Monday, July 22, 2013

ஐரோப்பிய ரசிகர்களை தென்னிந்திய ராகங்களால் திணறடிக்கும் ஈழத்தமிழ்ப்பெண்.
ஐரோப்பாவில் வளர்ந்து வரும் பாடகியும், ஈழத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவருமாகிய  Abi Sampa (அபி சம்பந்தர்) Voice of UK போட்டியில் தென்னிந்திய ராகங்களை மேலைத்தேய இசையுடன் கலந்து, அற்புதமான ஆலாபனையுடன் பாடும் அவரது நடை அவருக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது. செல்வி, அபி சம்பா 2010 இல் Barts and The Royal London University இல் பட்டம் பெற்ற பல் வைத்தியருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Abi Vs. Laura - Winner is  Abi 

Sunday, July 21, 2013

உண்மையில் வன்னியர்கள் அக்கினியிலிருந்து உருவானவர்களா?


தமிழ்நாட்டில் மனுதர்மத்தின் அடிப்படையில் சூத்திரர்களாகிய தமிழர்கள் சாதியடிப்படையில் ஆளுக்காள் அடிபட்டுக் கொண்டு சாவது மட்டுமன்றி, ஒவ்வொரு சாதிக்கும் ஒரு புராணக்கதையையும் இயற்றி வைத்துக் கொண்டு, ஒவ்வொரு சாதியினரும் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று பீற்றிக் கொள்கிறார்கள். 

அக்னிச் சட்டியிலிருந்து உருவாகிய அல்லது வெளிவந்த வன்னியகுல “சத்திரியர்களின்” மீது எனக்கு எந்தக் காழ்ப்புணர்வும் கிடையாது, சாதியிலும் எனக்கு நம்பிக்கையில்லை. அத்துடன் சாதியடிப்படையில் தாழ்வுமனப்பான்மை கொள்ள வேண்டிய நிலையும் எனக்குக் கிடையாது. இலங்கையில் வன்னி மரங்கள் செறிந்த வன்னிக் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்ததால் வன்னியர்கள் என்றழைக்கப்பட்ட சிங்கள/தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டில் வன்னியர்கள் என்றழைக்கப்படும் சாதிப்பிரிவினருக்கும் உள்ள தொடர்பினை அறியும் ஆர்வத்தினால் அண்மையில் நான் வாசித்த நூல்களில், இலங்கையின் புகழ்பெற்ற சரித்திரப் பேராசிரியர் Dr. K. இந்திரபாலா அவர்களின்The origin of the Tamil Vanni chieftaincies of Ceylonஎன்ற கட்டுரையும் ஒன்றாகும்.

அதில் *கல்லாடம் என்ற பழமையான தமிழ் நூலில்  பன்னிரண்டு காட்டுப் பன்றிகளை மனிதர்களாக மாற்றிய அற்புதத்தின்  விளைவாக உருவாகியவர்கள் தான் வன்னியர்கள்  என்று கூறியிருப்பதாக புலவர் P.V. சோமசுந்தரனார் உரை எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கல்லாடத்தின் படி பார்த்தால் வன்னியர்கள் உண்மையில் அக்கினியிலிருந்து உருவாகவில்லை போல் தான் தெரிகிறது.


தோழி இயற்பழித்து உரைத்தல் 
“வடமீன் கற்பின்எம் பீடுகெழு மடந்தை
பெருங்கடல் முகந்து வயிறுநிறை நெடுங்கார்
விண்திரிந்து முழங்கி வீழா தாகக்
கருவொடு வாடும் பைங்கூழ் போல
கற்புநாண் மூடிப் பழங்கண் கொள்ள
(5)
உயர்மரம் முளைத்த ஊரி போல
ஓருடல் செய்து மறுமனம் காட்டும்
மாணிழை மகளிர் வயின்வை குதலால்
கருமுகிற் கனிநிறத் தழற்கண் பிறைஎயிற்று
அரிதரு குட்டி ஆயபன் னிரண்டினை
(10)
செங்கோல் முளையிட்டு அருள்நீர் தேக்கி
கொலைகளவு என்னும் படர்களை கட்டு
தீப்படர் ஆணை வேலி கோலி
தருமப் பெரும்பயிர் உலகுபெற விளைக்கும்
நால்படை வன்னியர் ஆக்கிய பெருமான்”
(15) 
(கல்லாடர் இயற்றிய கல்லாடம்)

{II Kallatam, ed. P. V. Comacuntaranar , (Madras 1962.) v. 37, p, 302, In this Tamil work the Vanniyar are said to have been created as a result of a miraculous conversion of twelve boars into human beings. Some take this to indicate their origin as subordinates under the Calukyas whose emblem was the boar. Cf., Gnanapragasar , op, cit., p. 41.}

உண்மையில்  கல்லாடம் என்ற பழமையான தமிழ் நூலில் மேலேயுள்ள பாடல் வரிகளின் பொருள் எனக்குத் தெரியாது. ஆனால் புகழ்பெற்ற தமிழறிஞர்  புலவர் சோமசுந்தரனாரின் உரையின் படி வன்னியர்கள் பன்னிரண்டு காட்டுப்பன்றிகளிலிருந்து உருவாக்கப்பட்டவர்களெனக் குறிப்பிடுகிறார் பேராசிரியர் இந்திரபாலா. புலவர் சோமசுந்தரனாரின் தமிழறிவையும், Dr. இந்திரபாலாவின் வரலாற்று அறிவையும் எவரும் சந்தேகிக்கலாமென எனக்குப் படவில்லை. நான் படித்ததை பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவு தான்.(Don't shoot the messenger. :)) .
  
வன்னியர்கள் தாம் அக்கினியிலிருந்து வெளியே வந்ததாகவும் அதனால் தம்மை அக்னி குல சத்திரியர்கள் என்றும், வன்னியர்கள் என்ற அவர்களின் பெயர் வாகினி என்ற சமக்கிருதச் சொல்லிலிருந்து உருவாகியதாகவும் கூறுகின்றனர். மொழி ஆராய்ச்சியாளர் சுவாமி ஞானப்பிரகாசரின் கருத்துப்படி, இது பிற்காலத்தில் வன்னியர்களையும், அக்னியையும் தொடர்பு படுத்துவதற்காக சிலரால் மேற்கொண்ட வெறும் முயற்சியேயாகும்.  வன்னியர்கள் அக்னியிலிருந்து வெளியே வந்தவர்கள் என்ற அக்னி குலக்கருத்தை வெறும் பேச்சுக்காக ஏற்றுக் கொண்டாலும் கூட, அவர்களின் வன்னியர் என்ற பெயர் எதற்காக வாஹினி என்ற சொல்லிலிருந்து உருவாகியதாக கதை விட வேண்டும், அதற்குப் பதிலாக அக்னி என்ற பொதுவான பெயரின் அடிப்படையில் அக்னியர் என்றல்லவா இருக்க வேண்டும்.

Saturday, July 20, 2013

தமிழ்நாட்டில் சாதிவெறியால் பல நூற்றாண்டுகளாக பூட்டப்பட்டிருக்கும் கதவு?
இது உண்மையா? கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் கல்விமான்களில் ஒருவரும், தமிழ், தமிழர் வரலாறு, தமிழீழம்  போன்ற பல விடயங்களில் கட்டுரைகள் எழுதியவரும், தமிழறிஞரும் ஆர்வலருமாகிய திரு.வேலுப்பிள்ளை தங்கவேலு அவர்கள் தனது கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய நந்தனார் அல்லது திருநாளைப் போவார், தில்லையில் ஆடவல்லானின் நடனத்தைப் பார்க்கும் ஆவலோடு  சென்றிருந்த போது, தீக்குள் புகுந்து  சிவனைத் தரிசித்து சிவலோகத்தை அடைந்தார், அதாவது தேவர்கள் பூமாரி பொழிய சிவபெருமானில் ஐக்கியமானார் என்று புராணங்கள் கூறுகின்றன. அதையே மதநம்பிக்கையுள்ள கோடிக்கணக்கான சைவர்களும் நம்புகிறார்கள். அவரை இன்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றுகிறோம்.


 ஆனால் அது உண்மையல்ல என்கிறார் திரு. வேலுப்பிள்ளை தங்கவேலு.
அவரது கருத்துப்படி, தீண்டத்தகாதவராகிய திருநாளைப்போவார் சிதம்பரம் கோயிலுக்குள் நுழைய ஆசைப்பட்டது மட்டுமல்ல அங்கு நுழையவும்  துணிந்ததால் ஆத்திரம் கொண்ட சிதம்பரத்து பார்ப்பனர்கள் அல்லது  தில்லை மூவாயிரவர் அவரை உயிரோடு தீமூட்டிக் கொலை செய்தார்களாம். இப்படியான கதைகளை இவர் மட்டுமல்ல, பல பெரியாரிஸ்டுகளும், திராவிட மேடைப்பேச்சாளர்களும் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது ஓரு பெரிய விடயமல்ல.

ஆனால் நந்தனார் தில்லையில் ஆடவல்லானைத் தரிசிக்க நுழைந்த 9வது கதவு ஒரு தீண்டத்தகாதவர்  நுழைந்து தீட்டுப்பட்டதால்  இன்னும் பூட்டப்பட்டிருக்கிறதாம். இவர் கூறுவதை நம்பவே முடியவில்லை. 

தமிழ்நாட்டில் 21வது நூற்றாண்டில் சாதிவெறியின் காரணமாக ஒரு கதவு, அதுவும் பெரும்பான்மை தமிழர்கள் "கோயில்" என்று போற்றும், தமிழ் நாடு அரசின் இந்து மத அறநிலையத்துறையின் கீழ் இருக்கும்   ஆலயத்தில் பூட்டப்பட்டிருக்குமானால் அதைப் போன்ற வெட்கக்கேடு  வேறெதுவுமிருக்க முடியாது. 

இது உண்மையா என்பதை அறிய வேண்டும், உண்மையானால் இந்தக்கதவு கோலாகலமாக திறக்கப்பட வேண்டும்.இந்த விடயம் பற்றி தமிழ்நாட்டில் யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது இது திரு. தங்கவேலு அவர்களின் வெறும் கற்பனையா? Tuesday, July 16, 2013

தமிழ் –முஸ்லீம் ஒற்றுமையை நாடும் நீதியரசர் விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு?

இலங்கையின் உச்ச நீதிமன்ற (Supreme Court) முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டணியின் (Tamil National Alliance) சார்பில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் நீதிக் கட்டமைப்பின் உச்ச நீதிமன்ற நீதியரசர்களில் ஒருவராக விளங்கிய விக்னேஸ்வரன் சலுகைகளுக்காக வளைந்து கொடுக்காதவர் என்பதும், தனது கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவர் எனவும் கருதப்படுகிறார். ஆனால் நீதியரசர் விக்னேஸ்வரன்  முதலமைச்சராவதையே இந்தியாவும் விரும்புவதாக பரவலாக பேசப்படுகிறது.

தமிழ்த் தேசியம், மொழி, மரபு, மண் காக்கப்பட வேண்டும் என்கிற கருத்தியலை அடிக்கடி பொது மேடைகளில் விதைத்து வந்தவரது அரசியல் வரவை பல தளத்திலிருக்கிறவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். குறிப்பாக, இளையோர்களிடமும் அறிவுப்பிழைப்பாளர்களிடமும் புதிய ஆளுமை மிக்க தலைமைபற்றிய எதிர்பார்ப்புக் கூடுதலாக இருந்தது. அதனை, அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எல்லாத் தரப்பிலும் உள்ளது.
பன்னாட்டு மட்டத்தில் வெளிநாட்டு அரசியல் தலைவர்களைஇராசதந்திரிகளை, ஊடகத்துறையினரை சந்தித்து அறிவுபூர்வமாக உரையாடும் திறமை நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களுடன் உண்டு. அதற்கான சட்ட அறிவு, மும்மொழிப் புலமை, கண்ணோட்டம், ஆளுமை முதலியன அவரிடம் நிறைய இருக்கிறது.ஈழத்தமிழர்களுக்கிடையே ஒற்றுமை நிலை நிறுத்தப்பட்டால் தான் தமிழ்மக்களுக்கு விடிவுகாலம் வருமென்பதை அடிக்கடி வலியுறுத்தும் நீதியரசர் விக்னேஸ்வரன், தமிழ் – முஸ்லீம்களின் ஒற்றுமையையும் வலியுறுத்தி வருவதுடன், பல முஸ்லீம் தலைவர்களுடன் நட்புறவையும், முஸ்லீம்களின் நன்மதிப்பையும் கொண்டவர்.

முஸ்லீம் தலைவர்களில் ஒருவரும், அவரது நண்பருமாகிய மசூர் மெளலானாவின் எண்பதாவது அகவை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய விக்னேஸ்வரன் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு கூட்டமைப்பில் இணைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டவர். அவரது அந்தப் பேச்சை இங்கே காணலாம்.http://viyaasan.blogspot.ca/2013/02/blog-post_26.html

“நான் இங்கு அரசியல் பேசப்போவதில்லை. ஆனால் சாதாரண தமிழ் பேசும் குடிமகன் என்ற விதத்தில் கிழக்கில் நடந்தவை எனக்கு வேதனை அளித்தது. இனிமேலும் கட்சிகளை நம்பி மோசம் போகாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஒரு முஸ்லீம் பிரிவை அமைக்க இங்கிருக்கும் திரு. சம்பந்தன் அவர்கள் கரிசனை காட்ட வேண்டும் என்று விருப்பபடுகிறேன். 
எவ்வாறு மசூர் போன்றவர்கள் தந்தை செல்வாவுக்குத் துணை நின்றார்களோ அது போன்று திரு.சம்பந்தன் அவர்களும் தமிழ் ஆர்வங்கொண்ட முஸ்லீம் இளைஞர்களை தம்முடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆயிரமாயிரம் மசூர் மெளலானாக்கள் திரு.சம்பந்தனை நாடிவந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்.
 தமிழரசுக்கட்சி என்ற பெயருக்கு மாணவர்களாக இருந்த போது நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம் என்று சற்று முன் கூறினேன். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சிப் பெயர் தமிழர்களையும் முஸ்லீம்களையும் ஒன்றிணைக்கும் ஒரு பெயராக அமைந்திருப்பதை நாங்கள் எல்லோரும் அவதானிக்க வேண்டும்.
அது தமிழர் தேசியக் கூட்டமைப்பு அல்ல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த்தேசியமும் முஸ்லீம் தேசியமும் ஒருங்கிணைந்து கடமையாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆவன செய்ய வேண்டும்.”

நீதியரசர் விக்னேஸ்வரனின் தமிழ்பேசும் மக்களை ஒருங்கிணைக்கும் எண்ணத்தை முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது அவரது முதுகிலும் குத்துவார்களா என்பதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும். ஆனால் வடமாகாண முதலமைச்சராவதற்கு அவருக்கு முஸ்லீம்களின் வாக்குகள் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது தாய்வழி பூர்வீகம் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், தந்தைவழி கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை. அதனால் வடக்கையும், கிழக்கையும் இணைக்கும் அடையாளமாகத் திகழ்ந்தாலும் கூட, இலங்கை அரசாங்கத்தின் சேவகராக, உச்ச நீதிமன்ற நீதியரசராக இருந்து, கொழும்பில் வாழ்ந்த விக்னேஸ்வரன் வடமாகாணத்தில் தமிழர்கள் போரில் பட்ட துன்பங்கள், துயரங்களை அறியாதவர், அவர் சிங்கள அரசின் எடுபிடியாகச் செயல்படுவார் என்ற கருத்து சில ஈழத்தமிழர்களிடம் உண்டு.

ஆனால் 2001ம ஆண்டில் அவர் இலங்கையின் உச்சநீதிமன்ற நீதியரசராக அறிவிக்கப்பட்டு அதை ஏற்றுக்கொள்ளும் அவரது பேச்சிலேயே (Acceptance Speech) தனது முதல் அடையாளம் தமிழன் என்பதையும், தனது தனித்துவத்தை இழக்க மாட்டேன் என்பதையும் காட்டியவர். அதற்கு பல சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகைகளில் எழுதினர் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் பொது வேட்பாளராக தன்னை அறிவித்ததால், வட மாகாணத்துக்கான முதல்வர் பதவிக்கான, கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் ஒப்புதல் அளித்து விட்டதாக, இலங்கை உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். 
 அரசியலுக்கு வெளியில் இருந்து வந்தாலும், தான் அரசியலை தீவிரமாக அவதானித்து வந்தவர் என்ற வகையில், இந்த அரசியல் பிரவேசம் பெரிய சவாலாக இருக்காது என்று நம்புவதாகவும் அவர் தமிழோசையிடம் கூறினார். 
மேலும், தமிழ் அரசியலில், முன்பு இருந்த பொன்னம்பலம், ராமனாதன், அருணாசலம், செல்வநாயகம் போன்ற தலைவர்களும் கொழும்பில் சட்டப்பணியாற்றி யாழ்ப்பாண அரசியலுக்கு வந்தவர்கள் என்பதையும், வந்த பின்னர் அவர்கள் சாதாரண மக்களின் சுக துக்கங்களில் பங்கேற்றுக்கொண்டனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 
இலங்கையில் நீதித்துறை அரசியல் மயமாகிறது என்ற குற்றச்சாட்டை, இவரது அரசியல் பிரவேசமும் வலுவாக்குமா என்று கேட்டதற்கு, தான் நீதித்துறையிலிருந்து ஓய்வு பெற்று சுமார் பத்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இது போன்ற குற்றச்சாட்டுக்கு இடமில்லை என்றும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி சிந்தித்து நடவடிக்கை எடுப்பது, நீதித்துறையின் சுயாதீனத்தை பாதிக்காது என்றார் அவர். 
வட மாகாணத்தில் நடக்கவிருக்கும் இந்த தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல், 13வது அரசியல் சட்டப்பிரச்சினைகள், அதற்கு மேலும் தமிழ் மக்களுக்கு தேவைப்படும் அரசியல் உரிமைகள் குறித்த சட்டப் பிரச்சினைகள் போன்றவற்றை கையாள்வதற்கு விக்னேஸ்வரன் போன்ற நீதித்துறை மற்றும் சட்ட வல்லமை பெற்றவரின் அனுபவம் பயன்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார். 
கூட்டமைப்பில் உட்கட்சிப் பிரச்சினைகளை மறைக்க கூட்டமைப்புக்கு வெளியேயிருந்து இவரை நியமித்ததாக கருத்து நிலவுவது சரியல்ல என்றும் அவர் கூறினார். 
வட மாகாணத்தின் சனத்தொகை:

**source: Department of Census & Statistics, Sri Lanka)

(** இலங்கையின் வரலாற்றில் வடக்கில் 100,000 முஸ்லிம்கள் ஒரு போதும் வாழ்ந்ததில்லை. ஆனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டும் வெளியேற்றப்பட்டதாக எந்தளவுக்கு பொய்ப்பிரச்சாரம் நடந்தது என்பதை இங்கு குறிப்பிடாமலிருக்க முடியவில்லை)Justice Vigneswaran's Acceptance Speech 2001.

S.C Judge says Tamil rights were snatched away - 08 March 2001


`The vast majority of the denizens of the north and east seek the restoration of their rights and not devolution of power. These are the rights which were snatched away from them by virtue of a mathematical innovation where the majority in the two provinces were added to the majority in the seven provinces and thus made a minority in the nine provinces` said Justice C.V Vigneswaran in his ceremonial acceptance speech Wednesday on being appointed as judge to Sri Lanka`s Supreme Court.


`As a Tamil speaking citizen, if I do not use my mother's  tongue, I will soon be forced to use my brother`s tongue. The sterile and impotent provisions now appearing in our constitution have little meaning to the Tamil-speaking people of the northern and eastern provinces. They need to govern themselves in their own language with little interference from outside,` the newly appointed supreme court judge said.


The following are excerpts from Justice C.V Vigneswaran`s acceptance speech Wednesday.

`I have always referred to an incident that used to happen when we were marble playing youngsters in school. Some of our seniors who were not prefects would pounce upon us suddenly and illegally confiscate all our marbles. When we protested they would keep 90 percent of the marbles and offer us 10 percent and thereafter progressively increase it to 20 percent, forgetting that all the marbles were ours and the seniors had no right to confiscate in the first instance`

`The majority of those in the northern and eastern provinces were always Tamil speaking until independence and their language, religions -mainly Islamic, Christian and Hindu- culture, and customs and ways of life within the special topographical and climatic environment should have been allowed to blossom and flourish without interference after independence.`

[Sri Lanka, then Ceylon, got independence from the British in 1948.]

`Even though the Attorney General and I are today in our respective honoured positions, we cannot forget that two sparrows do not make a summer. In fact, there are many more sparrows in high positions due to their intrinsic worth in almost every field during the middle of the last century. But we are today progressively depleting in numbers in this part of the island and like the burghers we too would soon be hardly heard of in judicial, legal or government service or even in the private sector. It is a sad reflection of our times that after me there had not been a single Tamil speaking president of the Law Students` Union of the Sri Lanka Law College after 1962.`

[Sri Lanka`s Attorney General K. C Kamalasabayson, like justice Vigneswaran , is an ethnic Tamil.]

`I am one of the few still living among those who organised for the Congress of Religions in 1956 or thereabouts, the visit of the then Mahanayaka Thero of the Malwatte Chapter to Jaffna. It was a relative of my mother, Sir Ponnambalam Ramanathan, who risked his life to travel to England to place the case of the Sinhala Buddhists before the Queen in the early part of the last century.`

`Often today we miss the wood for the trees when we wax eloquently about the teachings of the Great Masters in mesmerising language, forgetting the spirit of their teachings and failing to imbibe them in our lives. Otherwise, how do we account for the echoing of war drums and hatred from the portals of love and religion?`

`An original court judge cannot under the present system of nominations to the higher judiciary ever hope to occupy the highest office in the judiciary except due to the condescending discretion of the executive (the President of Sri Lanka). Therefore I must feel that the acme of my career has arrived today, that I cannot aspire for anything more but to fade away with time into oblivion.`

[Sri Lanka`s executive President can nominate Chief Justice at her/his sole discretion. Sri Lanka`s present Chief Justice Sarath Silva was appointed amidst opposition from the press and the bar and widely publicised allegations that he was guilty of abuse of power and corruption when he was the Attorney General of the country. Some human rights activists and lawyers allege that he deliberately dismisses Fundamental Rights cases by Tamils arrested, tortured and detained by Sri Lankan security forces. Lawyer/Columnist Mr. Rajpal Abeyanayaka filed a Fundamental Rights case that against Chief Justice Sarath Silva`s nomination. The case is pending in the Supreme Court. ]

`Whether the Tamil language is spoken and preserved in other countries is irrelevant. The Sri Lankan Tamils need to develop their language and culture peculiar to themselves in their country`.

`It is because I love this country and all its people, including those who hate me for what I am, that I take this opportunity to say- not for my sake, not for the sake of the Tamil people, but for the sake of cordial relationship among all the communities in this island of ours, for good governance and a progressive future - that unless we recognise that the Tamil language and culture are to the Tamils what the Sinhala language and culture are to the Sinhalese And therefore make Tamil the dominant language of the northern and eastern provinces requiring the study of it compulsory for all in those two provinces just as Sinhala is recognise as the dominant language of the other seven provinces, with English as the link language between equals, the wrong done by enthroning one language in 1956 can never be erased the havoc caused by the deletion of Article 29 (2) of the 1947 constitution and the doctrine of utra vires from subsequent constitutions can never be put right the feelings of the Tamils wounded inter alia by the 1958, 1977 and 1983 riots can never be assuaged`.

[Article 29 (2) of independent Sri Lanka`s (then Ceylon) first constitution barred the Ceylon Parliament from enacting discriminatory legislation against a particular ethnic or religious group to which all other groups were not subjected. Sinhala Buddhist pressure groups campaigned persistently for the removal of this article. It was eventually repealed in 1972 and was replaced by an Article entrenching the foremost place and state patronage for Buddhism.]


Monday, July 15, 2013

விடிய விடிய இராமர் கதை, விடிந்தால் பிறகு இராமர் சீதைக்கு என்ன முறை?”


1983ம் ஆண்டு ஆரம்பமான ஆயுதப் போராட்டம், துரதிஷ்டவசமாக 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்கு வந்துள்ளது. 
- தினமும் எமது பத்திரிகைகள், இணையத்தளங்களில் வெளியாகும் செய்தி - கொலை, பாலியல் வன்முறை, கைது, ஆட்கடத்தல், சிங்களக் குடியேற்றம், புதிய புத்த விகாரை, இராணு முகாம், அத்துடன் கோயில்கள் தேவாலயங்கள் பள்ளிவாசல்களின் அழிப்பு போன்றவை. 
- முன்னாள் போராளிகளும், மக்களும் இன்றும் தடுப்பு முகம்களிலும் வதைமுகம்களில் வாழுகின்றனர். விடுதலை செய்யப்பட்ட போராளிகள் பாதுகாப்பு பிரிவினரின் கண்காணிப்பின் கீழ் பல கஷ்டங்களுடன் வாழ்கின்றனர். 
- ராஜபக்ச அரசும், சிங்களவரில் பெரும்பான்மையானோர் - தமிழர்களுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கு என்ன அரசியல் பிரச்சனை உள்ளது என வெளிப்படையாக கூறிவருவதுடன், குறைந்தபட்ச அடிப்படை அரசியல் தீர்வான 13வது திருத்தச்சட்ட மாகாணசபை கூட தமிழர்களின் கைகளில் போகப்படாது என்பதில் கண்கணம் கட்டியுள்ளனர். 
- சர்வதேச சமூதாயம், ஐக்கிய சிறிலங்காவிற்குள்ளன தீர்வையே தாம் ஆதரிப்பதாக தொடர்ந்து கூறிவருகின்றனர். 
- எமக்குள் எந்த ஓற்றுமையும் இல்லாது, மாலுமி இல்லாத கப்பலாக திசை தெரியாது பிரயாணம் செய்கிறோம். 
யதார்த்தமான இவ் உண்மைகளை அலட்சியம் செய்துகொண்டு, இன்றும் சுதந்திரமான தமிழீழமே முடிவான அரசியல் தீர்வேன, புலம்பெயர்வாழ்வில் உள்ள சில நபர்களும் அமைப்புகளும் கூறுவதையே, “விடிய விடிய இராமர் கதை, விடிந்தால் பிறகு இராமா சீதைக்கு என்ன முறை” என கூறுகிறேன்.

1983ம் ஆண்டு ஆரம்பமான ஆயுதப் போராட்டம் மூலம், ஈழத்தமிழ் மக்களின் தாயாக பூமியான  வடக்கு கிழக்கில், மூன்றில் இரண்டு பங்கு, தமிழீழ விடுதலைப் புலிகளினால் மீட்கப்பட்டு, அங்கு சகல கட்டமைப்புக்கள் அடங்கிய தமிழீழ அரசு ஒன்று நடாத்தப்பட்டது. துரதிஷ்டவசமாக யாவற்றையும் இழந்தோம். ஆனால் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலின் பின்னர் எமது உண்மை நிலை என்ன என்பதை நாம் மறைத்து, மறந்துவிட முடியாது. 
கடந்த மூன்று நான்கு வருடங்களாக, எமது பத்திரிகைகள், இணைய தளங்களை புரட்டி பார்த்தால் - கொலை, பாலியல் வன்முறை, கைது, ஆட்கடத்தல், சிங்களக் குடியேற்றம், புதிய புத்த விகரை, இராணு முகாம், கோயில்கள் தேவலயங்கள் அழிப்பு போன்ற செய்திகளே காணப்படுகிறது. இதேவேளை ராஜபக்ச அரசு தமிழர்களுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் என்ன அரசியல் பிரச்சனை உள்ளது என ஏளனம் செய்யும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
இந்த வகையில் மிக துரிதமாக சிறீலங்க அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றம், சிங்கள இராணுவமயப்படுத்தல், பௌத்தமயப்படுத்தல் போன்றவற்றிலிருந்து எமது தாயகபூமியை உடன் காப்பாற்ற வேண்டியது உணர்வுள்ள தமிழர்களதும், தமிழ்பேசும் மக்களது கடமையாகும். 
இவற்றிற்கு உடனடி நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், எமது இனத்தின் அழிவிற்கு நாமே காரணமாவோம். அதாவது இரவு பகலாக நோயை கூறும் எம்மவர்களிடம், இதற்கு என்ன வைத்தியத்தை நாம் செய்யலாமென வினவினால், சிலர் சுதந்திரமான தமிழீழம் என சிந்தனையின்றி பதில் கூறுகிறார்கள். சுதந்திர தமிழீழத்தை காலப்போக்கில் நிச்சயம் அடைய வேண்டும். ஆனால் தற்பொழுது யாதார்தங்களை மறந்து நாம் பகற் கனவு காணமுடியாது. 
இன்று பேரம் பேசும் நிலையில் உள்ளோமா? 
அன்றும், இன்றும், என்றும், 80 வீதத்திலிருந்து 85 வீதமான தமிழீழ மக்களது லட்சியம் - சுதந்திர தமிழீழமே என்பதில் எவ்வித ஐயமில்லை. இவ் கொள்கையிலிருந்து யாரும் மாறவேண்டிய அவசியமுமில்லை. ஆனால், குறைந்தது மூன்று தசாப்தங்களாக சிங்கள அரசுகளுடன் மார்புதட்டி சமமாக வாழ்ந்த நாம் இன்று பேரம் பேசும் நிலையில் உள்ளோமா? ஆயுத போராட்டம் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ மௌனித்துள்ள நிலையில், சிறிலங்கா அரசு இன்று எம்மை ஒரு இனமாகவோ, மக்களாகவோ கணக்கெடுப்பதே இல்லை. 
சிறிலங்கா மிகவும் திறமையான ராஜதந்திரத்துடன் அரசியல் செய்கிறது என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. சர்வதேச சமூதாயத்தின் பார்வையை திசை திருப்புவதற்காகவும், தம்மால் தமிழர் தயாக பூமியில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றம், இராணுவமயப்படுத்தல், பௌத்தமயப்படுத்தல் ஆகியவற்றை நிறைவாக நிறைவேற்றி முடிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதனாலும், தமிழர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை, 13வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் என இழுத்தடித்து  வருகிறது.  
இதற்கு ஏற்றப்போல, சில புலம்பெயர்வாழ் அமைப்புகளும், தலைவர்களெனப்படுவோரும், நாட்டில் அரசியல்வாதிகள் எனப்படுவோரும், தமிழீழம் தான் முடிவான தீர்வு, 13வது திருத்தச் சட்டம் ஓர் தீர்வல்ல என தினமும் அலட்டிக் கொள்கின்றனர். இவர்களது அறிக்கைகளை சிறிலங்காவின் தூதுவரலாயங்களே, சர்வதேச சமூதாயத்திற்கு விநியோகித்து வருகிறது என்பதை இவர்கள் இன்னும் அறியவில்லைபோலும். 
இன்று எமது தாயாகபூமியில் - சமூக, பொருளாதார, அரசியல், கலாசார ரீதியான முன்னேற்றங்கள் எதுவுமில்லை. அங்கு வாழும் மக்களை ஒரு கணம் தன்னும் சிந்தித்து, அவர்களது நிலைமைகள், தேவைகளுக்கு ஏற்ற வகையில், இன்றுவரை எந்த திட்டமும் எம்மால் முன்வைக்கப்படவில்லை. 
தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுத பலத்தினால் பெற முடியாததை, கதை அளப்பதன் மூலம், இரவோடு இரவாக நாம் அடைய முடியுமா என்பதை நாம் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். 
தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வேண்டிநின்ற காலம் போய், இன்று எமது தாயாகபூமியில் வாழம் மக்களை காப்பாற்ற முடியாத நிலையில் நாம் உள்ளோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. 
நம்மவர் கூறும் சுதந்திரம், சுயநிர்ணயம் சில நாட்களில், மாதங்களில், வருடங்களில் கைகூடுமானால் நாமும் இவர்களுடன் இணைந்து சேவை செய்வோம். ஆனால் தற்சமயத்தில் இது ஓர் கானல் நீர் என்பதே யாதார்த்தம். 
உடனடி தீர்வாக தமிழீழம் என்பது, தற்சமயத்தில் ஒன்றில் பகற் கனவாக இருக்கலாம், அல்லது இதை கூறுபவர்களிடையே ராஜபக்சவின் ஆட்கள் சிலர் மறைமுகமாக நின்று, இவர்களை தவறான வழிகளில் இட்டுச் செல்லலாம் என்பதே உண்மை. 

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வையும் ஒரு நோக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தம் மட்டுமே இன்றுவரை குப்பபை தொட்டிகளில் வீசப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு சிறிலங்க அரசு பதில் கூற கடமைப்பட்டுள்ளது. 
அன்று இவ் ஒப்பந்தம், எமக்கு ஏற்றதாக காணப்படவில்லை என்பது உண்மை. ஆனால் இன்று எமது தாயகபூமி உள்ள நிலையில், இலங்கை-இந்திய ஒப்பந்தம் தன்னும் கிடைத்தாலே, இதன் மூலம் தொடர்ந்து அடிமைப்பட்டு அழிந்து வரும் எமது இனத்தையும், எமது தாயாகபூமியையும் காப்பாற்ற முடியும் என்பதை யாரும் மறுக்க முடியாது. 
எந்தவொரு சிறிலங்க அரசும், தமிழ் மக்களுக்கு எந்த அரசியல் தீர்வையும் ஒருபொழுதும் முன்வைக்கப் போவதில்லை என்பது உண்மை. இதேபோல் இந்தியாவை அலட்சியம் பண்ணி நாம் எந்த அரசியல் தீர்வையும் அடைய முடியாது என்பது அடுத்த உண்மை. இவற்றிற்கு அனுபவரீதியான பல ஊதாரணங்கள் உண்டு.
இந்தியாவை பகைக்க வேண்டும் என எண்ணுபவர்கள், சிறிலங்காவின் மறைமுக நிகழ்சி நிரல்களுக்கு துணை போபவர்கள், இந்தியாவின் உதவியை நாம் தேடும் கட்டத்தில், சர்வதேச சமூதாயத்தின் வெளிப்படையான உதவி அங்கீகாரம் எமக்கு நிச்சயம் கிடைக்கும். 
வாக்கெடுப்பும் பாதுகாப்பு சபையும் 
மீண்டும் மீண்டும் கூறுகிறேன், ஓர் இனத்தின் சுதந்திரத்தை நிர்ணயிக்கும் வாக்கெடுப்பு எந்த நாட்டில் நடைபெறுவதனாலும், அது ஐ. நா. பாதுகாப்பு சபையினரின் அங்கீகாரத்தை பெற வேண்டும். ஏரித்திரியா, கிழக்கு தீமூர், தென்சூடான் ஆகியவை இதற்கு நல்ல உதராணமாகும். 
பாதுகாப்புச் சபையில் உள்ள சீன, ராஷ்ய சிறிலங்கவிற்கு எதிராக, எமக்கு சார்பாக இவ்வாக்கெடுப்பை நடைமுறைப்படுத்த அனுமதிக்கமாட்டார்கள் என்பதை இங்கு எழுதித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா? 
ஸ்கொற்லாந்தின் நிலைமை வித்தியாசமானது. அவ் வாக்கெடுப்பு பிரித்தானிய அரசின் பூரண சம்மதத்துடன் நாடைபெறவிருக்கிறது. அதேபோல் கனடிய அரசின் சம்மதாதத்துடன் இரு தடவை கியூபெக் மாநிலத்தின் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
ஆகையால் எமது விடயத்தில். சிலரது விதண்டாவாத சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காது, மிஞ்சியிருக்கும் எமது நிலத்தையும் இழக்காது, தற்பொழுது எமக்கு சாதகமாகவுள்ள விடயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த நாம் முன்வர வேண்டும். 
தமிழீழத்தை, தமிழர் தாயாக பூமியை நேசிப்பவர்கள் யாரும், 13வது திருத்தச் சட்டம், இந்தியா-இலங்கை ஒப்பந்தந்தை எதிர்க்க மாட்டார்கள். காரணம், தமிழீழத்திற்கான எதிர்காலப் பாதை, நிச்சயம் 13வது திருத்தச் சட்டமாகவே அமையும் என்பதை இவ் அமைப்புக்களையும் நபர்களுக்கு மேலாக சிங்களவர்கள் நன்கு அறிந்துள்ளார்கள். 
பாலஸ்தீன மக்களின் நிலையை சரியாக புரிந்தவர்கள் யாரும், எமது இனத்தை பாதாள குழியில் தள்ளுவதற்கு வழிவகுக்க மாட்டார்கள். பாலஸ்தீன மக்களுக்கு 57 நாடுகள் அடங்கிய, இஸ்லாமிய ஒருங்கிணைப்பு அமைப்பின் ஆதரவு மிக நீண்டகாலமாக இருந்தும், இன்று அவர்களது நிலையை பாருங்கள்! இன்று எமக்கு எந்த நாட்டின் ஆதரவு உள்ளது என்பதை, குருட்டுத்தனமான அரசியல் பேசுபவர்கள் ஒரு கணம் சிந்தித்து, தமது நிலைப்பாட்டில் முடிவெடுக்க வேண்டும், சுயநிர்ணயம், தமிழீழம் என்பது வானத்திலிருந்து விழும் பொருள் அல்ல. 
தமிழீழத்தை, தமிழர் தாயாக பூமியை நேசிப்பவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளது தலைவர் பிரபாகரன் கூறியவற்றை நினைவு கொள்ளவது வரவேற்கதக்கது. திரு. வேலுப்பிள்ளை பிரபாகரனின், உரைகளான: 
1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி, சுதுமலை பிரகடனம், 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி மாவீரர்தின உரை, 2008ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி மாவீரர் தின உரை ஆகியவற்றை தெளிவாக படித்து, தமது நிலைபாடுகளை சரிசெய்து கொள்ள வேண்டும். 
புலிகள் மாகாணசபையை நிராகரித்தார்களா? 
தழிழீழ விடுதலை புலிகள் மாகாணசபையை நிராகரித்தர்களா இல்லையா என்பதற்கான பதில், தழிழீழ விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகரும், தேசத்தின் புயல் மறைந்த அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் திருமதி. அடல் பாலசிங்கத்தினால், 2001ம் ஆண்டு ஆங்கிலம், தமிழில் எழுதி வெளியிடப்பட்ட, ,“The Will to Freedom” (த வீல் ரு பிறிடம்) என்ற புத்தகத்தில் பதில் உள்ளது. 
மாகாணசபை பற்றிய தகவல்களை அறிய விரும்பியோர்,“The Will to Freedom” (த வீல் ரு பிறிடம்), ஆங்கில வெளியீட்டின், “LTTE Stragegy and Premadasa’s agenda”, 256-258, என்ற பக்கங்களை படிக்கவும். 
இதே இடத்தில், ‘விடுதலை புலிகள் மக்கள் முன்னனி (PFLT) என்ற அரசியல் கட்சியை, தமிழீழ விடுதலைப் புலிகள் எதற்காக 1989ம் ஆண்டு பதிவு செய்தார்கள் என்பதையும், நாம் நினைவுபடுத்திகொள்ள வேண்டும். 
இவற்றை அறிந்தும் அறியாதவர்களாக, தற்பொழுது உள்ள ஒரு சிறிய வெற்றிடத்தை பாவித்து, தமது குறுகிய சிந்தனை, எண்ணங்களுக்கும் வடிவம் கொடுத்து, இது தான் தமிழீழ மக்களது அரசியல் சிந்தாந்தம் என பறைசாற்றுவது, நிச்சயம் எமது இனத்திற்கு அடிக்கும் சாவு மணியே. 
சிறிலங்கா அரசு, 6வது திருத்தச்சட்டத்தை வாபஸ்பெற வேண்டுமென்பதை தழிழீழ விடுதலை புலிகள் தமது நிபந்தனையாக முன்வைத்தார்களென்பதை யாரும் மறுக்கவில்லை. 
புலிகளை அழித்தவர்கள். 
இதே இடத்தில், புலம்பெயர் வாழ்வில் சிலருடைய வேறுபட்ட சிந்தனைகளை, மிக அண்மையில், “டெல்லி மாநாடு” என்ற போர்வையில், நாம் அறியக் கூடியதாகவிருந்தது. அவர்கள் கூறிய விடயம் சிந்தனைக்குரிய விடயமாகவிருந்தாலும், எமது உடன் பிறப்புக்களையும், எமது நிலத்தையும் நாம் சூதாட முடியாது. 
சிலர் கூறுவது என்னவெனில், தமிழீழ விடுதலை புலிகள் அழிப்பதற்கு பல மூலைகளிலும், பல வடிவங்களிலும், பல நிறங்களிலும் திட்டங்கள் தீட்டப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, சிங்கள அரசுகளுடன் ஒத்துழைக்கப்பட்டே நிறைவேற்றப்பட்டது. 
இதன் வடிவங்களில் ஒன்றாக, புலி எதிர்ப்பு தமிழ் அமைப்புக்களும், தமிழ் தலைவர்களும், தமிழ் புத்திஜீவிகள், கல்விமான்களும் அடங்குவார். இவர்கள் சிங்கள அரசுகளுடன் இணைந்து, வெற்றிகரமாக புலிகளை அழித்தவர்களெனவும், இன்று தமிழீழ விடுதலை புலிகள் இல்லாத நிலையில், சிங்கள அரசு தமிழர்களுக்கு என்ன அரசியல் பிரச்சனை உண்டு என்று கேட்பது மட்டுமல்லாது, இவ்விடயத்தில் இந்தியா உட்பட சர்வதேச சமுதாயத்தை பார்த்து சிறிலங்கா ஏளனம் செய்கிறது. 
இந்நிலையில், தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்கு சிங்கள அரசுடன் ஒன்றுபட்டு நின்ற தமிழ் அமைப்புக்களும், நபர்களும் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைகளை சிங்கள அரசிடமிருந்து பெற்று கொடுக்க கடமைப்பட்டுள்ளார்களென கூறுகிறார்கள். இக்கருத்து  ஆத்திரம், கோபம், உணர்ச்சி வசத்தில் உருவான கருத்தாகவே பார்க்க முடியுமே தவிர, இதை நாம் ஓர் ஆக்கபூர்வமான சிந்தனையாக கொள்ள முடியாது. 
இக் குழப்ப நிலை நீங்க வேண்டுமானால், நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கை ஓங்க வேண்டும் என்பதில், ராஜபக்ச ஆதரவு தமிழர் தவிர்ந்த, வேறு யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மேலும் மக்களிடையே செல்வாக்கு நிறைந்த முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன் போன்ற முக்கிய நபர்கள், புத்திஜீவிகள், கல்விமான்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அங்கத்தவர்களாக இணைத்து செயல்பட வேண்டும். 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றவுடன் சில சர்ச்சைகள் எழுகின்றது ஒரு சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடனடியாக ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டுமென்ற கருத்தை கொண்டுள்ளனர். 
இது ஓர் சங்கடமான நிலையை உருவாக்கினாலும், எதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது என்பதனையும், அன்று இதன் சார்பாக தேர்தலில் போட்டியுட்டவர்கள், எதற்காக “வீட்டு” சின்னத்தில் தேர்தலில் நின்றார்கள் என்பதையும் நாம் ஒரு பொழுதும் மறக்க முடியாது. கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமா? 
தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவுசெய்ய வேண்டுமென இன்று கூறுபவர்களில் பெரும்பான்மையானோர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட வேளையில், இதில் அங்கத்துவம் பெறாதவர்கள் மட்டுமல்லாது, அன்று அவர்கள் சிறிலங்க அரசுடன் நெருங்கமானாவர்கள். 
இதில் தமிழர் கூட்டணியும், புளோட் அமைப்பும் குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் தேர்தல்களில் இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிட்டால் மட்டுமே, இவர்களால் வெற்றி பெறமுடியுமென்ற கபடத்தனமான சிந்தனையை கொண்டவர்களென கூறப்படுகிறது. 
அன்று தமிழர் கூட்டணியின் நழுவல் போக்கிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானது. அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கிய தமிழீழ விடுதலை புலிகள், இதை பதிவு செய்யாது, ஓர் சர்வ கட்சி அமைப்பாக காண்பிக்க வேண்டுமென்பதையே விரும்பியிருந்தார்கள். 
முன்பு சிறிலங்கா அரசிற்கு துணைபோன அமைப்புக்கள், தற்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நிலையில், இதை ஓர் அரசியற் கட்சியாக பதிவு செய்யப்படுமானால், முன்பு சிறிலங்கா அரசு மிக நெருக்கமாக நின்ற சிலர், தமது செல்வாக்குகளை பாவித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பதவிகளை பெற்ற பின்னர், மீண்டும் குத்துக்கரணம் அடிக்கமாட்டார்கள் என்பதற்கு, எந்தவித உத்தரவாதம் கிடையாதெனவும் சிலர் கூறுகிறார்கள்.
இந்நிலையில், யாரை யார் நம்பி ஒன்றிணைந்து, தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பது என்பது என்றும் கேள்வி குறியாகவே காணப்படுகிறது. 
சர்வதேசமயப்படுத்தல் 
மேலும், “டெல்லி மாநாடு” என்ற போர்வையில், இன்னுமொரு கருத்தையும் நாம் அறியக்கூடியதாகவிருந்தது. புலம்பெயர் தேசங்களில் உள்ள பெரும்பாலான அமைப்புக்களும், தனிநபர்களும், இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டவேளையில், அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு “டெல்லி மாநாட்டில்” பங்கெடுத்தால் மட்டுமே தாமும் அதில் பங்கு கொள்வதாக மாநாட்டு அமைப்பாளர்களுக்கு கூறியுள்ளார்கள். 
இதன் மூலம் நாட்டிலும், புலத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ள  செல்வாக்கு மிகத்தெளிவாகிறது. இவ் யாதார்த்தை ஏற்க மறுப்பவர்கள், மக்களின் செல்வாக்கை பெறாதவர்கள் மட்டுமல்லாது, தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஓரம் கட்டவேண்டுமென்ற நோக்குடன், தாம் விரும்பியவாறு கரிபூசுபவர்கள் பற்றி நாம் கவலைகொள்ளத் தேவையில்லை.  

ஆகையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடியவிரைவில் சர்வதேசமயப்படுத்தப்பட வேண்டும். தமிழர்கள் வாழும் சகல புலம்பெயர் தேசங்களிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளைகளை அமைத்து, அனுபவம் தகைமை, மக்கள்  செல்வாக்கு பெற்றவர்களை பொறுப்பில் அமர்த்தி, தமிழீழ மக்களின் அரசியல் நிலைப்பாடுகளை மேற்கு நாட்டு அரசாங்கங்களுக்கு உடனுக்கு உடன் எடுத்து கூறுவதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கு நாட்டு வெளிநாட்டு அமைச்சுக்களுடன்  நெருங்கிய உறவை பேண முடியும். அதாவது புலம்பெயர் தேசத்தில் உள்ள சில அமைப்புக்கள் நாட்டின் நிலைமைகளை உணராது, அரசியல் செய்வதை தவிர்த்து மக்களுடன் நிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே புலத்திலும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகச் சிறந்தது. 
ஆகையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக ஓர் சர்வதேச மாநாட்டை ஐரோப்பாவில் கூட்டுவதன் மூலம், புலம்பெயர்வாழ் தேசத்தில் உள்ள பெரும்பாலான அமைப்புக்கள், தனிநபர்களிடையே ஐக்கியத்தை உருவாக்க முடியும். 
கூட்டமைப்பு சர்வதேச மயப்படுத்தப்படுவதனால், ஏற்கனவே புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புக்கள் ஓரம்கட்டப்பட வேண்டிய அவசியமில்லை. காரணம் அவ் அமைப்புக்கள் தமக்கு பரீட்சார்த்தமான ஊர்வலங்கள், பரப்புரை வேலைகள், கல்வி, கலை கலாசார சேவைகள் நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், வாணிபம், விடுதலைப் போராட்டத்தின் போது உயிர்நீத்த மக்கள் போராளிகளது நினைவு தினங்கள், மாவீரர் தினம் போன்றவற்றை வழமைபோல் நடாத்தலாம். 
இதன் மூலம் ஒருகருத்துடனான அரசியல் யாதார்தங்களை மேற்கு நாடுகள் அறிந்துகொள்வதுடன், எமது அரசியல் அபிலசைகளை மேற்கு நாட்டவர்களும் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
இவ்விதமாக தமிழீழ மக்களது அரசியல் நகர்த்தப்படாவிடில், சிறிலங்க அரசினால் மூளை சலவை செய்யப்பட்டு, பாதுகாப்பு பிரிவின் கண்காணிப்பிற்கு உள்படுத்தப்பட்டு, என்ன செய்வதுவென அறியாது  வாழும் நபர்களினாலும், அரசியல் அறிவற்றவர்களும், மது மங்கை மோகத்தில் போராட்டத்திலிருந்து குத்துகரணமடித்தவர்களும் எமது அரசியல் அபிலசைகள் சிறிலங்கா அரசு பொய்கள் கூறி ஏலத்தில் விற்பதை தடுக்க முடியும். 
இதேவேளை நாம் இன்னுமொரு முக்கிய விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்பொழுது சிறிலங்கா அரசு, ஆவுஸ்திரேலியாவில், தமிழீழ விடுதலை புலிகளை தடை செய்யும் விடயத்தில் மிக கண்ணும் கருத்துமாக வேலைகளை மேற்கொள்கிறார்கள். 
ஏற்கனவே சில நாடுகளில் உள்ள தடை இன்னும் தளர்த்தப்படாத கட்டத்தில், 2007ம் ஆண்டில் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டாளர் மீதான சட்ட நடவடிக்ககைகள், கைதுகள் மீண்டும் புலம்பெயர் தேசங்களில் நடைபெறாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். 
இவை யாவற்றுக்கும் பரிகாரமாக, மக்கள் செல்வாக்கு அங்கீகாரத்தை பெற்ற தமிழர் கூட்டமைப்பே தமிழீழ மக்களை எதிர்காலத்தில் வழி நடத்த வேண்டும். 
“இருட்டில் பிரகாசம் தரும் சந்திரனை பார்த்து, விசர் நாய்கள் குலைத்தால், பிரகாசிக்கும் சந்திரனால் என்ன செய்ய முடியும்?” “குரைப்பவர்கள் குரைக்கட்டும், சந்திரன் தொடர்ந்து பிரகாசிக்கும்”tchrfrance@hotmail.com
ச. வி. கிருபாகரன்

Thursday, July 11, 2013

இளவரசனை கொன்றது யார்?

இளவரசன் ஓடுகின்ற புகைவண்டியில் பாய்ந்து தற்கொலை செய்திருந்தால் அல்லது புகையிரதம் அவனை முட்டியிருந்தால்; குர்லா எக்ஸ்பிரஸ் வண்டியின் சாரதி அந்தச் சம்பவத்தை எழுத்து மூலம் அடுத்த புகையிரத நிலையத்தில் -அதாவது ஹோசூர் புகையிரத நிலையத்தில் மட்டுமன்றி – பெங்களூருவிலுள்ள அந்தப் பிரிவு புகையிரத இலாகாவின் தலைமைச் செயலகத்திலும் சமர்ப்பித்திருப்பார்.ஆனால் ஹோசூரிலும், பெங்களூருவிலும் உள்ள புகையிரத நிலைய அதிகாரிகளிடம் மேற்கொண்ட விசாரணையில்  அப்படி எந்தவிதமான சம்பவமும் நடந்ததாக குர்லா எக்ஸ்பிரசின் சாரதி குறிப்பிட்டதற்கு எந்தவித குறிப்போ அல்லது அறிக்கையோ இல்லை.
“குர்லா எக்ஸ்பிரஸ் போனதன் பின்பு, மேலும் இரண்டு புகைவண்டிகள் அந்த வழியாக சென்றிருக்கின்றன.  அந்த இரண்டு புகைவண்டிகளிலுமிருந்த புகைவண்டி காவலர்களோ அல்லது சாரதியோ இளவரசனின் உடலைக் கண்டிருந்தால் நிச்சயமாக. அடுத்த புகைவண்டி நிலைய அதிபருக்கு அறிவித்திருப்பார்கள் என தி இந்து பத்திரிகைக்கு தெரிவித்தார் பெங்களூரு புகையிரத பிரிவின் உயர்மட்ட அதிகாரி பிரவீன் பாண்டே.
பயணிகள் வண்டியினதும்( passenger train)  Inter-city express இனது சாரதிகளும் கூட தண்டவாளத்தின் ஒரமாக அடிபட்டுக் கிடந்த எந்த உடலையும் காணவில்லை.  சாதாரணமாக  புகைவண்டியால் யாராவது தாக்கப்பட்டால். அந்த புகைவண்டியின் சாரதி அதை  அறிவிப்பார், உண்மையில் அவர் கடமையில் இருக்கும் பொது ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அதனை அறிவிக்க வேண்டும் என்பது சட்டமாகும். ஆனால் அப்படி எந்த முறைப்பாடும் தரப்படவில்லை என்கிறார் திரு. பாண்டே.

புகைவண்டியின் சாரதி தற்கொலை செய்தவரைக் காணாமல் போவதற்கும், சாத்தியங்கள் உண்டல்லவா என்று கேட்டதற்கு, தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத, புகையிரத இலாகாவின் அதிகாரியின் கருத்துப்படி- புகைவண்டியின் சாரதி தற்கொலை செய்தவரை காணாமல் போகும் நிலை, அந்த சம்பவம் இருட்டில் நடந்திருந்தால் அல்லது மிகவும் வளைவான பாதையில் புகைவண்டி வந்து கொண்டிருந்தால் அல்லது காலநிலை மிகவும்  மோசமாக இருந்தால்   மட்டும் சாத்தியமாகும் என்றார். ஆனால் இந்த தருமபுரி சம்பவத்தில் குர்லா எக்ஸ்பிரஸ் சம்பவம் நடந்த இடத்தை தாண்டும் போது நேரம் பகல் 12.50 p.m.


செய்தி : ஜீலை 10, 2013.

தர்மபுரியில் எவரும் எந்த புகைவண்டியாலும் ஜூலை 4ம் திகதி தாக்கப்படவில்லை என தென்மேற்கு புகையிரத திணைக்களம் (இலாகா) மீண்டும் அறிவித்துள்ளது. அன்று எவரும் புகைவண்டியால் அடிபட்டு தற்கொலை செய்யவில்லை என புகையிரதத் திணைக்களத்தின்  பெங்களூரூ  பிரிவின் முகாமையாளர் அனில்குமார் அகர்வால்,  தி இந்து பத்திரிகையிடம் தெரிவித்தார்.  கோயம்பத்தூர்- மும்பாய் கடுகதி (எக்ஸ்பிரஸ்) புகைவண்டியின் சாரதி அப்படி எந்த விதமான செய்தியையும் தெரிவிக்கவுமில்லை.

இளவரசனின் மரணம் பற்றிய செய்தியும், உடலில் தலையில் மட்டும் காயங்கள் காணப்படுவதுடன், புகைவண்டியில் மோதியிருந்தால் காணப்படக் கூடிய வேறு எந்த காயங்களும் உடலில் இல்லை என்பதும் புகையிரத தண்டவாளங்களைக் கண்காணிக்கும் கண்காணிப்பாளரால் தான் புகையிரத இலாகாவுக்கு அறிவிக்கப்பட்டது. அதே வேளையில், இறந்தவர் புகைவண்டியில் பக்கமாக இருந்து வந்திருந்தால் சாரதியின் கண்களில் அவர் படாமலிருக்கவும் வாய்ப்புண்டு எனவும் தெரிவித்தார்.

அப்படியானால் குர்லா எக்ஸ்பிரஸின் பின்னால் வந்த இரண்டு புகையிரதங்களின் சாரதிகளும் உடலைப் பார்த்திருக்கலாம் அல்லவா என்ற கேள்விக்கு அந்த இரண்டு சாரதிகளும் அப்படி எந்த விதமான செய்தியையும் தெரிவிக்கவில்லை என்றார் திரு. அகர்வால். தண்டவாளத்தின் இடையில் ஏதாவது உடல் கிடந்திருந்தால் சாரதிகள் நிச்சயமாக அந்த செய்தியைத் தெரிவித்திருப்பார்கள். ஆனால் தண்டவாளத்தின் அருகில் கிடந்திருந்தால், வேகமாக வரும் புகைவண்டியிலிருந்து, ஒருவர் தூங்குகிறாரா அல்லது இறந்து விட்டாரா என்று கூற முடியாது. (அவ்வளவு அருகில் யாராவது தூங்குவார்களா)

யாராவது புகையிரதத்தின் முன்னால் பாய்ந்திருந்தால் அல்லது அந்த நோக்கத்துடன் அங்கு நின்றிருந்தால் சாரதி கண்டிருப்பார். http://www.thehindu.com/news/national/tamil-nadu/no-official-record-of-train-running-over-ilavarasan/article4885690.ece