Wednesday, January 22, 2014

இந்துக்களின் பசுவும் - இஸ்லாமியர்களின் ஒட்டகமும்??Picture Courtesy: vinavu
இந்துக்களுக்கு பசுவின் மீதுள்ள பரிவுக்கும், இஸ்லாமியர்கள், குறிப்பாக அரபுக்கள் ஒட்டகத்தின் மீது காண்பிக்கும் பரிவுக்குமிடையில் பெரிய வேறுபாடிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  இந்துக்கள் பசுவின் மீது  காட்டும் பரிவை மேலை நாட்டவர்கள் மட்டுமல்ல, இந்துக்களின் மத்தியில் வாழும் முஸ்லீம்களும், கிறித்தவர்களும் கூடப் புரிந்து கொள்வதில்லை. இந்தியாவில் பசுமாட்டைக் கொல்வதை அல்லது துன்புறுத்துவதை இந்துக்கள் விரும்பாததைக் குறிப்பிட்டு பலர்  ஏளனம் செய்வதை நாங்கள் நேரிலும் இணையத் தளங்களிலும் பார்த்திருக்கிறோம்.      
 உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களும் மிருகங்கள் அனைத்தும்  ஒரே தரத்தில், சமமானவையெனக் கருதுவதில்லை, ஒவ்வொரு நாட்டின் மக்களின் வரலாறு, அவர்கள் வாழ்ந்த சூழல், காலநிலை,  கலாச்சாரம், பாரம்பரிய கதைகள்  என்பவற்றைப்  பொறுத்து ஒவ்வொரு இனங்களும், வெவ்வேறு மிருகங்களை நடத்தும் விதமும் அமைந்துள்ளது என்பதை நாம் காணலாம். ரோமர்களின்  முன்னோர்களுக்கும்நாய்க்கும் உள்ள தொடர்பு சம்பந்தமான ஐதீகத்தினாலோ  என்னவோ, ஐரோப்பியர்கள் நாய்களை (ஓநாய்கள் வீட்டு மிருகங்களில்லையாதலால்) மற்ற மிருகங்களை விட அன்புடன் நடத்துகின்றனர். :)
நாயை உணவாக சிலர் உண்ணுகிறார்கள் என்ற பேச்சே, ஐரோப்பியர்களின் முகத்தைச் சுளிக்கச் செய்யும் விடயமாகும்.அதை அவர்கள் நினைத்துப் பார்க்கக் கூட விரும்புவதில்லை.  அதே போல் செவ்விந்தியர்கள் (American Natives) கழுகை புனிதமான பறவையாகவும், திமிங்கலத்தை (whale), அதன் சதையை அவர்கள் உண்டாலும் கூட  கடலின் காவலனாகவும் கருதிப் போற்றுகின்றனர். அதே போல் அரபுக்களும் எல்லா மிருகங்களையும் ஒன்றாகக் கருதுவதில்லை. உதாரணமாக இஸ்லாமிய சமூகத்தில் ஒட்டகத்தினது நிலையும்,  ஏனைய மிருகங்களின்  நிலையும் சமமானதல்ல.  
விவசாயிகளான தமிழர்களின் வாழ்க்கையிலும் மாடுகள் முக்கியமான  இடத்தை வகித்து வந்திருக்கின்றன. எமது முன்னோர்கள் மாட்டுக்கென்றே தனி ஒரு நாளை ஒதுக்கி, அதற்கும் பொங்கலிட்டுக் கெளரவிக்கும் வகையில் உயர்ந்த இடத்தை அளித்துள்ளனர். அதனால் பசு மாட்டுக்கு சிறப்பான ஒரு இடத்தைக் கொடுத்து அது அவர்களுக்குச் செய்த உதவிகளை எண்ணி அவற்றைக் கொல்வதை  அல்லது அதன் இறைச்சியை உண்ணாமல்  தவிர்க்கும் பாரம்பரியம் உண்மையில் ஆரியப் பார்ப்பனர்களாலோ அல்லது இந்து மதத்தினாலோ தமிழர்களுக்கு ஏற்பட்ட வழக்கம் என்று சொல்ல முடியாது. ஆரியர்கள் மாடு தின்றார்கள் என்று வேதங்களிலேயே உள்ளது. அதனால்  மாடு தின்ற ஆரியர்கள், மாட்டுக்கென்று ஒரு நாளை ஒதுக்கி, பொங்கல் கொண்டாடி மரியாதை அளிக்கவில்லை. அதனால் பொங்கல் உண்மையில் தமிழர் திருநாள் என்றால், பசுவதையை எதிர்ப்பதும் தமிழர்களின் கலாச்சார விழுமியங்களில் ஒன்றாகத் தானிருக்க வேண்டும் அல்லவா?
 
தமிழர்களின் வாழ்க்கையிலும், கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும், ஏன் இலக்கியங்களிலும் கூட  மாடுகள் பிரிக்க முடியாத அங்கமாக இருந்து வந்துள்ளன. அதேபோல் பாலைவன நாடோடிகளான அரபுக்களின் வரலாற்றிலும், அவர்களின் நாகரிகத்திலும்,பண்பாட்டிலும், அவர்களின் மத நூலிலும் கூட ஒட்டகங்கள் உயர்வாகப் போற்றப்படுகின்றன.  அரபுக்களுக்கு ஒட்டகத்தை உணவாக உண்பது அவர்களின் மதத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது  ஆனால்  நீர்வளமும் நிலவளமும் நிறைந்த மண்ணில்  வாழ்ந்த தமிழர்களுக்கு தனக்கு வயலில் உதவும் மாட்டையே அடித்துத் தின்ன வேண்டிய தேவையிருக்கவில்லை, ஆனால் பாலைவனத்தில் நாடோடிகளாக வாழ்ந்த அரபுக்களுக்கு, உணவுப்பற்றாக் குறையுள்ள, தண்ணியில்லாக்  காட்டில் வாழ்ந்ததனால்  அவர்களுடன் எல்லாக் காலநிலையிலும் வாழக் கூடிய ஒட்டகத்தின் இறைச்சியை உண்ணாமல் வீணாக்குவது, அவர்களுக்கு ஒரு ஆடம்பரச்(Luxury) செயலாக இருந்திருக்கும் என்பது இலகுவாக புரிந்து கொள்ளக் கூடியதொன்று.  அதனால் அவர்கள் ஒட்டகத்தின் இறைச்சியை வீணாக்காமல் உண்டார்கள், அதன் கருத்து அவர்கள் ஒட்டகத்தின் மீது பரிவு  செலுத்தவில்லை என்பதல்ல.உதாரணமாக அவுஸ்திரேலியாவில் மில்லியனுக்கும் அதிகமான கட்டாக்காலி ஒட்டகங்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டுவதைப் பார்த்து கட்டாரைச் சேர்ந்த அரபு ஒருவர் கண்கலங்குவதை அல்-ஜசீராவில் பார்த்த போது, இந்துக்கள் மாட்டின் மீது காட்டும் பரிவுக்கும், அரபுக்கள் ஒட்டகத்தில் காட்டும் பரிவுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது, எல்லாம் ஒவ்வொருவரின் கலாச்சார பாரம்பரியத்தில் தங்கியுள்ளது என்பது தான் என்னுடைய நினைவுக்கு வந்தது. 
 
 Procession of the Sacred Camel - Annual Pilgrimage to Mecca and Medina

அத்துடன் அந்த ஒட்டகங்கள் கண்மூடித்தனமாக கொடூரமாகக் கொல்லப்பட்டு, அப்படியே அழுகிப் போவதற்கு விடப்படுவதைத் தடுக்க வேண்டும் அல்லது காருண்யமான முறையில்  கொல்லப்பட வேண்டும் என்ற நோக்கில், அதைத் தடுக்க தன்னால் ஏதாவது செய்யமுடியுமா என்றறிய  அவுஸ்திரேலியாவுக்குப் போகிறார் இந்த வீடியோவிலுள்ள  கட்டார் நாட்டு அரேபியர். அவரைப் பொறுத்தவரையில் ஒட்டகத்தை விட அழகான எதுவும் உலகிலேயே  கிடையாதாம். ஏனென்றால் அரபுக் கலாச்சாரத்தில் ஒட்டகங்களுக்கு உயர்ந்த இடமளிக்கப்பட்டுள்ளது.   சரிஆ சட்டத்தின் கீழ் மனிதர்களின் குற்றங்களுக்கு கழுத்தையறுக்கும் அரபுக்களின் மனம்  கூட ஒட்டகம் என வரும்போது இளகி விடுகிறது பார்த்தீர்களா. குரானில் ஒட்டகத்துக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் இந்தக் காணொளியில் அவரே  குறிப்பிடுகிறார்.
முஸ்லீம்கள் ஒட்டகத்தையுண்பது அனுமதிக்கப்பட்டதால், ஒட்டகங்களை கொல்வதானால், அவை துன்புறுத்தப்படாமல் கொல்லப்பட வேண்டும் என்கிறார். அவர்    ஆனால் ஒரு இந்து தனது மத நூல்களில்  பசுவுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் காட்டி, பசுவைக் கொடூரமாக வெட்டக் கூடாது, குறைந்த பட்சம் இந்துக்களின் புண்ணியத் தலங்களுக்கு அண்மையிலாவது அப்படிச் செய்யாதீர்கள் என்றால், அப்படிக் கூறுபவர்களுக்கு இந்துத்துவா  பட்டம் கொடுத்து  இராமகோபாலனுடன்   கூட்டுச் சேர்த்து விடுவார்கள் சில  தமிழ்நாட்டு   முஸ்லீம்கள்.
 
அவுஸ்திரேலியாவின் கட்டாக்காலி ஒட்டகங்களை அழிவிலிருந்து காப்பாற்றுகிறது சவூதி அரேபியா
 அவுஸ்திரேலியாவில் தேடுவாரற்று அலையும்  ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஒட்டகங்கள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவதைத்  விர்க்குமுகமாகஅவற்றுக்கு வூதி அரேபியாவில் முகாம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
19 ம் நூற்றாண்டிலே ஆப்கானிஸ்தான், இந்தியா போன்றநாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புகைவண்டிப் பாதையமைக்கும் ணிக்காகழைக்கப்பட்டஒட்டகங்கள் இன்று ல்கிப் பெருகி அவுஸ்திரேலியாவின் கிராமக்களுக்குத் தொல்லை ருகின்ற‌. அவற்றின் பெருக்கத்தை ட்டுப்படுத்தமுடியாதஅவுஸ்திரேலியஅரசு. ஒட்டங்களை உலங்குவானூர்திகளில் ந்து ஒவ்வொன்றாகச் சுட்டு அழிக்கும் திட்டத்துக்காக19 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.
ஒட்டங்களைத் துரத்தித், துரத்திக் கொல்லப் போகும் செய்தி வுதி அரேபியாவிலும் ஏனையமுஸ்லீம் நாடுகளிலும் த்தஎதிர்ப்பையும், ண்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. னிதர்களைப் பொதுவிடத்தில் வைத்துக் ழுத்தையறுப்பதை பார்த்து இரசிக்கும் அரபுக்கள், அவுஸ்திரேலியாவில் ஒட்டங்கள் சுடப்படுவது மிகவும் கொடூரமானசெயல் எனக் கொந்தளித்து, இணையத்தளங்களிலும் ஒட்டத்தைக் காப்பற்காகபோராட்டத்தைத் தொடங்கியுள்ளராம். அதனால் வூதி அரேபியாவின் அரசு, அவுஸ்திரேலியாவில் தொல்லை ரும் ட்டாக் காலி ஒட்டங்களை வூதி அரேபியாவுக்கு அழைத்து வைத்து முகாம்களில் ங்கவைப்பற்குத் திட்டம் தீட்டியுள்ளது.  
 
4 comments:

நந்தவனத்தான் said...

//பாரம்பரியம் உண்மையில் ஆரியப் பார்ப்பனர்களாலோ அல்லது இந்து மதத்தினாலோ தமிழர்களுக்கு ஏற்பட்ட வழக்கம் என்று சொல்ல முடியாது. ஆரியர்கள் மாடு தின்றார்கள் என்று வேதங்களிலேயே உள்ளது. அதனால் மாடு தின்ற ஆரியர்கள், மாட்டுக்கென்று ஒரு நாளை ஒதுக்கி, பொங்கல் கொண்டாடி மரியாதை அளிக்கவில்லை. அதனால் பொங்கல் உண்மையில் தமிழர் திருநாள் என்றால், பசுவதையை எதிர்ப்பதும் தமிழர்களின் கலாச்சார விழுமியங்களில் ஒன்றாகத் தானிருக்க வேண்டும் அல்லவா? //

போகிற போக்கில் தோன்றுவதையெல்லாம் அடித்து விட்டு போக வேண்டியதுதானா? உம்ம தமிழ்த் தொல்லை தாங்க முடியல!

எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனி சில்வளை ஆயமொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர் (சிறுபாணாற்றுப்படை 173-177)

கொழுப்புஆ தின்ற கூர்ம் படை மழவர் (அகநானூறு 129)

மேலே உள்ளவை சாம்பிள்தான். மேலும் பல பழந்தமிழ் பாடல்கள் பசு மாமிசத்தை பாத்திகட்டி அரிசி சோறுடன் அடித்தவன்தான் நம்மாளு என்பதை விளக்குகின்றன! இப்போதும் சேரநாட்டுக்கு அடுத்து, பீஃப் பிரியாணி சாப்பிடுவதில் முன்னணி வகிப்பது பாண்டிய நாடும் சோழநாடும்தான்! எம்ஜியார் புண்ணியத்தில் பெரும்பாலான மாடுகள் கேரளா போய் செத்து பின் பொணமாக தமிழ்நாட்டுக்கு வந்து பிரியாணி ஆகிறது. தமிழ்நாட்டில் மாடுவெட்டும் சட்டவிரோதமான இடங்களும் உண்டு. ஆனால் இம்மாடுகள் அல்லல்பட்டு அவதிப்பட்டு, உணவு-நீரின்றி கொடூரமாக நடத்தப்பட்டு, காட்டுமிராண்டித்தனமாக தடியால் அடித்து கொல்லப்படுவது வேறு தனி சோகக் கதை!

viyasan said...

@நந்தவனத்தான்

//மேலே உள்ளவை சாம்பிள்தான். மேலும் பல பழந்தமிழ் பாடல்கள் பசு மாமிசத்தை பாத்திகட்டி அரிசி சோறுடன் அடித்தவன்தான் நம்மாளு என்பதை விளக்குகின்றன!///

ஆரியப் பார்ப்பனர்கள் சங்க காலத்திலேயே தமிழ்மண்ணில் ஊடுருவி விட்டனர் அவர்களின் பல பழக்க வழக்கங்களை தமிழர்களும் கற்றுக் கொண்டு விட்டனர் என்பதைத் தான் நீங்கள் குறிப்பட்ட அகநானூற்றுப் பாடல் மட்டுமல்ல, பல சங்க காலப் பாடல்கள் காட்டுகின்றன. :-)

suku said...

////ஆரியர்கள் மாடு தின்றார்கள் என்று வேதங்களிலேயே உள்ளது////

கோமாமிசம் உண்ணுமாறு வேதங்கள் சொல்லவில்லை
கோமாமிசம் உண்ணுமாறு வேதங்கள் சொல்லவில்லை

[பாகம் 3] – வேதங்களில் பசு மாமிசம் (கோமாம்ஸம்) கூறப்படவில்லை
குறிப்பு: இதன் ஆங்கில மூலத்தைக் காண இங்கே செல்லவும். இப்பகுதி இன்னும் சில பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வழங்கப் படுகின்றன. வெறும் மொழிபெயர்ப்பாக மட்டும் இல்லாமல் ஞானபூமி தளத்தின் அடிநாதத்தை ஒட்டியும் வேத தர்மத்தின் கோட்பாடுகளை ஒட்டியுமே இவை சித்தரிக்கப் படுகின்றன. எக்காரணம் கொண்டும் பிற மதங்களைத் தூற்றுவதோ, அவற்றைப் பின்பற்றுபவர்களை தாழ்த்துவதோ இங்கு செய்யப்படவில்லை. மறுமொழியின் வாயிலாகவும் அவை வரவேற்கப்படமாட்டா. வேதங்களின் மேன்மையையும் அவற்றை நாம் உணர்வது எத்துணை இன்றியமையாயது என்பதை மட்டுமே பறைசாற்றும் ஒரு மிகச்சிறிய முயற்சியே இஃது.
வேதங்களானது மிருக வதைக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, வெகு தீவிரமாக பசுவதையை எதிர்க்கவும் தடை செய்யவும் செய்கிறது. யஜுர் வேதம் பசுவதையை முற்றிலும் தடை செய்கிறது, பசுக்கள் மனிதருக்கு முற்றிலும் சத்துள்ள உணவைத் தருகிறதென்றும் கூறுகிறது.
——————————————————–
க்ருதம் துஹானாமதிதிம் ஜனாயாக்நே மா ஹிம்சிஹி:
யஜுர் வேதம் – 13.49
“பாதுக்காக்கப் படவேண்டிய பசுக்களையும் காளைகளையும் கொல்லாதீர்!”
——————————————————–
ஆரே கோஹா ந்ருஹா வதோ வோ அஸ்து
ரிக் வேதம் – 7.56.17
“ரிக்வேதத்தில் பசுவதை என்பது மாபாதகம் என்றும் மனிதரைக் கொல்வதற்குச் சமம் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய கொடுஞ்செயலைச் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் கூறுகிறது”
——————————————————–
சூயவஸாத் பகவதீ ஹி பூயா அதோ வயம் பக்வந்த: ஸ்யாம
அத்தி த்ர்நாமாக்ன்யே விஷ்வதாநீம் பிப ஷுத்தமுதகமாசரந்தீ
ரிக் வேதம் 1.164.40 / அதர்வ வேதம் 7.73.11 / அதர்வ வேதம் 9.10.20
அக்ன்ய பசுக்கள் – இவைகளை எக்காரணம் கொண்டும் கொல்லக்கூடாது – அவை தாங்களே தங்களை சுத்த ஜலம், பச்சைப் புற்களை உண்டு ஆரோக்கியமாக்கிக் கொள்ளும், இதன் மூலம் நாம் நற்பண்புகள், ஞானம் மற்றும் செல்வம் படைத்தவர்களாவோம்.
——————————————————–
கெள என்ற பதத்திற்கு அர்த்தமாக அக்ன்ய, அஹி, அதிதி என்ற பதங்களையும் நிகண்டு தருகிறார். யஸ்கரும் இதையே -
அக்ன்ய – கொல்லக் கூடாத ஒன்று
அஹி – வதை செய்யக் கூடாத ஒன்று
அதிதி – துண்டு துண்டாக வெட்டப் படக்கூடாத ஒன்று
பசுவின் இம்மூன்று பெயர்களும் மிருகவதை கூடாதென்பதை வலியுறுத்துகிறது. இவை வேதங்களில் மீண்டும் மீண்டும் பசுக்களைக் குறிப்பதாய் வருகிறது.
——————————————————–
அக்ன்யேயம் சா வர்ததம் மஹதே செளபாகாய
ரிக் வேதம் – 1.164.27
“பசு – அக்ன்ய – நமக்கு ஆரோக்கியமும் வளமும் கொணர்கிறது”
சுப்ரபாணாம் பவத்வக்ந்யாயா:
ரிக்வேதம் – 5.83.8
“அக்ன்ய பசுவிற்கு சுத்த ஜலம் கிடைக்க மிகச் சிறந்த வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்”
யஹ் பெளருஷேயேன க்ரவிஷா சமன்க்தே யோ அஷ்வேன பஷுநா யாதுதானா:
யோ அக்ன்யாயா பரதி க்ஷீரமாக்நே தேஷாம் ஷீர்ஷானி ஹரசாபி வ்ரிஷ்சா
ரிக் வேதம் – 10.87.16
“மனித, குதிரை அல்லது மிருகங்களின் சதைகளைப் புசிப்பவர், அக்ன்யப் பசுக்களைக் கொல்பவர் இவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.”
விமுச்யத்வமக்ஹ்ன்யா தேவயாநா அகன்மா
யஜுர் வேதம் 12.73
“அக்ன்ய பசுக்கள் மற்றும் காளைகள் உனக்கு வளங்களைக் கொணர்பவை”
மா காமனாகாமாதிதிம் வதிஷ்டா
ரிக் வேதம் 8.101.15
“பசுக்களை கொல்லாதீர். பசு ஒரு வெகுளி மற்றும் அதிதி – அதாவது துண்டு துண்டாக வெட்டப் படக்கூடாதது”
அந்தகாய கோஹாதம்
யஜுர் வேதம் – 30.18
“பசுவதை செய்பவர்களை அழி!”
யதி நோ காம் ஹன்சி யத்யஷ்வம் யதி பூருஷம்
தம் த்வா சீசேனா வித்யாமோ யதா நோ சோ அவீரஹ
அதர்வ வேதம் – 1.16.4
“யாரேனும் உங்களின் பசுக்கள், குதிரைகள் அல்லது மக்களை அழிப்பாராயின், அவர்களை ஈயக் குண்டினால் கொன்று விடுங்கள்”
வத்ஸம் ஜாதமிவாக்ன்யா
அதர்வ வேதம் – 3.30.1
பிறரைக் – கொல்லப் படக்கூடாத – ஆக்ன்யப் பசு தன் கன்றுகளை எவ்வாறு நேசிக்குமோ அவ்வாறு நேசியுங்கள்
தேனு சதனம் ரயீநாம்
அதர்வ வேதம் – 11.1.34
பசுவே அனைத்து வளங்களுக்கும் ஆதாரமாம்
ரிக்வேதத்தின் 28 ஆம் சூக்தம் அல்லது 6வது மண்டல ஸ்லோகம் அனைத்தும் பசுவின் பெருமையைப் பாடுகிறது.
ஆ காவோ அக்னமன்னுத பத்ரமக்ரந்த்சீதந்து
ஃபூயோ ஃபூயோ ரயிமிதஸ்ய வர்தயன்னபின்னே
ந தா நஷந்தி ந பதந்தி தஸ்கரோ நாசாமமித்ரோ வ்யதிரா ததர்ஷதி
காவோ பகோ காவ இந்த்ரோ மே அச்சான்
யூயம் காவோ மேதயதா
மா வ ஸ்தேநா ஈஷத மாகன்ஷ: