Thursday, September 12, 2013

மாட்சிமை தங்கிய இராமநாதபுரம் மகாராணிக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மாட்சிமை தங்கிய மகாராணி கிருஷ்ணராஜேஸ்வரி நாச்சியார் அவர்கள் கச்சதீவு தமது சமஸ்தானத்துக்கு சொந்தமானது என ஒரு சில நாட்களுக்கு முன்னால் பத்திரிகைகளுக்கு தெரிவித்திருந்தார். அது காணொளியிலும் வெளியிடப்பட்டுள்ளது.இராமநாதபுரம் மகாராணி வறுமையில் வாடுகிறாரா? சிங்களவர்கள் சிரிக்கிறார்கள்.

இந்தக் காணொளியில் மகாராணி மிகவும் சாதாரணமாக, அதிலும் இலங்கையில் ஒரு மத்திய தரக் குடும்பத்தை விடவும் ஏழ்மையாகக் காணப்படுகிறார். அதைப் பார்த்த சிங்களவர்கள் அவர் கச்சதீவுக்கு சொந்தம் கொண்டாடுவதை, அதாவது அவரது  செய்தியின் முக்கியத்துவத்தை கவனிப்பதை விட்டு, மகாராணியைப் பார்த்தால்  நீர்கொழும்பில் நான் மீன் வாங்கும் பெண் போல இருக்கிறார்” (HM looks like someone I buy fish from in Negombo) என்கிறார்கள்

அதனால் மாட்சிமை தங்கிய மகாராணிக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:

நீங்கள் இன்று உங்களின் ஆட்சியை இழந்தாலும், பெருங்காய டப்பா போல் உங்களுக்கு என்று புகழும், பாரம்பரியமும் இருக்கிறது அது மட்டுமல்ல நீங்கள் தமிழர்களின் வரலாற்றின் அடையாளம். உங்களுக்கென்றொரு அந்தஸ்தும், மதிப்புமிருக்கிறது. அதில் மற்ற இனத்தவர்களின் முன்னால் தமிழர்களின் அந்தஸ்தையும் மரியாதையும் கூட கலந்திருக்கிறது. நீங்கள் கலப்பில்லாத ஒரு தமிழ்ப்பெண்ணாக அழகாக, கண்ணியமாக  காட்சியளிக்கிறீர்கள், அதில் எங்களுக்குப் பெருமையே.  ஆனால் ஆள் பாதி ஆடைபாதி  என்பார்கள் அதனால் இப்படியான நேர்காணலை ஊடகங்களுக்கு அளிக்கு முன்னால் உங்களின் அரசபரம்பரையின் அந்தஸ்தைக் காட்டும் வகையில் ஆடையணிகளை அணிந்து கொள்ளுங்கள். அதற்காக முடிசூடிக் கொண்டு சர்வாலங்கார பூஷிதையாக ஊடகங்களை சந்தியுங்கள் என்று நான் கூறவில்லை.

அண்மையில் திருவாங்கூர் இளவரசி (Her Highness the princess of Travancore Gouri Parvathi bayi)

தொலைக்காட்சிக்களித்த நேர்காணலில் தனது பரம்பரைப் பெருமையை மற்றவர்களுக்குக் காட்டும் வகையில் உயர்ரக சேலையும், அரச குடும்பத்தின் நகைகள் சிலவற்றை அணிந்திருந்தார். அதே போல் தஞ்சாவூரில் உள்ள மராத்தி அரசபரம்பரையின் வாரிசுகளில் ஒருவர்.  ஊடகங்களுக்களித்த நேர்காணலின் போது தனது பரம்பரை அந்தஸ்தைக் காட்டும் நகைகள் அணிந்திருந்தார். அவர்களிடம் எல்லாம் நகைகளையும், மாளிகையையும் விட்டு விட்டு, தமிழ் மகாராணியாகிய உங்களிடமிருந்து மட்டும் எல்லாவற்றையும் அபகரித்து விட்டார்களா என்று எனக்குத் தெரியாது.  

நீங்கள் எளிமையாக இருப்பது நல்லது தான் ஆனால் இக்காலத்தில் உங்களின் நேர்காணல் தமிழ்நாட்டுக்குள் மட்டும் தங்கி விடப் போவதில்லை. உலகமெங்கும் சில நிமிடங்களில் சென்றடைந்து விடும், நாங்களும் பெருமையாக வேற்று இனத்தவர்களுக்கு தமிழர்களிடமும் அரசர்களும், அரசிகளும் இருந்தனர், உங்களிடம் மட்டுமல்ல எங்களிடமும் தான் ராஜ பரம்பரையினர் இன்னும் இருக்கின்றனர், தமிழர்களிடமும் மாளிகைகள் இருக்கின்றன என்று காட்டிப் பெருமைப்பட முடியும். 

தமிழ்நாட்டில் சாதாரண மத்தியதரக் குடும்பங்களிடமே எவ்வளவோ நகைகள் இருக்கும் போது, ஒன்றுமில்லாமல் ஒருவழிப்பயணச் சீட்டோடு தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த தமிழரல்லாத திராவிட நடிகர்களே இவ்வளவு நகை நட்டுகளுடன்  செல்வாக்காக வாழ்கிறார்கள் அதனால். உங்களிடமும் உங்களது பரம்பரை நகைகளில் சிலவற்றையாவது விட்டு வைத்திருப்பார்கள் அதனால் இவ்வாறு நீங்கள் ஊடகங்களைச் சந்திக்கும் போது அவற்றில் சிலதை அணிந்து தமிழர்களின் அரசபரம்பரையில் வந்தவர்கள் நீங்கள் என்பதைக் காட்டுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

REDPIX இன் சேக் பரீத் க்கு ஒரு குட்டு


தனது கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கையில் மகிழ்ச்சியடைகிறார் ராஜேஸ்வரி” என்றும் "சென்னையில் வாழும் ராஜேஸ்வரி" என்றும்  மொட்டையாகச் சொல்லும் அந்த நேர்காணலை நடத்தியவரின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைக்க வேண்டும். அதே வேளையில் அவரிடமே தன்னை யாரும் பெயர் சொல்லிக் கூப்பிட மாட்டார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார் இராமநாதபுர மகாராணி. குறைந்த பட்சம் திருமதி ராஜேஸ்வரி அல்லது மகாராணி ராஜேஸ்வரி அல்லது ராஜேஸ்வரி நாச்சியார் என்றாவது கூறியிருக்கலாம். அதை விட மகாராணிக்கு முன்னால் எப்படி உட்காருவது என்பது கூடத் தெரியவில்லை அவருக்கு. நாங்கள் விரும்பாது விட்டாலும் மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில்  உரிய மரியாதையைக் கொடுத்து தான் ஆக வேண்டும் அது தான் பண்பு, அந்தப் பண்பு. மேலேயுள்ள  காணொளியில் இராமநாதபுரம் மகாராணியை நேர்காணல் கண்டவரிடம் இல்லை. அதாவது ஒரு அரசபரம்பரையின் வாரிசை, மகாராணியை எப்படி அழைப்பது என்று அவருக்குத் தெரியவில்லை.


3 comments:

ஜோதிஜி திருப்பூர் said...

என்ன வியாசன் நீங்க தான் எழுதியதா?

ஏற்கனவே ரெட்பிக்ஸ் காணொளிகளை கண்டாலே (அவர்கள் விளம்பரத்திற்காக அங்கே கொஞ்சம்இங்கே கொஞ்சம் போட்டு ஒப்பேற்றிக் கொண்டு) அலறி ஓடிக் கொண்டிருக்கின்றேன்.

ராணி ராஜா பரம்பரை என்றால் நீங்க சொன்ன மாதிரி இருக்கனுமா? ஒரு வேளை இங்கிலாந்து கலாச்சாரத்தை வைத்து இப்படி சொல்றீங்களோ?

நாம் ராஜராஜ சோழன் என்று பெருமையாய் சொல்லிக் கொண்டிருப்பவரின் சமாதியை கொஞ்சம் பாருங்க.

தப்பிப் பிழைத்தவர்கள் தான் ஜெயிப்பார்கள்.

http://deviyar-illam.blogspot.in/2011/01/blog-post_5960.html

viyasan said...

//ராணி ராஜா பரம்பரை என்றால் நீங்க சொன்ன மாதிரி இருக்கனுமா? ஒரு வேளை இங்கிலாந்து கலாச்சாரத்தை வைத்து இப்படி சொல்றீங்களோ?//

மேல் நாட்டவர்களிடமிருந்து தேவையில்லாத Valentines day, Mothers’ day, fathers’ day எல்லாவறையும் கொப்பியடிக்கும் தமிழர்கள் அவர்களிடமிருந்து பல நல்ல விடயங்களைக் கற்றுக் கொள்ளத் தவறி விட்டோம். அதில் ஒன்று தான் நமது பழமையை, வரலாற்றை மறக்காமல் பாதுகாப்பதும், மரியாதையைக் கொடுப்பதும்.
இங்கிலாந்து அரசபரம்பரை இன்றும் ஆட்சியில் இருந்தாலும், ஏழையாகவுள்ள, எந்த நாட்டு அரசகுடும்பமாக இருந்தாலும் அவர்களை மரியாதையாக மேல் நாட்டடவர்கள் நடத்துவார்கள்.

அவர்களுக்கென தனி சலுகைகள் கொடுக்கப்படுவதல்ல, ஆனால் சில Protocol ஐ கடைப்பிடிப்பார்கள். அரசர்கள் மக்களுக்குத் துன்புறுத்தியவர்கள், சுரண்டியவர்கள் என்றெல்லாம் சோசலிசம் பேசுபவர்கள் வெறுத்தாலும், அவர்கள் எமது வரலாற்றின் அங்கம், அதை மறப்பதால் அல்லது மறைப்பதால் எங்களையே நாங்கள் வரலாறு அற்றவர்கள் ஆக்குகிறோம்.
என்னுடைய கருத்து என்னவென்றால் இப்பொழுது ஏழையாக இருந்தால் கூட இராமாநாதபுரம் மகாராணி மரியாதையுடன் நடத்தப்பட வேண்டியவர். அந்த மரியாதைக்கேற்றவாறு அவரும் தனது பொறுப்பை உணர்ந்து இப்படியான பொது ஊடகங்களுக்கு நேர்காணல் அளிக்கும் போது, வேலைக்காரி போல் Dress பண்ணாமல், தனது அந்தஸ்தை, தமிழர்களின் பாரம்பரியத்தை மற்றவர்களுக்கு காட்டும் வகையில் ஆடையணிகளை அணிய வேண்டும். திருவாங்கூர் இளவரசியை பாருங்கள்.

viyasan said...

//நாம் ராஜராஜ சோழன் என்று பெருமையாய் சொல்லிக் கொண்டிருப்பவரின் சமாதியை கொஞ்சம் பாருங்க.//

ஜோதிஜி,

உங்களின் பதிவைப் பார்த்தேன். நானும் அந்தக் காணொளியைப்
பார்த்துக் கவலைப்பட்டிருக்கிறேன். அது ராஜ ராஜ சோழனின் சமாதியாகக் கூட இருக்காலாம், ஆனால் மேல்மட்டத்திலுள்ள தமிழரல்லாத, anti Tamil அதிகாரிகளால் ராஜ ராஜ சோழன் சமாதி சம்பந்தமான தடயங்கள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்ப்டுகின்றன அல்லது அதை உறுதிப்படுத்த மறுக்கிறார்கள் என்பது தான் என்னுடைய கருத்தாகும் . தமிழர்களின் வரலாற்றைத் திட்டமிட்டு திரிக்க, கொச்சைப்படுத்த, ஊடகபலம் வாய்ந்த, உயர்மட்ட செல்வாக்குள்ள தமிழரல்லாதோர் தமிழ்நாட்டிலேயே வாழ்கின்றனர்.