Wednesday, March 19, 2014

இது தான் தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்குமுள்ள வேறுபாடு!தமிழர்களின் புலிக்கொடியை கங்கை முதல்  கடாரம் வரை நாட்டிய மாமன்னன் ராஜ ராஜ சோழனை அவனது ஆட்சியை இக்கால  முற்போக்கு, கம்யூனிச, பெரியாரிசக் கொள்கைகளுடன் ஒப்பிட்டு இழிவு படுத்துகிறார்கள் தம்மைத் தமிழர்கள் என்று இணையத்தளங்களில் கூறிக் கொள்ளும் சிலர்.
பேரரசன் ராஜ ராஜ சோழன் போன்ற  தமிழ் அரசர்கள் செய்த சாதனைகளை இருட்டடிப்பு செய்து, அவர்களின் ஆட்சியில் நடந்த சில விடயங்களை இக்காலத்துடன் ஒப்பிட்டு இழிவு படுத்துவதில், தமிழ்த்தேசியத்தின் எதிரிகளுக்கு மட்டுமல்ல சாதிக்கும் பங்குண்டு. ஏனென்றால் தமிழ்நாட்டில் எல்லாமே சாதியின் அடிப்படையில் தான் நடைபெறுகின்றன. தமிழர்களின் முன்னோர்களையும், தமிழ் அரசர்களையும் கூட எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவானவர்கள்அவர்கள் தமிழர்கள் என்ற கண்ணோட்டத்தில் தமிழ்நாட்டில் யாரும்  பார்ப்பதில்லை.  அவர்களையும் சாதியடிப்படையில் தான் பிரித்திருக்கின்றனர். அந்த சாதி வெறியினால் ராஜ ராஜ சோழனை இழிவு படுத்துகிறவர்களும், இந்து மதத்தை வெறுக்கும் வேற்று மதவாதிகளும், தமிழர்களே தமது முன்னோர்களை தயக்கமின்றித் தாக்குவதை, இழிவு படுத்துவதைக் கண்டு, அவர்களும் துணிச்சலுடன் ராஜ ராஜ சோழனை, தமிழர்களின் பொற்காலம் என்று வரலாற்றாசிரியர்களால் போற்றப்படும் அவனது ஆட்சியை இழிவு படுத்துகின்றனர்

அக்கால பழக்க வழக்கங்களை 21ம் நூற்றாண்டில் சனநாயக நாடுகளில் மக்களுக்குள்ள உரிமைகளுடன் ஒப்பிட்டு எமது முன்னோர்களை நாங்கள் தமிழர்களே இழிவு படுத்துவது அபத்தம், அதை விட முட்டாள்தனம் எதுவுமிருக்க முடியாது.  யானை தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போடுவது போன்றது தான் ராஜ ராஜ சோழனை இழிவு படுத்தும் தமிழர்களின் செயலுமாகும்.

ஆனால் எத்தனையோ இந்துக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வித்து, பல்லாயிரக்கணக்கான இந்தியர்களைக் கொன்றது மட்டுமல்ல, இந்திய நகரங்களின் பெயர்களையே பொறுத்துக் கொள்ள  முடியாமல் இஸ்லாமியப் பெயர்களாக மாற்றிய திப்பு சுல்தான் போன்றவர்களைப் போற்றுகின்றார்கள். ராஜ ராஜ சோழனைத் தூற்றுவது போல், திப்பு சுல்தானை, அவனது ஆட்சியில் நடைபெற்ற அட்டூழியங்களை, கட்டாய மதமாற்றங்களைப்  பற்றி பேசினால், முஸ்லீம்கள் ஓட்ட நறுக்கி விடுவார்கள் அல்லது Fatwa அறிவித்து விடுவார்கள் என்ற பயம் . அதனால் தான் முற்போக்கு திராவிடவீரர்களில் எவருமே திப்பு சுல்தானைப் பற்றி அல்லது அவனது ஆட்சியைப் பற்றி, ராஜ ராஜ சோழனை விமர்சிப்பது போல் விமர்சிப்பதில்லை, அதைப்பற்றி  மூச்சு விடுவதுமில்லை.   

எவன் ராஜ ராஜ சோழனை இழிவாகப் பேசினாலும் ஞே என்று எருமை போல பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் அல்லது தாமும் அவர்களுடன் சேர்ந்து தாளம் போடுகிறார்கள் ஆனால் ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் கிருஷ்ண தேவராயர் வேடத்தில் வடிவேலு நடிக்கிறாராம். அந்தப் படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்துவது போல் வடிவேலுவின் நடிப்பு இருப்பதாகக் கேள்விப்பட்ட தெலுங்கர்கள் வடிவேலுக்கெதிராகப் போர்க் கொடி தூக்கி விட்டார்கள். அந்தப் படத்தை வெளியிடக் கூடாதென்று தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை கண்டித்துள்ளது

கிருஷ்ண தேவராயரை இழிவு படுத்தும் வடிவேலுவின் செயல் கிருஷ்ண தேவராயரை மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தெலுங்கு மக்களையும் இழிவு படுத்துவதாக உள்ளதாம்.

ஆனால் ராஜ ராஜ சோழனை மற்றவர்கள் இழிவு படுத்தும் போது அதற்கெதிராக எந்த தமிழனும் பொங்கி எழுவதைக் காணோம். இதற்கு என்ன காரணமாக இருக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் தமிழுணர்வு அற்றுப் போய் விட்டதா அல்லது பெரியாரிசமும், திராவிடக் கொள்கைகளும் தமிழர்களிடம் தமிழ்த் தேசிய உணர்வை இல்லாமல் செய்து விட்டனவா?


Tuesday, March 18, 2014

யாழ்ப்பாணத் தமிழ் பேசும் ஜேர்மானிய பெண்!புலம் பெயர் நாடுகளில் தமிழ் குழந்தைகள் தமிழ் பேசாத நிலையில், லண்டன் போன்ற இடங்களில் தமிழ் மொழியை உதாசீனம் செய்து ஆங்கில மொழி தெரிந்தால் போதும் என்ற மனநிலையில் சில தமிழர்கள் வாழும் இன்றைய காலகட்டத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தமிழை கற்று யாழ்ப்பாணத்தமிழை பேசும் அழகை ரசிக்காமல் இருக்க முடியாது.

 “எல்லோரும் வெட்கப்படாமல் தமிழில கதையுங்கோ, அழகான மொழி தமிழில கதையுங்கோ”
"எல்லாரும் வந்து சண்டை பிடிக்கிறாங்க, பைட்(fight) பண்ணுறாங்க, ஊர்வலத்துக்குப் போறது, தமிழ்நாடு வேணுமாம், ஆனால் இன்றைக்கு மொழியே கதைக்க முடியேல்லை என்றால் என்னென்று நாளைக்கு தமிழ்நாடு திரும்பிக் கிடைக்குமோ, உண்மையா அது பெரிய கேள்விக்குறியாய்க் கிடக்குது."
“தமிழ்மொழி புலம்பெயர்ந்த நாடுகளில் கண்டிப்பா வளரும் ஆனால் எல்லோரும் வந்து, கூடப் பழகோணும், எல்லாரும் வந்து OK எனக்கு தாய்மொழி முக்கியமென்று, அதை முதலில் ஏற்றுக் கொள்ள வேணும். அதை ஏற்றுக் கொண்ட பிறகு தான் தாய்மொழி வளரலாம். இல்லையோ ரொம்பக் கஸ்டம். இப்பவே ஞாயமான ஆக்கள் சொல்லுவினம், ஐயோ, பிள்ளையை சிலோனுக்குக் கொண்டு போனோம், ஆனால் அப்பம்மாவோட பிள்ளை இங்கிலீசில கதைச்சுது, அப்பம்மாவுக்கு ஒன்றுமே விளங்கேல்லை. உது பிள்ளைக்குப் பாவமென்று சொல்ல மாட்டேன். இது வந்து கேவலமென்று தான் சொல்லலாம், உண்மையில இது கேவலமாய்க் கிடக்குது.”    

(* என்னைப் பொறுத்துக்காக = என்னைப் பொறுத்த வரையில் )