Sunday, December 15, 2013

இது உண்மையா?

இது உண்மையா? கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் கல்விமான்களில் ஒருவரும், தமிழ், தமிழர் வரலாறு, தமிழீழம்  போன்ற பல விடயங்களில் கட்டுரைகள் எழுதியவரும், தமிழறிஞரும் ஆர்வலருமாகிய திரு.வேலுப்பிள்ளை தங்கவேலு அவர்கள் தனது கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.தமிழர்களால் "கோயில்" என்றழைக்கப்படும் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த தில்லைச் சிதம்பரத்துக்கு யார் சொந்தக்காரர் என்ற வழக்கு நடந்து கொண்டிருக்கும் வேளையில். உண்மையில் ஒரு தமிழன் நுழைந்து விட்டான் என்பதற்காக இத்தனை நூற்றாண்டுகளாக அந்தக் கோயிலில் ஒரு கதவு பூட்டப்பட்டிருக்குமேயானால், அது தமிழினத்துக்கே இழுக்கு. இது உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பது தில்லைக் கோயிலின் பிரச்சனை சூடான செய்தியாக இருக்கும் போதே  உறுதி செய்யப்பட வேண்டும். அப்படி பூட்டப்பட்டிருந்தால் அந்தக் கதவு உடனடியாக திறக்கபட வேண்டுமென்பதால் இதை மீள்பதிவு செய்கிறேன்.    

தமிழ்நாட்டில் சாதிவெறியால் பல நூற்றாண்டுகளாக பூட்டப்பட்டிருக்கும் கதவு?

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய நந்தனார் அல்லது திருநாளைப் போவார், தில்லையில் ஆடவல்லானின் நடனத்தைப் பார்க்கும் ஆவலோடு  சென்றிருந்த போது, தீக்குள் புகுந்து  சிவனைத் தரிசித்து சிவலோகத்தை அடைந்தார், அதாவது தேவர்கள் பூமாரி பொழிய சிவபெருமானில் ஐக்கியமானார் என்று புராணங்கள் கூறுகின்றன. அதையே மதநம்பிக்கையுள்ள கோடிக்கணக்கான சைவர்களும் நம்புகிறார்கள். அவரை இன்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றுகிறோம்.


 ஆனால் அது உண்மையல்ல என்கிறார் திரு. வேலுப்பிள்ளை தங்கவேலு.
அவரது கருத்துப்படி, தீண்டத்தகாதவராகிய திருநாளைப்போவார் சிதம்பரம் கோயிலுக்குள் நுழைய ஆசைப்பட்டது மட்டுமல்ல அங்கு நுழையவும்  துணிந்ததால் ஆத்திரம் கொண்ட சிதம்பரத்து பார்ப்பனர்கள் அல்லது  தில்லை மூவாயிரவர் அவரை உயிரோடு தீமூட்டிக் கொலை செய்தார்களாம். இப்படியான கதைகளை இவர் மட்டுமல்ல, பல பெரியாரிஸ்டுகளும், திராவிட மேடைப்பேச்சாளர்களும் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது ஓரு பெரிய விடயமல்ல.

ஆனால் நந்தனார் தில்லையில் ஆடவல்லானைத் தரிசிக்க நுழைந்த 9வது கதவு ஒரு தீண்டத்தகாதவர்  நுழைந்து தீட்டுப்பட்டதால்  இன்னும் பூட்டப்பட்டிருக்கிறதாம். இவர் கூறுவதை நம்பவே முடியவில்லை. 

தமிழ்நாட்டில் 21வது நூற்றாண்டில் சாதிவெறியின் காரணமாக ஒரு கதவு, அதுவும் பெரும்பான்மை தமிழர்கள் "கோயில்" என்று போற்றும், தமிழ் நாடு அரசின் இந்து மத அறநிலையத்துறையின் கீழ் இருக்கும்   ஆலயத்தில் பூட்டப்பட்டிருக்குமானால் அதைப் போன்ற வெட்கக்கேடு  வேறெதுவுமிருக்க முடியாது. 

இது உண்மையா என்பதை அறிய வேண்டும், உண்மையானால் இந்தக்கதவு கோலாகலமாக திறக்கப்பட வேண்டும்.இந்த விடயம் பற்றி தமிழ்நாட்டில் யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது இது திரு. தங்கவேலு அவர்களின் வெறும் கற்பனையா? 


Ref: www.tamilnation.org

<

19 comments:

நம்பள்கி said...

கதவு பூட்டி இருப்பது உண்மை தான்!

நந்தவனத்தான் said...

அது கதவு அல்ல சுவர்!

கோவிலின் தெற்கு கோபுர வாயின் வழியாக நந்தனார் நுழைந்ததாகவும், அதனால்தான் அங்கு சுவர் எழுப்பப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் அது பொருட்களை எடுத்து செல்ல உருவாக்கப்பட வழி, 12-ம் நூற்றாண்டில் அதை சுவர் வைத்து அடைத்துள்ளோம் என்கிறது தீட்சிதர் தரப்பு. ( http://www.youtube.com/watch?v=N9JzCrYb90o) எது உண்மையோ தெரியவில்லை.

அந்த கதவு வழியாவே நந்தனார் நுழைந்தார், அதனால்தான் அடைக்கப்படது என்பதற்கு என்ன ஆதாரம் இருப்பதாக யாரும் காட்டியதாக தெரியவில்லை. சும்மா கிளப்பிவிடப்பட்ட செய்தியாகத்தான் கொள்ள முடிகிறது. இதே மாதிரி தீட்சிதர்கள் நந்தனாரை எரித்துவிட்டார்கள் என பலர் உறுதியாக நம்புகிறார்கள். இதுக்கு எந்த ஆதாரமும் இருப்பதாக தெரியவில்லை. இவர்களின் நோக்கு சரியென்றால் ராமன் சீதையை எரித்து கொன்றுவிட்டார் என ராமாயணத்தையே மாற்ற எழுத வேண்டியிருக்கும். நந்தனார் மட்டுமல்லாது பிற நாயன்மார்களும் இதேபோல சோதியில் ஐக்கிமானவர்களே. திருஞான சம்மந்தர் திருமணத்தில் அந்தணராக அவருடன் சேர்த்து மேலும் சில நாயன்மார்கள் திருநீலயாழ்ப்பாணர் உட்பட சோதியில் சேர்ந்தார்கள் என்றல்லவா கதை இருக்கிறது.

ஆனால் 'தில்லைவாழ் அந்தணருக்கும் அடியேன்' என சுந்தரர் பாடியதாலோ என்னவோ தீட்சதர்கள் மிகுந்த அகந்தையுடன் நடந்து கொள்ளுகிறார்கள். தாங்கள் சொல்லுவதே சட்டம் என்கிறார்கள். பொன்னம்பல சபையில் தமிழில் பாட ஓதுவார்களை அனுமதித்தும், அகற்றப்பட்ட நந்தனாரின் சிலையை மீண்டும் நிறுவினாலே பல பிரச்சனைகள் தீர்ந்திடும். இத்தனைக்கும் இவர்களே தமிழக அந்தணர் குலத்தை சேர்ந்தவரே. வடக்கிலிருந்து வந்தவர்கள் (ஆரியர்) அல்லர். சோழிய அந்தணர் குலத்தவரான இவர்கள் வடக்கிலிருந்து வந்த பார்ப்பனரிடமிருந்து வடமொழி கற்று பின் தமிழையே புறக்கணிக்கிறார்கள். பெரியார் ஈவெரா இவர்களைப் போன்ற பல தமிழ் பிராமணரையும் சேர்த்து ஆரியராக்கிவிட்டார், அரசியல் செய்ய வசதியாக!

-------------
ஒரு ஐயராத்து மாமி என்னமாய் நந்தனார் சரித்திரத்துக்கு ஆட்டம் போடுகிறாள் பாருங்கள்!http://www.youtube.com/watch?v=xH72TVWB-W4

viyasan said...

@நம்பள்கி

அந்தக் கதவை இப்பொழுதாவது திறப்பதற்கு தீட்சிதர்களின் அனுமதி தேவையா?. தமிழ் அரசு நினைத்தால் அந்தக் கதவுகளை திறந்து, நந்தனார் சிலையை கோலாகலமாக அந்த வழியே மீண்டும் எடுத்துச் செல்ல முடியாதா. அதை விட அவரும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர். நாயன்மார்களிடையே சாதிபேதம் பார்ப்பது சைவத்தில் சிவனை நிந்திப்பதற்கு சமமானது.

viyasan said...

@நந்தவனத்தான்

தெற்கு கோபுர வாயிலின் வழியாகத் தான் நந்தனார் நுழைந்ததாக சைவர்கள் நம்புகிறார்கள். அதனால் பெரும்பான்மை சைவத் தமிழர்களின் விருப்பப்படி, தமிழ்நாடு அரசு, அந்த வாசலை திறந்து விடலாம் தானே. பொருள் எடுத்துச் செல்ல உருவாக்கப்பட்ட வழி என்றால் அதை மீண்டும் திறந்து விடுவதில் தீட்சிதர்களுக்கு ஒரு ஆட்சேபனையும் இருக்க முடியாதல்லவா. இந்த விடயத்தில் அவர்கள் ஏன் அடம்பிடிக்க வேண்டும்.

viyasan said...

@நந்தவனத்தான்


/// 'தில்லைவாழ் அந்தணருக்கும் அடியேன்' என சுந்தரர் பாடியதாலோ என்னவோ தீட்சதர்கள் மிகுந்த அகந்தையுடன் நடந்து கொள்ளுகிறார்கள். தாங்கள் சொல்லுவதே சட்டம் என்கிறார்கள்.///


தவறு! சுந்தரர் “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்றாரே தவிர 'தில்லைவாழ் அந்தணருக்கும் அடியேன்' என்று பாடவில்லை. அதாவது தில்லைவாழ் அந்தணர்களுக்கு உணவளித்து அவர்களுக்கு வாழ்வளித்துக் காக்கும் அவர்களது அடியார்களாகிய சிதம்பரத்தில் வாழ்மக்களுக்கும், சிவபக்தர்களுக்கும் தான் அடியார் என்கிறாரே தவிர, தில்லைவாழ் அந்தணர்க்கு அடியேன் என்று பாடவில்லை. ஆனால் செம்மையே திருநாளைப்போவார்(நந்தனார்)க்கும் அடியேன் என்கிறார்.

ஆனால் இது தான் அவர்களின் அகந்தைக்கு காரணம் என்றால் அதை விட முட்டாள் தனம் இருக்க முடியாது. அதே சுந்தரர் “செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்” என்று கூடத் தான் பாடியிருக்கிறார் அதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் தீட்சிதர்கள் போல் தமிழர்களின் கோயிலில் பங்கு கேட்கலாம் தானே. அறுபத்து மூன்று நாயன்மார்களில் எல்லா சாதியினரும் உண்டு. அதனால் ஒவ்வொரு தமிழ்ச் சாதித்தமிழர்களும், தில்லைத் தீட்சிதர்கள் போல் அகந்தையுடன் சிதம்பரத்தில் சொந்தம் கொண்டாடலாம். :)தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கு மடியேன்
பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியேன்
அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

Murugan said...

நண்பருக்கு ...

இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
காரணம் நாயன்மார்கள் பற்றி வரலாற்று ஆதாரங்கள் நம்மிடம் குறைவே.
நம்பியாண்டார் நம்பிகள் , சேக்கிழார் போன்றோர் மூலம் தான் நமக்கு செய்திகள் கிடைக்கின்றன . அவையும் புராணங்கள் அல்லது கதைகள் போன்றவை.

இன்று,ஞானசம்பந்தர் , நாவுக்கரசர் இவ்வளவு ஏன் தோமையாரை கொன்றது கூட பிராமணர்கள் தான் என்று கதை உள்ளது.

இதனால் பல செய்திகள் உலாவுகின்றன ... வரலாற்று ஆதாரங்கள் இல்லாமல்
தீவிர ஆய்வுகள் தேவை இன்று.

நந்தவனத்தான் said...

என்ன தவறு?

அதே பாடலில் பல நாயன்மார்களின் பெயர்களை சொல்லி... உதாரணமாக திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன் அப்படின்னா திருநாவுக்கரசருக்கு அடியவன்னு அர்த்தமா இல்லை திருநாவுக்கரசருக்கு சோறு போட்டவருக்கு அடியேன்னு அர்த்தமா?

இத்தனைக்கும் பாட்டின் முதலடியை எடுத்து கொடுத்தவர் சிவனாம். அவரு தில்லைவாழ் அந்தணரின் புகழை உணர்த்தவே அப்படி செய்தார்ன்னு ஊரில் எல்லாப் அறிஞரும் சொல்லி கேட்டிருக்கின்றேன். நீங்க உங்க கொள்கைக்கு ஏற்றாப் போல பொருள் சொல்லுறீங்க!

அதென்ன எல்லா சாதி தமிழரும் சொந்தம் கொண்டாலாம் என்று சிவனை தமிழருக்கு மட்டும் சொந்தமாக்குறீர்? சிவன் கடவுள் என்றால் எல்லோருக்கும் பொதுதான் அவரை நம்பும் எந்த ஒரு நபரும் சொந்தம் கொண்டாடகதக்கதே சிதம்பரம். தமிழ் அரசர் மட்டுமல்லாது கிருஷ்ணதேவராயர் போன்ற அயல்மொழி அரசரும் இக்கோயிலுக்கு செய்துள்ளார்கள். தென்னாடுடை சிவனே போற்றி, எந்நாட்டடவர்க்கும் இறைவா போற்றி என்பது சும்மா டூபாக்கூரா?

--------------

முருகன், முதல்லை திருஞானசம்மந்தரே பிராமணர்தான்! அதனால்தான் சமணர்களை கழுவேற்றிய கொலைகாரர் என திக ஆளுக அவரை திட்டுகிறார்கள்

இன்னொன்னு தோமா இந்தியா வந்தார் என்பதே ஒரு மிசினரிகள் கிளப்பிய புரட்டுதான்! வரலாறு முக்கியம் முருகரே!

viyasan said...

@நந்தவனத்தான்

//அதே பாடலில் பல நாயன்மார்களின் பெயர்களை சொல்லி... உதாரணமாக திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன் அப்படின்னா திருநாவுக்கரசருக்கு அடியவன்னு அர்த்தமா இல்லை திருநாவுக்கரசருக்கு சோறு போட்டவருக்கு அடியேன்னு அர்த்தமா?//


அப்படியும் பொருள் கொள்ளலாம். திருநாவுக்கரசனைப் போற்றும் அவனது அடியார்களுக்கெல்லாம் நான் அடியேன். அதாவது சிவனடியார்களைப் போற்றுகிறவர்கள், உபசரிக்கிறவர்களுக்கெல்லாம் நான் அடியேன், அதாவது தொண்டருக்குத் தொண்டன்.

viyasan said...

@நந்தவனத்தான்

//இத்தனைக்கும் பாட்டின் முதலடியை எடுத்து கொடுத்தவர் சிவனாம். அவரு தில்லைவாழ் அந்தணரின் புகழை உணர்த்தவே அப்படி செய்தார்ன்னு ஊரில் எல்லாப் அறிஞரும் சொல்லி கேட்டிருக்கின்றேன். நீங்க உங்க கொள்கைக்கு ஏற்றாப் போல பொருள் சொல்லுறீங்க!///


கோயில் அதாவது சிதம்பரம் தான் தமிழ்ச்சைவத்தின் மெக்கா அல்லது ஜெரூசலம். அதனால் தான் தில்லையிலிருந்து தொடங்கப்பட்டதே தவிர, அறுபத்து மூன்று நாயன்மார்களில் தில்லைவாழந்தணர்கள் உயர்ந்தவர்கள், புகழ் நிறைந்தவர்கள் மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்ற கருத்தில் அல்ல.

அறுபத்துமூன்று நாயன்மார்களில் புலையர், குயவர் வேடர், அரசர், அந்தணர், வேளாளர், மீனவர் இப்படி எல்லா சாதியினரும் உண்டு. அவர்களில் ஏற்றத்தாழ்வோ அல்லது சாதிப்பகுபாடோ இல்லை, அதனால் தான் கோயிலில் அறுபத்து மூன்று நாயன்மாரகளினது சிலைகளும் ஒரே பீடத்தில் வைக்கப்படுகிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் புலையராகியா நந்தனாரும், பார்ப்பனர்களாகிய தில்லைவாழந்தணர்களும் சைவத்தில் சமமானவர்கள். ஏனைய நாயன்மார்களையும் விட தாம் உயர்ந்தவர்கள், தமது புகழை உணர்த்தவே, முதலடியில் அவர்களின் பெயர் சொல்லப்படுகிறது என அவர்கள் அகங்காரம் கொண்டால், அவர்கள் உண்மையில் சிவநிந்தனைக்குள்ளாகின்றனர்.. அபப்டியானால் இரண்டாவது வரியில் “திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்” என குயவனைப் பாடுகிறார் சுந்தரர். அதன் கருத்து ஏனைய நாயன்மாரகளை விட திருநீலகண்டர் உயர்ந்தவர் என்பதா? உண்மையில் சைவத்தின் தாற்பரியம் தெரியாமல் இப்படி அகங்காரம் கொண்ட தீட்சிதர்களிடமிருந்து தில்லைக் கோயில் நிச்சயமாக மீட்கப்பட வேண்டும்.

viyasan said...

@நந்தவனத்தான்

//அதென்ன எல்லா சாதி தமிழரும் சொந்தம் கொண்டாலாம் என்று சிவனை தமிழருக்கு மட்டும் சொந்தமாக்குறீர்? சிவன் கடவுள் என்றால் எல்லோருக்கும் பொதுதான் அவரை நம்பும் எந்த ஒரு நபரும் சொந்தம் கொண்டாடகதக்கதே சிதம்பரம். //

சிவனை வணங்கும் எல்லோரும், ஏன் வெள்ளைக்கார இந்துக்கள் கூட சிவனை சொந்தம் கொண்டாடலாம். ஆனால் தமிழர்களல்லாத, தமிழ் மண்ணில் வேர்கள் இல்லாத எந்த வந்தேறிகளும் தமிழ்நாட்டில் ஒரு சிறிய தூணுக்குக் கூட சொந்தம் கொண்டாட முடியாது, தீட்சிதர்கள் தமது வேர்களை தமிழ் மண்ணில் தேடவில்லை, தாம் எங்கிருந்தோ தமிழ்நாட்டுக்கு வந்ததாக அவர்களே ஒப்புக் கொள்கின்றனர். அப்படியிருக்க எப்படி அந்தப் பெரிய சிதம்பரம் கோயிலுக்கு அவர்கள் சொந்தம் கொண்டாட முடியும்.


//தென்னாடுடை சிவனே போற்றி, எந்நாட்டடவர்க்கும் இறைவா போற்றி என்பது சும்மா டூபாக்கூரா?//


யாரும் சிவனைக் கும்பிடலாம் அஆனல் தமிழ்நாட்டிலுள்ள கோயில்களிலோ அல்லது சொத்துக்களிலோ சொந்தம் கொண்டாட முடியாது. :)

viyasan said...

@நந்தவனத்தான்

//தமிழ் அரசர் மட்டுமல்லாது கிருஷ்ணதேவராயர் போன்ற அயல்மொழி அரசரும் இக்கோயிலுக்கு செய்துள்ளார்கள். ///

சில தமிழரல்லாத அரசர்களும் திருப்பணி செய்துள்ளனர். அவர்கள் ஒன்றும் ஆந்திராவிலிருந்தோ அல்லது மகராட்டிரத்திலிருந்தோ பணத்தைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் கோயில்களைக் கட்டவில்லை, எல்லாம் தமிழ்நாட்டில் தமிழர்களிடம் சுரண்டியது தான். அதனால் தமிழ்நாட்டுக் கோயிலகள் எல்லாம் அது தமிழர்களுக்கு மட்டும் தான் சொந்தம்.

உதாரணமாக அங்கர்வாட்டைக் கூட தமிழ் அல்லது இந்திய அரசர்கள் கட்டியதாக கூறுகிறார்கள் அவர்களும் தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவிலிருந்து பணத்தைக் கொண்டு போகவில்லை, எல்லாமே Khmer மக்களின் உழைப்பும் அவர்களின் நாட்டுச் சொத்துக்கள் தான். அதனால் Angkor Wat கோயில் Khmer people க்கு மட்டும் தான் சொந்தம், அது போல் தமிழ்நாட்டுக் கோயில்களும் தமிழர்களுக்கு மட்டும் தான் சொந்தமானவை.

viyasan said...

@Murugan

//இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
காரணம் நாயன்மார்கள் பற்றி வரலாற்று ஆதாரங்கள் நம்மிடம் குறைவே.
நம்பியாண்டார் நம்பிகள் , சேக்கிழார் போன்றோர் மூலம் தான் நமக்கு செய்திகள் கிடைக்கின்றன . அவையும் புராணங்கள் அல்லது கதைகள் போன்றவை.//


எல்லாவற்றுக்கும் உறுதியான ஆதாரங்கள் எந்த நாட்டிலும் இல்லை. வழி வழிச் செய்திகளில் உண்மை இல்லாமலுமில்லை.நான்கு வேதங்கள் எழுதப்படாமல் தலைமுறை தலைமுறையாக கதைகளாகத் தான் கடத்தப்பட்டன. அவை கட்டுக்கதைகள் என்று எந்தப் பிராமணரும் ஒப்புக் கொள்வதில்லை, அதனால் இந்தச் செய்திகளிலும் முற்றாக உண்மை இல்லை என்றும் ஒதுக்கி விட முடியாது. அதற்கு வலுச்சேர்ப்பது போன்று தெற்கு கோபுர வாசல் சுவரெழுப்பப்பட்டு இன்றும் அடைக்கப்பட்டுள்ளது. அதனால், சைவர்களிடையே நல்லிணக்கத்தைப் பேண, அந்தக் கோபுர வாயில் திறக்கப்பட்டு, நந்தனார் சிலை அந்த வழியாக மீண்டும் எடுத்து வரப்பட்டு, ஆடவல்லானைத் தரிசனம் செய்ய வைக்க வேண்டும். இது தமிழர்களின் கடமை மட்டுமல்ல, தில்லைக் கோயிலில் தமிழர்கள் யாவரும் சமமாணவர்கள் என்ற உரிமையை நிலை நாட்டும் செயலுமாகும்.

viyasan said...

//முருகன், முதல்லை திருஞானசம்மந்தரே பிராமணர்தான்! அதனால்தான் சமணர்களை கழுவேற்றிய கொலைகாரர் என திக ஆளுக அவரை திட்டுகிறார்கள்.//

திருஞானசம்பந்தர், பாரதியார் போல ஒரு தமிழன்..:)

சமணர்களைக் கழுவேற்றிய கதை கூட தேவாரத்தின் பொருளை யறியாமலும், அக்காலத்துப் பேச்சு வழக்கை அல்லது கதை, கவிதைகளில் இடம்பெற்ற மிகைப்படுடுத்தலை அப்படியே உண்மை என்று நம்பியதால் வந்த வினை. இந்த சமணர்களைக் கழுவேற்றிய சம்பவம் பற்றி எந்த சமண நூல்களும் கூறவில்லை. ஆந்திரா, கர்நாடகா போன்ற சமண மதம், தமிழ் நாட்டில் வீழ்ச்சியடைந்த பின்பும் செழிப்புற்றிருந்த பிரதேசங்களிலோ அல்லது பெளத்த நாடாகிய இலங்கையிலோ எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. எண்ணாயிரம் சமணர்கள் கொல்லபாட்டால், அதைக் குறிப்பிட்டு வசைபாடாமல் எந்த சமணராவது இருப்பார்களா, ஆனால் அப்படி ஒரு குறிப்பும் கிடையாதாம்.


//இன்னொன்னு தோமா இந்தியா வந்தார் என்பதே ஒரு மிசினரிகள் கிளப்பிய புரட்டுதான்! வரலாறு முக்கியம் முருகரே!//

தோமா இந்தியாவுக்கு வரவில்லை என்பதை பாப்பாண்டவரே 2006 இல் ஒப்புக் கொண்டுள்ளார். அவரது கருத்தின் படி புனித தோமையார் பாகிஸ்தான் வரை தான் வந்திருக்கிறாரே தவிர, கேரளாவுக்கும், சென்னைக்கும் அவர் வரவில்லை.

Murugan said...

//முருகன், முதல்லை திருஞானசம்மந்தரே பிராமணர்தான்! அதனால்தான் சமணர்களை கழுவேற்றிய கொலைகாரர் என திக ஆளுக அவரை திட்டுகிறார்கள்
இன்னொன்னு தோமா இந்தியா வந்தார் என்பதே ஒரு மிசினரிகள் கிளப்பிய புரட்டுதான்! வரலாறு முக்கியம் முருகரே!///

தெரியும் நண்பரே .. அதனால் தான் கதைகள் என்று கூறியுள்ளேன் ///இன்று,ஞானசம்பந்தர் , நாவுக்கரசர் இவ்வளவு ஏன் தோமையாரை கொன்றது கூட பிராமணர்கள் தான் என்று கதை உள்ளது./////

இதை போல் பல தவறான செய்திகள் உள்ளன . முக்கியமானது --> சிறு தெய்வ வழிபாடும் பிராமணரும் .. சில வரலாற்று ஆய்வாளர், பிராமணர்களுக்கும் , சைவ வெள்ளாளருக்கும் சிறு / குல தெய்வ வழிபாடு இல்லை என்கிறார்.
பல சைவ கோயில் சிவாச்சாரியார்களுக்கும் கூட சிறு தெய்வங்கள்தான் குல தெய்வங்கள். பல சாதிகள் ஓரே தெய்வத்தை குல தெய்வமாக கும்பிடுகிறார்கள். நான் நேரடியாக பார்த்து இருக்கிறேன் ..... இதை ஆதாரத்தோடு நிரூபித்தாலும் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் ... அவ்வளவே..

Murugan said...

///சமணர்களைக் கழுவேற்றிய கதை..// இந்த சமணர்களைக் கழுவேற்றிய சம்பவம் பற்றி எந்த சமண நூல்களும் கூறவில்லை. ஆந்திரா, கர்நாடகா போன்ற சமண மதம், தமிழ் நாட்டில் வீழ்ச்சியடைந்த பின்பும் செழிப்புற்றிருந்த பிரதேசங்களிலோ அல்லது பெளத்த நாடாகிய இலங்கையிலோ எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. //// நீங்கள் கூறுவது உண்மை தான் .... எண்ணாயிரம் என்று பிராமணர்களில் ஒரு குழு பெயர் . செட்டியார்களில் 500வர் போன்ற குல பெயர்கள் உண்டு.
அதே போல் நந்தனார் வரலாற்றில் பெரிய புராணத்திற்கும், கோபாலகிருஷ்ண பாரதி பாடலுக்கும் பல வேடுபாடுகள் உண்டு ... விரிவான ஆய்வுகள் தேவை....
இல்லை என்றால் மீண்டும் மீண்டும் பல அவதூருகள் கிளம்பும்.

//அதற்கு வலுச்சேர்ப்பது போன்று தெற்கு கோபுர வாசல் சுவரெழுப்பப்பட்டு இன்றும் அடைக்கப்பட்டுள்ளது. அதனால், சைவர்களிடையே நல்லிணக்கத்தைப் பேண, அந்தக் கோபுர வாயில் திறக்கப்பட்டு, நந்தனார் சிலை அந்த வழியாக மீண்டும் எடுத்து வரப்பட்டு, ஆடவல்லானைத் தரிசனம் செய்ய வைக்க வேண்டும்./// ---- கண்டிப்பாக.....

Guruji said...

தீக்ஷிதர்கள் தகவல் உண்மையானதாக இருக்ககூடும்! திருப்பணிக்காகவே சன்னதிக்கு நேரே அல்லாமல், மாட்டுவண்டி உள்ளே வர, படி களின்றி சாய்தள பாதை உண்டு! இது மாட்டுவண்டி இரண்டாம் பிரகாரம் செல்லும் வழியே! பணி முடிந்ததும் சுவர் மீண்டும் கட்டப்படும்! சன்னதிக்கு நேரே கொடிமரம், பலிபீடம் தாண்டி, உயரமான மேடையும், ஆனந்த தாண்டவர், சரபேசுரர் சன்னதிகள் உள்ளன! அந்த மேடையில் நந்தனார் சிலை, நடராசனை பார்த்தவாறு இருந்திருக்கலாம்!

ஆனால்,நந்தனாரும், திருஞான சம்பந்தரும் தெற்கு கோபுர வாசல் வழியாக வெளிபிரகாரம் வந்து, பின்னர் கிழக்கு உள் வாசல் வழியே பக்கவாட்டில் படிகளை கடந்து சிற்சபையை அடைந்திருக்கலாம்! வெளிபிரகாரத்தில்,நடராசர் சன்னதிக்குநேராகவும், மூலனாதர் சன்னதிக்கு நேராகவும், சுவரை பார்த்தவாறு, சுதையினால் செய்யப்பட்ட மிகப்பெரிய நந்திகளுள்ளன!

ஆனால், இப்பொது பிரச்சினை, இக்கால நந்தனார்களை அர்ச்சகராக்குவதே! இந்த கோரிக்கை நீர்த்து போக விடக்கூடாது! வாசற்கதவு முக்கியமல்ல!

viyasan said...

@Guruji

இக்கால நந்தனார்கள் அர்ச்சகர்களாக வேண்டுமென்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் "நந்தனில்லாமல், நடராஜனா?". ஒவ்வொரு கோயிலுடன் தொடர்புள்ள ஒவ்வொரு நாயன்மார்களுக்கும் அந்தந்தக் கோயில்களில் சிறப்பான இடம் கொடுக்கப் பட்டிருக்கிறது. அதே போல் தில்லையிலும் நந்தனாருக்கு சிறப்பிடம் அளிக்க வேண்டும், அதனால் தான் நமது முன்னோர்கள், நந்தனாருக்கு அங்கே சிலையமைத்திருந்தார்கள். அதனால் அந்தச் சிலை மீண்டும் அங்கே நிறுவப்பட வேண்டும்.

Maya Natarajan said...

நந்தனாரையும் சேர்த்து 63 நாயன்மார்களுக்கும் சிலை வைத்து பூஜிக்கப்படுகிறது.. ஆதிமூலநாதர் இடத்தில். இதெல்லாம் தெரியாமல் கதை கதையா விட்டு அடிங்க..

viyasan said...

@Maya Natarajan

சிதமபரத்தில் மட்டும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் சிலை இல்லை. உலகம் முழுவதுமுள்ள பல சிவாலயங்களில் அறுபத்துமூவர் சிலைகள் உண்டு. அதில் ஒருவராக நந்தனாரும் இருக்கும் பொழுது, சிதம்பரத்தில் மட்டும் வைக்காது விட்டால் எல்லோரும் கேள்வி கேட்பார்கள். அவர்களின் நந்தனார் எதிர்ப்பு வெளிப்படையாகத் தெரிந்து விடும் அல்லவா. அது தான் காரணமாக இருக்கலாம். சிதம்பரம் கோயிலில் தமிழர்களின் வரலாறு புதைந்து கிடக்கிறது. நந்தனார் நுழைந்த வாயில் இன்றைக்கும் மூடிக் கிடப்பது உண்மை தான் என்பதைப் பலர் உறுதிப்படுத்தியுள்ளனர். அது தவறு என்பதை, நீங்கள் நிரூபியுங்கள் பார்ப்போம். நன்றி.