Tuesday, March 18, 2014

யாழ்ப்பாணத் தமிழ் பேசும் ஜேர்மானிய பெண்!



புலம் பெயர் நாடுகளில் தமிழ் குழந்தைகள் தமிழ் பேசாத நிலையில், லண்டன் போன்ற இடங்களில் தமிழ் மொழியை உதாசீனம் செய்து ஆங்கில மொழி தெரிந்தால் போதும் என்ற மனநிலையில் சில தமிழர்கள் வாழும் இன்றைய காலகட்டத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தமிழை கற்று யாழ்ப்பாணத்தமிழை பேசும் அழகை ரசிக்காமல் இருக்க முடியாது.





 “எல்லோரும் வெட்கப்படாமல் தமிழில கதையுங்கோ, அழகான மொழி தமிழில கதையுங்கோ”
"எல்லாரும் வந்து சண்டை பிடிக்கிறாங்க, பைட்(fight) பண்ணுறாங்க, ஊர்வலத்துக்குப் போறது, தமிழ்நாடு வேணுமாம், ஆனால் இன்றைக்கு மொழியே கதைக்க முடியேல்லை என்றால் என்னென்று நாளைக்கு தமிழ்நாடு திரும்பிக் கிடைக்குமோ, உண்மையா அது பெரிய கேள்விக்குறியாய்க் கிடக்குது."
“தமிழ்மொழி புலம்பெயர்ந்த நாடுகளில் கண்டிப்பா வளரும் ஆனால் எல்லோரும் வந்து, கூடப் பழகோணும், எல்லாரும் வந்து OK எனக்கு தாய்மொழி முக்கியமென்று, அதை முதலில் ஏற்றுக் கொள்ள வேணும். அதை ஏற்றுக் கொண்ட பிறகு தான் தாய்மொழி வளரலாம். இல்லையோ ரொம்பக் கஸ்டம். இப்பவே ஞாயமான ஆக்கள் சொல்லுவினம், ஐயோ, பிள்ளையை சிலோனுக்குக் கொண்டு போனோம், ஆனால் அப்பம்மாவோட பிள்ளை இங்கிலீசில கதைச்சுது, அப்பம்மாவுக்கு ஒன்றுமே விளங்கேல்லை. உது பிள்ளைக்குப் பாவமென்று சொல்ல மாட்டேன். இது வந்து கேவலமென்று தான் சொல்லலாம், உண்மையில இது கேவலமாய்க் கிடக்குது.”    

(* என்னைப் பொறுத்துக்காக = என்னைப் பொறுத்த வரையில் )

No comments: