Sunday, September 8, 2013

நாம் தமிழர் தலைவர் சீமானுக்கு மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்!அண்ணன்  சீமான் அவர்கள் இன்று செல்வி.கயல்விழியை திருமணம் செய்கிறார். அவரும் அவரது குடும்பமும் ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ எனது மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்.


இந்தப்பாடல் தலைவர் பிரபாகரனுக்காகப் பாடப்பட்டாலும் அவரைத் தனது சகோதரனாகப் போற்றும் சீமான் அவர்களுக்கும் பொருந்தும் என்பதால் அவரது திருமணநன்நாளில்  மணமக்களை  வாழ்த்தி  இந்த ஈழத்துப்  பாடல் அர்ப்பணம்.


உண்மையில் சீமான் ஈழத் தமிழச்சிக்கு "டுமிக்கி கொடுத்தாரா"? 


 புலிப்பூச்சாண்டி காட்டி அப்பாவி ஈழத்தமிழர்களையே சிறையில் போடும் தமிழ்நாட்டில், தமிழ்வெறுப்பு நிறைந்த தமிழெதிரிகள் எல்லாம் தமிழ் பேசும் காரணத்தால் தமிழராக நடித்து தமிழரின் பொருளாதார, அரசியல் நலன்களைப் பங்கு போடும் தமிழ்நாட்டில், தமிழர்கள் ஒன்றுபடுவதை  தாங்கிக் கொள்ளமுடியாத பல தமிழ்ப்பூர்வீகமற்ற புதிய தமிழர்கள் புரட்சி நடத்தும் தமிழ்நாட்டில், ஈழத்தமிழர்களை நேசிக்கும் தமிழர்கள் தாம் விரும்பினால் கூட ஒரு ஈழத்தமிழ்ப்பெண்ணை அதிலும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ள பெண்ணை, அதுவும் விடுதலைப்புலிகளின் போராளியின் விதவையை, எப்படி இந்திய சட்டங்களை மீறி மணக்க முடியும் என்பதையும்,  அதிலும் ஒரு புலி ஆதரவுத் தலைவர் அப்படி மணந்தால், அதனால் வரும் விளைவுகள், விளம்பரங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசே அனுமதிக்காது என்பதையும் அறியாத அரை வேக்காடுகள் தான் “ஈழச்சிக்கு டுமிக்கி கொடுத்தார் சீமான்” என்று உளறுவார்கள்.

வயது முதிர்ந்து, நோய்வாய்ப்பட்டிருந்த பிரபாகரனின் தாயைத் தமிழ்நாட்டு மண்ணில் சாகக் கூட அனுமதிக்காத இந்திய/தமிழ்நாடு அரசுகள்  ஒரு புலி இயக்கத்துடன் தொடர்புள்ள பெண்ணை தமிழ்நாட்டில் வாழ அனுமதிக்காது, அதிலும் ஒரு அரசியல் தலைவரின் மனைவியாக வாழவிடாது என்பதை தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழர்களை எதிர்க்கும் ராஜபக்ச ஆதரவு திராவிடர்கள் அறிவார்கள், ஆனால் எப்படியாவது தமிழ்த் தேசியம் பேசுபவர்களை வசை பாட வேண்டும் அது தான் அவர்களின் நோக்கம், அவர்களின் சதியை அறியாமல் அவர்களுக்கு ஆதரவளிக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான் பரிதாபத்துக்குரியவர்கள்.  

சீமானின் திருமணம் இன்று நடைபெற்றது


சீமானின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் அரணையூர் ஆகும்.  செந்தமிழன்-அன்னம்மாள் தம்பதிக்கு மூத்த புதல்னாக பிறந்த சீமானுக்கு, 2 சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் காளிமுத்து மற்றும் மனோகரி தம்பதியின் புதல்வி கயல்விழியை இன்று திருமணம் செய்து கொள்கிறார்.  மணமகள் எம்.ஏ. பட்டம் பெற்றவர். இவர்களது திருமணம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் காலை 9.00 முதல் இடம்பெற்று வருகின்றது. சீமான்-கயல்விழி ஆகியோரின் திருமணம் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறுகிறது.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு முன்னிலை வகிக்கிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் இணைந்து செய்துள்ளனர்.  திருமண விழாவில், அரசியல் பிரமுகர்களும், திரை உலகத்தினரும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர். இவர் நடிகர் பிரபு நடித்த பாஞ்சாலங்குறிச்சி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். தம்பி படத்தின் மூலம் தமிழ் சினிமாத்துறையில் தனக்கென ஒரிடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஆரம்ப நாட்களிலிருந்தே தமிழ் உணர்வாளராகவும், தமிழருக்கு எதிரான நிகழ்வுகளுக்கு திடமாகக் குரல் கொடுப்பவராகவும் சீமான் இருந்து வந்துள்ளார். குறிப்பாக ஈழப் பிரச்சினையில் உறுதியாகக் குரல் கொடுத்தார். தமீழழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனை நேரில் சந்தித்த பிறகு, அவரது தம்பிகளுள் ஒருவராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.

2 comments:

naam thamilar said...

செந்தமிழன் சீமான் பற்றிய உங்களின் பதிவிற்க்கு நன்றி

viyasan said...

உங்களின் வருகைக்கு நன்றி. இந்தப் பதிவு ஒரு ஈழத்து சகோதரனின் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்.