Friday, August 23, 2013

கனடாவின் சீற்றம் – இதனால் தான் ஈழத்தமிழர்கள் இந்தியர்களின் மத்தியத்தை நம்புவதில்லை!


We Stand on Guard for Thee!
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகமாக  இந்தியராகிய கமலேஸ் சர்மா என்பவர் பதவி வகிக்கிறார் என்பது  யாவரும் அறிந்ததே. அவர் தனது பதவியின் கண்ணியத்தையும், பொறுப்பையும் காப்பாற்றும் வகையில் எல்லா நாடுகளுக்கும் பொதுவாக நடுநிலை வகிக்க வேண்டியவர். கனடாவும், பல மனிதவுரிமை நிறுவனங்களும் இலங்கையில் பொது நலவாய நாடுகளின் மாநாடு நடைபெறுவதை எதிர்த்தாலும், இலங்கையில் தான் அந்த மாநாடு நடைபெற வேண்டுமென்பதில் தீவிரமாக இருப்பவர் இந்த சர்மா என்பது குறிப்பிடத் தக்கது.

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் அத்துடன் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும், அத்துடன் இலங்கையின் மனிதவுரிமை மீறல்களில் முன்னேற்றம் காணப்படாது விட்டால் இலங்கையில் நவம்பர் 2013 இல் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார் கனடாவின் பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர். இலங்கை அந்த மாநாட்டை நடத்துவதும், அதைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி இரண்டு வருடங்களுக்கு பொதுநலவாய நாடுகளின் தலைவராக இருப்பதும், 'accommodates evil', அதாவது தீவினைக்கு வழி சமைத்துக் கொடுப்பது என்றும் குறிப்பிட்டார் கனடாவின் வெளியுறவு அமைச்சர் ஜான் பயர்ட்.

இப்பொழுது கனடாவின் பொதுநலவாய நாடுகளுக்கான பிரதிநிதி செனட்டர் ஹியூ சீகல் அவர்கள் பொதுநலவாய நாடுகளின் செயலாளரும் இந்தியருமாகிய கமலேஷ் சர்மா மீது கனடாவின் சீற்றத்தை வெளிக்காட்டியுள்ளார்.

Senator Hugh Segal
இலங்கையின் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி சிராணி பண்டாரநாயக்கவை சட்டத்துக்கு புறம்பான வகையில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து பதவியிலிருந்து நீக்கியது பொதுநலவாய நாடுகளின் அமைப்பானது   ஜனநாயகம், நடுநிலையான நீதித்துறை போன்ற விடயங்களில் கொண்டுள்ள உயரிய கொள்கைகளுக்கு எதிரானதா என்றறிய பொதுநலவாய நாடுகளின் செயலாளரின் செயலகத்தால் சட்ட அறிஞர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட சட்டவியல் பரிந்துரையை   அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களின் செயல்குழுவுடன் இந்தியராகிய பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர்நாயகம்   கமலேஷ் சர்மா (இந்தியர்) ஏன் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதைத் தன்னால்  புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார் கனடாவின் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பிரதிநிதி செனட்டர் ஹியூ சீகல்.

Canada Slams Commonwealth SG Sharma Over Burying Legal Reports On Sri Lanka
http://www.colombotelegraph.com/index.php/canada-slams-commonwealth-sg-sharma-over-burying-legal-reports-on-sri-lanka/
PLEASE CLICK TO ENLARGE

இலங்கையின் உச்சநீதி மன்ற நீதிபதியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அவரைப் பதவியிலிருந்து நீக்கியதைப்பற்றி உத்தியோக பூர்வமாக தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தவர் செயலாளர் கமலேஷ் சர்மா, அதனால் அவர் நடுநிலையான சட்டவியல், அரசியலமைப்பு வல்லுனர்களின் சட்டவியல் அறிவுரையை பெற்றிருக்கவேண்டும் என்பது யாவராலும் புரிந்து கொள்ளக் கூடியதே

 
ஆனால் அப்படி பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சட்டவியல் அறிவுரைகளும் அபிப்பிராயங்களும் பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களின் செயல்குழுவுடன் (CMAG, ) இலங்கை   சம்பந்தமாக  நடைபெற்ற நீண்ட கலந்துரையாடல் நடைபெறுவதற்கு முன்பாகவே ஏன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனக் குறிப்பிட்டார் கனடாவின் பொது நலவாய நாடுகளின் பிரதிநிதி.
மேன்மை தங்கிய பங்களாதேசின் வெளிவிவகார அமைச்சர் தலைமையில் இயங்கும் பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களின் செயல்குழுவினர் (“CMAG, )மேற்கொண்ட சந்திப்பின் முன்பாக,  செயலாளர் நாயகம் பெற்றுக் கொண்ட சட்ட அறிவுரைகளையும் அபிப்பிராயங்களையும் பெற்றுக் கொள்ள அவர்களுக்கு உரிமையுண்டு என்றார் கனடாவின் செனட்டர் ஹியூ சீகல்.

 
இதனால் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் ஒழிவு மறைவற்ற வெளிப்படையான தன்மைக்கு (Transparency) பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார் அவர்.
செயலாளர் நாயகத்தின் உயரிய செயலகத்தின் செலவில் பெற்றுக் கொண்ட சட்ட அறிவுரைகளும் ஆராய்ச்சிகளும் பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்கள் பெற்றுக் கொள்வதற்கு  செயலாளர் நாயகத்தின் செயலகம் தடையாக இருக்கக் கூடாது என மேலும் தெரிவித்தார் கனடாவின் பிரதிநிதி.

 
கனடாவின் பிரதிநிதியின் கருத்தை ஒத்த கருத்தையே தெரிவித்தார் இலங்கையின் சட்டவியலாளர்கள் அமைப்பின் தலைவர் உபுல் ஜெயசூரியா. உண்மைத்தன்மைக்கு, வெளிப்படையான தன்மையையும் காக்கும் வகையிலும், கமலேஷ் சர்மா தனது சொந்தச் செலவில் சட்டவல்லுனர்களின் அறிவுரையை பெற்றுக் கொள்ளவில்லை என்பதாலும், அவரால் பெற்றுக் கொள்ளப்பட்ட சட்ட அறிவுரைகளையும் அபிப்பிராயங்களையும் பொதுநலவாய நாடுகளின் அங்கத்தினர்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவரது கடமையாகும்.

Link:  Exclusive: Secretary General Hides Two Key Legal Findings On CJ Impeachment From CMAG
As exclusively reported in the Colombo Telegraph, Commonwealth Secretary General Kamalesh Sharma may have covered up two key independent legal opinions on the legality of Sri Lanka’s impeachment of Chief Justice Shirani Bandaranayaka, withholding the content of those opinions even from the powerful CMAG. Speculation in Commonwealth and diplomatic circles is that the Secretary General has decided not to disclose the content of the opinions because they may have forced him to act against Sri Lanka which is the next host of the Commonwealth Heads of Government Meeting this November, a top diplomat told Colombo Telegraph.

இந்தச் செய்தி, இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் இந்தியாவின் மலையாளி ஐ.நா அதிகாரி ஒருவர் எவ்வாறு ஒரு பக்கச் சார்பாக, சிங்களவர்களுக்கு ஆதரவாக  நடந்து கொண்டார் என்பதைத்  தான் இலங்கைத் தமிழர்களுக்கு நினைவுறுத்துகிறது. இந்த சர்மாவும் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவும் நல்ல நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. உயர் பதவியில் உள்ள இந்தியர்கள் கூட தமது பதவிக்கேற்ற முறையில் கண்ணியத்துடன் நடந்து கொள்ளாமல் ஒரு பக்கச்சார்புடன் நடந்து கொள்வதால் தான், இலங்கைப் பிரச்சனையில்  ஈழத்தமிழர்கள் இந்தியர்களை நம்புவதில்லை,  இந்தியர்களின்  மத்தியத்துவம்  அல்லது இந்தியர்களின் தலையீட்டுக்குப் பதிலாக, மேலை நாட்டவர்களை ஈழத்தமிழர்கள் விரும்புவதற்கு இதுவே காரணமாகும்.  தமிழரல்லாத இந்தியர்களின் இப்படியான சிங்கள சார்பு செயல்களுக்கு இந்தியாவின் ஆரிய-திராவிட பிளவும் முக்கிய காரணம் எனவும் சிலர் கூறுவர். 

இலங்கையில் நடைபெறவிருக்கும் வடமாகாண சபைக்கான தேர்தலிலும் கண்காணிப்பாளர்களாக இந்தியர்களையும், ஆசியநாட்டவர்களையும் மட்டும் தான் இம்முறை இலங்கை அரசு அழைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





12 comments:

சார்வாகன் said...

சகோ வியாசன்,

நான் ஈழம் சார்ந்து மட்டும் அல்ல பொதுவாக விவாதிக்கிறேன்.

உலகில் பல் நாடுகளில் இனம்,மதம் சார் முரண் பிரச்சினைகள் உண்டு.
இது அரசியல் த்லைகளின் சில நிலைப்பாடுகளால் நிகழும் விடயம்.

சிறுபான்மைக்கு எதிராக பெரும்பான்மையை திரட்டி ஆட்சி அமைத்தல்,சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை பெரும்பான்மையினருக்கு வழங்குதல் எனபது ஜனநாயகம்,மத சார்பின்மையை கேலிக் கூத்து ஆக்குகிறது.

இதில் இயற்கைவளம், அரசியல் முக்க்யத்தும் இருக்கும் இடங்களில் பல வல்லரசு நாடுகள் ஈடுபாடு காட்டி தங்களுக்கு அரசியல்,பொருளாதர ஆதாயம் கிட்டுமா என முயல்கின்றன.

முரண்படும் இரு குழுக்களுக்கும் ஆயுதம் கொடுப்பார். பிறகு நாடு முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்.

**
ஈழத்தில் அமெரிக்க ,சீன முரணில் இலங்கை சீன ஆதரவு சிங்கள் இராசபக்சேவிடம் சென்றுவிட்டது.

வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்குள் பாய்கிறது.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
http://www.lankabusinessonline.com/news/sri-lanka-fdi-flows-reach-$430mn-in-first-half-2013/756860466
July 29, 2013 (LBO) - Foreign direct investment flows to Sri Lanka in the first half of 2013 reached 430 million US dollars and the full year was expected to bring 2.0 billion US dollars, investment promotion minister Lakshman Abeywardena said.
புலிகள் இல்லாத பட்சத்தில், சீனா இலங்கையில் கால் வைத்தல் இந்திய,அமெரிக்க நலன்களுக்கு எதிரானது.
இந்தியாவுக்கோ,அமெரிக்க+.. நாடுகளுக்கோ ஈழ தமிழர் நலன் முக்கியம் இல்லை.

ஆட்சியில் இருப்பவன் தங்கள் நலனுக்கு பிரச்சினை இல்லாதவன் ஆக இருக்க வேண்டும்.

தமிழ்பகுதிகளில் ஒரு பொம்மை அரசை வைத்து,பிரச்சினை தீர்ந்து விட்டது[இதில் அரசியல் இலாபம் உண்டு]
என்பதைக் காட்டவே இந்தியா முயல்கிறது என்பதால் இந்த செய்தி இயல்பான ஒன்று.

கனடா,அமெரிக்காவும் தமிழர் நலன் நாடுவதை விட ,சீன ஆதரவு இராசபக்சேவை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர அல்லது, தங்கள் ஆதரவு ஆளை ஆட்சியில் ஏற்றவே முயல்கிறார்.
எரியும் கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி சகோ?
இராசபக்சே அல்லாத சிங்கள+தமிழ் அரசியல் கூட்டணி உருவாகி ,வெளிநாட்டு முதலீடுகள்,தலையீடுகள் தவிர்த்து அங்கு சுதேசி பொருளாதாரம் சார்ந்து உழைத்து முன்னேறினால் நலமாக இருக்கும்.

இதனை எந்த அன்னிய சக்தியும் விரும்பாது என்பது கசப்பான உண்மை.

நன்றி!!!



நந்தவனத்தான் said...

சகோ வியாஸன், சகோ சார்வாகன் சொல்வதை வழிமொழிகிறேன். இந்தியாவை குற்றம் சொல்லி புண்ணியமில்லை. இந்தியாவை மட்டுமல்ல யாரையும் நம்பாமலிருப்பதுதான் புத்திசாலித்தானம். சிங்களர் கில்லாடியான ராசதந்திரிகள், ஆனால் ஈழதமிழர்கள் ராஜதந்திரம் கிலோ என்ன விலை என கேட்டு உணர்ச்சி வசப்படல் மட்டும் செய்கிறார்கள்.

பிராந்திய வல்லரசாகும் கனவிலிருந்த ராஜிவின் ராணுவத்தை தாக்கி சண்டை தொடங்கியதிலிருந்து பின் ராஜிவை கொன்று 9/11 க்கு பின் உலக சூழ்நிலை மாறியது வரை புலிகள் எதையுமே உணராமல் கடிவாளம் கட்டிய குதிரையாய் போய்கொண்டே இருந்தார்கள். விளைவு இறுதியில் குட்டி சுவத்தில் முட்டினார்கள்.

இந்தியா மட்டும் என்ன, மாய்ந்து மாய்ந்து மத்தியஸ்தம் செய்த நார்வே இறுதியில் என்ன செய்தது? ராசபட்சேவிடம் சில காண்ரக்ட் வாங்கி செட்டில் ஆனாது. ஆகா எல்லா நாடுகளும், இந்தியா உட்பட, தன் நலனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கும். நாங்க கஷ்டப்படுகிறோம் என்றால் போய் சாவு என்றுதான் சொல்லுவார்கள். இங்கு எதுவும் ஓசியில் வராது. எல்லாம் வியாபாரம்.கொடுத்தால்தான் கிட்டும், அது போக மற்ற அரசுக்களுக்கு அச்சுறுத்தல் எனில் உடனே அழிவுதான். ராசீவை கொன்ற பிறகும் இந்தியாவை தங்கள் பக்கம் சேர்க்காமல், இந்தியவை விஸ்தரிப்புவாத அரசு, அதன் பெரிய ராணுவத்தை புறமுதுகிடச்செய்தோம் என எழுதி இந்தியாவின் அச்சத்தை அதிகரிக்க வைத்து அழிவினை தேடினர்.

நாளைக்கு ராசபட்சேவினால் ஆபத்து என அமெரிக்காவோ இந்தியாவோ நினைத்தால் அவருக்கும் ஆப்பு வைப்பார்கள். இது ராசபட்சேவுக்கு தெரிந்திருக்கிறது. பிரபாகரனுக்கு தெரியவில்லை. அவர் வைகோ போன்ற ராசதந்திரத்தின் அடிச்சுவடி கூட தெரியாத (நல்ல) மனிதரின் ஆலோசனை கேட்டார்... அழிந்தார். கலைஞர் மாதிரி பிழைக்க தெரிந்த அரசியல் வித்தகர் ஈழத்தில் அமையாதது துர்அதிட்டம்தான் (ஆனால் கலைஞர் மாதிரியில்லாமல் அறிவினை குடும்பத்துக்கு மட்டுமல்லாது நாட்டுக்கு பயன்படுத்துபவர் தேவை). உணர்ச்சி வசப்படுபவர்கள் இலக்கியம் சினிமா என போவதுதான் சரி! தலைவர்களாக அமர்வது தமிழரின் கெட்ட ஊழ்!

viyasan said...

சகோ. நந்தவனத்தான் & சார்வாகன்,

உலகநாடுகள் எல்லாமே தமது நலன்களை முன்னிறுத்தி தான் எதையும் செய்யும் என்று இலங்கைத் தமிழர்களுக்கு தெரியும். இந்திரா காந்தி கூட ஈழத்தமிழர்களின் மீதுள்ள அளவு கடந்த பாசத்தால் போராளிகளுக்குப் பயிற்சி அளிக்கவில்லை.
பாகிஸ்தானுக்கு இந்தியா-பாக் யுத்தத்தில் உதவி, அமெரிக்க சார்பு நாடாக மாறி, இந்தியாவைப் பார்த்து தனது மூக்கில் விரலை வைத்து ஆட்டிய இலங்கைக்குப் பாடம் கற்பிக்க, அதனால் இலங்கையில் அமைதியின்மையை உள்நாட்டுப் பிளவுகளை உண்டாக்கி, இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தான் அப்படிச் செய்தார். இந்திய அரசு இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையை இந்துசமுத்திரத்தில் தனது நலன்களைப் பாதுகாக்கத் தான் பயன்படுத்தியது. அதற்கு ஈழத்தமிழர்கள் தமதுயிர்களைப் பலி கொடுத்தது தான் மிச்சம். இந்த சதியில் தமிழ்நாட்டுத் தமிழர்களும் Silent Partners அவ்வளவு தான். ஆனால் நான் அதைப் பற்றி இந்தப் பதிவில் பேசவில்லை. பல இந்தியர்கள் உயர்ந்த பொறுப்புள்ள பதவியில் இருந்தாலும் அதற்கேற்ற வகையில் நடந்து கொள்வதில்லை, அவர்கள் எல்லோரும் விலை பேசப்படக் கூடியவர்கள். சுயநலங்களுக்காக, அல்லது தனிப்பட்ட நட்புக்காக பக்கச் சார்பாக நடந்து கொள்ளக் கூடியவர்கள். அதிலும் அவர்கள் அனைவருக்கும் தமிழெதிர்ப்பு (anti Tamil) உணர்வு இயற்கையாகவே உண்டு. இந்திய அதிகாரிகள் எந்தளவுக்கு இறங்கி, தமிழர்களுக்கெதிராக, சிங்களவர்களுக்கு உதவியிருக்கின்றன்ர் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. இது மிகவும் சிறிய விடயம், இருந்தாலும் அதை வெளிப்படுத்தி கண்டனம் தெரிவிக்கும் கனடாவை ஈழத் தமிழர்கள் பாராட்டாமலிருக்க முடியாது.

வவ்வால் said...

வியாசர்வாள்,

ஒரு நாளு இந்தியாவை நம்பி இல்லைனு சொல்லுறது அப்புறம், இப்படி செய்தா எப்படி நம்புவாங்கனும் கேட்கிறது, நம்புறிங்களா,இல்லையானு ஒரு தெளிவா முடிவேடுக்க வேண்டாமா?

நாடுகளுக்கிடையேயானா ராஜிய பரிபாலன உறவுகளின் போது ,நாட்டையே முன்னிறுத்துவார்கள் என்பதால், இப்படித்தான் எல்லா நாட்டு அரசியல்வாதிகளும் செய்வார்கள், அது சரி ,இந்திய அரசியலின் தலைமையை நிர்ணயிக்கும் சக்தியுள்ள ஒரு பெண்மணியின் கணவனை கடந்தகாலத்தில் கொன்று விட்டு,அவரது கட்சியின் ஆட்சியினை நம்புனோம்னு சொல்வதில் லாஜிக்கே இல்லை.

தமிழகத்தமிழன் பரதநாட்டியம் ஆடலையேனு தான் உங்களுக்கு பெரும் கவலை,இதுக்கெல்லாம் ஏன் கவலைப்படுறேள் :-))

மத்திய தலைமையில் மாற்றம் வந்து,அவர்களும் ஈழப்பிரச்சினையை புரிந்துக்கொண்டால் மட்டுமே இந்திய அரசாங்கத்தின் செயல் பாடு மாறும் இல்லைனா,அரசு சார்ந்தே சிந்திப்பார்கள், அது இலங்கையில் ராசபக்சேவா இருந்தாலும் சரி ,ரணீல் விக்ரம சிங்கேவா இருந்தாலும் சரி.

viyasan said...

//ஒரு நாளு இந்தியாவை நம்பி இல்லைனு சொல்லுறது அப்புறம், இப்படி செய்தா எப்படி நம்புவாங்கனும் கேட்கிறது, நம்புறிங்களா,இல்லையானு ஒரு தெளிவா முடிவேடுக்க வேண்டாமா?//

பஞ்சாயத்து,

இலங்கைத் தமிழர்கள் எப்பொழுது இந்தியாவை முழுமையாக நம்பினார்கள் என்று சொல்லுமையா.

//நாடுகளுக்கிடையேயானா ராஜிய பரிபாலன உறவுகளின் போது ,நாட்டையே முன்னிறுத்துவார்கள் என்பதால், இப்படித்தான் எல்லா நாட்டு அரசியல்வாதிகளும் செய்வார்கள், //

அது எனக்கும் தெரியும். கமலேஷ் சர்மா ஒரு அரசியல்வாதியல்ல, பொதுநலவாய நாடுகளின் அமைப்பிலுள்ள எல்லா நாடுகளுக்கும் பொதுவாக ஒருபக்கச் சார்பற்ற முறையில் இயங்க வேண்டிய, இயங்குவதாக பதவிப்பிரமாணம் எடுத்த ஒரு அதிகாரி. இப்படி ஒரு Cover up ஐ செய்தமை தான் கனடாவின் சீற்றத்துக்கு காரணம். அதாவது இந்தியர்கள் Integrity அற்றவர்கள் என்கிறது கனடா, ஆனால் நீங்கள் இந்தியர்கள் இலங்கைப் பிரச்சனையைப் பற்றி பேசுகிறீர்கள்.

//அது சரி ,இந்திய அரசியலின் தலைமையை நிர்ணயிக்கும் சக்தியுள்ள ஒரு பெண்மணியின் கணவனை கடந்தகாலத்தில் கொன்று விட்டு,அவரது கட்சியின் ஆட்சியினை நம்புனோம்னு சொல்வதில் லாஜிக்கே இல்லை.//

அவரது ஆட்சியினை நம்புவதாக, எந்த ஈழத்தமிழனும் கூறியதில்லை. வேறு வழியில்லாததால் அவர்களை எதிர்த்து ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பெற முடியாது, அவர்களை எதிர்த்தால் மேலும் சிங்களவர்களுக்குதவுவார்கள், அது இலங்கையில் தமிழினத்தையே கருவறுப்பதற்கு வழி வகுத்து விடும் என்பது தான் சில ஈழத்தமிழர்களின் கருத்தாகும்.

viyasan said...

//தமிழகத்தமிழன் பரதநாட்டியம் ஆடலையேனு தான் உங்களுக்கு பெரும் கவலை,இதுக்கெல்லாம் ஏன் கவலைப்படுறேள் :-))//

தமிழர்களின் கலையாகிய பரதநாட்டியத்தை தமிழ்நாட்டுத் தமிழர்கள் புறக்கணித்து விட்டு,தப்பாட்டத்தையும, டப்பாங்கூத்தையும் மட்டும் தமது சவ ஊர்வலங்களின் மூலம் வளர்ப்பதை பார்த்து நான் உண்மையில் கவலைப்படுகிறேன். :))

//மத்திய தலைமையில் மாற்றம் வந்து,அவர்களும் ஈழப்பிரச்சினையை புரிந்துக்கொண்டால் மட்டுமே இந்திய அரசாங்கத்தின் செயல் பாடு மாறும் இல்லைனா,அரசு சார்ந்தே சிந்திப்பார்கள்,//

இந்திய மத்திய அரசு என்பது, தமிழ்நாட்டு மக்களும் அங்கம் வகிக்கும், தமிழ்நாட்டு மக்களின் அரசும் தானே. ஒவ்வொரு மத்திய அரசிலும், தமிழ்நாட்டுத் தமிழர்களின் பிரதிநிதிகள் அங்கம் வகித்து தானே வந்திருக்கிறார்கள். இத்தனை வருடங்களாக நீங்கள் ஆறு கோடி பேரால் உங்களின் மத்திய அரசுக்கு ஈழப்பிரச்சனையைப் புரியவைத்து, எந்தவித மாற்றமுமேற்படுத்த முடியாது விட்டால், என்னங்கடா பண்றீங்க, என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. சும்மா வெளிநாடுகளுக்கு இலங்கைத் தமிழரின் செலவில் வந்து தமிழ், தமிழ் என்று ஈழத்தமிழர்களை உசுப்பேத்தி விடுவது தான் சில தமிழ்நாட்டுத் தமிழர்களின் வேலை போலும்.

தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் கனடாவில் வாழும் ஈழத்தமிழர்கள் கனடாவின் அரசையே ஈழத்தமிழர்களின் நலன்களுக்காக குரலெழுப்ப செய்து விட்டார்கள்.

வவ்வால் said...

வியாசர்வாள்,

//இத்தனை வருடங்களாக நீங்கள் ஆறு கோடி பேரால் உங்களின் மத்திய அரசுக்கு ஈழப்பிரச்சனையைப் புரியவைத்து, எந்தவித மாற்றமுமேற்படுத்த முடியாது விட்டால், என்னங்கடா பண்றீங்க, என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. //

இங்கே யாரும் ஈழப்பிரச்சினைக்காக என ஓட்டுப்போட்டு யாரையும் தேர்ந்தெடுப்பதில்லை என்ற அடிப்படை உண்மை கூட புரியாமல் இருக்கீறே அவ்வ்!

அப்படி ஈழப்பிரச்சினைக்காக ஓட்டுப்போட்டு ஆட்சிப்பொறுப்பு கிடைக்கும் எனில் வைக்கோ என்றோ முதல்வர் ஆகி இருக்கணும் :-)0

எனவே மத்திய அரசை யாருமே வலியுறுத்தவில்லை, அதற்கான கட்டாயமும் எந்த அரசியல் தலைவருக்கும் இல்லை எனவே , எல்லாருமே நாங்களும் ஈழம் பற்றி பேசினோம் என "ஒரு பதிவு தான் செய்கிறார்கள்"

இப்போ கனடா நாட்டுல இருந்து ஒருத்தர் பேசினார் தெரியுமா, அதுவும் "பதிவு செய்யும் வேலை தான்" இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை" என வந்தால் நழுவிடுவாங்க.

இது போன்ற முழக்கங்கள் கேட்டாலே உங்களுக்கு இனிக்கும் என்றால் "மஞ்சத்துண்டு கடிதங்கள்" படிக்கவும் :-))

//சும்மா வெளிநாடுகளுக்கு இலங்கைத் தமிழரின் செலவில் வந்து தமிழ், தமிழ் என்று ஈழத்தமிழர்களை உசுப்பேத்தி விடுவது தான் சில தமிழ்நாட்டுத் தமிழர்களின் வேலை போலும்.//

யாரு வந்தா? உண்மையில் நீங்க தான் காசுக்கொடுத்து வாருங்கய்யா,வாருங்கனு கூப்பிடுறிங்க,அவங்களும் காசுக்கிடைக்குதேனு வராங்க, இப்போ சீமானை தூண்டி விடலையா அது போலத்தான்.

நீங்க காசுக்கொடுக்காம இருங்க,தானா எவன் குரல் கொடுக்க வரான், வெளிநாட்டுக்கு வரான்னு பார்ப்போமே?

வெளிநாட்டில் வாழும் ஈழத்தவருக்கு இப்படி தமிழ்நாட்டில்; இருந்து செல்லாக்காசு ஆளுங்களை கூலிக்கு பிடிச்சு கூவ வைப்பது ஒரு பிசினெஸ்,அதன் மூலம் அவர்களை "பெரிய ஆள் ஆகக்காட்டிக்கொள்ள பார்க்கிறார்கள்"

தமிழ்நாட்டில் சுமார் ரெண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தவர் முகாம்களில் அடிப்படை வசதிக்கூட இல்லாமல் அவதிப்படுறாங்க, அவங்களுக்கு தரமான வாழ்விடம் கொடுக்கனும்னு சீமானை பேச சொல்லுங்க பார்ப்போம், பேச மாட்டாரு ஏன்னா முகாம் தமிழன் காசு கொடுக்க மாட்டான்.

ஏன் உங்களப்போல ஆளுங்களுக்கும் தமிழக முகாம்ல வசதி இல்லையேனு கவலை இல்லை,ஏன்னா அவன் எவனோ தானே?

எனவே தமிழ்நாட்டில ஈழப்பிரச்சினை என்பது "ஒரு பேசுப்பொருள்" வாழ்வியல்,அரசியல் பிரச்சினையல்ல என அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்.

பாகிஸ்தான் ராணுவம் சுட்டாலும் பதில் இல்லை,சிங்கள் நேவி சுட்டாலும் பதில் இல்லை, இதான் இந்தியானு புரிந்துக்கொள்ளும் :-))

இந்திய எதிர்ப்புணர்வு, தமிழக எதிர்ப்புணர்வுடன் வாழும் அயலக ஈழத்தவர்கள் சராசரி தமிழர்களை பார்த்தோ, அரசியல்வாதிகளை பார்த்தோ கேட்க தகுதியே இல்லை.

கச்சத்தீவு தமிழகத்துக்கு சொந்தம்னு தமிழ்நாட்டில் நினைக்கும் போது அது இலங்கைக்கு சொந்தம்னு சொல்லும் ஈழத்தவர்கள் எந்த நினைப்பில் கேள்விக்கேட்கிறார்கள் என தெரியவில்லை.

கனடா முதலான நாடுகளில் புலிகளுக்கு இருக்கும் தடையை ஒருவரும் நிக்கு என பெட்டிஷன் கூட கொடுக்காமல் வாலைச்சுருட்டிக்கொண்டு நிற்பவர்கள் கூவுவதில் அர்த்தமேயில்லை.

உலக நாடுகளால் பயங்கரவாத இயக்கம் என தடை செய்யப்பட்ட இயக்கத்தினரை தான் அடக்கினோம் என சொல்லி இலங்கை அரசு தப்பித்துக்கொண்டு வருவது கூட தெரியாமல் ,கனவில் வாழும் உங்களை எல்லாம் என்ன செய்ய?

புஷ் சொன்ன "நீங்கள் எங்களுடன் இல்லையானால் தீவிரவாதிகளுடன் இருக்கிறீர்கள்" வசனம் தான் ராசபக்சேவை காக்கிறது,எனவே இந்தியா கனடா, பிரிட்டன்,அமெரிக்கா என அனைவரும் ஒத்து ஊதியே ஆக வேண்டும்.

அதை வைத்து தான் ராசபக்சே அரசியல் செய்கிறார், என்ற அடிப்படை உண்மையை முதலில் புரிந்துக்கொள்ளும்.

viyasan said...

பஞ்சாயத்து,

பதிவுக்கு சம்பந்தமில்லாத பலதையும் மீண்டும் மீண்டும் பேசுகிறார். இப்பொழுது நேரமில்லை, வேறு பதிவில் பார்ப்போம். :)

//கச்சத்தீவு தமிழகத்துக்கு சொந்தம்னு தமிழ்நாட்டில் நினைக்கும் போது அது இலங்கைக்கு சொந்தம்னு சொல்லும் ஈழத்தவர்கள் எந்த நினைப்பில் கேள்விக்கேட்கிறார்கள் என தெரியவில்லை.//

இலங்கை எங்களின் தாய்த்திருநாடு, தமிழ்நாட்டு மக்கள் எங்களின் சகோதரர்கள். பாக்கு நீரிணையின் இரண்டு பக்கத்திலும் வாழும் தமிழர்களுக்கு மீன்பிடிக்க அங்கு உரிமையுண்டு என்பதை நாம் மறுக்கவில்லை. பல ஆயிரம் வருடங்களாக தாய்த்தமிழர்களும், சேய்த்தமிழர்களும் பிரச்சனையில்லாமல் அங்கு மீன் பிடித்து வந்திருக்கிறோம். இப்போது பிரச்சனைக்குக் காரணம், தெற்கிலிருந்து சிங்கள மீனவர்களின் வருகை தான், அவர்கள் தான் பிரச்சனையை பெரிதாக்குகிறார்கள்.

இந்தியா தலையிட்டு, தமிழ்ப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தை தடை செய்தால் தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சனை சுமுகமாகத் தீர்ந்து விடும். ஆனால் இந்திய மத்திய அரசு அதைச் செய்ய தயங்குகிறது. அது மட்டுமன்றி இந்திய வீட்டுத் திட்டமே தமிழ்ப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்துக்கு வழி வகுக்கின்றது. அதாவது உங்களைப் போன்ற இந்தியர்களின் வரிப்பணம் தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்துக்கு மட்டுமன்றி, தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனைக்கும் தூண்டுதலாக இருக்கிறது. அதாவது இந்தியா தலையிட்டு, இந்தியாவின் உதவிகள் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சென்றடையச் செய்தால், தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சனையும் தீர்க்கப்படலாம்.

கச்சதீவு, இலங்கைக்கு குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு சொந்தமானது, அது யாழ்ப்பாண அரசின் கீழ் இருந்தது என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கும் போது, எங்களின் முன்னோர்களுக்குச் சொந்தமான தீவை, இன்னொரு நாடு (இந்தியா) கைப்பற்றிக் கொள்ளும் முயற்சிக்கு, எங்களால் எப்படி மனச்சாட்சியுடன் ஆதரவளிக்க முடியும். இன்று தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் எங்களின் முடிவு வேறு விதமாக இருந்திருக்கலாம். :))

வருண் said...

***இலங்கை எங்களின் தாய்த்திருநாடு, தமிழ்நாட்டு மக்கள் எங்களின் சகோதரர்கள்.****

கனடாக்காரன், நார்வேக்காரன், ஸ்வீடன் காரன் எல்லாம் உங்களுக்கு உதவுறான். அவனுகளை எல்லாம் விட்டுப்புட்டு இன்னும் ஏன் இந்தத் தமிழ்நாட்டுத் தமிழர்களை "உடன் பிறப்பு" "தொப்புள் கொடி உறவு" னு கட்டி அழறீங்க???

ஒரே மொழி பேசினால் உடன் பிறப்பாயிடுவாங்களா? ஏன் உங்களுக்கு இதெல்லாம் புரிய மாட்டேன்கிறது??

நான் உங்களுக்கு சொல்றது ஒண்ணே ஒண்ணுதான்..

தமிழ்நாட்டுத் தமிழர்களை தலைமுழுகிடுங்க! அவர்களிம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், உறவு கொண்டாடாமல் ஒதுங்கி இருங்க. இதப்போல உருக்கமா ஏதாவது ஒளறாதீங்க!

அவனுகளால உங்களுக்கு ஒரு பைசா பிரயோஜனம் கெடையாது! புரிஞ்சுக்கோங்க!

viyasan said...

//கனடாக்காரன், நார்வேக்காரன், ஸ்வீடன் காரன் எல்லாம் உங்களுக்கு உதவுறான். அவனுகளை எல்லாம் விட்டுப்புட்டு இன்னும் ஏன் இந்தத் தமிழ்நாட்டுத் தமிழர்களை "உடன் பிறப்பு" "தொப்புள் கொடி உறவு" னு கட்டி அழறீங்க???//

எங்களால் முடிந்தால், நாங்கள், ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து இலங்கையை இந்தியாவுக்கு தொலை தூரத்தில், கனடாவுக்குப் பக்கத்திலையோ அல்லது
ஸ்வீடனுக்குப் பக்கத்திலேயோ கொண்டு போய் வைத்து விடுவோம். வருண் அண்ணாச்சிக்கு வக்கணையாகப் பேச மட்டும் தான் தெரியும் போலிருக்கிறது. :))


//ஒரே மொழி பேசினால் உடன் பிறப்பாயிடுவாங்களா? ஏன் உங்களுக்கு இதெல்லாம் புரிய மாட்டேன்கிறது??//

தமிழ் பேசும் எல்லோரும் தமிழர்கள் அல்ல, தமிழ்நாட்டுக்குப் பக்கத்தில் தமிழர்களாக இருப்பதால் தான் வங்காளிகளுக்கு, வங்காளத்துக்குப் பக்கத்திலேயே தனிநாடு பெற்றுக் கொடுத்த இந்திய அரசு இலங்கையில் தமிழர்களுக்கென தனிநாடு கிடைப்பதை எதிர்க்கிறது, ஏனென்றால் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள வங்காளிகளிடமுள்ள நம்பிக்கை தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் கிடையாது. இந்தியாவில் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குள்ள எதிர்ப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் ஈழத் தமிழர்கள். நாங்கள் மலையாளிகளாகவோ, அல்லது கன்னடர்களாகவோ இருந்திருந்தால், ஈழத்தில் இவ்வளவு அழிவு தமிழர்களுக்கு நடைபெற இந்தியா அனுமதித்திருக்காது. அதனால் தமிழர்களாகப் பிறந்து தமிழ்நாட்டுக்கு பக்கத்தில் வாழ்ந்ததால் கூடிய துன்பம் அனுபவித்தவர்கள் ஈழத்தமிழர்கள் தான், அதனால் நாங்கள் தான் இப்படி எடுத்தெறிந்து பேச வேண்டுமே தவிர, தமிழ்நாட்டுத் தமிழர்கள் அல்ல என்பது வருண் அண்ணாச்சிக்குப் புரியவில்லை.


//தமிழ்நாட்டுத் தமிழர்களை தலைமுழுகிடுங்க! அவர்களிம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், உறவு கொண்டாடாமல் ஒதுங்கி இருங்க. இதப்போல உருக்கமா ஏதாவது ஒளறாதீங்க!//

உருக்கமாக ஒன்றும் உளறவில்லை. இப்பொழுது நாங்கள் விரும்பினாலும் அறுத்துக் கொள்ள முடியாத வகையில் ஈழத்தமிழரகளுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் குடும்ப, கலாச்சார உறவுகள் பலமடைந்து விட்டனர். அதனால் விரும்பினாலென்ன, விரும்பாது விட்டாலென்ன கட்டியழத் தான் வேண்டும். :)

//அவனுகளால உங்களுக்கு ஒரு பைசா பிரயோஜனம் கெடையாது! புரிஞ்சுக்கோங்க!//

அது எங்களுக்கு எப்பவோ தெரிஞ்ச விசயம் தான். :)))

Unknown said...

Regarding kacha theevu, I request you to please read the blog of "volva all-thalai keezh vigithangal" dated 5th April, 2013.
Paraman/USA

viyasan said...

//Regarding kacha theevu, I request you to please read the blog of "volva all-thalai keezh vigithangal" dated 5th April, 2013. //

@Paraman/USA

Please read my response to Vavval regarding Kachatheevu in the link below.

க‌ச்ச‌தீவு இல‌ங்கைக்கு அதாவது ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கே சொந்த‌மான‌து

http://viyaasan.blogspot.ca/2013/04/blog-post_10.html

:)