Wednesday, February 12, 2014

யுவன் சங்கர் இனிமேல் தப்பு (Duff) மட்டும் தான் வாசிப்பாரா?


இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் இஸ்லாத்துக்கு மாறியது புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் விடயமாகும். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் அவரது மகனுக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகுந்த அபிமானம் உண்டு,  எந்த மதத்துக்கும் மதம் மாற எல்லோருக்கும் தனிமனித சுதந்திரம் இருந்தாலும் கூட, அவரது மகன் இஸ்லாத்துக்கு மதம் மாறியது, ஈழத்தமிழர்களுக்கும் அவருக்குமிடையே ஒரு நிரந்தர இடைவெளியை ஏற்படுத்தி விட்டது போல் தெரிகிறது. இஸ்லாமை தமது மதமாகக் கொண்ட ஈழத்தமிழர்கள் இல்லை என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. 

இசையமைப்பாளர் திரு. இளையராஜா கனடாவுக்கு வருகை தந்த போது கனடாவின் கொடியை அவர் மீது போர்த்தி, கனடாத் தமிழர்களின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராகிய செல்வி. ராதிகா சிற்சபேசன் அவரது காலைத் தொட்டு ஆசி பெற்றார். கனடாவின் கொடியை அவர் மீது போர்த்தியது தவறாக இருந்தாலும் கூட, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் அவருக்கு எந்தளவுக்கு அன்பும், மரியாதையும் உண்டு என்பதை அது காட்டுகிறது. 

With His First Wife - an Eelam Tamil
தமிழ்நாட்டில் எப்படி இருந்தாலும், ஈழத்தில் முஸ்லீம்கள் தமிழைப் பேசினாலும் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. அவர்களும், அவர்களின் அரசியல்வாதிகளும் ஒரு போதும் ஈழத்தமிழர்களுடன் ஒத்துழைத்ததில்லை. இன்றும் சிங்களவர்களுடன் இணைந்து தமிழர்களின் நலன்களுக்கெதிராகத் தான் இயங்குகிறார்கள். தமிழ்நாட்டு முஸ்லீம்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்த ஈழத்தமிழர்களைத் தவிர ஏனைய ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தம்மைத் தமிழர்களாகத்  தான் அடையாளப்படுத்துகிறார்கள் என்ற உண்மை தெரியாது

அத்துடன், முஸ்லீமாக மாறிய யுவன்சங்கர் இனிமேல், ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதை விட, முஸ்லீம்களாகிய  அரபுக்கள், பலத்தீனியர்கள், சிரியர்கள், ஆபிரிக்காவில் சோமாலியர்கள் போன்ற முஸ்லீம்களின் பிரச்சனைகளுக்காக குரலெழுப்புவதும், முஸ்லீம் உம்மத்துக்கள் என்ற  அடிப்படையில் அவர்களைத் தமது உடன்பிறப்புகளாக, தனது கூட்டத்தினராகக் கருத வேண்டும்.  அதனால் தான், பலத்தீனத்தில் ஒரு குழந்தையின் பல்லு விழுந்தால் கூட, வீதிக்குப் படையெடுக்கும் தமிழ்நாட்டு முஸ்லீம்கள், இலங்கைத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட போது, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் எதையும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல, பி.ஜெய்னுலாப்தீன் போன்ற தமிழ்நாட்டு முஸ்லீம் மதத் தலைவர்கள் இலங்கை அரசுக்கு ஆதரவாக, முஸ்லீம்களுக்கு மத்தில் பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். அதனால் இனிமேலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் யுவன் சங்கரை ஆதரிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.  

அது ஒருபுறமிருக்க, இசை(Music), சங்கீதம் என்பனவற்றுக்கு இஸ்லாத்தில் அனுமதி  இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.  அந்த விடயத்தில் இணையத்திலுள்ள காணொளிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது அது உண்மை போல் தான் தெரிகிறது. இசையமைப்பாளர் .ஆர். ரகுமான், சூஃபி இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பவராக இருக்கலாம். ஏனென்றால் தர்கா வழிபாடு, ஞானிகளை நம்புவது எல்லாம், தீவிர வாத வஹாபிய இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. உண்மையில் இஸ்லாத்தில் இசை, ஹராமா இல்லையா என்ற விடயம் ஒரே குழப்பமாக இருக்கிறது. இந்த விடயத்தில் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் கருத்தையறிய அவரது காணொளிகளைத் தேடினேன். கிடைக்கவில்லை. 


புகழ்பெற்ற
இஸ்லாமிய பிரச்சாரகர்  Dr.Zakir Naik இன்கருத்துப்படி, தப்பு அல்லது-Duff (Tambourine) மேளத்தைத் தவிர, வேறு இசைக்கருவிகளை இசைப்பது ஹராம், அதாவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை என்கிறார். அப்படியாயின் யுவன்சங்கர் இனிமேல் தப்பு   (Tambourine)  வாத்தியத்தை மட்டும் தான் வாசிப்பாரா/அடிப்பாரா என்ற கேள்வி எழுகிறது. 

15 comments:

kari kalan said...

நண்பர் வியாசன்,
யுவன் மதம் மாறியதற்காக ஆனந்த கூச்சலிடும் இணைய வஹாபிகளின் குரல்கள் எத்தகைய அருவறுப்பை தருகின்றனவோ, அதற்கு எள்ளளவும் குறையாததாய் இருக்கிறது உங்களின் இந்த இடுகை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏதேனும் ஒரு மதத்தை ஒருவர் தேர்ந்தெடுப்பதோ இல்லை நிராகரிப்பதோ அவ்ரின் 100% சுய உரிமை என்பதை புரிந்து கொள்ளுங்கள் முதலில்.
//இஸ்லாமை மதமாகக் கொண்ட ஈழத்தமிழர்கள் இல்லை என்பது இங்கு குறிப்பிடத் தக்கது //
இது உங்களுக்கே அபத்தமாக தெரியவில்லையா? ஈழத்தில் உள்ள இஸ்லாமியர்கள் விடுதலை புலிகளோடு முரண்பட்டிருக்கலாம் அதற்காக அவர்களை நாடற்ற அனாதைகளாக ஆக்கி விடுதல் நியாயமா அய்யா. அவர்களின் தாய் மொழி தமிழ்தான். சிங்களம் இல்லை. அது மட்டுமின்றி இவர் தமிழர் அவர் தமிழரல்ல என்று சான்றிதழ் தரும் தகுதியை யாரும் எடுத்து கொள்ள முடியாது.
இசையை பற்றி கூறுவதென்றால், ஏ.ஆர்.ரகுமானையே வஹாபிகள் ஒரு இஸ்லாமியனாக ஏற்றுக்கொள்வதில்லை காரணம் அவர் தர்காவை தொழுவதால் அல்லாவுக்கு இணை வைக்கிறாராம். ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைக் கொள்ளாது ரகுமான் சாதிக்கிறார் என்றால் அவர் தன் கடவுளை மட்டுமே நம்புகிறார். இந்த மதத்தின் பெயிரிலான கூட்டத்தை அல்ல.
ஆக யுவன் மதம் மாறியதால், அவர் குடும்பத்தில் வேண்டுமென்றால் மனஸ்தாபம் வரலாம் (அதுவும் நியாயமில்லை என சொல்ல இயலாது ஏனெனில் நம் கலாசாரம் அப்படி)
அன்றி அவரின் மத மாற்றத்தை மட்டும் வைத்து அவர் இசையை வெறுப்போர் அல்லது விரும்புவோர் ஒரு நல்ல மன நல மருத்துவரை பார்ப்பது நலம் :)

viyasan said...

@kari kalan

திரு.கரிகாலன்,

எனது கருத்தைத் தெரிவிக்க எனக்கு எந்தளவு உரிமையுண்டோ, உங்களுக்கும் உரிமையுண்டேன்பதை ஒப்புக் கொள்கிறேன்.

//ஏதேனும் ஒரு மதத்தை ஒருவர் தேர்ந்தெடுப்பதோ இல்லை நிராகரிப்பதோ அவ்ரின் 100% சுய உரிமை என்பதை புரிந்து கொள்ளுங்கள் முதலில்.///


அதை எனது பதிவில் நானே குறிப்பிட்டுள்ளேன், பார்க்கவில்லையா?


//இது உங்களுக்கே அபத்தமாக தெரியவில்லையா?///

இலங்கை முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல என்ற உண்மை உங்களுக்குத் தெரியாதது, மட்டுமல்ல அதை ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் உபதேசிப்பதும் உங்களுக்கு அபத்தமாகத் தெரியவில்லை என்பது தான் வியப்பாக இருக்கிறது.

//ஈழத்தில் உள்ள இஸ்லாமியர்கள் விடுதலை புலிகளோடு முரண்பட்டிருக்கலாம் அதற்காக அவர்களை நாடற்ற அனாதைகளாக ஆக்கி விடுதல் நியாயமா அய்யா.///

உங்களுக்கு ஈழத்தின் வரலாறு தெரியாது போல் தெரிகிறது. விடுதலைப் புலி என்ற இயக்கம் தொடங்கு முன்பே, சுதந்திரமடையு முன்பே, சுதந்திரத்துக்குப் பின்னால், அகிம்சை வழியில் ஈழத்தமிழர்கள் தமது போராட்டங்களை நடத்திய காலங்களுக்கு முன்பே, இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லீம்கள், தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. இலங்கையில் சிங்களவர்களிடமிருந்து சலுகைகளைப் பெறுவதற்காக, தம்மை தனிப்பட்ட முஸ்லீம் இனமாக அடையாளப் படுத்தத் தொடங்கி விட்டனர். அவர்கள் ஒரு போதும் தம்மை தமிழர்களாக எண்ணி, ஈழத்தமிழர்களுடன் ஒன்று பட்டதில்லை. அவர்கள் தம்மைத் தமிழினமாக அடையாளப்படுத்துவதில்லை.

// அவர்களின் தாய் மொழி தமிழ்தான். சிங்களம் இல்லை. அது மட்டுமின்றி இவர் தமிழர் அவர் தமிழரல்ல என்று சான்றிதழ் தரும் தகுதியை யாரும் எடுத்து கொள்ள முடியாது.///

தமிழ் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்களல்ல. தமமைத் தமிழர்களாக அடையாளப்படுத்தாமல் தமிழ் பேசும் எவருமே தமிழர்களல்ல.


//ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைக் கொள்ளாது ரகுமான் சாதிக்கிறார் என்றால் அவர் தன் கடவுளை மட்டுமே நம்புகிறார். இந்த மதத்தின் பெயிரிலான கூட்டத்தை அல்ல.//

ரசிகர்கள் இல்லாமல் ஒரு கலைஞன் செல்வாக்கின் உச்சத்தை கடவுள் அருளால் அடைய முடியுமென்றால், கடவுள் நம்பிக்கையுள்ள சாமியார்கள் எல்லாம் பெரும் பணக்காரர்களாக இருக்க வேண்டும்.//அன்றி அவரின் மத மாற்றத்தை மட்டும் வைத்து அவர் இசையை வெறுப்போர் அல்லது விரும்புவோர் ஒரு நல்ல மன நல மருத்துவரை பார்ப்பது நலம் ///

அவரின் மத மாற்றத்தை மட்டும் வைத்து இசையை வெறுக்குமாறு நான் கூறவில்லை, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பலர் தமிழ்நாட்டு நடிகர், நடிகைகளுக்கு ஆதரவளிப்பதன் காரனம, அவர்களின் நடிப்பு மட்டுமல்ல, தமிழன் என்ற வகையில் உணர்வு பூர்வமாக,தமிழ்நாட்டு கலைஞர்கள் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு அளித்த/அளிக்கின்ற ஆதரவும் தான். சிலர் அதிலும் தமது நடிப்புத் திறனைக் காட்டுவதுண்டு. அதனால். அத்தகைய ஆதரவு முஸ்லீமாக மாறிய யுவன்சங்கரால் மனப்பூர்வமாக அளிக்க முடியும் என்பது சந்தேகமே. அது முடியுமானால், என் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கவில்லை.

Maasianna said...

I agree with you Viyasan

விவரணன் நீலவண்ணன் said...
This comment has been removed by a blog administrator.
thamilachchi said...

விடுதலைப் புலி என்ற இயக்கம் தொடங்கு முன்பே, சுதந்திரமடையு முன்பே, சுதந்திரத்துக்குப் பின்னால், அகிம்சை வழியில் ஈழத்தமிழர்கள் தமது போராட்டங்களை நடத்திய காலங்களுக்கு முன்பே, இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லீம்கள், தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. இலங்கையில் சிங்களவர்களிடமிருந்து சலுகைகளைப் பெறுவதற்காக, தம்மை தனிப்பட்ட முஸ்லீம் இனமாக அடையாளப் படுத்தத் தொடங்கி விட்டனர். அவர்கள் ஒரு போதும் தம்மை தமிழர்களாக எண்ணி, ஈழத்தமிழர்களுடன் ஒன்று பட்டதில்லை. அவர்கள் தம்மைத் தமிழினமாக அடையாளப்படுத்துவதில்லை.

// அவர்களின் தாய் மொழி தமிழ்தான். சிங்களம் இல்லை. அது மட்டுமின்றி இவர் தமிழர் அவர் தமிழரல்ல என்று சான்றிதழ் தரும் தகுதியை யாரும் எடுத்து கொள்ள முடியாது.///

தமிழ் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்களல்ல. தமமைத் தமிழர்களாக அடையாளப்படுத்தாமல் தமிழ் பேசும் எவருமே தமிழர்களல்ல. /

100% TRUE

Mohamed Sirajudeen said...

இஸ்லாமியர்கள் தங்களை தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதை விட முஸ்லிமாக அடையாளப்படுத்திக் கொள்வார்கள் என்பது உண்மையே. ஆனால் முஸ்லிம்கள் சிங்களர்களுக்கு ஆதரவு கொடுக்க புலிகள்தான் காரணம் என்பதை உம்மால் மறுக்க முடியுமா? புலிகள் கையில் அதிகாரம் வந்தவுடன் முஸ்லிம்களை கொன்றதும் இடம்பெயரச் சொன்னதையும் எப்படி மறந்தீர் தோழரே...

Pararajasingham Balakumar said...

@kari kalan## இவர் தமிழர் அவர் தமிழர் அல்ல என்று சான்றிதழ் தரும் தகுதி யாருக்குமில்லை ##

ஆம் உண்மைதான் . ஆனால் தமிழ் பேசும் ஒருவர் அல்லது ஒரு சமூகம் தம்மை தமிழர் அல்ல என்று கூற அல்லது அடையாளப்படுத்த உரிமை உண்டல்லவா ?

இலங்கை முஸ்லிம்கள் அதைத்தான் இது வரை செய்து வருகிறார்கள் . சொல்லியும் வருகிறார்கள் .
அதத்தான் நாமும் கூறுகிறோம் .
இதற்கு சான்றிதழ் எல்லாம் தேவையில்லை.

இல்ங்கை முஸ்லிம்கள் தம்மை தமிழர் என அடையாளப்படுத்துவதில்லை . தம்மை முஸ்லிம்கள் அல்லது சோனகர் என்றே அழைத்துக்கொள்கிறார்கள் .

viyasan said...

@Mohamed Sirajudeen

///இஸ்லாமியர்கள் தங்களை தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதை விட முஸ்லிமாக அடையாளப்படுத்திக் கொள்வார்கள் என்பது உண்மையே. ///

அப்படியானால் தமிழ்நாட்டிலும் முஸ்லீம்கள் அரபுமயமாக்கபப்ட்டு தமது தமிழ்கலாச்சாரத் தொடர்பை இழந்த பின்னர், தமிழ்நாட்டு முஸ்லீம்களும் தம்மைத் முஸ்லீம்களாக மட்டும் அடையாளப்படுத்துவார்கள், இலங்கையில் ஏற்பட்ட நிலை தமிழ்நாட்டிலும் ஏற்படலாம் என்கிறீர்களா?


//ஆனால் முஸ்லிம்கள் சிங்களர்களுக்கு ஆதரவு கொடுக்க புலிகள்தான் காரணம் என்பதை உம்மால் மறுக்க முடியுமா? ///

இலங்கையின் வரலாறு தெரியாமல் பேசுவது தவறு. புலி இயக்கம் தோன்ற முன்பே, சுதந்திரத்துக்கு முன்பே தமிழைப் பேசினாலும், இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களின் முதுகில் குத்தி, சிங்களவர்களுக்குத் தான் ஆதரவளித்தார்கள். பல தமிழ் மொழி, உரிமை சம்பந்தப்பட்ட விடயங்களில் கூட, முஸ்லீம் தலைவர்கள் சிங்களவர்களுடன் இணைந்து கொண்டார்கள். உதாரணமாக, இலங்கையின் தேசியக் கொடியைக் கூட தமிழர்கள் எதிர்த்து, எல்லா மக்களுக்கும் பொதுவானதொரு தேசியக் கோடியை அமைக்குமாறு வாதாடிய போது, முஸ்லீம்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டு, சிங்களவர்களின் அடையாளமாகிய சிங்கக் கொடியை இலங்கையின் தேசியக் கொடியாக்க வாக்களித்தார்கள். அப்படியான செயல்களால் தான் முஸ்லீம்களை இலங்கையில் தொப்பி பிரட்டிகள் என அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.


//புலிகள் கையில் அதிகாரம் வந்தவுடன் முஸ்லிம்களை கொன்றதும் இடம்பெயரச் சொன்னதையும் எப்படி மறந்தீர் தோழரே///

அதற்கு வலுவான பல காரணங்கள் உண்டு, முஸ்லீம்கள் தமிழர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு, சிங்கள இராணுவத்திடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, புலிகளுக்கு எதிராக உளவு பார்த்தார்கள். உளவு பார்த்த தமிழர்களைக் கொன்று முச்சந்தியில் தூக்கிய புலிகள், அப்படி முஸ்லீம்களையும் செய்தால், அது உலகளவில் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால், அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள் என்று அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன். அதற்காக புலிகள் மன்னிப்புக் கேட்டும் விட்டார்கள். என்ன காரணம் இருந்தாலும் அது தவறான முடிவென்று ஈழத்தமிழர் ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்கள் தமிழர்களைச் செய்த படுகொலைகளுக்கும், கற்பழிப்புகளுக்கும். பல கிராமங்களில் தமிழர்களே இல்லாமல், சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து விரட்டியடித்ததற்கும் எந்த முஸ்லீமாவது இதுவரை மன்னிப்புக் கூடக் கேட்டதேயில்லையே.

viyasan said...

@Pararajasingham Balakumar

நன்றி சகோ.

ஈழத்தமிழர்களுக்கும், எமது விடுதலைப் போராட்டத்துக்கும் எதிராக, எமது சகோதர சகோதரிகளின் உயிர்த்தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில், திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

அவர்களின் நோக்கம், முதலில் ஈழத்தமிழர்களை சாதியடிப்படையில் பிரித்து, தமிழ்நாட்டிலுள்ளது போல் ஆளுக்காள் எதிரிகளாக்குவது, அதன் பின்னர் எல்லாவெல மேதானந்த தேரோ, நாளின் டி சில்வா, சிங்கள/ஆபிரிக்க கலப்பினபெண் தர்சனி ரத்தினவல்லி போன்ற சிங்கள இனவாதிகள், இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை திரித்து, கொச்சைப்படுத்தி, இலங்கையில் தமிழர்கள் போத்துக்கேயருக்குப் பின்பு தான் வந்தவர்கள், அவர்கள் இலங்கையில் தாயகம் Homeland கேட்க உரிமை கொண்டவர்களல்ல, என்ற அடிப்படையில் எழுதும் கட்டுரைகளை வாசித்து விட்டு வந்து, (உதாரணமாக: வாசிக்க: The Secret History Of Jaffna And The Vanni by Darshanie Ratnawalli.) அவற்றுக்கு விளம்பரம் கொடுப்பது போன்ற வேலைகளிலும், இலங்கை அரசின் அடிவருடி இணையத்தளங்களின் ஈழத்தமிழர் எதிர்ப்புக் கட்டுரைகளை தமது வலைப்பதிவுகளில், மறுபதிவு செய்து விளம்பரப் படுத்தவுமென்றே சில விவரங்கெட்ட ரணங்களும், வெட்டியான்களும் கிழம்பியிருக்கின்றனர் போல் தெரிகிறது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்கிறதோ யாருக்குத் தெரியும்.

தமிழ்நாட்டில் தமிழன் என்ற போர்வையில் பல தமிழெதிரி நச்சுப்பாம்புகள் திரிகின்றன என்பதை நாம் ஈழத்தமிழர்கள் மறந்து விடக் கூடாது, தமிழ்நாட்டில் வாழும் தமிழ் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்களுமல்ல, அவர்கள் எல்லோரும் தமிழர்களின் நண்பர்களுமல்ல.

viyasan said...
This comment has been removed by the author.
விவரணன் நீலவண்ணன் said...

எந்த ஒரு இலங்கை தமிழரும் புலிகள் செய்த படுகொலைகள், ஆட்கடத்தல்கள் போன்றவற்றை பேசவே தயங்கிறாங்க. அப்படி கேட்டா, உடனே நம்மளை ஒரு மாதிரி பார்த்து எதாவது சொல்லிப்புடுறாங்க, இணைய வெளியில் தான் சில விடயத்தை போட்டு உடைது பேச முடியும். ஆனா இங்கயும் உங்க ஆளுங்க வெளிப்படையா பேச மறுக்கிறாங்க, ஒருத்தர் தொடர்ந்து நான் ஒரு மலையாளி என கூறிக்கிட்டு கிடக்கிறார். அப்படி இருந்தா சந்தோஷம் தான், ஆனால் மலையாளி கிடையாது என்றாலும் கேட்க மாட்டேறாங்க, அவர் நினைக்கிறார், மலையாளிங்க எல்லம் இலங்கை தமிழரை எதிர்க்கிறாங்க, எனவும் தமிழர்கள் எல்லாம் இலங்கைத் தமிழரை ஆதரிக்கிறாங்க எனவும், ஆனா உண்மை அது கிடையாது, எல்லா ஊரிலும் எல்லா ஆளுங்களும் இருக்காங்க. அதே போல இலங்கை அரசின் ஆதரவாளன் என சொல்றாரு. நான் ஏன் சார் இலங்கை அரசை ஆதரிக்கனும், எனக்கு என்னா ஆகப் போவது, அங்கே சில பிரண்ட்ஸ் இருக்காங்க, எல்லோரையும் நெட் வழியா தான் பரிச்சயம். அவங்க சொல்றது ஒன்னு ஒன்னும் ஒரு மாதிரியான தகவலா இருக்கு. வன்னியில் இருக்க பிரண்டு புலிகளை பத்தி தப்பா சொல்றாரு, கொழும்பில் இருக்கிறவரு எல்லாம் இலங்கையில் நல்லாவே போவுது என்றாரு, சென்னையில் ஒரு யாழ்ப்பாண பிரண்ட் இருந்தாரு இப்போ லண்டன் பக்கமா போயிட்டாரு, அவர் விடுதலைப் புலிகள் பத்தி நிறைய சொல்லி இருக்காரு, ஆனா அவரு சொன்னது விடுதலைப் புலிகள் கட்டிப்பாட்டில் யார் மீதாவது டவுட்டு வந்தா போட்டு தள்ளிடுவங்க என அது உண்மையா பொய்யா கூட தெரியலை. ஆனா இலங்கை அரசு பலரையும் போட்டுத் தள்ளி இருக்கு என்பதை படிச்சி இருக்கோம்

விவரணன் நீலவண்ணன் said...

வியாசர் சார். சூப்பரா இருக்கு உங்க ஸ்டோரி, அது யார் சார் நிரஞ்சன் தம்பி, உங்க மாமாவா? அவரு என்னத்தையோ உளறுறாரு என்றால் அதுக்கு நானா பொறுப்பு. நான் பதிவுலகில் மூணு வருசமா எழுதிட்டு இருக்கேன். தொடங்கின காலம் முதல் இன்னைக்கு வரை இதே பெயரு தான் இதே ஊரு தான். யார் யாரோ ஏத்தின பொண்ணுக்கு நான் தான் தாலி கட்டணும் என சொல்வீங்க போலிருக்கே. எப்பா முடியலடா சாமி. என் மேல் என்ன சார் கோபம் உங்களுக்கு என்ன இருந்தாலும் வாங்க பேசி தீர்த்துக்கலாம், சென்னை வரும் போது சொல்லி அனுப்புங்க, உட்கார்ந்து பேசுவோம், யாரோ தம்பி தும்பி எல்லாம் சொன்னதுக்கு என் தலையில கட்டப்பார்க்கிறீர்ங்க, ஹிஹி, நல்ல காமெடி பாஸ் நீங்க. :)

நீலவண்ணன் said...

வியாசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுடன் இந்த பதிவில் நானிட்ட அனைத்து கருத்துக்களையும் நீக்கிவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன். நானே நீக்குவதற்கான எந்தவொரு வழிமுறையையும் காணவில்லை.

சில தனிப்பட்ட காரணங்களுக்காக, நீக்கிவிடுவீர்கள் என நம்புகின்றேன்.

கேள்விகளோ, மறுப்போ இருந்தால் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். vivaranan@live.com

நன்றிகள். அன்புடன் கோ.வி. நீலவண்ணன்.

viyasan said...

@விவரணன் நீலவண்ணன்
1. //நான் மலையாளியும் அல்ல, வேறு நாட்டவனும் அல்ல. வட தமிழ்நாட்டின் வந்தவாசி - காஞ்சிபுரம் பகுதியே எனது பூர்விகம். சென்னைக்காரன். ///

இது என்ன புதுக்கதை. இப்படி எத்தனை அடையாளமையா உமக்கு. அடிக்கடி முகவரியை மாற்றி கொள்ளும் பழக்கம் உண்டு போல் தெரிகிறது. பெயரையும், வலைப்பதிவையும் மாற்றினால், மற்றவர்களும் உங்களை மறந்து விடுவார்கள் என்று நினைப்பது, பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பது போன்றது. :)

உம்முடைய இதற்கு முந்திய நிரஞ்சன் தம்பி அடையாளத்தை அதற்கிடையில், ஆறு மாதத்தில், நீர் மறந்தாலும் வலைப்பதிவில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். உம்முடைய நிரஞ்சன் தம்பி அவதாரத்தின் போது, உம்முடைய பாட்டனார் மலையாளி என்று குறிப்பிட்டிருந்தீர். பாட்டன் மலையாளி என்றால், பேரன் நிச்சயமாக தமிழனாக முடியாது. :)


நிரஞ்சன் தம்பிAugust 18, 2013 at 4:21 AM

>>என் பாட்டனார் பூர்விகம் யாழ் பருத்திதுறைக்கு அருகே உள்ள அல்வாய் கிராமம், முப்பாட்டான் காலத்தில் கேரளத்து அல்வாய் (ஆலுவா) இருந்து குடியேறியோர் தான். பின்னர் தந்தையார் சென்னைக்கு குடியேறி விட்டனர், அரை நூற்றாண்டுக்கு மேல் சென்னையிலே பணி செய்து தங்கிவிட்டோம். என் பூர்விகம் ஈழம் என்றே கூறுவேன், காரணம் அங்கு இன்னம் எம் சொந்தங்கள் உண்டு. ஆனால் என்னை நான் ஓர் இந்தியனாகவே பார்க்கின்றேன். போதுமா? உங்களால் உங்களின் ஆதிமூலம் அடிமூலம் வெளிப்படையாக சொல்ல இயலுமா?! ம்ம்ம். அதற்கு தனி தைரியம் வேண்டும்.<<<

//என் பாட்டனார் பூர்விகம் யாழ் பருத்திதுறைக்கு அருகே உள்ள அல்வாய் கிராமம், முப்பாட்டான் காலத்தில் கேரளத்து அல்வாய் (ஆலுவா) இருந்து குடியேறியோர் தான்//

நிரஞ்சன் தம்பி,

சும்மா கற்பனையில் கதை விட வேண்டாம். கேரளத்திலுள்ள ஆலுவாவுக்கும் யாழ்ப்பாணத்தின் அல்வாய்க்கும் எந்த தொடர்பும் கிடையாது, அல்வாய் என்ற பெயர் யாழ்ப்பாணத்தில் அதன் நில அமைப்பைப் பொறுத்து இயற்கையாக யாழ்ப்பாணத்தில் உருவாகிய தமிழ்ப் பெயர். கேரளத்திலிருந்து “கள்ளத்தோணியில்” வந்த மலையாளிகள் இட்ட பெயரல்ல. :)))


Alvaay
அல்வாய்
Alvāy

Alai+vaay

The land facing waves
The coastal place
The beach line

Alvaay Changed form of Alai-vaay: The land facing waves, the front of land where the waves break, the line where land and sea meet, the line to enter the sea. (Alai: waves, sea; Vaay: mouth, entrance; Changkam as well as Modern Tamil); Alavaa-kara: (Alai-vaay-karai): The beach, the beach where the waves break, a geographical technical term used by the Tamil coastal folk, (Dictionary of the Technical Terms of the Coastal Folk, Muruganantham, 1990); Alavaay-kadatkarai: Beach in Batticaloa Tamil coastal dialect (Balasundaram 2002), Kadatkarai or Karai alone stands for a beach; Aluvaa-kara: The meaning is same as Alai-vaay and Alavaa-kara (Mannaar Tamil dialect, S.A. Uthayan in Loamiyaa, a Tamil novel based on life in Peasaalai. Mannaar, 2008); Alaivaay: The place name for today's Thiruchchenthoor in Tamil Nadu, which is situated on a beach that faces breaking waves (Changkam Literature, Akanaanooru 266 and Thirumurukaattuppadai 125).

viyasanAugust 18, 2013 at 6:26 AM

FACT.1: யாழ்ப்பாணத்து அல்வாய்க்கும் மலையாளிகளுக்கும், கேரள ஆலுவாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

FACT. 2: முப்பாட்டன் காலத்தில் யாராவது இலங்கைக்கு பிழைப்புத்தேடி வந்திருந்தால், அவர்கள் இலங்கையின் பூர்வீக ஈழத்தமிழர்கள் அல்ல. அவர்களின் பூர்வீகம் ஈழம் அல்ல. :)))

இந்த வலைப்பதிவுக்குப் போனால் அங்கு உங்களின் பதில்களைப் பார்த்து யார் நிரஞ்சன் தம்பி, யார் விவரணன் நீல வண்ணன் என்பதை அறியலாம்.
http://nijampage.blogspot.ca/2013/08/blog-post_16.html

viyasan said...

@நீலவண்ணன்

திரு. விவரணன் நீலவண்ணன்,

எனக்கோ அல்லது எந்த ஈழத்தமிழனுக்கும் உங்களுடன் எந்த வித தனிப்பட்ட மனத்தாபமும் கிடையாது. இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதில் கூட பெரும்பான்மை ஈழத்தமிழர்களுக்கு அக்கறை கிடையாது. ஆனால், இந்தியர்களாகிய நீங்கள், எங்களின் வரலாறு, எங்களின் மொழி, இனப்பற்று, தமிழன் என்ற அடையாளத்தை இழக்காமல் இருப்பதற்காக எங்களின் மக்கள் செய்த தியாகங்கள், சிந்திய இரத்தம் என்பவற்றை உணராமல், சில சிங்கள இனவாதிகளின் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரக் கட்டுரைகளை வாசித்து விட்டு வந்து, அவற்றின் அடிப்படையில் எமது வரலாற்றைத் திரிப்பதும், எங்களின் சகோதர, சகோதரிகளின் தியாகங்களைக் கொச்சைப்படுத்துவதையும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.

ஈழத்தமிழர்கள் உண்மையிலேயே அமைதியை விரும்பும், பெரும்பான்மை படித்தவர்களைக் கொண்ட, உலக நடப்புகளை அறிந்தவர்கள். நாங்கள் நியாயமான வாதங்களை வரவேற்கிறோம். எங்களில் எவருமே புலிகளின் எல்லா முடிவுகளும், அவர்களின் செயல்களனைத்தும் சரியானவை என்று வாதாடுவதில்லை, ஆனால், இலங்கை அரசு சார்பு பத்திரிகைகளையும் , சில அடிவருடிகளின் கட்டுரைகளையும், அல்லது இலங்கை அரசு அளித்த தகவல்களின் அடிப்படையில் உருவான புள்ளி விவரங்களையும் வைத்ததுக் கொண்டு, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை, எமது சகோதர சகோதரிகளின் உயிர்த் தியாகங்களை கொச்சைப்படுத்துவதைத் தான் நாம் எதிர்க்கிறோம். அதையும் தமிழர் அல்லாதவர்கள் செய்யும் போது எந்தவொரு உண்மையான, தன்மானமுள்ள ஈழத்தமிழனாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்படியானவர்களின் கருத்துக்களை எதிர்ப்பார்கள். அதை நீங்கள் உங்களின் அனுபவத்தில் பார்த்து விட்டீர்கள் என நம்புகிறேன்.

சுதந்திரமான, சர்வதேச விசாரணையைக் கேட்கும் ஈழத் தமிழர் எவருமே, இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்களை மட்டும், விசாரணை செய்யுமாறு கேட்கவில்லை, போரில் ஈடுபட்ட இரண்டு பிரிவினரும், புலிகளும், இலங்கை ராணுவமும் செய்த போர்க்குற்றங்களை விசாரணை செய்து, வன்னியில் நடந்த “War Without witness” இல் நடந்தவற்றை அறிய வேண்டுமென்று தான் கேட்கின்றனர். அது கூட உங்களுக்குத் தெரியவில்லை என்பது உங்களின் பதிவிலிருந்து தெரிகிறது. உங்களின் வேண்டுகோளுக்கேற்றவாறு உங்களின் பதில்களை என்னுடைய வலைப்பதிவிலிருந்து நீக்கினேன். அதற்கு உங்களின் வலைப்பதிவில் நான் தெரிவித்த கருத்தை, நான் கேட்டுக் கொள்ளாமலே நீக்கியதால், உங்களின் பதிவுகள் இங்கு மீண்டும் காணப்படுகிறது, நன்றி. :-)