Saturday, January 18, 2014

சோ ராமசாமி - தமிழ்நாட்டிலேயே தமிழை எதிர்த்தவர்?
தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, தமிழைப் பேசிக் கொண்டு,  தமிழர்களின் மொழியில், தமிழர்களின் தயவில் வயிற்றை நிரப்பிக்  கொண்டே, தமிழ்நாட்டில் தமிழ் மொழி கட்டாய பாடமாக்கப்படுவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் தமிழுக்குப் பதிலாக சமஸ்கிருதத்தை தமிழர்களுக்கு கற்பிக்க வேண்டும் எனத் தான்  தமிழில் பிழைப்பு நடத்தும் துக்ளக் வார இதழில் சோ ராமசாமி எழுதினார் என, http://www.rediff.com/ க்கு அளித்த நேர்காணலில்  தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார் திரு.பழ.நெடுமாறன் அவர்கள்

அப்படியானால், எதற்காக தமிழில் வார இதழ் ஒன்றை வெளியிடுகிறீர்கள், அதற்குப் பதிலாக சமஸ்கிருதத்தில் வெளியிடலாமே என்ற கேள்விக்குப் பதிலளிக்கவில்லையாம் சோ ராமசாமிதமிழ் நாட்டிலேயே  தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பதை எதிர்த்த ஒருவரை உண்மையான தமிழன் எவனாவது போற்றிப் புகழுவானா, அல்லது இப்படி தமிழை எதிர்க்கும், ஒருபக்கச்சார்பான சமக்கிருதவாதியை நல்லவர், வல்லவர், அவரைப்போல் எவரும் வையகத்தில் இல்லை என்று உளறுவானா, என்றால்  இல்லை என்பது தான் அதற்குப் பதிலாக இருக்க முடியும்.  உண்மையான தமிழன் எவனும் அப்படி உளற மாட்டான். 

தமிழ்நாட்டுச் தமிழ்ச் சூத்திரர்கள் சிலர் தாம் சோவின் வாசகர்கள் அவரது அபிமானிகள் என்றால் தம்மைப் புத்திசாலிகள், அரசியல் மேதாவிகள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள் போல் தெரிகிறது என்பதை நினைக்கச் சிரிப்புத் தான் வருகிறது

ஐயா நெடுமாறன் அவர்கள் எம்மத்தியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்,    
சோ ராமசாமியின் தமிழ், தமிழர் எதிர்ப்பைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், அவரது இந்த நேர்காணலைப் பற்றி அவரிடமே நேரில் கேட்கலாம்.

http://www.rediff.com/news/2000/may/22int.htm

திரு. நெடுமாறனின் நேர்காணலில் ஒரு பகுதிThe Hindu and some other Brahminical newspapers have ganged up against us on Tamil Eelam and many other issues. We want Tamil as the official language in Tamil Nadu. They oppose it. We want Tamil to be taught in schools. They oppose it. We want Tamil in temples. They oppose it. They are always against Tamil. 
But they are also Tamilians. 
No, you can't consider them Tamilians. How can we consider them Tamils when they oppose the language and Tamil Nadu? In Tughlaq, Cho Ramaswamy wrote against making Tamil compulsory in schools. He wrote that Sanskrit should be taught. So I asked Cho why he was publishing his magazine in Tamil and not in Sanskrit? He kept quiet.
 வன்னிப் போரில் இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவ வேண்டும் - சோ ராமசாமிஇந்தக் காணொளியில் சோ ராமசாமி நிலைமை புரியாமல் ஈழத்
தமிழர்களுக்கு எதிராக உளறினார் என்பதை இன்று ஐக்கியநாடுகள் சபையே ஒப்புக் கொள்கிறது.


நெடுமாறனின் நேர்காணல் II
http://www.rediff.com/news/2000/nov/24inter.htm 
They oppose Tamil being taught in schools. They oppose Tamil as the medium of instruction in schools. They oppose Tamil as the official language. They oppose Tamil archana in our temples. They want only Sanskrit archana. Newspapers like The Hindu, Express etc are always against Tamil. 
They run Tamil magazines, but still don't say they are Tamils. 
When Cho Ramaswamy opposed Tamil archana in temples, I asked him: "Why are you publishing the magazine Thuglaq in Tamil and selling it to the Tamils? Why are you not publishing it in Sanskrit?" This is the attitude of the Brahmins here. They consider themselves as the true representatives of the Centre. They want to dominate us.32 comments:

K Gopaalan said...
This comment has been removed by a blog administrator.
K Gopaalan said...

தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.

கணினியின் மொழிக்கும் சமஸ்கிருதத்துக்கும் ஒற்றுமை இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. முழுக்க முழுக்க தமிழ் கற்றும், தொலைக்காட்சிகளில் தமிழ்ச்செய்தி வாசிப்பவர்கள் தமிழை சரியாக உச்சரிக்கத் திணறுவது ஏன்.

தற்போது உள்ள, உலக அளவில் ஆங்கிலம் உயர்ந்துவிட்ட, நிலையில் சமஸ்கிருதம் கற்றுக்கொள்வது மற்ற மொழிகளை உச்சரிக்க உதவும். தமிழ் உயர்ந்த்து, தமிழை மட்டும் கற்றுக் கொள் என்று உங்கள் குடும்பத்தினரிடம் கூறுவீர்களா. சொன்னாலும் அவர்கள் கேட்பார்களா.

பெரும்பாலான பார்ப்பனர்கள் எனது தாய்மொழி தமிழ் என்றுதான் ம்ற்றவர்களிடம் கூறுகிறோம். தமிழை வணங்குகிறோம். பார்ப்பனர் தமிழர் இல்லை என்று அன்று உங்கள் போன்றோர் சொன்னது நினைவில்லையா.

கே. கோபாலன்

viyasan said...

@K Gopaalan

//கணினியின் மொழிக்கும் சமஸ்கிருதத்துக்கும் ஒற்றுமை இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. //

அப்படியானால் உலகத்திலுள்ள எல்லா நாட்டு மக்களும் தமது தாய்மொழிக்குப் பதிலாக சமக்கிருதத்தைக் கற்க வேண்டுமென்கிறீர்களா? :-)


//முழுக்க முழுக்க தமிழ் கற்றும், தொலைக்காட்சிகளில் தமிழ்ச்செய்தி வாசிப்பவர்கள் தமிழை சரியாக உச்சரிக்கத் திணறுவது ஏன். ///

அதன் கருத்து தமிழ்நாட்டில் அவர்களுக்கு சரியான உச்சரிப்புடன் முறையாக தமிழ் கற்பிக்கப் படவில்லை என்பதாகும். தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவர்களில் பெரும்பாலானோர் அவர்களின் தமிழ் மொழியின் பேச்சுத் திறனுக்காகவோ அல்லது தெளிவான உச்சரிப்புகாகவோ தெரிவு செய்யப்படவில்லை, அவர்களில் வெள்ளைத் தோலுக்காக தெரிவு செய்யப்பட்டவர்கள், என நினைக்கிறேன். அவர்களை விட தெளிவாகத் தமிழ் பேசக் கூடிய கறுப்பான, அழகான எத்தனையோ தமிழ் ஆண்களையும் பெண்களையும் தமிழ்நாட்டுக் கிராமப் புறங்களில் காணலாம்.

அதை விட தமிழ்நாட்டில் தமிங்கிலிஸ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளின் கலப்பினால் மட்டுமல்ல, செய்தி வாசிப்பவர்கள் பலரும் தமிழ் பேசும் தமிழரல்லாத திராவிடர்கள், அவர்கள் வீட்டில் வேறு மொழி பேசுபவர்களாகக் கூட இருக்கலாம். அதனால் தமிழை சரியாக உச்சரிக்க தவறி விடுகிறார்கள் போலும். தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் எங்கே ஐயா உண்மையான தமிழர்களுக்கு வாய்ப்பளிக்கிறார்கள். அவர்கள் தமிழை உச்சரிப்பு பிழையுடன் பேசுவதற்கும் தமிழர்களின் தாய்மொழியை தமிழ்நாட்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கட்டாயபாடமாக்குவதற்கும் என்ன தொடர்பு? எதற்காக சோ ராமசாமியும், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும் தமிழுக்கு தமிழ்நாட்டில் முன்னுரிமை கொடுப்பதை எதிர்க்க வேண்டும். அது தமிழிலும், தமிழர்களிலும் மீதுள்ள வெறுப்பபேயல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?

viyasan said...

@K Gopaalan

//தற்போது உள்ள, உலக அளவில் ஆங்கிலம் உயர்ந்துவிட்ட, நிலையில் சமஸ்கிருதம் கற்றுக்கொள்வது மற்ற மொழிகளை உச்சரிக்க உதவும்.///

ஐரோப்பாவின் ஒவ்வொரு நாட்டிலும் வாழும் ஈழத்தமிழர்களும், அவர்களது குழந்தைகளும் பேசாத ஐரோப்பிய மொழிகளே இல்லை, அவர்களெல்லாம் சமக்கிருதம் கற்றுவிட்டா, ஐரோப்பிய மொழிகளை எல்லாம் கற்றார்கள். :-)


//தமிழ் உயர்ந்த்து, தமிழை மட்டும் கற்றுக் கொள் என்று உங்கள் குடும்பத்தினரிடம் கூறுவீர்களா. சொன்னாலும் அவர்கள் கேட்பார்களா.///

ஒவ்வொரு உண்மையான தமிழனுக்கும் தமிழ் உயர்ந்தது தான். ஆனால் தமிழ்நாட்டில் தமிழை மட்டும் கற்றுக்கொள் என்று யார் கூறினார்கள். தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் தமிழையும் கட்டாய பாடமாகக் கற்க வேண்டும் என்று தான் தமிழர்கள் கேட்டார்கள் அதை ஏன் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் ராஜகுரு சோ ராமசாமி எதிர்த்தார்? தமிழை மட்டும் கற்றுக் கொள் என்று யாரும் கூறவில்லையே. புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எவ்வளவோ சிரமத்துக்கு மத்தியில் தமது குழந்தைகளுக்கு தமிழைக் கற்பிக்கிறார்கள். நாங்கள் வாழும் நாட்டின் அல்லது மாநிலத்தின் மொழியை நாங்கள் கற்றுக் கொள்கிறோம். சோ ராமசாமி போல் தான் பேசும் மொழிக்கு, அந்த மாநிலமக்கள் முன்னுரிமை கொடுப்பதை நாங்கள் எதிர்ப்பதில்லை. அதை விட, தமிழுக்குப் பதிலாக, சமக்கிருதத்தை தமிழர்களுக்கு கற்பிக்குமாறு கூறியது ராமசாமியின் வாய்க்கொழுப்பை மட்டும் காட்டவில்லை, தமிழ்நாட்டுத் தமிழர்களின் கையாலாகாத்தனத்தையும் காட்டுகிறது.

viyasan said...

@K Gopaalan

//பெரும்பாலான பார்ப்பனர்கள் எனது தாய்மொழி தமிழ் என்றுதான் ம்ற்றவர்களிடம் கூறுகிறோம். தமிழை வணங்குகிறோம். ///

தமிழை வணங்குவதாகக் கூறிக் கொண்டே தமிழை தமிழ்நாட்டின் அரசகரும மொழியாக்குவதையும், தமிழை கட்டாய பாடமாக்குவதையும், அதுவும் தமிழ்நாட்டில் தமிழர்களின் முன்னோர்கள் கட்டிய கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதையும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் எதிர்த்தார்கள் என்று நான் சொல்லவில்லை, திரு. பழ, நெடுமாறன் வெளிப்படையாக கூறியிருக்கிறார். தமிழ் மொழிக்கு தமிழ்நாட்டில் முன்னுரிமை கொடுக்காமல் ஆபிரிக்காவிலா கொடுப்பார்கள். அதை ஏன் தமிழ்நாட்டில் வாழ்ந்து, தமிழைப் பேசும் பார்ப்பனர்கள் எதிர்த்தார்கள். அண்மையில் தில்லையில் கூட தமிழில் தேவாரம் பாடுவதை பார்ப்பனர்கள் எதிர்த்தார்கள். அப்படி தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே, தமிழைப் பேசிக் கொண்டே தமிழை எதிர்ப்பவர்களை, உலகத் தமிழர்கள் துரோகிகளாக, கூடவிருந்தே தமிழர்களுக்குக் குழிபறிப்பவர்களாக பார்ப்பதில் என்ன தவறு?

//பார்ப்பனர் தமிழர் இல்லை என்று அன்று உங்கள் போன்றோர் சொன்னது நினைவில்லையா.///

நான் மேலே இணைப்பைத் தந்திருக்கும் நேர்காணலில், தமிழ் பேசும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை என்கிறார் திரு. நெடுமாறன். நான் இதுநாள் வரை பார்ப்பனர்களும் தமிழர்கள் என்று தான் வாதாடி வந்திருக்கிறேன், ஏனென்றால் சோ ராமசாமியும், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் சம்பந்தமான பல விடயங்களில் தமிழுக்கு எதிராக இயங்கினார்கள் என்பது எனக்குத் தெரியாது.

K Gopaalan said...
This comment has been removed by a blog administrator.
K Gopaalan said...

எனக்குத்தெரிந்தவரை : கடவுள் வழிபாடுகளில் உச்சரிப்பு பெரும் பங்களிக்கிறது. சமஸ்கிருத வார்த்தைகள் அதிகமாக வயிற்றிலிருந்து வருகின்றன. ப்ப்ஹ, ஜ, த்தஹ - பெரும்பாலும் அஹ. அந்த வகையில் தமிழ்மொழியைப் பற்றிக் கூற ஒன்றும் இல்லை.

//அப்படியானால் உலகத்திலுள்ள எல்லா நாட்டு மக்களும் தமது தாய்மொழிக்குப் பதிலாக சமக்கிருதத்தைக் கற்க வேண்டுமென்கிறீர்களா?//

சீனாக்காரர்கள் ஐடி துறையில் உயராமல் இருப்பதற்கு அவர்கள் மொழி ஒரு காரணம். தமிழன் வேறு எந்தத் துறையில் உயர முற்படவேண்டும் என்று கருதுகிறீர்கள். .

//தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவர்களில் பெரும்பாலானோர் அவர்களின் தமிழ் மொழியின் பேச்சுத் திறனுக்காகவோ அல்லது தெளிவான உச்சரிப்புகாகவோ தெரிவு செய்யப்படவில்லை//

தமிழில் க்ஷ, ஞ், ள, ழ போன்ற வார்த்தைகளை உச்சரிக்க முடிந்தவர்கள் பத்திற்கு மூன்று பேர்கூட இருப்பது சந்தேகம். (பழம் என்ற வார்த்தையை உச்சரிக்காமல் எனது அண்ணன் அடிவாங்கினான்.) தமிழ் செய்தி வாசிப்பபவர்களை தொலைக்காட்சிகளில் பணியில் அமர்த்துபவர்கள் எல்லோரும் பார்ப்பனர்களா.

//ஐரோப்பாவின் ஒவ்வொரு நாட்டிலும் வாழும் ஈழத்தமிழர்களும், அவர்களது குழந்தைகளும் பேசாத ஐரோப்பிய மொழிகளே இல்லை, அவர்களெல்லாம் சமக்கிருதம் கற்றுவிட்டா, ஐரோப்பிய மொழிகளை எல்லாம் கற்றார்கள்.//

அவர்கள் மற்ற மொழிபேசும் நண்பர்களிடம் பழகிக் கற்றுக் கொள்கிறார்கள். இல்ங்கை, கண்டி, நெஞ்சு, அடி, குதி, சங்கு, பர்மா என்பதை தமிழில் படிக்க எப்படிச் சொல்லிக் கொடுப்பீர்கள். அயல் நாட்டில் போய் அவர்கள் மொழியில் தமிழ் எழுத்து இல்லை என்று விட்டு விட்டீர்களா.

//தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் தமிழையும் கட்டாய பாடமாகக் கற்க வேண்டும் என்று தான் தமிழர்கள் கேட்டார்கள்//

தமிழ் கற்றுக் கொண்டால் தமிழாசிரியர் ஆக மட்டுமே முடியும் என்று பெரியார் சொன்னதை அறிவேன். பார்ப்பனர்கள் யாரும் ஆங்கிலம் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லையே. முன்னாள் முதல்வர், க்ட்சி MP ஒருவரை "அவருக்கு இந்தி தெரிந்ததால் அவரை மத்திய் அமைச்சராக நியமித்தேன்" என்று கூறியது உஙளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள உதவியதற்கு நன்றி.

கே. கோபாலன்

வருண் said...

****சீனாக்காரர்கள் ஐடி துறையில் உயராமல் இருப்பதற்கு அவர்கள் மொழி ஒரு காரணம்.***

இந்தப் பார்ப்பானை நாயை அடிக்கிறாப்பிலே அடிச்சு விரட்டுங்கப்பா! இந்தமாரி இஷ்டத்துக்கு "தியரி" விட்டு உளறிக்கொண்டு திரியும் அடி முட்டாள் இவன்! இந்தமாரி பொய்களை சொல்லிக்கொண்டு திரியும் விஷப்பார்ப்பானுகளை பட்டப்பகல்லயே உயிரோட எரிக்கணும்!

viyaasan: Now you need to understand why E V R stood up to get rid of this kind "venom" was injected and slowly getting into our society!!

வவ்வால் said...

வியாசர்வாள்,

சோ ராமசாமி தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு ஒவ்வாத கருத்துக்களை சொல்லிக்கொண்டிருப்பார்,உங்களைப்போன்ற ஈழத்தமிழர்கள் அயல்நாட்டில் இருந்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு ஒவ்வாத கருத்துக்களை சொல்லிக்கொண்டிருப்பீர்கள், எல்லாத்தையும் தமிழர்கள் சகித்துக்கொண்டு வாழப்பழகிட்டார்கள் அவ்வ்!

-------------------------

கோவாலன்,

//கடவுள் வழிபாடுகளில் உச்சரிப்பு பெரும் பங்களிக்கிறது. சமஸ்கிருத வார்த்தைகள் அதிகமாக வயிற்றிலிருந்து வருகின்றன. ப்ப்ஹ, ஜ, த்தஹ - //

நல்ல காமெடி, வயித்துல இருந்து வாய் வழியா வருவதற்கு பெயர் "வாந்தி" என சொல்வார்கள்,அப்போ சமஸ்கிருதமும் வாந்தி தானா :-))

வயித்துல இருந்து கீழ்ப்பக்கமா காத்துப்பிரிக்கும் போது சமஸ்கிருத ஒலி எதுவும் வருதானு ஒரு ஆய்வு செய்யவும் :-))

K Gopaalan said...

வியாசன்,

வருண், வவ்வால் பதிவை வெளியிட்டு ஒன்றை நிரூபித்துவிட்டீர்கள்.

தமிழன் இதுபோன்ற தரமற்ற தமிழர்களாலேதான் அழியப்போகிறான். அப்படிப்பட்ட தமிழனாக இருக்க நான் விரும்பவில்லை.

தஙகள் பதிவிலிருந்து துயரத்துடன் விடைபெறுகிறேன்.

கே. கோபாலன்

viyasan said...

@வருண்

நன்றி. ஏன் பெரியார் இவ்வளவு காத்திரமாக பார்ப்பனர்களை எதிர்த்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பெரியாரைப் பற்றி எனக்கு இன்னும் முழுமையாகத் தெரியாது என்பதையும் நான் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

viyasan said...

@வவ்வால்

நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழ்நாட்டுக்கும், ஈழநாட்டுக்கும் உதவாத கருத்துக்களை சொல்லிக் கொண்டிருப்பீர்கள். உங்களைப் போன்ற தமிழ்நாட்டவர்களின் ஈழம் பற்றிய கருத்துக்களை, எவ்வளவு காலமாக நாங்கள் பொறுத்துக் கொண்டு வருகிறோம். நீங்களும் எங்களின் கருத்துக்களைப் பொறுத்துக் கொண்டால் என்ன, குறைந்தா போய்விடும்? :-)

viyasan said...

@K Gopaalan

//வருண், வவ்வால் பதிவை வெளியிட்டு ஒன்றை நிரூபித்துவிட்டீர்கள்.///

நீங்கள் அவர்களுக்குப் பதில் எழுதினால் அதையும் நான் வெளியிடுவேன். :)

மேலும் சமக்கிருதம் கற்றால் தமிழை பிழையில்லாமல் உச்சரிக்கலாம் என்று நீங்கள் கூறினீர்கள். நான் சில நிமிடங்களுக்கு முன்பு தான் சோ ராமசாமியின் Cho's Thuglak 43rd Anniversary full speech ஐ காணொளியில் பார்த்தேன். ஆனால் சமக்கிருதத்ததைக் கரைத்துக் குடித்த, மனுஸ்மிருதியை பலமுறை ஒப்பித்த, சோ ராமசாமி கூட தமிழைச் சரியாக உச்சரிக்கவில்லை.

தமிழில் மெல்லினம் கிடையாது என்பது அவருக்குத் தெரியாது போலிருக்கிறது. உதாரணமாக பயம் என்ற சொல்லை bayam என்றும் தெய்வத்தை theyvam என்றும் உச்சரித்தார், த வரும் தமிழ்ச்சொற்களில் எல்லாம் soft Th ஐ உச்சரித்தார். இந்தச் சொற்களை தமிழில் உச்சரிக்கும் போது soft ba, tha, ஒலியுடன் உச்சரிப்பது தவறு என்பது ஈழத்தில் பாலர்வகுப்பில் படிக்கும் பாலகனுக்குக் கூடத் தெரியும். :-)

வவ்வால் said...

வியாசர்வாள்,

//நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழ்நாட்டுக்கும், //

அதப்பத்தி தமிழ் தெரிந்த அல்லது தமிழ்நாட்டுக்காரன் யாராச்சும் சொல்லட்டும்,உமக்கு அக்கவலை வேண்டாம்.

# // ஈழநாட்டுக்கும் உதவாத கருத்துக்களை சொல்லிக் கொண்டிருப்பீர்கள். //

இது நானாக ஆரம்பிக்கலை,உம்மை போன்றோர் ஆரம்பித்தால் மட்டுமே எதிர் வினை,உம்மை போன்றோர் மூடிக்கொண்டால்,அடியேனும் மூடிக்கொள்வேன்.

ஈழநாட்டுக்கு நான் எப்படி உதவாத கருத்தை சொன்னேன் என்பதே புரியலை,அல்லது நீர் என்ன உதவுற கருத்தை சொல்லி சாதித்தீர் என்பதும் புரியலை.

நான் சொன்னதுலாம் உதவாத கருத்து என ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், உதவுறாப்போல ஒரு கருத்தும் நீர் சொல்லி ,நான் பார்த்ததேயில்லை, ஒரு வேளை ரகசியமாக எங்காவது சொல்லிட்டு இருக்கீரா அவ்வ்வ்!

#//தமிழில் மெல்லினம் கிடையாது என்பது அவருக்குத் தெரியாது போலிருக்கிறது.//

சோ.ராமாசாமிய விட பெரிய கூமாங்கா இருப்பீர் போல,

தமிழில் ,வல்லினம்,மெல்லினம்,இடையினம் என ஒலி உச்சரிப்புண்டு :-))

ங,ஞ,,ண,ந,ம,ன -மெல்லினம்.

ஞாயிறு ,ஞமலி போன்றவற்றை மெல்லினமாகத்தான் உச்சரிக்கணும்.

வருண் said...

***தஙகள் பதிவிலிருந்து துயரத்துடன் விடைபெறுகிறேன். ***

ஒரேயடியா ஏதாவது பார்ப்பான் மடத்தில் போய் உன் போதனைகளை தொடரு..

பொய்யும் புரட்டும் அயோக்கியதனுமும் நேர்மை இல்லாமையும் உன்னைப்போல் விஷப்பார்ப்பன்களால்தான் உலகில் பரவுது!

//The software industry in Mainland China (China) is the business of developing and publishing software and related services in China. The size of the industry including software and information services in 2012 was worth 2502 billion RMB (about $416 billion) according to the Ministry of Industry and Information Technology.[1]//

என்னவோ சமஸ்கிரதம் தெரிந்த பார்ப்பாந்தான் ஐ டி ல கொடிகட்டிப் பறக்கிறதா விட்டுக்கிட்டு திரிகிற?

***
viyasan: Leave him! Let him go lick cho ramasamay's behind. Who cares this idiot lives or dies! Him and his fucking opinions!

viyasan said...

@வவ்வால்

//இது நானாக ஆரம்பிக்கலை,உம்மை போன்றோர் ஆரம்பித்தால் மட்டுமே எதிர் வினை,உம்மை போன்றோர் மூடிக்கொண்டால்,அடியேனும் மூடிக்கொள்வேன்.///

எங்களுக்கே பயமுறுத்தலா? :-) எனக்கு உம்மைப் போல ஆட்களுக்கெல்லாம் பயமிருந்திருந்தால், வலைப்பதிவு என்ற ஒன்றையே ஆரம்பித்திருக்க மாட்டேன் என்பதை இன்னும் உம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை போல் தெரிகிறது.:-)


//தமிழில் ,வல்லினம்,மெல்லினம்,இடையினம் என ஒலி உச்சரிப்புண்டு :-))
ங,ஞ,,ண,ந,ம,ன -மெல்லினம்.
ஞாயிறு ,ஞமலி போன்றவற்றை மெல்லினமாகத்தான் உச்சரிக்கணும்.///

எழுதிய பிறகு தான் நினைத்தேன். எனது எழுத்துக்களில் எப்படா ஏதாவது பிழை விடுவேன் அதைச் சுட்டிக்காட்டி, தன்னைப் புத்திசாலி என்று காட்டிக் கொள்ள, கண்ணுக்குள் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு வவ்வால் ஒன்று காத்திருக்கிறது என்று. இருந்தாலும், உங்களின் மகிழ்ச்சியை ஏன் கெடுப்பான் என்ற நல்லெண்ணத்தால், நான் அதைத் திருத்தவில்லை. :-)

தமிழில் மெல்லினம், வல்லினம், இடையினம் இருகிறது என்று நானும் படித்திருக்கிறேன். நான் மெல்லினம் என்று தவறாகக் குறிப்பிட்டது தமிழில் பயம், தினம், தெய்வம் என்ற சொற்களில் ப, தி, தெ போன்ற எழுத்துக்களை Soft Sound இல் உச்சரிப்பது தவறு என்பதைத் தான். .

Bagawanjee KA said...

பதிவை விட பின்னூட்டங்கள் ரசிக்க வைக்கின்றன !

வவ்வால் said...

வியாசர்வாள்,

//எங்களுக்கே பயமுறுத்தலா? :-) எனக்கு உம்மைப் போல ஆட்களுக்கெல்லாம் பயமிருந்திருந்தால், வலைப்பதிவு என்ற ஒன்றையே ஆரம்பித்திருக்க மாட்டேன் என்பதை இன்னும் உம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை போல் தெரிகிறது.:-)//

உம்மைப்போன்றோரை எல்லாம் தனியா வேற பயமுறுத்துவாங்களா அவ்வ்!

அடடா, வலைப்பதிவு ஒன்றை ஆரம்பிப்பதை ஏதோ மாபெரும் புரட்சி செய்வதாக நினைச்சுட்டு இருக்காரே அவ்வ்!

ஹி...ஹி இலங்கையர்கள் எல்லாம் வலைப்பதிவு,இணையத்தளம் ஆரம்பித்து செய்யும் புரட்சி என்ன தெரியுமா,ஆபாச,சினிமா கிசுகிசு தகவல்களை பரப்புவது தான் அவ்வ்வ்!

இது பத்தி தனியா ஒரு கச்சேரி வருது,பாரும்.

# //உங்களின் மகிழ்ச்சியை ஏன் கெடுப்பான் என்ற நல்லெண்ணத்தால், நான் அதைத் திருத்தவில்லை. :-)//

மூக்குடையும்னு தெரிஞ்சப்பின்னும் உடைச்சிக்கிட்டாராம் அவ்வ்!

ஒரு வேளை மாசோகிஸ்ட் ஆ இருக்குமோ அவ்வ்!

# // நான் மெல்லினம் என்று தவறாகக் குறிப்பிட்டது தமிழில் பயம், தினம், தெய்வம் என்ற சொற்களில் ப, தி, தெ போன்ற எழுத்துக்களை Soft Sound இல் உச்சரிப்பது தவறு என்பதைத் தான். .//

மறுபடியும் ,தமிழ் மட்டுமல்ல எந்த மொழியும் தெரியாதுனு காட்டுறீர் அவ்வ்!

இதையும் தெரிஞ்சே தான் சொன்னேன்னு சொல்லிடுவீர் ,அதுக்கெல்லாம் கூச்சமா படப்போறீர் அவ்வ்!

பயம்,தினம், தெய்வம் எல்லாமே வடமொழி(சமஸ்கிருத மூலம்), வடமொழி மெல்லினம்(aspirated sound).அவற்றை வடமொழி மெல்லினமாக உச்சரிப்பது வடமொழி பற்றாளர்களின் விருப்பம்,சோ.ராமாசாமி வடமொழி பற்றாளர் பின்னர் எப்படி உச்சரிப்பார்?

இங்கே பேசினதை சோ.ராமசாமி முன்னர் பேசி இருந்தால் ,வாயிலவே குத்தி ,போயொழுங்கா தமிழ்ப்படிச்சுட்டு வாடா அம்பினு ,சாத்தியிருப்பார் :-))

இந்த இலங்கை தமிழர்கள் ,வடமொழி,ஆங்கிலம் கலந்து தமிழை கொலைப்பண்றதும் இல்லாமல் அதான் சரியான தமிழ்னு மன பிரம்மையில அலையிறாங்களே ,இவங்களை எல்லாம் 1000 பெரியார் வந்தாலும் திருத்தமுடியாது போல இருக்கே அவ்வ்!

James Anand said...
This comment has been removed by a blog administrator.
James Anand said...
This comment has been removed by a blog administrator.
James Anand said...

மரைகழண்ட துலுக்க வருண் , போய் மன நல மருத்துவரை பார். :)

viyasan said...

@வவ்வால்

//அடடா, வலைப்பதிவு ஒன்றை ஆரம்பிப்பதை ஏதோ மாபெரும் புரட்சி செய்வதாக நினைச்சுட்டு இருக்காரே அவ்வ்!///

நடிகர், நடிகைகளே புரட்சி செய்வதாக நினைத்து, அவர்களுக்கு புரட்சிப்பட்டம் கொடுக்கும் பாரம்பரியம் தமிழ்நாட்டில் இருப்பதால், உம்முடைய இந்த உளறலுக்கு உம்மைச் சொல்லிக் குற்றமில்லை. வலைப்பதிவை ஆரம்பித்தால் உம்மை மாதிரி சிலதுகள் வந்து பின்னூட்டம் என்ற பெயரில் தமது புத்திசாலித்தனத்தைக் காட்ட முயற்சிக்குமென, வலைப்பதிவை ஆரம்பிக்கும் போதே எனக்குத் தெரியும் என்று நான் சொன்னதைக் கூட மாபெரும் புரட்சி என நினைக்கும் நீர் என்னுடன் புத்திசாலித்தனமாக வாதாடுவதாக நினைத்துக் கொள்வதைப் பார்க்க எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது. நீர் இதே போன்ற உம்முடைய கோணங்கித்தனத்தை, அதாவது விதண்டாவாதங்களை மற்றவர்களின் வலைப்பதிவுகளிலும் காட்டியிருப்பதைப் பார்த்தேன். :-)

//ஹி...ஹி இலங்கையர்கள் எல்லாம் வலைப்பதிவு,இணையத்தளம் ஆரம்பித்து செய்யும் புரட்சி என்ன தெரியுமா,ஆபாச,சினிமா கிசுகிசு தகவல்களை பரப்புவது தான் அவ்வ்வ்!///

சினிமாவையே அரசியலாக்கி, சொந்தமாநிலத்தையே சினிமாக்காரர்களின் கைகளில் கொடுத்து விட்டு அவர்களிடம் கைகட்டி வாய் பொத்தி நிற்பவர்கள் நீங்கள். அப்படியிருக்க ஈழத்தமிழர்களின் சினிமா பைத்தியத்தை நக்கலடிப்பது உண்மையிலேயே வேடிக்கையானது தான். இலங்கைச் சினிமாப் பைத்தியங்களுக்கு, அவர்களின் தமிழ்நாட்டுச் சகோதரர்களிடமிருந்து தான் அந்தப் பைத்தியம் பிடித்திருக்கும்.//இது பத்தி தனியா ஒரு கச்சேரி வருது,பாரும்.///

இதிலென்ன ஆச்சரியம், உமுடைய தனி ஆவர்த்தனத்தை, நீராகவே தனிமேடை போட்டு தமிழ்மணத்தில் நடத்திக் கொண்டு தானிருந்தீர். இப்பொழுதெல்லாம் என்ன காரணத்தாலோ உம்முடைய மேடையை மூடி விட்டு, மற்றவர்களின் வீட்டுச் சந்தில நின்று சிந்து பாடுகிறீர். அதற்கு இவ்வளவு ஆலாபனை தேவையா? :-)

viyasan said...

@வவ்வால்

//மூக்குடையும்னு தெரிஞ்சப்பின்னும் உடைச்சிக்கிட்டாராம் அவ்வ்!///

அடப்பாவமே, என்னுடைய வலைப்பதிவில் எனது பதிவிலுள்ள பிழையை மாற்றுவதற்கு எனக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது கூட உமக்குத் தெரியவில்லையே. எப்படியோ நீர் வந்து இப்படி ஏதாவது எழுதத் தான் போகிறீர், உம்முடைய அந்த வெற்றிக் குதூகலத்தைக் கெடுக்கக் கூடாதென்று நினைத்து தான், நான் அதைத் திருத்தவில்லை. :-)//பயம்,தினம், தெய்வம் எல்லாமே வடமொழி(சமஸ்கிருத மூலம்), வடமொழி மெல்லினம்(aspirated sound).அவற்றை வடமொழி மெல்லினமாக உச்சரிப்பது வடமொழி பற்றாளர்களின் விருப்பம்,சோ.ராமாசாமி வடமொழி பற்றாளர் பின்னர் எப்படி உச்சரிப்பார்?///

பயம், தினம், தெய்வம் மட்டுமல்ல, வீடு, திட்டம், குதிரை போன்ற பல தமிழ்ச் சொற்களையும் தான் தமிழ்நாட்டில் soft sound உடன் உச்சரிக்கிறார்கள். அதை விட ஒரு சொல்லை இன்னொரு மொழியிலிருந்து இரவல் வாங்கித் தமிழாக்கம் செய்த பின்னர், அந்த மொழியின் உச்சரிப்பில் கூறுவது தவறு என்பது உமக்குத் தெரியவில்லை.

அத்துடன் தெய்வம், தினம், மட்டுமன்றி, நாங்கள் வடமொழி என்று நினைக்கும் பல சொற்கள் உண்மையில் தமிழ் வேர்களிலிருந்து வந்த தமிழ்ச் சொற்கள் என பல Etymologists நிரூபித்திருக்கிறார்கள். உதாரணமாக தெய்வம், பூஜை அல்லது பூசை என்ற சொற்களும் கூட தமிழ்ச்சொற்கள் என தேவநேயப்பாவாணர் கூட நிரூபித்திருக்கிறார். அத்துடன் புஸ்பம், நஷ்டம், இஷ்டம் போன்ற சொற்கள் கூட தமிழ் வேர்ச்சொற்களிளிலிருந்து வந்தவை. அதனால் தெய்வம் போன்ற சொற்களை இன்னும் வடமொழிச் சொல் என நினைத்து, சோ ராமசாமியின் உச்சரிப்பை நியாயப்படுத்துவது மட்டுமல்ல, நீர் தமிழில் எல்லாம் தெரிந்தவர் என்று நினைத்துக் கொண்டு, மற்றவர்களைப் ப் பார்த்து “தமிழ் மட்டுமல்ல எந்த மொழியும் தெரியாதுனு காட்டுறீர் “ எனும் உமது அதிகப்பிரசங்கித்தனத்தைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தான், மற்றவர்களை மட்டம் தட்டுவதாக நினைத்துக் கொண்டு, தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்வார்கள். :-)


//இந்த இலங்கை தமிழர்கள் ,வடமொழி,ஆங்கிலம் கலந்து தமிழை கொலைப்பண்றதும் இல்லாமல் அதான் சரியான தமிழ்னு மன பிரம்மையில அலையிறாங்களே ,இவங்களை எல்லாம் 1000 பெரியார் வந்தாலும் திருத்தமுடியாது போல இருக்கே அவ்வ்!///

நீர் வடமொழிச் சொற்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சொற்களில் பல உண்மையில் தமிழ்ச் சொற்கள் தான் என்பதை உமக்குக் காட்ட, உமது பாணியில் சொல்வதானால், “அதைப்பற்றி ஒரு தனிக்கச்சேரி வருது, பாரும்”. :-)

வவ்வால் said...

வியாசர்வாள்,

வலைப்பதிவுனு ஒன்னு ஆரம்பிச்சுட்டு சிலதுகள் தமிழோ,தமிழக வரலாறோ,இந்தியவரலாறோ தெரியாமல் பினாத்துங்கள்னு எனக்கும் தெரியும் :-))

//சினிமாவையே அரசியலாக்கி, சொந்தமாநிலத்தையே சினிமாக்காரர்களின் கைகளில் கொடுத்து விட்டு அவர்களிடம் கைகட்டி வாய் பொத்தி நிற்பவர்கள் நீங்கள். அப்படியிருக்க ஈழத்தமிழர்களின் சினிமா பைத்தியத்தை நக்கலடிப்பது உண்மையிலேயே வேடிக்கையானது தான். //

சீமான் என்ற சினிமாவே தெரியாத ,அக்மார்க் புரட்சியாளன் தான் விடிவெள்ளினு நம்பி அலையும் ஒரு மனுஷன யாராவது பார்த்தா சொல்லுங்கய்யா :-))

#//இலங்கைச் சினிமாப் பைத்தியங்களுக்கு, அவர்களின் தமிழ்நாட்டுச் சகோதரர்களிடமிருந்து தான் அந்தப் பைத்தியம் பிடித்திருக்கும். //

நல்லதோ,கெட்டதோ எதா இருந்தாலும் தமிழ்நாட்டை பார்த்து தான் காப்பியடிப்பாங்களோ அவ்வ்!

#//உமுடைய தனி ஆவர்த்தனத்தை, நீராகவே தனிமேடை போட்டு தமிழ்மணத்தில் நடத்திக் கொண்டு தானிருந்தீர். இப்பொழுதெல்லாம் என்ன காரணத்தாலோ உம்முடைய மேடையை மூடி விட்டு, மற்றவர்களின் வீட்டுச் சந்தில நின்று சிந்து பாடுகிறீர். அதற்கு இவ்வளவு ஆலாபனை தேவையா? :-)//

தமிழ்மணம் என்ற முட்டு சந்திலேயே நின்றால் உலக நடப்பெல்லாம் தெரிய வாய்ப்பிலை தான் :-))

நம்ம தனி ஆவர்த்தனம் எல்லாம் எப்பவும் போல ஓடிக்கிட்டு தான் இருக்கு,குருட்டுப்பூனைக்கு எல்லாமே இருட்டாத்தான் தெரியும் :-))

#//அடப்பாவமே, என்னுடைய வலைப்பதிவில் எனது பதிவிலுள்ள பிழையை மாற்றுவதற்கு எனக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது கூட உமக்குத் தெரியவில்லையே. எப்படியோ நீர் வந்து இப்படி ஏதாவது எழுதத் தான் போகிறீர், உம்முடைய அந்த வெற்றிக் குதூகலத்தைக் கெடுக்கக் கூடாதென்று நினைத்து தான், நான் அதைத் திருத்தவில்லை. :-)//

ரொம்ப மிரண்டு போயிட்டீர் போல ,அதுக்குள்ள திருத்தி ஒரு பின்னூட்டம் போட்டாச்சு ,அந்த பயம் இருந்தா சரி தான் அவ்வ்!

அந்த பிழையை நான் சொல்லவில்லை எனில் தெரிஞ்சா இருக்கப்போவுது அவ்வ்!


# //அதை விட ஒரு சொல்லை இன்னொரு மொழியிலிருந்து இரவல் வாங்கித் தமிழாக்கம் செய்த பின்னர், அந்த மொழியின் உச்சரிப்பில் கூறுவது தவறு என்பது உமக்குத் தெரியவில்லை. //

உமக்கு தெரியவில்லை என்பதால் மத்தவங்களுக்கு தெரியாது என சொல்லும் மனவியாதி தீர மருத்துவரை நாடவும் :-))

# //பல Etymologists நிரூபித்திருக்கிறார்கள். உதாரணமாக தெய்வம், பூஜை அல்லது பூசை என்ற சொற்களும் கூட தமிழ்ச்சொற்கள் என தேவநேயப்பாவாணர் கூட நிரூபித்திருக்கிறார். அத்துடன் புஸ்பம், நஷ்டம், இஷ்டம் போன்ற சொற்கள் கூட தமிழ் வேர்ச்சொற்களிளிலிருந்து வந்தவை. //

"ஸ்" ,"ஷ்" எனப்போட்டு எழுதிட்டு எப்படிய்யா இப்படிலாம் சொல்லிக்க மனம் துணியுது.

நீராக கதைய விட்டுக்க வேண்டியது தான், ஆனால் எந்த தமிழ்ப்பல்கலையும் அதனை ஏற்காது அவ்வ்!

#//தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தான், மற்றவர்களை மட்டம் தட்டுவதாக நினைத்துக் கொண்டு, தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்வார்கள். :-)
//

இது உண்மையாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்,ஏன்னா இலங்கையை பத்திக்கூட கவலைப்படாமல்,இந்தியா,தமிழ்நாடுனு மட்டம் தட்டுவதாக நினைத்துக்கொண்டு புலம்பி பதிவ போடும் போதே தெரியுது, உமக்கு "தாழ்வுமனப்பான்மை" அதிகமாகிடுச்சுனு :-))

இலங்கையில "பால்மா" தட்டுப்பாடுனு அவனவன் அலையிறானாம்,அதைப்பதி கூட எழுதாம, தமிழ்நாட்டுல எந்த கோயிலல ரெக்கார்டு டான்ஸ் நடக்குதுனு அலையிறீர்,முதலில் உம்ம கதைய பாருய்யா,அதுவே நாறிட்டு இருக்கு ,இங்கே தமிழ்நாட்டில நடக்குறத பத்தி கவலைப்படுறாராம் அவ்வ்!

viyasan said...

@வவ்வால்

//வலைப்பதிவுனு ஒன்னு ஆரம்பிச்சுட்டு சிலதுகள் தமிழோ,தமிழக வரலாறோ,இந்தியவரலாறோ தெரியாமல் பினாத்துங்கள்னு எனக்கும் தெரியும் :-))///

ஓமோம் நீங்கள் சொல்வது சரி, ஒரு குருட்டுக் கோட்டான் தனது வலைப்பதிவில் கச்சதீவைப் பற்றி யாரோ எழுதியதைப் படித்துப் பார்க்காமலே அப்படியே கொப்பியடித்து போட்ட பதிவு தான் எனக்கு இப்ப நினைவுக்கு வருகிறது. :-)


//சீமான் என்ற சினிமாவே தெரியாத ,அக்மார்க் புரட்சியாளன் தான் விடிவெள்ளினு நம்பி அலையும் ஒரு மனுஷன யாராவது பார்த்தா சொல்லுங்கய்யா ///

விடிவெள்ளியா? தமிழ்நாட்டில் அரசியல்கட்சி நடத்துபவர்களை விடிவெள்ளி என்று நினைத்துக் கொள்வது தான் வழக்கம் போலும். சீமானுக்கு என்னுடைய ஆதரவுக்குக் காரணம், தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆள நினைப்பதில் தவறில்லை என்பதால் தான். தெலுங்கன் விஜயகாந்த் முதலமைச்சராக கனவு காணும் போது தமிழன் சீமான் கனவு காண்பதில் என்ன தவறு,///நல்லதோ,கெட்டதோ எதா இருந்தாலும் தமிழ்நாட்டை பார்த்து தான் காப்பியடிப்பாங்களோ அவ்வ்!///

இனம், இனத்தோடு தான் சேரும், அப்படித் தான் நடந்து கொள்ளும். அது பிறப்பினால் வந்த தோசம்.


//தமிழ்மணம் என்ற முட்டு சந்திலேயே நின்றால் உலக நடப்பெல்லாம் தெரிய வாய்ப்பிலை தான் :///

இப்பொழுது தான் புரிகிறது, நீங்கள் ஏன் உங்களின் வலைப்பதிவை மூடிவிட்டு, மற்றவர்களின் வலைப்பதிவுகளில் பின்னூட்டங்கள் வழியாக உங்களின் புத்திசாலித்தனத்தைக் காட்ட முயல்கிறீர்கள் என்பது. எழுத்துலகில் ஒரு படி முன்னே போவது என்றால் அது தான் போலிருக்கிறது. எப்படியோ முன்னேறினால் சரி. ‘பாட்டெழுதிப் பேர் வாங்கிறவர்களும் இருக்கிறார்கள், குற்றம் கண்டு பிடித்துப் பேர்வாங்க நினைக்கிறவர்களும் இருக்கிறார்கள்’ என்று சும்மாவா சொன்னார் நாகேஷ். :-)

//நம்ம தனி ஆவர்த்தனம் எல்லாம் எப்பவும் போல ஓடிக்கிட்டு தான் இருக்கு,குருட்டுப்பூனைக்கு எல்லாமே இருட்டாத்தான் தெரியும் :-))///

உங்களின் தனி ஆவர்த்தனம் அடுத்தவன் வலைப்பதிவில் நடக்கிறது, இல்லையா? :-)//ரொம்ப மிரண்டு போயிட்டீர் போல ,அதுக்குள்ள திருத்தி ஒரு பின்னூட்டம் போட்டாச்சு ,அந்த பயம் இருந்தா சரி தான் அவ்வ்!///

அப்படியானால், உமக்குப் பதிலளிக்காமல் இருக்கச் சொல்கிறீரா? :-)

//அந்த பிழையை நான் சொல்லவில்லை எனில் தெரிஞ்சா இருக்கப்போவுது ///

சத்தியமா, பதிலை பதிவு செய்து, வாசித்துப் பார்த்த சில வினாடிகளிலேயே எனக்குத் தெரிந்து விட்டது. ஆனால் திருத்தவில்லை. எல்லாம் உங்கள் மீதுள்ள நட்பினால் தான். பிழையைக் கண்டு பிடிப்பதால் உங்களுக்கு ஏற்படும் திருப்தியைக் கெடுக்க நான் விரும்பவில்லை. :-)//உமக்கு தெரியவில்லை என்பதால் மத்தவங்களுக்கு தெரியாது என சொல்லும் மனவியாதி தீர மருத்துவரை நாடவும் :-))///

அப்படியானால், அந்த தவறை நியாயப்படுத்தி முதலில் பதிலெழுதியது ஏன்?


//"ஸ்" ,"ஷ்" எனப்போட்டு எழுதிட்டு எப்படிய்யா இப்படிலாம் சொல்லிக்க மனம் துணியுது.///

அது கூடவா புரியவில்லை. புஸ்பம், இஸ்டம், குஸ்டம் எல்லாம் தமிழில் அவ்வாறு இக்காலத்தில் உச்சரிக்கப்பட்டு, அது வடமொழிச் சொல்லாக பலர் கருதினாலும் கூட அவை தமிழ்வேர்ச் சொற்களிலிருந்து வந்தவை என்பது தான் எனது கருத்தாகும்.

viyasan said...

@வவ்வால்

//நீராக கதைய விட்டுக்க வேண்டியது தான், ஆனால் எந்த தமிழ்ப்பல்கலையும் அதனை ஏற்காது அவ்வ்!///

பல தமிழ்ப்பேராசிரியர்கள் தான் வடமொழிச் சொற்கள் என நாம் கருதும் பல சொற்கள், தமிழிலிருந்து வடமொழியால் இரவல் வாங்கப்பட்டவை என்பதை தமது கட்டுரைகள் மூலம் நிரூபித்துள்ளனர். உதாரணமாக பூசை என்பது வடமொழியால் இரவல் வாங்கப்பட்ட தமிழ்ச்சொல் என்பதை ஒரு மேலைநாட்டு மொழி ஆராய்ச்சியாளர் தனது புத்தகம் ஒன்றில் கூறியிருப்பதை, நான் பார்த்தேன். அதைத் தேடி எடுத்ததும், உங்களுக்காக இங்கே பதிவு செய்கிறேன். இன்றும் தமிழ்நாட்டில் பத்திரிகைத் துறையிலும், பல்கலைக்கழகங்களிலும், சமக்கிருதவாதிகளின் ஆதிக்கம் நிலவுவதால் தான், வடமொழி தமிழிலிருந்து பெருமளவில் சொற்களை இரவல் வாங்கியது என்பதைப் பலரும் பேசத் தயங்குகிறார்கள்.


//,ஏன்னா இலங்கையை பத்திக்கூட கவலைப்படாமல்,இந்தியா,தமிழ்நாடுனு மட்டம் தட்டுவதாக நினைத்துக்கொண்டு புலம்பி பதிவ போடும் போதே தெரியுது, உமக்கு "தாழ்வுமனப்பான்மை" அதிகமாகிடுச்சுனு :-))///

எப்படியோ உமக்கு தாழ்வுமனப்பான்மை என்றால் என்னவென்று விளங்கினால் சாரி. நிச்சயமாக, இனிமேலாவது மற்றவர்களை மட்டம் தட்டுவதாக நினைத்துக் கொண்டு, உம்மை நீரே தாழ்த்திக் கொள்ள மாட்டீர்கள் என்று மட்டும் எனக்குத் தெரிகிறது.


//இலங்கையில "பால்மா" தட்டுப்பாடுனு அவனவன் அலையிறானாம்,அதைப்பதி கூட எழுதாம, தமிழ்நாட்டுல எந்த கோயிலல ரெக்கார்டு டான்ஸ் நடக்குதுனு அலையிறீர்///

நான் நேரில பார்த்ததை எழுதுகிறேன், ஆனால் நீர் என்னடாவென்றால் இலங்கையில் பால்மா தட்டுப்பாடென்று கனவு கண்டதை எழுதுறீர். அது தானையா உமக்கும், எனக்குமுள்ள வேறுபாடு. :-)

வவ்வால் said...

வியாசர்வாள்,

காப்பி அடிப்பதில் உம்ம அளவுக்கு என திறமை வராது தான் :))

#//சீமானுக்கு என்னுடைய ஆதரவுக்குக் காரணம், தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆள நினைப்பதில் தவறில்லை என்பதால் தான். //

சினிமாக்காரங்க மேல பைத்தியமா அலையிறீர்னு ஒத்துக்கொண்டதுக்கு நன்றி!

அடுத்து டொக்டர் விசய் தான் தமிழக முதல்வராக வரணும்னு நீர் காமெடி செய்வதையும் பார்க்கத்தானே போறேன் அவ்வ்!

#//உங்களின் தனி ஆவர்த்தனம் அடுத்தவன் வலைப்பதிவில் நடக்கிறது, இல்லையா? :-)//

நல்ல கண்மருத்துவரை சந்திக்கவும்!!!

#//அது கூடவா புரியவில்லை. புஸ்பம், இஸ்டம், குஸ்டம் எல்லாம் தமிழில் அவ்வாறு இக்காலத்தில் உச்சரிக்கப்பட்டு, அது வடமொழிச் சொல்லாக பலர் கருதினாலும் கூட அவை தமிழ்வேர்ச் சொற்களிலிருந்து வந்தவை என்பது தான் எனது கருத்தாகும்.//

இனிமே உமது கருத்தைக்கேட்டுத்தான் தமிழகராதியே போடப்போறாங்களாம் அவ்வ்!

# நாடற்ற நிலையால் உண்டான தாழ்வு மனப்பான்மையால் தான் தமிழ்நாட்டையும்,இந்தியாவையும் மட்டப்படுத்தி பேசிவந்தீரா?

எப்படியோ உமக்கு தாழ்வுமனப்பான்மை என்றால் என்னவென்று விளங்கினால் சரி. நிச்சயமாக, இனிமேலாவது தமிழ்நாட்டையும்,இந்தியாவையும் மட்டம் தட்டுவதாக நினைத்துக் கொண்டு, உம்மை நீரே தாழ்த்திக் கொள்ள மாட்டீர்கள் என்று மட்டும் எனக்குத் தெரிகிறது.

#//நான் நேரில பார்த்ததை எழுதுகிறேன், ஆனால் நீர் என்னடாவென்றால் இலங்கையில் பால்மா தட்டுப்பாடென்று கனவு கண்டதை எழுதுறீர். அது தானையா உமக்கும், எனக்குமுள்ள வேறுபாடு. :-)//

சொந்த நாட்டில என்ன நடக்குதுனு கவலையில்லாமல் "கவர்ச்சி நடனம்" பார்க்க ஊர் ஊரா சுத்தி வரீர் போல:))

இக்கடச்சூடு,

"இலங்கையில் பால்மா விலை அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் வெற்றியளிக்கவில்லை. கடந்த பல வாரங்களாகவே பால்மாவுக்கு உள்ளூர் சந்தைகயில் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது."

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/01/140118_milkpowdersrianka.shtml

viyasan said...

@வவ்வால்

வௌவால் என்று பெயர் வைத்ததை விட பசை, கோந்து அப்படியான கருத்தில் ஏதாவது பெயர் வைத்திருக்கலாம், உமது விதண்டாவாதத்துக்குப் பதிலுக்குப் பதில் எழுதுவதற்கு நான் நிரந்தரமாக வலைப்பதிவில் தானிருக்க வேண்டும். :-)


//அடுத்து டொக்டர் விசய் தான் தமிழக முதல்வராக வரணும்னு நீர் காமெடி செய்வதையும் பார்க்கத்தானே போறேன் அவ்வ்!//

டொக்டர் விசய் தமிழன் இல்லை, அவரது தாய் ஒரு மலையாளி. :-)


///நல்ல கண்மருத்துவரை சந்திக்கவும்!!!///

எங்கேயோ சந்தில ஒழிச்சு நின்று கொண்டு சிந்து பாடுகிறீர்கள் போலிருக்கிறது, அதனால் தான் எனக்குத் தெரியவில்லை. :-)


//இனிமே உமது கருத்தைக்கேட்டுத்தான் தமிழகராதியே போடப்போறாங்களாம்//

தேவநேயப் பாவானரைப் பற்றிக் கூடவா நீங்கள் கேள்விப்பட்டதில்லை, நீங்கள் தமிழில் பெரிய பண்டிதராக இருப்பீர்கள் என நினைத்தேன்.


//# நாடற்ற நிலையால் உண்டான தாழ்வு மனப்பான்மையால் தான் தமிழ்நாட்டையும்,இந்தியாவையும் மட்டப்படுத்தி பேசிவந்தீரா?///

தமிழ்நாடு ஒரு நாடல்ல. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஒரு நாடிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், எங்களுக்கும் தான் நாடிருக்கிறது. நாங்கள் கேட்பதெல்லாம் தமிழர்களின் கொடியுடன், தமிழை உத்தியோக மொழியாகக் கொண்ட, தமிழர்கள் பிரதமராக இருக்கும், ஆளுமையுள்ளவர்களாக இருக்கும், சுயநிர்ணய உரிமையுள்ள, தமிழ் இராணுவம், கடற்படை,வான்படைகளைக் கொண்ட தமிழர்களுக்கென்றொரு நாடு,

இலங்கையில் தமிழ் உத்தியோக மொழியாக உள்ளது, இந்தியாவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் தமிழ் உத்தியோக மொழியல்ல. தமிழ்நாட்டிலேயே கோயில்களில் தமிழில் பாட முடியாது, இலங்கையில் எந்தப் பகுதியிலுள்ள கோயில்களிலும் தமிழில் பாடலாம், ஆடலாம், கூப்பாடு போடலாம். யாருக்கும் அதைத் தடுக்க துணிச்சல் வராது. இலங்கைப் பாராளுமன்றத்திலும், நீதிமன்றங்களிலும் தமிழில் பேசலாம். இலங்கை அரசின் எல்லா அறிக்கைகளிலும் பத்திரங்களிலும், காசிலும், கடவுச்சீட்டிலும் தமிழும் இருக்கிறது. எந்த அரச அலுவலகத்திலும் தமிழில் தொடர்பு கொள்ளலாம்.. அதன் அடிப்படையில் யார் உண்மையிலேயே நாடற்றவர்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவும். :-)


//"இலங்கையில் பால்மா விலை அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் வெற்றியளிக்கவில்லை. கடந்த பல வாரங்களாகவே பால்மாவுக்கு உள்ளூர் சந்தைகயில் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது."//

பால்மாவுக்குத் தட்டுப்பாடு இருப்பதற்கும், பால்மா கடைகளில் நிறைந்திருந்தும் வாங்க முடியாத நிலையில் இருப்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதைத் தெரியாது விட்டால் தமிழ்நாட்டில் கேட்டுப் பாரும். எங்களின் தாய்நாட்டின் 2500 வரலாற்றிலே எந்தக் குழந்தையும் பசியால் இறந்ததில்லை. எந்த இலங்கையனும் உண்ண உணவில்லை என்று, பஞ்சத்தால் இறந்ததில்லை, பஞ்சத்தால் நாட்டை விட்டு வெளியேறியதுமில்லை. எதைப் புதைத்தாலும் தோப்பாய் முளைக்கும் வளமான பூமி எங்களின் ஈழமண்.

Paramasivam said...

திருநெல்வேலிக்கே அல்வாவா என இங்கு ஒரு பழமொழி உள்ளது. அது போல், இருக்கிறது, நீங்கள் எங்களுக்கு தமிழின் அருமை, பெருமை மற்றும் உச்சரிப்பு பற்றி கூறுவது. அதிலும் பேரா.வவ்வால் அவர்கள் கருத்தில் குற்றம் காண்பதும். மிகப் பழமையான தமிழ் மொழி இன்னும் உயிர்ப்புடன் இருப்பது தமிழர்களால் தான். இதில் நீயா நானா என சூடான விவாதம் வருந்தத்தக்கது

எழுத்தாளர் புதின் said...

"கணினியின் மொழிக்கும் சமஸ்கிருதத்துக்கும் ஒற்றுமை இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?"

இப்படித்தான், கே. கோபாலனைப் போல சிலர் வதந்தியைப் பரப்பிக் கொண்டு அலைகிறார்கள். ஏதோ, ஆங்கிலத்தை விட, கணினிக்கு சமஸ்கிருதமே சிறந்த மொழி என்று!

இவர்களாகவே இதுபோன்ற கட்டுக் கதைகளை உருவாக்கிப் பரப்புவதில் கைதேர்ந்தவர்கள். பாவம், இந்தப் புளுகு, பில்கேட்சின் காதில் விழுந்தால், தற்கொலை செய்து கொள்வார்.

எழுத்தாளர் புதின் said...

"கணினியின் மொழிக்கும் சமஸ்கிருதத்துக்கும் ஒற்றுமை இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?"

இப்படித்தான், கே. கோபாலனைப் போல சிலர் வதந்தியைப் பரப்பிக் கொண்டு அலைகிறார்கள். ஏதோ, ஆங்கிலத்தை விட, கணினிக்கு சமஸ்கிருதமே சிறந்த மொழி என்று!

இவர்களாகவே இதுபோன்ற கட்டுக் கதைகளை உருவாக்கிப் பரப்புவதில் கைதேர்ந்தவர்கள். பாவம், இந்தப் புளுகு, பில்கேட்சின் காதில் விழுந்தால், தற்கொலை செய்து கொள்வார்.

Muthu Nilavan said...

இதுகுறித்து நானும் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் படிக்க வேண்டுகிறேன் - http://valarumkavithai.blogspot.com/2015/02/cha-sa.html
இதில் துக்ளக் சோ பற்றியும் ஒரு பத்தி எழுதியிருக்கிறேன் பார்க்க -
துக்ளக் ஆசிரியர் சோ வுக்கு, நல்ல தமிழும் பிடிக்காது, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியையும் பிடிக்காது. கலைஞர் முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்த கே.கே.ஷா. அவர்களை கலைஞர் எப்படி வரவேற்பாராம் தெரியுமா? சோ சொல்கிறார். (கலைஞரின் கரகரத்த குரலில் படிக்க வேண்டுமாம்) “ஷா என்பது வடமொழி, எனவே, தூய தமிழில், வந்திருக்கும் ஆளுநரைச் செந்தமிழில் வரவேற்கிறேன் சாவே வருக! கே.கே.சாவே வருக“ எப்புடீ? அதுதான் சோ பெருமகனார்!