Saturday, January 11, 2014

ஈழத்திலும் நடிகனின் படத்துக்கு பாலபிசேகம் செய்யும் சினிமாப் பைத்தியங்கள்!
"தாங்கள் முட்டாள்கள் என நிரூபித்த மட்டக்களப்பு மாக்கள் சிலர்" - என்கிறது தினக்கதிர்.
தாங்கள் இன்னமும் முட்டாள்களாகவும் சினிமா என்ற மோகத்தில் வீழ்ந்து கிடப்பவர்கள் என்பதையும் மட்டக்களப்பில் உள்ள சில மாக்கள் இன்று நிரூபித்துக் காட்டினர். 
இன்று 10.01.2014 ஆம் திகதி அஜித் நடித்த வீரம் திரைப்படம் திரையிடப்பட்டதை இட்டு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள சாந்தி திரையரங்கில் சில மாக்கள் அவருடைய கட் அவுட்டிற்கு பால் அபிசேகம் செய்து தேங்காய் உடைத்து மலர்தூவி பட்டாசு கொழுத்தி கொண்டாடினர்.

நன்றி: தினக்கதிர்
http://www.thinakkathir.com/?p=55689
நடிகருக்கு பாலபிசேகம் செய்து கற்பூரம் காட்டும் ஈழத்தமிழ் இளைஞர்களின் காணொளியைப் பார்த்த, ஒரு ஈழத்தமிழரின் கருத்து (Youtube) இது:

Varatharajah Kanarajah

கொப்பன் உனக்கு கோவணம் அவுத்த நேரத்துக்கு நாலு தென்னை மரத்துக்கு தண்ணி ஊத்தீருந்தாலும் இன்னேரம் இளனீராவது குடிச்சிருப்பான்!!  :-) 
10 comments:

வருண் said...

அதென்ன ஈழத்திலும்?? ஓ நீங்கலாம் உயர் தர தமிழர்களா???:)))

viyasan said...

@வருண்

//அதென்ன ஈழத்திலும்?? ஓ நீங்கலாம் உயர் தர தமிழர்களா???:)))//

அப்படி நீங்கள் நினைக்கிறீர்களா? :)) ஈழத்திலும் என்பதான் கருத்து, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஈழத்திலும் சினிமாப் பைத்தியங்கள் இருக்கிறார்கள். அதாவது நடிகர்களின் கட்டவுட்டுகளுக்கு பாலாபிசேகம் செய்வது தமிழ்நாட்டில் காலம் காலமாக நடைமுறையிலுள்ள வழக்கம். ஆனால் ஈழத்தமிழர்களுக்கு இது புதியது, புதிதாக தமிழ்நாட்டுத் தமிழர்களிடமிருந்து கற்றுக் கொண்டது. இதன் அடிப்படையில், இரண்டு வகையான முடிவுக்கு நாம் வரலாம், முதலாவது, பாக்குநீரிணையின் இருபக்கத்திலும் தமிழர்-தமிழர் தொடர்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு நெருக்கமடைந்திருக்கிறது, இரண்டாவது ஈழத்தமிழர் மத்தியிலும் படிப்பறிவற்ற, வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. :)

இக்பால் செல்வன் said...

பயங்கரவாதிகளை தலைவர்களாக கொண்டாடும் தேசத்தில் இது எல்லாம் ஜுஜுபிங்கோ.. அனைத்தும் ஒரு வகையில் Hero Worshipping பண்பாட்டுக் கூறு தான். இது இலங்கை மட்டுமல்ல தெற்காசியா முழுவதும் வியாபித்து இருக்கும் விடயமே. ஏன் இந்து மதமே இந்த Hero Worshipping-யில் தான் காலம் தள்ளுது. சிவன், முருகன் தொட்டு சத்ய சாய் பாபா, சீரடி பாபா, நித்தியானந்தா வரைக்கும் விழுந்து கும்பிடுகின்றோமே. இதில் ஈழத்தமிழர்கள் விதிவிலக்கல்ல என்பதற்கு கனடாவில் முட்டுச் சந்துகளில் எல்லாம் கோவிலும், மேற்சொன்ன சாமியாருகளுக்கு மடங்களும் இருப்பதே சாட்சி.. !

படிப்பறிவில்லாதோர் வேண்டும் எனில் சினிமா கோஸ்டிக்கு பாலாபிசேகம் பண்ணலாம். உங்களை மாதிரி படிச்ச புண்ணாக்கு எல்லாம் கோவில், ஆசிரமம் மற்றும் அரசியல் இயக்க தலைவர்களுக்கு அல்லவா பாலாபிசேகம் பண்ணிக்கிட்டு கிடக்கின்றனர். அவ்வ்வ்வ் !

இக்பால் செல்வன் said...

ஈழத்தமிழர்களுக்கு புதிதா. வியாசர்வாலே . யாழ்ப்பாணத்தில் எம்ஜீஆருக்கும், சிவாஜிக்கு ரசிகர் மன்றம் இருந்ததுங்கோ. அதற்கு பின்னால் ரஜினி கமலுக்கும் இருந்ததுங்கோ. சும்மா காதுல பூ சுத்தாதீங்கோ அப்பு.

viyasan said...

@இக்பால் செல்வன்

ரொம்பநாளா வராதாவாளெல்லாம் வந்துண்டிருக்கா...:-) (நன்றி வினவு)

ரசிகர் மன்றத்தைப் பற்றி இங்கு யாரையா பேசுகிறார்கள். கே.பி.சுந்தராம்பாளுக்கும் கூடத்தான் எங்களின் பாட்டன் பாட்டிகள் ரசிகர் மன்றம் வைத்திருந்திருப்பார்கள். ஆனால் இலங்கைத் தமிழர்கள் இப்படிக் கட்டவுட்டுக்கு ஆரத்தி, எடுத்து பாலபிசேகம் செய்தார்கள் என்றதற்கு ஆதாரம் காட்டுங்கள், நான் அப்படி எதையும் கேள்விப்பட்ட்தில்லை, என்னுடைய பெற்றோர்களிடமும் கேட்டுப் பார்த்தேன், அவர்களும் அப்படி எதுவும் நடந்ததைப் பார்த்ததில்லையாம்.

viyasan said...

@இக்பால் செல்வன்

இங்கு பேசப்படுவதும் நான் குறிப்பிட்டதும் நடிகர்களின் படங்களுக்கு ஆரத்தியும், பாலபிசேகம் செய்வதையும் பற்றியதே தவிர கடவுளை எப்படி வணங்குகிறோம் என்பதைப் பற்றிய ல்ல, நீங்கள் இரண்டையும் கலந்து, உங்களை நீங்களே குழப்பிக் கொள்கிறீர்கள் போல் தெரிகிறது. :)

இக்பால் செல்வன் said...

நடிகர்களுக்கு பாலாபிசேகமும், ஆரத்தி காட்டுவதை ஏன் தவறு என்கின்றீர்கள்? அதை சொல்லுங்க வியாசரே..! அரசியல்வாதிகள், இயக்கத் தலைவர்கள், உள்ளூர் சாமிகள், அசலூர் ஆசாமிகள் என எல்லோருக்கும் தூபம் காட்டப்படும் போது, நடிகர்களுக்கு காட்டுவது ஏன் தப்பு. அவனவன் அவனவனுக்கு பிடித்தோருக்கு தூபம் காட்டுறான். இதில் என்னய்யா குற்றம்.. !

குழம்பி போனது நானல்ல, உங்களை போன்றோரே. அவர்கள் செய்வது குற்றம் என்றால் உங்களைப் போன்றோர் செய்வதும் குற்றம் தான் சாமி.

நீங்கள் எந்த ஊர் என தெரியவில்லை. 1980-களில் ரஜினியின் கழுகு, தீ படங்கள் யாழ்ப்பாணத்தில் வெளியான போது, ரஜினி கட் அவுட்டுக்கு விழா எடுத்தார்கள் ரஜினி ரசிகர் மன்றத்தினர்.

அப்போது இருந்த ராஜா திரையரங்கு நிரம்பி வழிந்த செய்திகளை நீங்கள் அறியாமல் இருக்கலாம், அந்தக் காலத்தில் இளசுகளாக சுற்றித் திரிந்தோரிடம் செத்த விசாரிக்கிறேளா.. அவ்வ்வ்.

புலிகளின் ஆளுகைக்கு பின்னாள் அங்கு சினிமா கட் அவுட் போன்றவைகள் இல்லாமல் போயிருந்தன, அதனால் உங்களுக்கு அவை என்றுமே இல்லை என்ற வெறும் தோன்றல் ஏற்பட்டுள்ளது சகோ. நன்றிகள்.

viyasan said...

@இக்பால் செல்வன்


//நடிகர்களுக்கு பாலாபிசேகமும், ஆரத்தி காட்டுவதை ஏன் தவறு என்கின்றீர்கள்? அதை சொல்லுங்க வியாசரே..! அரசியல்வாதிகள், இயக்கத் தலைவர்கள், உள்ளூர் சாமிகள், அசலூர் ஆசாமிகள் என எல்லோருக்கும் தூபம் காட்டப்படும் போது, நடிகர்களுக்கு காட்டுவது ஏன் தப்பு. அவனவன் அவனவனுக்கு பிடித்தோருக்கு தூபம் காட்டுறான். இதில் என்னய்யா குற்றம்.. !///

என்னைப் பொறுத்த வரையில் நடிகர்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகள், இயக்கத் தலைவர்கள், உள்ளூர் சாமிகள், அசலூர் ஆசாமிகள் எல்லோருக்கும் தூபம் காட்டுவது தவறு தான். நான் சுட்டிக்கட்டுவதால், தூபம காட்டுகிறவன் எல்லாம் அதை நிறுத்தி விடுவான் என்று நான் நினைக்கவில்லை. நான் இந்த வலைப்பதிவைத் தொடங்கியதே, என்னுடைய மனதில்படும், எனது கருத்துக்களை எழுதுவதற்குத் தான் என்பது உங்களுக்கு இன்னும் புரியவில்லையே என்பதை நினைக்க சிரிப்புத் தான் வருகிறது.


// அவர்கள் செய்வது குற்றம் என்றால் உங்களைப் போன்றோர் செய்வதும் குற்றம் தான் சாமி. ///

அது உங்களின் கருத்து, அதைத் தெரிவிக்க உங்களுக்கு உரிமையுண்டு. நான் செய்வது தவறு என்று நான் நினைத்தால் அப்படிச் செய்ய மாட்டேன், நான் என்ன செய்கிறேன் என்று நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதை நான் தொடர்ந்தும் செய்கிறேன் என்றால், நான் செய்வதைத் தவறாக நான் கருதவில்லை என்பது தான் கருத்தாகும். :))

//நீங்கள் எந்த ஊர் என தெரியவில்லை.///

எங்களின் ஊரும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் தானிருக்கிறது. எங்களுக்கு யாழ்ப்பாண நகரத்திலும் வீடிருக்கிறது. அதனால் ராஜா தியேட்டரை எனக்கும் தெரியும்.

// 1980-களில் ரஜினியின் கழுகு, தீ படங்கள் யாழ்ப்பாணத்தில் வெளியான போது, ரஜினி கட் அவுட்டுக்கு விழா எடுத்தார்கள் ரஜினி ரசிகர் மன்றத்தினர். ///

ஆனால் பாலபிசேகம் செய்து, கற்பூர தீபம் காட்டிக் கும்பிட்டிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படி 80 களின் முற்பகுதியில் நடந்திருந்தால், அதை நான் அறிய வாய்ப்புக் குறைவு தான். யாழ்ப்பாணத் தமிழர்கள் கட்டவுட்டுக்கு பாலபிசேகம் செய்து, கற்பூர ஆரத்தி எடுத்தார்கள் என்று ஆதாரத்தோடு நிரூபித்தால், ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாட்டு ரசிகர்களின் வியாதி, 1980களிலேயே தொற்றி விட்டது என்ற குறிப்பையும் எனது பதிவில் சேர்த்து விடுகிறேன். :)

//அப்போது இருந்த ராஜா திரையரங்கு நிரம்பி வழிந்த செய்திகளை நீங்கள் அறியாமல் இருக்கலாம், அந்தக் காலத்தில் இளசுகளாக சுற்றித் திரிந்தோரிடம் செத்த விசாரிக்கிறேளா.. அவ்வ்வ். ///

விசாரித்துப் பார்த்தேன், ரஜினி, கமலகாசன் ரசிகர்கள் இருந்தார்கள் தான் ஆனால் இப்படி, பாலபிசேகம் எல்லாம் நடக்கவில்லை என்கிறார்கள்.

Pararajasingham Balakumar said...

## 1980 களில் ரஜனியின் கழுகு , தீ படங்கள் யாழ்பணத்தில் வெளியானபோது ரஜனி கட்டவுட்டுக்கு விழா எடுத்தார்கள் ##

முதலாவது எண்பதுகளின் ஆரம்பத்தில் இப்போதுள்ளதுபோல் தமிழ் நாட்டில் வெளியாகும் எல்லா படங்களும் வெளியாவதில்லை..

கழுகு படம இலங்கையின் எப்பாகத்திலும் வெளியானதில்லை.

இரண்டாவது தீ படம் வெளியானபோது ரஜனி கட்டவுட்டுக்கு ரசிகர் மன்றம் எதுவும் விழா எடுத்ததில்லை.

சிவாஜி எம் ஜீ ஆர் காலத்தின்போதே ரசிகர் மன்றங்களின் செயற்பாடு அதிகமாக இருத்தது.அதுவும் தோரணம் கட்டுதல் பட்டாசு வெடித்தலுக்கு அப்பால் சென்றதில்லை.

ரஜினி , கமல் காலம் ஆரம்பித்தபோதே சினிமாவுக்கான மோகம் குறைய ஆரம்பித்து விட்டது.

அப்போதெல்லம் தமிழ் நாட்டில் வெளியான சில காலங்களின் பின்பே இலங்கையில் படங்கள் வெளியாகும் அதற்குள் வீடியோவில் படங்கள் வெளியாகி படங்கள் மீதான எதிர்பார்ப்பை
குறைத்து விடும் .
இதுவே இலங்கையில் கமல் மீதும் ரஜனி மீதுமான ஈர்ப்பு எம் ஜி ஆர் சிவாஜி மீது இருந்த ஈர்ப்பளவிற்கு இல்லாமல் போனதிற்கான காரணமாகும்.

அடுத்ததாக யாழ்ப்பாணத்தில் நீங்கள் குறிப்பிட்டதுபோல் தீ திரைப்படம் ராஜா திரையரங்கில் திரையிடப்படவில்லை.
அது ராணி திரையரங்கிலேயே திரையிடப்பட்டது.

தமிழ் நாட்டைப்போலவேதான் யாழ்ப்பாணத்திலும் கதானாயக வழிபாடு இருந்த்ததென்பதை நிறுவுவதற்கு கூச்ச நாச்சமில்லாமல் பொய்களுக்கு மேல் பொய்களக அடுக்குயுள்ளீர்கள்.

இதில் அப்போதிருந்த இளசுகளிடம் விசாரிக்குமாறு புத்திமதி வேறு.

அது சரி உண்மையை எழுதுவதற்குத்தான் பத்து பேரிடம் விசாரிக்க வேண்டும் .
உங்களைப்போல் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதற்கு யாரிடம் விசாரிக்க வேண்டும் ?
அதனால்தான் விசாரிக்காமலே அவிழ்த்து விட்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது...

viyasan said...

@Pararajasingham Balakumar

நன்றி.சகோ.

சகோ. இக்பால்செல்வன் அவர்கள் ஈழத்தமிழர்களைப் பற்றி அவரது சிங்கள 'முற்போக்குவாதி' நண்பர்களின் கருத்தின் அடிப்படையில் எதிர்மறையான கருத்துக்களைச் கூறத் தயங்காதவர் என்பதை, வலைப்பதிவுக்கு வந்து ஒரு சில நாட்களிலேயே அறிந்து கொண்டேன். உங்களின் பதிலுக்கு அவர் ஆதாரத்துடன் பதிலளிப்பார் என நம்புகிறேன்.