Thursday, August 1, 2013

ராஜராஜசோழன்- தேவரடியார்கள்– தமிழ் முன்னோர்களை தமிழர்களே கொச்சைப்படுத்தும் கொடுமை.இலங்கையில் தமிழர்களின் சரித்திரத்தை திரித்து, வரலாற்றுச் சின்னங்களை அழித்து, கல்வெட்டுக்களை காணாமல் போகச் செய்து தமிழரசர்களை இழிவு படுத்தி தமிழர்களை வரலாறு எதுவுமற்ற வந்தேறு குடிகளாக்க சிங்கள அரசின் உதவியுடன் பெளத்த பிக்குகள் திட்டமிட்டுச் செயல் படுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் என்னடாவென்றால் இருக்கிற வரலாற்றுச் சின்னங்களை, இந்து சமயத்தின் அங்கமாக, பார்ப்பனர்களின் சின்னமாக நினைத்து  அவற்றை அழிந்து போக விடுவது மட்டுமன்றி, அவற்றைக் கட்டிய தமிழ் மாமன்னர்களை, உலகத்தில் மனித நாகரீகத்துக்கு அளப்பரிய தொண்டாற்றியவர்கள் என்று மேலை நாட்டவர்கள் புகழும் அதே தமிழ் மன்னர்களை கொச்சைப்படுத்தி, அவர்களின் புகழைச் சிதைக்கும் வகையில் பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள் சிலர். அவர்களைத் தட்டிக் கேட்க பலரும் பயப்படுகிறார்கள் . இது  யானை தன் தலையிலேயே மண்ணள்ளிப் போடுவது போன்றதாகும்,  அத்தகைய  செயலையும், கருத்துக்களையும்  சிலர்  முற்போக்கின் அடையாளமாக பகுத்தறிவுச் சிந்தனையாக  நினைப்பது தான் வேடிக்கை.

தமது வரலாற்றை, தமது முன்னோர்களை தாமே இழிவு படுத்தும் எந்த இனமும் உருப்படப் போவதில்லை. என்னுடைய அவதானத்தில் தமிழ்நாட்டில் தமிழ் அரசர்களை, தமிழர்களின் வரலாற்றைக் கொச்சைப்படுத்துகிறவர்கள் எல்லாம் உண்மையான தமிழர்கள் அல்ல,  தமிழ் பேசுகின்ற திராவிடர்களின் எச்சங்கள் சில  தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டே  தமிழர்களின் வரலாற்றை அவர்களின் முன்னோர்களின் புகழை மறைத்து அவர்களை இகழ்கிறார்கள்.

இந்த வரலாற்றுத் திரிப்பில், அல்லது தமிழ் அரசர்கள் செய்த சாதனைகளை இருட்டடிப்பு செய்து, அவர்களின் ஆட்சியில் நடந்த சில விடயங்களை இக்காலத்துடன் ஒப்பிட்டு இழிவு படுத்துவதில், தமிழ்த்தேசியத்தின் எதிரிகளுக்கு மட்டுமல்ல சாதிக்கும் பங்குண்டு. ஏனென்றால் தமிழ்நாட்டில் எல்லாமே சாதியின் அடிப்படையில் தான் நடைபெறுகின்றன. தமிழர்களின் முன்னோர்களையும், தமிழ் அரசர்களையும் கூட எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவானவர்கள்,  அவர்கள் தமிழர்கள் என்ற கண்ணோட்டத்தில் தமிழ்நாட்டில் யாரும்  பார்ப்பதில்லை.  அவர்களையும் சாதியடிப்படையில் தான் பிரித்திருக்கின்றனர்.

உதாரணமாக, கங்கை முதல் கடாரம் வரை தமிழர்களின் புலிக்கொடியை  நாட்டிய பேரரசன் ராஜ ராஜ சோழனைச் சிங்களவர்கள் இன்றும் வெறுக்கிறார்கள் ஏனென்றால் அவன் அவர்களை வென்று, அனுராதபுரத்தை அழித்து, ஈழ மண்டலத்தை சோழ மண்டலத்துடன் இணைத்து,  சிங்களாந்தகன் என்று முடி சூடிக் கொண்டான் என்கிறது மகாவம்சம்.  சிங்களவர்கள் ராஜ ராஜனை வெறுப்பதற்கு காரணம் உண்டு.  ஆனால் தமிழ்நாட்டிலும் கூட பேரரசன் ராஜ ராஜ சோழனை காரணமேயில்லாமல் சிலர்  வெறுக்கிறார்கள் ஏனென்றால், தமிழ்நாட்டில் ஒரு சாதிக் குழுவினர், ராஜ ராஜ சோழன் தங்களின் சாதி என்று வாதாடுகிறார்கள். அதனால் அந்த சாதியை வெறுக்கும் ஏனைய சாதிமான்கள் எல்லாம், அந்த தமிழ்ப் பேரரசனை வசை பாடுகிறார்கள்.  தமிழ் நாட்டில் சாதியை விரும்புகிறவனும், சாதியை வெறுக்கிறவனும் சாதியடிப்படையில் தான் சிந்திக்கிறார்கள், இயங்குகிறார்கள். இது தான் தமிழினத்தின் சாபக்கேடு.

எண்ணிக்கையில் ஈழத்தமிழர்களை விட பெரும்பான்மையினராக இருந்தும், சாதியிடிப்படையில் பிளவு பட்டுக் கிடப்பதால் தான் தமிழ்நாட்டுத் தமிழர்களால் உருப்படியாக எதையும் சாதிக்க முடியவில்லை. ஒரு குட்டி மாநிலத்தைச் சேர்ந்த மலையாளிகளுக்கு உள்ள அதிகாரமும், ஆளுமையும் கூட இந்திய மத்திய அரசில் தமிழ்நாட்டுக்குக் கிடையாது. அதனால் தான் ஈழத்தமிழர்களைக் கொத்துக் கொத்தாக சிங்களவர்கள் கொலை செய்த போதும்  ஊர்வலம் போவதைத் தவிர அவர்களால் வேறொன்றும் செய்ய  முடியவில்லை.

இங்கிலாந்து அரச குடும்பத்திலும், ஐரோப்பிய அரச குடும்பங்களிலும்  கூட மிகவும் கொடிய அரசர்கள் இருந்தார்கள், மக்களின் மீது வரியை அதிகரித்து, எதிர்த்துக் கேட்டவர்களை பெண்கள் என்றும் பாராமல் சிரச்சேதம் செய்து, மதவெறியில் கர்ப்பிணிப் பெண்களைக் கூட கம்பத்தில் கட்டி உயிரோடு எரித்த அரசர்களின் பரம்பரையில் வந்தவர்கள் தான் பிரிட்டனை இன்றும் ஆளுகிறார்கள். அவர்களின் அரச பரம்பரையை, தமது புகழ் பெற்ற வரலாற்றின் அடையாளமாக, தமது பாரம்பரியமாக நினைத்துப் பெருமைப்படுகிறார்கள், இன்றும் போற்றுகிறார்கள் ஆங்கிலேயர்களும் ஏனைய ஐரோப்பியர்களும். 

முகமதியர்களின் படையெடுப்பினால் முஸ்லீம்களாக மாறிய  தமிழர்கள்  கூட இன்று அரேபிய கலீபாக்களைப் பற்றிப் புகழ்ந்து பீற்றிக் கொள்கிறார்கள். அவர்கள் செய்த கொடுமைகளை, கொலைகளைப் பற்றியெல்லாம் அவர்கள் மூச்சுக்கூட விடுவதில்லை. ஆனால் இந்த கூறு கெட்ட தமிழர்கள் மட்டும், யாரையோ திருப்திப்படுத்தவோ அல்லது மற்றவர்களின் பிரச்சாரங்களை நம்பியோ அல்லது தம்மை பகுத்தறிவு வாதிகளாகக் காட்டிக் கொள்ளவோ அல்லது எமது முன்னோர்களை நாமே கொச்சைப்படுத்துவதால் பார்ப்பான்களை பழிவாங்கலாம் என்று நினைத்துக் கொண்டோ  என்னமோ  எங்களின் வரலாற்று வீரர்களை, தமிழர்களின் மாமன்னர்களை இழிவு படுத்துகிறார்கள். 

ஐரோப்பாவில் ஒவ்வொரு கிராமத்திலும் கோட்டைகளையும் கொத்தளங்களையும், வானளாவிய தேவாலயங்களையும்  கட்டிய அரசர்களும் பிரபுக்களும் ஏழை விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் உழைப்பையும், உயிரையும்  இரத்தத்தையும் உறிஞ்சித் தான் கட்டினார்கள் , அவர்களின் ஆடம்பர வாழ்க்கையில் எத்தனையோ பெண்களின் கற்பும் உயிரும் பறி போயிருக்கும் ஆனால் இன்று எந்த ஐரோப்பியனும் அவற்றை எல்லாம் கூறி தமது அரசர்களை வெறுப்பதில்லை. அவர்கள் கட்டிய ஒவ்வொரு மாளிகையையும், தேவாலயத்தையும் தமது பாரம்பரிய சின்னமாக போற்றிப் பாதுகாக்கிறார்கள். 

தேவதாசியை விட மோசமான முறையில் அந்தப்புரங்களில் பெண்களை அடிமைகளாக வைத்திருந்து, படையெடுப்புகளின் போது பலநாட்டுப் பெண்களை மட்டுமல்ல அந்த நாட்டின் அழகான ஆண்களைக் கூட  கற்பழித்தவர்கள்  பல முகம்மதிய படைஎடுப்பாளர்கள் ஆனால் அவர்களுடன் இனத்தால், மொழியால் எந்தவித தொடர்புமற்ற தமிழ் முஸ்லீம்கள் கூட,  துலுக்க, அரேபிய, பாரசீக ஆட்சியாளர்களைக் கூட,  தமது மதத்தைச் சேந்தவர்கள் என்பதற்காக அவர்களைப் பற்றி இழிவாக பேசமாட்டார்கள்.  உருவ வழிபாட்டை வழிபடாத முஸ்லீம்களாகிய எகிப்தியர்கள் எவரும்,  எத்தனை பேரைக் கொன்று இத்தனை பிரமிட்டுக்களைக் கட்டியிருப்பார்கள் என்றோ அல்லது  Pharoah க்களின் வாழ்க்கையை விமர்சித்தோ வசைபாடுவதில்லை, அது அவர்களின் பாரம்பரியம், தமது நாட்டு முன்னோர்களின் கட்டிடக் கலையை,  அவர்களின் அறிவுத்திறனை,  முன்னேற்றத்தை எண்ணிப் பெருமைப்படுகிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் சிலர் மட்டும்  தமிழரசர்களை, குறிப்பாக பேரரரசன் ராஜ ராஜ சோழனை இழிவு படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அதற்கு சில உண்மையான தமிழர்களும் ஜால்ரா போடுவதைப் பார்க்க நெஞ்சு பொறுக்குதில்லையே.  இந்த வியாதிக்கு திராவிடமாயை காரணமா, பெரியாரிசம் காரணமா என்று எனக்குத் தெரியாது. அதனால்  விதியே, விதியே இந்த தமிழ்ச்சாதி எப்பொழுது தான்எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதை விட்டு சொந்தப் புத்தியில் இயங்கும்  என்று விதியை நொந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

தேவரடியார்களும்  ராஜ ராஜ சோழனும்

ஐரோப்பிய அரசர்களின் அட்டூழியங்களுடனும், இஸ்லாமிய படைஎடுப்பாளர்களுடனும், இலங்கையிலும் பல நாடுகளிலும் அரசர்கள் நடந்து கொண்ட கொடூரமான விதங்களுடனும்  ஒப்பிடும் போது தமிழரசர்கள் தர்மத்தின் வழி நின்றவர்கள் என்றே கூறலாம்.
தேவதாசி எனப்படும் தேவரடியார் முறையை நிறுவனமயமாக்கிய பெறுமை நம் ஊர் மன்னன் ராஜராஜசோழனையே சேரும். தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட போது அதற்காக நாடெங்கிலும் இருந்து 400 சின்னப்பெண்கள் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டனர். என்கிறார் ஒரு பதிவர்.
 உண்மையில் ராஜ சோழன் காலத்தில் தேவரடியார்கள் பாலியலில் தொழிலில் ஈடுபட்டதற்கும். அவர்கள் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டார்கள் என்பதற்கும் ஆதாரம் கிடையாது,. அளவு கடந்த சிவபக்தனாகிய ராஜ ராஜ சோழன் அக்காலத்தில் இந்தியாவிலேயே உயரமான கோபுரத்துடன் ஒரு கோயிலைக் கட்டி, அங்கே விபச்சாரம் நடக்க வழி செய்தான் அதாவது நிறுவனமயமாக்கினான் என்றது போன்ற உளறல் வேறெதுவுமிருக்க முடியாது. அப்படி ராஜ ராஜ சோழனல்ல யாருமே செய்திருக்க மாட்டார்கள். விபச்சாரம் என்பது உலகில் பழமையான தொழில், அது சோழர் காலத்திலும் எங்கேயாவது நிச்சயமாக நடந்திருக்கும் ஆனால் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் 400 பெண்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து விபச்சாரத்தை ராஜ ராஜ சோழன் "நிறுவனமாக்கினார்" என்ற கூறும் முட்டாள் தனத்தைப் போல் வேறெதுவுமிருக்க முடியாது.

இதற்குக் காரணம் என்னவென்றால் இன்று கிறித்தவர்களாகவும், முஸ்லீம்களாகவும், பெரியாரிஸ்டுக்களாகவும், திராவிடவீரர்களாகவும், வெவ்வேறு சாதியினர்களாகவும் தான் தமிழ்நாட்டில் தமிழர்கள் இருக்கிறார்களே தவிர தமிழர்களாக அல்ல. ராஜ ராஜ சோழனைத் தாக்கும் போது அந்த மாமன்னனைத் தமிழனாக பார்ப்பதை விடுத்து ஒரு இந்துவாக மட்டும் பார்க்கிறார்கள். அது தான் இந்த அவதூறுகள் எல்லாவற்றுக்கும் காரணமாகும்.

தேவதாசி முறை சோழர்களுக்கு முன்பே இந்தியாவில் பல  பாகங்களில் நடைமுறையிலிருந்தது. தொல்காப்பியமும், சிலப்பதிகாரமும்  கூட நாட்டியமாடும் பெண்களைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது, ஆட்டமும், கடவுள் வழிபாடும் ஒருங்கிணைந்தது பண்டைத் தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறை. சோழர் காலத்தில் தேவரடியார்கள் கோயிலில் ஆடவும் பாடவும், ஓவியங்கள் வரையவும் நியமிக்கப்பட்டார்கள், அவர்களுக்கு அரச உதவி நிலங்களாகவும், கிரந்தங்களாகவும் அளிக்கப்பட்டன. மேலேயுள்ள காணொளியில் ராஜ ராஜ சோழன் தான் ஐரோப்பியர்களுக்கு முன்பே ஆவணப்படுத்தும் (Record Keeping) முறையை அறிமுகப்படுத்தியவர் மட்டுமல்ல, தஞ்சாவூர் கோயில் சுவர்களிலேயே அங்கு பணிபுரிந்த ஒவ்வொரு தேவரடியார்களையும்  பதியப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார், வரலாற்றாசிரியர் Michael Woods.  

தனது தமக்கையாரும், மனைவிமாரும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்குச் செய்த திருப்பணிகளைப் பற்றிக் குறிப்பிடும் பேரரரசன் ராஜ ராஜ சோழன்,  விபச்சாரிகளின் விபரங்களையும் அதே புனிதமான கோயில் கல்வெட்டில் பொறித்திருப்பார் என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது. இதிலிருந்து ராஜ ராஜ சோழன் காலத்தில் தேவரடியார்கள் கோயிலிலும் சமுதாயத்திலும் உயர்ந்த மதிப்புக்குரிய அந்தஸ்தில் இருந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

தேவரடியார்கள் எவ்வாறு தேவடியாள்களாக்கப்பட்டார்கள்


சோழர் காலத்தில் கோயில்களிலும் சமுதாயத்திலும் உயர்ந்த அந்தஸ்தில் இருந்த தேவரடியார்களை தேவடியாள்களாக்கியவர்கள் தமிழரல்லாத, இந்துக்கள் அல்லாத ஆட்சியாளர்கள் தான். இஸ்லாமிய படையெடுப்பின் போது வடக்கிலிருந்து வந்தவர்கள் தமிழர்களின் கோயில்களைச் சூறையாடினார்கள், கோயிலின் செல்வங்களையும், பொன்னையும் பொருளையும் கொள்ளையடித்தார்கள்.  
சோழர்களின் வீழ்ச்சியினால்., தமிழ் மண்ணின் ஆட்சி தமிழரல்லாதாரின் கரங்களில் போன பின்னர், தமிழ் அரசர்களால் ஆதரித்து வளர்த்து வரப்பட்ட பல தமிழ்க் கலைஞர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்தார்கள். உண்மையில் சம்புவராயர்களிடமிருந்து தொண்டை மண்டலத்தை விஜயநகர ஆட்சியாளர்கள் கைப்பற்றிய பின் அவர்கள் தான் தேவரடியார் திட்டத்தை மீண்டும் தொடங்கினார்கள்.  அவர்களின் வீழ்ச்சியில் பின்னர் ஆதரவின்றி தனிப்பட்ட செல்வந்தர்களின் ஆதரவை நாடி அவர்களுக்காக தனிப்பட்ட முறையில் ஆடத் தொடங்கி அது விபச்சாரமாக உருவெடுத்தது. 

இன்றும் எல்லம்மா வழிபாட்டின் அடிப்படையில் தேவதாசி முறை நடை முறையிலிருப்பது கர்நாடக மாநிலத்திலும் ஆந்திராவிலும் தான்.
ஆனால் விஜய நகர அரசர்களையும், துலுக்க அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடப் பயந்து,   ராஜ ராஜ சோழனை மட்டும்  வசைபாடி, அவன் 400 பெண்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தான் என்று கூறுவதும்,  தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் ராஜ ராஜ சோழன் காலத்தில் விபச்சாரம் நடந்தது என்ற மாதிரியான எண்ணத்தை ஏற்படுத்துவதும் வெறும் அபத்தம் மட்டுமல்ல அது கடவுளுக்கும் அடுக்காது.

பரதமும் சதிராட்டமும்


தேவரடியார்கள் தேவடியார்களாக ஆக்கப் படுமுன்பே சதிராட்டம் தமிழ்நாட்டில் ஆடப்பட்டு வளர்க்கப்பட்டது அது தமிழ்நாட்டில் தேவதாசிகளால் பேணிப்பாதுகாக்கப்பட்டதே  தவிர அந்த சதிராட்டம் விபச்சாரமல்ல. அது தமிழ் நாட்டில் தமிழர்களின்  எண்ணத்தில் உருவாகிய நாட்டியக் கலை.  சதிராட்டத்துக்கு, அழிந்து போய்க்கொண்டிருந்த அந்த கலை வடிவத்துக்கு  மெருகூட்டித் தான் அதற்கு பரத நாட்டியமென பெயரிட்டார்கள் கிருஸ்ணையரும் ருக்மணிதேவி அருண்டேலும் . அதனால் அந்த நாட்டியத்தை இன்று ஆடுபவர்கள் வெட்கப்பட வேண்டுமா? 

RAP (Rebellious African People) Music இன் வேர்கள் கறுப்பின மக்களிடம், தென்னாபிரிக்காவின் பாரம்பரியத்திலிருந்து வந்தது ஆனால் இன்று வெள்ளையர்கள் மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்களும் கூடத் தான் பாடுகிறார்கள். அப்படியானால் RAP பாடுகிறவர்கள் எல்லாம் ஆபிரிக்கர்களா? பஞ்சாபிகளின் Bhangra நடனம் பஞ்சாபி விவசாயிகளின் அறுவடை நடனம் ஆனால் இன்று அதை எல்லோரும் ஆடுகிறார்கள். அப்படியானால் அதை ஆடுகிறவர்கள் எல்லாம் பஞ்சாபி கிராமவாசிகள் ஆகி விடுவார்களா?

எத்தனையோ இந்தியர்கள், வடக்கிலும், தெற்கிலும், தமிழ் நாட்டின் பரதநாட்டியத்தை தமிழ்நாட்டில் பிறந்த கலை என்பதை மறுத்து, தாம்  சொந்தம் கொண்டாடத் துடிக்கும் போது பரதத்தில் பட்டம் பெற்றவர்கள் அந்த நாட்டியக் கலையை தூக்கி வைத்துக் கொண்டாடுவது "அசிங்கமான வழக்கம்"  என்று ஒரு "தமிழரே" கூறும் முட்டாள் தனத்தை எங்கே போய் முட்டிக் கொள்வதென்று எனக்குத் தெரியவில்லை.
40 comments:

R.Puratchimani said...

வணக்கம் வியாசன்,அந்த பதிவு தாழ்வு மனப்பான்மை, கோபம், புதிதாக கட்டி எழுப்பப்படும் ஜாதி வெறி, அல்லது அறியாமையின் காரணமாக கூட இருக்கலாம். இருப்பினும் அவருக்கு புரிய வைக்க வேண்டியது கடமை. உங்கள் பதிவு அதை ஓரளவு செய்யும் என நினைக்கின்றேன் . இருப்பினும் ஆதாரப்பூர்வமான மேலும் சில பதிவுகள் அவருக்கு உண்மையை புரியவைக்கலாம்(எனக்கும் சேர்த்துத்தான்).

நன்றி

viyasan said...

//அந்த பதிவு தாழ்வு மனப்பான்மை, கோபம், புதிதாக கட்டி எழுப்பப்படும் ஜாதி வெறி, அல்லது அறியாமையின் காரணமாக கூட இருக்கலாம்.//

வணக்கம் சகோ., உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. என்ன காரணத்துக்காக அந்த பதிவு எழுதப்பட்டதாக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது தான். இந்த பதிவு நீண்டு கொண்டு போவதை தவிர்க்கவே மேலதிக விவரங்களை இணைக்கவில்லை, இனிவரும் பதிவுகளில் மேலும் ஆதாரங்களை இணைக்க முயல்கிறேன். நன்றி.

நம்பள்கி said...

மற்ற நாட்டினர் அவர்கள் முன்னோர்கள் செய்த தவறுகளை மறைத்து, அவர்கள் முன்னோர்களின் பீத்த பெருமையை மட்டும் பேசுவதால், நாமும் அப்படித்தான் செய்யவேண்டும் என்ற விதி கிடையாது.

நாம் நம் வழியில் போவோம்; In essence, no one can be our yardstick! There is no rule that we should be measured by others' thinking, or thoughts to be specific.

ராஜராஜன் பற்றிய உண்மைகள் அழிக்கப் படுகின்றது; அவர் பிராமணர்களையும்...கூடவே வேளாளர்களையும் சிறப்பாக நடத்தினார். இவரகள் உயர் குடி மக்கள் அவர் ஆண்டபோது.!
தனியாக இருந்தால் தகராறு வரும் என்று வேளாளர்களையும் கூட சேர்த்துக் கொண்டவர்கள்---அறிவாளிகள்.

வேளாளர்கள் were punching bags as well as to propagate their masters' glory.

எவன் செய்தாலும்....ஒரு ஜாதியில் பிறந்த குற்றத்திற்காக...எவளையும் போட்டுக் கட்டவும் கூடாது. இது சாமிக்கு என்று சொன்னாலும்...இல்லை பூதத்திர்க்கோ என்று சொன்னாலும் (அந்த பெண்கள் அனுமதியில்லாமல், பாலியில குற்றம் நடக்காவிட்டாலும்) அப்படி செய்து தவறு...தவறு..


நம்பள்கி said...

எவன் செய்தாலும்..ஒரு ஜாதியில் பிறந்த குற்றத்திற்காக,எவளையும் போட்டுக்கட்டக் கூடாது. அப்படி எவன் செய்தாலும் தவரே..

இல்லை இந்த பெண்களை சாமிக்கு அற்பணித்தோம்...இல்லை..பூதத்திர்ககு அற்பணித்தோம் என்று சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை; அவன் அவளை பட்டர் அப்பனாக இருந்தாலும்..

பாலியில குற்றம் நடக்க வில்லை; சாமிக்கு தான் ஆட விட்டோம் என்று சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை...அப்படி எய்யனும் என்றால்...ராஜராஜன் அவர் பெண்களை அதுக்கு அனுப்பி இருக்கனும்...அப்ப--வான் தான் மனிதன்.

viyasan said...

//எவன் செய்தாலும்....ஒரு ஜாதியில் பிறந்த குற்றத்திற்காக...எவளையும் போட்டுக் கட்டவும் கூடாது.//

@நம்பள்கி,

சாதியடிப்படையில், அதாவது குறைந்த சாதிப்பெண்கள் தான் ராஜ ராஜ சோழன் காலத்தில் தேவரடியார்களாக நியமிக்கப்பட்டார்கள் என்பதற்கு உங்களிடம் ஆதாரமுண்டா அல்லது அது தமிழின வெறுப்பாளர்களினதும், திராவிட வீரகளினதும் கண்டு பிடிப்பா?

ராஜ ராஜன் காலத்தில் தஞ்சாவூர்க் கோயிலில் ஆடவும் பாடவும், கோயிலின் நிர்வாகத்துக்காகவும் நியமிக்கப்பட்ட 400 பெண்களும் பாலியல் தொழிலை நடத்தினார்கள் என்பதற்கு உங்களிடம் ஆதாரமுண்டா?
அவர்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டது. ராஜ ராஜனின் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்பு தான்.

ஐரோப்பிய கோயில்களில் வாழ்ந்த கன்னியாஸ்திரிகள் போன்று ராஜ ராஜனின் ஆட்சியில் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்துடன், கோயில் தொண்டாற்றிக் கொண்டு மதிப்புடன் கலையில் சிறந்து வாழ்ந்த இந்தப் பெண்கள் தேவடியாள்களாக ஆக்கப்பட்டது விஜய நகர ஆட்சியாளர்களாலும், முகம்மதிய்ர்களாலும் தான், அவர்களின் அரசர்களைத் தாக்குவதற்கு உங்களுக்குப் பயமா?

சாதியடிப்படையில் குறைந்த ஜாதிப்பெண்களை எல்லம்மாவுக்கு பொட்டுக்கட்டி விடும் வழக்கம் ஆரம்பிக்கப்பட்டது கன்னடர்களாலேயே தவிர சோழர்களால் அல்ல, விஜயநகர ஆட்சியின் கீழ் தான் அந்த வழக்கம் பரவலாக பாலியல் தொழிலாக நடந்தது, இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

நம்பள்கி said...

[[ராஜ ராஜன் காலத்தில் தஞ்சாவூர்க் கோயிலில் ஆடவும் பாடவும், கோயிலின் நிர்வாகத்துக்காகவும் நியமிக்கப்பட்ட 400 பெண்களும் பாலியல் தொழிலை நடத்தினார்கள் என்பதற்கு உங்களிடம் ஆதாரமுண்டா?]]

நான் பாலியல் தொழில் என்று சொல்லவில்லை; எந்த தொழிலையும் எந்த பெண்ணும் என்ன செய்யவேண்டும் என்ற உரிமை எவனுக்கும் கிடையாது---அவன் ராஜ ஹ=ராஜனாக இருந்தாலும்..!

viyasan said...

//இல்லை இந்த பெண்களை சாமிக்கு அற்பணித்தோம்...இல்லை..பூதத்திர்ககு அற்பணித்தோம் என்று சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை; அவன் அவளை பட்டர் அப்பனாக இருந்தாலும்..//

இவ்வளவு உணர்ச்சி வசப்படும் நீங்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த ராஜ ராஜ சோழனை ஆதாரமில்லாமல், வசை பாடுவதை விடுத்து , இன்றும் கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் பொட்டுக் கட்டி விடப்படும் பெண்களுக்காக, அவர்களை விடுவிக்கப் போராட வேண்டுமே தவிர கும்பலில் கோவிந்தா போட்டுக் கொண்டு தமிழர்களின் வீரத்தின் சின்னமாகப் போற்றப்படும் ஒரு தமிழ்ப் பேரரசனை வசை பாடக் கூடாது என்பது தான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

viyasan said...

பேரரசன் ராஜ ராஜ சோழனை நினைவு கூர்வதற்கு அவரது எவ்வளவோ சாதனைகள் இருக்கும் போது, 400 பெண்கள் ஆடவும் பாடவும் கோயிலில் தொண்டாற்றவும் நியமிக்கப்பட்டார்கள் என்று தஞ்சாவூர் கோயில் கல்வெட்டில் குறிப்பிடுவதை மட்டும் வைத்துக் கொண்டு தமது கற்பனையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர் தமிழர்களின் எதிரிகள்.

அந்தப் பெண்களை மட்டும் தனியாக அல்ல ஆனால் அவர்களின் குடும்பத்தினர் அவர்களின் குரு, அவர்களின் பக்க வாத்தியக்காரர்கள் அனைவரையும் கோயிலில் நியமித்ததாகத் தான் கல்வெட்டு குறிப்பிடுகிறது. வலுக்கட்டாயமாக அவர்களை தஞ்சாவூரில் கோயிலில் அவர்களைப் பொட்டுக் காட்டி விட்டதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. அவர்கள் பாலியல் தொழிலுக்காக பொட்டுக்கட்டி விடப்பட்டால், எதற்காக பக்க வாத்தியக்காரர்களையும் நியமிக்க வேண்டும். கர்னடாடகத்தில் எல்லம்மாவுக்கு பெண்களை மட்டும் தனியாகத் தான் இன்றும் பொட்டுக் கட்டி விடுகிறார்கள்.

உண்மையில் சாதியை எதிர்ப்பவர்களாக இருந்தால், அவர்கள் தமிழ்நாட்டில் இப்பொழுதும் சாதிக் கொடுமைகளைச் செய்யும் ஆதிக்க சாதியினர்களுக்கெதிராக குரல் எழுப்ப வேண்டுமே தவிர ராஜ ராஜ சோழனைத் தாக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் சாதி எதிர்ப்பாளர்களின் போராட்டங்கள் இப்படியான இத்துப்போன போராட்டங்கள் தான். அவர்கள் ஒன்றில் மனுதர்மத்தை எரிப்பார்கள் அல்லது செத்துப்போன ராஜராஜ சோழனை எதிர்ப்பார்கள். ஆனால் உயிரோடிருக்கும் ஆதிக்க சாதியினரை எதிர்த்தால் ஓட்ட நறுக்கி விடுவார்கள் என்ற பயத்தால் அவர்களை எதிர்க்க மாட்டார்கள்.

நிகழ்காலத்தில் எமது தவறுகளுக்கு எமது முன்னோர்களை வசைபாடி பயனில்லை. இதனால் எமது எதிரிகள் எம்மைத் தாக்குவதற்கு நாங்களே ஆயுதம் கொடுக்கிறோம். அது வெறும் முட்டாள்தனம் என்பது தான் எனது கருத்தாகும்.

வருண் said...

வியாசன்; நம்மை ஆண்ட பாபர் மசூதியை இந்துக்கள் அகற்றவில்லையா?

வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்டதை நாம் பெருமையாக சொல்லிக்கிறோமா?

ராஜ ராஜ சோழன் தமிழன் என்பதால் அவர் நல்லவர், வல்லவர், யாரையும் கொன்னதில்லை, துன்புறுதியதில்லைனு சொல்லனுமா?

ஒரு நாட்டை ஆளனும்னா எந்த அரசனும் பலரை ஒழித்துக்கட்டிதான் இருப்பாங்க. பாதிக்கப்பட்டவர்கள் அவ்வரசர்களை வாழ்த்துவதோ, வணங்குவதோ இல்லை. இதுதான் மனித இயல்பு!

viyasan said...

//வியாசன்; நம்மை ஆண்ட பாபர் மசூதியை இந்துக்கள் அகற்றவில்லையா?//

வருண்,

பாபர் தமிழர்களை ஆளவில்லை, பாபர் மசூதியை இடித்தது தமிழர்களும் அல்ல. பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துக் கோயில் இருந்திருக்கலாம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லாது விட்டாலும் கூட, அதை இடித்தது சரியென தமிழர்கள் எல்லோரும் வாதாட மாட்டார்கள்.


//வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்டதை நாம் பெருமையாக சொல்லிக்கிறோமா?//

அதில் பெருமைப்பட ஒன்றும் கிடையாது, அதே வேளையில் வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்டது உண்மை என்பதையும் அவர்களாலும் எங்களுக்கு பல நன்மைகளை ஏற்பட்டன என்பதையும் நாம் மறுக்க முடியாது.


//ஒரு நாட்டை ஆளனும்னா எந்த அரசனும் பலரை ஒழித்துக்கட்டிதான் இருப்பாங்க. பாதிக்கப்பட்டவர்கள் அவ்வரசர்களை வாழ்த்துவதோ, வணங்குவதோ இல்லை. இதுதான் மனித இயல்பு!//

அந்தக் காலத்தில் அப்படி உலக முழுவதிலுமுள்ள அரசர்கள் எல்லோரும் செய்தார்கள். ஆனால் அப்படி எந்த நாட்டிலும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஆண்ட தமதின அரசர்களை “பாதிக்கப்பட்டவர்கள்” வசை பாடுவதில்லை. இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாட்டின் சாதி வெறி. சாதிச்சான்றிதழ்களை செத்துப் போன அரசர்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள். எமது முன்னோர்களைக் கூட தமிழர்களாகப் பார்க்காமல். சாதியடிப்படையில் பிரிப்பதால் உண்டாகிய வினை தான் இது, சாதியொழியும் வரை தமிழினத்தைக் காப்பாற்ற முடியாது.,

viyasan said...

//ராஜ ராஜ சோழன் தமிழன் என்பதால் அவர் நல்லவர், வல்லவர், யாரையும் கொன்னதில்லை, துன்புறுதியதில்லைனு சொல்லனுமா?//


ராஜ ராஜ சோழன் தமிழன் மட்டுமல்ல, அவரை நினைவு கூர, அவரை நினைத்துப் பெருமைப்பட பேரரசன் ராஜ ராஜனது சோழனது சாதனைகள் பல இருக்கும் போது, நாங்கள் தமிழர்கள், எமது முன்னோர்களின் சில தவறுகளை மட்டும் எதற்காக பெரிது படுத்த வேண்டும். அது யாரைத் திருப்திப்படுத்துவதற்காக, நாங்கள் எதற்காக அப்படிச் செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய கேள்வி. எந்த இனமும் அப்படிச் செய்வதில்லை. நாங்கள், தமிழர்களைத் தவிர.


இவ்வளவுக்கும் இந்தக் குற்றசாட்டுகள் எதற்கும் சரியான ஆதாரம் கிடையாது. தேவரடியார்கள் திட்டத்தை ராஜ ராஜ சோழன் தொடங்கவில்லை. சோழர்களுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் நடைமறையிலிருந்ததொன்று.

இவ்வளவுக்கும் ராஜ ராஜ சோழன் காலத்தில் தேவரடியார்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டமைக்கு எந்த ஆதாரமும் கிடையாது.

ஆதாரமில்லாமலே அடுத்தவன் சொல்கிறான் என்பதற்கு எங்களின் பாட்டன், முப்பாட்டன் மீது பழி போடும் அபத்தம் வேறு எதுவுமிருக்க முடியாது. அதையும் சிலர் நியாயப்படுத்துவதை தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஈழத்தமிழர்களைப் போல் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது அடையாளத்தை வரலாற்றை தமது எதிரிகளுக்கு நிரூபிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இல்லை. தமிழ்நாட்டில் யாரும் வந்து அகழ்வாராய்ச்சி என்ற பெயரில், இராணுவத்தின் உதவியுடன் இரவோடிரவாக புதைத்த புத்தர் சிலையைத் தோண்டி எடுத்து விட்டு உங்களின் மண்ணை சொந்தம் கொண்டாடும் அவலம் உங்களுக்குக் கிடையாது. அதனால் தான் தமிழர்களின் வரலாற்றின் முக்கியத்துவம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தெரியவில்லை. :(

அன்பு துரை said...

இப்பதிவினை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்..

எனக்கு இவ்வரலாறு பற்றி அவ்வளவாக தெரியாது.. அதனால தேவதாசி முறை பற்றிய எனது ஐயப்பாட்டினை மட்டும் டான் அசோக் அவர்களது பதிவில் தெரிவித்திருந்தேன்..

இந்த நிலையில் உங்களுடைய இப்பதிவு மகிழ்ச்சியை தருகிறது..

நன்றி.

நந்தவனத்தான் said...

சகோ வியாசன்,

இந்த கட்டுரையை எழுதியதற்காக வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் எதையுமே யாரையும் ஏச்சும் ஏளனமும் செய்து இன்புறுவது எமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. இதைத்தான் நக்கற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன என்பார்கள் ஊரில். அப்படி செய்துதான் எங்களுக்கு சுயமும் இல்லை சுயமரியாதையும் இல்லாமல் போய்விட்டது இதனையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

இல்லையெனில், ராஜராஜனை பற்றி ஒரு வெள்ளைக்காரன் ஆகா ஓகோ என எழுதியிருக்கிறான் என ஏதாவது லிங்க் கிடைத்தால் போடுங்கள், உடனே எல்லோரும் மூடிகொள்ளுவோம். ஏனெனில் எங்களுக்கு வெள்ளையாக இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்னு அப்படியொரு நம்பிக்கை!

இங்கு பாருங்கள் மலையாளியான இந்த எழுத்தாளர் ராஜராஜனை பற்றி என்ன வெல்லாம் எழுதியிருக்கின்றார் என்று... என்னவொரு துணிச்சல்?

http://www.jeyamohan.in/?p=8711
http://www.jeyamohan.in/?p=8712

viyasan said...

//இந்த நிலையில் உங்களுடைய இப்பதிவு மகிழ்ச்சியை தருகிறது//

சகோ. அன்புதுரை,
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அந்தப் பதிவிலுள்ள தவறான கருத்துகள் எனக்கு வேதனை அளித்தது.

viyasan said...

சகோ. நந்தவனத்தான்,

நன்றி. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி, இது உண்மையில் நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன என்பது போன்ற நிலை தான். தமிழர்களே இப்படி, தமிழர்களின் வரலாற்றில் முக்கியமான பேரரசனை, ஆதாரங்களில்லாமல், அசிங்கமாக தாக்கியது எனக்கு அதிர்ச்சியளித்தது.

அந்த ஜெயராமனின் இணையத்தளத்தை தற்செயலாக நான் முன்பொருமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் மலையாளி என்று தெரியாது. அவரது எழுத்து, மலையாளிகள் தமிழர்களை வெறுக்கிறார்கள் என்ற கருத்தை மீண்டும் உறுதி செய்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இன்றும் பலர் இப்படி கூட இருந்து குழி பறிக்கும், தமிழரல்லாத திராவிடர்களின் குள்ளநரித்தனத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது.

kongango ivanda said...

ஒருவர் கூறும் கருத்துக்கு பதில் சொல்வது வேறு. ராஜா ராஜா சோழன் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்பது வேறு. நீங்க பிற நாட்டு மக்கள் தவறை மறந்து நல்லதை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்கீறார்கள் என்று சொல்வது முற்றிலும் உண்மையா ஆதாரம் உண்டா ?
இங்கே இருக்கும் ஆதிக்க சாதிக்காரகள் தங்கள் ஆதிக்கம் செய்யும் உரிமைக்கு, ஆதாரத்தை இவர் போன்ற அரசர்களிடம் இருந்து ஆரம்பிக்கிறார்கள் அதற்க்கு நியாயம் கற்பிக்கிறார்கள் .
இதுதான் இங்கு முக்கிய பிரச்சினை.

குலசேகரன் said...

You could have given the link of the blog which you are attacking here. Like to read it fully.

குலசேகரன் said...

W/o reading the blog, some common points may be made to you:

History is not seen; but heard. Meaning, neither you nor the blogger lived and saw Raja Raja Chozhan. So, everything is hearsay.

The writers of history are not paragons of virtue. We read biased history only. They can write history that suits their ulterior motives.

For your information, Neelakanta Sastri himself has written that the Brahmins influenced Chozha kings and it is during Choza reign, Sanskrit came up over Tamil.

So, it is ok to examine the history and say what one comes to understand it. Many people will be hurt, just as you are hurt, still one should have the right to say what he understands.

You are trying to smother that right.

Am I correct?

Ethicalist E said...

வியாசன் நந்தவனத்தான் அந்த ஜெயமோகனின் கட்டுரையை சரியாக வாசிக்கவில்லை.

வேறு ஒருவர் பகிர்ந்த ராஜராஜ சோழனை விமர்சித்து எழுதிய கட்டுரைக்கு பதிலாக ஜெயமோகன் தனது பதிலை வழங்கியிருக்கின்றார்.
உண்மையில் ஜெமோ ராஜராஜனை தாக்கவில்லை.

வரலாற்றுனர்வுடன் எழுதியிருக்கின்றார் என்றே கூறவேண்டும்.

மீண்டும் அந்த கட்டுரைகளை ஆறுதலாக படிக்கவும்

Ethicalist E said...

குறிப்பாக இந்த பதிவை ஆழமாக படிக்கவும்.
http://www.jeyamohan.in/?p=8712

நந்தவனத்தான் said...

//அந்த ஜெயராமனின் இணையத்தளத்தை தற்செயலாக நான் முன்பொருமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் மலையாளி என்று தெரியாது. அவரது எழுத்து, மலையாளிகள் தமிழர்களை வெறுக்கிறார்கள் என்ற கருத்தை மீண்டும் உறுதி செய்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இன்றும் பலர் இப்படி கூட இருந்து குழி பறிக்கும், தமிழரல்லாத திராவிடர்களின் குள்ளநரித்தனத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது.//

சகோ வியாஸன், sarcasm கொண்டு எழுதப்பட்ட என் வரிகளை தாங்கள் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். தாங்கள் ஜெயமோகனின் முழு கட்டுரையையும் படிக்கவில்லை போலும். ராஜராஜனை பற்றி கூறப்படும் அவதூறுகளை பற்றி நிர்மல் என்பவர் எழுப்பிய சந்தேகங்களுக்கு ஜெயமோகன் கொடுத்த பதிலடியை முழுவதும் - இரண்டு கட்டுரைகளையும் படியுங்கள்.

கட்டுரையிலிருந்து சில பகுதிகள் ----------------

"தமிழக சரித்திரத்திலேயே மிகப்பிரம்மாண்டமான மக்கள்நலத்திட்டங்கள் இருகாலகட்டங்களில்தான் செய்யப்பட்டன. ஒன்று சோழர் காலம். இன்னொன்று நாயக்கர் காலம்."

"சோழர்காலகட்டத்தின் தேவரடியார் சமூகம் பற்றி இன்று பலவாறாகப் பேசப்படுகிறது. இதுவும் உண்மைநிலை உணராத பேச்சே... இன்று நாம் உருவகிக்கும் சமூகக்கொடுமையாக அல்லது சுரண்டலாக அது இருக்கவில்லை. அந்த மனச்சித்திரமே பிழை. பொட்டுகட்டுதல் ஓரு சாதிய உயர்நிலையாக்கமாகவே இருந்தது. ஆகவேதான் அது நீடித்தது. வெறும் ஏமாற்று மூலமோ வன்முறை மூலமோ அந்த முறை தக்கவைக்கப்பட்டது என்பதற்கான ஆதாரமேதும் இல்லை.

தேவரடியாருக்கு அன்று சமூகத்தில் உயர்ந்த நிலை இருந்தது. நிதி, குலம் இரண்டிலுமே அவர்கள் பிராமணர்களுக்கும் மன்னர்களுக்கும் அடுத்த நிலையில் இருந்தார்கள். பல்லக்கில் ஏறும் தகுதிபடைத்த உயர்குடிகள் இவர்கள் மூவரே. தேவரடியார்கள் கோயில்களை கட்டியிருக்கிறார்கள். குளங்களை வெட்டியிருக்கிறார்கள். அவர்கள் விபச்சாரிகளாக இருக்கவில்லை. தமிழகத்தின் மாமன்னர்கள் தேவரடியார் பெண்களை மணந்து பட்டத்தரசிகளாக ஆக்கியிருக்கிறார்கள். ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் பட்டத்தரசி தேவரடியார்தான். திருவிதாங்கூரின் மன்னர் ராஜா ராமவர்மாவின் பட்டத்தரசி அபிராமி தேவரடியார்தான்."

"தன் குடிகள் மேல் விருப்பம் கொண்ட, பெருந்தன்மையும் நிதானமும் கொண்ட, கருணைமிக்க மன்னன்தான் ராஜராஜன். கலைகளிலும் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவன். பண்பாட்டை பேணியவன். ஹானிபாலைப் போல, நெப்போலியனைப்போல,அலாவுதீன் கில்ஜியைப்போல,நாதிர்ஷாவைப்போல ராஜராஜன் பெருங்கொடுமைகள் எதையும் எந்த மனிதஇனத்துக்கும் இழைத்ததில்லை. அப்படி பெரும் மானுடக்குற்றங்களை இழைத்த அவர்களையே மாபெரும் வரலாற்றுநாயகர்களாக அம்மக்கள் கொண்டாடுகிறார்கள்....அவர்களுடன் ஒப்பிடுகையில் ராஜராஜன் மாபெரும் மானுடத்தலைவனே. நாம் நமது வரலாற்றின் மாபெரும் சக்ரவர்த்தியை கொண்டாடுவதில் பிழையே இல்லை. இறந்தகாலத்தை இறந்தகாலமாக எடுத்துக்கோண்டால் அதில் நம் சாதனைகளுக்காகவும் நம் முன்னோர்களுக்காகவும் பெருமைகொள்வது உகந்ததே"

"அன்றைய அற மதிப்பீடுகளையும் ஒழுக்க மதிப்பீடுகளையும் விட்டு நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். அது நிலவுடைமைகாலகட்டத்தின் ஒரு பகுதி. நாம் வாழ்வது அதில் இருந்து பலபடிகள் தாண்டிவந்த ஜனநாயகக் காலகட்டம். நாம் நம் பொற்காலங்களை எதிர்காலத்தில்தான் தேடவேண்டும், இறந்தகாலத்தில் அல்ல."
----------

திராவிட இயக்கத்தை எதிர்ப்பவர் என்ற முறையில் ஜெயமோகனை மலையாளி என அவதூறு செய்வார்கள். எம்ஜியாரையே மலையாளி என அவதூறு செய்தவர்கள்தான் இவர்கள். எம்ஜியார் ஈழத்துக்கு என்ன செய்தார்,இவர்கள் என்ன செய்தார்கள் என நான் சொல்ல வேண்டியதில்லை.எம்ஜியாரை மலையாளி என நீங்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் ஜெயமோகனையும் ஒதுக்கலாம்! ஆனால் இராஜராஜனை பற்றிய மதிப்பீடுகள் உண்மை தமிழரை உலகினுக்கு காட்டும் என்றே நினைக்கிறேன்.

viyasan said...

//சகோ வியாஸன், sarcasm கொண்டு எழுதப்பட்ட என் வரிகளை தாங்கள் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். தாங்கள் ஜெயமோகனின் முழு கட்டுரையையும் படிக்கவில்லை போலும்.///

சகோ.நந்தவனத்தான்,

உண்மை. இன்னொமொரு Negative கட்டுரையைப் படிக்கும் mood எனக்கிருக்கவில்லை.நான் அவரது கட்டுரையை உங்களுக்கு பதில் எழுதிய பின்பு தான் படித்தேன், அதில் அவரே, ராஜ ராஜ சோழன் காலத்தில்

“தேவரடியாருக்கு அன்று சமூகத்தில் உயர்ந்த நிலை இருந்தது. நிதி, குலம் இரண்டிலுமே அவர்கள் பிராமணர்களுக்கும் மன்னர்களுக்கும் அடுத்த நிலையில் இருந்தார்கள். பல்லக்கில் ஏறும்தகுதிபடைத்த உயர்குடிகள் இவர்கள் மூவரே. தேவரடியார்கள் கோயில்களை கட்டியிருக்கிறார்கள். குளங்களை வெட்டியிருக்கிறார்கள். அவர்கள் விபச்சாரிகளாக இருக்கவில்லை”
என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தேன்.

ஆனால் அவரது இணையத்தளத்தில் உள்ள கட்டுரைகளில் சிலவற்றை முன்பே மேலோட்டமாக வாசித்திருக்கிறேன். அதில் அவர் பிராமணர்களைப் பற்றி எழுதுபவை எல்லாம், சோ ராமசாமியைப் போலவே, வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல பிராமணர்கள் இல்லாமல் தமிழர்கள் எதுவுமே செய்திருக்க முடியாது,என்ற மாதிரியான கருத்துக்கள், அதாவது அவரரது நோக்கம், பிராமண ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவது தான் என்ற கருத்து ஏற்பட்டதால், நான் அந்த இணையத்தள இணைப்பை சேமிக்கவில்லை.

viyasan said...

//So, it is ok to examine the history and say what one comes to understand it. Many people will be hurt, just as you are hurt, still one should have the right to say what he understands.
You are trying to smother that right. Am I correct?//

@kulasekaran,

Yes, you are right I was hurt and shocked. I never thought anyone, especially a Tamil, would be stupid enough to badmouth the Emperor Raja Raja the great, instead of celebrating his tremendous feats in the history of Tamils.

All the Tamils are heirs and successors of that glorious past but this guy is highlighting the negatives only. When I realized that Thevaradiyarakal were not actually prostitutes in Raja Raja’s reign but rather made to be prostitutes after the fall of Cholas by non-Tamil invaders, I wanted to show that there are others who disagree with his view about Raja Raja the Great. My post has nothing to do with smothering anyone’s right to express their opinion, but rather expressing my disagreement to their view point.//For your information, Neelakanta Sastri himself has written that the Brahmins influenced Chozha kings and it is during Choza reign, Sanskrit came up over Tamil.//

The Brahmins influenced every Tamil king, including the later kingdom of Jaffna. It does not mean people who dislike the Brahmins can sling mud against our kings, who supported Hinduism.

viyasan said...

//வியாசன் நந்தவனத்தான் அந்த ஜெயமோகனின் கட்டுரையை சரியாக வாசிக்கவில்லை.குறிப்பாக இந்த பதிவை ஆழமாக படிக்கவும்.///

@Ethicalist E,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்நன்றி. நான் சகோ. நந்தவனத்தானுக்கு பதில் எழுதிய பின்பு தான், அந்தக் கட்டுரையை வாசித்துப் பார்த்தேன். ஆனால் ஏனோ அவரது எழுத்துக்கள் சோ. ராமசாமியின் பார்ப்பன சார்பு நிலையை நினைவு படுத்தியதால் தொடர்ந்து படிக்கும் ஆர்வம் எழவில்லை. மீண்டும் அவரது இணையத்தளத்தை அலசிப் பார்த்து விட்டு பதில் எழுதவது தான் சரியாக இருக்கும். நீங்கள் அவரது எழுத்துக்களின் ரசிகராக இருந்து, அவரைப் பற்றிய எனது கருத்து உங்களின் மனதை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.

viyasan said...

@kongango ivanda,

ராஜ ராஜ சோழன் விமர்சனத்துக்கு உடபட்டவர் என்பதல்ல என்னுடைய கருத்து, விமர்சனங்கள் உண்மையாக இருக்க வேண்டும். உதாரணமாக எமது முன்னோர்கள் வானளாவிய கோபுரங்களுடன் கோயில்களைக் கட்டிய போது, எதிர்காலத்தில் பெரியாரிசமும், திராவிடக் கொள்கைகளும் தமிழர்களை அதே கோயில்களை வெறுக்கச் செய்யும், அல்லது முஸ்லீம்கள் படையெடுப்பார்கள் அவர்களின் ஆட்சி வீழ்ச்சியடையும், விஜயநகர ஆட்சி தமிழ்நாட்டுக்கு வரும், அவர்கள் கோயில்களில் வேலைக்கு அமர்த்தும் பார்ப்பனர்கள் கோயில்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவர், தமிழும் தமிழர்களும் கோயிலுக்கு வெளியில் நிறுத்தப்படுவர் என்பது எல்லாம் தெரிந்திருக்கவில்லை.அப்படி தெரிந்திருந்தால் அவர்கள் கோயில்களையே கட்டியிருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

தமிழரசர்களின் வீழ்ச்சியின் பின்னால், தமிழரல்லாதோர் ஆட்சியில் தமிழர்களின் நிலை தமிழ்நாட்டிலேயே தாழ்ந்ததமைக்கு ஆயிரமாண்டுக்களுக்கு முன்பு ஆண்ட தமிழரசர்களை இக்காலத்தில் வசை பாடுவதால் நாங்களே எங்களின் வரலாற்றை இழிவு படுத்துகிறோம் என்பது தான் என்னுடைய கருத்து. இப்படி எவருமே, எந்த நாட்டவருமே செய்வதில்லை.

viyasan said...

//இங்கே இருக்கும் ஆதிக்க சாதிக்காரகள் தங்கள் ஆதிக்கம் செய்யும் உரிமைக்கு, ஆதாரத்தை இவர் போன்ற அரசர்களிடம் இருந்து ஆரம்பிக்கிறார்கள் அதற்க்கு நியாயம் கற்பிக்கிறார்கள் .இதுதான் இங்கு முக்கிய பிரச்சினை.//

@kongango ivanda,

அதை நானும் அறிவேன். எனது பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன். தமிழ்நாட்டின் ஆதிக்க சாதியினர், ராஜ ராஜ சோழனுக்கு சாதிச் சான்றிதழ் கொடுத்திருப்பதால் தான், அந்தச் சாதியல்லாத, ஏனைய சாதியைச் சேர்ந்த சாதிமான்கள், ஆதிக்க சாதியின் மீதுள்ள கோபத்தை நராஜ ராஜ சோழனை இழிவு படுத்தித் தீர்த்துக் கொள்கிறார்கள். தமிழ் நாட்டில் சாதியை விரும்புகிறவனும், சாதியை வெறுக்கிறவனும் சாதியடிப்படையில் தான் சிந்திக்கிறார்கள், இயங்குகிறார்கள். இது தான் தமிழினத்தின் சாபக்கேடு. :(

நந்தவனத்தான் said...

சகோ வியாஸன், அவருடைய கருத்துக்களை எல்லாமும் நாம் ஏற்றுக்கொள்ள இயலாதுதான். ஆனால் அவரை பிராமண ஆதரவாளரா என்பது விவாதற்குரியது. பெரியாரிய எதிர்ப்பாளராக பிராமணர் குறித்தான நேர்மறை கருத்துக்களை வைப்பவர். அதே நேரத்தில் பிராமணர்கள் மட்டும் சிந்திக்கிறார்கள் என்ற பொருள்பட வந்த கடிதம் ஒன்றினை எழுதியவருடன் தொடர்ந்து உரையாட மறுத்தவர்.
http://www.jeyamohan.in/?p=18411
http://www.jeyamohan.in/?p=18583

அவரின் இந்து தத்துவம் குறித்தான ஆதரவு கருத்துகளால் இடதுசாரிகளாலும் திராவிட கருத்துடையவராலும் இந்துதுவா ஆதரவாளராக கருதப்படுபவர்.ஆனால் அதே நேரத்தில் தற்கால தமிழின் ஒதுக்க முடியாத எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர், பிறப்பால் தமிழ்நாட்டு மலையாளி . அவரின் பல கருத்துகள் மீது எனக்கும் எதிர்-விமர்சனம் உண்டுதான். நான் யாரையும் 100% ஆதரிப்பதோ எதிர்ப்பதோ இல்லை.

viyasan said...

சகோ. நந்தவனத்தான்,

நீங்கள் ஜெயமோகனின் எழுத்துக்களின் ரசிகன் போலிருக்கிறது. அவரது கட்டுரைகளை படித்து விட்டு, எனது கருத்தை எழுதுகிறேன். ஆனால் அவரது கட்டுரைகளில் சுத்த பார்ப்பன வாடையடிக்கிறது. எனக்கென்னமோ அவரும் திராவிடக்கட்சிகளில், அவர்களின் கொள்கைகளில் உள்ள கோபத்தை நாசூக்காக தமிழர்களில் அவர்களின் வரலாற்றில் தீர்த்துக்கொள்ளும் எத்தனையோ பார்ப்பனர்களில் அவரும் ஒருவர் தான் என்ற அபிப்பிராயம் அவரது கட்டுரைகளைப் படிக்குமுன்பே ஏற்படுகிறது. :)

நந்தவனத்தான் said...

//நீங்கள் ஜெயமோகனின் எழுத்துக்களின் ரசிகன் போலிருக்கிறது.//

இனி இது வேறயா? இதுக்கு பலருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் அந்த பக்கமே போகாதீர்கள். அவரைப் பற்றி விமர்சனத்தை அறிய வினவு மற்றும் வருணின் தளத்துக்கும் போனால் ஜெயமோகனை பற்றி வண்டி வண்டியான சாடல்களை படிக்கலாம்! :)

நான் அவரின் எழுத்துகளை இணையத்தில் படிப்பதோடு சரி. ராமகிருஷ்ணன், சாரு,ஜெயமோகன் ஆரம்பித்து அழியாசுடர்களில் வரும் பல எழுத்தாளர்களுக்கும் வாசகன்தான். அவர்களின் புத்தகங்கங்களை படிக்க வாய்ப்பு இல்லை. இணையத்தில் மட்டுமே படிப்பதுண்டு. கருத்துக்களை என்னுடன் ஒத்துப்போவதை பொருத்து ஆதரவும் எதிர்ப்பும்! நன்றி!

நந்தவனத்தான் said...

// வரலாற்றில் தீர்த்துக்கொள்ளும் எத்தனையோ பார்ப்பனர்களில் அவரும் ஒருவர் தான்//

அவர் பார்ப்பனர் அல்லர், பிள்ளைமார் சமூகம் போலிருக்கிறது. விக்கி ஜெயமோகனின் தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை,தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை என்கிறது. நீங்கள் வேணும்னா பார்ப்பன அடிவருடி என அழைத்துக்கொள்ளலாம்! :)

குலசேகரன் said...

Vyasan

You haven’t got my points aright, I’m afraid.

To you, it is bad-mouthing and stupidity to talk about Chozhan. It is your personal opinion. Why not we consult historians of repute – I mean, who are admired and accepted for their historical research – on the blogger’s views? If the blogger is able to buttress his arguments with irrefutable evidences like copper plates and excavations etc. how can we reject his views?

I have already said history is hearsay so far as you and I are concerned. Neither you nor I are historians. We take amateur interest like going to a movie and enjoy seeing it but we can’t make the movie nor are we supposed to make it, can we?

W/o any shred of evidence on your side, and taking everything from others, that too, from those who favour your fond views, you are rebutting the blogger. I don’t say the blogger is absolutely correct. I have come to know about him only from you. But I don’t have the temerity to call him stupid - as you have done - w/o having the qualification myself.

You can be shocked, so also I shall, on hearing a view which you don’t like. But my shock will be short-lived only and I shall immediately be able to respect the contrary views provided he convinces me with his arguments.

Here, your opinion on his views are prejudiced because you have certain fondness for a culture i.e your culture that is based on certain constructs only and when they are questioned, you feel hurt and you write a blog attacking the different view.

You fall into double errors here: one, prejudice is not a virtue of a blogger who writes on intellectual topics, here, history; two, attempting to gag the mouth of people who express contrary views.

Another sickening view of yours is that merely because it is ancient past, we should swallow it hook, line and sinker respectfully. Preposterous !

I am a Tamilian myself but I am ashamed of many things in the culture that was passed to me. Sometimes it fills me with contempt and revulsion. I live in Madurai. And the Jain monuments here fill me with sorrow because it tells the story of religious persecution! You cite westerners who preserve their history and they don’t ever criticise the creators of their culture etc.

Your view is half-baked. In the West, they don’t lionise their ancient kings and worship their historical monuments, with alacrity. They have their heads firmly on their heads.
If a monument was erected by a King in remembrance of his certain victory for which thousands and thousands of lives were killed brutally by him or his army, they preserve the monument only to remind themselves constantly of their own ancestors brutality.
For e.g. the Auschwitz Memorial in Poland. The Germans and Poles are not celebrating the memorial; rather, they view it a grim reminder to them as to how not to live. Further, they want their future generations to know what a tragic and brutal past of genocide of thousands of Jews committed by one of their ancestors. That is why they have written atop the Gateway to the Memorial: ‘Those who forget their past, are condemned to repeat it”

Every generation has the right to examine their past. Don’t deny it, Vyasan. Whether it is biased or prejudiced, let the historians tell us. A culture that was created in the past is the best of all cultures, according to you. How do you say that? Why can’t the present and future generations review the culture passed to them; why should they need to swallow it whole ? Why can’t they, if need be, throw it away lock, stock and barrel? Or take some and leave some?

UN-EXAMINED LIFE IS NOT WORTH LIVING.

வருண் said...

வியாசன்: நீங்க என்ன இப்படி ஒரு அப்பாவியா இருக்கீங்க!

***ஆனால் அவரது கட்டுரைகளில் சுத்த பார்ப்பன வாடையடிக்கிறது.***

பார்ப்பனவாடை பார்ப்பனருக்குத் தெரியாது, பார்ப்பனரால் உணரமுடியாது என்பதாவது உங்களுக்குத் தெரியுமா இல்லையா? :)))


சரி, உங்களைப் "பாராட்டி" ஒரு பதிவு போட்டு இருக்கேன். மறக்காமல் வந்து வாசிச்ச்ட்டு என்னை "வாழ்த்திட்டு"ப் போங்கோ!

தொடுப்பு:

ஈழத்தமிழர்களும் நம்ம ஊர் பார்ப்பனர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா?
http://timeforsomelove.blogspot.com/2013/08/blog-post.html

viyasan said...

//உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் அந்த பக்கமே போகாதீர்கள்.//

சகோ.

நான் அப்படிச் சொல்லவில்லை. நேரம் கிடைக்கும் போது யாருடைய கருத்தையும் படிப்பதில் தவறில்லை அதனால் நிச்சயமாக அவரது எழுத்துக்களையும் படிப்பேன். :)

சார்வாகன் said...

சகோ வியாசன் நல்ல பதிவு,
இதனை இருவிதமாக பார்க்க்லாம்.

1. என் முன்னோர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்,அவரை விமர்சிப்பது எம் இனத்தை இழிவுபடுத்தல் ஆகும் என சொல்லலாம்.

ஆனால்

2. இந்த தமிழ் முன்னோர்களே இப்படித்தான் குத்துங்க நண்பா குத்துங்க என சொல்லலாம்.

வெள்ளையர் ஆட்சிக்கு முந்தைய நமது முன்னோர்களின் வாழ்வு குறித்து மிகச்சரியாக வரையறுக்க முடியாது.

இலக்கியம்,கல்வெட்டுகள் மூலம் சில மேலோட்டமான தகவல்கள் மட்டுமே உண்டு. அதுவும் இராசராசன் காலத்தில் தேவரடியார்கள் என சொல்லப்படும் பெண்களின் நிலை பற்றி தெளிவாக சொல்ல முடியுமா ???

ஆகவே

நம் முன்னோர் பல நல்ல விடயங்களையும், சில இக்காலத்திற்கு ஒவ்வாத விடயங்களையும் செய்து இருக்கும் வரலாற்று சான்றுகள் இருக்கும் பட்சத்தில்
நல்ல விடய்ங்களை மேன்மைப் படுத்தி, ஒவ்வாத விடயங்கள் ,பிற நாடுகளில்,இன மக்க்ளில் எப்படி நடந்தது என ஒப்பீட்டுப் பார்வையில் பார்க்க்லாம்.அக்கலத்தில் பிற நாடுகளின் மேல் படை எடுத்தல்,ஆட்சியின் கீழ் கொண்டுவருதல்,செல்வம் கவர்தல் போன்றவை வீரத்தின் அடையாளம் ஆகவே கருதப் பட்டன.[ அவை இப்போது சரியாகாது]

அப்படி பார்க்கும் போது அக்காலத்தில் தமிழர்களில் பெரும்பான்மையினரால் கொண்டாடப் பட்ட, அரசன் இராசராசன் என்பதால் இப்போது போற்றாவிட்டாலும், அவருக்கு எதிரான சான்றுகள் மிக குறைவு என்பதால் தூற்றாமல் இருப்போம்!!

நன்றி!!!

viyasan said...

//அவர் பார்ப்பனர் அல்லர், பிள்ளைமார் சமூகம் போலிருக்கிறது//

மலையாளிகளுக்கு தமிழர்களைப் பிடிக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது பிள்ளைமாராக இருந்தாலென்ன, வேறு யாராக இருந்தாலென்ன, எல்லாம் ஒன்று தான். :)

viyasan said...

//சரி, உங்களைப் "பாராட்டி" ஒரு பதிவு போட்டு இருக்கேன். மறக்காமல் வந்து வாசிச்ச்ட்டு என்னை "வாழ்த்திட்டு"ப் போங்கோ!//

சகோ.வருண்,

வாழ்த்தைக் கூட கேட்டு வாங்க வேண்டிய நிலைக்கு உங்களைத் தள்ளியது யார். எப்படி இருந்த மனிதர் இப்படி ஆகிட்டாரே என்று உங்களின் அபிமானிகள் எல்லாம் துடி, துடிக்கப் போகிறார்கள். :)))

viyasan said...

///Your view is half-baked. In the West, they don’t lionise their ancient kings and worship their historical monuments, with alacrity. They have their heads firmly on their heads. ///

Mr. Kulasegaran,

They (Europeans) do lionize their Kings, protect and value their historic monuments and cathedrals built by their forefathers. They do protect and worship at their cathedrals and are proud of them. Everyone, including the people who are atheists pay special taxes to protect and restore their cathedrals and historic cities and monuments in some countries in Europe. For example German tax payers paid to restore the entire city of Dresden, including the churches to former glory. All I am saying is that, just like the Europeans and other nations around the world, the Temples and monuments built by our forefathers must be protected by all Tamils regardless of their caste and religion.


///If a monument was erected by a King in remembrance of his certain victory for which thousands and thousands of lives were killed brutally by him or his army, they preserve the monument only to remind themselves constantly of their own ancestor’s brutality.///

I beg to differ. I have never seen any Victory monument of the Kings of any country in Europe preserved to remind them of the brutality of their own ancestors towards the people of another country. I think Europeans are very proud of the bravery of their ancestors regardless of the crimes committed by them against the natives of other countries. None of the statues and monuments of Kings and explorers in Europe mention the victims of crusade, the Spanish inquisition, genocide of Africans or even the pillage and plundering of the Indian subcontinent, but all the monuments eulogize the bravery and achievements of their own kings and countrymen.


///For e.g. the Auschwitz Memorial in Poland. The Germans and Poles are not celebrating the memorial; rather, they view it a grim reminder to them as to how not to live.///

Aushwitz Memorial in Poland is not a monument built by the Native Polish kings or by the Polish people. It was a memorial built to commemorate the atrocities committed against the Jews on their soil by the invaders (Germans). Why on earth should People of Poland celebrate that curse on their land? The Jews wouldn’t celebrate it because they were the victims, obviously that memorial will remind them of the plight of their people.

Pardon my language but your example of Aushwitz really sux, we are talking about a 1000 years old king and his temples and ancient monuments, not about some memorial of the victims of concentration camps built a few decades ago. :)
///Every generation has the right to examine their past. Don’t deny it, Vyasan. Whether it is biased or prejudiced, let the historians tell us. ///

I agree every generation has the right to examine their past based on truth, but not blame the greatest king of their people for the crime committed by invaders and an alien king of another race. Every one of the king’s people has the right to question that error in judgement.

viyasan said...

/// I don’t say the blogger is absolutely correct. I have come to know about him only from you. But I don’t have the temerity to call him stupid - as you have done - w/o having the qualification myself.///

Mr. Kulasegaran,

I guess I did not elaborate enough for you to understand my point on this issue concerning Raja Raja the Great. Neither I nor that particular blogger gave any irrefutable historic evidence to our arguments because we are just blogging and not writing any thesis here. Although the fact that the Thevaradiyar were respectable members of the society and not prostitutes during the reign of Raja Raja the great can easily be proven by various articles on the net, I have to admit my post is the result of the outrage I felt after reading the negative remarks against the greatest Tamil king ever to walk on earth. I must say that I love and respect the bravery and the proud history of our forefathers, their caste is not important to me.

I believe Raja Raja the Great must be praised for his tremendous achievements and not be badmouthed, especially not by anyone born in the womb of a Tamil woman with whom our history is shared. So in my opinion, not just that blogger, but any Tamil who badmouths Raja Raja the great is a stupid person.

I think I am entitled to my opinion. For example, did you see that a blogger named Varun blabbered something about me in his blog? I am not going to argue with him because as you said before, everyone has the right to express his or her opinion. :))

வருண் said...

***I believe Raja Raja the Great must be praised for his tremendous achievements and not be badmouthed, especially not by anyone born in the womb of a Tamil woman with whom our history is shared. So in my opinion, not just that blogger, but any Tamil who badmouths Raja Raja the great is a stupid person. ***

ANY TAMIL???

Well, all I can see is as your "iq" level is too low, you dont know how to identify people's ability or intelligence. You just are living in your stupid world claiming that others are all stupid.

Suppose, I were a pandiya or a chera, and I was brought under the raja raja cholan and thugs associated with him and my women were raped by his gang, why should I appreciate him? Have you read ponniyin selvan? Have you read about nandhini/ravi varman and veerapandiyan who hated Cholas???

Go, get a new brain first. Then try analyze situations in others' perspective as well. The one you have is not working properly.

Dont you know there are Tamils who took sides with Rajbakshe and Srilankan govt to destroy our own Tamils? Are they not Tamils? Why do they betray their own community? They are traitors, fine. WHY do they do what they do?? THINK! Because they have a different perspective, and different solution which is contradicting with yours that's all.

You can not expect everyone to listen whatever you think as the "RIGHT WAY" esp with Tamils! Get that in your tiny little brain!

viyasan said...

//You can not expect everyone to listen whatever you think as the "RIGHT WAY" esp with Tamils! Get that in your tiny little brain!//

OK, have a nice day... :)))