Sunday, July 7, 2013

இளவரசன் திவ்வியாவை விட குறைந்த சாதி அல்ல.


மனுதர்மத்தின்படி சூத்திரர்களாக்கப்பட்ட தமிழர்களாகிய நாங்கள் சூத்திரர்களாகிய எங்களில் யார் உயர்ந்த சூத்திரர் என்று காட்டிக் கொள்ள முயன்றதன் விளைவு தான், தமிழர்களே தமிழர்களை அடித்துக் கொண்டு சாகும் இந்த சாதிப்பிரச்சனையாகும்.

சமக்கிருதமயமாக்கலும் தமிழ்ச்சாதிகளும்


சமக்கிருதமயமாக்கல் அல்லது  Sanskritization  என்றால் சமுதாயத்தின் அடிமட்டத்திலுள்ள சாதியினர் அல்லது சாதிக்குழுவினர் தம்மை மேல் சாதியினராகக் காட்டி கொள்வதற்காக, உயர்ந்த சாதியினரின் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடைப்பிடிப்பதுடன் தமது சாதியினரை ஏதாவது புராணக் கதைகளுடன் தொடர்பு படுத்தி, தமது மூதாதையர் அந்த புராணகாலக் கடவுளின் பரம்பரையினர், அவர்கள் நெருப்போடும், சட்டி, முட்டி, பெட்டிகளுடன் யாக குண்டத்திலிருந்து வெளிவந்ததாக அல்லது அக்கினியிலிருந்து வெளிவந்த சத்திரியர்களாக மட்டுமல்ல, மகாபாரதத்தின் கதாபாத்திரங்களின் உறவினர்களாகக் கூடக் காட்டிப் புருடா விடுவதாகும். தமிழர்களுக்கும் மகாபாரதத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்டு அவர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொள்வதல்ல என்னுடைய நோக்கம். இந்தப் புராண புருடாக்களை தமிழ்ச் சூத்திரர்கள் அனைவரும் விடுவதை தமிழ்நாட்டில் காணலாம். ஆனால் இப்படியான, சாதியை புராணக்கதைகளுடன் இணைக்கும் கற்பனை  எதுவும் இலங்கைத் தமிழர்களிடம் கிடையாது.

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் எல்லோருமே மகாபாரதத்திலும், புராணங்களிலும் தமது முன்னோர்களைத் தேடத் தொடங்கி விட்டார்கள். உதாரணமாக  வன்னியகுலசத்திரியர், தேவேந்திரகுலவேளாளர் என்பன தமிழ்ச்சாதிகளின் சமக்கிருதமயமாக்கல் முயற்சிக்கு நல்ல உதாரணங்களாகும். அதிலும் வேடிக்கை என்னவென்றால் அப்பழுக்கற்ற தமிழர்களான பறையர்கள் கூட தம்மை சாம்பவன் என்ற பிராமணனின் பரம்பரையில் வந்தவர்கள் என்று கூறிக் கொள்கிறார்களாம், என்றால் உண்மையான தமிழர்கள் யார் என்று தலையைப் பிய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தமிழ்ச் சூத்திரர்களும் தம்மை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்ளும் போட்டியில் தமிழர்களின் உண்மையான வரலாற்றையே சிதைத்து விடுவார்கள்  போல் தெரிகிறது. இதே போல் தான் யாழ்ப்பாண வெள்ளாளர்களும் புராணக்கதையை உருவாக்காமலே தம்மை சற்சூத்திரர்களாக்கி உயர்த்திக் கொண்டார்கள். இந்தப் புராணக் கதைகளும், போட்டிகளும், மனுதர்மம் தமிழினத்துக்கு இழைத்த கொடுமையை விட மோசமான பிரிவினையை உண்டாக்கி விடும் போல் தோன்றுகிறது.

வன்னியர்களை விட பறையர்கள் சாதியில் உயர்ந்தவர்கள்?


நம்பவே முடியாத புராணக்கதைகள் ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டை ஆண்ட பல்லவர்கள் வன்னியர்கள் என்று கூறுகிறார்களாம் வன்னியர் அல்லது பள்ளி சாதியினர். ஆனால் பிராமணர்கள் தமிழ் மண்ணுக்கு வருவதற்கு முன்னால் அந்தப் பல்லவர்களுக்கே குருக்களாக, கோயில்களில் பூசகர்களாக இருந்தவர்கள் பறையர் சாதியில் ஒரு பிரிவினராகிய வள்ளுவர்கள் என்கிறது Castes and Tribes of Southern India என்ற ஆங்கில நூல். அதன்படி பார்த்தால், வன்னியர்கள் பல்லவர்களைத் தமது முன்னோர்கள் என்கிறார்கள். ஆனால் அவர்களின் “முன்னோர்களான” பல்லவர்களுக்கே குருக்களாக, கோயில்களில் பூசை செய்பவர்களாக பறையர்களாகிய  வள்ளுவர்கள் இருந்திருக்கிறார்கள். முற்காலத்தில் தமிழர்கள் மத்தியில் பறையர்கள் உயர்ந்த அந்தஸ்துடன் திகழ்ந்திருக்கின்றனர். அதனால் பறையர்கள் அல்லது வள்ளுவர்கள் நிச்சயமாக வன்னியர்களை விட உயர்ந்த சாதியாகத் தானிருக்க வேண்டுமல்லவா? இந்த ஆங்கில நூலின்படி பார்த்தால் இளவரசன் திவ்வியாவை விட சாதியில் எந்த விதத்திலும் குறைந்தவனல்ல.
...The facts taken together seem to show that the Paraiyan priests (Valluvans) and therefore the Paraiyans as a race, are very ancient, that ten centuries ago they were a respectable community. If the account of the colonization by Vellalans in the eighth century A.D is historic, then it is possible that at that time the Paraiyans lost the land and that their degradation as a race began… 

Please click to enlarge... 


பிராமணர்களும் தீண்டத்தகாதவர்களே?


பிராமணர்கள் சூத்திரர்களை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைத்ததை தான் நாங்கள் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பறையர் சாதியைச் சேர்ந்தவர்கள் பிராமணர்களை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைத்திருந்தனராம். எங்கிருந்தோ வந்து அவர்களின் உயர்ந்த இடத்தைப் பிடித்தது மட்டுமன்றி, அவர்களையும், தமிழையும் தமிழர்களின் கோயிலிலிருந்து வெளியே தள்ளி, அவர்களின் மண்ணிலும் ஆதிக்கம் செலுத்தினால் கோபம் வருவது இயற்கை தானே. அவர்கள் பிராமணர்களை தீண்டத்தகாதவர்களாக கருதியதால்,அக்காலத்தில் பிராமணன் யாராவது பறையர்கள் வாழும் சேரிக்குள் நுழைந்தால் சாணியைக் கரைத்து அவனது தலையில் ஊற்றி வெளியே துரத்தி விடுவார்களாம்.

அது மட்டுமன்றி பிராமணர்களின் வருகைக்கு முன்னால்  பறையர்கள் தமிழர்கள் மத்தியில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்ததாக குறிப்பிடுகிறது Castes and Tribes of Southern India என்ற நூல். தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவர் கூட பறையர் குலத்தின் ஒரு பிரிவினராகிய வள்ளுவர் தான்.

இந்த நூலில் காணப்படும், நான் இதற்கு முன்னால் கேள்விப்பட்டிராத, உண்மைகளை இங்கு பதிவு செய்கிறேன். அதனால் எந்தவொரு "ஷத்திரியகுல" சாதிமானும் எனக்கெதிராக பாட்வா அறிவிக்க மாட்டார்களென நம்புகிறேன். :)


17 comments:

Anonymous said...

இலங்கைத் தமிழர்களிடம் (சிங்களவர்களிடமும் கூட) ஆரிய மேன்மை முனையும் கட்டுக் கதைகள் இல்லையா? இப்படி முழுச் சோற்றில் பூசணியை மறைக்கலாமா? உங்களுக்குத் தெரியவில்லை அல்லது மறைக்கின்றீர்கள்.. இணைய வெளி சகா. கொஞ்சம் கவனம் தேவை.

Anonymous said...

சமண பவுத்தக் காலத்தில் பறையன் பள்ளன் வள்ளுவன் வெள்ளாளன் புலையன் தீயன் எல்லாம் உயர் பிரிவில் இருந்தார்கள். சைவ வைணவம் அப்படியே தலைக் கீழாக்கி விட்டதும், நந்தனை கோவிலுக்குள் விடாக் கதையும் தொடரும் மெகா தொடர் எனலாம்.

viyasan said...

//இலங்கைத் தமிழர்களிடம் (சிங்களவர்களிடமும் கூட) ஆரிய மேன்மை முனையும் கட்டுக் கதைகள் இல்லையா? இப்படி முழுச் சோற்றில் பூசணியை மறைக்கலாமா? //

சிங்களவர்களிடம் தம்மை ஆரியர்களாகக் காட்டுவதற்காக சில புராணங்களுடன் அவர்களைத் தொடர்புபடுத்திய கதைகள் மகாவம்சத்தில் உண்டு. ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் இலங்கைத் தமிழர்கள் எவரும் ஏதாவது புராண சம்பந்தமான கதைகளுடன் அல்லது இலங்கைத் தமிழர்கள் புராணகாலக் கடவுளின் வழி வந்தவர்கள் என்ற மாதிரியான கதைகள் கிடையாது, அப்படி ஏதாவது உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் கேட்போம். :)

viyasan said...

//சமண பவுத்தக் காலத்தில் பறையன் பள்ளன் வள்ளுவன் வெள்ளாளன் புலையன் தீயன் எல்லாம் உயர் பிரிவில் இருந்தார்கள். சைவ வைணவம் அப்படியே தலைக் கீழாக்கி விட்டதும், நந்தனை கோவிலுக்குள் விடாக் கதையும் தொடரும் மெகா தொடர் எனலாம்.///

இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாட்டில் தமிழர்கள் ஆட்சியை இழந்து, அந்நியர்களின் ஆட்சியில் பார்ப்பன ஆதிக்கம் வளர்ந்து, இந்து மதத்தை ஆக்கிரமித்தது தான். சமண, பெளத்த காலத்தில் மட்டுமல்ல, வள்ளுவர்கள் (பறையர்கள்) தமிழர்களின் சைவக்கோயில்களிலும் குருமார்களாக இருந்துள்ளனர். உண்மையில் பார்ப்பார் என பழந்தமிழ் நூல்கள் குறிப்பிடுவது இக்காலப் பார்ப்பனர்களை அல்ல அக்கால தமிழ் பார்ப்பார்களாகிய பறையர்களைத் தான் என்றும் சிலர் ஆதாரத்துடன் வாதாடுகின்றனர். இன்றும் இலங்கையில் பல கோயில்களில் பிராமணர்கள் குருமார்களாக இல்லை. பிரபலமான கோயில்களில் கூட மீனவர்களும், வேடர்களும் தான் அர்ச்சகராக உள்ளனர்.

நந்தனை கோயிலுக்குள் விடாதது பார்ப்பனீயத்தின் மனுதர்மமே அல்லாமல், தமிழர்களின் சைவம் அல்ல. தமிழர்களின் சைவம் தான் நந்தனை அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக்கியது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் வேடரும், வெள்ளாளரும், பிராமணரும், புலையரும் அரசரும் எல்லாருமே சமமானவர்கள். அதனால் தான் கோயில்களில் அவர்களை ஒரே பீடத்தில் வைக்கின்றனர், அதை நீங்கள் எல்லா சைவக் கோயில்களிலும் காணலாம். பார்ப்பனீயத்தை குறை கூறுவதை விடுத்து, நாங்கள் சைவத்தை தமிழாக்க வேண்டும்.

Anonymous said...

மனுவை, வேதங்களை விலக்கி சைவமுண்டோ. சைவாகம்ங்கள், திருமுறைகள் பலதும் வடக்கத்திய தழுவல்கள். மனு தர்மத்தை சைவர் ஏற்றுக் கொள்கின்றனர். ஆறுமுக நாவலர் போன்றோர் இதனை உறுதி செய்யும் விதமாய் தமிழரின் நாட்டார் வழிபாடுகளை அழித்துள்ளாரே. ?

Anonymous said...

யாழ் மன்னர்கள் தம்மை கங்கை வம்சம் எனவும், ஆரியர் எனவும், யாழ் வைபவ மாலை யாழ் தமிழர்களை விஜயன், விபீசணன், பார்ப்பனரோடு பிணைக்கின்றதே? சோழர்கள் கூட தம்மை வடக்கத்திய சூரிய வம்சத்தோடு பிணைக்கும் செப்பேடுகள் உள்ளன.

viyasan said...

//மனுவை, வேதங்களை விலக்கி சைவமுண்டோ. சைவாகம்ங்கள், திருமுறைகள் பலதும் வடக்கத்திய தழுவல்கள். //

மனுவையும், வேதங்களையும் விலக்கி சைவமுண்டு. வேதங்களுக்கு இணையாகக் கொள்ளப்படுபவை தமிழ் திருமுறைகள் அதனால் தான் அவற்றை திராவிட வேதம் எனக் குறிப்பிடுவர். ஈழத்தமிழர்களின் சைவத்துக்கும், தமிழ்நாட்டின் பார்ப்பனீய சைவத்துக்குமுள்ள வேறுபாடே நாங்கள் திருமுறைகளை வேதங்களுக்கு மேலாகக் கருதுவது தான் என்று குறிப்பிட்டார் ஈழத்து தமிழரிஞர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. இவற்றை நீங்கள் விரும்பினால் இன்னொரு பதிவில் விவாதிப்போம். :)

viyasan said...

//மனு தர்மத்தை சைவர் ஏற்றுக் கொள்கின்றனர். ஆறுமுக நாவலர் போன்றோர் இதனை உறுதி செய்யும் விதமாய் தமிழரின் நாட்டார் வழிபாடுகளை அழித்துள்ளாரே?//

மனுதர்மத்தை, ஆதாவது பார்ப்பன ஆதிக்கத்தை முழுவதும் ஏற்றுக் கொள்ள முடியாததால் தான் யாழ்ப்பாண வெள்ளாளர்கள் தம்மை சற்சூத்திரர்களாக்கி பார்ப்பன ஆதிக்கத்தில் பங்கு போட்டுக் கொண்டார்கள். ஆறுமுகநாவலர் வைதீகத்தை ஆதரித்தவர், அவரால் தான் தமிழர்களின் பாரம்பரிய சைவம் இலங்கையில் வைதீக மயமாகியது. அவரது நோக்கம் கிறித்தவ பாதிரிமார்களிடமிருந்து சைவத்தைக் காப்பது, அதனால் அவர் பல்வேறு வழிபாட்ட்டு முறைகளைக் கொண்டிருந்த இலங்கைச் சைவ சித்தாந்திகளை ஒரு குடைக்குள் கொண்டு வர முனைந்தார்.

indrayavanam.blogspot.com said...

சாதி பெரிதா சிறியதா என்பத்ல்ல பிரச்சனை. காதல் அழிந்து போனதே கவலை.

viyasan said...

//யாழ் மன்னர்கள் தம்மை கங்கை வம்சம் எனவும், ஆரியர் எனவும், யாழ் வைபவ மாலை யாழ் தமிழர்களை விஜயன், விபீசணன், பார்ப்பனரோடு பிணைக்கின்றதே? சோழர்கள் கூட தம்மை வடக்கத்திய சூரிய வம்சத்தோடு பிணைக்கும் செப்பேடுகள் உள்ளன. //

நான் இதைப்பற்றி இன்னொரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன். கங்கை வம்சம், ஆரியர் என்பதெல்லாம் இடைச் செருகல்கள். யாழ்ப்பாண அரசர்களின் ஆரியச் சக்கரவர்த்தி பட்டத்துக்கு அவர்கள் ஆரியர்கள், கங்கைகரையிலிருந்து வந்தவர்கள் என்ற கருத்து அல்ல. ஆரியர் என்பதற்கு தமிழில் உயர்ந்த (Noble) என்ற கருத்தும் உண்டு.

யாழ்ப்பாண அரசை நிறுவியவன் பாண்டிய இளவரசன் என்பதை” செல்வமது ரைச்செழிய சேகரன்” என யாழ்ப்பாண கைலாயமாலை தெளிவாகக் குரிப்பிடுகிறது. பாண்டியர்கள் ஆரிய்ர்களல்ல.

யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதல் மன்னனாகவிருந்த இளவரசன் பற்றிக் குறிப்பிடும்போது, யாழ்ப்பாண வரலாறு கூறும் நூல்களில் முந்தியதாகக் கருதப்படும் கைலாயமாலை, பின்வருமாறு கூறுகிறது.

".......செல்வமது ரைச்செழிய சேகரன்செய் மாதங்கள்
மல்க வியன்மகவாய் வந்தபிரான்-கல்விநிறை
தென்ன(ன்)நிக ரான செகராசன் தென்னிலங்கை
மன்னவனா குஞ்சிங்கை ஆரியமால்...."

சூரிய வம்சம், சந்திர வம்சம் எல்லாம், சமகிருத, இராமாயண, மகாபாரத கதைகள் தமிழ் மண்ணில் வேரூன்றத் தொடங்கிய பின்னர். அரசர்களைப் புகழ்ந்து வயிற்றுப் பிழைப்புக்காக புலவர்கள் எழுதித்தள்ளியது.

http://viyaasan.blogspot.ca/2013/04/blog-post_18.html

viyasan said...

//சாதி பெரிதா சிறியதா என்பத்ல்ல பிரச்சனை. காதல் அழிந்து போனதே கவலை.//
முற்றிலும் உண்மை. அதை விட இளவரசன் அவசரப்பட்டு விட்டான் அல்லது அவனது உற்ற நண்பனே அவனிருக்குமிடத்தை காட்டிக் கொடுத்திருப்பானோ என்பதை நினைக்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது.

Anonymous said...

யாழ்ப்பாண சைவம் தனித்துவமானதாய் எனக்குப் படவில்லை, ஏனெனில் யாழ்ப்பாண சைவத்துக்கும் திருநெல்வேலி - தென்பாண்டி - நாஞ்சில் நாட்டு சைவத்துக்கும் வேறுபாடில்லை. இரண்டும் சோழர்களின் சைவத்தில் இருந்து உள்வாங்கப்பட்டவை. சோழர்கள் வாராணாசி பார்ப்பனருக்கு முன்னுரிமைக் கொடுத்தார்கள். பாண்டியர்கள் கொடுத்ததில்லை. ஆனால் எதுவானாலும் வேதங்களையும், மனு தருமத்தையும் முற்றாக விலக்கிய சைவம் ஒன்றும் நான் கண்டதில்லை. நாட்டார் வழிபாடுகள் சைவத்துள் அடங்காது.

viyasan said...

//தங்களையும், மனு தருமத்தையும் முற்றாக விலக்கிய சைவம் ஒன்றும் நான் கண்டதில்லை. நாட்டார் வழிபாடுகள் சைவத்துள் அடங்காது.//

சைவம் என்பது, யாழ்ப்பாண ஆறுமுகநாவலரின் தமிழில் சொல்வதானால், “எல்லாம் வல்ல சர்வலோகநாயகனாகிய சிவபெருமானை முழுமுதல் கடவுளாகக் கொண்டு வணங்குவது”. ஆனால் ஆகம வழியிலா அல்லது நாட்டார் வழியிலா வணங்குகிறார்கள் என்பது முக்கியமல்ல.

உங்களின் கருத்தின் படி பார்த்தால் வேதாகமங்களை அறியாத வேடரான கண்ணப்பநாயனாரும், புலையரான திருநாளைப்போவாரும், ஏன் சாதாரண தமிழ்ப்பெண் திலகவதியாரும் கூட சைவர்களில்லை, ஏனென்றால் அவர்களில் யாருக்கும் வேதாகமங்களைப் பற்றித் தெரியாது, ஆனால் அவர்கள் தான் தமிழர்களின் சைவத்தின் தூண்கள். அதனால் நாட்டார் வழிபாடும், எப்படி வழிபட்டாலும், சிவனை முழுமுதல் கடவுளாகக் கொண்டால் அவர்கள் சைவர்கள் தான்.

ஈழத்துச் சைவத்துக்கும, தமிழ்நாட்டின் திருநெல்வேலி அல்லது நாஞ்சில் நாட்டு சைவமும் முற்றிலும் வேறுபட்டது என நான் கூறவில்லை. ஆனால் ஈழத்துச் சைவத்துக்கென சில தனித்துவமான பழக்க வழக்கங்கள் உண்டு, அவை இலங்கையின், காலநிலை, அரசியல் மாற்றங்கள், குடியேற்றம் என்பவற்றால் ஏற்பட்டவை, ஈழத்துச் சைவத்தில் சிங்களவர்களின் தாக்கமும் உண்டு. சோழர்கள் இலங்கையையும் ஆண்டதால் சோழர்களிடமிருந்து சில வழக்கு முறைகள் உள்வாங்கப்பட்டிருக்கலாம். அப்படியிருந்தும் சில வேறுபாடுகள் உண்டு, அவற்றை தமிழ் நாட்டுக் கோயில்களுக்குப் போகும்போது நாங்கள் உணர்வதுண்டு. விவரமாக பின்பு பார்ப்போம்.

WebTraffic Master said...

திருவள்ளுவர் பறையர் என்பதினால் தமிழகத்தில் அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை புறக்கணித்து வருகின்றார்கள்.

WebTraffic Master said...

எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார் பறையர்
இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா?
ஏண்டா நீங்க மட்டும்தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டுமா? திருவள்ளுவர்
பறையர் என்பதினால் தமிழகத்தில், அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை
புறக்கணித்து வருகின்றார்கள்

National Employment Exchange said...

திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார், கண்ணபநாறும் பறையர் தான், பறையர்கள் தீண்டத் தகாதவர்கள் என்று யார் சொன்னது. பறையன் என்பது போர்காலங்களில் பறை அறிவிக்கும் பாணர்கள் ஆவார்கள். அரசவைகளில் ராஜ தந்திரிகலாகவும் சித்தர்களாகவும், புலவர்களாகவும் இருந்தவர்கள் என்பதிற்கு கல்வெட்டுகள் சாட்சியங்கள் இருகின்றன. திருவள்ளுவர் என்பவர் வள்ளுவர் என்கின்ற எனதில் பிறந்தவர். இந்த வள்ளுவர் என்கின்ற இனம் பறையர்களின் ஒரு பிரிவு "வள்ளுவ பறையர்கள்", இவர்கள் குலத் தொழில் ஆரூடம்,ஜோதிடம், இலக்கணம், பாடல் எழுதுவது. காமராஜர் ஆட்சி காலத்தில் நாடார்,சானார் எனப்படுகின்ற தீண்ட தகாக இனத்தினர்கள் BC ஆக கன்வெர்ட் ஆனார்கள், வள்ளுவப் பறையர் கள் BC to SC களாக கன்வெர்ட் ஆனார்கள். மன்னர்கள் ஆட்சி காலத்தில் பள்ளர்களும்,பறையர்களும் தீண்டத் தகாத இனத்தை சார்ந்தவர்கள் களாக கருதப்படவில்லை, அப்படி இருந்து இருந்தால் நந்தனார் அல்லது "திருநாளைப் போவார் நாயனார்", தமிழ் சாது , 63 நாயன்மார்களில் ஒருவராக இடம் இருந்து இருக்க மாட்டார். சான்று http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D
இந்திய திரையுலகிற்கு பெருமை தந்த இசை ஜானி இளையராஜா, இளையதளபதி ஜோசப் விஜய், நடிகர் ஜெய் , பார்த்தீபன், மியூசிக் டைரக்டர் தேவா,நேர்மையான அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் கிரானைட் குவாரி.சகாயம் அனைவரும் பறையர்களின் இனத்தினை சார்ந்தவர்கள்.

National Employment Exchange said...

திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார், கண்ணபநாறும் பறையர் தான், பறையர்கள் தீண்டத் தகாதவர்கள் என்று யார் சொன்னது. பறையன் என்பது போர்காலங்களில் பறை அறிவிக்கும் பாணர்கள் ஆவார்கள். அரசவைகளில் ராஜ தந்திரிகலாகவும் சித்தர்களாகவும், புலவர்களாகவும் இருந்தவர்கள் என்பதிற்கு கல்வெட்டுகள் சாட்சியங்கள் இருகின்றன. திருவள்ளுவர் என்பவர் வள்ளுவர் என்கின்ற எனதில் பிறந்தவர். இந்த வள்ளுவர் என்கின்ற இனம் பறையர்களின் ஒரு பிரிவு "வள்ளுவ பறையர்கள்", இவர்கள் குலத் தொழில் ஆரூடம்,ஜோதிடம், இலக்கணம், பாடல் எழுதுவது. காமராஜர் ஆட்சி காலத்தில் நாடார்,சானார் எனப்படுகின்ற தீண்ட தகாக இனத்தினர்கள் BC ஆக கன்வெர்ட் ஆனார்கள், வள்ளுவப் பறையர் கள் BC to SC களாக கன்வெர்ட் ஆனார்கள். மன்னர்கள் ஆட்சி காலத்தில் பள்ளர்களும்,பறையர்களும் தீண்டத் தகாத இனத்தை சார்ந்தவர்கள் களாக கருதப்படவில்லை, அப்படி இருந்து இருந்தால் நந்தனார் அல்லது "திருநாளைப் போவார் நாயனார்", தமிழ் சாது , 63 நாயன்மார்களில் ஒருவராக இடம் இருந்து இருக்க மாட்டார். சான்று ta.wikipedia.org/wiki/பறையர்
இந்திய திரையுலகிற்கு பெருமை தந்த இசை ஜானி இளையராஜா, இளையதளபதி ஜோசப் விஜய், நடிகர் ஜெய் , பார்த்தீபன், மியூசிக் டைரக்டர் தேவா,நேர்மையான அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் கிரானைட் குவாரி.சகாயம் அனைவரும் பறையர்களின் இனத்தினை சார்ந்தவர்கள்.