Friday, April 18, 2014

பெரியார் ஈவேராவுக்குப் பதிலடி கொடுத்த யாழ்ப்பாணத் தமிழன்!இணையத்தில் எந்த வலைப்பதிவுக்குப் போனாலும், பெரியார் ஈவேராமசாமியைப் புகழ்ந்து பேசுவோரும், அவர் இல்லாது விட்டால் தமிழர்கள் என்ற இந்த இனமே இன்றிருந்திருக்காது, அவரால் தான் தமிழர்கள் இன்று தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் என்று மற்றவர்கள் நினைத்துக் கொள்ளுமளவுக்கு அதிகப் பிரசங்கித்தனம் பண்ணுவோர்களும், பெரியாரை எதிர்த்து, தமிழ், தமிழர் என மாற்றுக் கருத்து தெரிவிப்போருக்கு இந்துத்துவா அல்லது ஆதிக்கசாதி பட்டம் சூட்டி, தமது முட்டாள் தனத்தைக் காட்டுகிற தமிழரல்லாத திராவிட எச்சங்களையும், தமிழன் என்ற போர்வையில் உலவும் வந்தேறி வடுகர்களையும் தான் நான் இதுவரை பார்த்திருக்கிறேன். 

தமிழ் வலைப்பதிவுலகில்  நிலைத்திருக்க வேண்டுமானால் அல்லது எழுத்துலகில் முன்னுக்கு வர வேண்டுமானால் பெரியாரை ஏற்றுக் கொள்ளாது விட்டாலும் கூட, சும்மா ஒப்புக்காகவாவது அவருக்கு ஜால்ரா போட வேண்டும் அல்லது கும்பலில கோவிந்தா போட வேண்டுமென்ற நிலை இருக்கிறது என்பதை வலைப்பதிவுலகுக்கு புதியவர்களே ஒரு சில நாட்களில் அறிந்து கொள்வார்கள். ஆனால் தமிழ்நாட்டில்  பெரியாரையே துணிச்சலுடன் விமர்சனம் செய்து, அவரது தமிழ் எதிர்ப்பை  எடுத்துக் காட்டும் பலர் உள்ளனர் என்பதை கீழேயுள்ள காணொளி தெளிவு படுத்துகிறது. இந்தக் காணொளியிலுள்ள கருத்துக்கள் எல்லாவற்றையும் நான் ஒப்புக் கொள்ளாது விட்டாலும் கூட, இதிலுள்ள கருத்துக்களும் பேசப்பட வேண்டியவை என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. 


யாழ்ப்பாணத்து தமிழறிஞர் கதிரவேலனார் அவர்கள் பெரியார் தமிழை இழிவாகப் பேசியதை தாங்க முடியாமல், பெரியார் வீட்டில் அருந்திய பாலை, அவரின் முன்னாலேயே, வாய்க்குள் விரலை விட்டுக் காறித் துப்பி விட்டுப் போனாராம். ஈழத்தமிழர்களின் அந்த  துணிச்சலையும் , தமிழ்மானத்தையும் தமிழ்நாட்டிலேயே வைத்து பெரியாருக்குக் காட்டிய யாழ்ப்பாணத்து புலவர் கதிரவேலனாரைப் பற்றி இங்கு பதிவு செய்வதில் பெருமிதமடைகின்றேன்.  

தமிழ்ப் புலவர்களை இழிவு படுத்தி பேசிய பெரியார். அதே இடத்தில் பதிலடி கொடுத்த ஈழத்து தமிழறிஞர் கதிரை வேலனார்! 
தமிழ் மொழியையும் பண்பாட்டையும் பெரியார் என்கிற .வே.ராமசாமி பலதருணங்களில் கேவலப்படுத்தி உள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழ்ப் புலவர்களை இழிவு படுத்தி அவர் பேசிய போது அதற்கு தக்க பதிலடி கொடுத்த மானமுள்ள தமிழரை பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். 
இதோ அந்த உண்மை சம்பவம்... 
தமிழில் அகராதிகளுக்கு முன்பெல்லாம் நிகண்டுஎன்றுதான் பெயர். இப்போது இருக்கக் கூடிய சொல் ரீதியாக பிரித்து பார்க்கக் கூடிய அகராதிகளுக்கு முந்திய காலத்தில் நிகண்டுகள் என்ற பாடல் தொகுப்பு மூலமாகத்தான் சொற்களின் பொருள் அறியவேண்டும். 
இந்த நிகண்டு என்ற வடிவத்தில் சொற்களின் பொருள் பிரித்துப் பார்ப்பது தமிழ் அறிவு அதிகம் உள்ளவர்களுக்கே சாத்தியம்இந்த நிலையில்தான் இந்த நிகண்டுகளுக்கு பதிலாக தமிழ் அகராதியை அதாவது இப்போது இருக்கக் கூடிய வடிவத்தை வடிவமைத்தவர் தான் தமிழறிஞரான கதிரைவேலனார். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேரறிஞர். எனவே அந்த அகராதி யாழ்ப்பாண பேரகராதி என்றே அழைக்கப்படுகிறது. இவர் தன் வாழ்நாளில் ஒருமுறை  தமிழகம்  வந்திருந்தபோது...பெரியாரைப் பார்க்க விரும்பினார். அவ்வாறே வந்து சந்தித்தார்.அவரை வரவேற்ற பெரியார்... யாழ்ப்பாண தமிழறிஞருக்கு பால் கொடுத்து உபசரித்திருக்கிறார்.  உபசரித்து முடித்த கையோடு... எதிலும் ஒளிவு மறைவு வைக்காத பெரியார் அப்போது தமிழ் பற்றியும் தமிழ் புலவர்கள் பற்றியும் தனது கருத்தை கதிரைவேலனாரிடம் கூறியிருக்கிறார். 
அதாவது, 
என்னைப் பொறுத்தவரை புலவன் என்றால் பகுத்தறிவில்லாத புளுகன் என்றுதான் அர்த்தம். தமிழ் இலக்கியங்களை உருப்போட்டு ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்களைச் சொல்லி மக்களைய மயக்கி காசு பார்க்கும் தொழில்தானய்யா புலவர் தொழில். இது ஒரு தொழிலா?
மனித சமுதாயத்துக்கு புலவர்களால் பத்து பைசா பிரயோசனம் உண்டா..? அதனால்தான் சொல்கிறேன்... நீங்களும் பகுத்தறிவே இல்லாத ஒரு புளுகன்தான்.
என்று கதிரைவேலனாரை கண் எதிரிலேயே வைத்துக் கொண்டு அவரை காய்ச்சி எடுத்துவிட்டார் பெரியார்பெரும் தமிழ் அகாரதியையே தொகுத்த கதிரைவேலனார் பெரியாரின் கருத்துக்களைக் கேட்டு அதிர்ந்துவிட்டார்தமிழின் நுட்பத்தையும், தமிழ் அறிஞர்களின் ஆற்றலையும் தொல்காப்பியத்திலிருந்து எடுத்து வைத்து வாதங்களை அடுக்கி பெரியாருக்கு அங்கேயே பதிலடி கொடுத்த கதிரவேலனார்... கடைசியில் ஒருகாரியம் செய்தார். 
அதாவது... தமிழையும், தமிழர்களையும், தமிழ் அறிஞர்களையும் இகழ்ந்த உம் கையால் நான் குடித்த பால் கூட எனக்கு விஷமாகத்தான் போகும்என்று சொல்லி... 
தன் விரலை வாய்க்குள் விட்டு நன்றாகக் குடைந்து குமட்டி பெரியார் கொடுத்த பாலை அங்கேயே வாந்தியாக எடுத்துத் துப்பிவிட்டு வெளியேறினார் கதிரைவேலனார். 
இது செவிவழிச் செய்தி அல்ல... 
பெரியார் இதை தானே பொதுக்கூட்டத்திலும் சொல்லியிருக்கிறார். மொழித் தொல்லைஎன்ற பெரியாரின் தொகுப்பு நூலிலும் பெரியாரின் விளக்கம் இடம்பெற்றுள்ளது. 
அதில் பெரியார் சொல்கிறார்... 
‘‘புலவர் என்றால் சொந்தப் புத்தி இல்லாதவன், புளுகன் என்றுதான் நான் உரை கூறுவேன். நா. கதிரைவேற்பிள்ளை என்ற தமிழ் வாயாடிப் புலவர் ஒருவர் என்னிடம் வந்தபோது, ஒரு நிகழச்சியில் தமிழ் புலவர்களுக்கு பகுத்தறிவு கிடையாது. அதை உங்களிடமும் கண்டேன் என்று சொன்னதற்கு, உன்னிடம் வந்ததே தவறு என்று சொல்லி என்னிடம் வாங்கிக் குடித்த பாலை விரலை விட்டு வாந்தி எடுத்துவிட்டார்’’
-என்று பெரியார் இதை அப்படியே பதிவு செய்திருக்கிறார்.பேரறிஞர் கதிரைவேலனார் தமிழ் பற்றியும் தமிழறிஞர்கள் பற்றியும் பதிலடி கொடுத்ததற்கு பெரியார் கொடுத்த பட்டம்தான் வாயாடிப் புலவர்’.  
 திராவிடத்துக்கும் தமிழியத்துக்கும் மோதல் ஏற்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த சம்பவத்தை மீண்டும் வாந்தி எடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லவா? 
இந்த செய்தியை படித்த பெரியார்வாதிகள் அனைவரும் கதிரை வேலனாரை மேலும் அவமதிக்கத் தொடங்கினர். பெரியாரை, பெரியாரின் கருத்துகளை எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் அவர்களை சாதி வெறியர்களாகவும் , பார்ப்பன அடிவருடிகளாகவும் சித்தரிக்கும் வழக்கம் பெரியார்வாதிகளுக்கு உண்டு. அந்த வகையில் யாழ்ப்பாண புலவருக்கும் அதே பட்டத்தை கொடுத்து கதிரை வேலனாரை இன்றுவரை சாதி வெறியராக சித்தரிக்க முயல்கின்றனர் பெரியார்வாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.  

            நன்றி:  Tamil Chinthanaiyalar Peravai·
                              Bagathsingh Barathi Facebook

19 comments:

வருண் said...

வியாசர் அண்ணாச்சி என்ன சொல்றா?!

***தமிழ் வலைப்பதிவுலகில் நிலைத்திருக்க வேண்டுமானால் அல்லது எழுத்துலகில் முன்னுக்கு வர வேண்டுமானால் பெரியாரை ஏற்றுக் கொள்ளாது விட்டாலும் கூட, சும்மா ஒப்புக்காகவாவது அவருக்கு ஜால்ரா போட வேண்டும் அல்லது கும்பலில கோவிந்தா போட வேண்டுமென்ற நிலை இருக்கிறது என்பதை வலைப்பதிவுலகுக்கு புதியவர்களே ஒரு சில நாட்களில் அறிந்து கொள்வார்கள். ***

இதென்ன அர்த்தமில்லாத புதுத் தியரி?? டோண்டு ராகவன் மறைகிற வரைக்கும் நிலைத்து நிக்கலையாக்கும்? ஓசைப் பார்ப்பானுனு ஒருத்தரு டெய்லி ஏதாவது எழவைக் கூட்டிக்கிட்டு இருக்கத்தான் செய்றாரு- பகுத்தறிவு மண்ணாங்கட்டினு எதையாவது ஒளறிக்கிட்டு! பார்ப்பனர்கள் இந்த ஓசைக்கு ரகசிய ரசிகர் மன்றமே வச்சிருக்காளாம்! நீரும் போயி சேர்ந்துக்க வேண்டியதுதானே? அப்புறம் "பலான பதிவு" எழுதும் ஆன்மீகவாதி எல்லாம் செத்துட்டாளா என்ன?

சும்மா எதையாவது எழுதக்கூடாது, எதுகையும் மோனையுமாப் போட்டு! பெரியார் பற்றி ஈழத்தமிழர்களுக்கு என்னைக்குமே கவலையில்லை. அஹ்டு எங்களுக்குத் தெரியும். அவரை புரிந்துகொள்ளுமளவுக்கு அவர்களுக்கு அறிவும் இல்லை! காரணம் ஈழ்த்தமிழர்கள் எல்லாரும் பக்தகோடிகள்- பொதுவா ரெண்டு பெண்டாட்டிக்காரன் பக்தர்கள்! அதனால் பெரியாரைப்பத்திப் புரியலைனா விட்டுடணும். சும்மா புரிந்தமாரி பாலைக் கக்கினான் வீரன் ஒருத்தன்னு எதையாவது சொல்லிக்கிட்டு! சரியா? :)

அந்தப்பாலை ஒரு நாயிக்கு ஊத்தி இருந்தாலாவது பிரையோசனமாப் போயி இருக்கும். இவனுக்கு பாலை கொடுத்த பெரியாரைத்தான் மொதல்ல அடிக்கணும்! :)

Jayadev Das said...

முரண் என்ற வார்த்தைக்கு அகராதியில் இவர் பெயரைப் போட்டு விடலாம்.

சார்வாகன் said...

சகோ வியாசன்,

தந்தை பெரியார் பற்றி நீங்கள் எந்த கருத்து கொள்ளும் உரிமை உண்டு.

தந்தை பெரியார் எங்கள் சாதி இழிவை போக்கி சுயமரியாதை தந்தவர்.இட ஒதுக்கீடு மூலம் கல்வி கற்க வகை செய்தவர். இன்றும் சாதிப் பெயர் வெளிப்படையாக போட பல தமிழகத்தில் தயங்குவதும் அவரின் பணிதான்.
அவரின் பின் வந்தவர்களின் பொருளாதாய சந்தர்ப்ப வாதங்கள் அவரின் மீதான விமர்சன தாக்குதல்களுக்கு வழி கோலுகின்றன.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


யார் இந்த புலவர் கதிர் வேலனார்? என்ன எழுதினார்?. தமிழ் ,சிங்கள முரண்பாடுகளை, ஈழ சாதி ஒடுக்குமுறை,மலையக் தமிழர் வாழ்வாதார சிக்கல்கள் அநாகரிக தர்மபால, தமிழ் மொழி பற்றி ஏதேனும் எழுதி இருக்கிறாரா?

தகவல் கொடுக்கவும்.

நன்றி!!!

viyasan said...

//இதென்ன அர்த்தமில்லாத புதுத் தியரி?? ///

டோண்டு ராகவனைப் பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது, ஆனால் வலைப்பதிவுலகில் எத்தனை எதிர்ப்புக்களை அவர் சந்தித்தார், அது மட்டுமல்ல, போலி டோண்டுக்களே உருவானார்கள், அதற்கு காரணம் அவர் பெரியாரை எதிர்த்து, தனது கருத்தைத் தெரிவித்தது தான் என்பதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். கடைசியில் அவரது திடமும், துணிச்சலும் தான் அவருக்கு வலைப்பதிவுலகில் நண்பர்களைப் பெற்றுக் கொடுத்தது.
பெரியாரிடம் எனக்கு எந்த காழ்ப்புணர்வும் கிடையாது, ஆனால் ஒவ்வொரு திராவிட மாநிலங்களிலும், அந்தந்த மாநில மக்கள் ஆளுமையுடன், தாமே அந்தந்த மாநிலங்களை ஆண்டு கொண்டு, தமது மொழி கலாச்சாரங்கள் வளர்த்துக் கொண்டு, வளமாக வாழ்ந்து கொள்ளும், அதே வேளையில் தமிழ்நாட்டில் மட்டும், தமிழர்களை விட தமிழரல்லாத திராவிடர்களும், அவர்களின் பரம்பரையினரும், ஆட்சியிலும் பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவதற்கும், தமிழர்கள் வந்தாரை வாழ வைத்து விட்டு, கூலிகளாக அவர்களிடம் கைகட்டி நிற்பதற்கும், தமிழ்நாட்டிலேயே தமிழ் மொழியின் நிலை பின்தங்கி இருப்பதற்கும் காரணம் பெரியாரிசமும், திராவிடமும் தான் என்பதை, பெரியாரையும், திராவிட வரலாற்றையும் பற்றி மேலும், மேலும், மேலும் படிக்கும் போது என்னால் உணர முடிகிறது. அதனால் நான் பெரியாரின் விசிறி அல்ல என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. :-)

viyasan said...

//! பெரியார் பற்றி ஈழத்தமிழர்களுக்கு என்னைக்குமே கவலையில்லை. அஹ்டு எங்களுக்குத் தெரியும். ///

பெயாரின் தேவை ஈழத்தமிழர்களுக்கு இருக்கவில்லை.

//அவரை புரிந்துகொள்ளுமளவுக்கு அவர்களுக்கு அறிவும் இல்லை!///

ஈழத்தமிழர்களுக்கு அறிவுண்டா இல்லையா என்பதை அறிந்து கொள்ளுமளவுக்கு எல்லோருக்கும் அறிவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். அதை விட எத்தனையோ தமிழர்கள் இருக்க, தமிழரல்லாதவர்களைத் தமிழர்களாக ஏற்றுக் கொண்டு, அவர்களின் கொள்கைகளைக் கடைப்பிடித்துக் கொண்டு, ஞே என்று எருமை மாதிரி அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை. அதாவது வந்தான், வரத்தானை எல்லாம் தலைவராக்கி, அவர்களின் முன்னால் கைகட்டி நிற்கும் நிலையில் ஈழத்தமிழர்கள் ஒரு போதும் இருந்ததில்லை. அதற்குக் காரணம் எங்களின் கல்வியறிவு தானாகத் தானிருக்க வேண்டும்.

//காரணம் ஈழ்த்தமிழர்கள் எல்லாரும் பக்தகோடிகள்- பொதுவா ரெண்டு பெண்டாட்டிக்காரன் பக்தர்கள்!///

சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை என்று நம்புகிறவர்கள் நாங்கள். அந்த இரண்டு பெண்டாண்டிக்காரன் அசல் தமிழன், அதனால் தான். :-)

//அதனால் பெரியாரைப்பத்திப் புரியலைனா விட்டுடணும். சும்மா புரிந்தமாரி பாலைக் கக்கினான் வீரன் ஒருத்தன்னு எதையாவது சொல்லிக்கிட்டு! சரியா? //
அந்த இடத்தில் புலவர் கதிரவேற்பிள்ளை அவர்கள் , ஈழத்ழதமிழர்களின் துணிச்சலைக் காட்டி, பெரியார் வீட்டில் அருந்திய பாலை வாந்தி எடுத்தது, இலங்கையில் செருப்பால அடிக்கிறதுக்கு சமமானது. :-)

//அந்தப்பாலை ஒரு நாயிக்கு ஊத்தி இருந்தாலாவது பிரையோசனமாப் போயி இருக்கும். இவனுக்கு பாலை கொடுத்த பெரியாரைத்தான் மொதல்ல அடிக்கணும்! //
வருண் அண்ணாச்சி சரியான பெரியாரின் சீடர் என்பது நன்கு தெரிகிறது. :-)

Anonymous said...

சிங்களவனிடம் வாங்கிக் குடித்த பாலை விரலை விட்டு கக்கியதால் தான், ஒருவர் முள்ளிவாக்காலில் மல்லாங்கப்படுத்துக் கொண்டு காட்சியளித்தார். அல்லவா... அய்யோ அய்யோ.. உடுக்க கோவணமே இல்லையாம், உடுத்தவன் வேட்டியில் பத்து ஓட்டை என ஓங்கிச் சிரித்தானாம்.. ஹிஹி

viyasan said...

//யார் இந்த புலவர் கதிர் வேலனார்? என்ன எழுதினார்?.....தமிழ் மொழி பற்றி ஏதேனும் எழுதி இருக்கிறாரா?///

புலவர் கதிரவேற்பிள்ளை அரசியல் தலைவரோ அல்லது சமூக ஆய்வாளரோ அல்ல, அவர் தமிழில் அகராதி உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். யாப்பாணப் பேரகராதி என்ற தமிழ் நூலை இயற்றியவர். அதானல், பெரியார் தமிழையும், தமிழ்ப்புலவர்களையும் பழித்ததை அவரால் தாங்க முடியவில்லை. அவர் வெகுண்டெழுந்து கொண்டார். இதே காரணத்துக்காகத் தான் சேரன் செங்குட்டுவன் வெகுண்டெழுந்து வடநாட்டரசர் மீது படைஎடுத்தான், அதெல்லாம் பெரியாருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் அந்த உணர்வைப் புரிந்து கொள்வதற்கு அவர் ஒன்றும் தமிழன் அல்ல. அதனால் தான் கதிரவேற்பிள்ளையை வாயாடிப்புலவர் என்றார்.

Anonymous said...

பெரியாரை விமர்சிக்கும் ஈழத்தமிழர்களுக்கு தங்கள் தலைவர்களை பற்றி என்றைக்காவாது சிந்தித்தது உண்டா, இதுகள் பண்டார அடிமைகள் அல்லவா..

ஆறுமுக நாவலர் என்ற பார்ப்பன அடிமை காலந்தொட்டே யாழ்ப்பாணத்தவருக்கும், தமிழ்நாட்டு ஆதிக்கச் சாதிக்கும் கள்ள தொடர்புகள் உண்டு...

அதனால் அவருக்கு வள்ளலார் செம டோஸ் கொடுத்தனுப்பினார், ஆறுமுக நாவலர் வழக்கு எல்லாம் போட்டு பார்த்து ஓய்ந்தார்.

இது பெரியாருக்கு முன் தோன்றிய முரண் தான். சென்னை மாநிலத்தில் சென்னை லௌகிக சங்கத்தினரால் 1882-1888-ம் ஆண்டுகளில் நடத்தப்பெற்றவை. 1878 -79-ம் ஆண்டுகளில் ‘தத்துவ விசாரிணி’(Philosophic Enquirer) இவ்வமைப்பினரால் இரண்டு இதழ்கள் நடத்தப்பெற்றன.

இவற்றில் நாத்திக கருத்துகள் பகுத்தறிவு பிரச்சாரங்கள் நடந்தன. இது தான் அயோத்தி தாசரையும், பின்னாளில் ஜீவா, பெரியார் போன்றோரையும் பகுத்தறிவுக்கு இட்டுச் சென்றதன் தொடக்கப்புள்ளி.

இந்த இதழை மறுத்து யாழ்ப்பாணத்திலே நடைபெற்றுவந்த `உதயபானு’ என்னும் பத்திரிக்கையிலே எடுத்துக்காட்டிக் கண்டித்தார்கள். ஆனால் ஒன்றும் இங்கு எடுபடவில்லை..

இப்போது மீண்டும் தமிழ் தேசியம் என்ற போர்வையில் மத வேசியம் போட்டுக் கொண்டு இந்துத்வா சக்திகளை யாழ்ப்பாணத்தவர் உசுப்பிக் கொண்டு இருக்கின்றனர். டாலர் தேசங்களில் இருந்து கொண்டு தமிழகத்தை குறிவைக்கும் அந்நிய உளவுகளின் அம்புகளில் இதுவும் ஒன்று.

viyasan said...

சகோ. சார்வாகன்,

//தந்தை பெரியார் பற்றி நீங்கள் எந்த கருத்து கொள்ளும் உரிமை உண்டு.//

பெரியார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

//தந்தை பெரியார் எங்கள் சாதி இழிவை போக்கி சுயமரியாதை தந்தவர்.இட ஒதுக்கீடு மூலம் கல்வி கற்க வகை செய்தவர். ///

பெரியார் செய்ததாகக் கூறப்படும் சாதியொழிப்பு விடயத்தை மறுப்பதல்ல எனது நோக்கம். ஆனால், ஒரு போதும் சாத்தியமாகாது என்று தெரிந்திருந்தும், திராவிடநாடு கோரி, தமிழ்நாட்டைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, திராவிடர்களுக்கும் கூறு போட்டதில் பெரியாருக்குப் பெரிய பங்குண்டு என்று கூறுபவர்களின் கருத்திலும் உண்மை உண்டு அல்லவா? பெரியார் தமிழர் அல்லாத காரணத்தால் தான் அவர் திராவிடத்தை தமிழர் தலையில் கட்டினார். பெரியாரின் சுயமரியாதை எந்த வகையானது என்பதைத் தான், இந்தக் கானொளியில் கிழித்துக் காய விடுகிறார்கள். பெரியார் உண்மையில் சுயமரியாதை மதிக்கிறவராக இருந்திருந்தால், யாழ்ப்பாணத்து தமிழன் கதிரவேற்பிள்ளையின் சுயமரியாதையை தனது புத்தகத்தில் பாராட்டியிருக்க வேண்டுமல்லவா?

//இன்றும் சாதிப் பெயர் வெளிப்படையாக போட பல தமிழகத்தில் தயங்குவதும் அவரின் பணிதான்.///

பெரியார் போன்ற ஒருவர் இல்லாமலே தமது சாதிப்பெயரை பெயரின் பின்னால் போடும் வழக்கத்தை ஈழத்தமிழர்கள் எப்பொழுதோ கைவிட்டு விட்டார்கள். அதனால், தமிழ்நாட்டுத் தமிழர்களும் நாளடைவில் கைவிட்டிருக்கலாம். அதற்கு முதல் காரணம் இலங்கையில் சாதியடிப்படையில் எந்த சான்றிதழோ சலுகையோ கொடுக்கப்படுவதில்லை . சாதிச் சான்றிதழ்கள் சாதியை நினவு படுத்துகின்றன,ஊக்குவிக்கின்றன, சாதியை நினைவு படுத்தி வளர்க்கின்றன.

viyasan said...

சகோ. சார்வாகன்,

//அவரின் பின் வந்தவர்களின் பொருளாதாய சந்தர்ப்ப வாதங்கள் அவரின் மீதான விமர்சன தாக்குதல்களுக்கு வழி கோலுகின்றன.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.////

பெரியாரின் பின்வந்தவர்களுக்கு அவர் ஒன்றும் சளைத்தவரல்ல, அவரும் சந்தர்ப்பவாதியாக, பணத்தில் குறியாகத் தானிருந்தார் என்பதை, தமிழ்நாட்டு தெளபீக் ஜமாஅத்தின் தலைவர் ஜனாப். ஜெய்னுலாப்தீன், விளக்கினாரே அந்தக் காணொளியை நீங்கள் பார்த்ததில்லையா?


“பெரியாருக்கும் பார்ப்பன‌ர்க‌ளுக்கும் பெரிய‌ வேறுபாடில்லை” என்கிறார் த‌மிழ்நாடு தவ்கீத் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் ஜெய்னுலாப்தீன்.

http://viyaasan.blogspot.ca/2013/02/blog-post_22.html

“க‌ட‌வுள் இல்லையென்று சொன்னாரில்ல‌ பெரியார். பெரியார் என்ன‌ தொழில் ப‌ண்ணிச்சாப்பிட்டாரு.இல்லை, க‌ட‌வுள் இல்லையென்று சொல்வ‌து தான் சாப்பாடு, பெரியார் என்ன‌ தொழில் ப‌ண்ணிச் சாப்பிட்டாரு? ம‌த‌த்தை வைத்து அவ‌ங்க‌ சாப்பிட்ட‌ மாதிரி, இவ‌ர் ஒரு வியாபாரியாக‌ இருந்து கொண்டு, ஒரு விவ‌சாயியாக‌ இருந்துகிட்டு இவ‌ர் சாப்பிட‌வில்லை, இவ‌ரும் ஒரு சித்தாந்த‌த்தை எடுத்துக்கொண்டு அதைச் சொல்வ‌த‌ன்மூல‌மாக‌வும் நிதி தான் திர‌ட்டினாரு. எந்த‌வொரு கூட்ட‌த்துக்கு வ‌ந்தாலும் காசில்லாம‌ல் வ‌ர‌மாட்டாரு.க‌ல்யாண‌த்துக்கு இவ்வ‌ள‌வு காசு,க‌ருமாதிக்கு இவ்வ‌ள‌வு, வீட்டில‌ த‌ண்ணி குடுக்க‌ கேட்டு வைச்சிருந்தாரா இல்லையா? பெரியார் வ‌ந்து எந்த‌ வீட்டுக்கு வ‌ர்ற‌தா இருந்தாலும்,உன் வீட்டில‌ நான் சாப்பிட‌ற‌தா இருந்தா என‌க்கு இவ்வ‌ள‌வு த‌ர‌ணும், உன் வீட்டில‌ த‌ண்ணி குடிக்கிற‌தா இருந்தா இவ்வ‌ள‌வு த‌ர‌ணும், உன் குழ‌ந்தைக்குப் பெய‌ர் வைக்கிற‌தா இருந்தா இவ்வ‌ள‌வு த‌ர‌ணும்.என்று சொல்லி, இந்த‌ உஞ்சவிருத்திப் பார்ப்பான்க‌ள் என்று குற்ற‌ம் சும‌த்தினாரே, அவங்க‌ செய்த‌மாதிரி வேலையை அவ‌ர் செஞ்சாரா இல்லையான்னா, செஞ்சாரு. அதே மாதிரி தான் செஞ்சாரு.அவ‌ர் தொழில் எதுவும் ப‌ண்ண‌வில்லை. மதத்தை வந்து வயிற்றுப்பிழைப்புக்கு வழி ஆக்கிக் கொண்டவனும் இருக்கிறார்கள், மதம் இல்லை என்பதை வயிற்றுப் பிழைப்புக்கு வழியாக்கிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். ம‌த‌த்தைச் சொல்லிக்கிட்டும் ச‌ம்பாரிக்கிறான், ம‌த‌ம் இல்லையின்னு சொல்லிக்கிட்டும் ச‌ம்பாரிக்கிறான்.”

சார்வாகன் said...

சகோ வியாசன்,
தந்தை பெரியார் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர் என்பதால், தமிழர் விரோத(??) திராவிட கொள்கையை முன்னெடுத்தார் என்னும் உங்கள் புரிதல் மிக மிக அருமை!!!
காமெடி காஃபிர் அண்ணன் பி.ஜே பற்றி நம்ம கிட்டவே தகவலா!!! அவரை அப்புறம் பார்ப்போம்!!

சரி அதை விடுங்க:. பதிவு காணொளியில் இருந்து நீங்கள் குறிப்பிடும் புலவர் கதிரை வேலனார் காலம்:பொ.ஆ 1874 முதல் 1907 வரை( lived only 33 years)

பெரியார் காலம் பொ.ஆ. 1879 முதல் 1973 வரை
http://en.wikipedia.org/wiki/Periyar_E._V._Ramasamy
Periyar joined the Indian National Congress in 1919, but resigned in 1925 when he felt that the party was only serving the interests of the Brahmins.[11][12] In 1924, Periyar led a non-violent agitation (satyagraha) in Vaikom, Kerala. From 1929 to 1932 toured Malaysia, Europe, and Russia, which had an influence on him.[13] In 1939, Periyar became the head of the Justice Party,[14] and in 1944, he changed its name to Dravidar Kazhagam.


தந்தை பெரியார் 1925ல்தான் காங்கிரசில் இருந்து வெளிவருகிறார், பிறகுதான்,நாத்திகம், திராவிடம் போன்ற கருத்துகளை பரப்புகிறார்.புலவன், தமிழ் காட்டுமிராண்டி மொழி போன்றவற்றை பெரியார் சொல்லி இருந்தால் இதன் பின்னர்தான்!!!

இப்ப 1907ல் செத்துப் போன உங்க யாழ்ப்பாண தமிழன கதிர்வேலன் எப்போது அவரைப் பார்த்தார்? எப்போது வாந்தி எடுத்தார்?

ஒன்று பெரியாரை சந்தித்து, பால் குடித்து வாந்தி எடுத்தது இந்த கதிர்வேலன் அல்ல!!

அல்லது, இப்படி சம்பவம் நடந்தே இருக்காது.

அல்லது வாந்தி எடுக்க ஒவ்வாமைக்(allergy) காரணமும் உண்டு!!

காணொளியில் காட்டப்படும் புத்தகம் எது?

தயை கூர்ந்து விளக்குங்கள் சகோ

நன்றி!!!

சந்திரன் said...

காரணம் ஈழ்த்தமிழர்கள் எல்லாரும் பக்தகோடிகள்- பொதுவா ரெண்டு பெண்டாட்டிக்காரன் பக்தர்கள் ///////

தமிழகத்தில் இருக்கிற திராவிட கூஜாக்கள் அனைவரும் ரெண்டு பொண்டாட்டிகாரனுங்களோட தீவிர பக்த கேடிகள் தான்..

குலசேகரன் said...

தமிழ்ப்புலவர்களைப்பற்றிய பெரியாரின் எண்ணம் சரியானதே. அவரின் எண்ணம் ஆதிகாலத்திலிருந்த புலவர்களிலிருந்து அவர் காலத்துபக்கு சற்று முன்பு வரை கேட்டுத்தெரிந்தவற்றினடிப்படையிலமைந்த எண்ணம். அவர் காலத்திலிருந்துதான் புலவர்களுக்கு சமூக சிந்தனை அமைந்தது. பொதுவுடைமைக்கவிஞர்கள், மூடநம்பிக்கைகளைச்சாடும் கவிஞர்கள் உருவானார்கள். யாழ்ப்பாணத்து புலவர் கதிர்வேலனாருக்குப் பதிலாக, பாரதிதாசனோ, புலவர் குழந்தையோ சென்றிருந்தால் பெரியாரின் சொல்லாட்சி வேறுவிதமாகத்தான் அமைந்திருக்கும்.
ஏன் அக்காலப்புலவர்களை பெரியாருக்குப் பிடிக்கவில்லை? அவர்கள் சுய சிந்தனையில்லாதவர்கள். அதாவது எஃது அவர்களுக்கு கொடுக்கப்பட்டதோ - சமூகத்தைப்பாதிக்குப்பவைகளைச்சொல்கிறேன்- அவற்றை மறுபேச்சில்லாமல் ஒத்துக்கொண்டார்கள். பாமர மக்களைப்பற்றி அவர்கள் கவலைப்படவேயில்லை. அரசனையும் பெரு தனவந்தர்களையும் புகழ்ந்தார்கள். பெருந்தனவந்தர்கள் அவர்களுக்குப் புரவலர்களாயினர். அரசனுக்கு உற்ற தோழர்களாக விளங்கினார்கள். பிசிராந்தையார், அவ்வையார், கபிலர் போன்று. ஏழைப்புலவரகளாயிருப்பினும் பணத்தை யாசித்து அலைந்தார்களே தவிர வேறெந்த நோக்கும் அவர்களுக்கில்லை. பொதுவாக எஃது ஏற்கப்படும்போ, அதையே அவர்கள் பிடித்தெழுதினார்கள். எனவே ஆத்திகம். பார்ப்பனீயத்துக்கு வெண்சாமரம். எவருமே நாத்திகம் பாடவில்லை. காவியம் என்றெழுதி ஒரு குறிப்பிட்ட மதக்கொள்கைகளை பரப்பினர். சிலப்பதிகாரம். சீவக சிந்தாமணி, மணிமேகலை. சமூகப்பழக்கங்களைச்சாடினாலும் பார்ப்ப‌ன எதிர்ப்பைக் கொண்டாலும் அவற்றையும் ஆத்திகத்தின் காலடியிலே வைத்தனர். சித்தர்கள் - பார்ப்ப்ன எதிர்ப்பு கொண்ட சிவவாக்கியர், ஒரு சில புலவர்கள் மட்டுமே விதிவிலக்காக தன்மான உணர்ச்சியில் வாழ்ந்தனர். மற்றெல்லாரும் மதவாதிகள், பார்ப்பன ஆராதனை. அதிகாரத்தில் காலடியில் வீழ்ந்துகிடந்தவர்களே. உங்கள் யாழ்ப்பான புலவர் அவ்வழி வந்தவர். இவரின் கொள்கை - இவரின் முன்னோர் கொடுத்த சைவ சிந்த்தாந்தம். அதை என்றாவது இவர் அலசி ஆராய்ந்து ஏற்றாரா என்பது கிடையாதெனலாம். இவர் அகராதியைத் தொகுத்தார். அதை தமிழ் ஆர்வம் கொண்ட எவரும் செய்யலாம். கிருத்துவரான பெஸ்கியின் (வீரமாமுனிவர்) சதுரககராதி இவர் செய்யாப்புரட்சியைச்செய்தது.

தமிழ் மொழி, தமிழன் நன்றாக இருந்தால் மட்டுமே வளரும். தமிழ் இலக்கியமும் அவ்வாறே. பெரியார் காலம் தமிழன் பாழ்பட்டுக்கிடந்தான். அக்காலத்தில் வரவேண்டிய புலவர்கள் உங்கள் யாழ்ப்பாணத்துப்புலவரைப்போல இருக்கக்கூடாதென்ற பெரியாரின் கொள்கை ஏற்கப்பாலது.

கடவுளை மற, மனிதனை நினை என்ற மனிதருக்கும் நெற்றிப்பட்டை, உருத்ராட்ச கொட்டையோடு தமிழகராதி தொகுத்தோன் என்று சொல்லிக்கொண்டு செல்லும் ஒரு புலவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடே. புலவர்தான் அங்கு சென்றார். சென்று தன்னை முட்டாளாக்கிக்கொண்டார். அவர் எதற்காக வாழ்கிறாரோ அதற்காக தான் வாழவில்லை. அவர் மக்களுக்காக வாழ்கிறார்; தான் இலக்கியவாதிகளுக்கும் மொழி ஆர்வலர்களுக்குமே என்று புரியாத புலவர் அவர். அப்புரியாமை அவரை வாயாடிப்புலவராக்கிவிட்டது. தன்குற்றத்தை ஒப்புக்கொள்ளவியலாதவன், அல்லது விரும்பாதவன் வாயாடி அதை மறைக்க முயல்வான். பாலை உமிழ்ந்தது அதற்குத்தான். என்ன குற்றம் அல்லது குறை? மக்களுக்கு வேண்டியது முதலில் தமிழகராதியன்று. பின்னென்ன? அல்லது எவை? சார்வாகன் சொல்லிவிட்டார்.

குலசேகரன் said...

இலங்கைத்தமிழருக்கு வேண்டியது தமிழகராதியா? தன்மானமா? தன்மானத்தை இழந்தனால் இன்று நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். சைவசித்தாந்தமும், ஆன்மிகமும், தமிழகராதியும் எப்போது வேண்டும்? முதலில் இருக்க வீடு வேண்டும்! பிழைக்க வழிவேண்டும்!! இருக்கும் வீடும் பிழைக்கும் வழியும் நிம்மதியாக தொடரவேண்டும்!! இவைமூன்றும் இலங்கைத்தமிழருக்கு இல என்பதை அவர்களின் சமீபத்திய வரலாறு உலகோருக்கு வெளிச்சம்போட்டு காட்டியது. இச்சூழ்நிலையில் இலங்கைத்தமிழருக்கு தமிழருக்குத் தேவை தமிழகராதி தொகுத்து நெற்றிப்பட்டையும் உருத்திராட்சக்கொட்டையும் மணிந்து தன்னை தமிழ்ப்புலவன் என பறைச்சாற்றிக்கொள்பவனா? கிடையாது. இலக்கியமும் மொழியும் இறுதியில் தானே வரும்? அவை வருவதற்கு காரணிகளை புலவர்களால் செய்யவியலா. மற்றவர்களாலதான் முடியும். கோயிலைக் கொத்தானர்தான் கட்ட முடியும். பூஜாரி கட்ட முடியாது. கொத்தானர் கட்டியவுடந்தான் பூஜாரிக்கு அங்கு வேலை. இதுவே சமூக வாழ்க்கையின் சூட்சுமம். நாம் கடவுளை முதலில் வைத்துவிட்டு மனிதனைக்கடைசியில் வைத்தால் அக்கடவுளே நம் தலையில் கொட்டி மூடப்பயலே, முதலில் உன் குழந்தைக்குப் பாலுக்கு வழியைப்பார். எனக்குப் பாலாபிசேகத்தை நான் பார்த்துக்கொள்வேன் என்பார். மக்கள் சேவையே மகேசன் சேவை. அப்படிப்பார்த்தால் பெரியாரே உண்மை ஆத்திகர். உங்கள் புலவர் ஒரு போலி.

viyasan said...

சகோ சார்வாகன்,

//தந்தை பெரியார் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர் என்பதால், தமிழர் விரோத(??) திராவிட கொள்கையை முன்னெடுத்தார் என்னும் உங்கள் புரிதல் மிக மிக அருமை!!!///

கன்னடத்தையோ அல்லது தெலுங்கையோ தாய்மொழியாக கொண்டதால் அவர் தமிழர் விரோதக் கொள்கையை எடுத்தாரா அல்லது அவர் தமிழனல்லாத காரணத்தால் திராவிடர் என்ற பதத்தைப் பாவித்தால் தான், தமிழரல்லாத திராவிடர்களுக்கும் தமிழ்நாட்டைப் பங்கு போடலாம் என்று திராவிடக் கொள்கைகளை முன்னெடுத்தார என்பதெல்லாம் பெரியாருக்குத் தான் தெரியும். அனால் ஏனைய திராவிட மாநிலங்களுக்குப் போகும் போது, பெரியாரிசமும், திராவிடமும் தமிழர்களுக்குத் தான் தீங்கிழைத்து, அவர்களின் சொந்த மாநிலத்திலேயே தமிழர்களை அரசியல், பொருளாதார ஆதிக்கமற்றவர்கள் ஆக்கி விட்டது என்பதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

//காமெடி காஃபிர் அண்ணன் பி.ஜே பற்றி நம்ம கிட்டவே தகவலா!!! அவரை அப்புறம் பார்ப்போம்!!//

அண்ணன் பி.ஜே கூட இவ்வளவு வெளிப்படையாக, அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார் என்பதைத் தான் சுட்டிக் காட்டினேன். :-)


//இப்ப 1907ல் செத்துப் போன உங்க யாழ்ப்பாண தமிழன கதிர்வேலன் எப்போது அவரைப் பார்த்தார்? எப்போது வாந்தி எடுத்தார்? //

இந்தச் சந்தேகம் எனக்கும் வந்தது, ஆனால் இந்தச் சம்பவத்தைப் பற்றி பெரியார் தனது புத்தகத்தில் இவ்வாறு கூறியிருப்பதை இந்த காணொளியை வெளியிட்ட தமிழ்ச் சிந்தனையாளர் பேரவையினர் மட்டுமல்ல, கீற்றில் வந்துள்ள ஒரு கட்டுரையிலும், வேறு பல கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருக்கிறது.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=25876&Itemid=139

//ஒன்று பெரியாரை சந்தித்து, பால் குடித்து வாந்தி எடுத்தது இந்த கதிர்வேலன் அல்ல!!//

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட பெரியார் அவரது பெயரைச் சரியாக குறிப்பிடத் தவறியிருக்கலாம்.இலங்கையில் கதிரவேற்பிள்ளை என்ற பெயரில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். நா, கதிரவேற்பிள்ளை, கு. கதிரவேற்பிள்ளை என்ற பெயரில் புலவர்களும், கதிரவேற்பிள்ளை என்ற பெயரில் இன்னொரு தமிழரசுக் கட்சி அரசியல் தலைவரும் இருந்துள்ளனர். நா.கதிரவேற்பிள்ளை, வி,கல்யாணசுந்தரனாருக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். அவர் பெரியாரின் சமகாலத்தவர்.ஆனால், பெரியார் அவ்வளவு இளமைக் காலத்தில் அவரைச் சந்தித்திருப்பாரோ என்னவோ எனக்குத் தெரியவில்லை..

//காணொளியில் காட்டப்படும் புத்தகம் எது?//
எனக்கும் அதை அறிய ஆவலாக இருக்கிறது. அந்த ஆதாரத்தைக் கேட்டு இந்தக் காணொளியைத் தயாரித்தவர்களுக்கு email அனுப்பியிருக்கிறேன், பதில் கிடைத்ததும், உங்களுக்குத் தெரியப் படுத்துகிறேன், சரியா? :_)

viyasan said...

சகோ. சார்வாகன்,

யாழ்ப்பாணத்தின் எந்தப் ‘பிள்ளை’ பெரியார் கொடுத்த பாலை, அவர் முன்னாலேயே காறி உமிழ்ந்தாரோ எனக்குத் தெரியாது. பல யாழ்ப்பாணத்துக் கல்விமான்கள் தமிழ்நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தனர். சில வேளை பெரியார் பெயரை மறந்திருக்கலாம்.

யாழ்ப்பாணத் தமிழர்கள் தமது சொந்தக் காசில் தமிழ்நாட்டில் கல்வித் தொண்டு செய்திருக்கிறார்கள்.

1. சிதம்பரத்தில் மேல இரத வீதியில் இன்றும் நடைபெற்று வரும் பள்ளியை, முன்னாள் அமைச்சராக இருந்த வி.வி. சுவாமிநாதன் உள்ளிட்ட, சிறந்த மாணவர் பலரை உருவாக்கிய பள்ளியை, 165 ஆண்டுகளுக்கு முன், யாழ்ப்பாணத்தில் திரட்டிய நிதியைக் கொணர்ந்து தொடங்கியவர் நாவலர் என்றழைக்கபப்டும் நல்லூர் ஆறுமுகம்பிள்ளை.

2. கலைஞர் மு. கருணாநிதிக்குத் திருவாரூரில் தமிழ் கற்பித்த தண்டபாணி தேசிகரின் ஆசிரியரான யாழ்ப்பாணத்து மட்டுவில் க. வேற்பிள்ளை.

3. ஈழத்து வடமராட்சி நீதிபதி கதிரவேற்பிள்ளை தொகுத்த அகராதியை மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர் பதிப்பித்து வெளியிட்டனர்.

4. சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் பட்டதாரிகள் இருவரும் யாழ்ப்பாணத்த வர்களே; ஒருவர் கறோல் விசுவநாதபிள்ளை; மற்றவர் சி.வை. தாமோதரம்பிள்ளை.

5. கும்பகோணம் கலைக் கல்லூரியில் வெள்ளிநாக்கர் சீனிவாச சாஸ்திரியாருக்கு ஆங்கிலம் கற்பித்தவர் யாழ்ப்பாணத்தவரான பேராசிரியர் ஹென்ஸ்மன் (சயம்பனாதர் பிள்ளை), அவரின் வழிவந்தாருள் ஒருவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றதுடன், அப்பல்கலைக் கழகத்தில் உதவிப் பதிவாளராகவும் கடமையாற்றினார். மற்றொருவர் கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்று, சென்னை மாநகராட்சியில் தலைமைப் பொறியியலாளராக இருந்தமையால், அவர் பெயரில் தியாகராய நகரில் ஹென்ஸ்மன் சாலை அமைந்தது. அதுவே கண்ணதாசன் சாலையாக இன்று மாறியுள்ளது.

6. ஈழத்தவர்களான, ம.க. வேற்பிள்ளை பொன்னம்பல பிள்ளை, முத்துத்தம்பிப்பிள்ளை, தென்புலோலி நா. கதிரவேற்பிள்ளை (திரு.வி.க.வின் ஆசிரியர்) பொன். முத்துக்குமரன் போன்ற பலர், தமிழகக் கல்விநிலையங்களில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர். பொன். முத்துக்குமரனின் தமிழ் மரபு நூலின் ஒரு பகுதியைப் பெயர்த்துச் சென்னைப் பல்கலைக் கழக இளங்கலைப் பட்ட வகுப்புக்கான பயன்பாட்டுத் தமிழ்ப் பாடநூலில் ஈராண்டுகளின் முன்னாள் சேர்த்துள்ளனர்.

viyasan said...

சகோ.சார்வாகன்,

மொழித்தொல்லை’ என்ற பெரியாரின் தொகுப்பு நூலிலும் பெரியார் இந்தச் சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளாராம், அந்தப் புத்தகத்தின் முன்பக்கம் இந்தக் காணொளியிலும் உள்ளது.

viyasan said...

//சிங்களவனிடம் வாங்கிக் குடித்த பாலை விரலை விட்டு கக்கியதால் தான், ஒருவர் முள்ளிவாக்காலில் மல்லாங்கப்படுத்துக் கொண்டு காட்சியளித்தார். அல்லவா... அய்யோ அய்யோ....////

சிங்களவர்களின் சொம்பு தூக்கிகள் இப்படித்தான் பேச வேண்டும், இப்படித் தான் பேசுவார்கள் என்று ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியும். வாங்கிற கூலிக்கு ஒப்பாரி வைக்கத் தான் வேண்டும், வேறு வழியில்லை அல்லவா? :-)

அ. வேல்முருகன் said...

கவிதைக்கு பொய்யழகு என வைரமுத்து சொன்னால் அற்புதம் என்பீர்கள்.

பெரியார், அவருக்கே உரித்தான வேகத்தில் இதைச் சொல்லியிருக்கிறார். மூட நம்பிக்கையை ஒழிக்க அவர் கொண்ட வேகம் இவ்வுலகம் அறிந்ததே

அக்கால கவிதை செய்யுள் வடிவம் அதை புரிந்த கொள்ள நிகண்டு தேவைதான். அந்த செய்யுள் சொன்ன கருத்துக்கள்..... கடவுளை புகழ்ந்து கூறியவை ........... அவற்றை பெரியார் குப்பை என்று சொன்னதில் தவறேதுமில்லை. ஆம் அதற்காக தமிழை காண்டுமிரண்டி மொழியென்றும் பழித்தார்.

அவரே தமிழை சீர்திருந்தினார். பழைய ணா, னா எழுத்துக்கள் எப்படி இருந்தது தெரியுமா?

இப்போதுள்ள நிலைக்கு பெரியாரே காரணம்.

தமிழில் ஒன்றுமில்லை, புராண குப்பைகள்தான் அதிகம் இருந்தன அவர் காலத்தில். அதனால் பழித்தார். அதே சமயம் அந்த மொழி சிறப்புற வேண்டும் என விரும்பினர்.

ஆனால் பெரியாரை பழிக்கும் கும்பல் எப்போதும் போல ஒரு பக்கத்தை மட்டுமே பேசுகிறது