Sunday, July 21, 2013

உண்மையில் வன்னியர்கள் அக்கினியிலிருந்து உருவானவர்களா?


தமிழ்நாட்டில் மனுதர்மத்தின் அடிப்படையில் சூத்திரர்களாகிய தமிழர்கள் சாதியடிப்படையில் ஆளுக்காள் அடிபட்டுக் கொண்டு சாவது மட்டுமன்றி, ஒவ்வொரு சாதிக்கும் ஒரு புராணக்கதையையும் இயற்றி வைத்துக் கொண்டு, ஒவ்வொரு சாதியினரும் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று பீற்றிக் கொள்கிறார்கள். 

அக்னிச் சட்டியிலிருந்து உருவாகிய அல்லது வெளிவந்த வன்னியகுல “சத்திரியர்களின்” மீது எனக்கு எந்தக் காழ்ப்புணர்வும் கிடையாது, சாதியிலும் எனக்கு நம்பிக்கையில்லை. அத்துடன் சாதியடிப்படையில் தாழ்வுமனப்பான்மை கொள்ள வேண்டிய நிலையும் எனக்குக் கிடையாது. இலங்கையில் வன்னி மரங்கள் செறிந்த வன்னிக் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்ததால் வன்னியர்கள் என்றழைக்கப்பட்ட சிங்கள/தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டில் வன்னியர்கள் என்றழைக்கப்படும் சாதிப்பிரிவினருக்கும் உள்ள தொடர்பினை அறியும் ஆர்வத்தினால் அண்மையில் நான் வாசித்த நூல்களில், இலங்கையின் புகழ்பெற்ற சரித்திரப் பேராசிரியர் Dr. K. இந்திரபாலா அவர்களின்The origin of the Tamil Vanni chieftaincies of Ceylonஎன்ற கட்டுரையும் ஒன்றாகும்.

அதில் *கல்லாடம் என்ற பழமையான தமிழ் நூலில்  பன்னிரண்டு காட்டுப் பன்றிகளை மனிதர்களாக மாற்றிய அற்புதத்தின்  விளைவாக உருவாகியவர்கள் தான் வன்னியர்கள்  என்று கூறியிருப்பதாக புலவர் P.V. சோமசுந்தரனார் உரை எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கல்லாடத்தின் படி பார்த்தால் வன்னியர்கள் உண்மையில் அக்கினியிலிருந்து உருவாகவில்லை போல் தான் தெரிகிறது.


தோழி இயற்பழித்து உரைத்தல் 
“வடமீன் கற்பின்எம் பீடுகெழு மடந்தை
பெருங்கடல் முகந்து வயிறுநிறை நெடுங்கார்
விண்திரிந்து முழங்கி வீழா தாகக்
கருவொடு வாடும் பைங்கூழ் போல
கற்புநாண் மூடிப் பழங்கண் கொள்ள
(5)
உயர்மரம் முளைத்த ஊரி போல
ஓருடல் செய்து மறுமனம் காட்டும்
மாணிழை மகளிர் வயின்வை குதலால்
கருமுகிற் கனிநிறத் தழற்கண் பிறைஎயிற்று
அரிதரு குட்டி ஆயபன் னிரண்டினை
(10)
செங்கோல் முளையிட்டு அருள்நீர் தேக்கி
கொலைகளவு என்னும் படர்களை கட்டு
தீப்படர் ஆணை வேலி கோலி
தருமப் பெரும்பயிர் உலகுபெற விளைக்கும்
நால்படை வன்னியர் ஆக்கிய பெருமான்”
(15) 
(கல்லாடர் இயற்றிய கல்லாடம்)

{II Kallatam, ed. P. V. Comacuntaranar , (Madras 1962.) v. 37, p, 302, In this Tamil work the Vanniyar are said to have been created as a result of a miraculous conversion of twelve boars into human beings. Some take this to indicate their origin as subordinates under the Calukyas whose emblem was the boar. Cf., Gnanapragasar , op, cit., p. 41.}

உண்மையில்  கல்லாடம் என்ற பழமையான தமிழ் நூலில் மேலேயுள்ள பாடல் வரிகளின் பொருள் எனக்குத் தெரியாது. ஆனால் புகழ்பெற்ற தமிழறிஞர்  புலவர் சோமசுந்தரனாரின் உரையின் படி வன்னியர்கள் பன்னிரண்டு காட்டுப்பன்றிகளிலிருந்து உருவாக்கப்பட்டவர்களெனக் குறிப்பிடுகிறார் பேராசிரியர் இந்திரபாலா. புலவர் சோமசுந்தரனாரின் தமிழறிவையும், Dr. இந்திரபாலாவின் வரலாற்று அறிவையும் எவரும் சந்தேகிக்கலாமென எனக்குப் படவில்லை. நான் படித்ததை பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவு தான்.(Don't shoot the messenger. :)) .
  
வன்னியர்கள் தாம் அக்கினியிலிருந்து வெளியே வந்ததாகவும் அதனால் தம்மை அக்னி குல சத்திரியர்கள் என்றும், வன்னியர்கள் என்ற அவர்களின் பெயர் வாகினி என்ற சமக்கிருதச் சொல்லிலிருந்து உருவாகியதாகவும் கூறுகின்றனர். மொழி ஆராய்ச்சியாளர் சுவாமி ஞானப்பிரகாசரின் கருத்துப்படி, இது பிற்காலத்தில் வன்னியர்களையும், அக்னியையும் தொடர்பு படுத்துவதற்காக சிலரால் மேற்கொண்ட வெறும் முயற்சியேயாகும்.  வன்னியர்கள் அக்னியிலிருந்து வெளியே வந்தவர்கள் என்ற அக்னி குலக்கருத்தை வெறும் பேச்சுக்காக ஏற்றுக் கொண்டாலும் கூட, அவர்களின் வன்னியர் என்ற பெயர் எதற்காக வாஹினி என்ற சொல்லிலிருந்து உருவாகியதாக கதை விட வேண்டும், அதற்குப் பதிலாக அக்னி என்ற பொதுவான பெயரின் அடிப்படையில் அக்னியர் என்றல்லவா இருக்க வேண்டும்.

5 comments:

rajasundararajan said...

மிக அருமையான கட்டுரை, ஆனால் தம்மை உயர்த்திக் காட்டவேண்டிய இழிநிலையில்தாமே இருக்கிறோம் எல்லாரும்? பாவம், வன்னியர்கள் என்ன பண்ணுவார்கள்? நாலு காசு சேர்க்க முடியாத வறுமையில் 'தம் குலப் பெண்கள் உடன்போக்கால் தம்மை உதறுகிறார்களே!' என்னும் இரங்கத்தக்க மனநிலை ஆண்கள்! அவர்களுக்காகவும் இரங்குவோம்.

//மனுதர்மத்தின் அடிப்படையில் சூத்திரர்களாகிய தமிழர்கள்// உண்மைதான், ஆனால் திராவிடர்கள் எல்லாருமே பிறவியால் க்ஷத்ரியர்கள், வேத விதிகளைக் கடைப்பிடிக்காததினால் சூத்திரர்களாகிப் போனார்கள் என்றல்லவா "மனுஸ்ம்ருதி"யில் இருக்கிறது.

viyasan said...

//பாவம், வன்னியர்கள் என்ன பண்ணுவார்கள்? அவர்களுக்காகவும் இரங்குவோம். //
திரு.ராஜசுந்தரராஜன்,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

புராணக் கதைகளை ஆதாரம் காட்டி சாதிப்பெருமை பேசுவதில் உள்ள முட்டாள் தனத்தை காட்டுவது மட்டும் தான் என்னுடைய நோக்கம். வன்னியர்கள் அக்கினியிலிருந்து வந்தார்கள் என்ற கதையை மற்றவர்கள் நம்பவேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள் ஆனால் இன்னொரு கதையோ, அதுவும் தமிழர்களின் பழமையான தமிழர்களின் நூலே, பன்றிகள் தான் வன்னியர்களாக மாற்றப்பட்டார்கள் என்கிறது என்பதிலிருந்தே இப்படியான சாதிப் பெருமை பேசி தமிழர்களைப் பிரிப்பது அடாவடித்தனம் என்பது தெளிவாகிறது. வன்னியர்களிடம் எனக்கு எந்தவித பிரச்சனையும் கிடையாது, அவர்களும் தமிழர்கள், எனக்கு சகோதரர்கள் தான். ஆனால் சாதிவெறியால் அநியாயமாகச் சாகடிக்கப்பட்ட அல்லது தற்கொலை செய்யுமளவுக்குத் தள்ளப்பட்ட தமிழன் இளவரசனின் சாவுக்குக் காரணமானவர்கள் அனைவருக்கும் கடவுள் ஒருநாள் அவர்களின் தவறை உணரவைப்பார் என முழுமையாக நம்புகிறேன்.

viyasan said...

// திராவிடர்கள் எல்லாருமே பிறவியால் க்ஷத்ரியர்கள், வேத விதிகளைக் கடைப்பிடிக்காததினால் சூத்திரர்களாகிப் போனார்கள் என்றல்லவா "மனுஸ்ம்ருதி"யில் இருக்கிறது.//

எனக்கு "மனுஸ்ம்ருதி" யைப்பற்றி அவ்வளவு தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆசையுமில்லை. திராவிடர்கள் சத்திரியர்களோ என்னமோ, தமிழரகளை சூத்திரர்களாக தான் மனுதர்மம் கணிக்கிறது என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது எல்லோரும் சூத்திரர்கள் தான் தானே? மாடுகளில மணிகட்டின மாடும், மணிகட்டாத மாடும், மாடு தான், இரண்டுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது.

வேகநரி said...

//புராணக் கதைகளை ஆதாரம் காட்டி சாதிப்பெருமை பேசுவதில் உள்ள முட்டாள் தனத்தை காட்டுவது//
பாராட்டுக்கள்.

//எனக்கு "மனுஸ்ம்ருதி" யைப்பற்றி அவ்வளவு தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆசையுமில்லை.//
என்ன சகோ இப்படி கவுத்திட்டிங்க. இந்துக்கள் என்றால் தினமும் மனுதர்மத்தை படித்து ஆண்டவனின் உத்தரவுக்கு அஞ்சி தான் ஜாதி வேறுபாடுகளை பின்பற்றுகிறார்கள் என்றல்வா மற்றவர்கள் சொல்லி கொண்டு திரியிறாங்க :)

viyasan said...

சகோ.வேகநரி,

அதில் வேடிக்கை என்னவென்றால், நானும் கடவுள் நம்பிக்கையுள்ள இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்தும் கூட, இணையத்தளங்களுக்கு வந்து, திராவிட வீரர்களின் எழுத்துக்களைப் படிக்கும் வரை "மனுஸ்ம்ருதி" என்ற ஒன்று இருப்பதே எனக்குத் தெரியாது. நான் கேள்விப்பட்டதேயில்லை.