Friday, November 29, 2013

உடற்பருமனைக் குறைக்க ‘புதிய” கண்டுபிடிப்பு!மேலைத்தேய நாடுகளில் உடற்பருமனைக் குறைக்கும் மருந்து, மாத்திரைகளும், உபகரணங்களும் கோடிக்கணக்கான டாலர்கள் இலாபமீட்டும் வர்த்தகமாகும். அந்த வர்த்தகத்தில் அண்மையில் மிகவும் பேசப்படுவது மட்டுமல்ல பலரும் தமது உடல் பருமனைக் குறைப்பதற்காக புதிய கண்டுபிடிப்பாக புகழ்ந்து தள்ளும் அதாவது holy grail of weight loss” என்று வியக்கும் பொருள் எதுவென்றால், இந்தியாவில் எப்படியோ எனக்குத் தெரியாது, ஆனால் இலங்கையில் பல நூற்றாண்டுகளாக இலங்கை மக்கள் குறிப்பாக சிங்களவர்கள் தமது அன்றாட உணவில் சாதரணமாக சேர்க்கும் (தமிழில்) கொறுக்காய்ப்புளி எனவும் சிங்களவர்கள் கொறக்கா எனவும் அழைக்கும் Garcinia Cambogia.
இந்தக் கொறுக்காய்ப்புளியின் சாற்றைத் தான் உடல் பருமனைக்கு குறைக்கும் அதிசய மாத்திரை அதாவது “miracle pill” என்று உடல் பருமனால் வாடும் லட்சக்கணக்கான மக்கள் போற்றுகிறார்கள்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் தொலைக்காட்சிகளில் இந்தக் கொறுக்காய்ப்புளி மாத்திரையின் மகிமையைப் பற்றி நிகழ்ச்சிகளும், விளம்பரங்களும் மட்டுமன்றி பல நிறுவனங்களும் கொறுக்காய்ப்புளியிலிருந்து வெவ்வேறு மாத்திரைகளைத் தயாரித்து அது பில்லியன் டாலர் வர்த்தகமாக உருவெடுத்து வருகிறது.


கொறுக்காய்ப்புளி அல்லது Garcinia Cambogia ஈரலிலுள்ள  குளுக்கோசையும், கொழுப்பு போன்றவற்றையும் எரிப்பது மட்டுமன்றி உடலின் இரத்தோட்டம் அல்லது குருதிச்சுற்றில் வெளியேற்றப்படும் சீனியின் அளவையும் குறைக்கிறதாம்.  இரத்தத்தில் சீனியின் அளவு குறையும்போது  குரூதிக்குழாய்களில் கொழுப்பு படிவதும் குறைகின்றது. அத்துடன் கொறுக்காய்ப்புளி பாதுகாப்பான, இயற்கை மருந்துமாகும். இலங்கையின் பாரம்பரிய மீன்கறி சமைக்கும் முறை : 

அம்புல் தியல் (சிங்களம்) - புளித்தீயல் (தமிழ்) – Sour Fish Curry. What we need:

1.    மீன் துண்டுகள் -   Sail fish (thalapath)/ Halibut/ Tuna (1lb) curry size pieces 

2.     கொறுக்காய்- Gambooge (Goraka) 5 pieces  (50g)

3.     மிளகு-  Black pepper  (1/2 table spoons)
4.     கறித்தூள்   - Curry powder (3 table spoons)
5.       மஞ்சள் தூள்- Turmeric (optional) (1 tea spoon)
6.       உள்ளி- 5 Garlic cloves
7.      இஞ்சி- Small piece of ginger
8.     கறுவாப்பட்டை -  1 inch cinnamon stick
9. வெந்தயம் Fenugreek 1 tea spoon

10.     கறிவேப்பிலை-  Curry leaves
11.  பண்டான் அல்லது றம்பை இலை-A small piece of pandan leaf
12.   உப்பு- 2 Tsp. Salt
12.   பச்சை மிளகாய்- 4 Green chilies slit into half
13. வெங்காயம் 1 Onion
14. கராம்பு, ஏலக்காய்

(The quantities mentioned above are only guidelines and varies according to one’s own taste.)

10 comments:

துளசி கோபால் said...

இதை கோடம்புளி ன்னு சொல்வோம். பொதுவா கேரளத்தில் பரவலாப் பயன் படுத்தப்படுது.

குறிப்பாக மீன் குழம்பு, மீன் கறிக்கு இந்தப் புளிதான்.


கொடுக்காப்புளின்னு சொவதுவேறு ஒரு மரத்தின் பழம். வட்டமா இறால் மீன் போலச் சுருண்டு இருக்கும். உள்ளே சதைப்பற்றான இனிப்பும் துவர்ப்பும் கலந்த பழம். பெரிய கறுப்பு விதைகள். இந்த விதைகளை வச்சு மேஜிக் செய்து காட்டுவோம்:-)

நந்தவனத்தான் said...

கொஞ்ச நாளாக ஆளையோ காணேம், இப்ப பதிவு மேல பதிவாக போட்டு தாக்குகிறீர்?

சில நாட்களுக்கு முன்பு அமேசான் தளத்தில் முதலாமிடத்தில் விற்பனையாகும் சத்து அல்லது ஊட்ட பொருளாக இது இருந்ததை கண்டேன். 5500 பேருக்கும் மேல் ரிவ்யூ செய்திருந்தார்கள். ஊருக்கு போகும் போது குண்டர் ஒருவருக்கு வாங்கி செல்லலாம் என நினைத்தேன். நீங்கள் எழுதியதை படித்ததும்தான் புரிகிறது இது நம்மூர் பொருள்தான் என்று.

நான் ஏற்கனவே ஒருமுறை உங்களிடம் சொல்லியிருக்கிறேன்... தமிழ்நாட்டையும் ஈழத்தையும் விட ஈழத்திற்கும் மலையாள நாட்டிற்கும் உள்ள அதிக ஒற்றுமை என்று. ஈழத்தை போலவே கேரளாவில் மீன் குழம்பு வைக்க இதை மலபார் புளி அல்லது குடம்புளி எனும் பெயரில் பயன்படுத்துகிறார்கள். உங்கள் பதிவை படித்த பின்புதான் தெரிகிறது குடம்புளிதான் இந்த Garcinia என்று. தமிழ்நாட்டில் இதை நாட்டு மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன். http://tinyurl.com/loyow3b

viyasan said...

@துளசி கோபால்

//கொடுக்காப்புளின்னு சொவதுவேறு ஒரு மரத்தின் பழம். வட்டமா இறால் மீன் போலச் சுருண்டு இருக்கும். உள்ளே சதைப்பற்றான இனிப்பும் துவர்ப்பும் கலந்த பழம். பெரிய கறுப்பு விதைகள். இந்த விதைகளை வச்சு மேஜிக் செய்து காட்டுவோம்:-)//

ஈழத்தில் நீங்கள் கூறும் கொடுக்காப்புளிக்குப் பெயர் ‘கோணல் புளியங்காய்’. யாழ்ப்பாணத்தில் “உது தான் கோத்தை வித்த கோணல் புளியங்காய்" என்ற Phrase உண்டு. தமது பழைய நிலையை மறந்தவர்களுக்கு நக்கலாக அதைக் கூறுவதுண்டு. :)

viyasan said...

“உது தான் கோத்தை வித்த கோணல் புளியங்காய்”

"60 களுக்கு முன் தனிய professional களின் மட்டுமான படை எடுப்பு இங்கிலாந்து நோக்கி 60 இன் கடைக்கூற்றில் மெல்ல மெல்ல நடுநிலை மட்டத்தினரின் படை எடுப்பு விசேடமாக SELTEC என்னும் லண்டன் கல்வி நிறுவனம் வலு famous .அங்கை உள்ள ஒருவர் ஷ்பொன்சர் பண்ணினால் காணும் college பீஸ் உம் வலு சொற்பமே .பிறகு அங்கை போனதும் பார்ட் டைம் செய்து உழைச்சு சமாளிக்கலாம் .உப்பிடியான காலத்தில் மிக கசுட்டப்பட்ட ஒரு குடும்பத்தில் ஒருத்தர் சொந்தக்காரர் ஒருவரின் தயவில் அங்கினை போய் ஒருவரியத்திலை இஞ்சை (யாழ்ப்பாணம்) வந்தாராம்.

கூலிங் கிளாஸ் அடிச்சு செண்டு பவுடர் பூசி நண்பர்களுடன் வீதி வலம் போகிறார் .ரோட்டோரம் வயது போன ஆச்சி ஒருவர் கோணல் புளியங்காய் வித்து கொண்டு இருகிறா. இவர் ஆச்சிக்கு கிட்ட போய் .sunglass ஐ ஒரு அசைப்பு அசைச்சு ஆச்சி what is this கோணல் கோணல் காய்? எண்டு கேட்டாராம் .கிழவி ஒருக்காய் மேலும் கீழும் வடிவாய் பாத்துபோட்டு ஒரு சின்ன பெருமூச்சொண்டையும் விட்டு போட்டு.

என்ரை ராசா உது தான்ரா உன்ர *கோத்தை வித்த கோணல் புளியங்காய் எண்டாவாம் .நீ எங்கடை தெய்வானை பிள்ளையின்ர கடைக்குட்டி அல்லே, எண்ண ,(தெய்வானை அக்கா அந்தக்காலத்தில் கோணல்புளி வித்தவ ) அவர் மெல்ல பிரண்டுகளுக்கு சொன்னாராம் மச்சான் லெட்ஸ் go மச்சான் எண்டு நழுவினாராம்." :)


Note: *கோத்தை - யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில், அம்மா என்ற சொல்லுக்கான பதம் ஆத்தா அல்லது ஆத்தை கோத்தை யாகவும், அப்பன் கொப்பனாகவும், அம்மா கொம்மாவாகவும் மாறுவது வழக்கம்.

viyasan said...

@நந்தவனத்தான்

//கொஞ்ச நாளாக ஆளையோ காணேம், இப்ப பதிவு மேல பதிவாக போட்டு தாக்குகிறீர்?//

விடுமுறையில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூருக்கும் சென்றிருந்தேன். அதனால் தான் இந்தப் பக்கம் வரவில்லை.

//நீங்கள் எழுதியதை படித்ததும்தான் புரிகிறது இது நம்மூர் பொருள்தான் என்று. //

இலங்கையில் சாதாரணமாகக் கிடைக்கும் கொறுக்காய்ப்புளி தான் “holy grail of weight loss” என்பதைப் பார்த்ததும் எனக்கு முதலில் சிரிப்பு தான் வந்தது.

viyasan said...

@நந்தவனத்தான்

///நான் ஏற்கனவே ஒருமுறை உங்களிடம் சொல்லியிருக்கிறேன்... தமிழ்நாட்டையும் ஈழத்தையும் விட ஈழத்திற்கும் மலையாள நாட்டிற்கும் உள்ள அதிக ஒற்றுமை என்று. ஈழத்தை போலவே கேரளாவில் மீன் குழம்பு வைக்க இதை மலபார் புளி அல்லது குடம்புளி எனும் பெயரில் பயன்படுத்துகிறார்கள். ///

மலையாளிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பை விட சிங்களவர்களுக்கும் மலையாளிகளுக்கும் தான் அதிகமான தொடர்புண்டு என்று நான் நினைக்கிறேன். பல பிரபலமான சிங்கள அரசியல்வாதிகளே இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னாள் மலையாளிகள் தான். உணவுப் பழக்கங்களிலும் மலையாள வாடை சிங்களவர்களிடம் தான் அதிகம்.

உதாரணமாக, இந்தக் கொறுக்காய்ப்புளியைக் கூடச் சிங்களவர்கள் தான் அதிகளவில் மீன் குழம்பில் பாவிப்பார்களாம். அதற்குப் பதிலாக ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிலுள்ள புளியங்காயின் புளியைத் தான் பாவிப்பார்கள். அத்துடன் இலங்கையில் கொறுக்காய்ப்புளி, புளியங்காய்புளியை விட மலிவானதாம். கூடுதலாக ஏழைகள் தான் புளிக்குப் பதிலாக கொறுக்காயை பாவிப்பார்களாம். நான் மேலே குறிப்பிட்டுள்ள, கொறுக்காய்ப்புளி பாவித்து மீன்கறி தயாரிக்கும் முறை கூட சிங்களவர்களுடையது தான். :)

நம்பள்கி said...

Tamilmanam +1

Anonymous said...

மிக்கப் பயனுள்ள தகவலுக்கு என் மகத்தான நன்றிகள்.

அமுதா கிருஷ்ணா said...

இந்த புளி கேரளக்காரர்கள் சேர்ப்பதால் தான் அங்கே ஹார்ட் அட்டாக் விகிதம் குறைவு என்று படித்து இருக்கிறேன்.

viyasan said...

எனது வலைப்பதிவில் முதன் முறையாக கருத்து தெரிவித்திருக்கும் Ms. துளசி கோபால், Ms.ஸ்ரவாணி, Ms. அமுதா கிருஷ்ணா அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.