ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி கேன்சாட்டில் 692ம் பக்கத்திலே கூறப்பட்டிருக்கின்றது. 1953ம் ஆண்டில் திரு. டட்லி சேனநாயகா நேருஜிக்கு அளித்த வாக்குறுதியை வைத்துப் பார்க்குமிடத்த திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் இம்மசோதாவுக்கு வாக்குரிமையளித்தமை வேறொரு காரணத்தினாலுமன்று என்பதும் பெருந்தொகையான மலைநாட்டுத் தமிழர் பிரஜாவுரிமை பெறுவார்களென்ற நம்பிக்கையினால் தான் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாகும். 
  மலைநாட்டுத் தமிழரி;ல் 65 அல்லது 70 விகிதத்தினர் இம் மசோதாவின் பயனாய் பிரஜாவுரிமை பெறுவாரென திரு. ஜீ. ஜீ பொன்னம்பலம் உண்மையில் நம்பினார். இந்நம்பிக்கை ஆதாரபூர்வமான உண்மையை அடிப்படையாய்க் கொண்ட தென்பதும், அது கற்பனையிற் பிறந்த தொன்றல்ல வென்பதும் திரு. டட்லி சேனநாயகா நேருஜிக்களித்த வாக்குறுதியிலிருந்தே புலனாகிறது. இந்த உண்மைகளைத் தெள்ளளத் தெளிய அறிந்த பின்னரும், தமிழரசுக் கட்சியினர் திரு. பொன்னம்பலத்துக்கு எதிராகப் பொய்ப்பிரசாரஞ் செய்து வந்தனர். விஷமத்தனமான நன்றி கெட்ட, நடு நிலைமை அற்ற பிரசாரங்களில் ஈடுபட்டார்கள். மலைநாட்டுத் தமிழரின் உரிமையைப் பலப்படுத்தவும், தமக்குப் பெருமை தேடிக்கொள்ளவும், விஷமப் பிரச்சாரம் செய்தார்கள்.

திரு. பொன்னம்பலம் மலைநாட்டுத் தமிழர்களுக்காக நேர்மையுடனும் ஆர்வத்துடனும் அரசியல் தீர்க்கதரிசனத்துடனும் அருந்தொண்டாற்றி வந்தார் என்பதை நேர்மையுள்ளவர்கள் உணர்வார்கள். கடந்த நூற்றாண்டின் சரித்திரம் சிறந்த சான்று பகரும். 


மலையகத் தமிழருக்குத் திரு. பொன்னம்பலம் ஆற்றிய தொண்டுகள்.

1. 1933-ம் ஆண்டிலே திரு. பொன்னம்பலம் சட்டசபை அங்கத்தவரான காலந்தொட்டு இலங்கை, இந்திய காங்கிரஸ் மலைநாட்டுத் தமிழரின் அரசியல் கட்சியாக உருப்பெற்ற 1945-ம் ஆண்டு வரை திரு. பொன்னம்பலமே சட்ட சபையிலும் அதற்கு வெளியிலும் மலைநாட்டுத் தமிழரின் உரிமைகளுக்காகவும் அவர்களின் பொருளாதார உரிகளுகட்கும் நலன்களுக்குமாகப் போராடியும், வாதாடியும். வந்தவர். 

2. மூலோயாத்தோட்டத்துக் குழப்பத்திலே கோவிந்தன் என்ற தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்ட பொழுது விசாரணைச்சபையில் அவர் மலைநாட்டுத் தமிழரின் பாதுகாப்பையும் மரியாதையையும், அந்தஸ்தையும், தமது அயரா உழைப்பினாலும் அரிய தியாகத்தினாலும் உறுதியான நடவடிக்கைகளினாலும் நிலை நாட்டினார். 

3. நேவ்ஸ்மயர் தோட்டத்தை அரசாங்கம் வாங்கி அதிலிருந்த தமிழரை நிர்க்கதிக்குள்ளாக்கிய பொழுது திரு. பொன்னம்பலம் அரசாங்க சபையிலே அதை எதிர்த்தார். நீதிமன்றத்திலும் வழக்காடினார். அதன் பயனாக அரசாங்கம் அந்நடடிக்கையை கைவிட்டது. 

4. சோல்பரி விசாரணைக் குழுவின் முன்னர் சாட்சியமளிக்கையில் திரு. பொன்னம்பலம் மிகத் திறமையுடன் வாதாடிய தன் பயனாகவே தங்கள் சிபார்சின்படி 100 அங்கத்தவர் கொண்ட பாராளுமன்றத்திலே மலைநாட்டுத் தமிழருக்கு 14 பிரதிநிதிகளாவது இருக்க முடியுமெனத் தமதறிக்கையில் தெரிவித்தார்கள். 

5. இலங்கை, இந்தியர். காங்கிரசும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரசும் ஒரு ஐக்கிய முன்னணி அமைத்து ஒரு கொடியின் கீழ் நின்று 1947-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் கலந்த கொள்ள வேண்டுமென அன்று திரு. பொன்னம்பலம் யோசனை கூறினார். அந்த யோசனையை இலங்கை இந்தியக் காங்கிரசு ஏற்றிருந்தால் இன்று தமிழினத்தின் நிலைமை வேறு விதமாயிருக்கும். பல லட்சக்கணக்கான மலைநாட்டுத் தமிழர் பிரஜாவுரிமை பெற்றிருப்பார்கள்;. பிரஜாஉரிமைப் பிரச்சினையென்ற ஒரு பிரச்சினையே இன்று இருந்திருக்கமாட்டாது. 

6. 1948-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 18-ம் இலக்க இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டமே மலைநாட்டுத் தமிழரின் பிரஜாவுரிமையைப் பறித்தது. அதனை திரு. பொன்னம்பலமும் ஏனைய தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களும் எதிர்த்தார்கள். 1948-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் இருபதாம் திகதி கேன்சாட்டின் 1821-1861 பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் திரு. பொன்னம்பலம் எவ்வளவு தீவிரமாக இதனை எதிர்த்தார் என்பது தெரியும். 

7. தமிழ்காங்கிரசு அரசாங்கத்துடன் சேர்வதற்கு முன்னால் இருதரப்பினருக்கு மிடையியே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் பொழுது திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வாதாடிய சிக்கல்களில் மலைநாட்டுத் தமிழரின் குடியுரிமைச் சிக்கலும் ஒன்றாகும். சேனநாயகா அவ்விடயத்தைப் பற்றித் தாம் பாராளுமன்றத்திலே புதியதொரு மசோதா சமர்ப்பிக்கப் போவதாகவும் அம்மசோதா பண்டிதர் நேருவின் அனுமதியைப் பெற்றதாயிருக்குமெனவும் கூறிய பின்னரே திரு. பொன்னம்பலம் சேனநாயக்கா அரசாங்கத்தில் சேர்ந்தார். 

8. பொன்னம்பலத்திற்கு அளித்த வாக்குறுதிப்படி 1948-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியா-பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை மசோதாவை டீ. எஸ். சேனநாயகா பாராளுமன்றத்திலே சமர்ப்பித்தார். இம்மசோதாவுக்கு நேருஜீ ஆதரவு அளித்தார். 1948-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் திகதி நேருஜீ எழுதிய கடிதத்திலே மேலும் தாமதஞ் செய்யாது இந்த மசோதாவைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டமாக்க வேண்டும்என்று கேட்டார். இந்த மசோதாவுக்கு வாக்களித்ததற்காகவே பொன்னம்பலம் விஷமத்தனமாக கண்டிக்கப்பட்டார். 

இம்மசோதா மலைநாட்டுத் தமிழரின் பிரஜா உரிமையை பறிக்கவில்லை. பதில் இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டப்படி பிரஜாஉரிமையை இழந்த மலைநாட்டுத் தமிழருக்கு அதனை மறுபடி கொடுப்பதற்கு வகுக்கப்பட்ட சட்டமே இது .இச்சட்டப்படி இலங்கையில் 7 வருடங்கள் வாழ்ந்த குடும்பத்தவருக்கு பிரஜா உரிமை வழங்க வகைசெய்யப்பட்டது. தமிழ்காங்கிரசும் இலங்கை இந்தியக்காங்கிரசும் 5 வருட வாச உரிமையிருந்தால் போதுமென்று கோரின. இச்சட்டப்படி அந்தக் கோரிக்கை 7 வருடங்களாக்கப்பட்டது. இதுவே இச்சட்டத்திலுள்ள சிறிய மாற்றம். பொன்னம்பலம் இந்த 2 வருட அதிகப்படியான கால எல்லைக்கு உடன்பட்டது. பாதகமா? 
  நேர்மையுள்ளவர்கள் அவ்வாறு கூறுவாரா? இந்தியப் பிரதமர் நேரு இதனை ஆதரித்தார் என்றால் பொன்னம்பலம் ஆதரித்தமை மாத்திரம் பெரிய குற்றமாகி விடுமா? விஷமத்தனத்திற்கும் ஒரு எல்லை வேண்டும். இச்சட்டப்படி இலங்கையிலுள்ள மலை நாட்டுத் தமிழரில் 75 விகிதத்தினர் பிரஜாவுரிமை பெற்றிருப்பார்கள் ஆனால் என்ன நடந்தது? 
  இலங்கை-இந்தியக் காங்கிரசு பயனற்ற சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கி விட்டுக்காலம் கடந்த பின்னர் ஓடி, ஓடிப்பிரஜாவுரிமை விண்ணப்பங்களை அரைகுறையாக நிரப்பி அனுப்புவித்தது. அதனால் ஏராளமான ஏழை இந்தியர் பிரஜாவுரிமையை இழந்தனர். சரியான முறையில் நேரத்தோடு விண்ணப்பஞ் செய்ய முடியாமையால் ஏராளமானவர்கள் பிரஜாவுரிமையையிழந்தனர். 

9. இச்சட்டத்தை அமுல் நடத்திய கொத்தலாவலை பண்டார நாயக்கா அரசாங்கங்கள் நேர்மையற்ற முறையில் அதிக விண்ணப்பங்களை நிராகரித்தன. இது பொன்னம்பலம், அரசாங்கத்தை விட்டு அகன்ற பின்னரே நடந்ததென்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும். இது இந்தியாவின் இலங்கைத் தூதுவராகவிருந்த தேசாய் தயாரித்த புள்ளிவிபரங்களில் இருந்து புலனாகும். இச்சட்டம் அமுலாவது பற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்னர் பொன்னம்பலம் வீ. வீ. கிரியின் ஆலோசனையைக் கேட்டார். கிரி. பொன்னம்பலம் மந்திரிப்பதவியில் இருப்பது தமிழருக்குப்பலம் என்றும், அப்பொழுது தான் சட்டம் நல்லமுறையில் அமுல் நடத்தப்படும் என்றும் கூறி அவரை மந்திரிப் பதவியை ராஜினாமாச் செய்யாது தடுத்தார். 
10. பொன்னம்பலம், டட்லி சேனநாயகாவுடன் வாதாடி மேற்படி சட்டத்தின் கீழ் பிரஜாவுரிமை பெறுவோரை விட, மேலும் 250.000 பேருக்கு விசேட வாசப் பெர்மிட்உரிமை வழங்க ஒரு திட்டம் வகுக்குமாறு வேண்டினார். அதற்கு டட்லி சேனநாயகாவும் உடன் பட்டார். எனவே இங்கு கூறியவற்றை காய்தல், உவத்தல், இன்றி ஆராய்ந்தோர் பொன்னம்பலம் மலைநாட்டுத் தமிழர் உரிமை விடயத்தில் கண்ணும், கருத்துமாக சிரத்தையுடனும், ஆர்வத்துடனும் தொண்டு செய்தார் என்பதை மறுக்க முடியாது. 

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழியினர்  சம்பந்தமாக நேரு-கொத்தலாவலை செய்து கொண்ட ஒப்பந்தம் :