Monday, September 16, 2013

செல்வி. ஜெயலலிதாவிடம் ஒரு வேண்டுகோள்!


உலகில் தமக்கென ஒரு கொடியில்லாத தேசிய இனம் தமிழினமாகத் தானிருக்க வேண்டும். ஏழு கோடி தமிழர்கள் உலகெங்கும் பரவி வாழ்ந்தாலும் கூட எங்களுக்கென, தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான கொடி தமிழர்களுக்கு கிடையாது. அதனால் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான, தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய  கொடியை வடிவமைக்க ஒரு குழுவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  செல்வி, ஜெயலலிதா அமைக்க வேண்டுமென்பது அன்பான வேண்டுகோள்.

சில நாட்களுக்கு முன்னர் லண்டன் மெட்ரோபொலிட்டன் போலீஸ் சேவைகளினது இணையத்தளத்தில் ஒவ்வொரு மொழிக்கும் அந்தந்த நாடுகளின் அல்லது மொழியை பேசும் மக்களின் கொடிகளை அந்த மொழிகளில் சேவைகளை பெறுவதற்கு அழுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழ் மொழிக்கு விடுதலைப் புலிகளின் கொடியின் படம் போடப்பட்டிருந்தது, ஆனால் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் அதைப்பற்றி முறைப்பாடு செய்து  புலிக் கொடியை இணையதளத்திலிருந்து அகற்றி விட்டது.  


 
தமிழ்நாட்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்வதாலும், தமிழ்நாடு அரசு உலகில் அங்கீகரிக்கப்பட்டதொன்றாக இருப்பதாலும் தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும். அத்துடன் இலங்கையில் அமையப் போகும் வடமாகாண அரசின் ஆலோசனையையும் செல்வி. ஜெயலலிதா பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் கூட கன்னடர்களும் சீக்கியர்களும் தமக்கென தனிக்கொடியை வைத்திருக்கின்றனர் ஆனால் தமிழர்களுக்கு மட்டும் தனித்துவமான கொடி இருப்பதாக தெரியவில்லை. கனடா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு மாநிலங்களும் மட்டுமன்றி ஒவ்வொரு நகரமும் தமக்கென தனிக் கொடிகளைக் கொண்டுள்ளன.

பல நாடுகளில் பரந்து வாழும் நாடு கடந்த தேசிய இனமாகிய தமிழர்களுக்கு அடையாளமாக தனித்துவமான, தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான கொடி தமிழர்களுக்கும், தமிழ் மொழியைக் குறிப்பதற்கும் தேவை. தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் தேசியக் கொடிகளை தமிழினத்தை அல்லது தமிழ் மொழியை சுட்டிக் காட்ட பயன் படுத்த முடியாது ஏனென்றால் நாங்கள் வாழும் நாடுகளில் தமிழ் மொழி மட்டும் தேசிய மொழி அல்ல. அத்துடன் தமிழர்களுக்கென சொந்தமாக ஒரு நாடு கிடையாது.

கங்கை முதல் கடாரம் வரை தமது புலிக்கொடியை நாட்டிய தமிழர்கள் இன்று நாடற்று, கொடியற்று, நாதியற்று இருக்கிறார்கள். இந்த இழிநிலை மாற புலிக்கொடியையே தமிழர்கள் மீண்டும் தமது கொடியாக கொள்ள வேண்டும் ஏனென்றால் ராஜ ராஜ சோழன் காலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கும் , இலங்கைக்கும் வெளியே தமிழர்களின் கொடி என உலகுக்கு தெரிந்த கொடி எதுவென்றால் அது புலிக்கொடிதான்.


கேழன் மேழிகலை யாளி வீணை சிலை 
கெண்டை யென்றினைய பல்கொடி
தாழ மேருவிலு யர்த்த செம்பியர்
த னிப்பு லிக்கொடித ழைக்கவே.

-கலிங்கத்துப்பரணி-

Saturday, September 14, 2013

தமிழ்ப்பெண்களுக்கு கட்டாயக்கருத்தடை. தமிழின அழிப்பின் அடுத்த கட்டம்?கிளிநொச்சியிலுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த ஏழைத் தமிழ்ப்பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டுள்ளது என அறியப்படுகிறது.  

இது groundview இணையத்தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரை. ஈழத்தமிழினம் எத்தகைய இனவழிப்புகளுக்காளாகின்றது என்ற செய்தியை தமிழில் மொழி பெயர்க்க முயன்றிருக்கிறேன். அத்துடன் சிங்கள சார்பு (சிங்கள அடிவருடி) தமிழர்களும் இனிமேலாவது தமிழினத்தைக் கருவறுக்க சிங்களவர்கள் எதையும் செய்வார்கள் என்பதையும் உணர்வார்கள் என நம்புகிறேன்.  

Coercive Population Control in Kilinochchi

http://groundviews.org/2013/09/13/coercive-population-control-in-kilinochchi/


கிளிநொச்சி மாவட்டத்தில் பின்தங்கிய கிராமங்களிலுள்ள தமிழ்ப்பெண்களை வைத்தியசாலைக்கு அவர்களை குழந்தைகளை பரிசோதிக்க வருமாறு அழைத்து அங்குள்ள வைத்தியர்களின் வற்புறுத்தலுடன் அந்த தமிழ்ப்பெண்களுக்கு Progestogen-only subdermal implants (PODIs), என்ற நீண்ட கால கருத்தடை ஹோர்மோனை அவரகளின்  தோலின் கீழ் பதித்துள்ளனர்.

இந்த சம்பவம் August 31, 2013இல் வேராவில், கிளிநொச்சியிலுள்ள அரச மருத்துவ மனையில் நடைபெற்றுள்ளது. கரையோரக்கிராமங்களாகிய வலைப்பாடு, வேராவில், கிராஞ்சி கிராமங்களைச் சேர்ந்த தமிழ்ப்பெண்களே இந்த கட்டாய கருத்தடை திட்டத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆகஸ்டு 30ம் திகதி அந்த வேராவில், வலைப்பாடு, கிராஞ்சி கிராமங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தாய்மார் அனைவரும்  மருத்துவமனைக்கு வருகை தந்து அவர்களின் குழந்தைகளின் நிறைகளை அளந்து அவர்களுக்கு தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டுமென வேராவில் கிராமிய மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர்களாலும் உதவியாளர்களாலும் அறிவுறுத்தப்பட்டனர்.

ஆகஸ்டு 31ம் திகதி, கிளிநொச்சி பிரதேச மருத்துவமனையிலிருந்து வேராவில் கிராமிய மருத்துவ மனைக்கு வருகை தந்த  இருபதுக்குமதிகமான தாதிகளும், மருத்துவச்சிகளும் அக் கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று எல்லா தாய்மார்களையும் வேராவில் மருத்துவமனைக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். அதே நாள் வலைப்பாடு கிராமத்திலிருந்து இரண்டு அவசரகால வண்டிகள் மூலம் தமிழ்த்தாய்மார்கள் வேராவில்லுக்கு அழைத்துச் 
செல்லப்பட்டனர்.


The Social Architects குழுவினரிடம் நடந்த சம்பவத்தை, 43 வயதுடைய ஒரு தமிழ்த் தாய் இவ்வாறு விவரித்தார். “ என்னுடைய வீட்டுக்கு  வந்த  மருத்துவமனை உதவியாளர்கள் ஐந்து வயதிலும் குறைந்த எனது குழந்தையின் நிறையை நிறுத்துப் பார்ப்பதற்காக பரிசோதனை அட்டை (Clinic Card) ஐயும் கொண்டு வருமாறு கூறினார்கள். அதற்கு நான் என்னுடைய குழந்தையின் உடல்நிலை நன்றாகவே இருக்கிறது என்றதற்கு, கிளிநொச்சி பிரதேச மருத்துவமனையிலிருந்து ஒரு ஆராய்ச்சிக்குழு வருவதாகவும் அவர்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும் என்று குறிப்பிட்டார். கிளிநொச்சியிலிருந்து சிறப்பு பயிற்சி பெற்ற வைத்தியர்கள் வருகிறார்கள் அவர்கள் பரிசோதனை செய்தால் நல்லது தானே என்று நானும் நினைத்துக் கொண்டேன் ஆனால் இப்பொழுது தான் தெரிகிறது அவர்கள் எதற்காக வந்தார்கள் என்று”.

கிராமத்து தமிழ்ப்பெண்கள் மருத்துவமனையை அடைந்ததும், அங்கிருந்த வைத்தியர்களும், தாதிகளும் வற்புறுத்தி, சம்மதிக்க வைக்கும் வகையிலும், மருத்துவ மொழியில் வார்த்தைகளை அள்ளி வீசியும்,  அந்த பெண்களுடன் பேசி அவர்களை சம்மதிக்க வைத்து அந்த தமிழ்ப்பெண்களுக்கு Progestogen-only subdermal implants (PODIs), என்ற நீண்ட கால கருத்தடை ஹோர்மோனை அவரகளின்  தோலின் கீழ் பதித்துள்ளனர்.

அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் எந்தவகையான கருத்தடை சாதனங்களை அந்த கிராமப் பெண்கள்  இப்பொழுது பாவிக்கின்றனர் என்று விசாரித்தனர். அவர்களில் பலர் தாம் கருத்தடை மாத்திரைகளை பாவிப்பதாகக் கூறியுள்ளனர் அதற்கு தம்மிடம் நீண்ட காலத்துக்கு கருத்தடை வராமல், உடல் மெலிவது போன்ற பக்கவிளைவுகள் எதுவும் வராத கருத்தடை மருந்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர் அந்த மருத்துவ ஊழியர்கள்.

ஆரம்பத்தில் இந்த நீண்டகால, கட்டாய கருத்தடை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களிடம், இந்த கருத்தடை மருந்தை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அவர்களுக்கு வேறு எந்தவிதமான மருந்தும், மருத்துவ வசதிகளும், பராமரிப்புகளும் கிடைக்காமல் போகலாம் என அங்கிருந்த தாதிகள் தெரிவித்தனர்.


The Social Architects குழுவினரிடம் இன்னொரு பெண் ஆசிரியை நடந்த சம்பவத்தை இவ்வாறு விவரித்தார். “ இந்த மருத்துவமனை அதிகளவு மக்களால் நிரம்பி இருந்தது. அங்கு பதினேழு படுக்கைகளும்,  வெளியக மருத்துவப்பிரிவு ஐம்பதுக்கும் குறைவான நோயாளிகளை மட்டுமே கொள்ளக் கூடிய இடவசதியும் கொண்டது. என்னுடைய மகளின் நிறையை நிறுத்து அதைக் குறித்துக் கொண்ட பின்னர் அந்த அட்டையை அவர்கள்  என்னிடம் தரவில்லை. இரண்டு மணி நேரங்களுக்கு அதிகாமாக காத்திருந்த பின்னர் நான் வீட்டில் விட்டு வந்த என்னுடைய அடுத்த மகளைப் பற்றிய கவலை என்னைப் பற்றிக் கொண்டது. ஒரு பெண்ணுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த அவர்கள் அந்தப் பெண்ணை நீண்ட நேரம் எதற்காகவோ வற்புறுத்தி சம்மதிக்க வைக்க முயன்ற  பின்னர் வைத்தியரின் அறைக்குள் அனுப்புவதை நான் பார்த்தேன்.  அந்த வைத்தியரின் அறையை விட்டு வெளியில் வந்த பெண் ஒருவரின் கையில் பெரிய கட்டுடன் வெளியில் வந்ததை பார்த்ததும் எனக்கு கவலை அதிகரித்தது.

நான் எழுந்து சென்று எனது மருத்துவ பரிசோதனை அட்டையைக் கேட்டதற்கு என்னை கொஞ்சநேரம் காத்திருக்குமாறு கூறினார்கள்.  அரை மணி நேரம் காத்திருந்த பின்னர் மீண்டும் கேட்டேன். என்னுடைய தொந்தரவினால் வெறுப்படைந்த அவர்கள் அடுத்ததாக என்னை வருமாறு அழைத்தனர். நான் அவர்களுக்கு முன்னால் அமர்ந்ததும் என்னுடைய வயதையும், பாலுறவு, இனவிருத்தி, சுகாதாரம் சம்பந்தமான கேள்விகளையும், எனது குடும்பக்கட்டுப்பாடு சம்பந்தமாகவும் கேள்விகள் கேட்டனர்.

நான் இயற்கை முறையான எனது மாதவிடாய் சுற்றின் படி நடப்பதாகக் கூறினேன். என்னைப் பார்த்து சிரித்த அவர்கள், நான் 43 வயதில் கர்ப்பம் தரிக்க கூடாது எனவும், நான் அப்படி கர்ப்பம் தரித்தால் எனது குழந்தை அங்க குறைபாட்டுடன் பிறக்கும் எனவும் கூறினர் ஆனால் நான் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தேன். அத்துடன் என்னுடைய இரண்டு குழந்தைகளையும் “C” section மூலமாக நான் பெற்றெடுத்திருந்தாலும் கூட, இன்னொரு குழந்தையை என்னால் பெறமுடியும் என்றேன். நான் மீண்டும் கர்ப்பமடைந்தால் அது கடவுளின் விருப்பம் என்றேன்.  நான் அவர்களுடன் வாக்குவாதப் பட்டேன் அதனால் அங்கிருந்த தாதி என்னை அவரது மேலதிகாரியிடம் அனுப்பி வைத்தார். அவரிடமும் நான் அதையே கூறினேன் ஆனால் அந்த மேலதிகாரி அவர்களை விட மோசமானவர் மரியாதை என்றால் எதுவென்று தெரியாதவர். அதனால் எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. அவர்கள் கூறுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை அதனால் இந்த கருத்தடை சிகிச்சையைப் பெற முன்பு, நான் என்னுடைய கணவனின் அனுமதியைப் பெற விரும்புவதாகக் கூறினேன்.  நான் ஐந்து வருடங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் கூறினார்கள். அத்துடன் இது எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது, இது தான் சிறந்த கருத்தடை முறை எனவும் கூறினர். அதற்கு நான் எனது கணவனின்  அனுமதியை முதலில் பெற்றுக் கொள்ளாது விட்டால் அவர் என்னை  விவாகரத்து செய்து விடலாம் என்றும் கூறினேன். அதற்கு எனது பரிசோதனை அட்டையை அவர்களிடம் தந்து விட்டு, எனது கணவனின் அனுமதியுடன் வருமாறு கூறினார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்த நான், எனக்கு அவர்களின் கருத்தடை சிகிச்சை தேவையில்லை, நான் தொடர்ந்து எனது திருமண நாளிலிருந்து கடைப்பிடித்து வரும் இயற்கை முறையையே தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புவதாக எழுத்தில் தருவதாகக் கூறினேன். நான் அப்படி எழுதி எனது கையெழுத்தையுமிட்ட  பின்னர் எனது மகளையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து வீடு சென்றேன்.”

வழக்கமாக வேராவில் மருத்துவமனைக்கு பொறுப்பாக இருக்கும்  அந்த மருத்துவரை நான் காணவில்லை. அதற்கு முதல் நாள் மாலை எங்களின் பாடசாலைக்கு வந்த அந்த மருத்துவர், கிளிநொச்சியிலிருந்து பல மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்வதற்காக வருவதாகவும் அதற்கு பெரிய சட்டி, பானைகளைப் பெற்றுக் கொள்ளவும் வந்ததாகக் குறிப்பிட்டார். வேராவில் மருத்துவமனையில் என்ன நடக்கிறதென்பது அவருக்குத் தெரியுமென்று நான் நினைக்கவில்லை.

மருத்துவ மனையிலிருந்த மருத்துவ அதிகாரிகளுடன் பேசிய பின்னர், இந்த கருத்தடை சிகிச்சை பற்றி எதுவும் தெரியாததால், ஒவ்வொரு பெண்களும் தமது கணவனது அனுமதியைப் பெற விரும்புவதாகக் கூறினார்கள்.  அதற்கு கிளிநொச்சியிலிருந்து அங்கு வந்திருந்த மருத்துவ அதிகாரிகள் இந்த கருத்தடை திட்டத்துக்கு மறுப்பு தெரிவித்தால். ஒவ்வொருவரதும் கணவனையும் அழைத்து வைத்து அவர்களுக்கும் இதே கருத்தடையைச் செய்வோம் எனக் கூறினார் அங்கிருந்த ,மருத்த்துவ ஊழியர்கள். அதைக் கேட்டதும் பல பெண்கள் கருத்தடை செய்து கொள்ள சம்மதிக்க வேண்டிய வற்புறுத்தலுக்குள்ளாகினர்.

அந்தப் பெண்கள் தமது வீடுகளுக்குத் திரும்பி நடந்ததைக் கூறியதும், அவர்களின் கணவன்மார் அதை இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆகஸ்டு 31 இல் கொழும்பிலிருந்து மருத்துவர்கள்  ஆராய்ச்சி அல்லது பரிசோதனைகள் செய்வதற்காக வேராவில் மருத்துவமனைக்கு வரவிருப்பதாக முதல் நாள் இரவு தொலைபேசி மூலம் வேராவில் மருத்துவமனை   ஊழியர்களுக்கு  தெரிவித்திருக்கிறார் கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகளின் இயக்குனர் Dr. கார்த்திகேயன். அத்துடன் அவர்கள் 80 பேருக்கு உணவு சமைக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் கட்டாயக் கருத்தடை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளில் வேராவில் மருத்துவமனை ஊழியர்களில் பெரும்பான்மையினர்  கொழும்பில் இருந்து வந்தவர்களுக்கு உணவு தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இது மிகவும் பின்தங்கிய கிராமப்புறமாகையால், அங்கு எண்பது பேருக்கு சமைக்கும் அளவுக்கு பாத்திரங்களைப் பெற்றுக் கொள்வது கூட கடினமானது.
வேராவில் மருத்துவமனைக்கு பொறுப்பான மருத்துவ அதிகாரி கொழும்பில் இருந்து வந்திருந்த எண்பது பேருக்கும் நடந்த சமையல் வேலைகளை மேற்பார்வை செய்வதில் ஈடுபட்டிருந்ததால் அவரது மருத்துவமனையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரியவில்லை. உள்ளூர் மருத்துவமனை ஊழியர்கள் வெளியில் இருந்து வந்தவர்களுக்கு உணவு சமைத்துக் கொண்டிருக்கும்போது கட்டாய கருத்தடை திட்டம் அந்த ஊரின் தமிழ்ப்பெண்களுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. வேராவில் மருத்துவமனை ஊழியர்கள் அங்கு சென்ற போதே மருத்துவமனையில் ஒரே களேபரம், அங்கிருந்த பெண்களின் கைகளில் என்னவோ ஊசி ஏற்றப்பட்டிருந்ததைக் கண்டனர்.

இந்த கட்டாயக் கருத்தடைக்கு உட்படுத்தப்பட்ட முப்பத்தாறு வயதுடைய பெண் நடந்த சம்பவத்தை இவ்வாறு குறிப்பிட்டார்.. “ எனது கடைசிக் குழந்தைக்கு எட்டு மாதமாகிறது. என்னுடைய மூத்த குழந்தைக்கு மூன்று வயதாகிறது. மருத்துவமனைக்கு வந்து எனது குழந்தையின் நிறையை கணக்கிடுமாறு என்னை அழைத்தனர். அத்துடன் பல சிறப்பு பயிற்சி பெற்ற வைத்தியர்கள் கிளிநொச்சியிலிருந்து வருகிறார்கள் எனவும் கூறினார். அதனால் பெரிய எதிர்பார்ர்ப்புகளுடன் சென்றிருந்தேன். எனது குழந்தையின் நிறையை நிறுத்த பின்னர் என்னைக் காத்திருக்குமாறு கூறினார்கள்.  என்னை அழைத்து, இரண்டு குழந்தைகளை மட்டும் வைத்திருப்பதன் நன்மைகளை எடுத்துக் கூறினார்கள். எனக்கு இரண்டு மனமாக இருந்ததால் என்னை வைத்தியரிடம் அனுப்பி வைத்தனர்.

என்னுடன் மிகவும் நைசாக அதாவது நட்புடன் அன்பாகப் பேசிய அந்த மருத்துவர் இலங்கையிலும் அமெரிக்காவிலுமுள்ள படித்தவர்கள் இந்த கருத்தடை முறையைத் தான் பாவிப்பதாகக் கூறினார். படித்தவர்களை எதிர்த்து என்னால் எப்படிப் பேச முடியும். நான் விருப்பமில்லாமல் சம்மதித்தேன்.ஆனால் சில நாட்களின் பின்னால், எனக்கு வலி தாங்க முடியவில்லை, நான் மருத்துவமனைக்கு சென்றேன். அவர்கள் சிகிச்சை அளித்தனர் ஆனால் எனக்கு இதைச் செய்த மருத்துவரைப் பார்க்க விரும்பினேன். ஆனால் அவர் அங்கு இல்லை. இதைப்பற்றி தனக்கு எதுவுமே தெரியாதென இன்னொரு மருத்துவர் கூறினார். எல்லாம் சரியாகப் போய் விடும், அதாவது OK ஆகி விடும் என்றார் ஆனால் உண்மையில் நான் OK இல்லை.

படித்தவர்களால் எங்களுக்கு இப்படியானவற்றைச் செய்ய முடியும். யோசித்து முடிவெடுப்பதற்கு எனக்கு கொஞ்சம் அவகாசம் தந்திருக்கலாம். அந்த இடத்திலேயே முடிவெடுக்குமாறு எங்களை வற்புறுத்தினார்கள். கருத்தடையை செய்து கொள்ளு முன்பு என்னுடைய கணவனோடோ அல்லது எனக்குத் தெரிந்தவர்களிடம் அதைப் பற்றிபேசக் கூட என்னால் முடியவில்லை. அந்த மருத்துவர்கள் நல்லவர்கள் அல்ல, அவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள்.


சர்வதேச சட்டங்களின் கீழ் கட்டாயக் கருத்தடை திட்டங்கள் கொடூரமானது, மனிதவுரிமைகளுக்கு எதிரான, மனிதர்களை இழிவு படுத்தும் செயல்

இந்த கருத்தடை திட்டங்கள் இந்தப் பெண்களின் உடலில் எதிர்மாறான விளைவுகளை ஏறபடுத்தியிருந்தால் அதற்கு யார் பொறுப்பு?

மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குனர் இந்த மிகவும் சிறிய கிராமிய மருத்துவமனைக்கு சனிக்கிழமை அதிகாலையில் எதற்காக சென்றிருந்தார்.
இலங்கை அரசும், அரச ஊழியர்களும் அவர்களின் உண்மையான திட்டத்தை ஏன் மறைக்கிறார்கள்?

இந்த கருத்தடை திட்டம் கிளிநொச்சி- மன்னார் மாவட்ட எல்லைப்புறக் கிராமத்தில் அதுவும் குறிப்பாக ஒரு கத்தோலிக்க கிராமத்தில் எதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டது.

தமிழ்த் தாய்மார்களை உண்மையைக் கூறாமல்  எதற்காக அவர்களின் குழந்தைகளின் நிறைகளை அறிவதற்கு வருமாறு அழைத்தனர்?

போருக்குப் பிந்தைய இலங்கையில் தமது உடலுக்கு என்ன நடக்கப்போகிறது என்ற உண்மையை அறியும் உரிமை பெண்களுக்குக் கிடையாதா? தமது குடும்பக்கட்டுப்பாடு சம்பந்தமான விடயங்களைத் தானே சுயமாக தீர்மானித்துக் கொள்ளும் உரிமை பெண்களுக்குக் கிடையாதா?

Another twenty-eight-year-old mother of two children from Valaipaddu said they all gathered at the pre-school. She said, “All of us with children under the age of five were asked to assemble here with a clinic card. About thirty nurses, midwives, other health officials and a few doctors who had come from the Ministry of Health (MoH) in Kilinochchi district had come. They spoke to us about family planning and asked us to come to the hospital. Many of us went with them in their vehicle or ambulances and we were taken to Veravil hospital. They injected something on our upper arm. I trusted these doctors. We have never seen this many doctors. How can we say no to such educated people? This must be good for us and that is why they have done this to us. The only concern I have is that they should have told us what they were going to do the previous day when they asked us to come. They were a little dishonest with us.”
When TSA spoke to both medical professionals and others attached to Veravil hospital they didn’t have a clue of what Progestogen-only subdermal implants (POSDIs) actually were. They didn’t know anything about the side effects either. In addition, the women were given a card by those who administered the procedure. Yet the card was only in English. 

This coercive population control project violates myriad fundamental rights, reproductive rights, and basic notions of human dignity. After government health workers used false pretenses to gather the women at the hospital, the doctors and nurses failed to provide the women with information on the full spectrum of contraceptive choices. In violation of the women’s right to bodily autonomy, right to information, and right to reproductive autonomy, the doctors and nurses provided false and misleading information about the side effects and after-insertion care. In reality, side effects include hypertension, weight gain, irregular periods, hormonal imbalance, and venous thrombosis (clotting of blood vessels). The medical professionals failed to tell the women that the injectable can be removed at any time. Moreover, the information card the pharmaceutical company provides is in English; the women did not have access to information about this drug in Tamil. Furthermore, the section on the card labeled ‘For further information, please contact:’ is followed by a blank. 
Women have a right to understand the benefits and potential side effects of all available contraceptive options that they may require at different stages of their lives. They have the right to accept or deny any form of contraception at any time. Removing the implant requires a medical intervention (unlike pills), therefore reducing the woman’s control over her reproductive self-determination. Contraceptive counseling with an emphasis on free choice is especially important in conflict zones where women already have fewer options, inadequate information, and limited access to primary health services including contraception. Misleading women into hospital visits, presenting false medical information, and the failure to ensure a woman’s right to make an informed, meaningful choice amounts to coercion and force – clear violations of women’s autonomy, well-being, dignity and bodily integrity. 
Coerced medical procedures constitute cruel, inhuman, and degrading treatment under international law. 
What if a woman had reacted adversely to this procedure? Why did a district hospital director personally visit this very small hospital on a Saturday morning? 
Why did Sri Lankan government employees hide conceal their real agenda? Why would this have happened in a predominantly Catholic community on the Kilinochchi-Mannar border? Why did government employees call people in under the pretext of weighing their children? 
In post-war Sri Lanka, doesn’t a woman have a right to know the truth about what is going to be done to her body? Don’t women have the right to make an informed choice about their reproductive health? 
TSA will continue to monitor this disturbing story.

Friday, September 13, 2013

இந்திய அகதிகளின் வருகையில் திடீர் அதிகரிப்பு!


பல இந்தியர்கள் ஈழத்தமிழர்கள் அகதிகளாக மேலைநாடுகளுக்கு போவதை நக்கலடிப்பதையும், அகதிகள் எனக் கூறி ஈழத்தமிழர்களை அவமானப்படுத்துவதையும்  நாமறிவோம்.  அவர்கள் உண்மையில் தமிழர்களா அல்லது தமிழ்நாட்டில் வாழும் தமிழ்பேசும் திராவிடர்களா என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் தமிழ்நாட்டில் தான் கண்டவன், நின்றவன், வந்தவன், போனவன், பிழைப்பு தேடி வந்தவன், பிச்சை எடுக்க வந்தவன், அப்பன் ஆச்சி தமிழர் இல்லாதவன், எல்லோருமே, நாலு வார்த்தை தமிழில் பேசக் கற்றுக் கொண்டவுடன், நானும் தமிழ் பேசுகிறேன், எனக்கும் தமிழ் நாட்டை ஆள ஆசையாயிருக்கு, அதனால் நானும் தமிழன் தான் என்று வாதாடுகிறார்கள். 
அது ஒருபுறமிருக்க, அதிலும் குறிப்பாக  யாராவது ஈழத்தமிழர்கள் தமிழ், தமிழர், தமிழ்நாடு சம்பந்தமாக தமது கருத்தைத் தெரிவித்தால், அல்லது தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றால் அல்லது தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் எனக் கருத்து தெரிவித்தால், தமிழ் பேசும் அவர்கள்  கூறுவது என்னவென்றால் ஈழத்தமிழர்களால், தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஓட்டைக் கப்பலில், அல்லது கள்ளத்தோணியில் ஏற வேண்டி வருமாம்.  அதிலும் ஒரு மெத்தப்படித்தவர் ஒரு படி மேலே போய் யாழ்ப்பாணத்தமிழர்கள் தமிழ்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்தப் பார்க்கிறார்கள், அதனால் இந்தியர்களாகிய தமிழ்நாட்டு தமிழர்கள் ஈழத்தமிழர்களைப் போல் கள்ளத்தோணியில் ஏற வேண்டி வரும் என்றார். அப்படிக் கூறுபவர்களுக்கு உண்மையில் கள்ளத்தோணியின் உண்மையான சரித்திரம் தெரியாது என்பது மட்டும் தெளிவாகிறது. 

ஈழத்தமிழர்கள் அகதிகளாக மற்ற நாடுகளுக்குப் போனதற்கு காரணம் உள்நாட்டுப் போர், சிங்கள இனவேறி, இனக்கலவரம் என்பது உலகம் முழுவதுக்கும் தெரியும் ஆனால் சில நாட்களுக்கு முன்னால் வெளியிடப்பட்ட அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கையின் படி இந்தியாவிலிருந்து அகதிகள் அமெரிக்காவில் குவிகிறார்களாம். அதிலும் இந்திய அகதிகளின் வருகையில் திடீர் அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது.  அந்த செய்தியைப் பார்க்கும் போது “பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை” என்ற ஈழத்துப் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
Indian Boat People in Canada 1914

ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் அகதிகளாகக் குவியும் போது, இலங்கைத் தமிழர்களால் இனிமேல் தான் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதாவது இந்தியர்கள் இனிமேல் கள்ளத்தோணியில் ஏறவேண்டி வரும் என்பது போல் உளறியவர்களின் வாயை அடக்குவது போல் உள்ளது United States Department of Homeland security இன் இந்த செய்தி. 


உண்மையில் வெளிநாடுகளில் தமது உயிரைக் காப்பற்ற அகதிகளாக புகலிடம் கேட்குமளவுக்கு இந்தியாவில் நிலைமை இல்லை.  இந்தியா உண்மையில் சுமாரான சனநாயக நாடு, இலங்கையிலுள்ளது போன்ற நிலை இந்தியாவில் இல்லை. அப்படியானால் அமெரிக்காவில் அகதியாக அடைக்கலம் கோரும் இந்தியர்களில் பெரும்பாலானோர் பொய்களைச் சொல்லி அமெரிக்க அரசின் சட்டங்களை துர்ப்பிரயோகம் செய்வது மட்டுமன்றி,  உள்நாட்டுப் போர், இனவழிப்புகளிலிருந்து தப்பி அல்லது அரசியல் காரணங்களுக்காக உயிரைப் பாதுகாக்க ஓடிவரும் உண்மையான அகதிகளுக்கென உருவாக்கப்பட்ட அமெரிக்க அகதி நடைமுறைகளையும், அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளையும் ஏமாற்றுகிறார்கள்.

இந்த லட்சணத்தில் இலங்கைத் தமிழர்களை அகதிகள் என நக்கலடிப்பவர்களையும், அவர்களால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கள்ளத்தோணியில் ஏற வேண்டி வருமென உளறும் இந்தியர்களையும் நினைக்க சிரிப்பு தான் வருகிறது.

இலங்கைத் தமிழர்களாவது தமது சொந்தக் காசைக் கொடுத்து ஓட்டைக் கப்பலிலோ, அல்லது ஓட்டைப் பிளேனிலோ ஏறி அந்தந்த நாடுகளுக்குப் போய் நேரடியாக இறங்குகிறார்கள் ஆனால் இந்தியர்கள் என்னடாவென்றால் ஓட்டைக் கப்பல், ஓட்டைப்பிளேன் எல்லாம் ஏறி தென்னமெரிக்க நாடுகளில் எல்லாம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அலைந்து, மெக்சிகோவில் இறங்கி பல மைல் தூரம் பாலைவனம் எல்லாம் கடந்து அமெரிக்க எல்லையில் போய் புகலிடம் கேட்டு அழுகிறார்களாம், அது மட்டுமல்ல ஆயிரக்கணக்கானோர்  அமெரிக்க சிறைகளில் வருடக் கணக்கில் வாடுகிறார்கள். அதிலும் வேடிக்கை என்னவென்றால் ஒவ்வொரு இரவும் குறைந்தது இரண்டு டசின் (24 பேர்) இந்தியர்கள் இந்தியாவில் தமக்கு நடந்த 'சோகக் கதைகளை', அதாவது அரசியல் காரணங்களால் அவர்களின் உயிருக்கு ஆபத்து என்பதை நம்பக் கூடிய விதமாக சொல்லி அமெரிக்கர்களை நம்பவும் வைக்கிறார்களாம். 

  

Thursday, September 12, 2013

மாட்சிமை தங்கிய இராமநாதபுரம் மகாராணிக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மாட்சிமை தங்கிய மகாராணி கிருஷ்ணராஜேஸ்வரி நாச்சியார் அவர்கள் கச்சதீவு தமது சமஸ்தானத்துக்கு சொந்தமானது என ஒரு சில நாட்களுக்கு முன்னால் பத்திரிகைகளுக்கு தெரிவித்திருந்தார். அது காணொளியிலும் வெளியிடப்பட்டுள்ளது.இராமநாதபுரம் மகாராணி வறுமையில் வாடுகிறாரா? சிங்களவர்கள் சிரிக்கிறார்கள்.

இந்தக் காணொளியில் மகாராணி மிகவும் சாதாரணமாக, அதிலும் இலங்கையில் ஒரு மத்திய தரக் குடும்பத்தை விடவும் ஏழ்மையாகக் காணப்படுகிறார். அதைப் பார்த்த சிங்களவர்கள் அவர் கச்சதீவுக்கு சொந்தம் கொண்டாடுவதை, அதாவது அவரது  செய்தியின் முக்கியத்துவத்தை கவனிப்பதை விட்டு, மகாராணியைப் பார்த்தால்  நீர்கொழும்பில் நான் மீன் வாங்கும் பெண் போல இருக்கிறார்” (HM looks like someone I buy fish from in Negombo) என்கிறார்கள்

அதனால் மாட்சிமை தங்கிய மகாராணிக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:

நீங்கள் இன்று உங்களின் ஆட்சியை இழந்தாலும், பெருங்காய டப்பா போல் உங்களுக்கு என்று புகழும், பாரம்பரியமும் இருக்கிறது அது மட்டுமல்ல நீங்கள் தமிழர்களின் வரலாற்றின் அடையாளம். உங்களுக்கென்றொரு அந்தஸ்தும், மதிப்புமிருக்கிறது. அதில் மற்ற இனத்தவர்களின் முன்னால் தமிழர்களின் அந்தஸ்தையும் மரியாதையும் கூட கலந்திருக்கிறது. நீங்கள் கலப்பில்லாத ஒரு தமிழ்ப்பெண்ணாக அழகாக, கண்ணியமாக  காட்சியளிக்கிறீர்கள், அதில் எங்களுக்குப் பெருமையே.  ஆனால் ஆள் பாதி ஆடைபாதி  என்பார்கள் அதனால் இப்படியான நேர்காணலை ஊடகங்களுக்கு அளிக்கு முன்னால் உங்களின் அரசபரம்பரையின் அந்தஸ்தைக் காட்டும் வகையில் ஆடையணிகளை அணிந்து கொள்ளுங்கள். அதற்காக முடிசூடிக் கொண்டு சர்வாலங்கார பூஷிதையாக ஊடகங்களை சந்தியுங்கள் என்று நான் கூறவில்லை.

அண்மையில் திருவாங்கூர் இளவரசி (Her Highness the princess of Travancore Gouri Parvathi bayi)

தொலைக்காட்சிக்களித்த நேர்காணலில் தனது பரம்பரைப் பெருமையை மற்றவர்களுக்குக் காட்டும் வகையில் உயர்ரக சேலையும், அரச குடும்பத்தின் நகைகள் சிலவற்றை அணிந்திருந்தார். அதே போல் தஞ்சாவூரில் உள்ள மராத்தி அரசபரம்பரையின் வாரிசுகளில் ஒருவர்.  ஊடகங்களுக்களித்த நேர்காணலின் போது தனது பரம்பரை அந்தஸ்தைக் காட்டும் நகைகள் அணிந்திருந்தார். அவர்களிடம் எல்லாம் நகைகளையும், மாளிகையையும் விட்டு விட்டு, தமிழ் மகாராணியாகிய உங்களிடமிருந்து மட்டும் எல்லாவற்றையும் அபகரித்து விட்டார்களா என்று எனக்குத் தெரியாது.  

நீங்கள் எளிமையாக இருப்பது நல்லது தான் ஆனால் இக்காலத்தில் உங்களின் நேர்காணல் தமிழ்நாட்டுக்குள் மட்டும் தங்கி விடப் போவதில்லை. உலகமெங்கும் சில நிமிடங்களில் சென்றடைந்து விடும், நாங்களும் பெருமையாக வேற்று இனத்தவர்களுக்கு தமிழர்களிடமும் அரசர்களும், அரசிகளும் இருந்தனர், உங்களிடம் மட்டுமல்ல எங்களிடமும் தான் ராஜ பரம்பரையினர் இன்னும் இருக்கின்றனர், தமிழர்களிடமும் மாளிகைகள் இருக்கின்றன என்று காட்டிப் பெருமைப்பட முடியும். 

தமிழ்நாட்டில் சாதாரண மத்தியதரக் குடும்பங்களிடமே எவ்வளவோ நகைகள் இருக்கும் போது, ஒன்றுமில்லாமல் ஒருவழிப்பயணச் சீட்டோடு தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த தமிழரல்லாத திராவிட நடிகர்களே இவ்வளவு நகை நட்டுகளுடன்  செல்வாக்காக வாழ்கிறார்கள் அதனால். உங்களிடமும் உங்களது பரம்பரை நகைகளில் சிலவற்றையாவது விட்டு வைத்திருப்பார்கள் அதனால் இவ்வாறு நீங்கள் ஊடகங்களைச் சந்திக்கும் போது அவற்றில் சிலதை அணிந்து தமிழர்களின் அரசபரம்பரையில் வந்தவர்கள் நீங்கள் என்பதைக் காட்டுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

REDPIX இன் சேக் பரீத் க்கு ஒரு குட்டு


தனது கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கையில் மகிழ்ச்சியடைகிறார் ராஜேஸ்வரி” என்றும் "சென்னையில் வாழும் ராஜேஸ்வரி" என்றும்  மொட்டையாகச் சொல்லும் அந்த நேர்காணலை நடத்தியவரின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைக்க வேண்டும். அதே வேளையில் அவரிடமே தன்னை யாரும் பெயர் சொல்லிக் கூப்பிட மாட்டார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார் இராமநாதபுர மகாராணி. குறைந்த பட்சம் திருமதி ராஜேஸ்வரி அல்லது மகாராணி ராஜேஸ்வரி அல்லது ராஜேஸ்வரி நாச்சியார் என்றாவது கூறியிருக்கலாம். அதை விட மகாராணிக்கு முன்னால் எப்படி உட்காருவது என்பது கூடத் தெரியவில்லை அவருக்கு. நாங்கள் விரும்பாது விட்டாலும் மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில்  உரிய மரியாதையைக் கொடுத்து தான் ஆக வேண்டும் அது தான் பண்பு, அந்தப் பண்பு. மேலேயுள்ள  காணொளியில் இராமநாதபுரம் மகாராணியை நேர்காணல் கண்டவரிடம் இல்லை. அதாவது ஒரு அரசபரம்பரையின் வாரிசை, மகாராணியை எப்படி அழைப்பது என்று அவருக்குத் தெரியவில்லை.


Wednesday, September 11, 2013

பாரதியார் கண்ட கனவை நனவாக்கியவர்கள் ஈழத்தமிழர்கள்!இன்று மகாகவி பாரதியின் நினைவு நாள் புரட்டாதி 11. அந்நிய மோகங்களில் மயங்கி, தன்னிலை மறந்து, தன்னம்பிக்கை இழந்து கிடந்த தமிழ்மொழியை, தமிழர்களை தனது பாட்டுத்திறத்தால்  தட்டி எழுப்பியவன் தமிழன்னை ஈன்ற தவப்புதல்வன் சுப்பிரமணிய பாரதி.

Bharathiyar Statue in Jaffna
எமது முன்னோர்களின் பாரம்பரியங்களை, கலாச்சாரத்தை, மதத்தை வெறுக்காமல், மொழியை  ஒதுக்காமல், நான் தமிழன் என்று பெருமைப்பட்டுக் கொண்டே, என்னுடைய தமிழ்  மொழி தான் நானறிந்த மொழிகளிலே சிறந்த மொழி என்று பீற்றிக் கொண்டே, தமிழ்க்கடவுள் முருகனைப் புகழ்ந்து பாடிக் கொண்டே சாதியை மறுக்கலாம்,  மனிதநேயமுள்ள தமிழனாக இருக்கலாம், ஏன் பார்ப்பனர்களின் மனுசாத்திரத்தைக் கூட எதிர்க்கலாம் அதற்காக நாத்திக, திராவிட வேடம் போடத் தேவையில்லை என்பதை வாழ்ந்து காட்டிய பாரதியார் தான் நானறிந்த தமிழர்களிலே உண்மையான தமிழன் என்பது எனது கருத்தாகும்.

"இன்று ஒரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன் எனது ஆருயிர் மக்காள்!
கொன்றிடல் போல் ஒரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்று பாரதியார் கண்ட கனவை நனவாக்கியவர்கள் நாங்கள்- ஈழத்தமிழர்கள். எங்களை அகதிகள், கள்ளத்தோணிகள் பல வலைப்பதிவர்கள் நக்கலடித்தாலும், எங்களால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் கள்ளத்தோணிகளில் ஏற வேண்டி வருமென சில தமிழ்நாட்டுச்  சிங்கள அடிவருடிகள் உளறினாலும் கூட, நாங்கள் எங்கு சென்றாலும் தமிழை மறக்கவில்லை. இன்று ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ ஏன் உலகம் முழுவதும் தேமதுரத் தமிழோசை கேட்கிறது என்றால் அதற்குக் காரணம் ஈழத்தமிழர்கள் தான்.  பாரதியார் இன்றிருந்தால் எங்களுக்காக எத்தனையோ கவிதைகள் பாடியிருப்பார்.


கனடா  பாராளுமன்றத்தில் இலங்கைத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி. ராதிகா சிற்சபேசன் தமிழில்  கன்னிப் பேச்சு.
"ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்
சீருக்கெல் லாமுத லாகும் - ஒரு
தெய்வந் துணை செய்ய வேண்டும்" 

Tuesday, September 10, 2013

சிங்களவரும் முஸ்லீம்களும் இணைந்து தமிழர்களை வேட்டையாடிய சத்துருக்கொண்டான் படுகொலையின் நினைவு தினம் இன்று.


 சத்துருக்கொண்டான் படுகொலையின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று மட்டக்களப்பில் நடைபெறுகிறது .  1990ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் அரசுத்தலைவர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்திருந்தார். 

இச்சம்பவத்தில் 8வயதுக்கு உட்பட்;68 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் 80க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.

இந்த படுகொலையில் இராணுவத்துடன் முஸ்லீம் ஊர்காவல்படையும் இனப்படுகொலை புரிந்தனர் என்பது பின்னர் தெரியவந்தது.

காயங்களுடன் தப்பி சென்ற சிவகுமார் என்ற இளைஞரை இராணுவம் தேடிய போது மட்டக்களப்பு பிரஜைகள் குழுவும் ஆயர் இல்லமும் அவரை மறைத்து வைத்து வைத்தியம் செய்து காப்பாற்றியிருந்தனர். இதன் பின்னர் ஆணைக்குழு முன் அவர் இந்த படுகொலைகள் பற்றி சாட்சியமளித்திருந்தார். இந்த படுகொலையை அப்போது சத்துருக்கொண்டான் இராணுவ முகாமுக்கு பொறுப்பாக இருந்த காமினி வர்ணகுலசூரிய என்பவன் தலைமையிலான சிங்கள இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல் படையை சேர்ந்த மஜீத் என்ற முஸ்லீம் பயங்கரவாதிகளும், ஏறாவூர் முஸ்லீம்களும் சேர்ந்து இந்த ஈவிரக்கமற்ற படுகொலையை புரிந்தனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் இன்று மாலை அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த அஞ்சலி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், உட்பட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
ஊறணி, பிள்ளையாரடி, பனிச்சையடி, குடியிருப்பு என குட்டிக்கிராமங்கள் சேர்ந்தது சத்துருக்கொண்டான் கிராமம். மட்டக்களப்பு நகரத்திலிருந்து நான்கு கிலோமீற்றர் தூரத்திலிருந்தாலும் கிராமத்துக்குரிய பண்பாட்டுக் கோலங்களை அது இழந்துவிடவில்லை.

அரச உத்தியோகத்தவர்கள், கமம் செய்வோர், கடற்தொழில் புரிவோர் என பல்துறை தொழில் புரிபவர்கள் இக்கிராமத்திலிருந்தாலும் அரச உத்தியோகத்தவர்களும், விவசாயிகளும் பெருந்தொகையில் இருக்கின்றமை கிராமத்தின் வளத்தை கோடிட்டுக்காட்டுகிறது. அடிக்கடி சூறாவளி வீசி மட்டக்களப்பு மண்ணை பந்தாடியதுண்டு. சூறாவளியில் திருகி எறியப்பட்டாலும் தென்னங்கீற்று சத்துருக்கொண்டானுக்கு அழகும் குளிரையும் கொடுத்துக் கொணடேயிருக்கின்றன.

தமிழர்களாகப் பிறந்தும் தன்கையே தன் கண்ணைக் குத்துவது போல முஸ்லீம் மக்கள் தமிழ்மக்களை கொல்வதில் சிங்கள இராணுவத்திற்கு துணைநின்றார்கள். துணைநின்றது மாத்திரமல்லாமல் அக்கொலைகளிலெல்லாம் பங்கெடுத்துக்கொண்டார்கள். மதத்தால் வேறுபட்டிருந்தாலும் இனத்தால் ஒன்றுபட்ட முஸ்லீம் மக்களின் இத்தகைய செயற்பாடுகள் குரோதமனப்பாங்கை வளர்த்துவிட சிங்கள இனவாதிகள் இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.  
1990ம் ஆண்டு புரட்டாதி  9ம் நாளில் சத்துருக்கொண்டானில் நூற்று எண்பத்துநான்கு தமிழர்களின் அவலக்குரல் ஓங்கி ஓலித்து அடங்கிப்போனதை வெளிப்படுத்தவோ புரட்டிப்பாரக்கவோ யாரும் விரும்பவில்லை. எரியும் நெருப்பில வெட்டி வெட்டி வீசிய எமது மக்களின் உடல்கள் கருகிச் சாம்பலானதைக்கண்டும் காணாமலிருக்க எப்படி முடிந்தது. வெட்டி வீசப்பட்டவர்கள் ஏழைகளே. ஏழைகளின் குரலும் குருதியும் தமிழர் பூமியில் சிங்கள இனவாதிகளுக்கு மலினமாகிவிட்டதோ? 
தன்னுடைய மைத்துனிமார் மருமகள் அவர்களின் பிள்ளைகள், சீனியப்பு (சித்தப்பா, சீனியம்மா, சின்னம்மா), மாமா, அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள என ஒன்றாக முப்பததைந்துபேரை (35) இழந்த சினனத்தம்பி சின்னப்பிள்ளையிடம் சத்துருக்கொண்டான் வின்சன் டிப்போ தோட்டத்தில தீயில எரிந்து போன எமது மக்களின் மரண ஓலத்தை பகிர்ந்துகொண்டேன்.
“ஞாயிற்றுக்கிழமை நாலுமணிக்கெல்லாம் போன ஆமியும் முஸ்லீமும் சேர்ந்து கடகடவென்று ஊரெல்லாம் சுத்திவளைச்சிட்டாங்கள். பனிச்சையடி பிள்ளையாரடி ஆக்களெல்லாம் முதல் நாளே எழுப்பி குடியிருப்புபக்கம் போய்த்தாங்கள். ஆமி ஊருக்க புகுந்து எல்லாரையும் கொல்லப்போறானென்று கதையொன்று வந்தது. கேள்விப்பட்டவுடன் பயத்தில் அவங்க எல்லாம் குடியிருப்புப் பக்கம் போனாங்கள். ஆனால் அவனுகள் குடியிருப்புக்கு போனவங்களையும் விடல்ல. அங்கதான் நம்மட மாமாவையும அவங்கட பிள்ளையள் பிள்ளையளின்ட பிள்ளைகள் என பத்துப்பேரை கொண்டுபோனாங்க.
பனிச்சயடியில் வச்சு நம்மட மச்சாள்மார் பரஞ்சோதி செளந்தரம் குணரெத்தினம் சீனியப்பு சீனியம்மை இவங்கட பிள்ளையள் பேரப்பிள்ளைகளென முப்பத்தைந்து பேரை பிடிச்சிட்டான்.
நம்மட குணரெத்தினத்திர மூண்டு பிள்ளையள் பெரிய பாவம். ஒண்டுக்கு ஆறுவயது மற்றரெண்டுக்கும் எட்டு வயதும் பத்து வயதும் மூண்டும் கை கால் வழங்காததுகள் இருக்கமாட்டுதுகள். படுத்தபடுக்கையிலதான் மலம் சலமெல்லாம் போகும். மூத்தது நந்தினி அதுமட்டுந்தான் பிள்ளையாட்டம் இருந்தது. புத்தி சுவாதீனமில்லாத கை கால் வழங்காத இந்த மூண்டு பிள்ளையளையும் கூட வந்தவங்கள் விடல்ல. அடிச்சு சப்பாத்துக்காலால் மிரிச்சு உழுக்கி போட்டு இழுத்துக்கொண்டு போனானுகள். 
புருஷன் பேரின்பன் முத்துப்போடியன் விட்டிட்டு ஓடினப் பிறகும் குணரெத்தினம் அந்தப் பிள்ளையளோட பட்ட கஸ்ரம் சொல்லேலாது. மகன், இவங்களையெல்லாம் இழுத்திட்டுப் போனாங்களெண்டு நினைக்க பத்தி எரியுது. ஆமிக்காரனுகள் கூட்டிட்டுவந்த முஸ்லீங்களுக்கும் துவக்கு கொடுத்திருந்தாங்கள் அடுப்படியில் நிண்டாப்போல, கிணத்தடியி்ல் நிண்டாப்போல, உரல்ல நெல்லுப்போட்டாப்போல அப்பிடி, அப்பிடியே ஒதுக்கீட்டுப் போனாங்கள். உடுப்புக்கூட மாத்தவிடல்ல. பெரியதுரை கதைச்சிட்டு விடுவாரெண்டு சொன்னாப்போல அப்படியே போயிட்டாங்கள். 
எல்லாரையும் பிள்ளையாரடியில் ஒதுக்கீட்டு வந்தானுகள் வின்சன் டிப்போ தோட்டப்பக்கம் கொண்டு போயிட்டானுகள். அங்க தான் அவங்கட காம்பு இருந்தது. இனி அங்க என்ன நடந்ததெண்டு பாக்க முடியல்ல. தோட்டத்தில் பெரிசாய் நெருப்பு எழும்பி பத்திக்கொண்டிருந்தது. அழுகைக் குரல் கேட்டது. விடியும் வரை நெருப்பு எரிஞ்சுகொண்டிருந்த. கத்திக்குத்து வாங்கி செத்துப்போனமாதிரிக்கிடந்து தப்பியோடிவநத வண்ணான் ஒருவன் இருக்கின்றான். அவனுக்கு எலலாம் தெரியும். நெருப்பு எரிஞ்சுகொண்டிருக்க ஒவ்வொருத்தராய் வெட்டி வெட்டி நெருப்பில் வீசிட்டுத்தாங்களாம். ஒருததர கூட மிஞசல்ல.
 
மறுகா ஒருத்தரும் டிப்போதோட்டப் பக்கம் போய்ப்பாக்க விடல்ல. ஒருகிழமை ரெண்டுகிழமை கழிச்சு எல்லாரும் காம்பில் போய்க்கேட்டம் நாங்க ஒருத்தரையும் பிடிக்கல்ல. கொண்டு வரவுமில்ல நமக்கு எதுவும் தெரியாது எண்டு சொல்லீட்டாங்கள். இனி நாம் யாரிட்டப்போய்க் கேக்கிறது.
நல்ல வேளை நம்மட சின்னமகன் சுதன் கதிர்கட்ட வயல்பக்கம் போனாப்போல தப்பீட்டான். அங்க இஞ்ச வேளைக்கு போனாக்களைத்தவிர எல்லாருமே இதில் பட்டிட்டாங்கள். இதுகெல்லாம் முடிவு எப்ப மகன் வரப்போகுது. இனியும் செய்யமாட்டாங்களெண்டு எப்பிடிச்சொல்றது. அதுதான் நாம அவனுகளுக்கு கிட்டஇருக்காமல் கரடியனாத்துப் பக்கம் வந்திட்டம்"

 என இந்த மூதாட்டி சொல்லுமபோது பதினொரு(23) ஆணடுகள் மறைந்து போனாலும் அந்த பயங்கர அனுபவம் அவர முகத்திலும் குரலிலும் தெரிந்தது.
சத்துருகொணடான் வின்சன் டிப்போ தோட்டத்தில எரிந்து சாம்பலாகிப்போன தமிழர்களுக்காக எங்கும் எந்தக்குரலும் ஓங்கி ஒலிக்கவில்லை. ஏழைகளின் ஏக்கமும் தாக்கமும் குரலும் குருதியும் மனித உரிமை அமைப்புகளைக்கூட கண்முடியிருக்கச் செய்துவிட்டது. தமிழர்களின புதைகுழி மேலும் அவர்களின் சாம்பல் மேட்டிலும் நின்று ஏப்பம் விடும் சிங்கள அரசிடம் நீதி நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.
இலங்கையில் நடந்த படுகொலைகளைப் பற்றி குறிப்பிட்டால்  "அப்பாவி" 
முஸ்லீம்கள் காத்தான்குடியில்கொல்லப்பட்டது தான் என்று அனைவரும் 
கூறுமளவுக்கு விளம்பரப்படுத்தி உலகம் முழுவதும் அனுதாபம்  சம்பாதித்துக்கொண்டார்கள்  இலங்கை முஸ்லீம்கள். அது மட்டுமல்ல,  முஸ்லீம்களின் 
இணையத்தளங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை  வெளியேற்றியதையும், காத்தான்குடி பள்ளிவாசல் சம்பவத்தை இன்றும் பெரிதாக  விளம்பரப்படுத்தி  தமிழர்களை பழிவாங்குமாறு முஸ்லீம்களை தூண்டுகிறார்கள்.   

முஸ்லீம்களின் கொலைகளை காரணம் காட்டியே தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவளித்ததில்லை. அண்மையில் கூட ஜெய்னுலாப்தீன் போன்றவர்களும் ஏனைய தமிழ்நாட்டு வஹாபிகளும்  ஈழத்தமிழர்களுக்கெதிராக, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பொய்ப்பிரச்சாரங்களை நடத்தியிருப்பதை காணொளிகளில் காணலாம். ஆனால் முஸ்லீம்களும் அவர்களின் முஸ்லீம் காடையர்களையும்ஜிகாதிகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட முஸ்லீம் ஊர்காவல் படையினரும் சேர்ந்து 
எத்தனையோ  தமிழர்களின் படுகொலைகளை கிழக்கு மாகாணத்தில் அரங்கேற்றியிருக்கிறார்கள். இந்துக்கோயில்களை அழித்திருக்கிறார்கள், பல கிராமங்களில் தமிழர்களே இல்லாதவாறு அகற்றியிருக்கிறார்கள்  அதனால் தான் இன்று பழந்தமிழ் மாவட்டமான அம்பாறை மாவட்டத்தில்தமிழர்கள் 
மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  முஸ்லீம் ஊர்காவல் படை (Muslim Home Guards) 

The released two home guards by the LTTE (extreme left) are seen with Muslim religious leaders
இலங்கையில் சிங்கள அரசால் உருவாக்கப்பட்ட ஊர்காவல்படை அல்லது ‘Home Guards’ என்பது பாலஸ்தீனத்தில் வெஸ்ட் பாங்கில் (West Bank) இல் இஸ்ரேலியர்களால் 1979 களில் உருவாக்கப்பட்ட ‘Village Leagues system’ போன்றது. அங்கு உருவாக்கப்பட்ட Village Leagues இன் பாதுகாப்புப் பிரிவினர் இரவு வேளைகளில் வீதிகளை ரோந்து வருவதுடன் இஸ்ரேலுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் பாலஸ்தீன தேசியவாதிகளின் வீடுகளையும், வாகனங்களையும் தாக்குவது, அவர்களைப் பயமுறுத்துவதுடன் கொலைகளையும் செய்தனர். அந்த முறையிலேயே இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் இஸ்ரேலிய ஆலோசனையுடன் உருவாக்கப்பட்ட முஸ்லீம் ஊர்காவல் படையினரும் நடந்து கொண்டனர். இவர்கள் தான்  இலங்கையில் தமிழ்-முஸ்லீம் உறவைச் சீரழித்தவர்கள் மட்டுமல்ல, தமிழர்களின் படுகொலைகளை சிங்களவர்களுடன் சேர்ந்து நடத்தியவர்கள். இவர்களுக்கு முஸ்லீம்கள் அனைவரும் ஆதரவளித்தனர். அத்துடன் இவர்களை தமக்கு கல்வியிலும், வர்த்தகத்திலும் போட்டியாக விளங்கிய தமிழர்களை அழிப்பதற்கும், தமிழர்களை தமது வரலாறு பூர்வ தமிழ்க்கிராமங்களிளிருந்து விரட்டியடிப்பதற்கும் பயன்படுத்திக் கொண்டனர் கிழக்கு மாகாணத்தில் வாழும்  தமிழ் பேசும் முஸ்லீம்கள்.  நன்றி:
http://thesakkaatu.com/doc2368.html
 மணலாறு விஐயன்
http://www.thinakkathir.com/?p=52238
சத்துருக்கொண்டான் படுகொலையின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று - See more at: http://www.thinakkathir.com/?p=52238#sthash.68a3bP9K.dpuf