Thursday, July 4, 2013

ஈழத்தமிழர்களின் தேசிய உணவு.உலகில் பல நாடுகள் தமது நாட்டுக்கேயுரித்தான அல்லது அந்த நாட்டு மக்களின் வரலாற்றுடன் தொடர்புள்ள உணவு வகையினை தேசிய உணவாகக் கொள்வது வழக்கம். பல நாடுகளில் அதே வகையான உணவுகள் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டாலும், உள்நாட்டில் கிடைக்கப்பெறும் உணவுப் பொருட்களை பாவித்து , பாரம்பரியமாக அந்த நாட்டு மக்களால் தயாரிக்கப்படும் உணவு வகையை அந்த நாட்டின் தேசிய உணவாகக் கொள்ளலாம்.

இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றாகிய ஈழத்தமிழர்களின் தேசிய உணவு எது என்ற கேள்விக்கு ஓடியல் ((((
(பனங்கிழங்கு) கூழ் என்பது சரியான பதிலாக இருக்க முடியும். சிங்களவர்கள் பனங்கிழங்கில் கூழ் தயாரிப்பதில்லை. இன்று யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் சிங்களவர்கள் விரும்பியுண்ணும் உணவாகவும் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படும் ஒடியல் கூழ் தான் என பல சிங்களவர்களே கூறுகின்றனர். அவ்வாறே, ஈழத்திலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் சிறப்பாக நண்பர்கள் உறவினர்கள் ஒன்று கூடும் போது கூழ் தயாரித்து, கூடியிருந்து கூழை அருந்தி கலந்துரையாடுவது வழக்கம். 

தமிழீழம் முழுவதும் வடக்கிலிருந்து கிழக்கு வரை பரவி வளர்ந்து காணப்படும் பனைமரத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் உணர்வு பூர்வமான தொடர்புண்டு. போரில் கூட ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல அவர்களுடன் சேர்ந்து அவர்களின் பனைமரமும் அழிந்தது. போரில் எமது மக்களுக்கு தமிழர்களின் எதிரிகளுடன் போராட மட்டுமல்ல, தமிழர்களுக்கு பதுங்கு குழிகளை அமைத்து அவர்களைப் பாதுகாக்கவும் உதவியது ஈழத்தமிழர்களின் பனைமரம் தான். அதனால் தான் சிங்களவர்களின் அகராதியில் பனங்கொட்டைகள் என்றால் அது யாழ்ப்பாணத்தமிழர்களைக் குறிக்கும்.காணொளி:

http://www.sbs.com.au/ondemand/video/11780675853/Jaffna-koolதமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியிலும் பலவகையான கூழ் தயாரிப்பு முறைகள் உண்டு. ஆனால் பனங்கிழங்கிலிருந்து பெறப்படும் ஒடியல் மாவில், கடலுணவையும் சேர்த்து கூழ் தயாரிக்கப்படுகிறதா என்று எனக்குத் தெரியாது. ஒரு சிங்களவர் யாழ்ப்பாணத்தில்  ஒடியல் கூழை தயாரிப்பதை இந்தக் காணொளியில் காணலாம்.100g ஒடியல் மா (பனங்கிழங்கு)
200 ml தண்ணீர்
¼ cup  சம்பா அரிசி
1   இளம் பலாக்காய், பலாக்கொட்டை
2  யாழ்ப்பாண நீல நண்டு
10  புலி (Tiger) இறால்
6 சதையுள்ள மீன்
3 கணவாய்
¼  பிடி பயற்றங்காய்
300g மட்டி (விரும்பினால்)
¼ கப் முருங்கையிலை
1 தேக்கரண்டி உப்பு
1 தேக்கரண்டி மிளகு

அரைத்த மிளகாய் கூட்டு
6காய்ந்த மிளகாய்
1 தேசிக்காய்
½ தேக்கரண்டி உப்பு
1 தேக்கரண்டி மிளகு

கரைத்த புளி

1 சிறிய (தேசிக்காயளவு) உருண்டை
½ கப் தண்ணீர்


கூழ் தயாரிக்கும் முறை

அளவான பாத்திரத்தில் ஒடியல் மாவையும் நீரையும் கலந்து ஊறவிடவும். ஒடியல் மா கிடைக்காது விட்டால் அரைத்த மரவள்ளிகிழங்கையும் பயன்படுத்தலாம். (சுவை வேறுபடலாம்) குறைந்தது இரண்டு மணிநேரங்களாவது ஒடியல் மா நீரில் ஊற வேண்டும். செத்தல் மிளகாயை தேசிக்காய்ப்புளி, உப்பு மிளகுடன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.புளியை ஒரு பாத்திரத்தில் இட்டு, சிறியளவு நீர் விட்டு கட்டியாக கரைத்துக் கொள்ளவும்.  இன்னொரு பெரிய பாத்திரத்தில் இருமடங்கு தண்ணீரிட்டு கொதிக்க வைக்கவும். அதற்குள் முதலில் அரிசி, பலாக்கொட்டை என்பவற்றையும், அவை அவிந்ததும் கடலுணவுகளை இட்டு அவிய விடவும்.

ஒடியல் மாவில் மேலேயுள்ள நீரை வடித்து  விட்டு கரைசலாம் ஒடியல் மாவையும் அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைக் கலந்து, சுவைக்கேற்ப உப்பைச் சேர்த்து கூழ் அவிந்ததும் சூடாக பரிமாறவும். 5 comments:

வேகநரி said...

நல்ல சுவரசியமான தகவல்கள்.

viyasan said...

சகோ.வேகநரி,

அப்படியானால் யாழ்ப்பாணக் கூழை நீங்கள் சுவைத்ததே இல்லையா?

வேகநரி said...

ஒரு முறை யாழ்ப்பாணக் கூழை அவசியம் சுவைத்து பார்க்க வேண்டியது தான். ஆனா நான் உங்க வேறு சாப்பாடு ஒரு சிலவற்றை ரொரென்ரோ இலங்கையர் றெஸ்ருரன்ரிலேயே சாப்பிட்டிருக்கிறேன்.

viyasan said...

சகோ.வேகநரி,

Toronto வில் உள்ள ஈழத்தமிழர்களின் உணவகங்களில் கூழும் கிடைக்கலாம். நீங்கள் கனடாவில் வசிக்கிறீர்களா? கூழ் சமைப்பது மிகவும் இலகுவானது. நீங்களே முயற்சித்துப் பாருங்கள். ஒடியல் மா எல்லா இலங்கைத் தமிழர்களின் கடைகளிலும் கிடைக்கும் அல்லது அதற்குப் பதிலாக மரவள்ளிக்கிழங்கையும் பயன்படுத்தலாம்.

வேகநரி said...

இல்லை சகோ நான் பல தடவை ரொறொன்ரோ வந்திருக்கேன். தகவல்களுக்கு நன்றி.