Thursday, March 20, 2014

திண்டுக்கல்லில் வாழ்ந்ததால் மட்டும் யாரும் தமிழராக முடியாது. திப்பு சுல்தான் தமிழன் அல்ல!இது தமிழர்களின் பெருந்தன்மையோ அல்லது ஒற்றுமையின்மையோ எனக்குத் தெரியாது. தமிழர்களின் முன்னோர்களை இழிவு படுத்தும் தமிழரல்லாதவர்களுக்குப் பக்கவாத்தியம் வாசிக்க  அல்லது அவர்களுக்கு ஆதரவாக விதண்டாவாதம் செய்ய  எப்பொழுதும் சில தமிழர்கள் தயாராகவிருப்பார்கள் என்பதை நான் பல முறை, பல இணையத்தளங்களில் அவதானித்திருக்கிறேன்.  அதனால், நான் எந்த பதிவைச் செய்யும் போதும் அப்படியானவர்களின்  வருகையை, கேள்விகளை  எதிர்பார்த்து, அதற்கான ஆதாரங்களைத் தேடி வைத்துக் கொண்டு தான் பதிவைச் செய்வது வழக்கம்.

ஒரு வலைப்பதிவர், இங்கு அவரிட்ட பின்னூட்டத்தில்சொல்லப்போனால் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஐதர் அலியும் அவன் புதல்வன் திப்பு சுல்தான் கூட ஒரு வகையில் தமிழர்கள் தான். என்றார்  ஆனால் அது எந்த வகையில் என்பதை அவர் விளக்கவில்லை.

திப்பு சுல்தானின் வரலாற்றைக் கூறும் A History of Tippu Sultan என்ற நூலை எழுதிய Mohibbul Hasan அவர்கள் திப்பு சுல்தானின் முன்னோர்கள் மெக்காவின் அரபிய குரேஷி குடிகளைச் சேர்ந்தவர்கள்,  அவர்கள் 16ம் நூறாண்டின் கடைசிப்பகுதியில் இந்தியாவுக்கு வந்தவர்கள் என்கிறார். இஸ்லாமியராகிய மொஹிபுல் ஹசான் பல இஸ்லாமிய வரலாற்று நூல்களை எழுதியவர் என்பது குறிப்பிடத் தக்கது.
The history of Tippu Sultan’s family, until it was raised to prominence by his grandfather, Fata Muhammad, is for the most part obscure. But one thing is certain, that Tippu was descended from the Qureshi of Mecca; and it was probably at the end of the sixteenth century that his ancestors arrived in India by sea instead of following the usual land route from the north-west. Beyond these facts nothing is known regarding them before their emigration to India.
 திப்பு சுல்தானின் முன்னோர்கள் பற்றிய இந்த உண்மையின் அடிப்படையில்இந்த உண்மையை எப்படித் தான் இழுத்துவளைத்துக் கற்பனை செய்தாலும்அரேபியாவிலிருந்து வந்த  முன்னோர்களைக் கொண்ட திப்பு சுல்தான் தமிழனாக முடியாதுஅதை விட திப்பு சுல்தானின் தாயும் தமிழ்ப்பெண்ணல்ல என்பதும் குறிப்பிடத்தக்கதுஅதனால் எப்படி வரலாற்றைத் திரித்தாலும்கற்பனை செய்தாலும் திப்பு சுல்தான் தமிழன் அல்லஅத்துடன் வெளிநாடுகளிலிருந்து வந்து திண்டுக்கல்லில் வாழ்ந்தவர்கள்,வாழ்கிறவர்கள்  எல்லாம் தமிழர்கள் அல்ல.


உண்மையில் திப்பு சுல்தானின் ஆட்சியில் நடைபெற்ற கட்டாய இஸ்லாமிய மதமாற்றங்கள், கட்டாய மதமாற்றங்களுக்காக வலுக்கட்டாயமாக நடத்தப்பட்ட சுன்னத்து அதாவது ஆண்குறியின் முனையை வெட்டி எறியும் சடங்குகள், ஆயிரக்கணக்கான இந்துக்களின் படுகொலைகள் எல்லாவற்றையும் மறைத்து அவனை இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய, மத வெறியற்ற மாமனிதனாக சிலர் காட்ட முனைவதும், அதில் அவர்கள் வெற்றியுமடைந்திருப்பதையுமிட்டு எனக்கு எந்தக்  கவலையும் கிடையாது. அத்துடன் திப்பு சுல்தான் தமிழனுமல்ல, நான் இந்தியனுமல்ல, அதனால்  எனக்கும் திப்பு சுல்தானுக்கும் எந்த தொடர்பும் கிடையாதும் கூட. நான் எதிர்ப்பதெல்லாம், திப்பு சுல்தானை அளவுக்கதிகமாகப் போற்றுகிறவர்கள், அவனது தவறுகளை காணாது விட்டு விடுகிறவர்கள், ராஜ ராஜ சோழனை மட்டும் வசை பாடுவதை மட்டும் தான்.   

இலங்கையில் தமிழைப் பேசினாலும் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்தாத இலங்கை முஸ்லீம்கள், அவர்கள் தமிழர்களல்ல என்பதற்கு கூறும், காரணம் அவர்களின் முன்னோர்கள், சில வரலாற்றாசிரியர்கள் கூறுவது போல், தமிழ்நாட்டில் இராமநாதபுரம், காயல்பட்டணம், மலபார்க்கரை போன்ற இடங்களிலிருந்து வரவில்லை,  அரேபியாவில், ஏமனில் இருந்து வந்தவர்களாம். அப்படி என்றால் அவர்கள் ஏன் அரபு மொழியில் பேசுவதில்லை என்று கேட்டு, நாங்கள் ஈழத் தமிழர்கள் எவரும் அவர்களைக் குழப்புவதில்லை. அரேபியாவிலிருந்து அவர்கள் முன்னோர்கள் இலங்கைக்குக் குடியேறியதால் அவர்கள் தமிழைப் பேசினாலும் கூட,  தமிழர்கள் அல்ல என்றால்அரேபியாவிலிருந்து வந்த முன்னோர்களைக் கொண்ட திப்பு சுல்தான் மட்டும் எந்த வகையில் தமிழன் ஆனான் என்று எனக்கு விளங்கவில்லை

3 comments:

viyasan said...

@இக்பால்,

முதலில் சோழர்கள் தமிழர்கள் அல்ல என்ற உங்களின் ஊகத்தை தெரிவிக்காமல், நான் காட்டியது போல், பிரபல ஆசிரியரால் எழுதப்பட்ட எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு புத்தகத்தில் ஆதாரத்தை அல்லது யாராவது வரலாற்றாசிரியரின் கருத்தை ஆதாரம் காட்டுங்கள். எந்த வரலாற்றாசிரியரும் விஜயாலய சோழன் தொடக்கம் ராஜேந்திர சோழன் வரை தமிழர்கள் அல்ல என்று கூறியதில்லை. அந்த சோழர்கள் தமிழர்கள் என்பது வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக்கொள்ளபட்டதொன்று.

குரேசி வம்சம் இன்றும் காணப்படும் குடியினரே தவிர புராணக்கதை அல்ல. முற்காலச் சோழர்களுக்கும் (Early Cholas), மத்தியகால (medieval Cholas ) சோழர்களுக்கும் தொடர்பில்லை என்றீர்கள். ஆனால் அவர்கள் நீங்கள் மேற்கோள் காட்டும் திருவாலங்காட்டுச் செப்பெட்டிலேயே, அவர்களின் முன்னோர்கள் அல்லது வம்சமாகபெருநற்கிள்ளி, கரிகாலன், கோச்செங்கண்ணன் ஆகிய மூன்று முற்காலச் சோழ மன்னர்களையும் பொறித்துள்ளார்கள் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையோ. பெருநற்கிள்ளி, கரிகாலன், கோச்செங்கண்ணன் மூவரும் தமிழர்கள் என்பதிலும் ஏதாவது சந்தேகமிருந்தால் அதை யாராலும் தீர்த்து வைக்க முடியாது. திருவாலங்காட்டுச் செப்பேட்டில் உள்ள சோழர்களின் வம்சத்தில் மனு போன்ற புராண(Mythical) பாத்திரங்களுடன் முற்காலத் தமிழ்ச் சோழ மன்னர்களின் பெயர்களும் உள்ளன. உங்களின் செப்பேட்டு வாதத்திலேயே, பிற்காலச் சோழர்கள் தாமும் தமிழர்கள் என்பதை நிரூபிக்க தமது முன்னோர்களாகிய பெருநற்கிள்ளி, கரிகாலன், கோச்செங்கண்ணன் ஆகிய மூன்று தமிழ் மன்னர்களின் பெயர்களைப் “போட்டு விட்டுப் போய் விட்டார்கள்.”

viyasan said...

@இக்பால் செல்வன்,

1. தமிழர்களின் முன்னோர்கள் தமிழர்களாக இருக்க மாட்டார்கள் என்று தமிழர்கள் யாரும் கருதுவதில்லை.

2. திப்பு சுல்தான் தமிழன் அல்ல என்று நான் கூறினேன், அதற்கான என்னுடைய ஆதாரத்தையும் காட்டிட அவன் தமிழன் அல்ல என்றேன். நான் உங்களிடம் திப்பு சுல்தான் தமிழன் தான் என்பதற்கு உங்களின் ஆதாரத்தைக் காட்டுங்கள் என்றோ அல்லது இப்படி கேள்வி மேல் கேள்விகள் கேட்கவில்லை. நீங்கள் சோழர்கள் தமிழர்கள் அல்ல, என்கிறீர்கள் அதனால் உங்களுடைய ஆதாரத்தை நீங்கள் காட்ட வேண்டுமே தவிர எதற்காக என்னிடம் கேள்விகள் கேட்க வேண்டுமென்று எனக்குப் புரியவில்லை.

3. நீங்கள் Lingo வில் குழப்பியடிக்காமல் இருக்க வேண்டுமென்பதற்காக, என்னுடைய கருத்தை தெளிவு படுத்துகிறேன். முற்காலச் சோழர்களாகிய (Early Cholas) கரிகாலன், பெருநற்கிள்ளி, கோச்செங்கண்ணன் போன்றோரும், இடைக்காலச் கோழர்களாகிய (Medieval Cholas) விஜயாலயன் தொடக்கம் ராஜேந்திரன் சோழன், ராஜ சோழன் ஆகியோர் தமிழர்கள் என்பது தான் எனது கருத்து . பிற்காலச் சோழர்கள்(Later Cholas) எனப்படுபவர்கள் முதலாம் குலோத்துங்கன் தொடக்கம் மூன்றாம் ராஜேந்திர சோழன் வரையானவர்கள். தமிழ்நாட்டை ஆண்டாலும், அவர்களில் பலர் தமிழ்நாட்டிலிருந்து போய் ஆந்திராவின் சில பகுதிகளைக் கைப்பற்றியும், அதிகளவு மணவுறவுகளாலும் அங்கு தெலுங்கர்களுடன் கலந்ததால், நாளடைவில் தெலுங்கு பேசும் சோழர்கள் ஆகியவர்கள்.

4. உங்களின் வெறும் ஊகங்களையும், ‘Controversies in History’ போன்ற Anti-Tamil சிங்களவர்களினதும், மலையாளிகளினதும் , தெலுங்கர்களினதும் வலைப்பதிவுகளையும், பார்ப்பனர்களையும், இந்துமதத்தையும் ராஜ ராஜா சோழன் பாதுகாத்தான் என்ற காரணத்தால், ‘மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகளின் தாலியறுந்தால் சரி’ என்ற நினைப்பில், ராஜ ராஜ சோழனை இழிவு படித்தும் பெரியாரிஸ்டுக்களின் காப்பி, பேஸ்ட் வலைப்பதிவுகளிலிருந்தும் ஆதாரங்கள் தராமல், உண்மையான வரலாற்றாசிரியர்களையும், கல்வெட்டுகளையும் தருவீர்கள் என நம்புகிறேன்.

Anonymous said...

Tipu Sultan's prosecution of non muslims can never be justified on any scale.

There is no need to discuss differences between telugus & tamils,because it is possible for both to migrate and adopt the linguistic identity.

Tipu Sultan saw people as Muslims & Non Muslims,just like any other muslim king.That alone remains the case in point.

Vyasan,

Dont waste time debating with these recent converts hell bent on whitewashing their inconvenient history.They ll confuse u and make you go in circles.