Sunday, August 25, 2013

மண்டேலா தொடக்கம் மகிந்த ராஜபக்ச வரை.......விடுதலைப் புலிகளின் பெண் வீரர்களை கண்டு சிங்களவர்கள் நடுங்கிய ஒரு காலம் இருந்தது. ஆனால் இப்பொழுது சிங்கள இனவாதிகளால் வெறுக்கப்படுவது மட்டுமன்றி  அவர்கள் பயப்படும்  ஒரேயொரு தமிழ்ப்பெண் ஐக்கிய நாடுகள் சபையின்  மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் டாக்டர். நவநீதம்பிள்ளை ஆகும்.

சிறையில் வாடிய தென்னாபிரிக்க தலைவர்  நெல்சன் மண்டேலாவுக்கு வழக்கறிஞர்களின் ஆலோசனை கிடைப்பதற்கு போராடி வென்றது தொடக்கம் இன்று மகிந்த ராஜபக்சவின் போர்க்குற்றங்கள் நீதியான முறையில் விசாரிக்கப்பட வேண்டுமென்று தொடர்ச்சியாக குரலெழுப்பும்  தமிழ்ப்பெண் செல்வி நவநீதம்பிள்ளை நாளை முதல் முறையாக இலங்கைக்கு வருகை புரிகின்றார்.

மாண்புமிகு நீதியரசர்(சி) செல்வி. நவநீதம் பிள்ளை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளராக 2003 இலிருந்து பதவி வகித்து வருகிறார். தென்னாபிரிக்க தமிழர்களில் ஒருவராகிய செல்வி. பிள்ளை தென்னாபிரிக்காவில் Natal Province இல் முதன் முதலாக வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்த பெண் ஆவார். அத்துடன் முதலாவது வெள்ளையரல்லாத இனத்தைச் சேர்ந்த சரவதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த பெண்மணி என்ற பெருமையும் அவருக்குரியது.

ஆரம்பகாலத்தில் வெள்ளையரல்லாத தென்னாபிரிக்க வழக்கறிஞர் என்ற வகையில், அவரது தோலின் நிறத்தின் காரணமாக, நீதிபதியின் அறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட செல்வி. நவநீதம்பிள்ளை தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கெதிரான போராட்டம் நடந்த காலகட்டத்தில் பல போராளிகளின் சார்பில்  வழக்குகளை நடத்தியவர் அத்துடன் அவரும் அவரது கணவரும் தென்னாபிரிக்காவின் தொழிற்சங்கவாதிகளாவர்.    தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவை அடைத்து வைத்திருந்த  ரொபின் தீவின் சிறைக்குப் பொறுப்பாக இருந்த சிறை அதிகாரிக்கெதிராக வெற்றிகரமாக வழக்கைத் தொடர்ந்து,  அங்கிருந்த நெல்சன் மண்டேலாவுக்கும் ஏனைய அரசியல் கைதிகளுக்கும் 1973 ஆண்டு வழக்கறிஞர்களின் ஆலோசனை கிடைக்க வழி செய்த பெருமையும் அவரைச் சாரும். அத்துடன் தென்னாபிரிக்காவின் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த முதல் இந்திய/தமிழ் வம்சாவழி  பெண் என்ற பெருமைக்கும் உரியவர் அவர். அவர் இணைந்து உருவாக்கிய Equality Now என்ற அமைப்பு இன்று உலகில் பெண்களின் உரிமைக்காகப் போராடுகிறது.


ருவாண்டா நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலைகளையும், மனிதவுரிமை மீறல்களையும், போர்க்குற்றங்களையும் விசாரிக்கும் the International Criminal Tribunal for Rwanda வின் நீதிபதியாக இருந்து, உலகின் சட்டவரலாற்றில் முக்கிய தீர்ப்புகளில் ஒன்றான, போரில் கற்பழிப்பை ஆயுதமாக பயன்படுத்துவதும், பாலியல் துன்புறுத்தல்களும்  திட்டமிட்ட இன அழிப்பே என்பதை வரையறுத்து தீர்ப்பு வழங்கியவர். இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்புக்கும்,.மனிதவுரிமை மீறல்களுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமன்றி யாருக்கும் அஞ்சாமல் தொடர்ந்து ஒரே குரலில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு  நடுநிலையான சர்வதேச விசாரணை நடத்தப் பட வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், இலங்கை அரசினதும், இலங்கை சார்பு நாடுகளினதும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டவர். அதனால் எத்தனையோ முறை சிங்கள இனவாதிகளால் அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டும், அவருக்கெதிராக போராட்டங்களும், அவர் ஒரு தமிழ்ப்பெண் என்ற காரணத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு சார்பாக நடந்து கொள்கிறார் எனவும், அவர் இலங்கைக்கு வருகை தருவதன் காரணம் இலங்கை அரசுக்கெதிராக போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சிகளைத் தயார் செய்து தடயங்களை சேகரிப்பதற்காக எனவும் அவரை வில்லியாக்கி, வெறுத்த சிங்களவர்களும், இலங்கை அரசும் இன்று சர்வதேச அழுத்தத்தின் காரணமாக அவருக்கு இலங்கை வருவதற்கு மட்டுமன்றி அவர் விரும்பும் இடங்களுக்கெல்லாம் சுதந்திரமாக பயணம் செய்யவும், அவர் விரும்பியவர்களைச் சந்திக்கவும், பூரண ஒத்துழைப்பளிக்க 
சம்மதித்துள்ளனர்.

இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் காணாமல் போனவர்களின் உறவினர்களும் பெற்றோர்களும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் செயலகத்துக்கு தமது முறைப்பாட்டைத் தெரிவிக்க இந்த ஆண்டின் ஆரம்பத்தில் முனைந்த போது அவர்களை கொழும்புக்குச் செல்ல விடாமல் தடுத்து திருப்பி அனுப்பியது இலங்கை அரசு. அதனால் வடக்கு, கிழக்கிலுள்ள பொதுமக்கள் தமது முறைப்பாட்டை நேரடியாக செல்வி பிள்ளையிடம் தெரிவிப்பர் என எதிர்பார்க்கபடுகிறது. அத்துடன் காணமல் போனவர்களின் துயரங்களும் அவர்களின் நிலையம் மிகவும் கொடுமையானது என ஆணையாளர் பிள்ளை அவர்கள் ஏற்கனவே கருத்து தெரிவுத்துள்ளார். 

திருகோணமலையில் 2006 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் ஒருவரின் தந்தை கடந்த வருட ஐ. நா. மனிதவுரிமைப் பேரவையின் கூட்டத்தில் கண்ணீர் மல்க தனது மகனின் கொலைக்கு நீதி கேட்டார். ஆணையாளர் செல்வி. பிள்ளை தனது இலங்கை பற்றிய இந்த ஆண்டறிக்கையில் திருகோணமலை படுகொலையைக் குறிப்பிட்டார், அதனாலேயே இலங்கை அரசு திருகோணமலை படுகொலையில் சம்பந்தப்பட்ட 12 அதிரடிப்படை வீரர்களை கைது செய்து விளக்க மறியலில் வைத்துள்ளது. அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு, விசாரணை எதுவும் ஆரம்பிக்கப்படாத போதிலும், இந்த விடயத்தில் தான்  இலங்கை படைகள் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்று முதன்முறையாக நீதித்துறையின் ஆணைக்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.3 comments:

சார்வாகன் said...

சகோ வியாசன்,
திரு நவநீதம் பிள்ளையின் மனித உரிமை ஆதரவு சார் செயல்கள் பாராட்டுக்கு உரியது. அவரின் வருகை இலங்கை பிரச்சினையில் என்ன மாறுதல்களைக் கொண்டு வரும் என்பதன் மீது மட்டுமே முடிவு சொல்ல முடியும்.
தமிழர்களை காப்பாற்றுவது என்றால் முள்ளிவாய்க்காலிலேயே செய்து இருக்கலாம். அதை விட்டு அவ்வப்போது இராசப்க்சேவுக்கு மிதமான அழுத்தம் கொடுத்து காரியம்[பொருளாதார+இராணுவம் சார்] சாதிப்பதுதான், அமெரிக்க+ கூட்டணி நாடுகளின் செயல் எனவே கூறுகிறேன்
இலங்கையில் அந்நிய முதலீடு,உலக பொருளாதாரத்திற்கு அவசியம் என்பதால் அங்கு நிச்சயம் அமைதி நீடிக்கவே அமெரிக்க,சீனா விரும்புகின்றன.
ஆனாலும் இலங்கையில் எவ்வளவு பங்கு என்பது மட்டுமே சிக்கல்.
அதே கதைதான். அமரிக்க ,சீன முரணில் இன்னொரு காய் நகர்த்தல் மட்டுமே. இராசபக்சே சீனாவை விட்டு அமரிக்கா பக்கம் சாய வேண்டும் என்பதுதான் நோக்கம்.

ஏன் அமெரிக்காவின் கைப்பாவை ஐ.நா தமிழரான நவநீதம் பிள்ளையை ,அதே போல் செயல்படக் கூடிய பலருக்கு பதிலாக இப்போது பார்வையாளராக அனௌப்ப வேண்டும்? இது இராசபக்சேவுக்கு, திரு நவநீதம் பிள்ளை தமிழர் என்பதால் சிங்கள விரோத மனப்பான்மை கொண்டவராக இருக்கிறார் என வாதம் செய்ய வாய்ப்பு அளிக்கிறது.
ஏன் முழுதும் அமெரிக்க,ஐரோப்ப்பிய குழுக்களை அனுப்பி உண்மை நிலையை வெளியிடக் கூடாது?
அதாவது இராசபக்சேவையும் கொஞ்சம் மிரட்ட வேண்டும்,ஆனால் அவருக்கு மிக்க பாதகம் வந்து விடக் கூடாது& இராசபக்சே எதிர்ப்பு சிங்கள அரசியலுக்கும் கொஞ்சம் ஊக்கம் &தமிழர்களுக்கும் கொஞ்சம் நம்பிக்கை ஊட்டுவது போல் காட்டுவது என்பதே நோக்கம்.
http://www.thesundayleader.lk/2013/08/25/living-with-conspiracies/
It is in such an atmosphere that the United Nations Human Rights Commissioner Navaneetham Pillai is visiting Sri Lanka. On the one hand it is a mockery of history. The lap dogs that threatened they would carry out death fasts if Pillai and company came to Sri Lanka are not to be seen. She comes to scrutinize the government’s human rights record, as it had been decided as necessary at the human rights sessions held in Geneva.
However, the government pretends that it doesn’t care. We have a doubt whether the government is happy inviting more investigations and to get more resolutions passed against it. The government, in its election stages, moaned that there are conspiracies being hatched against it.
However, it is the government that is conspiring by giving more opportunities for imperialism (and the ‘conspirators’ the government complains about) to interfere in the affairs of the country. It is the Rajapaksa government that has paved the way for the likes of Pillai to pulverise the country.

நன்றி!!!

viyasan said...

சகோ. சார்வாகன்,

உங்களின் கருத்துக்கு நன்றி. உங்களின் கருத்து தான் என்னுடையதும். இந்தப் பதிவை நவநீதம் பிள்ளை என்ற ஒரு தமிழ்ப்பெண்ணின் சாதனைகளைப் பாராட்ட வேண்டுமென்ற நோக்கத்தில் மட்டும் தான் பதிவு செய்தேனே தவிர, அவர் இலங்கைத்தமிழர்களுக்காக ஏதாவது பெரிதாக செய்வார் அல்லது நாளைக்கே மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக்கி தண்டனை பெற்றுக் கொடுப்பார் என்ற மாதிரியான எதிர்பார்ப்புகளினால் அல்ல. நிறவெறி பிடித்த தென்னாபிரிக்காவில் அந்த கால கட்டத்தில் பிறந்து, படித்து, இவ்வளவுக்கு உலக அரங்கில் முன்னுக்கு வந்த ஒரு தமிழ்ப்பெண்ணை இந்த தருணத்தில் பாராட்ட வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்டதே தவிர அந்த சுயலாப நோக்கமும் கிடையாது. உலக வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டியில் இலங்கை முக்கியமான பணயமாக உள்ளது என்பதும் அந்தப் போட்டியில் ஈழத்தமிழர்களின் அழுகையும் கூக்குரலும் காணாமல் போய் விடும் என்பதையும் நானும் அறிவேன்.

நவி பிள்ளையின் வருகைக்கு இவ்வளவு நாளும் எதிர்ப்பு தெரிவித்த இலங்கை அரசு( முள்ளிவாய்க்காலில் அழிவுகளையும், மனித எலும்புகளையும் அகற்ற சிலகாலம் தேவைப்பட்டது) இப்பொழுது தான் ஒத்துழைப்பு கொடுக்கிறது, அவர் ஆணையாளராக இருக்கும் போது, அவர் ஒரு தமிழர் என்ற காரணத்துக்காக இன்னொருவரை அனுப்புவது அவரது நடுநிலைமையை மட்டுமல்ல அவரது கண்ணியத்தையும் அவமதிக்கும் செயல். சிங்கள இனவாதிகள் அவர் தமிழர் என்றதற்காக ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்று வேறு யாரையும் அனுப்பினால், ஐக்கியநாடுகள் சபை தனது நிகழ்ச்சிநிரலை சிங்கள இனவாதிகளின் கருத்துப்படி தயார் செய்வதாகி விடும். அதை விட நவி பிள்ளைக்கு முன்னர் மனிதவுரிமை பேரவையின் ஆணையாளராக இருந்த கனடாவின் Madam Justice Louise Arbour கூட அவரே தான் இலங்கைக்கு சென்றாரே தவிர வேறு யாரையும் அனுப்பவில்லை. அவர் போயும் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. அதனால் இந்த முறை நவி பிள்ளை தமிழர் என்பதற்காக வேறு யாரையாவது அனுப்பினால் , சிங்கள இனவாதிகளுக்குப் பயந்து தான் அவர் வரவில்லை என்றாகி விடும். நவி பிள்ளையை அமெரிக்காவின் கைப்பொம்மை என்பதை விட, ஐக்கியநாடுகள் சபையின் நிர்வாகிகள் அனைவருமே அமெரிக்காவின் கைப்பிள்ளை என்பது தான் தகும்.

para balakumar said...

டியர் சார்வாகன் ,

தங்களது பின்னூட்டத்தில் தாங்கள் வழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் மறை முகமாக சொல்ல வருவது இதுதான்.

இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களை கொன்றொழித்தவர்கள் அதற்கு காரணமானவர்களாக இன் தியாவிலும் இலங்கையிலும் உள்ள கொலை பாதகர்களை உங்களால் (ஈழ்த்தமிழர்களல் ) ஒன்றும் புடுங்க முடியாது என்பதைத்தான் நாசுக்காக குறிப்பிடுகிறீர்கள்.

அதச்சொல்லும்போதுதான் என்ன ஒரு நயவஞகம்.

முள்ளி வாய்க்காலில் தமிழர்களின் அழிவை முன்பே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும் . இப்பொது நவி வந்து போவதால் எந்த நனமையும் இல்ட்லை என்பது தங்களது கருத்து.

அப்படியானால் அந்த கொலை பாதகர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படத்தேவையில்லை என்பது போல் தங்களது கருத்து அமைந்துள்ளது.

ராஜிவ் காந்தி கொலையை முன்பே தடுத்துநிறுத்தி இருக்க வேண்டும் . இப்பொது உணவு , தண்ணீர் . பற்றரி போன்றவற்றை வழங்கினார்கள் என குற்றம் சுமத்தி எதற்கு இருபது வருடங்களுக்கு மேலாக சிறையில் வைத்திருக்க வேண்டும்.

தூக்கில் போடத்துடிக்க வேண்டும்.

அவர்களையும் விடுத்து விடலாமே