Monday, August 19, 2013

தமிழ்நாட்டுத் தமிழர்களின் முட்டாள்தனம் ?



  ஈழத்தமிழ்ப் பெண்களின் (இவர்கள் பார்ப்பனர்களல்ல) பரத நாட்டிய அரங்கேற்றம்- Toronto, Canada

 

"நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து நின்றது போதும்  தமிழா,

உன் கலைகள் அழிந்து கவலை மிகுந்து கண்டது போதும் தமிழா"

உண்மையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் முட்டாள்தனத்துக்கு எல்லையே இல்லைப் போலிருக்கிறது. வெறும் பார்ப்பன வெறுப்பும், பெரியாரிசமும் தமிழர்களை தமிழ் நாட்டில், தமிழர்களின் உள்ளத்தில் உருவாகி, தமிழர்களால் வளர்க்கப்பட்ட, இன்று உலகமே போற்றும்  நாட்டியக் கலை, சிற்பக்கலை போன்ற கலைகளிலிருந்து  அந்நியப்படுத்தி, அவைகளை அழிய விட்டு, அல்லது அதை இரவல் வாங்கியவர்கள் தமது உடைமையாக்கிக் கொள்ள  அனுமதித்து தமிழர்களை கலை, கலாச்சாரம் எதுவுமேயற்ற காட்டுமிராண்டிகளாக்கி விடுவார்களோ என்று என்னைப் போன்ற உலகத் தமிழர்களுக்கு  பயமாக இருக்கிறது.

பரத நாட்டியம் அழிந்து போகாமல் தேவதாசிகளால் பாதுகாக்கப்பட்டது அதனால் அதைப் புறக்கணிப்போம், கோயில்களை மக்களைத் துன்புறுத்திக் கட்டினார்கள் அதனால் அதையும் புறக்கணிப்போம்,  சிற்பக்கலையில் சிற்பங்கள் செய்பவர்களைச் சாதியடிப்படையில் பிரித்தார்கள் அதனால் அதையும் புறக்கணிப்போம், பெரியார் இந்துக் கடவுளை வெறுத்தார், அதனால் கடவுளையும் தமிழர்களின் தேவாரங்களையும் புறக்கணிப்போம், எமது முன்னோர்கள் கட்டிய கோயில்களில் பார்ப்பனர்கள் பூசை செய்கிறார்கள் அதனால் அவற்றையும் புறக்கணிப்போம், கரிகாலன் தனது கல்லணையைக் கட்டுவதற்கு இலங்கையிலிருந்து பிடித்து வந்த பன்னீராயிரம் சிங்கள பணயக் கைதிகளைப் பயன்படுத்தினான் அதனால் அவனையும் வசைபாடிக் குறை கூறுவோம், ராஜ ராஜ சோழன் கங்கை முதல் கடாரம் வரை தமிழர்களின் புலிக்கொடியை நாட்டினாலும் கூட அவன் பார்ப்பனர்களை ஆதரித்தான் அதனால் அவனையும் புறக்கணிப்போம், சங்க கால கவிதைகளில் கூட பார்ப்பன புலவர்களின் கவிதைகள் இருக்கின்றன அதனால் அவற்றையும் புறக்கணிப்போம். இப்படியே தமிழர்கள் எல்லாவற்றையும் புறக்கணித்தால், தமிழர்களிடம் தம்முடையது என்று கூறிக் கொள்ள அவர்களின்  கோவணத்தை தவிர வேறொன்றும் இல்லை என்று தான் மற்றவர்கள் கூறுவார்கள்.

பரதநாட்டியம் தமிழர்களுடையது, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அதை இரவல் வாங்கிய பார்ப்பனர்கள் அதற்கு மெருகூட்டி,  சமூகத்தில் அந்தக் கலைவடிவத்துக்கு இருந்த களங்கத்தைப் போக்கினார்களே தவிர அது வெளியிலிருந்து வரவுமில்லை. பரத முனிவர் உருவாக்கவுமில்லை.

உலகமே வியக்கும் பரதநாட்டியக் கலையை, தமிழ்நாட்டின், தமிழர்களின்  கலை என்ற உண்மையை மறைத்து வட இந்தியர்களின் கலையாக்க அல்லது தமது மாநிலத்தின் கலையாக்க பலர்  தென்னிந்தியர்கள் முயலும் போது அந்த தமிழெதிரிகளுக்கு துணை போகும் வகையில் தமிழர்களில் சிலரே பரதநாட்டியத்தை தூற்றுவதால், தம்மையறியாமலே தமிழர்களின் கலைகளைத் தமதாக்கவும், தமிழர்களை கலைகள் எதுவுமற்ற காட்டுமிராண்டிகளாக்கவும்  முனையும்  எமது எதிரிகளுக்குத் துணை போகின்றனர். திராவிடக் கொள்கைகளும், பெரியாரிசமும் தமிழர்களுக்கு செய்த கொடுமைகளில் இதுவுமொன்று. வெறும் பார்ப்பன வெறுப்பே அவர்களின் அடிப்படைக் கொள்கை அதனால் பார்ப்பனரல்லாத தமிழெதிரிகளை அவர்கள் கண்டு கொள்வதில்லை. எல்லா பார்ப்பனர்களும் தமிழர்களின் எதிரிகள் அல்ல எல்லா திராவிடர்களும் தமிழர்களின் நண்பர்களுமல்ல, என்னைக் கேட்டால், வீட்டிலும், வெளியிலும் தமிழன் என்ற அடையாளத்தை மட்டும் கொண்ட பார்ப்பனர்களை விட தமிழரல்லாத திராவிடர்கள் தான் தமிழர்களின் கலைகளை வரலாற்றைத் திரித்து, தமதாக்கக் துடிக்கும் தமிழெதிரிகள்.


எப்படியெல்லாம் ஈழத்தமிழர்களின் வரலாற்றைத் திரித்து, தமிழர்களிடம் இரவல் வாங்கிய கலைகளை தமதாக்கி, இன்று தமிழர்கள் தான் தம்மிடமிருந்து அவற்றை இரவல் வாங்கியதாக வாய்கூசாமல் கூறும் சிங்களவர்களின் அடாவடித்தனத்தை அனுபவித்த ஈழத் தமிழர்களுக்கு இருக்கும் தமிழர்களின் இசை, நாட்டிய, கட்டிடக் கலைகளை மற்றவர்கள் தமதென்று சொந்தம் கொண்டாடாமல் செய்ய வேண்டும், அவர்கள் அந்தக் கலைகளின் வரலாற்றை திரித்து விடாமல் பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வு தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் இல்லை. வெறும் பார்ப்பன வெறுப்பு அவர்களின் கண்களை மறைக்கிறது. உதாரணமாக, பல தமிழரல்லாதவர்கள், தமிழர்கள் என்ற போர்வையில், தமிழர்களின் மன்னர்களை தமிழரல்லாதவர்களாக்க, அதாவது தமிழரசர்கள் எல்லாம் வெளியில் இருந்து வந்தவர்கள், அவர்களின் வீரத்திலும், வெற்றியிலும் தமிழர்களுக்குப் பங்கில்லை, தமிழன் எப்பொழுதுமே ஆளப்பட்டவனே தவிர ஆண்டவன் அல்ல என்ற கருத்தை நாசூக்காக, இணையத்தளங்களில் பரப்புகின்றனர்.


தமிழர்களின் சதிராட்டம்- தேவதாசிகள்- ஜப்பானின் கெய்சா (Geisha) நடனம்


பரதநாட்டியத்தின் (சதிராட்டம்) உயிரும், வேர்களும் தமிழரின் வரலாற்றிலும், பண்பாட்டிலும் ஆழப்பதிந்திருக்கிறது. தமிழர்களின்  சதிர் தேவதாசிகளால் வளர்க்கப்பட்டதே தவிர அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல சிலப்பதிகாரத்திலேயே தமிழர்களின்  நாட்டியக் கலை விளக்கமாகக் கூறப்படுகிறது. மாதவியின் அரங்கேற்றத்தை விவரிக்கும் இளங்கோவடிகள் ஆட்டவகைகள், உடையலங்காரம், ஒவ்வொரு வகையான ஆட்டத்துக்கும் மேடையின் அளவு, அதற்கான ஆபரண அலங்காரங்களையும் குறிப்பிடுகிறார். தமிழர்களின் பண்டைக்கால நாட்டிய நன்னூல் "காணாமல்" போய்விட்டது.

சில பகுத்தறிவுச் சிங்கங்களின் வாதம் என்னவென்றால் பரதம் தேவதாசிகளால் வளர்க்கப்பட்டது அதனால் அதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல ஜப்பானிலும்  தேவதாசிகளை ஒத்த கெய்சா (Geisha) என்ற நடனப் பெண்கள் இருந்தனர். அவர்களின் நடனத்தை ஜப்பானின் தேசிய நடனமாக்கி, தமது பாரம்பரியக் கலைகளில் ஒன்றாக  அதைப் பாதுகாக்கின்றனர் ஜப்பானியர்கள்.   விபச்சாரத்தையும் மேற்கொண்ட Geisha நடனப் பெண்களால் ஆடப்பட்டது, வளர்க்கப்பட்டது என்பதற்காக,  பரத்தையர்களின் நடனம் என  ஜப்பானியர்கள் அதை வெறுக்கவில்லை அல்லது புறக்கணிக்கவில்லை. 

 பரத நாட்டியம் தமிழர்களுடையது அதை தமிழர்கள் புறக்கணிக்கக் கூடாது என்பவர்கள் எவரும் தேவதாசி முறையை ஆதரிக்கவில்லை. ஆனால் அவர்களால் அழிந்து போகாமல் காக்கப்பட்ட தமிழர்களின் நாட்டியக்கலை இக்காலத் தமிழர்களால் காக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு அழிந்து போய் விடக் கூடாதென்பது தான் அவர்களின் ஆதங்கம்.




27 comments:

பழனி. கந்தசாமி said...

நல்ல கருத்து. ஆதரிக்கிறேன்.

viyasan said...

திரு.பழனி.கந்தசாமி,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நம்பள்கி said...

பரத நாட்டியம் மட்டுமல்லாமல் போட்டுக்கட்டும் வழக்கமும் வரட்டும்; அது நாட்டுக்கு நல்லதா கேட்டதா எனற கேள்வி இல்லை!

என் கேள்வி அந்த போட்டுக் கட்டும் ஜாதி நான் சொல்லும் ஜாதியில் இருந்து தான் வரணும்.

அதுதான் இங்கு பிரச்சனை; நான் என் ஜாதி என்ன செய்யவேண்டும் என்று சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை.

இதற்க்கு பதில் தேவை. என் மேல் நான் என்ன செய்யவேண்டும் என்பதற்கு எதற்கு வேறு ஒருவனுக்கு உரிமை கொடுக்கவேண்டும்?

viyasan said...

//பரத நாட்டியம் மட்டுமல்லாமல் போட்டுக்கட்டும் வழக்கமும் வரட்டும்; அது நாட்டுக்கு நல்லதா கேட்டதா எனற கேள்வி இல்லை!//

பரத நாட்டியத்துக்கும் பொட்டுக்கட்டும் வழக்கத்துக்கும் என்ன தொடர்பு. இரண்டையும் இணைந்துப்பார்த்து தான் தமிழர்களைக் குழப்புகிறார்கள் சிலர். பொட்டுக்கட்டும் வழக்கம் இபொழுதும் மகராட்டிர, கன்னட மாநிலங்களில் அமோகமாக எல்லம்மாவின் பெயரில் நடந்து கொண்டு தானிருக்கிறது. அவர்கள் ஒன்றும் பரதநாட்டியம் ஆடவில்லை. கர்நாடகத்தில் பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண்கள் சினிமாப் பாடல்களைப் பாடுகிறார்கள் என்பதற்காக, அந்த சினிமாப்பாடல்களைத் தடை செய்ய வேண்டுமென்று யாரும் கூறுவதில்லை.

தமிழ்நாட்டில் சிலப்பதிகார காலத்திலேயே பல வகையான நாட்டியங்கள் தமிழர்களிடம் இருந்தன, அந்த நாட்டியத்தின் அடிப்படையில் உருவான சதிர் என்ற நாட்டிய வடிவத்தை தேவதாசிகள் ஆடினர். அவர்களால் தமிழர்களின் அந்தக் கலைவடிவம் அழியாமல் பாதுக்காகப்பட்டது. அதற்காக, ஒழிக்கப்பட வேண்டிய தேவதாசி முறை போன்றே, தமிழர்களின் நாட்டியமாகிய சதிர் அல்லது பரதத்தையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமெனக் கூறுவது தவறு என்பது தான் என்னுடைய கருத்து.

viyasan said...

//என் கேள்வி அந்த போட்டுக் கட்டும் ஜாதி நான் சொல்லும் ஜாதியில் இருந்து தான் வரணும். அதுதான் இங்கு பிரச்சனை; நான் என் ஜாதி என்ன செய்யவேண்டும் என்று சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை.//

எந்த ஜாதியாக இருந்தாலும் 21ம் நூறாண்டில் யாராவது பொட்டுக்கட்டுடுவதை நியாயப்படுத்தினால் அது கண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு எதற்காக தமிழர்களின் பரத நாட்டியத்தை வெறுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் தான் பரதநாட்டியத்தில் பார்ப்பன ஆதிக்கம் இருக்கிறது, அது பார்ப்பனர்களின் நடனமாகப் பார்க்கப்படுகிறது , ஈழத்தில் பரதநாட்டியம் தமிழர்களின் நடனம், அது சாதாரண அரசாங்க பள்ளிக்கூடங்களில் கூட ஒரு பாடமாக இருக்கிறது, அதை யாரும் விரும்பினால் கற்றுக் கொள்ளலாம்.

சொர்ணமால்யாவின் அந்த விரிவுரையை நான் பார்த்தேன். அதில் அவர் எந்த ஜாதிப்பெண்கள் தேவதாசிகளாக வர வேண்டுமென்று கூறவில்லை. சொர்ணமால்யாவுக்கு வக்காலத்து வாங்குவதல்ல என்னுடைய நோக்கம். அவரது அந்த உரை எனக்கே எரிச்சலையூட்டியது. ஆனால் அப்படியான ஒரு சிலருக்காக தமிழர்கள் தமது கலையாகிய பரதநாட்டியத்தை ஒதுக்கக் கூடாது, மாறாக பரதநாட்டியத்தை அப்படியானவர்களின் கரங்களிலிருந்து மீட்க வேண்டும்.

ttpian said...

@ any cost, no point in supporting POONOOL

viyasan said...

//@ any cost, no point in supporting POONOOL///

பூணூலுக்கு சப்போட் பண்ணுவதல்ல என்னுடைய நோக்கம், தமிழர்களின் கலையாகிய சதிராட்டத்துக்குப் போடப்பட்டிருக்கும் பூணூல் அறுத்தெறியப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. :)

இக்பால் செல்வன் said...

இப்போ பரத நாட்டியம் அழிவதா சொன்னா, தமிழகத்தில் இன்றும் ஜோரா பரத நாட்டிய பயிற்சி வியாபாரம் நடந்திட்டு தான் இருக்கு. தி இந்துவில் வரும் அரங்கேற்ற விளம்பரங்களைப் பார்த்தாலே தெரியுது. ஆதி தமிழர் கலைகளான பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சிலம்பாட்டம் எல்லாம் அழியுது. தமிளில் ஊறிக் கிடக்கும் ஈளத்தமிளர் கூட அவற்றை கண்டுக்க மாட்டேங்கிறாங்க, கனடாவில் தமிழார்வம் கொண்ட ஒருவர் கூட கரகாட்டம் பயின்று பார்த்ததில்லை. எல்லோருக்கும் பார்ப்பானாக வேணம் என ஆசையோ என்னவோ. என் கவலை எல்லாம் பழந்தமிழரின் உள்ளாடையான கோவணம் அழிந்து விட்டதே என்பது தான், வியாசன் போன்றோர் பெரிய மனது வைத்தால் தமிழ் கலாச்சாரங்களை காப்பாற்றலாம். :/

viyasan said...

//இப்போ பரத நாட்டியம் அழிவதா சொன்னா, தமிழகத்தில் இன்றும் ஜோரா பரத நாட்டிய பயிற்சி வியாபாரம் நடந்திட்டு தான் இருக்கு. ஆதி தமிழர் கலைகளான பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சிலம்பாட்டம் எல்லாம் அழியுது. //

இக்பால் செல்வன் தான் பெரீய எல்லாம் தெரிஞ்ச பதிவராச்சே, இங்கு வந்து மூக்கு வடிக்கிறதை விட்டு, நீங்களே அவற்றைப் பற்றி எழுத வேண்டியது தானே.அதை யாராவது தடுத்தார்களா? :))

பரதநாட்டியம் அழிவதாக நான் சொல்லவில்லை,பதிவைப் படித்து விட்டுப் பதிலெழுதி விட்டுப் பழகுமையா? தமிழ்நாட்டில் பரதநாட்டியத்தை பார்ப்பனர்களின் கலையாகப் பார்க்கிறார்கள். ஆனால் அது தமிழர்களின் பாரம்பரியமான கலைவடிவம் என்பது தான் என்னுடைய கருத்து.

viyasan said...

//இங்கு வந்து மூக்கு வடிக்கிறதை விட்டு,//

திருத்தம்: மூக்குச் சிந்துவதை விட்டு (அதாவது இங்கு வந்து அழாமல்) :))

viyasan said...

//பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சிலம்பாட்டம் எல்லாம் அழியுது. தமிளில் ஊறிக் கிடக்கும் ஈளத்தமிளர் கூட அவற்றை கண்டுக்க மாட்டேங்கிறாங்க,//

மற்ற எல்லா ஆட்டங்களையும் கைவிட்ட தமில் நாட்டு தமிலர்கல் தப்பாட்டத்தை மட்டும் ஏன் கைவிடவில்லை என்று என்னால் புரிஞ்சுக்க முடியல. :))

Barari said...

//தமிழ் நாட்டு தமிழர்களின் முட்டாள்தனம் // நல்ல தலைப்பு. சிலோனிகளுக்கு கொடி பிடிக்கும் இந்திய தமிழர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்

viyasan said...

//நல்ல தலைப்பு. சிலோனிகளுக்கு கொடி பிடிக்கும் இந்திய தமிழர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்//
நீரடித்து நீர் விலகுவதில்லை. தொப்பிபிரட்டிகளுக்கு அது புரியாது. :))

வருண் said...

பெரியாருக்கு அடுத்து தமிழ்நாட்டுத் தமிழன் முட்டாள்த்தனத்தை நல்லா வக்கனையா விமர்சிப்பது நம்ம அம்பி வியாசர் தான்! :))

பரதநாட்டியம் பொதுவாக பார்ப்பனர்கள் மட்டும்தான் பழகி, அரங்கேற்றம்னு பெருசா செஞ்சுண்டு இருந்தா. ஆனால் இப்போ எல்லாரும் பரத நாட்டியம் (யு எஸ் கனடா போன்ற நாடுகளிலும்) கத்துக்கிறா என்பதுதான் உலக நடப்பு.

நம்ம சகோ இக்பால் செல்வன் பரதத்தை இழிவுபடுத்தி ஒரு பதிவு போட்டு நெறையா வாங்கிக் கட்டிக்கிட்டாரு.


///பரதத்தையும் தமிழர்களையும் இழிவுபடுத்தும் இக்பால்!!

http://timeforsomelove.blogspot.com/2012/10/blog-post_1105.html///

நீங்க மறுபடியும் மொதல்ல இருந்தா!!!உங்களோட ஒரே காமெடியா இருக்கு.

viyasan said...

//பெரியாருக்கு அடுத்து தமிழ்நாட்டுத் தமிழன் முட்டாள்த்தனத்தை நல்லா வக்கனையா விமர்சிப்பது நம்ம அம்பி வியாசர் தான்! :))//

வருண் அண்ணாச்சியின் வக்கணைக்கு ஈடுகட்ட இணையத்தில் யாரும் கிடையாது. அவரோட பதிவெல்லாம் சும்மா அதிருதில்ல. :))

அடடா பெரியாரும் விமர்சிச்சாரா?, தமிழ்நாட்டுத் தமிழர்களை எல்லோரும் விமர்சித்தார்கள்/விமர்சிக்கிறார்கள் போலிருக்கிறது. என்ன செய்வது அவர்களின் விதி அப்பிடி. :)

viyasan said...

///பரதநாட்டியம் பொதுவாக பார்ப்பனர்கள் மட்டும்தான் பழகி, அரங்கேற்றம்னு பெருசா செஞ்சுண்டு இருந்தா. ஆனால் இப்போ எல்லாரும் பரத நாட்டியம் (யு எஸ் கனடா போன்ற நாடுகளிலும்) கத்துக்கிறா என்பதுதான் உலக நடப்பு.////


நீங்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் பரதம் பார்ப்பனருடையதென்று, தமிழர்களின் கலையைக் கை கழுவி விடு முன்பே, இலங்கையில் பரதநாட்டியத்தை ஈழத்தமிழர்கள், 80 ஆண்டுகளுக்கு முன்பே, கற்கத் தொடங்கி விட்டார்கள். இசைக்கும் பரதநாட்டியத்துக்காகவும் சேர். இராமநாதன் தனது பெயரில் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியைத் தொடங்கினார். அதனால் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல ஈழத் தமிழர்களும் பரதநாட்டியத்தை பல ஆண்டுகளாகக் கற்று வளர்த்து வருகிறார்கள் அது மட்டுமல்ல பல உலகப்புகழ் பெற்ற பரதநாட்டியக் கலைஞர்கள் ஈழத்தில் உருவாகியிருக்கிறார்கள். பிரச்சனை என்னவென்றால், தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களைப் பற்றிய செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு, யாராவது அகதியாக வந்து மண்டபத்தில் இறங்கினால் மட்டும் அதை பெரிய செய்தியாகப் போடுவது தமிழ்நாட்டுப் பத்திரிகைகளின் வழக்கம்.

viyasan said...

//நம்ம சகோ இக்பால் செல்வன் பரதத்தை இழிவுபடுத்தி ஒரு பதிவு போட்டு நெறையா வாங்கிக் கட்டிக்கிட்டாரு.//

பரதத்தை நான் இழிவுபடுத்தவில்லை, இது தமிழர்களின் கலை, இப்பொழுது பூணால் வரிந்து காட்டப்பட்டிருக்கிறது. அதை அறுத்தெறிந்து விட்டு, தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதனைக் கற்று மீண்டும் அந்தக் கலையைத் தமிழாக்க வேண்டுமென்கிறேன்.


/////பரதத்தையும் தமிழர்களையும் இழிவுபடுத்தும் இக்பால்!! நீங்க மறுபடியும் மொதல்ல இருந்தா!!!உங்களோட ஒரே காமெடியா இருக்கு.//

என்னை விட பெரிய காமெடி உங்களுடையது. நீங்களும் பதிவைப் படிக்காமல் பதிலெழுதும் ஆட்களில் ஒருவர் போலிருகிறது. இக்பால் செல்வன் போல் நான் பரதத்தை இழிவு படுத்தவில்லை. :)

//http://timeforsomelove.blogspot.com/2012/10/blog-post_1105.html///

அதைவிட நீங்கள் தந்த Link இல் எந்தப் பதிவும் இல்லை. :)

வருண் said...

வியாசன் : ஒங்களோட ஒரே எழவா இருக்கு! நீர் பரதத்தை இழிவு படுத்தியதாக நான் சொன்னேனா? எங்கே??

ஒர் லின்க் கொடுத்தா அதை எப்படி க்ளிக் பண்ணுறதுனு கூட தெரியாதா?


http://timeforsomelove.blogspot.com/2012/10/blog-post_1105.html

இதை ட்ரை பண்ணுங்க!!
வாழைப்பழத்தை உரிச்சுக் கொடுக்கணும்போல உமக்கு!!

viyasan said...

//வியாசன் : ஒங்களோட ஒரே எழவா இருக்கு! நீர் பரதத்தை இழிவு படுத்தியதாக நான் சொன்னேனா? எங்கே??//

பரதத்தை தமிழர்கள் இழந்து விடவோ, புறக்கணிக்கவோ கூடாது, அது தமிழர்களின் கலை என்று வேலையில்லாதவன் பூனையைப் போட்டு சிரைச்சான் என்ற மாதிரி மினக்கெட்டு பரதத்தைப் பற்றி இவ்வளவு உயர்வா நான் எழுதுறன், ஆனா அதைப் படிச்சுப் பார்க்காம பதில் எழுதினவன் மாதிரி “நம்ம சகோ இக்பால் செல்வன் பரதத்தை இழிவுபடுத்தி ஒரு பதிவு போட்டு நெறையா வாங்கிக் கட்டிக்கிட்டாரு” என்று சொன்னா வேற எப்படி நினைச்சுக் கொள்றதாக்கும்? :)


//இதை ட்ரை பண்ணுங்க!!
வாழைப்பழத்தை உரிச்சுக் கொடுக்கணும்போல உமக்கு!!//

நன்றி. வருண் அண்ணாச்சியிட வக்கணையைப் படிச்சுப் பார்க்கிற ஆர்வத்தில அவசரப்பட்டிட்டன் போல இருக்கு. :))

viyasan said...

//பரதத்தையும் தமிழர்களையும் இழிவுபடுத்தும் இக்பால்!!//

வருண்,

நல்ல பதிவு. சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பரதநாட்டியத்தை ஈழத்தில் வாழ்ந்த காலத்திலேயே சிறுவயதிலேயே தமது பிள்ளைகளுக்கு கற்பிக்கும் வழக்கம் ஈழத்தமிழர்களுக்குண்டு, என்னைக் கூட சின்ன வயதில் பரத நாட்டியம் கற்க வற்புறுத்தி இழுத்துக் கொண்டு போய் சேர்த்து விட்டார் என்னுடைய அம்மா, மூன்றாம் வகுப்பில படிக்கும் போது பள்ளிக்கூட கலைவிழாவில ஒரு டான்ஸ் ஆடி விட்டு இனிமேல் டான்ஸ் பழகவே போக மாட்டேன் என்று சொல்லி விட்டேன். ஆனால் பரதநாட்டியத்தை ரசிப்பதில் எனக்கு ஆரவமுண்டு. அது தமிழர்களின் கலை, அதனால் தான் அதை வேறு யாரும் உரிமை கொண்டாடுவதை பார்க்க எனக்கு சகிக்காது. :))

சிலர் கனடாவில் பல்கலைக்கழகங்களில் அல்லது வேலைத்தளங்களில் இலங்கைத் தமிழர்களின் மீது தமக்குள்ள காழ்ப்புணர்வை இணையத்தளங்களில் காட்டுகிறார்கள் போலிருக்கிறது. ஈழத் தமிழர்களை இழிவு படுத்துவதே சிலருக்கு வேலை. ஈழத் தமிழர்களின் assertiveness ஐ சிலர் தவறாக எடை போட்டு விடுகிறார்கள் போலிருக்கிறது.. உண்மையாகப் பழகினால் நட்புக்காக உயிரைக் கூடக் கொடுப்பார்கள் ஈழத்தமிழர்கள். :)

அதிரடி சொர்ணாக்கா said...

"நீரடித்து நீர் விலகுவதில்லை. தொப்பிபிரட்டிகளுக்கு அது புரியாது."

ROFL

அதிரடி சொர்ணாக்கா said...

தொப்பி பிரட்டிகள் ஊரை இரண்டு படுத்தி குளிர் காய்வதில் வல்லவர்கள்.
இங்க ஒரே இன மக்களை இரண்டு படுத்தி குளிர் காய முயற்சி செய்யுறாங்க.
ஆனா தொப்பி பிரடிகளோட நினைப்பு நிறைவேறாது

viyasan said...

//இங்க ஒரே இன மக்களை இரண்டு படுத்தி குளிர் காய முயற்சி செய்யுறாங்க.//

நன்றி சொர்ணக்கா,

சிலர் எப்படா ஈழத்தமிழர்கள் ஏதாவது கூறுவார்கள், அவர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் சிண்டு முடித்து விடலாமென்று கண்ணுக்குள்ள எண்ணை விட்டுக் கொண்டு காத்திருக்கிறார்கள். :)))

ஜோதிஜி திருப்பூர் said...

ஒங்க தில்லு எப்போதும் ரசிக்கக்கூடிய ஒன்று. இன்று நீண்ட நேரம் உங்கள் பதிவில் இருக்க வாய்ப்பு கிடைத்தது.

ஈழத்தமிழர் குறித்த பல பெருமைகள் எனக்கு எப்போதும் எனக்குண்டு.

viyasan said...

//ஈழத்தமிழர் குறித்த பல பெருமைகள் எனக்கு எப்போதும் எனக்குண்டு.//

நன்றி ஜோதிஜி,

உங்களைப் போன்றவர்களால் தான் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டுடன் ஒரு உணர்வு பூர்வமான உறவை, பாசத்தை இன்னும் இழக்காமல் இருக்கிறார்கள். எங்களுக்கும் தமிழ்நாட்டின் நலன்களின் அக்கறை இருப்பதால் தான் நாங்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களை உரிமையுடன் விமர்சிக்கிறோம் அல்லது எனக்கென்ன போச்சு என்று இருந்து விடுவோம்.

ஜீவன்சிவம் said...

அட இன்னும் என்ன தோழா
எத்தனையோ நாளா - நம்மை இன்று நாமே இழபோமா

viyasan said...

@ஜீவன்சிவம்,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.