Thursday, December 19, 2013

சீமான்- “நாம்தமிழர் கட்சி தீக்குளிப்பதை ஆதரிக்கவோ அங்கீகரிக்கவோ மாட்டாது”தனக்குத் தானே தீமூட்டிக் கொண்டு சாகும் தீக்குளிப்புக்கு எதிரான விழிப்புணர்வு போராட்டம் The Weekend Leader இனால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் தமது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களின் கவனத்தை அவர்களின் திசையில்திருப்பவும் முப்பது இளந்தமிழர்கள் தமது இன்னுயிரை மாய்த்துள்ளனர்.  

அதைப் பற்றிய நீண்ட கலந்துரையாடலின் பின்னர், முத்துக்குமார், செங்கொடி, அப்துல் ரவூப் போன்ற தமிழர்களின் தியாகத்தை மறக்காமல் நினைவு கூரும் அதேவேளையில் இன்று முதல் தீக்குளித்து தமது உயிரை மாய்த்துக் கொள்வதை போற்றுவதோ அல்லது அதை அங்கீகரிப்பதோ இல்லை என நாம் தமிழர் கட்சி முடிவெடுத்துள்ளது.
தீக்குளிப்பதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது தான் கூட ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கையில் துன்பப்படும் தமிழர்களுக்காக தற்கொலை செய்யும் எண்ணத்தைக் கொண்டிருந்ததாகவும் ஆனால் சாவதை விட குறிக்கோளை அடைய வேறு வழிகள் உண்டு என்பதை உணர்ந்ததால் அந்த எண்ணத்தைக் கைவிட்டதாகவும் குறிப்பிட்டார் செந்தமிழன் சீமான்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களைப் பற்றி பேசுகையில் இளைய தமிழர்கள் அந்த வருந்தத் தக்க முடிவுக்கு வந்ததன் காரணம், தமிழ்நாட்டுத் தமிழர்கள் அவர்களின் ஈழத்தமிழ்ச் சகோதரர்களின் துன்பத்தை கண்டும், காணாமல் இருந்தது தான் என்றார் அவர்.
ஈழத்தமிழர்களின் படுகொலைகளைப் பார்த்து கவலையால் வாடினார் முத்துக்குமார் ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதைப்பற்றி சிறிதளவும் கவலைப்படாமல், தமது வேலையைப் பார்த்துக் கொண்டும், கூட்டம் கூட்டமாக கடைகளுக்கும், சினிமாவுக்கும், மதுக்கடைகளுக்கும் படையெடுத்தனர்.
தமிழ்ச்சகோதரத்துவமும், இனவுணர்வும் இறந்து போனதால் அதற்கு உயிர் கொடுக்க எண்ணிய முத்துக்குமார் அதற்காக தனது உயிரை ஈந்தார் எனக் குறிப்பிட்டார் திரு.சீமான் அவர்கள்.
1980களில் இந்திய- இலங்கை கிரிக்கெட் விளையாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக தனக்குத் தானே தீமூட்டி தன்னுயிரை மாய்த்தார் அப்துல் ரவூப். ஆர்வலராகிய செங்கொடி, சமுதாயத்தில்நடைபெறும் பல தீங்குகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டு கொலைத்தண்டனைக்காக காத்திருக்கும் அனைவரும் தூக்கில் இடப்படக் கூடாது என்பதையும் வேண்டி தீக்குளித்தார்.
தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டவர்களை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாதித்தன, அத்துடன் அவர்கள் அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மையான நிலவரத்தையும் நன்கு அறிந்திருந்தனர் என்பதையும் அறிவுறுத்தினார் திரு.சீமான்.
"நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்வதை ஒருபோதும் வரவேற்றதில்லை ஆனால் உயரிய குறிக்கோளுக்காக தமது உயிரையே ஈந்தவர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டியிருந்தது."
தீக்குளிப்பது போன்ற செயல்களில் விலைமதிக்க முடியாத உயிர்கள் இழக்கப்படுவதை நிறுத்த ஒரு தீர்க்கமான முடிவை தமிழ்ச் சமுதாயம் எடுக்க வேண்டியது கட்டாயமானது. அதிலும் தமிழினத்தின் நலன்களின் அக்கறை கொண்ட இளம் தமிழர்கள் சாவுக்குப் பதிலாக வாழ்வைத் தேர்ந்தெடுத்து சனநாயக முறையில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்பது The Weekend Leader சஞ்சிகையின் கருத்தாகும். 
இளம் தமிழர்களின் தீக்குளிப்பும் உயிர்த்தியாகமும் ஈழத்தமிழர்களின் துன்பத்தையோ அல்லது தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையின் கைகளில் துன்புறுவதையோ நிறுத்தவில்லை. அரசாங்கம் உயிர்த்தியாகங்களை மதிப்பதில்லை. ஐநூறுக்கும் அதிகமான மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட பின்னர் இன்றும் அவர்களின் தொல்லை தொடர்கிறது. மக்களின் உரிமைகளுக்காகப் பேசியவர்களுக்கு பேச்சு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. பொதுக்கூட்டங்களில் பேச எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.  இந்த நிலையை மாற்ற ஒரே வழி வாக்குகளின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது தான். தமிழர்களின் நலன்களைக் காக்கும் கட்சிகளுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கூறினார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள்.
இனிமேல் நாம் தமிழர் கட்சி எவருடைய தீக்குளிப்பையும் அங்கீகரிக்கவோ அல்லது போற்றவோ செய்யாது என உறுதியளித்ததுடன் இளைய சமுதாயம் தமது உயிர்களைக் காத்து சமுதாயத்தின் நலன்களுக்காக உழைப்பதுடன், அரசியல் அதிகாரத்தைப் பெற்று தமது கனவை நனவாக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

3 $ கொடுத்து வேலையும் வாங்கி பொய்யும் சொன்ன இந்திய துணைத்தூதர்??
தேவயானிக்கு ஆதரவாக இந்திய வலதுசாரிகளின் அமெரிக்க எதிர்ப்பு போராட்டம்  :)


நியூயோர்க்கிலுள்ள இந்தியாவின் துணைத் தூதரை அமெரிக்க அதிகாரிகள் சாதாரண குற்றவாளிகளை நடத்துவதை விடக் கேவலமாக, ஆடைகளைக் களைந்து, உடலின் இடைவெளிகளையும் (Cavity-search) தேடியதால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே ஒரு ராஜதந்திரப் போரே நடந்து கொண்டிருக்கிறது. தான் ஒரு இந்திய ராஜதந்திரி, தன்னுடன்  இப்படி நடந்து கொள்ளக் கூடாதென, பல முறை அவர் எடுத்துக் கூறியும் அமெரிக்க அதிகாரிகள் அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லையாம். இதனால் ஆத்திரம் கொண்ட இந்திய அரசு அதற்குப் பதிலடியாக அமெரிக்க ராஜ தந்திரிகளுக்கு இந்தியாவில் அளித்த சில சலுகைகளை மீண்டும் பெற்றுக் கொண்டது மட்டுமன்றி, பல இந்தியர்களும், இயக்கங்களும், அமெரிக்காவுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர், இணையத்தளங்களில் எழுதித் தள்ளுகின்றனர். அத்துடன் இந்திய-அமெரிக்க உறவிலும் பாரிய இடைவெளியை ஏற்படுத்துமளவுக்கு நிலைமை உள்ளது என்கின்றனர் சில அரசியல் அவதானிகள்.
Pic: Yahoo
நியூயோர்க்கின் இந்தியத் துணைத் தூதர் செல்வி.தேவயானி கொப்றகடே,  அவரது வீட்டில் அவர் வீட்டு  வேலைக்காக அமர்த்திய பணிப்பெண்ணுக்கு மணித்தியாலத்துக்கு $ 3 டாலருக்குக் குறைந்த ஊதியத்தைக் கொடுத்தது மட்டுமல்ல, அந்த பணிப் பெண்ணின் விசா விண்ணப்பத்தில் அதைப் பற்றி பொய்யும் கூறியிருக்கிறார், அதாவது அவரது வீட்டுப் பணிப்பெண்ணின் விசா விண்ணப்பத்தில் அவருக்கு மாதம் $4,500 டாலர் சம்பளமாகக் கொடுப்பதாகக் கூறிய இந்திய துணைத் தூதர், உண்மையில் மணிக்கு $3 டாலருக்கு குறைவான ஊதியத்தையே வழங்கியுள்ளார் என்கிறார் அமெரிக்க அரச வழக்கறிஞர்.

நியூயோர்க் மாநிலத்தில் ஒரு மணி நேர வேலைக்கான குறைந்த பட்ச கூலி ($7.75) அது *டிசம்பர் 31, 2013 இலிருந்து $8.00 ஆக உயர்த்தப்பட வேண்டும். எந்தவொரு வயதுவந்த வேலையாளுக்கும் அதை விடக் குறைந்த ஊதியம் கொடுப்பது அமெரிக்காவின் தொழிலாளர் ஊதியச் சட்டத்தை மீறும் செயலாகும். * Minimum wages

".. Devyani Khobragade, India's deputy consul general in New York, was arrested Thursday outside of her daughter's Manhattan school on charges that she lied on a visa application about how much she paid her housekeeper, an Indian nationalProsecutors say the maid received less than $3 per hour for her workProsecutors say Khobragade claimed on visa application documents she paid her Indian maid $4,500 per month, but that she actually paid her less than $3 per hour. Khobragade has pleaded not guilty and plans to challenge the arrest on grounds of diplomatic immunity."

இந்தியர்கள் உண்மையில் நல்ல முதலாளிகள் அல்ல என்பது பொதுவாக யாவராலும் பேசப்படும்/ஒப்புகொள்ளப்பட்ட விடயம். இந்தியாவில் இந்தியர்கள் எவ்வளவு கொடுமையாக, கீழ்த்தரமாக தமக்குக் கீழே வேலை செய்பவர்களை, குறிப்பாக தமது வீடுகளில் வேலை செய்பவர்களை நடத்துகிறார்கள் என்பதை பலர் நேரில் பார்த்திருப்போம். படங்களில், கதைகளில் அல்லது நண்பர்கள் மூலமாவது கேள்விப்பட்டிருப்போம். அடிமட்டத்தில் வேலை செய்யும் கூலிகளை மட்டுமல்ல, படித்து, நல்ல உத்தியோகத்தில் உள்ளவர்களைக் கூட அவர்களின் அதிகாரி நீ என்று பேசுவதை, மற்றவர்களின் முன்னால் வைத்து அவமதிப்பதை நானே சென்னையில்  நேரில் பார்த்து (அதுவும் அலுவலகத்துக்கு வெளியே) அதிர்ச்சியடைந்திருக்கிறேன். தனது அதிகாரத்தை மற்றவர்களுக்கு காட்டுவதற்காக அவர்கள் அப்படிச் செய்வது வழக்கம். 

அதை விட இந்தியாவில் தொழிலாளர்களுக்கான சட்டங்கள், அவர்கள் எத்தனை மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்பவை எல்லாம் நடைமுறையில் இல்லை போல் தெரிகிறது அல்லது ஏனோ நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. குறிப்பிட்ட நேரத்துக்கு  மேல் வேலை செய்தால், கொடுக்கப்படும் அதிகளவு ஊதியம் (overtime) என்பன கீழ்மட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. உதாரணமாக சென்னையில், தியாகராயநகரில் பெரிய அங்காடிகளில், நாங்கள், ஈழத்தமிழர்கள் எங்களுடைய காசைக் கொண்டு போய் கண்மூடித்தனமாகக் கரியாக்கும், பட்டுச் சேலைகள், நகைகள் விற்கும் பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் சிப்பந்திகளுக்கும், ஓட்டல்களில் வேலை செய்பவர்களுக்கும், உணவகங்களில் உணவு பரிமாறுகிறவர்களுக்கும் கூட overtime எல்லாம் கிடையாது. சிலர் 16 மணித்தியாலங்களுக்கு அதிகமாக தொடர்ந்து நின்ற நிலையில் வேலை செய்ய வேண்டும்.  சிலருக்கு வாரத்தில் ஒரு நாள் ஒய்வு கூடக் கிடைப்பதில்லை. பலரும் கிராமப்புறங்களிலிருந்து வறுமையால் பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்தவர்கள், இவர்கள் அனுப்பும் பணத்தில் தான் அவர்களின் குடும்பம் தங்கியுள்ளது. அதனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை. அதை விட ஏதாவது எதிர்த்துக் கதைத்தால் உடனடியாக வேலையையும் விட்டு நீக்கி விடுவார்கள். அவர்களை விடக் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்ய வட மாநிலத்தவர்கள் வரிசையாக காத்திருக்கின்றனர். இவர்களாவது இப்படி, ஆனால் சில இந்தியர்கள் தமது வீட்டு வேலைக்காரர்களை நடத்தும் விதம், தாங்க முடியாத கொடுமை. அதாவது தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை, அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப் படுவதுமில்லை. 
Picture: Google
இப்படியான சூழலில் வாழ்ந்து விட்டு, வெளிநாடுகளுக்கு வரும் பெரும்பாலான இந்தியர்கள், தமது legendary கஞ்சத்தனத்தையும், தம்மிடம் வேலை செய்பவர்களை மனிதாபமற்று நடத்தும் இயல்புகளையும் இந்தியாவில் விட்டு வருவதில்லை போல் தெரிகிறது. இதில் சாதியும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது தமக்குக் குறைவான சாதிகளை மோசமாக நடத்துவதில் அவர்கள் ஏதும் தவறிருப்பதாக உணர்வதில்லை. உதாரணமாக, இந்தியாவில் ஓட்டல்களில் வேலை செய்யும் Room boys இடம் நான் பேசும் போது கூட நீங்கள் என்று அவர்களிடம் பேசுவது வழக்கம், ஏனென்றால் எங்களை விட வயது குறைந்தவர்களாக இருந்தாலும், ஈழத்தமிழர்கள்  முன்பின் தெரியாதவர்களை நீ என்று கூறுவதில்லை. அது  தவறு "அவர்களுக்கு இப்படி மரியாதை கொடுத்தால், அவர்கள் உங்களை மதிக்க மாட்டார்கள்" என்றார் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த பெரியவர்.

இந்த மனப்பான்மையுடன் வெளிநாட்டுக்கு வரும் சாதாரண இந்தியர்கள் இப்படி நடந்து கொண்டிருந்தால் அது வியப்புக்குரிய விடயமல்ல, ஆனால் இங்கு ஒரு இந்திய ராஜதந்திரி  குற்றம் சாட்டப் பட்டிருப்பது இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டியதொன்று


Wednesday, December 18, 2013

கேரள பத்மநாபசுவாமி கோயிலில் இலங்கையின் தங்க விஷ்ணு சிலை??".......the Vishnu idol here as being made of gold and the size of a man with two large rubies as eyes "that lit up like lanterns during the night. ....."


இலங்கையின் தென்பகுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, இன்று Dondra என ஆங்கிலத்திலும்,  தென்னாவரம், தென்துறை, தேவேந்திரமுனை, அல்லது தேவன்துறை என்றழைக்கப்படும் தேனாவரம் நாயனார் கோயிலிலிருந்த தங்கத்திலான ஆளுயர  விஸ்ணு சிலையும் கூட திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பாதாள அறைகளில் இருக்கலாம் என கருத்து தெரிவிக்கிறது World Famous Treasures Lost and Found ( By Vikas Khatri). அது மட்டுமன்றி, திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயிலில் பாதுகாப்புக்காக கேரளத்துக் கோயில்களின் நகைகளும், செல்வங்களும் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக் கோயில்களினதும் குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்துக் கோயில்களின் நகைகள் எடுத்துச் செல்ப்பட்டன. அதனால் அங்கு கண்டெடுக்கப்பட்ட புதையல்களில் தமிழ்நாட்டுக்கும் பங்குண்டு எனவும் சிலர் கூறுவர்.

சிவபூமியாகிய இலங்கையை இயற்கையின் சீற்றம், கடல்கோள் என்பவற்றிலிருந்து காப்பதற்காக இலங்கைத் தீவின் நான்கு பக்கங்களிலும் ஐம்பெரும் சிவாலயங்ககளை அமைத்தனர் இலங்கையின் பூர்வீக குடிகள் ( தமிழர்/சிங்களவர்களின் முன்னோர்கள்). இலங்கையின் தென்துறையில் அமைக்கப்பட்ட தொண்டேஸ்வரம் சிவாலயத்துக்குப் பக்கத்திலேயே தேனாவரை நாயனார் கோயில் எனப்படும் புகழ்பெற்ற விஷ்ணு கோயிலும் அமைந்துள்ளது.  அக்காலத்தில் தேனாவரம் பெருமாள் கோயில் இலங்கை முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்ற எட்டுக் கோயில்களில் ஒன்றாக திகழ்ந்தது. 

தமிழ்நாட்டிலிருந்து  குறிப்பாக,  சேரநாட்டிலிருந்து இலங்கையின் தென்துறையை(Dondra) அடையும் பயணிகளுக்கும், வர்த்தர்களுக்கும் அக்கோயில் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கியுள்ளது. . இன்றும் இந்தக் கோயில் ஈழத்திலுள்ள கோயில்களில் கேரள(திராவிட)கட்டிடக் கலையின் அடையாளமாக உள்ளது. இன்று இக்கோயில் தமிழர்களை எதிர்க்கும் புத்த பிக்குகளின் கட்டுப்பாட்டில், பெயரளவில் பெருமாள் கோயிலாக இருந்தாலும், இன்று பெரும்பாலும் பெளத்தர்களின் ஆலயமாகக்  களையிழந்து காணப்படுகிறது.  

"A ferry transported traders, pilgrims and chroniclers across the Gulf of Mannar from the Tenavaram temple, the famously wealthy Vishnu-Shiva temple town emporium to the Chera kingdom via Puttalam of the Jaffna kingdom during the medieval period. This temple was destroyed in 1587 CE, a few years after the Thiruvananthapuram Padmanabhaswamy temple gopuram was constructed. Moroccan traveller Ibn Battuta visited Tenavaram in the 14th century and described the Vishnu idol here as being made of gold and the size of a man with two large rubies as eyes "that lit up like lanterns during the night."  All people living within the vicinity of the temple and who visited it were fed with monetary endowments that were made to the idol. "
தேனாவரம் நாயனார் கோயிலின் இன்றைய நிலை:

Tenavaram temple (Tamil: தென்னாவரம் கோயில்) (historically known as the Tenavaram Kovil, Tevanthurai Kovil or Naga-Risa Nila Kovil) was a historic Hindu temple complex situated in the port town Tenavaram, Tevanthurai (or Dondra Head), Matara) near Galle, Southern Province, Sri Lanka.(see pic) Its primary deity was a Hindu god Tenavarai Nayanar and at its zenith was one of the most celebrated Hindu temple complexes of the island, containing eight major kovil shrines to a thousand deity statues of stone and bronze and two major shrines to Vishnu and Shiva. Administration and maintenance was conducted by residing Hindu Tamil merchants during Tenavaram's time as a popular pilgrimage destination and famed emporium. 

 பதினாறாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் போத்துக்கேய தளபதி De Souza d'Arronches,ஆல் தேனாவரம் கோயில் இடிக்கப்பட முன்னர் திரிசூர் கேரளாவிலுள்ள வடக்கு நாதர் கோயிலில் அமைப்பையும் அதன் கேரள திராவிட காட்டிடக் கலையின் அமைப்பை தேனாவரம் நாயனார் கோயிலும் கொண்டிருந்தது.
The complex, bordered by a large quadrangle cloister, was a collection of several historic Hindu Kovil shrines, with its principle shrine designed in the Kerala and Pallava style of Dravidian architecture. The central temple dedicated toVishnu (Tenavarai Nayanar) was the most prestigious and biggest, popular amongst its large Tamil population, pilgrims and benefactors of other faiths such as Buddhism, Kings and artisans. The other shrines that made up the Kovil Vatta were dedicated to Ganesh, Murukan, Kannagi and Shiva, widely exalted examples of stonework construction of the Dravidian style. The Shiva shrine is venerated as the southernmost of the 5 ancient Ishwarams of Lord Shiva (called Tondeswaram), built at coastal points around the circumference of the island in the classical period. Tenavaram temple owned the entire property and land of the town and the surrounding villages, ownership of which was affirmed through several royal grants in the early medieval period. Its keepers lived along streets of its ancient agraharam within the complex.

 Due to patronage by various royal dynasties and pilgrims across Asia, it became one of the most important surviving buildings of the classical Dravidian architectural period by the late 16th century. The temple compound was destroyed by Portuguese colonial De Souza d'Arronches, who devastated the entire southern coast. The property was then handed over to Catholics. Tenavaram's splendor and prominence ranked it in stature alongside the other famous Pallava-developed medieval Hindu temple complex in the region, Koneswaram of Trincomalee. Excavations at the complex mandapam's partially buried ruins of granite pillars, stairs and slab stonework over the entire town have led to numerous findings. Reflecting the high points of Pallava artistic influence and contributions to the south of the island are the temple's 5th-7th century statues of Ganesh, the Lingam, sculpture of Nandi  and the Vishnu shrine's 10th century Makara Thoranam (stone gateway), the frame and lintel of which include small guardians, a lustrated Lakshmi, dancers, musicians, ganas, and yali-riders. 

Tenavaram temple was built on vaulted arches on the promontory overlooking the Indian ocean. The central gopuram tower of the vimana and the other gopura towers that dominated the town were covered with plates of gilded brass, gold and copper on their roofs. Its outer body featured intricately carved domes, with elaborate arches and gates opening to various verandas and shrines of the complex, giving Tenavaram the appearance of a golden city to sailors who visited the port to trade and relied on its light reflecting gopura roofs for navigational purposes. 
Tenavaram remains one of the destroyed Dravidian temples that has yet to be properly rebuilt by Tamil Hindus. Due to religious and demographic change after the late 18th century, most surrounding villages and towns are not directly associated with the town. The Vishnu Devale and Buddhist temples have been constructed atop the ruins.
 

Ref:
World Famous Treasures Lost and Found ( By Vikas Khatri)
The Mysterious Last Door At Padmanabhaswamy Temple. 
  wikipedia.org

Sunday, December 15, 2013

இது உண்மையா?

இது உண்மையா? கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் கல்விமான்களில் ஒருவரும், தமிழ், தமிழர் வரலாறு, தமிழீழம்  போன்ற பல விடயங்களில் கட்டுரைகள் எழுதியவரும், தமிழறிஞரும் ஆர்வலருமாகிய திரு.வேலுப்பிள்ளை தங்கவேலு அவர்கள் தனது கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.தமிழர்களால் "கோயில்" என்றழைக்கப்படும் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த தில்லைச் சிதம்பரத்துக்கு யார் சொந்தக்காரர் என்ற வழக்கு நடந்து கொண்டிருக்கும் வேளையில். உண்மையில் ஒரு தமிழன் நுழைந்து விட்டான் என்பதற்காக இத்தனை நூற்றாண்டுகளாக அந்தக் கோயிலில் ஒரு கதவு பூட்டப்பட்டிருக்குமேயானால், அது தமிழினத்துக்கே இழுக்கு. இது உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பது தில்லைக் கோயிலின் பிரச்சனை சூடான செய்தியாக இருக்கும் போதே  உறுதி செய்யப்பட வேண்டும். அப்படி பூட்டப்பட்டிருந்தால் அந்தக் கதவு உடனடியாக திறக்கபட வேண்டுமென்பதால் இதை மீள்பதிவு செய்கிறேன்.    

தமிழ்நாட்டில் சாதிவெறியால் பல நூற்றாண்டுகளாக பூட்டப்பட்டிருக்கும் கதவு?

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய நந்தனார் அல்லது திருநாளைப் போவார், தில்லையில் ஆடவல்லானின் நடனத்தைப் பார்க்கும் ஆவலோடு  சென்றிருந்த போது, தீக்குள் புகுந்து  சிவனைத் தரிசித்து சிவலோகத்தை அடைந்தார், அதாவது தேவர்கள் பூமாரி பொழிய சிவபெருமானில் ஐக்கியமானார் என்று புராணங்கள் கூறுகின்றன. அதையே மதநம்பிக்கையுள்ள கோடிக்கணக்கான சைவர்களும் நம்புகிறார்கள். அவரை இன்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றுகிறோம்.


 ஆனால் அது உண்மையல்ல என்கிறார் திரு. வேலுப்பிள்ளை தங்கவேலு.
அவரது கருத்துப்படி, தீண்டத்தகாதவராகிய திருநாளைப்போவார் சிதம்பரம் கோயிலுக்குள் நுழைய ஆசைப்பட்டது மட்டுமல்ல அங்கு நுழையவும்  துணிந்ததால் ஆத்திரம் கொண்ட சிதம்பரத்து பார்ப்பனர்கள் அல்லது  தில்லை மூவாயிரவர் அவரை உயிரோடு தீமூட்டிக் கொலை செய்தார்களாம். இப்படியான கதைகளை இவர் மட்டுமல்ல, பல பெரியாரிஸ்டுகளும், திராவிட மேடைப்பேச்சாளர்களும் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது ஓரு பெரிய விடயமல்ல.

ஆனால் நந்தனார் தில்லையில் ஆடவல்லானைத் தரிசிக்க நுழைந்த 9வது கதவு ஒரு தீண்டத்தகாதவர்  நுழைந்து தீட்டுப்பட்டதால்  இன்னும் பூட்டப்பட்டிருக்கிறதாம். இவர் கூறுவதை நம்பவே முடியவில்லை. 

தமிழ்நாட்டில் 21வது நூற்றாண்டில் சாதிவெறியின் காரணமாக ஒரு கதவு, அதுவும் பெரும்பான்மை தமிழர்கள் "கோயில்" என்று போற்றும், தமிழ் நாடு அரசின் இந்து மத அறநிலையத்துறையின் கீழ் இருக்கும்   ஆலயத்தில் பூட்டப்பட்டிருக்குமானால் அதைப் போன்ற வெட்கக்கேடு  வேறெதுவுமிருக்க முடியாது. 

இது உண்மையா என்பதை அறிய வேண்டும், உண்மையானால் இந்தக்கதவு கோலாகலமாக திறக்கப்பட வேண்டும்.இந்த விடயம் பற்றி தமிழ்நாட்டில் யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது இது திரு. தங்கவேலு அவர்களின் வெறும் கற்பனையா? 


Ref: www.tamilnation.org

<

Friday, December 13, 2013

மண்டேலாவின் நினைவு விழாவில் நடந்த 'நகைச்சுவை' சம்பவம்!உலகை சிரிப்பையும் அதிர்ச்சியையும் ஊட்டும் சம்பவமொன்று நெல்சன் மண்டேலா அவர்களை நினைவுகூரும் விதமாக நூற்றுக்கும் அதிகமான உலகநாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட விழாவிலே நடைபெற்றுள்ளது. 

மேலை நாடுகளில் நடைபெறும் அநேகமான நிகழ்ச்சிகளில், பேசமுடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளிகளும் பேச்சுக்களை புரிந்து கொள்ளும் வகையில், சொற்பொழிவு அல்லது நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதே அந்த பேச்சுக்களை அவர்களும் புரிந்து கொள்ளும் விதமாக சைகை மொழியில் (Sign language) மொழி பெயர்ப்பது வழக்கம். அதன்படி மண்டேலா அவர்களின் நினைவுச் சொற்பொழிவுகளை சைகை மொழியில் மொழிபெயர்ப்பதற்கு அமர்த்தப்பட்டவருக்கு உண்மையில் சைகை மொழியே தெரியாதாம். அவர் தனது விருப்பத்துக்கேற்றவாறு சைகைகளை உருவாக்கிக் காட்டிக் கொண்டேயிருந்திருக்கிறார்.

அந்த நிகழ்ச்சி உலக முழுவதும் ஒளிபரப்பப்பட்டதால், அதை நேரடியாக பார்த்த வாய்பேச முடியாதவர்கள் அவரது சைகை மொழியைப் புரிந்து கொள்ளாமல்  முறைப்பாடு செய்துள்ளனர், அவரது மொழிபெயர்ப்பை அவதானித்த சைகை மொழிவல்லுநர்கள் அவர் ஒரு  போலி என்பதை உறுதி செய்துள்ளனர். அவர் உண்மையிலேயே சைகை மொழியில் மொழி பெயர்ப்பு செய்யவில்லையாம், தனக்கு Sign Language தெரியும் போல் நடித்துக்  கொண்டு கைகளை அங்குமிங்கும் அசைத்தது தான் அவர் செய்த மொழிபெயர்ப்பாம்.  உலகத் தலைவர்கள் எல்லாம் பங்குபற்றும் இந்த நிகழ்ச்சியில் தைரியமாக, தெரியாத தொழிலை செய்யத் துணிந்த அவரின் துணிச்சலை, சிரிப்பை அடக்கிக் கொண்டு,  பாராட்டாமலிருக்க முடியவில்லை. :)

சும்மாவே பேனைப் பெருமாளாக்கி  நக்கலடித்து காமெடி பண்ணும் மேலை நாட்டு தொலைக்காட்சிகள் இந்த நகைச்சுவையைத் தவற விடவில்லை. தொலைக்காட்சிகளிலும், யூடியூப்பிலும் இந்த சம்பவம் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. அதில் வேடிக்கை என்னவென்றால். உண்மையான சைகை மொழியில் அவரது சைகைகளை மொழிபெயர்த்தால் இப்படித் தானிருக்கும் என்பதை இந்த காணொளியில் செய்து காட்டியிருக்கிறார்கள். இதைப் பார்த்தால் யாருக்கும்  சிரிப்பை அடக்க முடியாது என நம்புகிறேன். :)


"You came in like a wrecking ball…. freshly chopped tomatoes….put them in hot oil for around 15 minutes…. fry them, fry  them in the onions for..need to caramelized the onions. Add some chicken and wait until it cooks nicely through.  Psycho killer.. Qu'est que c'est.. fa fa faa….fa.fa..faa... and a run..run..run.. run…run....runaway.. oho..oho..oho....ai..ai..aii…ai..ai…aii.. cook the rice.. put it on.. huh.. on boiling water.. turn it off.. and.. let  it simmer put the lid on .. Help I need somebody… help I need somebody… help just anybody…" :)
ஆனால் இந்த சம்பவம் பாதுகாப்பு சம்பந்தமான பல முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அடையாளமற்ற ஒருவர் எவ்வாறு உலகத் தலைவர்கள் எல்லாம் பங்கு பற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். அதிலும் அவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு அருகில் நின்று அவருக்குத் தெரிந்த சைகை மொழியில் ஜானாதிபதி ஒபாமாவின் பேச்சையும் மொழிபெயர்த்துள்ளார். இது அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினரை பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

  
சைகை மொழியில் உலகத்தலைவர்களின் பேச்சுக்களை மொழி பெயர்த்த Thamsanqa Jantjie, 19 மாதங்களாக மனநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  அவரிடம் அங்கு நடந்த சம்பவத்தை பற்றிக் கேட்ட போது   schizophrenia என்னும் ஒருவரின்  தலைக்குள் மற்றவர்களின் குரல்கள் பேசுவது போல் கேட்கும் மனநோயால் தான் பாதிக்கப்பட்டவர் எனவும். அன்றும் பல குரல்கள் அவருடன் பேசியது மட்டுமல்ல, அமெரிக்க ஜனாதிபதி பேசும் போது வானத்திலிருந்து Angels அல்லது வான தூதர்கள் வந்திறங்குவதைப் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.As world leaders took to the stage to pay homage to Mandela, the man, standing about a metre away, appeared to be interpreting for the deaf but "there was no meaning in what he used his hands for," said Bruno Druchen, the Deaf Federation of South Africa's national director. 
When South African Deputy President Cyril Rampaphosa told the crowd that former South African President F W de Klerk was among the guests in a VIP section, the man at his side used a strange pushing motion unknown in sign language, added Ingrid Parkin, principal of the St Vincent School for the Deaf in Johannesburg. The man also used virtually no facial expressions to convey the often emotional speeches, a must for sign language interpreters, Parkin said. Collins Chabane, one of South Africa's two presidency ministers, said the government was investigating "alleged incorrect use of sign language at the National Memorial Service" and would report publicly on the results. 
Sign language experts said the man was not signing in South African or American sign languages, and could not have been signing in any other known sign language because there was no structure to his arm and hand movements.Nicole Du Toit, an official sign language interpreter who watched the broadcast, called the man an embarrassment to South Africa.


Thursday, December 12, 2013

பெரியாரின் கையில் தேவாரம்??


தமிழின் இனிமையை, தொன்மையை அதன் அருமை பெருமையை அறியாதவர்களைப் பார்த்து “செந்தமிழ்ப்பயனறியாத அந்தக மந்திகள்” என்று ஏளனம் செய்தவர் சம்பந்தர். 'நாளும்தமிழ் வளர்க்கும் ஞானசம்பந்தன்' என்றும் 'நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன்' என்றும் 'தமிழ்ஞானசம்பந்தன்' என்றும் தன்னை தமிழால் அடையாளப்படுத்தியவர் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார். 

பிறப்பால் பிராமணராக இருந்தாலும் உள்ளத்தால் தமிழர். இவர் தமிழ், தமிழ் என்று தமிழைப் போற்றியதால் தில்லைத் தீட்சிதர்கள் மட்டுமல்ல, எந்தப்பார்ப்பனருமே  நீச பாசையாகிய தமிழைப்போற்றிய சம்பந்தனின் பெயரை இக்காலத்தில் கூட தமது குழந்தைகளுக்கு சூட மாட்டார்களாம்.


ஈழத்தமிழர் தலைவர் சம்பந்தன்.TNA   
அது மட்டுமன்றி சம்பந்தர் நீச பாசையாகிய தமிழைப் போற்றியதால் ஆத்திரமுற்ற தமிழெதிரிகள் அவரது திருமண நாளிலேயே அவரை ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டி உயிரோடு கொழுத்தி விட்டு சோதியில் கலந்தார் என்று கூறி விட்டார்களாம் என்றும் வினவு இணையத்தளத்தில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அப்படிப் பார்க்கப் போனால் திருஞானசம்பந்தர் அந்தக் காலத்து சுப்பிரமணிய பாரதியார் போன்றவர். பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தன்னை தமிழனாக அறிமுகப்படுத்தியவர்.  எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தன்னை தமிழனாக அடையாளப்படுத்தி, நின்றதமிழ், சங்கமலிசெந்தமிழ், சந்தமாலைத் தமிழ், தண்தமிழ், முத்தமிழ் குன்றாத்தமிழ், குற்றமில்தமிழ், ஞானத்தமிழ் என்று பற்பல அடைமொழிகளால் தமிழ்மொழியைப் போற்றியவர்.

தமிழனாகத் தன்னை அடையாளப்படுத்தியதால் உயிரோடு எரிக்கப்பட்ட ஞானசம்பந்தரை, அதாவது தமிழுக்காக தனதின்னுயிரை நீத்த ஞானசம்பந்தரை, எப்படி பெரியாரும் அவரது சீடர்களும் சிறுமைப்படுத்தினார்கள் என்பதைப் பார்ப்போம். 

இது பெரியார் ஈவேரா அவர்கள் (குடிஅரசு சித்திரபுத்திரன் கட்டுரை, 12.8.1944 இல் எழுதியது.
 பெரியபுராணம் - நஞ்சைக் கக்கும் மதவெறி : 
"ஆலவாய் அழகராம் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் பாடும் திருத்தொண்டர் புராணத்தைச் (பெரிய புராணத்தை) சைவ மெய்யன்பர்கள் தலைமேல்வைத்துக் கொண்டாடுவார்கள். ஆனால் அந்த நாள் முதலே கட்சி மாறித் தனங்களும், மாற்று மதத்துக்காரனர் மனைவியரை மானபங்கப்படுத்த வேண்டும் என்னும் மதவெறியுணர்ச்சியும், 8000 சமணர்களை ஈவிரக்கமின்றிக் கழுவேற்றிக் கொன்ற கயமைத்தனங்களும் பெரியபுராணத்தில் பதிவாகியுள்ளன." 
மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களின் திருவாலவாய்ப்பண் - கௌசிகம் என்னும் தலைப்பில் 3 ஆவது பாட்டு. 
'மண்ண கத்திலும் வானிலும் எங்குமாம்  
திண்ணகத்திரு வாலவா யாய்அருள்
பெண்ணக கத்தெழில் சாக்கியப் பேய்அமண்
தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே'  
(இந்தத் திராவிடர்களின் (பெண்களை) - மனைவிகளை, தானே கற்பழிக்கத் திருவுளமேஎன்பது சம்பந்தர் பாடினதா? அல்லது வேறு யாரையாவதா? அல்லது இதற்கு வேறு பொருளா? என்கிற விபரத்தைப் பண்டிதர்கள் - சைவப் பண்டிதர்கள், அல்லது கிருபானந்தவாரியார், திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் போன்ற சைவ அன்பர்கள் விளக்கினால் கடப்பாடுடையவனாக இருப்பேன். (குடிஅரசு சித்திரபுத்திரன் கட்டுரை, 12.8.1944).
இது பெரியாரின் கையில் தேவாரம் பட்ட பாட்டைக் காட்டுகிறது. பெரியார் இந்த தேவாரத்தின் உண்மையான பொருளை அறியாது விட்டால் அல்லது அவருக்கு சந்தேகம் இருந்திருந்தால் குடிஅரசு பத்திரிகையில் எழுது முன்பாக அந்த தேவாரத்தின் உண்மையான பொருளை யாரிடமாவது கேட்டறிந்திருக்க வேண்டும் அல்லவா? அவர் அப்படிச் செய்யாமல் தன்னிட்டத்துக்கு கருத்து தெரிவித்ததைப் பார்க்கும் எவருக்குமே நிச்சயமாக அவரின் தமிழ் அறிவைப்பற்றி சந்தேகம் வருவது தவிர்க்க முடியாதது. 

இதை வாசித்த திராவிடர்களும் பெரியாரிஸ்டுகளும் திருஞானசம்பந்தர் சாக்கியர்களின் (பெளத்தர்கள்) பெண்களை கற்பழிக்க அருளுமாறு கேட்டுக் கொண்டதாக, தமிழ் தேவாரத்தின் பொருளையே தவறாகப் புரிந்து கொண்டு பல வலைப்பதிவுகளில் ஞானசம்பந்தரை தூற்றி இருக்கிறார்கள். உதாரணத்துக்கு:  இணையத்தளத்தில் ஒரு வலைப்பதிவில் கீழேயுள்ள பதிவை  பார்க்க நேர்ந்தது.

"பெண்ணகத்து எழில்சாக்கியப் பேய் அமண் தென்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே" 
மேலே உள்ள வரிக்கு விளக்கம் தரத் தேவை இல்லை என்றே நினைக்கின்றேன். சமண சமயத்தின் மேல் உள்ள வெறியின் காரணமாக சமணம் மற்றும் புத்தப் பெண்களை சீரழிக்க வேண்டும் என்று வேண்டுகின்றார் சம்பந்தர். 
"அன்பே சிவம்" என்று சைவம் கூறிக் கொண்டு இருக்க அக்கூற்றுக்கு மாறாக ஞானசம்பந்தர் பாடி இருப்பது எவ்வாறு சைவத்தினை வளர்த்திருக்கும். இரண்டுக் கருத்துக்களும் முரண்பட்டு அல்லவா இருக்கின்றன. அப்படி என்றால் ஞானசம்பந்தர் வளர்த்தது என்ன? 

ஆனால் உண்மையில் ஞானசம்பந்தரின் "மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம் திண்ண காத்திரு வாலவா யாய்அருள் பெண்ண கத்தெழில் சாக்கியப் பேய்அமண், தெண்ணர் கற்பு அழிக்கத் திரு வுள்ளமே" என்ற தேவாரத்தில் வரும்  தெண்ணர் கற்பு அழிக்கத் திரு வுள்ளமே என்ற வரிகளின் பொருள்:
கற்பு < கல் என்னும் வேரினின்றும் தோன்றியது. மேற்கண்ட செய்யுளில் அது "கல்வி, அறிவு, கொள்கை நிலை/உறுதி" ஆகிய பொருள்களில் பயில்கிறது. அதாவ்து "அமணர் என்னும் அறிவிலிகளின் உள்ளத்தில் ஆழந்திருக்கும் சமண மதக் கல்வியைக் கொள்கையை, உறுதியை வேரோடு அழிப்பதற்குச் சிவனே உன் திருவுள்ளம் ஆயத்தந்தானே?" என்று வினவுகின்றார். 
மங்கையர்க்கரசியாரும் சம்பந்தரும்  
சங்கக் காலத்து மிக அரிய நூலான பதிற்றுப்பத்தில்:
"இரவல் மாக்கள் சிறுகுடி பெருக உலகந் தாங்கிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை" (59:7-9) -" என்றும்

இரக்கும் மக்களின் சிறுகுடியை வளம்பெருகுமாறு உலகத்தைக் காக்கும் மேம்பட்ட கல்வியை (கொள்கையை) உடையவனும் வில்லாளிகளின் கவசம் (மெய்ம்மறை) போன்றவனுமாகியவனே" என்று ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னும் சேரப் பேரரசனைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் படியுள்ளார்.
அத்தொகையின் பிறிதோரிடத்திலும் "....நல்லிசைத் தொலையாக் கற்ப!நின் தெம்முனையானே" (8ஆம் பதிகம்:10) "நல்ல புகழையும் உடைய அழியாத கல்வியையும் உடையவனே!.நின் போர் முனையில்.." என்று பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில் கிழார் பாடினார்.   
குறிப்பு: மேற்கண்ட சேரன்தான் அப்புலவருக்குப் பரிசிலாகத்
"தானும் தன் கோயிலாளும் புறம்போந்து நின்று கோயிலுள்ள வெல்லாம் கொண்மினென்று காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டிற் கொடுப்ப அவர் யான் இரப்ப இதனை ஆள்க வென்று அமைச்சுப் பூண்டார்" 
கோயில் = அரண்மனை அதாவது:"தானும் தன் அரசியும் அரண்மனைக்கு வெளியே சென்று நின்று அரண்மனையிலுள்ள எல்லாம் கொள்ளுங்கள் என்று ஒன்பது இலட்சம் காணம் அளவுள்ள பொற்காசுகளை சிங்காதனத்தோடு கொடுப்ப, அப்புலவர் அரிசில் கிழார் அரசனையே மீண்டும் நான் இன்னுமொரு பரிசில் கேட்கிறேன்...நீயே அவ்வரசை யேற்று மீண்டும் ஆளவேண்டும் யான் அமைச்சனாகப் பணிபுரிகிறேன்" என்று கேட்டு அவ்வாறே நிகழ்ந்தது. இங்கே "அரசனுக்கென்ன அவன் பெரிய தொகையைக் கொடுப்பதில் என்ன கட்டம்" என்றேண்ணுவோர் கவனிக்க வேண்டியது, அவன் தன்னிடம் உள்ள *எல்லாவற்றையுமே கொடுத்ததுதான்! எல்லாவற்றையும் கொடுக்க ஆண்டிக்கும் அரசனுக்கும் ஒரே துன்பம்தான்! அதிற்றான் சங்கக்கால அரசர்களின் கற்பு வெளிப்படுகிறது.  

"தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிதனுறை வெண்காட்டைப்பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைல்லார்மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான்பெரியப் புகுவாரே" (இரண்டாம் திருமுறை 11-11)

(நன்றி. பெ.சந்திரசேகரன்.) 
Ref: 

பெரியாரும் தமிழும்

Saturday, December 7, 2013

கலைஞர் வேண்டுகோள்: தீட்சிதர்களுக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது!
சில ஆண்டுகளுக்கு முன்னால் முதல் முறையாக சிதம்பரம் ஆடவல்லான் கோயிலுக்குப் போயிருந்த போது தீட்சிதர்களின் அடாவடித்தனத்தை நேரில் அனுபவித்தது மட்டுமல்ல, நான் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்பதை அனுபவத்தால் உணர்ந்து கொண்ட ஒரு தீட்சிதர் அவர் வைத்திருந்த  ஒரு கணக்குப் புத்தகத்தில் (Long Notebook) இவ்வளவு காசு தருவதாக நான் கையெழுத்து போடும் வரை சிவகாமியம்மன் கோயிலுக்குள் போய் தரிசிக்க விடவில்லை. நான் இதுநாள் வரை சிவகாமியம்மனை தரிசிக்கவுமில்லை. (அவர் பக்தியுடன் கேட்டிருந்தால் சிலவேளை கேட்கிற தொகையைக்  கொடுத்துமிருப்பேன்)  மறுத்ததற்காக அவர் என்னை முறைத்துப் பார்த்த பார்வையையும் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. அதனால் தான் மீண்டும் அந்த நிலை சிதம்பரம் கோயிலில் வராதிருக்க, ஈழத்தமிழர்களின் வரலாற்றில் பின்னிப் பிணைந்த, சைவ சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட சைவசமயத்தைக்  கடைப்பிடிக்கும் ஈழத்தமிழர்களின் மெக்காவான சிதம்பரம் கோயில் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது முக்கியமானது என நம்புகிறேன், அதனால் தான் சிதம்பரம் பற்றிய பதிவுகளை இடுகிறேன்.

சிதம்பரம் கோயிலைக் காக்க தமிழக அரசின் அக்கறை தேவை: கலைஞர் கருணாநிதி 


  
சிதம்பரம் கோயில் விவகாரத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதே 1987ம ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தான் இடையிலே தீட்சிதர்கள் இடைக்காலத் தடை பெற்ற காரணத்தால் நடைமுறைக்கு வராமல் இருந்தது. 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது. அதற்கு தீட்சிதர்கள் இடையூறு விளைவிக்க எண்ணுகிறார்கள். அதற்கு இன்றைய தமிழக அரசு துணை போய்விடக் கூடாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.   
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சிதம்பரம் நடராஜர் கோயில் பிரச்சனை நீண்ட நெடுங்காலமாக பேசப்பட்டு கடைசியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 2-2-2009 அன்று இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ வந்தது. அதனை எதிர்த்து, சிதம்பரம் தீட்சிதர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். அதிலே வெற்றி பெறமுடியவில்லை. அதன் பின்னர் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வழக்கு கடந்த மாதம் 25 ஆம் தேதியிலிருந்து உச்சநீதி மன்றத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சுப்பிரமணியசாமி, உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கில் இணைந்து கொண்டு தீட்சிதர் சார்பில் அவரே வாதாடி வருகிறார்.  அப்போது அவர் திராவிட இயக்கத்தைப் பற்றி தேவையில்லாமல் தெரிவித்த கருத்துகளுக்கு மறுப்பு கூறி, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி பதிலறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 
சிதம்பரம் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க அரசாணை எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதே 5-5-1987 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். “கோயில் நிர்வாகத்தில் பொது தீட்சிதர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாலேயே கோயிலுக்கு செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டார்” என்று அரசுத் தரப்பில் வாதாடப்பட்டது.  
அந்த வழக்கு தான் பல ஆண்டுகளாக நீடித்து, திமு,க ஆட்சியில் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் தேதியன்று விசாரணை முடிந்து நீதிபதி பானுமதி அளித்த தீர்ப்பில் கோயிலை நிர்வகிக்கும் உரிமை என்பது மதத்தின் ஒரு பகுதியோ, மத வழக்கமோ அல்ல. கோயில் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. எனவே சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரியானது. அதே போல் சிவனடியார் ஆறுமுகசுவாமி கோயிலுக்குள் தேவாரம், திருவாசகத்தை தமிழில் பாடலாம். அதற்கு பக்தர்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது. கோயிலுக்கு உள்ள ஏராளமான சொத்துக்களை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை முறையாக நிர்வகிக்கும் என்று நீதிமன்றம் நம்புகிறது.   
இந்த விடயத்தில்  கோயில் செயல் அதிகாரிக்கு பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை ஆணையர் ஒருவார காலத்துக்குள் கோயில் செயல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கூறியிருந்தார். கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்க ஒரு வாரகாலம் அவகாசம் தந்தார். ஆனால் தீர்ப்பு வெளிவந்த அன்று மாலையே நிர்வாகத்தை தி.மு.க. கழக அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. இல்லா விட்டால். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற்று அதன் பேரால் தொடர்ந்து சிதம்பரம் கோயிலை தங்கள் வசமே வைத்துக்  கொள்ள தீட்சிதர்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றிருக்கும். 
இருந்தாலும் தீட்சிதர்கள் சார்பில்4-2-2009 அன்று உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தார்கள். இதற்குப் பிறகும் தீட்சிதர்கள் சும்மாயிருக்கவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்து, அந்த வழக்கு தான் தற்போது விசாரணைக்கு வந்திருக்கிறது.  இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ப.எஸ்.சவுகான், மற்றும் எஸ்.ஏ. பாப்டே கொண்ட அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசில் சார்பில் மூத்த வழக்குரைஞராய் நியமித்து வாதாட வேண்டுமென்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை கொடுத்துள்ளார். மேலும் 4-12-2013 அன்று சிதம்பரம் மக்கள் மன்றம் சார்பில் சிதம்பரத்தில் தமிழக அரசு இந்த வழக்கில் மூத்த வழக்குரைஞரை நியமிக்க வேண்டுமென்று கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடைபெற்று, அதிலே கி.வீரமணி, ஓதுவார் ஆறுமுகசுவாமி, முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் போன்றவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். 
“உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தமிழக அரசு மூத்த வழக்கறிஞரை வைத்து உரிய முறையில் வாதாடா விட்டால் தீட்சிதர்கள் பக்கம் ஒருதலை சார்பாக தீர்ப்பு சொல்ல வேண்டி வரும்” என்று நீதிபதிகளே எச்சரித்திருப்பதாகவும் செய்தி வந்துள்ளது.

மேலும் “டிசம்பர் 3 இல் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பிலான வழக்கறிஞர் வெறும் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே சம்பிரதாயத்துக்காக வாதாடினார்” என்றும் செய்தி வந்துள்ளது.  இந்த உத்தரவு ஏதோ திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக் காலத்தில், நான் முதல்வராக இருந்த போது பிறப்பிக்கப்பட்ட ஆணை என்பதால், அதன் காரணமாக தற்போதைய தமிழக அரசு அக்கறை இல்லாமல் இருந்து விடக் கூடாது, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதே 1987 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தான், இடையிலே தீட்சிதர்கள் இடைக்காலத் தடை பெற்ற காரணத்தால் நடைமுறைக்கு வராமல் இருந்து 2009 ஆம் ஆண்டு கழக ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது, அதற்கு தீட்சிதர்கள் இடையூறு விளைவிக்க எண்ணுகிறார்கள் அதற்கு இன்றைய தமிழக அரசு துணை போய்விடக் கூடாது என்பது தான் நம்முடைய விருப்பம் என்று கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார்.

Ref: Thatstamil.com