Tuesday, July 16, 2013

தமிழ் –முஸ்லீம் ஒற்றுமையை நாடும் நீதியரசர் விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு?

இலங்கையின் உச்ச நீதிமன்ற (Supreme Court) முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டணியின் (Tamil National Alliance) சார்பில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் நீதிக் கட்டமைப்பின் உச்ச நீதிமன்ற நீதியரசர்களில் ஒருவராக விளங்கிய விக்னேஸ்வரன் சலுகைகளுக்காக வளைந்து கொடுக்காதவர் என்பதும், தனது கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவர் எனவும் கருதப்படுகிறார். ஆனால் நீதியரசர் விக்னேஸ்வரன்  முதலமைச்சராவதையே இந்தியாவும் விரும்புவதாக பரவலாக பேசப்படுகிறது.

தமிழ்த் தேசியம், மொழி, மரபு, மண் காக்கப்பட வேண்டும் என்கிற கருத்தியலை அடிக்கடி பொது மேடைகளில் விதைத்து வந்தவரது அரசியல் வரவை பல தளத்திலிருக்கிறவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். குறிப்பாக, இளையோர்களிடமும் அறிவுப்பிழைப்பாளர்களிடமும் புதிய ஆளுமை மிக்க தலைமைபற்றிய எதிர்பார்ப்புக் கூடுதலாக இருந்தது. அதனை, அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எல்லாத் தரப்பிலும் உள்ளது.
பன்னாட்டு மட்டத்தில் வெளிநாட்டு அரசியல் தலைவர்களைஇராசதந்திரிகளை, ஊடகத்துறையினரை சந்தித்து அறிவுபூர்வமாக உரையாடும் திறமை நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களுடன் உண்டு. அதற்கான சட்ட அறிவு, மும்மொழிப் புலமை, கண்ணோட்டம், ஆளுமை முதலியன அவரிடம் நிறைய இருக்கிறது.



ஈழத்தமிழர்களுக்கிடையே ஒற்றுமை நிலை நிறுத்தப்பட்டால் தான் தமிழ்மக்களுக்கு விடிவுகாலம் வருமென்பதை அடிக்கடி வலியுறுத்தும் நீதியரசர் விக்னேஸ்வரன், தமிழ் – முஸ்லீம்களின் ஒற்றுமையையும் வலியுறுத்தி வருவதுடன், பல முஸ்லீம் தலைவர்களுடன் நட்புறவையும், முஸ்லீம்களின் நன்மதிப்பையும் கொண்டவர்.

முஸ்லீம் தலைவர்களில் ஒருவரும், அவரது நண்பருமாகிய மசூர் மெளலானாவின் எண்பதாவது அகவை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய விக்னேஸ்வரன் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு கூட்டமைப்பில் இணைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டவர். அவரது அந்தப் பேச்சை இங்கே காணலாம்.http://viyaasan.blogspot.ca/2013/02/blog-post_26.html

“நான் இங்கு அரசியல் பேசப்போவதில்லை. ஆனால் சாதாரண தமிழ் பேசும் குடிமகன் என்ற விதத்தில் கிழக்கில் நடந்தவை எனக்கு வேதனை அளித்தது. இனிமேலும் கட்சிகளை நம்பி மோசம் போகாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஒரு முஸ்லீம் பிரிவை அமைக்க இங்கிருக்கும் திரு. சம்பந்தன் அவர்கள் கரிசனை காட்ட வேண்டும் என்று விருப்பபடுகிறேன். 
எவ்வாறு மசூர் போன்றவர்கள் தந்தை செல்வாவுக்குத் துணை நின்றார்களோ அது போன்று திரு.சம்பந்தன் அவர்களும் தமிழ் ஆர்வங்கொண்ட முஸ்லீம் இளைஞர்களை தம்முடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆயிரமாயிரம் மசூர் மெளலானாக்கள் திரு.சம்பந்தனை நாடிவந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்.
 தமிழரசுக்கட்சி என்ற பெயருக்கு மாணவர்களாக இருந்த போது நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம் என்று சற்று முன் கூறினேன். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சிப் பெயர் தமிழர்களையும் முஸ்லீம்களையும் ஒன்றிணைக்கும் ஒரு பெயராக அமைந்திருப்பதை நாங்கள் எல்லோரும் அவதானிக்க வேண்டும்.
அது தமிழர் தேசியக் கூட்டமைப்பு அல்ல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த்தேசியமும் முஸ்லீம் தேசியமும் ஒருங்கிணைந்து கடமையாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆவன செய்ய வேண்டும்.”

நீதியரசர் விக்னேஸ்வரனின் தமிழ்பேசும் மக்களை ஒருங்கிணைக்கும் எண்ணத்தை முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது அவரது முதுகிலும் குத்துவார்களா என்பதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும். ஆனால் வடமாகாண முதலமைச்சராவதற்கு அவருக்கு முஸ்லீம்களின் வாக்குகள் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது தாய்வழி பூர்வீகம் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், தந்தைவழி கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை. அதனால் வடக்கையும், கிழக்கையும் இணைக்கும் அடையாளமாகத் திகழ்ந்தாலும் கூட, இலங்கை அரசாங்கத்தின் சேவகராக, உச்ச நீதிமன்ற நீதியரசராக இருந்து, கொழும்பில் வாழ்ந்த விக்னேஸ்வரன் வடமாகாணத்தில் தமிழர்கள் போரில் பட்ட துன்பங்கள், துயரங்களை அறியாதவர், அவர் சிங்கள அரசின் எடுபிடியாகச் செயல்படுவார் என்ற கருத்து சில ஈழத்தமிழர்களிடம் உண்டு.

ஆனால் 2001ம ஆண்டில் அவர் இலங்கையின் உச்சநீதிமன்ற நீதியரசராக அறிவிக்கப்பட்டு அதை ஏற்றுக்கொள்ளும் அவரது பேச்சிலேயே (Acceptance Speech) தனது முதல் அடையாளம் தமிழன் என்பதையும், தனது தனித்துவத்தை இழக்க மாட்டேன் என்பதையும் காட்டியவர். அதற்கு பல சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகைகளில் எழுதினர் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் பொது வேட்பாளராக தன்னை அறிவித்ததால், வட மாகாணத்துக்கான முதல்வர் பதவிக்கான, கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் ஒப்புதல் அளித்து விட்டதாக, இலங்கை உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். 
 அரசியலுக்கு வெளியில் இருந்து வந்தாலும், தான் அரசியலை தீவிரமாக அவதானித்து வந்தவர் என்ற வகையில், இந்த அரசியல் பிரவேசம் பெரிய சவாலாக இருக்காது என்று நம்புவதாகவும் அவர் தமிழோசையிடம் கூறினார். 
மேலும், தமிழ் அரசியலில், முன்பு இருந்த பொன்னம்பலம், ராமனாதன், அருணாசலம், செல்வநாயகம் போன்ற தலைவர்களும் கொழும்பில் சட்டப்பணியாற்றி யாழ்ப்பாண அரசியலுக்கு வந்தவர்கள் என்பதையும், வந்த பின்னர் அவர்கள் சாதாரண மக்களின் சுக துக்கங்களில் பங்கேற்றுக்கொண்டனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 
இலங்கையில் நீதித்துறை அரசியல் மயமாகிறது என்ற குற்றச்சாட்டை, இவரது அரசியல் பிரவேசமும் வலுவாக்குமா என்று கேட்டதற்கு, தான் நீதித்துறையிலிருந்து ஓய்வு பெற்று சுமார் பத்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இது போன்ற குற்றச்சாட்டுக்கு இடமில்லை என்றும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி சிந்தித்து நடவடிக்கை எடுப்பது, நீதித்துறையின் சுயாதீனத்தை பாதிக்காது என்றார் அவர். 
வட மாகாணத்தில் நடக்கவிருக்கும் இந்த தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல், 13வது அரசியல் சட்டப்பிரச்சினைகள், அதற்கு மேலும் தமிழ் மக்களுக்கு தேவைப்படும் அரசியல் உரிமைகள் குறித்த சட்டப் பிரச்சினைகள் போன்றவற்றை கையாள்வதற்கு விக்னேஸ்வரன் போன்ற நீதித்துறை மற்றும் சட்ட வல்லமை பெற்றவரின் அனுபவம் பயன்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார். 
கூட்டமைப்பில் உட்கட்சிப் பிரச்சினைகளை மறைக்க கூட்டமைப்புக்கு வெளியேயிருந்து இவரை நியமித்ததாக கருத்து நிலவுவது சரியல்ல என்றும் அவர் கூறினார். 
வட மாகாணத்தின் சனத்தொகை:

**source: Department of Census & Statistics, Sri Lanka)

(** இலங்கையின் வரலாற்றில் வடக்கில் 100,000 முஸ்லிம்கள் ஒரு போதும் வாழ்ந்ததில்லை. ஆனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டும் வெளியேற்றப்பட்டதாக எந்தளவுக்கு பொய்ப்பிரச்சாரம் நடந்தது என்பதை இங்கு குறிப்பிடாமலிருக்க முடியவில்லை)



Justice Vigneswaran's Acceptance Speech 2001.

S.C Judge says Tamil rights were snatched away - 08 March 2001


`The vast majority of the denizens of the north and east seek the restoration of their rights and not devolution of power. These are the rights which were snatched away from them by virtue of a mathematical innovation where the majority in the two provinces were added to the majority in the seven provinces and thus made a minority in the nine provinces` said Justice C.V Vigneswaran in his ceremonial acceptance speech Wednesday on being appointed as judge to Sri Lanka`s Supreme Court.


`As a Tamil speaking citizen, if I do not use my mother's  tongue, I will soon be forced to use my brother`s tongue. The sterile and impotent provisions now appearing in our constitution have little meaning to the Tamil-speaking people of the northern and eastern provinces. They need to govern themselves in their own language with little interference from outside,` the newly appointed supreme court judge said.


The following are excerpts from Justice C.V Vigneswaran`s acceptance speech Wednesday.

`I have always referred to an incident that used to happen when we were marble playing youngsters in school. Some of our seniors who were not prefects would pounce upon us suddenly and illegally confiscate all our marbles. When we protested they would keep 90 percent of the marbles and offer us 10 percent and thereafter progressively increase it to 20 percent, forgetting that all the marbles were ours and the seniors had no right to confiscate in the first instance`

`The majority of those in the northern and eastern provinces were always Tamil speaking until independence and their language, religions -mainly Islamic, Christian and Hindu- culture, and customs and ways of life within the special topographical and climatic environment should have been allowed to blossom and flourish without interference after independence.`

[Sri Lanka, then Ceylon, got independence from the British in 1948.]

`Even though the Attorney General and I are today in our respective honoured positions, we cannot forget that two sparrows do not make a summer. In fact, there are many more sparrows in high positions due to their intrinsic worth in almost every field during the middle of the last century. But we are today progressively depleting in numbers in this part of the island and like the burghers we too would soon be hardly heard of in judicial, legal or government service or even in the private sector. It is a sad reflection of our times that after me there had not been a single Tamil speaking president of the Law Students` Union of the Sri Lanka Law College after 1962.`

[Sri Lanka`s Attorney General K. C Kamalasabayson, like justice Vigneswaran , is an ethnic Tamil.]

`I am one of the few still living among those who organised for the Congress of Religions in 1956 or thereabouts, the visit of the then Mahanayaka Thero of the Malwatte Chapter to Jaffna. It was a relative of my mother, Sir Ponnambalam Ramanathan, who risked his life to travel to England to place the case of the Sinhala Buddhists before the Queen in the early part of the last century.`

`Often today we miss the wood for the trees when we wax eloquently about the teachings of the Great Masters in mesmerising language, forgetting the spirit of their teachings and failing to imbibe them in our lives. Otherwise, how do we account for the echoing of war drums and hatred from the portals of love and religion?`

`An original court judge cannot under the present system of nominations to the higher judiciary ever hope to occupy the highest office in the judiciary except due to the condescending discretion of the executive (the President of Sri Lanka). Therefore I must feel that the acme of my career has arrived today, that I cannot aspire for anything more but to fade away with time into oblivion.`

[Sri Lanka`s executive President can nominate Chief Justice at her/his sole discretion. Sri Lanka`s present Chief Justice Sarath Silva was appointed amidst opposition from the press and the bar and widely publicised allegations that he was guilty of abuse of power and corruption when he was the Attorney General of the country. Some human rights activists and lawyers allege that he deliberately dismisses Fundamental Rights cases by Tamils arrested, tortured and detained by Sri Lankan security forces. Lawyer/Columnist Mr. Rajpal Abeyanayaka filed a Fundamental Rights case that against Chief Justice Sarath Silva`s nomination. The case is pending in the Supreme Court. ]

`Whether the Tamil language is spoken and preserved in other countries is irrelevant. The Sri Lankan Tamils need to develop their language and culture peculiar to themselves in their country`.

`It is because I love this country and all its people, including those who hate me for what I am, that I take this opportunity to say- not for my sake, not for the sake of the Tamil people, but for the sake of cordial relationship among all the communities in this island of ours, for good governance and a progressive future - that unless we recognise that the Tamil language and culture are to the Tamils what the Sinhala language and culture are to the Sinhalese And therefore make Tamil the dominant language of the northern and eastern provinces requiring the study of it compulsory for all in those two provinces just as Sinhala is recognise as the dominant language of the other seven provinces, with English as the link language between equals, the wrong done by enthroning one language in 1956 can never be erased the havoc caused by the deletion of Article 29 (2) of the 1947 constitution and the doctrine of utra vires from subsequent constitutions can never be put right the feelings of the Tamils wounded inter alia by the 1958, 1977 and 1983 riots can never be assuaged`.

[Article 29 (2) of independent Sri Lanka`s (then Ceylon) first constitution barred the Ceylon Parliament from enacting discriminatory legislation against a particular ethnic or religious group to which all other groups were not subjected. Sinhala Buddhist pressure groups campaigned persistently for the removal of this article. It was eventually repealed in 1972 and was replaced by an Article entrenching the foremost place and state patronage for Buddhism.]


2 comments:

நிரஞ்சன் தம்பி said...

உலக சமூகங்களும், உலகத் தமிழர்களும் வட தமிழ் மாகாண தேர்தலை உற்றுக் கவனித்து இருக்கின்றனர். தனி நாடு என்ற சாத்தியமற்றக் கோரிக்கையில் இருந்து தமிழர்கள் இறங்கி வந்துள்ளமை நல்லதே, சிங்கள பகுதியும் சிங்கள - பவுத்தம் என்ற நிலையில் இருந்து அனைத்து மக்களுக்குமான நாடு, வடக்கு மாகாணத்துக்கு சுயாட்சி என்ற எண்ணத்தில் இணையும் போது, இலங்கையில் புது வசந்தம் பிறக்கும்.

viyasan said...

//தனி நாடு என்ற சாத்தியமற்றக் கோரிக்கையில் இருந்து தமிழர்கள் இறங்கி வந்துள்ளமை நல்லதே,//

தமிழீழம், உலகில் தமிழர்களுக்கென ஒரு நாடு உருவாக வேண்டும் என்பது, ஈழத்தமிழர்களின் கனவு, அது ஒருநாள் நிறைவேறுமென்று நம்புவோம். மீண்டுமொரு ஆயுதப்போராட்டம் என்பது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆனால் நாங்கள் எங்களின் தமிழீழக் கனவிலேயே இருந்தால் கண் விழித்துப் பார்க்கும் போது தமிழர்களின் ஊர்களிலும் வீடுகளிலும் சிங்களவர்கள் வசிப்பார்கள். அது தான் நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்காது விட்டால் தமிழீழத்தைக் கனவிலும் நினைக்க முடியாது. அந்த சிங்களக் குடியேற்றத்தை எப்படியாவது நிறுத்தி தமிழ் மண்ணைக் காக்க வேண்டும் அது தான் இப்பொழுது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத்தமிழர்கள் அனைவரும் தாம் வாழும் நாடுகளின் அரசுகளின் உதவியுடன்,தலையிட்டுத் தீர்க்க வேண்டிய முக்கிய பிரச்சனை.