Friday, January 10, 2014

இந்தியாவில் சோனியா அம்மனுக்குக் கோயில்!

இந்தியாவின் மிக முக்கிய மாநிலங்களில் ஒன்றாகிய ஆந்திரப் பிரதேசத்தில் சோனியா காந்திக்கு ஆலயம் அமைத்துள்ளனர் அவரின் பக்தர்கள். அந்த ஆலயத்தின் தெய்வமான  சோனியாகாந்தியின் உருவச்சிலை, ஒருகையில் ஒரு விதமான பூ அல்லது சோளத்தையும் மறுகையில் ஒரு தட்டு நிறைய பூ அல்லது பழங்களுடனும், இந்தியர்களுக்கு உணவளித்துக் காக்கும் தெய்வமாக (Indian Idol) வடிக்கப்பட்டுள்ளது.

திருமதி. சோனியா காந்தியைத்  தரிசித்து, வணங்க  பகதர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள் எனத் தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார் இந்தக் கோயிலை அமைத்த சங்கர் ராவ் அவர்கள். 
இந்த சிலை ஒன்பது அடி உயரத்தில் ஐநூறு கிலோ பித்தளையில் இந்தியாவின் விருது பெற்ற ஒரு சிற்பியால் வடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தச் சிலையை அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசிலுள்ள சில காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து  பெற்றுக் கொண்டதாகவும் கூறுகிறார் (the legislator claims he has the blessings of some Congress leaders at the Centre for his project. "We have shown the prototype of the idol to be installed and got it approved,') இந்த தெய்வச் சிலையை அமைப்பித்த திரு.சங்கர் ராவ் அவர்கள்.

2 comments:

K Gopaalan said...

இதெல்லாம் நிஜமாக நடக்குதா.

சோனியா அம்மனுக்கு பூசை செய்ய ஒரு பார்ப்பனன் நுழைந்தால் நமது பகுத்தறியும் தமிழர்களுக்குக் கொண்டாட்டம்தான். அல்லது BJP ஒரு ப்ராமணர் பார்ட்டி என்று தொலைக்காட்சியில் கூறிய அந்த காங்கிரஸ் பெண்மணி அந்தக் கோவிலில் பூசை செய்ய ஒரு தாழ்த்தப்பட்டவரைத் தேட வேண்டிவரும்.

கே. கோபாலன்

இறைவனை தேடி said...

அன்புள்ள வியாசன், தங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உரித்தாகட்டுமாக!

மன்னிக்கவும். விளம்பியின் பக்கத்தில் இந்த மறுமொழியை இட்டேன், பிரசுரிக்கப்படுமா என்று தெரியவில்லை, எனவே உங்களுக்காக இங்கே மறுபடியும்.

முஸ்லிம்களின் துரதிர்ஷ்டம் காலம் காலமாக இஸ்லாமிய நெறி முறைகள் அவர்களுக்கு கற்று கொடுக்கப்படாமல், எளிமையான மார்க்கத்தை இருட்டடிப்பு செய்து எங்கள் மத குருமார்கள் மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள். தங்களுக்கு முஸ்லிம் குருமார்களின் குழப்பங்கள் தெரிய வாய்ப்பு இல்லையாதலால் முஸ்லிம்களின் கேள்விகள் வித்தியாசமாகபடலாம்.

திரு. மு.மாலிக் போன்றே எங்கள் நபியவர்களின் காலத்தில் வாழ்ந்த பேகன்'களும் (குறைஷ்) கிண்டல் செய்தார்கள், "உங்கள் நபி சிறுநீர் கழிப்பதை கூடவா! கற்று தருகிறார்" என்று. அது மட்டுமில்லாமல், குர்ஆனையும் கூட "உங்கள் இறைவன் கொசுவை கூடவா உதாரணமாக்குகிறான்" என்று கிண்டல் செய்தார்கள்.

அற்பமான விஷயம் என்று மற்றவர்களுக்கு தோன்றும் கேள்விகள் நபியவர்களின் காலத்தில் தோழர்கள்/தோழிகளால் கேட்கப்பட்டது. தற்காலத்தில் அந்த கேள்விகளை, சம்பவங்களை பி.ஜைனுல் ஆபிதீன் போன்ற அறிஞர்களிடம் கேட்டு, ஹதிஸ் என்ற பெயரில் விளக்கம் பெறுகிறோம். இறைவனின் கருணையால் உண்மையான இஸ்லாமை அறிந்து கொள்கிறோம்.

எளிய மொழி நடையில் உள்ள குர்ஆன் ஒன்றை மட்டுமே நீங்கள் படித்து பார்த்து இஸ்லாத்தை அறிந்து கொள்ளலாம். தயவுசெய்து முயற்சி செய்யுங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நேர்வழியை காட்டுவானாக!