Wednesday, April 9, 2014

தமிழ்நாட்டிலே இப்படியும் ஒரு தமிழன்!


தமிழ், தமிழர்களின் உரிமை, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றிப் பேசுகிறவர்களை  பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் மூலம் வில்லன்களாக்கி, அவர்களுக்கு பெருந்தன்மையற்ற, மனிதநேயமற்ற, பிற்போக்கு, இனவாதிகள் என்று பட்டம் சூட்டி அவர்களை ஓரங்கட்டவென்றே பலர் "தமிழர்கள்" என்ற போர்வையில்  கண்ணுக்குள் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு காத்திருக்கும் போது, தான் ஒரு தமிழன் என்பதை  துணிச்சலுடன்  எல்லோருக்கும் எடுத்துக் காட்டிய கவிஞர் அறிவுமதி அவர்கள், உலகத் தமிழர்கள் அனைவரினதும் பாராட்டுக்குரியவர் மட்டுமல்ல, தமிழுணர்வுள்ள ஒவ்வொரு தமிழனதும் பெருமைக்குமுரியவர்.

ஈழத்தமிழர்களை அவர்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திஈனத்தனமானவகையில் படமெடுத்த அந்த மலையாளியின் படம் தடை செய்யப்பட்டு விட்டதென்ற ஆத்திரத்தில் தமிழ்நாட்டுத் தமிழர்களைத்   தலிபான்களாக்கி, ஈழத்தமிழர்களைப் பற்றி இல்லாத பொல்லாத பொய்ப்பிரச்சாரங்களைச் செய்த சிங்களவர்களின்சொம்பு தூக்கிகள்உள்ள தமிழ்நாட்டில், அறிவுமதி என்ற தமிழ்க்கவிஞன் தனது இனத்துக்கும் மொழிக்கும் துரோகம் இழைக்க மறுத்து, தனக்கு வந்த வாய்ப்பையே உதறித் தள்ளுவதைப் பார்க்க மிகவும் பெருமையாக இருக்கிறது. இவர்களைப் போன்ற ஒரு சிலரால் தான் தமிழ்நாட்டில் தமிழ் இன்றும் வாழ்கிறது.  இவரைப் போன்ற தமிழர்களும் தமிழ்நாட்டில் உண்டு என்பதை  உலகத்தமிழர்கள் அறிய வேண்டும், அனைவரும் அவரை வாழ்த்த வேண்டும், இந்தச் செய்தி வெறும் ஒரு சில இணையத்தளங்களில் மட்டும் இல்லாமல், உலகம் முழுவதும்  பேசப்பட வேண்டும், உலகத் தமிழர்கள் இப்படியான உண்மையான தமிழர்களை அடையாளம் காண வேண்டும், தமிழர்கள் அனைவரும் அவரைப் பாராட்ட வேண்டுமென்பதால் Thatstamil.com இல் உள்ள இந்தச் செய்தியை இங்கு  மீள்பதிவு செய்துள்ளேன்.

சென்னை: தமிழ் இனத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் இனம் படத்தை எடுத்த லிங்குசாமி படத்தில் பாட்டெழுத முடியாது என முகத்திலடித்தது போல கூறி அதிர வைத்துள்ளார் ஒரு தன்மானக் கவிஞர். அவர்தான் அறிவுமதி 
தமிழருக்கு எதிரான எந்த மேடையாக இருந்தாலும் அதில் தன் எதிர்ப்புக் குரலை கம்பீரமாகப் பதிவு செய்பவர் கவிஞர் அறிவுமதிதமிழுக்கு இழுக்கு என நினைக்கும் எந்த செயலையும் அறவே ஒதுக்கக் கூடியவர். தனக்கு வரும் எத்தனையோ வாய்ப்புகளை, 'இந்தத் தம்பிக்கு கொடுப்பா' என்று கூறிச் செல்பவர். வெகு அரிதாகத்தான் பாடல் எழுதவே அவர் ஒப்புக் கொள்கிறார். லிங்குசாமியின் நண்பர்களில் ஒருவராகத்தான் இருந்தார் இனம் என்ற படத்தை அவர் வெளியிடும் வரையில். இனம் படத்தில் தமிழருக்கு எதிராக சந்தோஷ் சிவன் செய்த ஈனத்தனமான அரசியலைப் புரிந்து, அந்த கூட்டத்தை அறவே தவிர்க்க ஆரம்பித்துள்ளார் அறிவுமதி. 
லிங்குசாமி இப்போது எடுத்து வரும் படம் அஞ்சான். இதில் சூர்யா ஹீரோ. பெரிய பட்ஜெட் படம். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு, இனம் படத்தை எடுத்த அதே சந்தோஷ் சிவன்தான். இந்தப் படத்துக்கு ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டு அறிவுமதிக்கு மெட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பியுள்ளார் லிங்குசாமி. அதைக் கேட்கவும் விரும்பாத அறிவுமதி, மெட்டை திருப்பியனுப்பியதோடு,"லிங்குசாமி, இனம் படத்தை எடுத்த உங்களைப் போன்றவர்கள் படங்களில் பாட்டெழுதுவது என் இனத்துக்கு செய்யும் துரோகம். இனம் படத்தை எடுத்த சந்தோஷ் சிவன்தானே இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவாளர். அதில் நான் எப்படி பாடல் எழுத முடியும்..!" என்று திருப்பிக் கேட்டுள்ளார்.  
தமிழ் தமிழ் என வாய் கிழியப் பேசும், வர்த்தக ரீதியில் பெரிய கவிஞர்களாகப் பார்க்கப்படும் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கிதான் இனம் படத்துக்கு பாட்டெழுதினார். வைரமுத்து அந்தப் படத்தை தலைமேல் வைத்துக் கொண்டாடினார் என்பது நினைவிருக்கலாம். அறிவுமதி... பெயரைப் போலவே தன்மானத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கவிஞரே.. உங்கள் பெருமையை இந்த தமிழினம் அறியட்டும்!

http://viyaasan.blogspot.ca/2013/06/blog-post_2880.html

ஈழத்தமிழர்களை உசுப்பேத்தி விடும் தமிழ் நாட்டுத் தமிழர்கள்!


3 comments:

Ant said...

பெரும்பான்மையினரின் வாக்குகளை பெற்று மதசார்பற்ற ஆட்சியமைத்து அதன்வழி மதசார்பற்றவர்களின் மதசார்பு இனப்படுகொலைக்கு துணைபோவர்கள். தொடர்ந்து பொரும்பான்மை இனமே அழிந்தாலும் காட்டிக்ககொடுக்கும் சிறுபான்மையை காக்க இவர்கள் ஆட்சியில் வேறு அ‌மரவேண்டும். போலிமதசார்பின்மைவாதிகளை ஒரங்கட்டி தமிழர்நலனில் அக்கரை உள்ளவர்கள் ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

வருண் said...

வியாசர் அண்ணாச்சி! ஏன் தமிழ்நாட்டில் இப்படித் தமிழர்களெல்லாம் இருக்க மாட்டாங்களா?

ஆரம்பத்தில் எல்லாருமே நல்லெண்னத்தோடதான் இருக்காங்க. ஆனால் பெரியாளாகி, அரசியல் "சொந்தங்கள்" உருவான பிறகு.. தன் வாரிசுகள் தலைஎடுக்கணுமேனு ஆயிடுறப்போ, கொஞ்சம் "ரிலாக்ஸ்" பண்ணிக்கிறாங்க, வைரமுத்துவைப் போல.

நம்ம சீமான் அண்ணாச்சியும் ஈழப்பெண்ணுக்கு வாழ்வு கொடுப்பேன்னு ஏதோ சொன்னதாக எல்லாரும் சொல்லிக்கிறாங்க? அவருக்கு வேற யாரோ பெரிய இடத்தில் பொண்ணு கொடுத்துட்டாங்களாமே? அது மாதிரித்தான்.

யாரையும் அவசரமா எடை போட்டுறாதேள்! பொறுத்துப் பாருங்கோ! :)

viyasan said...

//ஏன் தமிழ்நாட்டில் இப்படித் தமிழர்களெல்லாம் இருக்க மாட்டாங்களா?//
இதுவரை கேள்விப்பட்டதில்லை, அது தான் மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி. :-)

//நம்ம சீமான் அண்ணாச்சியும் ஈழப்பெண்ணுக்கு வாழ்வு கொடுப்பேன்னு ஏதோ சொன்னதாக எல்லாரும் சொல்லிக்கிறாங்க? //

சீமான் அண்ணாச்சி ரெடியாத் தான் இருந்தாராம், ஆனால் அந்த ஈழப்பெண் தான் மறுத்து விட்டதாம் என்கிறார்கள்.

//யாரையும் அவசரமா எடை போட்டுறாதேள்! பொறுத்துப் பாருங்கோ! :)//
பொறுத்துப் பார்க்கவா? கவிஞர் அறிவுமதி போல், நீங்களும் உங்களின் தமிழ்ப்பற்றைக் காட்டப் போகிறீர்களா? :-)