Monday, April 7, 2014

"எள்ளுக்காயுது எண்ணைக்கென்றால் எலிப்புழுக்கை ஏன் காயுது?"


“Islam is a close corporation and the distinction that it makes between Muslims and non-Muslims is a very real, very positive and very alienating distinction. The brotherhood of Islam is not the universal brotherhood of man. It is brotherhood of Muslims for Muslims only. There is a fraternity but its benefit is confined to those within that corporation. For those who are outside the corporation, there is nothing but contempt and enmity. ~Babasaheb Ambedkar~


தமிழ்நாட்டு முஸ்லீம்கள் குஜராத் முதலமைச்சர்  நரேந்திர மோடியை எதிர்க்கிறார்கள் என்பதற்காக, அவர்களுடன் இணைந்து தமிழ்நாட்டுத் தமிழர்களும் அவரை எதிர்ப்பதைப் பார்க்கும் போது ‘எள்ளுக்காயுது எண்ணைக்கென்றால் எலிப்புழுக்கை ஏன் காயுது’ என்ற ஈழத்துப் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. உண்மையில், தமிழர்கள், குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் எதற்காக மோடியை எதிர்க்கிறார்கள் அல்லது ஏன் எதிர்க்க வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. தமிழர்களுக்கு மோடி ஏதாவது தீங்கிழைத்ததாகவோ அல்லது அவரால் தமிழர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதாகவோ அல்லது அவர் தமிழர்களுக்கெதிராக எந்தக் கருத்தையும் தெரிவித்தாகவோ இதுவரை எவரும் கேள்விப்பட்டதில்லை. 

மோடியின் ஆட்சியின் போது, தமது  முஸ்லீம் சகோதர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற காரணத்துக்காக தமிழ்நாட்டு முஸ்லீம்கள், அவர்கள்  முஸ்லீம்கள் என்ற மத அடிப்படையில்  நரேந்திர மோடியைப் பழிவாங்கத் துடிப்பதற்கு எதற்காக தமிழர்கள் துணை போக வேண்டும். கொல்லப்பட்டவர்கள் முஸ்லீம்கள் என்ற காரணத்துக்காக மட்டும் தான், தமிழ்நாட்டு முஸ்லீம்கள் மோடியை எதிர்க்கிறார்கள், பழிவாங்கத் துடிக்கிறார்களே தவிர, ஒரு இனக்கலவரத்தில், அநியாயமாக, உயிர்கள் கொல்லப்பட்டு விட்டனவே, என்பதற்காக அல்ல. குஜராத் கலவரத்தில் இறந்ததெல்லாம் இந்துக்களாகவோ, கிறித்தவர்களாகவோ, இருந்திருந்தால் அவர்கள் நிச்சயமாக மோடிக்கேதிராக இன்று போர்க் கொடி தூக்கியிருக்க மாட்டார்கள். அவர்களின் “மனிதநேயம்” தான் அவர்கள் மோடியை எதிர்ப்பதற்குக் காரணம் என்றால், இந்திரா காந்தி இறந்த பின்பு டில்லியில் நடைபெற்ற கலவரத்தில் கொல்லப்பட்ட சீக்கியர்களுக்காக அவர்கள் இந்திரா காங்கிரசை அல்லது சோனியா காந்தியை  எதிர்த்திருக்க வேண்டும், அல்லது ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போதும், இலங்கை தூதரகத்துக்கு முன்னால் தமிழ்நாட்டு முஸ்லீம்கள்  போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருக்க வேண்டும்.  பலத்தீனத்தில் அல்லது ஆபிரிக்காவிலுள்ள முஸ்லீம்களுக்காகக் கூடத் துடிக்கும் தமிழ்நாட்டு முஸ்லீம்கள், இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது, மெளனம் சாதித்தது மட்டுமல்ல, அதிலும் சிலர் ஈழத்தமிழர்களின் அழிவை மகிழ்ச்சியுடன் வரவேற்று மகிழ்ந்ததும்  எங்களுக்குத் தெரியும்.  அதனால், முஸ்லீம்கள் மோடியை எதிர்ப்பதற்குக் காரணம், மோடியின் ஆட்சியில் நடந்த இனக்கலவரத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்பதனால் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மோடியின் ஆட்சியில் அவர் உடனடியாக இனக்கலவரத்தைக் கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்காத படியால் ஏறத்தாழ 2000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஒரு இலட்சத்துக்குமதிகமான ஈழத் தமிழர்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்டனர், தமிழ்பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், குண்டு வீச்சிலிருந்து தப்புவதற்காக தமிழ்க் குழந்தைகள்  பதுங்கியிருந்த குழிகளில் உயிரோடு புதைக்கப்பட்டனர். அப்பொழுதும், இலங்கையிலுள்ள தமிழ் பேசும் முஸ்லீம்கள் மகிந்த ராஜபக்சவுக்கு தான் ஆதரவளித்தனர், இன்றும் ஆதரவளிக்கின்றனர், அவருக்குத் தான் வாக்களிக்கின்றனர். அவரை விசாரணைகளிலிருந்து பாதுகாக்க, ஐக்கிய நாடுகள் சபைக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக ஊர்வலம் போகின்றனர். அந்த ஊர்வலங்களை இலங்கையிலுள்ள பள்ளிவாசல்களே, வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் போது ஒழுங்கு செய்கின்றன. அது போதாதென்று, அவர்களது இலங்கை முஸ்லீம் சகோதரர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டு முஸ்லீம்களும் அவர்களது பங்குக்கு  ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டங்களுக்கெதிராக, ஈழத்தமிழர்களை பிரித்து, அவர்களின் விடுதலைப் போராட்ட காரணங்களைக் கொச்சைப்படுத்தி பொய்ப்பிரச்சாரங்கள் செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் முஸ்லீம்களுக்கெதிராக இயங்கினர், அவர்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றினார்கள், அதனால் தான் இலங்கை/தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கவில்லை, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கின்றனர் என்று வைத்துக் கொண்டால் கூட, 1983 இல் நடைபெற்ற இனக்கலவரத்தில், குஜராத்தில் நடந்தது போன்றே, இலங்கைத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு, அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டு, உடைமைகள் சூறையாடப்பட்ட போது, அந்த இனக்கலவரத்தை கட்டுப்படுத்தாமல், இராணுவத்தையும், போலீசையும், வேடிக்கை பார்க்கச் செய்ததுடன், வெளிநாட்டுப் பத்திரிக்கை நிருபர்களின் கேள்விக்கு:

"I am not worried about the opinion of the Jaffna people... now we cannot think of them, not about their lives or their opinion... the more you put pressure in the north, the happier the Sinhala people will be here... Really if I starve the Tamils out, the Sinhala people will be happy."  
- President J.R.Jayawardene, Daily Telegraph, July 1983

என்று பதில் கூறிய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவையும் இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் முழுமையாக ஆதரித்தனர். பாகிஸ்தான், சவூதி அரேபியா போன்ற பல முஸ்லீம் நாடுகளிடமிருந்து, ஈழத் தமிழர்களை அழிக்க நிதி, மற்றும் ஆயுத உதவிகளைப் பெற்றுக் கொடுத்தனர். இலங்கையில் வாழும் முஸ்லீம்கள், தமிழைப் பேசினாலும் கூட ஒருபோதும் (விடுதலைப்புலி இயக்கம் உருவாக முன்னரும் கூட) ஈழத்தமிழர்களை தமது சகோதரர்களாக எண்ணியதுமில்லை, ஆதரித்ததுமில்லை. ஒன்றல்ல, பல இனக்கலவரங்களில் ஈழத்தமிழர்களைக் கொன்ற, சிங்களத் தலைவர்களைத் தான் ஆதரித்து வந்துள்ளனர் என்பது மட்டுமல்ல, இன்றும் ஆதரிக்கின்றனர். இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடந்த எந்த இனக்கலவரத்துக்கும் எந்தவிதமான விசாரணையும் நீதிமன்றத்தில் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை என்று பக்கசார்பற்ற இந்திய உச்ச நீதி மன்றம், குறைந்தபட்சம் ஒரு தீர்ப்பையாவது வழங்கியுள்ளது. 

நான் மோடியை ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை. மோடி பிரதமராவதால் அல்லது பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுவதால், தமிழீழம் கிடைக்கும் அல்லது ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நன்மை ஏற்படுமென்று நான் நம்பவில்லை. அப்படி எந்த விதமான எதிர்பார்ப்பும் ஈழத்தமிழர்களிடம் கிடையாது. பாரதீய ஜனதாக் கட்சி, புத்த பிக்குகளுக்கும், புத்தசமயத்துக்கும் ஆதரவான காவிக் கட்சி என்பதாலும், சுப்பிரமணியம் சுவாமி போன்றோர் அந்தக் கட்சியில் இருப்பதாலும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்போம் என்று பம்மாத்து விட்டுக் கொண்டே, சிங்களவர்களுக்கு சார்பாக அவர்கள் இயங்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. மோடி இந்தியாவின் பிரதமராலென்ன அல்லது எந்த கேடி பிரதமரானாலென்ன, இலங்கைத் தமிழர்களுக்கு எந்தப் பயனும் உண்டாகப் போவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும். 

இலங்கையில் தமிழர்களா சிங்களவர்களா என்று வரும்போது, தமிழ் பேசும் முஸ்லீம்கள் எல்லாம் தமிழர்களுக்கெதிராக சிங்களவர்களுக்குத் தான் ஆதரவளிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மட்டும், தமிழ்நாட்டு முஸ்லீம்கள், அவர்களின் முஸ்லீம் சகோதர்களைக் “கொன்ற” மோடியைப் பழிவாங்குவதற்கு, தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஏன்  துணை போக வேண்டும், எதற்காக மோடியை தமிழர்கள் எதிர்க்க வேண்டும் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.
  

5 comments:

thayumanavan pillai said...

அன்பின் திரு. வியாசன்...

மோடியை தமிழ்நாட்டு தமிழர்கள் ஆதரிக்காமல் போவது முசுலீம்களை படுகொலை செய்தார் என்பதற்கல்ல. அந்த கூற்றை கம்யுனிஸ்டுகளும்,பெரியாரியவாதிகளும் தான் முன்னெடுக்கின்றனர். அனால், உண்மை தமிழர்கள் மோடியை ஏற்று கொள்ளாததற்கு காரணமே வேறு.

இந்தியா என்பது பல மொழிகள் பேசும் தேசிய இனங்களின் கூட்டமைப்பு. அதில் இன்று வரை மொழியாலும் இனத்தாலும் ஓரளவிற்கு இன்னும் இந்திய தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் இருப்பது தமிழ் மொழியும், தமிழ்நாடும் தான். இந்தி மொழி திணிப்பை எதிர்த்து விரட்டி அடித்த ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. அகவே, தமிழ்நாட்டின் மீது எப்போதுமே வடவர்களுக்கு ஒரு வெறுப்பு இருந்து கொண்டே இருக்கும். ஈழத்தில் தமிழர்களை அழிக்க சிங்களர்களுக்கு இந்தியா செய்த அணைத்து உதவிகளும் இதன் நீட்சி தான் . அதை இந்த கோணத்தில் தான் பார்க்க வேண்டும்.

மேலும் திருச்சியில் நடந்த பொது கூடத்தில் நரேந்திர மோடியின் பேச்சை தாங்கள் கவனிக்க வேண்டும். மோடிக்கு ஆங்கிலம் நன்றாக பேச வரும் ஆனாலும் அவர் தனது உரையை இந்தியில் தான் நிகழ்த்தினார். அவர் பேசியதை எச்.ராஜ மொழிபெயர்த்து கூறினார். அப்போது அவர் கூறிய ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அவர் கூறியது " இந்தியாவை மொழி வழி மாநிலங்களாக பிரித்து மிக பெரிய வரலாற்று பிழை" என்று வாய் மலர்ந்து அருளி இருக்கிறார். பா.ஜா.க காரர்கள் எப்போதுமே மாநிலத்தின் சுய உரிமைகளை மதிக்காதவர்கள். அவர்களை பொறுத்த வரை அகண்ட பாரதம் என்னும் அல்ப கனவு தான் அவர்களுக்கு சொந்தமானது.

கடந்த 1998 முதல் 2004 வரையிலான பா.ஜ.க ஆட்சி காலத்தில் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என பல முறை வலியுறுத்தியும் கண்டுகொள்ளவே இல்லை. 2004 ஆம் ஆண்டில் வந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் தான் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டது. அதை கேவல படுத்தும் விதமாக செம்மொழி என்கிற பெயருக்கு எந்த தகுதியும் இல்லாத கன்னடம் மற்றும் தெலுங்கிற்கும் செம்மொழி அந்தஸ்து கொடுக்கபட்டது. இப்போது, 1000 ஆண்டுகள் கூட பழமை இல்லாத மலையாள மொழிக்கும் விரைவில் அறிவிக்க போவதாக கூறி இருக்கிறார்கள். போக போக தான் தெரியும்.

மோடி தலைமையிலான ஆட்சி ஏற்பட்டால். மாநில உரிமைகள் வெகுவாக பறிக்க படும். ஏற்க்கனவே குற்றுயிராக போராடி கொண்டிருக்கும் தமிழர் பண்பாடு அதள பாதாளத்திற்கு தள்ளபடும். இனம், மொழி தொடர்பான அனைத்து உரிமைகளும் பறிக்க பட்டு,இந்தி மொழி தமிழர்களின் தலையில் வலுகட்டாயமாக திணிக்கப்படும் அபாயம் பெருமளவில் இருக்கிறது. யார் கண்டது தமிழ்நாடு என்கிற பெயர் நீக்க பட்டாலும் ஆச்சர்ய படுவதற்க்கில்லை. ஏனென்றால், பார்பனர்கள் அனைவரும் தமிழ்நாடு என்கிற பெயரை நீக்கி தமிழ் மாநிலம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்பதில் மிக முனைப்பு காட்டி கொண்டு இருக்கிறார்கள். ஆகவே மோடி தலைமையிலான பா.ஜ.க வை எதிர்பதற்கு இது தான் முக்கிய காரணமே தவிர, இசுலாமியர்களை அவன் கொன்றான் என்பதற்கல்ல.

viyasan said...

//ஆகவே மோடி தலைமையிலான பா.ஜ.க வை எதிர்பதற்கு இது தான் முக்கிய காரணமே தவிர, இசுலாமியர்களை அவன் கொன்றான் என்பதற்கல்ல.//

அப்படியானால் "தமிழினத் தலைவர்" எப்படி, இந்தியைத் திணிக்கும் பாஜகவின் ஆட்சியில் கூட்டணியில் இருந்தார். அண்மையில் கூட வாஜ்பாயைப் புகழ்ந்து தள்ளினாரே. பாஜகவின் கொள்கை இந்தி திணிப்பு என்றால், திமுக கூட அவர்களின் முன்னைய ஆட்சியில் கூட்டணி அமைத்திருந்தனர் தானே. நான் இந்த பதிவில் குறிப்பிடுவதெல்லாம், குஜராத் கலவரத்துக்காக மோடியை எதிர்க்கும் தமிழர்க்ளைத் தான். அப்படி பலரை எனக்கும் தெரியும்.

உயிர்நேயம் said...

ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில், காங்கிரசுக்குப் பதிலாக பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்திருந்தாலும் இதே படுகொலைகள் நடந்திருக்கும். என்ன, இந்த படுகொலை எண்ணிக்கை ஓரளவு குறைந்திருக்கும்.

viyasan said...

@உயிர்நேயம்,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் கூறுவது ஓரளவுக்கு உண்மை தான். ஆனால் பிரிட்டனும், பிரான்சும் தமது வெளிநாட்டமைச்சர்களை நேரில் அனுப்பி, போரை நிறுத்துமாறு கேட்டும், இலங்கை போரை நிறுத்தவில்லை அதற்கு இந்தியா கொடுத்த ஆதரவும் தான் காரணம். பாரதீய ஜனதா ஆட்சியிலிருந்திருந்தால், பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமலிருந்திருக்கும், அதனால் எண்ணிக்கை குறைந்திருக்கலாம்.

viyasan said...

//உங்க பொய்கள் எடுபட இந்தியாவின் உதவி தேவைன்னா?//
சகோ.வேகநரி,

இந்தியா உதவி செய்யாது விட்டாலும் பரவாயில்லை, உபத்திரம் செய்யாது விட்டால் போதும் என்பது தான் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைப்பாடு. இந்தியா ஈழத்தமிழர்களுக்கு இதுவரை செய்த “உதவிகளை” புட்டுப் புட்டு வையுங்கள் பார்ப்போம். :-)