Tuesday, January 14, 2014

தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை!


2014 ம் ஆண்டில் பார்க்க வேண்டிய உலகிலுள்ள 52 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள நியூயோர்க் ரைம்ஸ் (New York Times), அதில் சென்னையையும் ஒன்றாக அறிவித்துள்ளது. சென்னையிலும், தமிழ்நாட்டிலும் எவ்வளவோ பார்க்க வேண்டிய கலை கலாச்சார, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் கோயில்களும் இருந்தாலும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் சுகாதார அடிப்படையில் சென்னையைப் பற்றி ஏதாவது குறைபாட்டைக் கூறுவதை நாங்கள் எல்லோரும் கேட்டிருக்கிறோம் அதற்கு மாறாக, இன்று, சென்னை நகரம், வருகை செய்து பார்க்க வேண்டிய உலக  நகரங்களில் ஒன்றாகக் குறிப்பிடுமளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதையிட்டு உலகத்தமிழர்கள் அனைவரும், குறிப்பாக சென்னைவாசிகள் பெருமிதம் அடையலாம்.
இந்தப் பொங்கல் திருநாள் தமிழ்நாட்டைப்  பற்றிய நல்ல செய்தி உலகப்புகழ் பெற்ற பத்திரிகைகளில் ஒன்றாகிய New York Times இல் வெளிவருவதுடன் தொடங்குவது மகிழ்ச்சியைத் தரும் விடயமாகும். 


தாய்த்தமிழகத்திலும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.26. Chennai, Tamil Nadu 

A cultural capital springs to life.  
Chennai, in the state of Tamil Nadu (and formerly known as Madras), was long considered the gateway to popular South Indian tourist destinations like Kerala but was overlooked as an attraction itself. It is, however, a national cultural capital and home to several dance and music schools like Kalakshetra for dance and the Music Academy for Carnatic South Indian music, which both regularly hold performances around town. There are also historic sites aplenty, including the Kapaleeswarar Temple, built in the name of the Hindu god Shiva. Fresh buzz makes this city especially enticing: Several major hotels including the Park Hyatt have recently opened, and there is a slew of new and trendy clubs, boutiques and restaurants, including Ottimo for excellent pizzas.


6 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனதினிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.

viyasan said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு

உங்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள். உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோ.

Anonymous said...

சென்னை முப்பது ஆண்டுகளுக்கு முன் பசுமையும் வசதியும் நிறைந்த பட்டணமாய் இருந்தது. ஆனால் திட்டமிடாத வளர்ச்சியும், அதீத மக்கள் குடியேற்றமும் அதன் தரத்தைக் குலைத்தது. ஆனால் கிழக்கு கடற்கரைச் சாலை மாமல்லபுரம் வரை என்றும் இனிய பகுதி தான். பெசன்ட நகர் தொடங்கி மக்கள் நெருக்கடி குறைவும், விரிந்த கடற்கரை, பசுங்காடுகளும் அழகு தான். அவற்றை நல்ல முறையில் திட்டமிட்டால் மேலும் உலகத் தரத்துக்கு உயரும். குறிப்பாக மாமல்லபுரத்து ரதக் கோவில்கள், சிற்பங்களை காணவே லட்சம் லட்சம் பயணிகள் சென்னைக்கு வருகின்றனர். ஒருமுறை அங்கு சென்று வந்தாலே, மனம் அமைதியடையும், :).

தங்களுக்கும் என் மனமார்ந்த இன்ப பொங்கல் வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நமது விடயங்களில் அமெரிக்காவுக்கு மெத்தனம் அதிகம், இது காலம் கடந்த கணிப்பு, வீரமா முனிவர் அன்று இந்தியாவின் பல மாநிலங்களைக் கடந்தே, தமிழகத்தைத் தேர்வு செய்தவர்.அன்று தலைநகரில்லாத தமிழகமாகவா? இருந்திருக்கும்
இங்கு ஒரு பிரான்சியர் 25 வருடங்களுக்கு முன் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று வந்தவர், என்னை கட்டாயம் தமிழகம் அதுவும் மட்ராஸ் (சென்னை) செல்லத் தவற வேண்டாமென அறிவுறுதினார்.
தமிழராகப் பெருமைப்படலாம். விவரணன் சொல்வது போல் அரசு சற்று அதிக கவனம் செலுத்தினால், சுற்றுலாவிலேயே வளம் பெறலாம்.

viyasan said...

@யோகன் பாரிஸ்(Johan-Paris)

நன்றி. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

viyasan said...

@விவரணன் நீலவண்ணன்

நன்றி. உங்களுக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.