Saturday, June 15, 2013

ஈழத்தமிழர்களின் இனிய சகோதரன் மணிவண்ணனுக்கு அஞ்சலி

ஈழத்தமிழர்களுக்கு உண்மையான அன்புடனும் தமிழுணர்வுடனும் ஆதரவளித்தவரும் தமிழீழக் கனவுடன் சாவினைத் தழுவிய ஆயிரமாயிரம் தமிழர்களில் ஒருவருமாகிய அண்ணன் மணிவண்ணன் நினைவாக இந்தப் பாடலைச் சமர்ப்பிக்கிறேன். ஏனென்றால் "வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு", என ஈழத்தமிழர்கள்  அவலக் குரலெழுப்பியதைக்  கேட்டுப் பதறிய தமிழ்நாட்டுத் தமிழர்களில் அவருக்கு முதலிடம் உண்டு. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.



தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளர் 
ஆரம்பக் காலங்களில் திமுக அபிமானியாக இருந்த மணிவண்ணன், பின்னர் வைகோ மதிமுகவை தொடங்கிய போது அவருக்கு ஆதரவளித்தார்.  தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளரான மணிவண்ணன், முள்ளிவாய்க்கால இறுதிப்போருக்கு பின்னர், சீமானின் நாம் தமிழர் கட்சி மேடைகளில் முழங்கி வந்தார். மேலும் பல்வேறு ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களிலும் பங்கேற்று வந்தார்.
என் சடலத்தின் மீது புலிக்கொடி போர்த்த வேண்டும்! 
- மணிவண்ணனின் கடைசி ஆசை

கோவையை சேர்ந்தவர் 
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். அந்த மண்ணுக்கே உரிய நக்கல், நையாண்டி மணிவண்ணனிடம் தூக்கலாக காணப்படும்.  நடிகர் சத்யராஜ் உடன் இணைந்த அமைதிப்படை, மணிவண்ணனின் திரையுலக வாழ்வில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.இப்படத்தின் விழா ஒன்றில் பேசிய மணிவண்ணன், ‘’நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன். 



தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன். என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொண்டு ஓடி வருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக்கூடாது.
என் உடம்பை சீமானிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும். என் சடலத்தின் மீது விடுதலைப்புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை’’ என்று கூறினார்.  



No comments: