Wednesday, September 11, 2013

பாரதியார் கண்ட கனவை நனவாக்கியவர்கள் ஈழத்தமிழர்கள்!இன்று மகாகவி பாரதியின் நினைவு நாள் புரட்டாதி 11. அந்நிய மோகங்களில் மயங்கி, தன்னிலை மறந்து, தன்னம்பிக்கை இழந்து கிடந்த தமிழ்மொழியை, தமிழர்களை தனது பாட்டுத்திறத்தால்  தட்டி எழுப்பியவன் தமிழன்னை ஈன்ற தவப்புதல்வன் சுப்பிரமணிய பாரதி.

Bharathiyar Statue in Jaffna
எமது முன்னோர்களின் பாரம்பரியங்களை, கலாச்சாரத்தை, மதத்தை வெறுக்காமல், மொழியை  ஒதுக்காமல், நான் தமிழன் என்று பெருமைப்பட்டுக் கொண்டே, என்னுடைய தமிழ்  மொழி தான் நானறிந்த மொழிகளிலே சிறந்த மொழி என்று பீற்றிக் கொண்டே, தமிழ்க்கடவுள் முருகனைப் புகழ்ந்து பாடிக் கொண்டே சாதியை மறுக்கலாம்,  மனிதநேயமுள்ள தமிழனாக இருக்கலாம், ஏன் பார்ப்பனர்களின் மனுசாத்திரத்தைக் கூட எதிர்க்கலாம் அதற்காக நாத்திக, திராவிட வேடம் போடத் தேவையில்லை என்பதை வாழ்ந்து காட்டிய பாரதியார் தான் நானறிந்த தமிழர்களிலே உண்மையான தமிழன் என்பது எனது கருத்தாகும்.

"இன்று ஒரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன் எனது ஆருயிர் மக்காள்!
கொன்றிடல் போல் ஒரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்று பாரதியார் கண்ட கனவை நனவாக்கியவர்கள் நாங்கள்- ஈழத்தமிழர்கள். எங்களை அகதிகள், கள்ளத்தோணிகள் பல வலைப்பதிவர்கள் நக்கலடித்தாலும், எங்களால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் கள்ளத்தோணிகளில் ஏற வேண்டி வருமென சில தமிழ்நாட்டுச்  சிங்கள அடிவருடிகள் உளறினாலும் கூட, நாங்கள் எங்கு சென்றாலும் தமிழை மறக்கவில்லை. இன்று ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ ஏன் உலகம் முழுவதும் தேமதுரத் தமிழோசை கேட்கிறது என்றால் அதற்குக் காரணம் ஈழத்தமிழர்கள் தான்.  பாரதியார் இன்றிருந்தால் எங்களுக்காக எத்தனையோ கவிதைகள் பாடியிருப்பார்.


கனடா  பாராளுமன்றத்தில் இலங்கைத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி. ராதிகா சிற்சபேசன் தமிழில்  கன்னிப் பேச்சு.
"ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்
சீருக்கெல் லாமுத லாகும் - ஒரு
தெய்வந் துணை செய்ய வேண்டும்" 

8 comments:

வவ்வால் said...

வியாசர்வாள்,

//அதற்காக நாத்திக, திராவிட வேடம் போடத் தேவையில்லை //
தமிழர்ப்பற்று வேடம் போடும் ஈழத்தமிழர் போலவா :-))

//தமிழ்நாட்டுச் சிங்கள அடிவருடிகள் உளறினாலும் கூட,//

இன்றும் ,சிங்களனும் நாங்களும் தொப்புள் கொடி உறவுகள், சகோதரர்கள், இலங்கை எங்கள் தாய்நாடு என இலங்கை தேசியம் பேசி மகிழும் உங்களை விடவா வேறு ஒரு சிங்கள அடிவருடி வரப்போறாங்கோ அவ்வ்!

# பாராதியாரின் கனவை மெய்யாக்க நீங்கள் எல்லாம் உண்மையில் மிகவும் பாடு படுகிறீர்கள் என்பதென்னவோ உண்மை தான்,

"சிங்களத்தீவினிக்கோர் பாலம் அமைப்போம்னு" பாரதியார் பாடியதை மெய்யாக்க வேண்டும் எனில் இலங்கை சிங்களத்தீவாக இருக்கனும்,அங்கே அதிகமாக தமிழர்கள் இருக்கக்கூடாதுனு அயல்தேசம் போய் சிங்களர்களின் தீவாக இலங்கை உருவாக உதவி, பாரதியின் கூற்றை மெய்பிக்கும் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!

viyasan said...

வணக்கம் பஞ்சாயத்து, :)

//தமிழர்ப்பற்று வேடம் போடும் ஈழத்தமிழர் போலவா :-))//

எங்களுடைய தமிழ்ப்பற்றில் என்ன குற்றம் கண்டீர், கூறும், கூறிப் பாருமையா.. :)


//இன்றும் ,சிங்களனும் நாங்களும் தொப்புள் கொடி உறவுகள், சகோதரர்கள், //

மலையாளிகளும் தமிழர்களும் போல், சிங்களவர்களும் நாங்களும் ஒரே வேரிலிருந்து வந்தவர்கள், அதன் பின்னர் சிங்கள இனம் பல்லினக் கலப்புள்ள இனமாகி விட்டது, இப்பொழுது அவர்கள் தமது தமிழ்த் தொடர்பை முற்றாக மறுக்கின்றனர். ஆனால் நான் அவர்கள் எனது தொப்புள் கோடி அல்லது சகோதர்கள் என்று ஒரு போதும் சொந்தம் கொண்டாடியதில்லை.

தமிழ்நாட்டுத் தமிழர்களினதும் , இலங்கையின் பூர்வீக குடிகளாகிய இயக்கர் நாகர்களினதும் கலப்பினம் தான் ஈழத்தமிழர்கள். நாகர்களும் தமிழ்ப் பிராகிருதம் பேசிய, பாக்குநீரிணையில் இருகரையிலும் வாழ்ந்த இக்காலத் தமிழர்களின் முன்னோர்கள் என்று தான் நான் ஒரு பதிவில் கூறியிருந்தேன். நீங்கள் சரியாகப் படிக்கவில்லை போல் தெரிகிறது.

viyasan said...

//இலங்கை எங்கள் தாய்நாடு என இலங்கை தேசியம் பேசி மகிழும் உங்களை விடவா வேறு ஒரு சிங்கள அடிவருடி வரப்போறாங்கோ அவ்வ்!//

இலங்கை ஈழத்தமிழர்களின் தாயகமல்ல அங்கு நாங்கள் தாயகம் கேட்க முடியாது என்பது தான் சிங்களவர்களின் வாதம். ஆனால் நான் கூறுவதெல்லாம், இனவாதச் சிங்களவர்கள் என்ன தான் உளறினாலும், ஈழத்தமிழர்களின் தாயகம் இலங்கை தானே தவிர தமிழ்நாடோ அல்லது இந்தியாவோ அல்ல என்பது தான் என்னுடைய வாதம். இந்த விடயத்தில் சிங்களவர்களை எதிர்க்கும் என்னை எப்படி நீங்கள் அவர்களின் அடிவருடி என்பீர்கள். உங்களுக்கு தமிழ் அவ்வளவு புரியாது போலிருக்கிறது.. :)

viyasan said...

//"சிங்களத்தீவினிக்கோர் பாலம் அமைப்போம்னு" பாரதியார் பாடியதை மெய்யாக்க வேண்டும் எனில் இலங்கை சிங்களத்தீவாக இருக்கனும்,அங்கே அதிகமாக தமிழர்கள் இருக்கக்கூடாதுனு அயல்தேசம் போய் சிங்களர்களின் தீவாக இலங்கை உருவாக உதவி//

ஈழத்தமிழர்கள் அகதிகள், கள்ளத்தோணிகள் என்கிறார்ர்கள் உங்களின் சகபாடிகள். ஆனால் நீங்கள் என்னடாவென்றால் இலங்கைத் தமிழர்கள் வேண்டுமென்றே இலங்கையை விட்டுப் போவது போல் பேசுகிறீர்கள். ஈழத்தமிழர்கள் இலங்கையை சிங்களவர்களுக்கு விட்டு, நீங்கள் கூறுவது போல் வேண்டுமென்றே அயல்தேசம் போவதாக இருந்தால், அங்கு போயிருந்து கொண்டு, பாடுபட்டு உழைத்த பணத்தை செலவழித்து எதற்காக சிங்களவர்களுடன் போராடினார்கள், சிங்கள அடிவருடி இந்தியர்கள் ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தாமலிருந்திருந்தால், தமிழீழம் உருவாகிக் கூட இருக்கலாம்.

பாரதியார் சிங்களத் தீவு என்றதற்குக் காரணம் உலகில் எங்குமேயில்லாத சிங்கள இனம் அங்கு பெரும்பான்மையாக, தனித்துவமாக (Unique), இருப்பதனால் தானே தவிர அதன் கருத்து அங்கு தமிழர்கள் இருப்பது பாரதியாருக்குத் தெரியாது அல்லது இலங்கை சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தம் என்று பாரதியார் கருதுவதாக கருத்தல்ல.

உதாரணமாக காரைதீவு என்றால் அதன் கருத்து அந்த தீவில் காரைச்செடிகள் நிறைய உண்டு என்பது தான் அதற்காக அங்கு காரை மட்டும் தான் உண்டு வேறு எந்த மரம், செடி, கொடிகளும் இல்லை என்று கருத்தல்ல.


//பாரதியின் கூற்றை மெய்பிக்கும் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!//

அவ்வளவு இளம் வயதினரா நீங்கள்.... :)))

அ. பாண்டியன் said...

அருமையான வரிகள் நண்பரே. பாரதி மட்டும் இன்னும் சில வருடங்கள் இருந்திருந்தால் தமிழையும் தமிழனையும் இன்னொரு தளத்திற்கு இட்டுச் சென்றிருப்பார் என்பது உண்மை. தமிழ் அண்டை நாட்டில் உலா வருவதற்கு ஈழத்தமிழர்கள் முக்கிய பங்கு வகுக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.அவர்களுக்கு சுதந்திரக் காற்று கிடைக்க வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம். பகிர்வுக்கு நன்றி.

viyasan said...

சகோ. பாண்டியன்,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆனால் உங்களைப் போல் தமிழ்நாட்டுத் தமிழர்கள் எல்லோரும், ஈழத்தமிழர்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்கள் அல்ல என்பது வலைப்பதிவை ஆரம்பித்த பின்பு தான் தெரிகிறது, உங்களின் அன்புக்கு நன்றி.

para balakumar said...

வணக்கம் ,

ஈழத்தமிழர்கள் ஒரு போதும் சிங்களவர்களை தொப்புள் கொடி உறவு என்று சொன்னதேயில்லை .

ஈழத்தமிழர்கள் மேல் காழ்ப்புணர்வு கொண்ட இந்திய தேசிய தாசர்களின் கற்பனை அளவுக்கு மீறி போய்க்கொண்டிருக்கிறது .

ஈழத்தமிழர்கள் பொதுவாக தமிழ் நாட்டவரையே தொப்புள் கொடி உறவு என்றழைப்பதுண்டு .

அதையே சிங்களவரை தொப்புள் கொடி உறவென்று சொன்னதாக பச்சை பொய் ஒன்றை சொல்லியிருக்கிறார் .

இந்திய தாசர்கள் காழ்ப்புணர்வு காரணமாக அவதூறுகளையும் பொய்களையும் சரளமாக அள்ளி வீசி வருபவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான்
இந்த விடயத்தில் சிங்களவர்கள் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும் .

இந்திய அரசு சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழரையும் ஈழ தேசத்தையும் அழித்தொழித்தபோது மகி ழ்ந்து ஆரவாரித்த இந்திய தேசிய ஊடகங்களும் இந்திய தாசர்களும் இப்போது ஈழதேசம் தமிழர்கள் வெளியேறுவதால் சிங்கள மயமாகி வருவதாக முதலை க்கண்ணீர் வடிக்கிறார்கள்
ஈழ தேச அழிவின்போது சிங்களவர்களுக்கு விளக்கு பிடித்தவர்கள் இப்போது ஆடு நனைகிறது என்று ஊளையிடுகிறார்கள் .

இதனை ஈழத்தமிழர்க்குத்தான் சொல்கிறார்கள் .
சர்வதேசத்துக்கோ அல்லது ஐ . நாவுக்கோ இவ்வாறு மறந்தும் சொல்லிவிட மாட்டார்கள்

ஈழத்தமிழர்க்கு இதனை சொல்லும்போதுதான் என்ன ஒரு எள்ளல் ? என்ன ஒரு நக்கல் ? உங்க பரிதாப நிலைமையை பார்த்தீர்களா ?
இத்தோட ஒழிந்தீர் களடா ? என்கிற நையாண்டியும் எகத்தாளமும்தான் நிரம்பி வழிகிறது .
இந்த மாதிரி புத்தி இந்தியாக்காரன் தான் உண்டு .

சிங்களவனுக்கு கூட இந்த நரிப்புத்தி இல்லை .
இது இந்தியர்களுக்கே உரிய தனித்துவமான குணம் போலும் .

.

viyasan said...

@para balakumar

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சில இந்தியர்களுக்கு ஈழத்தமிழர்களிடம் நக்கலும், நையாண்டியும் உண்டு. ஆனால் நம்மட பஞ்சாயத்து, அதாவது வவ்வால் அவர்களிடம் அந்தக் குணம் இருப்பதாகத் தெரியவில்லை, அவர் எல்லோரிடமும் அப்படித் தான் நடந்து கொள்கிறார். :)

ஆனால் நீங்கள் சொல்லும் நரிப்புத்தியுடன், தமிழர்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிப்பது போல நைசாக சிங்கள ஆதரவுக் கருத்துக்களைப் புகுத்தி, ஈழத்தமிழர்களை இழிவு படுத்துபவர்களும், சிங்கள இனவாதிகள் செய்வது போலவே வரலாற்றைத் திரித்து ஈழத்தமிழர்களை வந்தேறு குடிகளாக்கும் சிங்கள சார்பு தமிழ்நாட்டவர்களும் (அவர்கள் உண்மையில் தமிழர்களா என்று எனக்குத் தெரியாது, ஏனென்றால் தமிழ்நாட்டில் கண்டவன், நின்றவன், பிழைக்க வந்தவன், அப்பன், ஆச்சி தமிழரல்லாதவன், வீட்டில் தமிழ் பேசாதவன் எல்லாம் நான் தமிழன் என்கிறார்கள்) இருக்கிறார்கள் என்பது எனக்கு தமிழ்மணத்துக்கு வந்த பின்பு தான் தெரியும். :(