Monday, January 13, 2014

அமெரிக்கா *காணாதே போதியோ பூம்பாவாய்!!
செல்வி. தேவயானி கோப்ரகடே, நியூயோர்க்கின் இந்திய துணைத்தூதர் அமரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டார், அவர் அமெரிக்காவில் 'persona non grata' வாக அதாவது அமெரிக்காவின் வரவேற்பை இழந்த அல்லது அமெரிக்காவில் காலடி வைக்கும் தகுதியை இழந்தவரானார். 

அமெரிக்காவில் அவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் விசாரிக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர் மீண்டும் அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைக்க முடியும். அமெரிக்காவுக்கான நுழைவு அனுமதிக்கான விண்ணப்ப பத்திரத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இந்தியாவின் முன்னாள் துணைத்தூதராக நியூயோர்க்கில் பணிபுரிந்த செல்வி, கொப்ரகடே, தனது தாய்நாடான இந்தியாவை நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சென்றடைந்தார்.

இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்க, செல்வி. கொப்ரகடேவுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் இராஜதந்திரிகளுக்குரிய, நாட்டின் தண்டனைகளிலிருந்து விதிவிலக்கு பெறும் தகைமையை அளித்த அமெரிக்கா, அவரை நாட்டை விட்டு வெளியேற்றியது, அவர் அமெரிக்காவின் வரவேற்பை இழந்த அல்லது அமெரிக்காவின் மண்ணை மிதிக்கும் தகுதியற்றவராகிறார். அவருக்கு மீண்டும் அமெரிக்க  விசா வழங்கப்படுவதைத் தடை செய்யும் வகையில் அவரது பெயர் குடிவரவு விடயங்களில் குற்றமிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கும் பொறிமுறையின் (visa and immigration lookout systems) கீழ் பதியப்படும். முன்னாள் இந்திய துணைத்தூதரின் கணவர், நியூ யோர்க்கில் பிறந்த இந்திய வம்சாவளி அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் * காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! மைபூசிய ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூசவிழாவைக் காணாது செல்வது முறையோ? :-)

6 comments:

நந்தவனத்தான் said...

அம்மணி இந்தியா வந்து சேர்ந்து ஒருநாள் கழித்ததும் "என் குடும்பத்தோட எப்போ சேரப்போறனோ, எம் புள்ளைக அமெரிக்காவுலதான் படிப்பேன்னு அடம்புடிச்சா என்ன பண்ணுவேன்ன்னு" ஒப்பாரி வைக்க, இந்திய பத்திரிக்கைகளில் வாசகர்கள் கடுப்பாகிவிட்டிருந்தார்கள். நான் படித்த பின்னூட்டங்களில் ஒன்றுகூட அம்மணிக்கு ஆதரவாக இல்லை. இந்திய அரசு முயற்சி செய்து வழக்கை அமுக்கினால்,தனது ஊழல் பெருச்சாளி அப்பன் நியூயார்க் இந்திய தூதரகத்தில் நிரந்தர பதவி வாங்கி தருவான், நிரந்தரமாக சென்று குடியேறிவிடலாம் என எதிர்பார்க்கிறார் போல இருக்கிறது. இத்தனை இந்திய ஆதரவும் அவரது பதவிக்குத்தானே ஒழிய ஊழலில் கொழுத்த அவருக்கு தனிப்பட்ட முறையில் அல்ல என்பதை விரைவில் உணர்ந்தால் நலம்.

மேலும் தாங்க குறிப்பிட்டது போல அம்மணியின் புருசன் இந்தியாவில் பிறந்த அமெரிக்கர் அல்ல, அவர் அமெரிக்காவில பிறந்த அமெரிக்கர்! - இந்திய வம்சாவழி.அவரது புள்ளைக இரண்டும் அமெரிக்க குடிமக்கள்தான். ஆகவே அமெரிக்கா வழக்கை ஊத்தி மூடமாட்டோம் என சொல்லி நல்ல ஆப்பாக அடித்துவிட்டிருக்கிறது.

ஆனால் ஒன்று பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து அம்மணிக்கும் அவரது வேலைகார அம்மா சங்கீதாவுக்கும் பாரதரத்னா மாதிரி பெரிய அவார்டு தரவேண்டும். சீனா பாகிஸ்தான் நாட்டு உளவு நிறுவனங்கள் இணைந்து பல வருடமாக செய்து முடிக்கமுடியாத வேலையை - இந்திய அமெரிக்க உறவுக்கு ஆப்பு வைப்பதை- அசால்ட்டாக செய்து முடித்திருக்கிறார்கள் இந்த பெண்மணிகள். இவுங்களை மாதிரி நாட்டுக்கு ரெண்டுபேரு இருந்தா போதும்... விளங்கீரும்!

viyasan said...

@நந்தவனத்தான்

//மேலும் தாங்க குறிப்பிட்டது போல அம்மணியின் புருசன் இந்தியாவில் பிறந்த அமெரிக்கர் அல்ல, அவர் அமெரிக்காவில பிறந்த அமெரிக்கர்!.///

நீங்கள் சொல்வது சரி, Times of India விலும் அப்படித்தான் உள்ளது. திருத்தம் செய்யப்பட்டு விட்டது, (Khobragade is married to a New York-born Indian-American who is a US citizen)

//சீனா பாகிஸ்தான் நாட்டு உளவு நிறுவனங்கள் இணைந்து பல வருடமாக செய்து முடிக்கமுடியாத வேலையை - இந்திய அமெரிக்க உறவுக்கு ஆப்பு வைப்பதை- அசால்ட்டாக செய்து முடித்திருக்கிறார்கள்!///

அது என்றால் உண்மை தான். அனேகமாக இந்த செய்திக்கு கருத்து தெரிவித்த பலரும் உங்களுடன் உடன்படுகிறார்கள்.

நம்பள்கி said...

[[Khobragade is married to a New York-born Indian-American who is a US citizen)]]

ஹலோ! நீங்கள் சொல்லும் செய்தி நம் ஊர் TOI -ல் வந்தால் வெட்கக்கேடு!இது எப்படி என்றால். நடு செண்டர் என்று சொல்வது மாதிரி!

அமெரிகாவில் பிறந்தால் திருடி, கொலைகாரி, இங்கு படிக்க வந்த பெண், இந்தியாவில் இருந்து வரும் வேலையாட்களின் மனைவிகள் பெரும் பிள்ளைகள்---Alwways, Born American Citizens. இதன் அர்த்தம் என்ன?

குடுமியான் மலையில் பிறந்த பெண் அமெரிக்காவில் குழந்தை பெற்றால்--அந்த குழந்தை அமெரரிக்க ஜானதிபதியாக முடியும் எனபதே உண்மை; ! நிற்க.

கொலைகாரி, பரத்தை குழந்தைகள் கூட அமெரிக்க மண்ணில் பிறந்தால்...அமெரிக்க ஜானதிபதி யாக முடியும்.

இது சனாதன வாதிகளால் ஜீரணிக்க முடியாத ஒன்று என்பது வேறு!

எங்களால் இது முடியாது!

viyasan said...

@நம்பள்கி

அண்ணா,

உங்களுடைய பதில் எனக்கா அல்லது சகோ. நந்தவனத்தானுக்கா அல்லது இரண்டு பேருக்குமா . :)

தேவயானி கோப்ரகடேயின் கணவர் இந்தியாவில் பிறந்த அமெரிக்கர் என தவறாக எழுதியதை, அவர் திருத்தினார், அதாவது அவரது கணவர் அமெரிக்காவில் தான் பிறந்தாராம். மன்னிக்கவும, உங்களின் பதில் எனக்குப் புரியவில்லை. :)

நம்பள்கி said...

அமெரிக்காவில் எந்த நாய் பிறந்தாலும் அமெரிக்க citizen!
அமெரிக்க ஜனாதிபதியாக முடியும் என்பதே.

Khobragade is married to a New York-born Indian;]
இது போதும்!

இதன் அர்த்தம் இவர் அமெரிக்க citizen; இது birth-right!

அமுதா கிருஷ்ணா said...

எந்த இந்திய அம்மாவும் இப்படி குழந்தைகளை விட்டுட்டு வர மாட்டாங்க!!!!ஏன் இங்க படிச்சா என்ன குறைஞ்சிடும்???