Saturday, July 20, 2013

தமிழ்நாட்டில் சாதிவெறியால் பல நூற்றாண்டுகளாக பூட்டப்பட்டிருக்கும் கதவு?
இது உண்மையா? கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் கல்விமான்களில் ஒருவரும், தமிழ், தமிழர் வரலாறு, தமிழீழம்  போன்ற பல விடயங்களில் கட்டுரைகள் எழுதியவரும், தமிழறிஞரும் ஆர்வலருமாகிய திரு.வேலுப்பிள்ளை தங்கவேலு அவர்கள் தனது கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய நந்தனார் அல்லது திருநாளைப் போவார், தில்லையில் ஆடவல்லானின் நடனத்தைப் பார்க்கும் ஆவலோடு  சென்றிருந்த போது, தீக்குள் புகுந்து  சிவனைத் தரிசித்து சிவலோகத்தை அடைந்தார், அதாவது தேவர்கள் பூமாரி பொழிய சிவபெருமானில் ஐக்கியமானார் என்று புராணங்கள் கூறுகின்றன. அதையே மதநம்பிக்கையுள்ள கோடிக்கணக்கான சைவர்களும் நம்புகிறார்கள். அவரை இன்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றுகிறோம்.


 ஆனால் அது உண்மையல்ல என்கிறார் திரு. வேலுப்பிள்ளை தங்கவேலு.
அவரது கருத்துப்படி, தீண்டத்தகாதவராகிய திருநாளைப்போவார் சிதம்பரம் கோயிலுக்குள் நுழைய ஆசைப்பட்டது மட்டுமல்ல அங்கு நுழையவும்  துணிந்ததால் ஆத்திரம் கொண்ட சிதம்பரத்து பார்ப்பனர்கள் அல்லது  தில்லை மூவாயிரவர் அவரை உயிரோடு தீமூட்டிக் கொலை செய்தார்களாம். இப்படியான கதைகளை இவர் மட்டுமல்ல, பல பெரியாரிஸ்டுகளும், திராவிட மேடைப்பேச்சாளர்களும் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது ஓரு பெரிய விடயமல்ல.

ஆனால் நந்தனார் தில்லையில் ஆடவல்லானைத் தரிசிக்க நுழைந்த 9வது கதவு ஒரு தீண்டத்தகாதவர்  நுழைந்து தீட்டுப்பட்டதால்  இன்னும் பூட்டப்பட்டிருக்கிறதாம். இவர் கூறுவதை நம்பவே முடியவில்லை. 

தமிழ்நாட்டில் 21வது நூற்றாண்டில் சாதிவெறியின் காரணமாக ஒரு கதவு, அதுவும் பெரும்பான்மை தமிழர்கள் "கோயில்" என்று போற்றும், தமிழ் நாடு அரசின் இந்து மத அறநிலையத்துறையின் கீழ் இருக்கும்   ஆலயத்தில் பூட்டப்பட்டிருக்குமானால் அதைப் போன்ற வெட்கக்கேடு  வேறெதுவுமிருக்க முடியாது. 

இது உண்மையா என்பதை அறிய வேண்டும், உண்மையானால் இந்தக்கதவு கோலாகலமாக திறக்கப்பட வேண்டும்.இந்த விடயம் பற்றி தமிழ்நாட்டில் யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது இது திரு. தங்கவேலு அவர்களின் வெறும் கற்பனையா? 4 comments:

வேகநரி said...

நீண்ட காலமா கதவு பூட்டப்பட்டிருக்கிறது என்ற ஒன்றே எனக்கு இப்பதான் தெரியும் என்னை விடுங்க திராவிடகட்சிகாரர்களுக்கு எப்படி தெரியாம போச்சு!!!
----------------
சகோ ஒரு இலங்கை இஸ்லாமியரின் கட்டுரை படித்தேன். இலங்கைக் கல்வித் திணைக்களத்தால் 7 ஆம் தரத்துக்கான சிங்களப் பாடப்புத்தகத்தில் தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள் என்றுஅச்சிடப்பட்டுள்ளதாகவும், பொதுவாகவே தமிழச்சிகள் அழகானவர்களில்ல
ஸ்ரீதேவி அழகானவள் என்பதற்காக மட்டுமே அவளை நேசிக்கலாம்.
அழகற்ற தமிழச்சிகள் மத்தியில் ஸ்ரீதேவி தப்பிப் பிறந்தவள்.
போன்ற பல தப்பபிப்ராயங்களை சிங்கள மாணவர்களுக்குப் புகட்டுவதற்கு இவ்வரி காரணமாக அமையக் கூடும் என்று கலக்கலாக மத இன ஐக்கியத்தை பற்றி அடித்து பாடம் நடத்தினார் இஸ்லாமியர்.நானும் எனக்கு தெரிந்த இலங்கை நண்பரை எம்பா உங்க இலங்கையிலே பாடதிட்டத்திலேயெல்லாம் நடிகை பற்றி அழகு பற்றி எழுதுவாங்களா என்று கேட்டென் அப்படி இருக்காதே என்றார். சரி அப்படியே பாடதிட்டத்திலே இருந்திச்சு என்று வைத்து கொள்வோம் பாட திட்டத்தை படிச்சு சிங்கலவனே தமிழனோ இனவாதிங்களாக மாறமாட்டாங்க என்றே தெரியுது. சகோவின் இலங்கை தமிழ் முதல் அமைச்சர் பற்றிய முன்னைய கட்டுரையில் சொன்ன விக்னேஸ்வரனின் இரு பிள்ளைகளையும் சிங்கள பெண்கள் காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள். முன்பு புலிதலைவர் ஒருவர் நடராசா என்பவரின் மனைவியும் சிங்கள பெண் என்று சொன்னாங்க. மற்றும் சிங்கல ஆண்கள் பெண்கள் தமிழ் ஆண்கள் பெண்களை காதலித்து திருமணம் செய்யிறாங்க.
ஆனால்
இலங்கை இஸ்லாமிய பெண் ஒருவர் தமிழரை காலித்து இருக்கிறர். அவர் தனது தமிழ் காதலனை சந்தித்து திரும்பும் போது இஸ்லாமியர்களால் ஏமாற்றி பள்ளி வாசலுக்கு அழைத்து செல்லபட்டு பலவந்தமாக அவருக்கு தலை முடி வெட்டி துன்புறுத்தியுள்ளனர்.இப்போ அவரது தலையில் காயம் ஏற்பட்டதினால் அவர் மருத்துவ மனையிலே அனுமதிக்கபட்டுள்ளார். இது தான் அவர்கள் முறை. இலங்கை கல்கமுவ- மொன்னம்குளம் சிற்றியிலே இது நடத்திருக்கு.

viyasan said...

//நீண்ட காலமா கதவு பூட்டப்பட்டிருக்கிறது என்ற ஒன்றே எனக்கு இப்பதான் தெரியும் என்னை விடுங்க திராவிடகட்சிகாரர்களுக்கு எப்படி தெரியாம போச்சு!!!//

எந்நாளும் நம்ப முடியவில்லை, அதிர்ச்சியாக இருந்தது, அது உண்மையானால் தமிழ்நாடு அரசு தலையிட்டு, அதைத் திறந்து வைக்க வேண்டும். தீட்டுப்பட்ட கதவு என்ற காரணத்துக்காக, அந்தக் கதவு இன்றும் மூடப்படிருக்குமானால், அது இந்து தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுமுள்ள முழுத் தமிழினத்துக்கே விடுக்கப்பட்ட சவால் அது.

viyasan said...

சகோ.வேகநரி,

இலங்கையில் பாடத்திட்டத்தில் அரசாங்கத்திலுள்ள இனவாத அரசியல் வாதிகளும், பெளத்த பிக்குகளும் சேர்ந்து இனவாதத்தை தூண்டும், சிறுபான்மை மக்களை நாசூக்காக சிறுமைப்படுத்தும் விடயங்களைப் புகுத்துவது உண்மைதான். ஆனால் அதற்காக சிங்களவர்கள் எல்லோரும் தனிப்பட்ட முறையில், தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று கூறமுடியாது. தனிப்பட்ட முறையில் தமிழ்-சிங்கள உறவு முறை நன்றாகத் தானுள்ளது. அரசியல் உரிமைகள் என்று வரும்போது தான் , கூட்டாக சிங்களவர்கள் தமிழர்களுக்கெதிராக திரும்புகிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் மொழி ஒன்றாக இருந்தாலும், அவர்கள் தம்மை தமிழர்களாக நினைப்பதில்லை, மனத்தால் ஒருமைப்பாடும் கிடையாது. அவர்களின் தீவிரவாத இஸ்லாமும் தமிழர்கள் – முஸ்லீம்களும் இணைவதை அனுமதிக்காது. ஆனால் பல தமிழ்- சிங்கள கலப்பு மணங்கள் செய்தவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஏனென்றால் மத, கலாச்சார வேறுபாடுகள், தமிழ் – இலங்கை முஸ்லீம் திருமணத்துடன் ஒப்பிடும் போது இல்லை என்றே கூறலாம். ஏனென்றால் முஸ்லீமை மணக்கும் இலங்கைத் தமிழ்ப்பெண் முஸ்லீமாக மாறி, அரபுக்கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் ஆனால் அந்தப் பிரச்சனை தமிழ்-சிங்கள கலப்பு மணம் செய்பவர்களுக்குக் கிடையாது.

வேகநரி said...

//அவர்களின் தீவிரவாத இஸ்லாமும் தமிழர்கள் – முஸ்லீம்களும் இணைவதை அனுமதிக்காது.//
அது தான் உண்மை. இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள கூடியது இணைந்து வாழ்தல், அனுசரித்து செல்லுதல் எல்லாம், அவங்களுக்கு சரிபட்டுவராது .ஆக சிறபான்மையாக இருந்து தேவை ஏற்படும் போது மட்டும் மத ஐக்கியம் மதங்களுக்கிடையே ஒற்றுமை உரிமை பற்றி கதைப்பாங். பெரும்பான்மையாகிவிட்டா கபிர்கள் மீது புனித போர் தான்.
யாழ்பாணத்து பல்கழைகழகத்தில் 20 வருடத்திற்கு பின்பு முதன் முறையா நடந்த இரமதான் விழா பற்றிய படங்கள் நண்பர் மெயில் பண்ணியிருந்தார். வாவ்! அரேபிய அடிமைபெண் உடையில் பெண்கள் அரபி அடிமைகளாக. அரபு பாஷையில் எழுத்துக்கள், தமிழே இல்லை. 20 வருடத்திற்கு பின்பு வந்த ஓப்பினிங்கே இப்படியென்றால் :(