Wednesday, March 19, 2014

இது தான் தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்குமுள்ள வேறுபாடு!தமிழர்களின் புலிக்கொடியை கங்கை முதல்  கடாரம் வரை நாட்டிய மாமன்னன் ராஜ ராஜ சோழனை அவனது ஆட்சியை இக்கால  முற்போக்கு, கம்யூனிச, பெரியாரிசக் கொள்கைகளுடன் ஒப்பிட்டு இழிவு படுத்துகிறார்கள் தம்மைத் தமிழர்கள் என்று இணையத்தளங்களில் கூறிக் கொள்ளும் சிலர்.
பேரரசன் ராஜ ராஜ சோழன் போன்ற  தமிழ் அரசர்கள் செய்த சாதனைகளை இருட்டடிப்பு செய்து, அவர்களின் ஆட்சியில் நடந்த சில விடயங்களை இக்காலத்துடன் ஒப்பிட்டு இழிவு படுத்துவதில், தமிழ்த்தேசியத்தின் எதிரிகளுக்கு மட்டுமல்ல சாதிக்கும் பங்குண்டு. ஏனென்றால் தமிழ்நாட்டில் எல்லாமே சாதியின் அடிப்படையில் தான் நடைபெறுகின்றன. தமிழர்களின் முன்னோர்களையும், தமிழ் அரசர்களையும் கூட எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவானவர்கள்அவர்கள் தமிழர்கள் என்ற கண்ணோட்டத்தில் தமிழ்நாட்டில் யாரும்  பார்ப்பதில்லை.  அவர்களையும் சாதியடிப்படையில் தான் பிரித்திருக்கின்றனர். அந்த சாதி வெறியினால் ராஜ ராஜ சோழனை இழிவு படுத்துகிறவர்களும், இந்து மதத்தை வெறுக்கும் வேற்று மதவாதிகளும், தமிழர்களே தமது முன்னோர்களை தயக்கமின்றித் தாக்குவதை, இழிவு படுத்துவதைக் கண்டு, அவர்களும் துணிச்சலுடன் ராஜ ராஜ சோழனை, தமிழர்களின் பொற்காலம் என்று வரலாற்றாசிரியர்களால் போற்றப்படும் அவனது ஆட்சியை இழிவு படுத்துகின்றனர்

அக்கால பழக்க வழக்கங்களை 21ம் நூற்றாண்டில் சனநாயக நாடுகளில் மக்களுக்குள்ள உரிமைகளுடன் ஒப்பிட்டு எமது முன்னோர்களை நாங்கள் தமிழர்களே இழிவு படுத்துவது அபத்தம், அதை விட முட்டாள்தனம் எதுவுமிருக்க முடியாது.  யானை தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போடுவது போன்றது தான் ராஜ ராஜ சோழனை இழிவு படுத்தும் தமிழர்களின் செயலுமாகும்.

ஆனால் எத்தனையோ இந்துக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வித்து, பல்லாயிரக்கணக்கான இந்தியர்களைக் கொன்றது மட்டுமல்ல, இந்திய நகரங்களின் பெயர்களையே பொறுத்துக் கொள்ள  முடியாமல் இஸ்லாமியப் பெயர்களாக மாற்றிய திப்பு சுல்தான் போன்றவர்களைப் போற்றுகின்றார்கள். ராஜ ராஜ சோழனைத் தூற்றுவது போல், திப்பு சுல்தானை, அவனது ஆட்சியில் நடைபெற்ற அட்டூழியங்களை, கட்டாய மதமாற்றங்களைப்  பற்றி பேசினால், முஸ்லீம்கள் ஓட்ட நறுக்கி விடுவார்கள் அல்லது Fatwa அறிவித்து விடுவார்கள் என்ற பயம் . அதனால் தான் முற்போக்கு திராவிடவீரர்களில் எவருமே திப்பு சுல்தானைப் பற்றி அல்லது அவனது ஆட்சியைப் பற்றி, ராஜ ராஜ சோழனை விமர்சிப்பது போல் விமர்சிப்பதில்லை, அதைப்பற்றி  மூச்சு விடுவதுமில்லை.   

எவன் ராஜ ராஜ சோழனை இழிவாகப் பேசினாலும் ஞே என்று எருமை போல பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் அல்லது தாமும் அவர்களுடன் சேர்ந்து தாளம் போடுகிறார்கள் ஆனால் ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் கிருஷ்ண தேவராயர் வேடத்தில் வடிவேலு நடிக்கிறாராம். அந்தப் படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்துவது போல் வடிவேலுவின் நடிப்பு இருப்பதாகக் கேள்விப்பட்ட தெலுங்கர்கள் வடிவேலுக்கெதிராகப் போர்க் கொடி தூக்கி விட்டார்கள். அந்தப் படத்தை வெளியிடக் கூடாதென்று தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை கண்டித்துள்ளது

கிருஷ்ண தேவராயரை இழிவு படுத்தும் வடிவேலுவின் செயல் கிருஷ்ண தேவராயரை மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தெலுங்கு மக்களையும் இழிவு படுத்துவதாக உள்ளதாம்.

ஆனால் ராஜ ராஜ சோழனை மற்றவர்கள் இழிவு படுத்தும் போது அதற்கெதிராக எந்த தமிழனும் பொங்கி எழுவதைக் காணோம். இதற்கு என்ன காரணமாக இருக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் தமிழுணர்வு அற்றுப் போய் விட்டதா அல்லது பெரியாரிசமும், திராவிடக் கொள்கைகளும் தமிழர்களிடம் தமிழ்த் தேசிய உணர்வை இல்லாமல் செய்து விட்டனவா?


9 comments:

unknown said...

Krishna Deva Raya in not telugu king. he is kannada king.

காரிகன் said...

நீங்கள் கலையரசன் என்னும் நபர் எழுதிய கட்டுரையை இங்கே நினைவுகூர்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவர் இவ்வாறு புதிய தகவல்களை வெளியிடுவதில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். இலங்கையிலிருந்து வெளியேறி இப்போது நேதர்லாண்டில் வசதியாக இருக்கும் இவர் அந்த நாட்டின் சமூக அமைப்பையே குற்றம் சொல்லக்கூடிய வினோதமானவர். இசுலாமிய சார்பு கொண்டவர். ஆனால் இத்தனை வீரம் பேசும் இவர் ஒரு இஸ்லாமிய நாட்டில் இருந்துகொண்டு இவற்றை சொன்னால் நலமாக இருக்கும். என்ன செய்வது? இந்த அளவுக்கு சுதந்திரம் இருக்கும் மேற்கத்திய நாட்டில்தானே இத்தனை பேச முடியும்?

viyasan said...

@காரிகன்,

உங்களின் கருத்துக்கு நன்றி, எனக்கு கலையரசன் யாரென்று தெரியாது. ராஜ ராஜ சோழனை முட்டாள்தனமாக தூற்றும் பலரை நான் இணையத்தளங்களில் சந்தித்திருக்கிறேன். இப்பொழுது வினாவில் நடைபெறும் கலந்துரையாடலிலும், திப்பு சுல்தானைப் போற்றிப்புகழும் சில "தமிழர்கள்" ராஜ ராஜ சோழனை இழிவு படுத்துகிறார்கள். அதனைத் தான் நான் குறிப்பிட்டேன். கலையரசன் என்பவரின் இணைய இணைப்பு உங்களுக்குத் தெரிந்தால் தாருங்கள். அவர் என்ன சொல்கிறார் என்பதையும் பார்ப்போம். :-)

http://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/

Anonymous said...

அரசியல் செய்ய இங்குள்ள சாதிக் கட்சிகள் கிளப்பிவிடும் பூதம். இந்த தெலுங்கர் கழகத்தை தமிழக தெலுங்கர்கள் பலரும் அறிந்தது கூட கிடையாது, அப்படியே அறிந்தாலும் கண்டு கொள்ளப் போவதும் இல்லை. விஜயகாந்த், வைகோ போன்ற ஆதிக்க சாதி தெலுங்கர்கள் தான் முனைப்பாக வாக்கரசியலுக்காய் தெலுங்கு அடையாளங்களை அவ்வவ்போது கிளப்புவார்கள். எல்லாவற்றுக்கும் மேல் கிருஷ்ண தேவராயர் தெலுங்கு மன்னர் கிடையாது, அவர்கள் கன்னட மன்னர்கள்.. தெனாலிராமன் தான் தெலுங்கு, அப்போ இவர்கள் உண்மையில் தெலுங்கின் பிரபல விகடகவியைத் தான் எதிர்த்துள்ளார்கள். அது போக ராஜ ராஜ சோழன் பச்சைத் தமிழன் கிடையாது. பிற்கால சோழர்கள் தெலுங்கு வம்சாவளிகள், சாளுக்கிய - சோழ குடும்பங்களைச் சார்ந்தோர். ரேணாடு சோடர்களின் நெருங்கிய உறவுகளும் கூட. அது போக பிற்கால சோழர்கள் தமது குல வரலாற்றை இக்சவாகுவில் இருந்து தொடங்கி, வட தேசத்தின் சூர்யபுத்திர குலம் என்பதை தெளிவாக எழுதியும் உள்ளனர். சொல்லப்போனால் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஐதர் அலியும் அவன் புதல்வன் திப்பு சுல்தான் கூட ஒரு வகையில் தமிழர்கள் தான். அப்படி எனில் நாம் திப்புவுக்கு அல்லவா ஆதரவு தர வேண்டும்.

மொழி சார் தேசியம் அன்று கிடையாது, இது 19-ம் நூற்றாண்டில் எழுந்தது. ஆக தமிழ் தெலுங்கு என்ற பாகுபாடு புதிய அரசில் எழுந்தவை.

thayumanavan pillai said...

தாயுமானவன்

திரு . வியாசன்

மிக அற்புதமான கட்டுரை... தாங்கள் கூற வரும் விஷயத்தை புரிந்து கொள்ளும் நிலையில் இப்போது தமிழ்நாட்டில் யாரும் இல்லை.. ராஜ ராஜ சோழனை ஏற்று கொள்ளாமல் போனதற்கு சாதி என்பது முழுமுதல் காரணம் அல்ல.. தாங்கள் முன்பு கூறியது போன்று பெரியாரிசம், கம்யுனிசவாதிகள் போன்றோர்களால் தான்.. ராஜ ராஜன் தான் என்றில்லை திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பன், கண்ணகி போன்ற எந்த தமிழ் பண்பாடு விழுமியங்களையும் ஏற்காதவர்கள் மேற்குறித்த இருவரும்( periyarist, Communsit). பார்ப்பனியத்தால் தமிள்ளர்களின் வரலாறு மடைமாற்றி இருட்டிக்க படுகின்றது என்றால் திராவிட வாதத்தால் தமிழ் இனத்தின் பெருமைகள் அழித்தொழிக்க படுகின்றது.. என்ன இருந்தாலும் பெரியார் பிறந்த மண்ணில்லையா. எது எப்படியோ தாங்கள் தொடர்ந்து வினவில் "பாக் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது குற்றமா ?" என்கிற திரியில் தாங்கள் திப்பு சுல்தான் பற்றி கூறிய கருத்துகளை உண்மைக்கு புறம்பானவை என்று கூறி அனைத்தையும் நீக்கி விட்டார்கள். இருந்தாலும் தங்களுடைய கருத்தினை வினவில் தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.

viyasan said...

திரு. தாயுமானவன் பிள்ளை,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆதாரமில்லாமல் எதையும் பேசும் வழக்கமே என்னிடம் கிடையாது. ஆனால் என்ன காரணத்தாலோ வினவில் அந்தப் பகுதியை அகற்றி விட்டார்கள். திப்பு சுல்தானைப் பற்றி உண்மையைப் பேசினாலும் அதை பொய்,துவேசம், மதவெறி என்கிறார்கள், ஆனால் ராஜ ராஜ சோழனைப் பற்றி பொய்யைப் பேசினாலும், அதை உண்மை, முற்பபோக்கு, பகுத்தறிவு என்கிறார்கள் சிலர். தமிழச்சாதி தன்தலையில் தானே மண்ணையள்ளிப் போடுகிறது.

viyasan said...

@இக்பால் செல்வன்,

நீங்கள் எப்படித் தான் கற்பனை செய்தாலும் எந்த வகையிலும் திப்பு சுல்தான் தமிழன் அல்ல. :-)

//அது போக ராஜ ராஜ சோழன் பச்சைத் தமிழன் கிடையாது///

பச்சைத் தமிழனுக்கு உங்களின் வரைவிலக்கணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. உதாரணமாக என்னுடைய வாரிசுகள், நான் இறந்து நூறு வருடங்களுக்குப் பிறகு சிங்களவர்களை மணந்து கொண்டால், நானும் தமிழன் இல்லை என்றாகி விடுவேன் என்பது போன்றது தான் , “பிற்கால சோழர்கள் தெலுங்கு வம்சாவளிகள், சாளுக்கிய - சோழ குடும்பங்களைச் சார்ந்தோர். ரேணாடு சோடர்களின் நெருங்கிய உறவுகளும் கூட” இருந்ததால் ராஜ ராஜ சோழனும் தமிழன் இல்லை என்ற அபத்தமான வாதமும்.

பாண்டியர்களும் தமது கல்வெட்டுகளில் தம்மை சந்திரகுலத்தவர்கள் என்று குறித்தார்கள் அதனால் அவர்களும் தமிழர்கள் அல்ல, சந்திரனிலிருந்து வந்தவர்களா? திருவாலங்காட்டுச் செப்புத் தகட்டில் குறிப்பிடப்படும் சோழர்குல வரலாறு வெறும் புராணக்கதை (Mythology)என்பது வரலாற்றாசிரியர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தெரியும். கல்வெட்டுகளில் புராணக்கதைகளையும், சம்பவங்களையும் குறிப்பிட்டு அந்தக் குறிப்பிட்ட அரசனை, அதாவது அந்தக் கல்வெட்டின் கதாநாயகனை வர்ணிப்பது வழக்கம். அவற்றை உண்மையென்று வரலாற்றாசிரியர்கள் எவரும் எடுத்துக் கொள்வதில்லை என்பது உங்களுக்கும் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். உதாரணமாக திருவாலங்காட்டுக் கல்வெட்டில் பதினெட்டாவது வரியில் “(v. 18) ; his son was Prithulaksha who set the mountain Mandara whirling in the ocean for securing nectar” என்று குறிப்பிடப் பட்டுள்ளது, அப்படியானால் பாற்கடலில் அமுதம் கடையும் போது சோழர்களின் முன்னோர்களும் பங்கு பற்றினார்கள் என்று கருத்தாகுமா, அப்படியானால் சோழர்கள் மனிதர்கள் அல்ல வானத்தில் வாழும் தேவர்களா. அவை எல்லாம் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் சாதாரணமாகக் காணப்படும் புராணக்கதைகள் ஐயா.

viyasan said...

@இக்பால் செல்வன்,
//மொழி சார் தேசியம் அன்று கிடையாது, இது 19-ம் நூற்றாண்டில் எழுந்தது. ஆக தமிழ் தெலுங்கு என்ற பாகுபாடு புதிய அரசில் எழுந்தவை.///

அதை வேண்டுமானால் நான் ஒப்புக் கொள்கிறேன். இலங்கையில் கூட சிங்கள அரச குடும்பத்தின் பல முக்கியமான அரசர்களும், அரசிகளும் தமிழர்கள். அவர்கள் தமது நாட்டை படையெடுப்புககளிலிருந்து காப்பாற்ற கூட்டுச் சேர்ந்தார்களே தவிர, தமிழர் சிங்களவர் என்ற மொழியடிப்படையிலான பாகு பாடுகள் அன்றிருக்கவில்லை. இன்று சிங்களப் பகுதிகள் என்று குறிப்பிடப்படும் இடங்கள் எல்லாம் தமிழ் பெளத்தர்கள் வாழ்ந்த இடங்கள். இனவாதம் இல்லாமல் இலங்கை அரசு அகழ்வாராய்ச்சி செய்தால், அந்த உண்மையை ஒப்புக் கொள்வர்.

thayumanavan pillai said...

அன்பின் திரு. வியாசன் ..

தங்களின் அறிவீர் சிறந்த தமிழ் சரித்திர பண்பாட்டியல் கட்டுரைகளை வாசிக்கும் எமக்கு தங்களின் மீதும் தங்களின் எழுத்துக்கள் மீதும் தனி பற்றும் மதிப்பும் எப்போதும் இருக்கிறது.. தங்களின் வினவு கட்டுரையின் மீதான தங்களின் விமாசனங்கள் மிக சிறந்தனவே. தங்களின் மறுமொழிகளுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாமல் தனி நபர் விமர்சனத்தில் தரம்தாழ்ந்து தனி நண்பர் தாக்குதலில் இறங்குகிறார்கள்.. அவர்களின் பேச்சுகளுக்கு எல்லாம் நீங்கள் பதில் கூறவேண்டாம் என்று தங்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .. வினவில் ஒரு சிலரை தவிர யாரும் தர்க்க ரீதியாகவோ ஆதரபூர்வமாகவோ பதில் அளிப்பதில்லை...

அதிலும் குறிப்பாக, பாகிஸ்தான் அணியை ஆதரிப்பது குற்றமா என்னும் திரியில் செந்தில் குமரன் என்பவருக்கு பதில் கூறுவதை தவிர்க்குமாறு தங்களை அன்புடனும் தோழமையுடனும் கேட்டுகொள்கிறேன்.. ஏனென்றால், அந்த நபரிடம் எந்த தர்க்க ரீதியான நியாயமோ கருத்தாழமோ கிடையாது. அவனை போன்ற முதிர்ச்சி இல்லாத ஒரு நபரிடம் நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை கூறி பதி இருப்பது வீண் வேலையே.. நீங்கள் வரலாறு என்று கூறுவதை அவன் அவதூறு என்று தான் கூறுவான்.. நீங்கள் தமிழர் சரித்திரம் என்றால் அவன அதை தரித்திரம் என்று தான் வாதாடுவான்.. அவனின் ஒவ்வொரு பேச்சும் ஒரு வெறி பிடித்த மனநோயாளியின் பேச்சை போன்றுள்ளது.. ஆகவே, அவன் போன்ற மனநோயாளிகளுக்கு எல்லாம் நீங்கள் பதில் கூறி தங்களின் பொன்னான நேரத்தையும், தன் மதிப்பையும் இழக்க வேண்டாம் என்று தங்களை மிக அன்போடு கேட்டு கொள்கிறேன்... தமிழரின் பண்பாட்டை மீட்க்கும் தங்களின் எழுத்து பணி மேன்மேலும் தொடர என் வாழ்த்துக்கள் .. நன்றி