Tuesday, July 2, 2013

"பெண்களின் முகத்தையும், கையையும் கண்டதும் காமம் வெளிப்படுவது மனநோயாளிகளுக்கே தவிர சாதாரண மனிதர்களுக்கல்ல"




முஸ்லீம் பெண்களின் புர்கா, நிகாப் இலங்கையின் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் என்ற தலைப்பில் இலங்கை முஸ்லீம் அரசியல்வாதி முகம்மது முசம்மில் லங்காதீப சிங்கள பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது


முஸ்லீம் அல்லாதவர்கள் மட்டும் பேசி வந்த ஒரு விடயத்தை, அதாவது தமிழ் பேசும் முஸ்லீம்களின் அரபுமயமாக்கல் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்பதை துணிச்சலுடன் கூறுகின்ற , இலங்கை முஸ்லீம்களின்  இளைய தலைமுறை அரசியல்வாதி ஜனாப். முகம்மது முசம்மில் அவர்களின் கருத்து மற்றவர்களையும் போய்ச்சேர வேண்டும் என்பதால் இங்கு மீள்பதிவு செய்கிறேன். 
"இவர்கள் இஸ்லாத்தைக் காட்டி இந்த புர்காவை (கோணி பில்லா உடையை) வலியுறுத்துவதற்காக முன்வைக்கும் பிரதான காரணம் “ஆண்களின் காம இச்சையிலிருந்து பெண்களை பாதுகாப்பது” என்பதாகும்.  பெண்களின் முகத்தையும், கையையும் கண்டதும் காமம் வெளிப்படுவது மனநோயாளிகளுக்கல்லாமல் சாதாரண மனிதர்களுக்கல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ."  
- முஹம்மது முசம்மில். M.P -
                                                    
இனங்களுக்கிடையில் வேற்றுமையை உண்டு பண்ணக்கூடிய தேவைக்குதவாத சமூக தனித்துவத்தை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தும் *கோணிபில்லா (புர்க்கா/நிகாப்) முறை இந்நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளதுடன் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் வீணான சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடியதுமாகும். என்று தேசிய விடுதலை முன்னணி ஊடக பேச்சாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம் முசம்மில் தெரிவித்துள்ளார்.

(*கோணி– சிங்களத்தில் சாக்கு அல்லது பை(Sack), பில்லா - பேய் அல்லது பிசாசு -- கோணிபில்லா (சிங்களம்) - சாக்கு போர்த்திய பேய்(Ghost in a Sack) - புர்க்காநிகாப் அணிந்தவர்கள்)

30 June 2013 இல் லங்காதீப என்ற சிங்கள பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ள கட்டுரையொன்றில் மேற்படி கருத்து கூறியுள்ள அவர் தொடர்ந்து குறிபபிடுகையில்.-

                                                                   
“இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த முஸ்லீம்களின் கலாசாரமானது இந்து கலாச்சாரத்தை அடியொட்டிய முஸ்லீம் கலாச்சாரமாக இருந்து வந்துள்ளது. இந்த நாட்டு முஸ்லீம்கள் விளக்கேற்றும் பழக்கத்தைக் கொண்டிருப்பதை இதற்கான உதாரணமாகக் காட்டலாம். சுமார் 700 வருடகால வரலாற்றைக் கொண்ட இந்நாட்டு முஸ்லீம்கள் ஆரம்பகாலம் தொட்டே இந்நாட்டின் சிங்கள பாரம்பரிய கலாச்சரத்தை அடியோட்டியே தமது முஸ்லீம் கலாச்சார தனித்துவத்தை பேணி வந்துள்ளார்கள். இந்த கலாச்சார முறையானது சிங்கள – முஸ்லீம் இன ஒற்றுமைக்கும் முன்னுதாரணமாக இருந்துள்ளது. இந்த நிலைமை இலங்கை முஸ்லீம்களின் ஆடை விடயத்திலும் பிரதிபலித்துள்ளது.
Picture from Google
அக்கால முஸ்லீம்கள் தமது கலாச்சார உடையை அடையாளப்படுத்த, சிங்கள மக்களின் கலாச்சரா உடையில் முஸ்லீம் கலாச்சார அடையாளங்களை உட்படுத்தியுள்ளார்கள். அக்காலம் தொட்டே முஸ்லீம் பெண்கள் மத்தியில் “சாரி” அணியும் பழக்கம் பிரபலமாக இருந்துள்ளது. அந்த ஆடைமுறையால் இந்தநாட்டு சிங்கள சமுக கலாச்சாரத்துடன் ஒன்றிப்போகக் கூடிய சந்தர்ப்பமும் கிடைத்தது. அதே வேளை முஸ்லீம்களின் தனித்துவத்தை அடையாளப்படுத்த சாரியின் ஒரு பகுதியால் தமது தலையையும் மறைத்துக் கொண்டார்கள். அதே போல் முஸ்லீம் யுவதிகளுக்கு மத்தியில் சல்வார், கமீஸ் மிகபிரபலமான ஆடையாக இருந்தது, அதன் முந்தானையால் தமது தலையை மூடுவதால் அவர்கள் இஸ்லாமிய தனித்த்துவத்தையும் பேணி வந்தார்கள்.


பிற்காலத்தில் 1980/90 களுக்குப் பிறகு மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தொழில் வாய்ப்புகளால் இந்நாட்டு முஸ்லீம்களுக்கு மத்தியில் சவூதி அரேபிய ஆடை முறை தீவிரமாக பரவியது. பெண்களுக்கு மத்தியில் கருப்பு ஜிப்பா முறையும், ஆண்களுக்கு மத்தியில் வெள்ளை ஜிப்பா முறையும் ஆக்கிரமிப்பு பாணியில் மிகத்தீவிரமாக, அணு அணுவாக பின்பற்ற தொடங்கினார்கள். இந்தஆடைமுறை நம் நாட்டில் பரவ ஆரம்பித்ததால் இன்று மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

இனங்களுக்கு மத்தியிலோ சமயங்களுக்கு மத்தியில் பிளவுகளை, வேற்றுமைகளை மேலோங்க செய்வதை விட ஒற்றுமையை வளர்ப்பத்தையே ஊக்குவிக்க வேண்டும்.  தற்காலத்தில் இந்நாட்டில் வாழும் மொத்த முஸ்லீம் சனத்தொகையில் இரண்டு அல்லது மூன்று சதவீதத்தினரால் பின்பற்றப்படும்  இம்மத்திய கிழக்கு ஆடைமுறையால் பெரும்பான்மை முஸ்லீம்களுக்கும் அநீதி இழைக்கபட்டுள்ளது.  அனாவசியமான முறையில், தேவைக்கு அதிகமாக தமது தனித்துவத்தை வெளிக்காட்ட இவர்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு பாணியிலான இவர்களின் இந்நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவும் உள்ளது.

இவர்கள் இஸ்லாத்தைக் காட்டி இந்த புர்காவை (கோணி பில்லா உடையை) வலியுறுத்துவதற்காக முன்வைக்கும் பிரதான காரணம் “ஆண்களின் காம இச்சையிலிருந்து பெண்களை பாதுகாப்பது” என்பதாகும்.  பெண்களின் முகத்த்தையும், கையையும் கண்டதும் காமம் வெளிப்படுவது மனநோயாளிகளுக்கல்லாமல் சாதாரண மனிதர்களுக்கல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 







நன்றி: Jaffnamuslims.com

5 comments:

நிரஞ்சன் தம்பி said...

மிகவும் அருமையான பதிவு. இஸ்லாமில் புர்க்கா போடுங்கள் என குரானில் கூறியதில்லை. ஆனால் இஸ்லாமியவாதிகள் இல்லாததையும் பொல்லாததையும் கூறி மக்களை மண்ணின் மைந்தர்களில் இருந்து பிரிக்கப்பார்க்கின்றனர். இத்தகையை கொடுமைகளை கண்டும் காணாமல் இருக்கும் முஸ்லிம்கள் மத்தியில் முசம்மில் போன்றோரின் நேர்மையான வெளிப்படையான பேச்சு பாராட்டத்தக்கது.

வேகநரி said...

//பெண்களின் முகத்தையும்,கையையும் கண்டதும் காமம் வெளிப்படுவது மனநோயாளிகளுக்கல்லாமல் சாதாரண மனிதர்களுக்கல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ."
முஹம்மது முசம்மில் எம்பி//

வாவ்! இவ்வளவு முற்போக்காக உண்மை பேச கூடிய இஸ்லாமியரா! அவருக்கு தலைவணங்குகிறேன். இந்த பயனுள்ள கட்டுரையை சிங்கலத்திலிருந்து தமிழில் தந்ததிற்கு நன்றி சகோ. நான் இதை நண்பர்களுக்கு மெயில் செய்வேன். உங்க இன்னொரு கட்டுரை மூலமே கனடா muslim காங்கிரஸ் பர்தாவுக்கு தடை விதிக்க கேட்ட தகவல் அறித்தேன். பாகிஸ்தான் அல்ஜீரியா பெண்கலெல்லாம் எவ்வளவு மாடர்னாக வெளிநாடுகளில் இருக்கிறார்கள்.ஆப்கான் பெண்கள் கூட. ஆனா தமிழகத்தில் மதத்தின் பெயரால் அரபுமயமாக்கலுக்காக பெண்களை பர்தா புர்கா போடும்படி கொடுமைபடுத்துவது, துன்புறுத்துவது கொடுமையிலும் கொடுமை.இலங்கையிலும் தான்.

viyasan said...

@நிரஞ்சன்,

அரபுக்களின் உடைகளை, கலாச்சாரத்தை தான் உலகின் முஸ்லீம்கள் அனைவரும் கடைப்பிடக்க வேண்டுமென குர்ஆனில் சொல்லப்படவில்லை. ஆண்களும் பெண்களும் அடக்கமான உடை அணிய வேண்டுமென்பது தான் இஸ்லாத்தின் போதனை. இந்த அரபுமயமாக்கல் வகாபிகளின் வேலை. சவூதி அரேபியாவுக்குப் பெருமளவில் தமிழ் முஸ்லீம்கள் போவதற்கு முன்பாக, வகாபி இஸ்லாம் தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காலூன்ற முன்பு வாழ்ந்த தமிழ் முஸ்லீம் பெண்கள் இந்த கோணிபில்லா உடை அணியவில்லை, அப்படியானால் அவர்கள் உண்மையான முஸ்லீம்கள் இல்லையா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. இந்த அரபுமயமாக்கல், தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையில் ஒரு நிரந்தரமான, கலாச்சார இடைவெளியை ஏற்படுத்தி, இலங்கையில் – தமிழ் முஸ்லீம்கள் பிளவுபட்டு நிற்பது போன்றதொரு நிலையை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

viyasan said...

//வாவ்! இவ்வளவு முற்போக்காக உண்மை பேச கூடிய இஸ்லாமியரா//

உண்மையில் இலங்கை முஸ்லீம்கள் படித்த முற்போக்கு கொள்கை கொண்டவர்கள். ஆனால் வஹாபியிசம் அவர்களின் மத்தியிலும் வேரூன்ற தொடங்கியதால் வந்த வினை தான் இது. முகம்மது முசம்மில், ஆளும்கட்சியின் ஆதரவாளர். சிங்கள மக்களின் ஆதரவில்லாமல் அவரால் அரசியல் நடத்த முடியாது. அதனால் தான் இவ்வளவு வெளிப்படையாக பேசியிருக்கிறார். இருந்தாலும் இவ்வளவு துணிச்சலாக தனது கருத்தை தெரிவித்தமைக்கு அவரை எல்லோரும் பாராட்டத்தான் தான் வேண்டும்.

வேகநரி said...

சகோ நீங்களும் இந்த செய்தி படித்திருப்பீர்கள்.சிரியாவில் அஸாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடும் இஸ்லாமியர்கள் பெண்கள் நாகரிகமான,விருப்பமான உடை அணிய கூடாது,மேக்கப் போட கூடாது என்று உத்தரவு போட்டுள்ளாங்க.
http://blogs.reuters.com/faithworld/2013/07/01/islamists-in-syrias-aleppo-ban-provocative-dress-for-women/
இனி பெண்கள் தலை கை கால் எல்லாம் சுத்தி கட்டிக்கிட்டு தான் வெளியே வரலாம் .கடவுள் உத்தரவுக்கு கீழ்படிய வேண்டும் என்றும் மிட்டியுள்ளாங்க. இவங்க கடவுள் எதற்காக எப்போதும் பெண்கள் மீது கடும் கோவம் கோவமாயயிருக்கிறார்:)
இதில் இன்னொரு கொடுமை என்னன்னா அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகள் இந்த மதவாதிகளுக்கு தான் உதவி செய்கின்றன, அஸாத்தின் ஆட்சியை அகற்றி இவர்களை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கு. எல்லாம் சுயநலம்.

என்ன கொடுமை எல்லாம் இது:(
http://articles.timesofindia.indiatimes.com/2013-07-03/pakistan/40350999_1_dead-body-graveyard-punjab-province