Monday, May 6, 2013

இலங்கை முஸ்லிம்கள் அரபு வம்சாவளியினரல்ல, தாழ்த்தப்பட்ட தமிழர்களே!ஈழத் தமிழர்களின் இணையற்ற தலைவர் சேர் பொன்னம்பலம்  இராமநாதன் அவர்கள் 1885 இலேயே  இலங்கையில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் தமிழர்களே, தமிழர்கள்  எவ்வாறு இந்துக்களாகவும், கிறித்தவர்களாகவும் உள்ளார்களோ அது போன்றே முஸ்லீம்களும் தமிழர்களே, அவர்களின் மார்க்கம் தான் இஸ்லாம் என்று வாதாடி இலங்கை முஸ்லீம்களைத் தமிழர் என்ற ஒரு குடையின் கீழ் அரவணைக்க முயன்றவர். ஆனால் அன்றைய இலங்கை முஸ்லீம்களின் தலைமை முற்று முழுதாக, வட கிழக்கைத் தமது தாயகமாகக் கொள்ளாத மலே முஸ்லிம்களின் கையிலிருந்ததால் அவர்கள் இராமநாதனை எதிர்த்து, கீழக்கரையிலும், இராமநாதபுரத்திலும், மலபாரிலு (மலைவாரம்)மிருந்தும் 15ம் நூற்றாண்டில் இலங்கையில் குடியேறிய தமிழ்பேசும் முஸ்லீம்களை அரேபியாவுடன் இணைத்து தங்களுக்கெனப் புது வரலாறு கண்டு பிடித்து விட்டார்கள்.


இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்களின் தமிழரல்லாத அடையாளத்தையும் அவர்கள்  அரபுக்களின் வம்சாசாவளியினர் என்ற புரட்டுக்களையும் பற்றிய ஒரு பதிவை நான்   இடுவதற்கு எண்ணியிருந்தேன் அனால் அதற்கு முன்பே Rifat Halim -ரிபாற் ஹாலிம் என்னும் இலங்கை முஸ்லீம் ஒருவர் Colombo Telegraph இல் "Sri Lankan Muslims Are Low Caste Tamil Hindu Converts Not Arab Descendants" என்ற தலைப்பில் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையின் தமிழாக்கம் தான் இது.


இலங்கை முஸ்லிம்கள் அரபுக்களின் வம்சாவளியினரல்ல, மதம் மாறிய தாழ்த்தப்பட்ட இந்து தமிழர்களே.அண்மையில் சவூதி அரேபியாவில் இலங்கை முஸ்லிம் பெண் ரிசானா நபீக் சிரச்சேதம் செய்யப்பட்டது இலங்கை முஸ்லிம்கள் அரபு வம்சாவளியில் வந்தவர்கள் என்ற கருத்தின் போலித்தனத்தை வெளிப்படுத்துகிறது. செல்வி. நபீக் அரேபியாவுக்கு வீட்டு வேலை செய்வதற்காக இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து சென்ற தமிழ்பேசும் இலங்கை முஸ்லீம் பெண். அவருக்கு தனது தாய்மொழியாகிய தமிழை விட வேறு எந்த மொழியும் தெரியாது. சவூதி அரேபியாவில் தமிழ்பேசும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியைப் பெற்றுத் தருமாறு கேட்ட அந்த அப்பாவிப் பெண்ணுக்கு மொழிபெயர்ப்பாளராக அமர்த்தப்பட்டவர் சவூதி அரேபியாவில் கூலி வேலை செய்யும் மலையாளி, அவர் பேசிய தமிழ் ரிசானாவுக்கு மட்டுமல்ல அவருக்கே புரியாது. ஆனால் சவூதி அரேபியாவின் அதிகாரிகள் எந்தவித கருணையும் காட்டவில்லை என்பது மட்டுமல்ல ரிசானா நபீக்கை அரபுக்களின் வழிவந்தவர் அல்லது அரபு வம்சாவளியினர் என்று கருதுவதற்குக் கூட  மறுத்து விட்டனர். சவூதி அரேபியாவில் அந்தப் பெண்ணின் சமூகநிலை, அந்தஸ்து என்பன அங்குள்ள ஏனைய வெளிநாட்டவர்களை விட எந்த விதத்திலும் வேறுபட்டிருக்கவில்லை.

இலங்கை முஸ்லிம்களின் வேர்கள் எங்குள்ளன அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்களின் மூதாதையர்கள் யார் என்பது பற்றிய விவாதம் பல ஆண்டுகளாக இலங்கையில் நடைபெறும் சூடான விவாதங்களிலொன்றாகும். 1885 ம் ஆண்டில் இலங்கைச் சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தில் இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லிம்கள் இஸ்லாத்துக்கு மதம்மாறிய தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த இந்து தமிழர்கள் என்றார் சேர். போன்னம்பலம் இராமநாதன். அவரது வாதம் என்னவென்றால், அக்காலத்தில் 'சிலோன் மூர்கள்' என அழைக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்கள், இஸ்லாத்தைத் தழுவிய தமிழர்களே தவிர அரபுக்களின் வழிவந்தவர்களல்ல அதனால் அவர்களுக்கென தனிப்பட்ட ஆசனம் இலங்கை சட்டசபையில் அளிக்கப்பட வேண்டிய தேவை இல்லை என்பதாகும்.

1888 இல் சேர். இராமநாதனால் றோயல் ஆசியாடிக் சொசய்ற்றியில் (Royal Asiatic Society) சமர்ப்ப்பிக்கப்பட்ட கட்டுரையில் இலங்கையின் தமிழ்பேசும் முஸ்லீம்கள் வெறும் மொழியை மட்டும் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை அவர் எடுத்துரைத்தார். அத்துடன் இலங்கை முஸ்லிம்களுடன் தமிழர்களின் கலாச்சாரம் எந்தளவுக்குப் பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் அவர் ஆணித்தரமாக ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினார். உதாரணமாக திருமணங்களில் தமிழர்களைப் போல் தாலி கட்டுதல், பாற்சோறு உண்ணுதல், ஆரத்தி எடுத்தல் என்பன இலங்கைத் தமிழ்ப் பேசும் முஸ்லிம்களிடையே பரவலாக நடைபெறும் பாரம்பரிய சடங்குகளாகும். இலங்கை முஸ்லிம்கள் பலரதும் பெயர்கள் பெரியமரைக்கார், மாப்பிள்ளை மரைக்கார், சின்னலெப்பை போன்ற தமிழ்ப்பெயர்கள். அத்துடன் இந்து தமிழர்களையும், இலங்கையின் தமிழ்பேசும் முஸ்லிம்களையும் உருவத்தால் பிரிக்க முடியாது.

அதற்குப் பின்னர் சேர். இராமநாதன் இலங்கையின் முதலாவது சனநாயகமுறையில் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவரானார். அவர் சிங்களவராகிய சேர். மார்க்கஸ் பெர்ணான்டோவை அக்காலத்தில் புகழ்பெற்ற, பரபரப்பான தேர்தலில் தோற்கடித்து 1911 இல் படித்த இலங்கையருக்காக ஒதுக்கப்பட்ட தேர்தலில் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

சேர். பொன்னம்பலம் இராமநாதன் மறைந்து 128 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் இன்று முக்கியமாக தேவைப்படுகின்றன. இந்திய உபகண்டத்தின் எல்லாப் பகுதிகளிலுமுள்ள முஸ்லிம்கள் அனைவரும், தமிழ்பேசும் இலங்கை முஸ்லிம்களைத் தவிர,  தமது மூதாதையர்களை தெற்காசியாவில் தான் தேடுகிறார்கள். இந்தியாவின் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தம்மைத் தமிழர்களாகத் தான் அடையாளப்படுத்துகின்றனர். இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஒரு அணு விஞ்ஞானி, தீர்க்கமாக தன்னை தமிழன் என்று அழைத்துக் கொள்கிறார். ஏ. ஆர. றகுமான்,கிராமி (Grammy) விருது வழங்கப்பட்ட இசையமைப்பாளரும் தன்னை தமிழனாகத் தான் அடையாளப்படுத்துகிறார்.

அதேபோல் இந்திய உபகண்டத்தின் ஏனைய முஸ்லிம் தலைவர்களும் தமது முன்னோர்கள் தெற்காசியர்களே என்பதை பெருமையுடன் ஏற்றுக் கொள்கின்றனர். இந்தியாவிலுள்ள மாநிலங்களிலுள்ள முஸ்லிம்கள் தம்மைக் கன்னடர்களாக, குஜராத்திகளாக, காஷ்மீரிகளாக, தமிழர்களாக, மலையாளிகளாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். பாகிஸ்தானின் தேசிய தந்தை முகம்மதலி ஜின்னா தன்னை ஒரு குஜராத்தி என அடையாளப்படுத்தினார். பாகிஸ்தானிய பிரதமர் பூட்டோ தான் ஒரு சிந்தி என்றார், சேய்க் முஜிபுர் ரஃமான் தன்னை ஒரு வங்காளி என்று அடையாளப்படுத்தினார். இன்றும் பெரும்பான்மை பங்களாதேசிகள் இனரீதியாக தம்மை வங்காளிகள் என்று தான் அடையாளப் படுத்துகின்றனர். பாகிஸ்தானிலுள்ள பெரும்பான்மை இனக்குழுவினர் பஞ்சாபிகள், அது மட்டுமல்ல சிறிய தமிழ் முஸ்லிம் சமுகம் இன்றும் கூட பாகிஸ்தானின் கராச்சி நகரில் வாழ்கின்றனர்.
.

இலங்கை முஸ்லிம்களில் 99 %வீதத்துக்கும் அதிகமானோரின் தாய்மொழி தமிழாகும். இஸ்லாமிய தொழுகையின் சொற்பொழிவுகள் எல்லாம், பெரும்பான்மை சிங்கள மாவட்டங்களான மாத்தறை, காலி போன்ற இடங்களில் கூட அதிகளவில் தமிழில் தான் நடைபெறுகின்றன. என்னைப் போன்ற இலங்கையிலுள்ள குஜாராத்தி முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள முடியாத திராவிடர்களின் மொழியாகிய தமிழில் நடைபெறும்  இஸ்லாமிய தொழுகைப் பிரசங்கங்களை புரிந்தொழுக முடியவில்லை.


இலங்கை முஸ்லிம்கள் தம்மை அரபுக்களின் வம்சாவளியினர் என்பது அரபுக்களாலேயே உறுதிப்படுத்தப்படவில்லை. இலங்கையின் தமிழ்பேசும் முஸ்லீம்களை இஸ்லாத்துக்கு மதம்மாறிய, புரியாத மொழி பேசும், தாழ்ந்த வகுப்பினர் என்று தான் அரபுக்கள் கருதுகின்றனர்.  பல தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமது தாய்மண்ணுக்கு அல்லது தாய்விட்டுக்குப் போகிறோம், எமக்கு அமோக வரவேற்பு கிடைக்குமென்ற எண்ணத்தில் அரபு நாடுகளுக்குச் சென்றனர். ஆனால் தாய்மண்ணின் வரவேற்பு அவர்களுக்குக் கிடைக்கவேயில்லை என்பதை ரிசானா ரபீக்கிற்கு நடந்த கொடுமை தெளிவு படுத்துகிறது.


இலங்கை முஸ்லிம்களின் உணர்ச்சி வசப்பட்ட கருத்துக்களையும்  அல்லது பதில்களையும் விட சேர் இராமநாதனின் கருத்துக்கு உறுதியான ஆதாரங்களுண்டு. தமது  முன்னோர்களின் பாரம்பரியம் பற்றிய போலியான இட்டுக்கட்டிய கதைகளும், நம்பமுடியாத வாதங்களும், பெயர்களும் தம்மை அரபுக்களின் வழிவந்தவர்களாகக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. 21ம் நூற்றாண்டில் கூட சேர். இராமநாதனை ஆத்திரத்துடன் வில்லனாக்குகின்றனர் சிலர். தாங்கமுடியாத அல்லது ஏற்றுக் கொள்ள விரும்பாத உண்மைகள் ஆத்திரமாக  உருமாறுவது இயற்கையே.

அப்படியான ஆத்திரப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர் தான் ILM அப்துல் அசீஸ், இலங்கை மூர் சங்கத்தின் தலைவர். அவர் தான் 1907 இல் வெளியான முஸ்லிம் கார்டியன்  (Muslim Guardian) பத்திரிகையில் பெரும்பான்மையான இலங்கை முஸ்லிம்களின் முன்னோர்கள் எல்லாம், பரம்பரைக் கதைகளின் படி, ஹாசிம் குடும்பத்தின் அங்கத்தவர்கள் என்றவர். ஆனால் இலங்கை முஸ்லிம்களில்  அறுதிப் பெரும்பான்மையினருக்கு அரபு மொழியில் ஏன் ஒரு சொல்லுக் கூட தெரியவில்லை என்பதை அவர் விளக்கவில்லை. ஆனால் இலங்கை முஸ்லீம்களில் மிகவும் பெரும்பான்மையினர் தமிழைத் தான் பேசுகின்றனர். இன்னும் சில ஆத்திரமுற்ற இலங்கை முஸ்லிம் கல்விமாமான்களாகிய காட்ரி இஸ்மாயில் (Qadri Ismail), மிராக் ரஹீம் (Mirak Raheem. )போன்றோர் வேறு சில தவறான, பொய்யான தகவல்களையும் இலங்கை முஸ்லிம்களின் அரபு வம்சாவளியைக் காட்ட உருவாக்கினர். அவற்றில் ஒன்று அரபு வர்த்தகர்கள்  தமிழ்ப்பெண்களை மணந்ததால் அவர்களும் தமிழ் பேசினார்கள் என்பது.


Burning of Muslim Flag by Buddhist Monks
புத்தபிக்குகளின் பொதுபலசேனாவின் ஹலால் எதிர்ப்பு போராட்டம் முஸ்லிம்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இலங்கையிலேயே  முஸ்லிம்கள் தான்  மிகவும் அடிமை மனப்பாங்குடைய (Servile) சிறுபான்மையினர் எனக் குறிப்பிட்டார் முன்னாள் தூதார் இசத் ஹீசைன்.


இசத் ஹீசைனின் கருத்து சரியானதே. இனவாதம் பிடித்த சிங்கள அரசியல்வாதிகளின் காலடியில் விழுந்து விட்டனர் இலங்கை முஸ்லிம்கள். 1944 ம் ஆண்டிலும் 1956 ம் ஆண்டிலும் சிங்கள மொழியை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்க வாக்களித்தவர் இலங்கை முஸ்லிம்களின் தலைவர் சேர். ராசீக் பாஃரீட். 1948-1949 இல் இந்திய வம்சாவளித்தமிழர்களின் வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறிக்க ஆதரவளித்துடன், சிங்களவர்களுடன் சேர்ந்து அமைச்சர்களாகிய Dr. MCM கலீலும், Dr. TB ஜாயாவும் வாக்களித்தனர்.


1983 ஆவணி மாதத்தில், தமிழர்கள் தனிநாடு கேட்ட காரணத்தால்1983 கலவரத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது நியாயமானதே எனக் கருத்து தெரிவித்தார் அகில இலங்கை முஸ்லீம் லீக்கின் தலைவர் Dr. கலீல். தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக கண்டித்து இந்தியப் பாராளுமன்றத்திலிருந்து இந்திய முஸ்லீம் லீக் வெளிநடப்பு செய்ததை எதிர்த்தார் அகில இலங்கை முஸ்லீம் லீக்கின் தலைவர். ஆனால் 1983 இனக்கலவரத்தில் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழர்கள் என தவறாக அடையாளம் காணப்பட்டு  பல முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர் என்ற உண்மையை Dr. கலீல் கருத்தில் கொள்ளவில்லை.


இலங்கை முஸ்லிம்களை அரபுக்களின் வழிவந்தவர்களாக அரபுக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சிங்கள பெளத்தர்களும், இந்து தமிழர்களும் இலங்கை முஸ்லிம்களின் பொய்யும், போலித்தனமும் நிறைந்த அரபு வம்சாவழிக் கதைகளைப் பார்த்து திகைத்துப் போய் நிற்கின்றனர். அதனால் இரண்டும் கெட்டநிலையில் தான் இலங்கை முஸ்லிம்கள் உள்ளனர்.

இலங்கை முஸ்லிம்கள் தமது முன்னோர்களின் தமிழ் அடையாளத்தை தழுவ வேண்டிய உச்சக்கட்டம் இது. இந்திய உபகண்டத்தின் மிகவும் பழைமையான பேச்சு மொழி தமிழ். இஸ்லாமிய தமிழிலக்கியத்துக்கு ஆயிரம் வருட பாரம்பரியமுண்டு. இந்த பிரதேசத்திலுள்ள மொழிகளில் மதச்சார்பற்ற மொழி தமிழ். இந்து, பெளத்த, கிறித்தவ, சமணம், இஸ்லாமிய இலக்கியங்கள் தமிழில் நிறைய உண்டு. சேர். இராமநாதன் உண்மையிலேயே சமாதானத்தினதும் ஐக்கியத்தினதும்  தூதர். அவர் வழி ஒழுகினால் இந்த தீவில் ஐக்கியமும் ஒருமைப்பாடும் உருவாவது மட்டுமல்ல சிக்கல் நிறைந்த இந்த (இலங்கை முஸ்லிம்கள்) சிறுபான்மையினத்தைப் பற்றிய சந்தேகங்களும் தீரும்.

7 comments:

Anonymous said...

அருமையான பதிவு, சிங்களவர் தம்மை ஆரியர் எனபது போல முஸ்லிம்கள் தம்மை அரபு என்ற வாதமும். கிழக்கு முஸ்லிம்கள் பலரும் 15-ம் நூற்றாண்டளவில் இலங்கையில் குடியேறிய முக்குவர்கள், மலபாரில் இருந்து வந்தோர், தாய் வழி முதுசம், குடி முறைகளை பின்பற்றி தமிழ் பேசுவோர். அதே போலத்தான் மேற்கு முஸ்லிம்கள் தமிழகத்தில் இருந்து குடியேறிய தமிழர்கள். ஆனால் தம்மை அரபு வம்சம் எனக் கூறிக் கொள்வது பேதமை, தம் முன்னோரை அசிங்கப்படுத்தும் மற்றும் தாழ்வு மனப்பான்மையான செயல். இலங்கை மலாய, குசராத்தி முஸ்லிம்களின் அரசியலுக்காக பலியாக்கப்பட்டவர்கள் அப்பாவி தமிழ் முஸ்லிம்கள். இன்று செல்வந்தராக, அரசியலில் கொடிக்கட்டிப் பறக்கும் முஸ்லிம்களில் எத்தனை பேர் தமிழர்கள் என்பதை நோக்கினாலே இது புலப்படும். மலையகத் தமிழரின் குடியுரிமை பறிப்பில் முஸ்லிம் மட்டுமல்ல ஜிஜி பொன்னம்பலம் போன்ற யாழ் தமிழ் அரசியல்வாதிகளின் பங்குமுண்டு.

viyasan said...

//மலையகத் தமிழரின் குடியுரிமை பறிப்பில் முஸ்லிம் மட்டுமல்ல ஜிஜி பொன்னம்பலம் போன்ற யாழ் தமிழ் அரசியல்வாதிகளின் பங்குமுண்டு.///
உண்மை. அதை ஈழத்தமிழர்கள் யாரும் மறுக்கவில்லை. ஆனால் அப்படி வாக்களித்த ஒரே காரணத்துக்காக, அந்த தமிழினத்துரோகத்துக்காகத் தான் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் அரசியல் தலைமைத்துவத்தை மட்டுமல்ல தமிழர்கள் மத்தியில் அவரது அரசியல் வாழ்வையும் அத்தமனிக்கச் செய்தவர்கள் யாழ்ப்பாணத்தமிழர்கள் என்ற உண்மையை மட்டும் யாரும் பேசுவதில்லை.

Niroshan Wijayasri said...

தமிழாலேயே ,தமிழனை,தமிழ் நாயே என்பவன் உலகதில்
இலங்கைத் தமிழ் இசுலாமியர்கள்தான் ,,,,,,,,,,,,,,,,தமிழ் மொழி மட்டும்தான் தெரியும்..உன் தாய் மொழி என்ன?அது எனக்கு தேவை இல்லை..நன் முஸ்லிம் ,,அது மதம் ,,உன் மொழி? தமிழன் என்று சொல்ல அவனால முடியாது?/.
எங்களுக்குளும் சாதி பேதம் இருக்கு ,,ஆனால்,மொழி என்றால் உயிரை கொடுப்போம்

சார்வாகன் said...

வணக்கம் சகோ நல்ல பதிவு,
சாதி என்பது அகமண முறை கொண்ட இன‌க்குழு.
தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது.சில சாதியினரை இட ஒதுக்கீடுக்காக அட்டவனை,பிற்படுத்ப்பட்டவர் என பிரித்து சலுகை வழங்குகிறோம் அவ்வளவுதான்!!!.

அனைத்து சாதியிலும் திறமைசாலிகள்,பணக்காரர்,ஏழை உண்டு.

ஈழ‌ முஸ்லிம்களும் தமிழர்களே என்பது 100% உண்மை!!!

நன்றி!!

viyasan said...

ந‌ன்றி சார்வாக‌ன். இது Rifat Halim -ரிபாற் ஹாலிம் என்னும் இலங்கை முஸ்லீம் ஒருவர் "Sri Lankan Muslims Are Low Caste Tamil Hindu Converts Not Arab Descendants" என்ற தலைப்பில் எழுதிய‌ க‌ட்டுரை. மொழிபெய‌ர்ப்பு ம‌ட்டும் தான் என்னுடைய‌து. அவ‌ர் 'Low Caste Tamil என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்ட‌தை தாழ்ந்த‌ அல்ல‌து குறைந்த‌ சாதி என்று மொழிபெயர்க்க‌ விரும்பாத‌தால் தான் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ள் என்று குறிப்பிட்டேனே த‌விர‌ என‌க்கு சாதியில் ந‌ம்பிக்கையுமில்லை, ஈடுபாடும் கிடையாது. யாராவ‌து சாதிய‌டிப்ப‌டையில் எந்த‌ சாதிக்குழுவைச் சேர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளை இழிவுப‌டுத்தினாலும், அந்த‌க்க‌ருத்து த‌வ‌றாக‌ என‌க்குப்ப‌ட்டால் அத‌ற்கு என‌து க‌ருத்தை எழுதுவேனே த‌விர‌ ஏதாவ‌து குறிப்பிட்ட‌ சாதியில் என‌க்கு பிடிப்பு அதிக‌ம் என்ற‌ க‌ருத்தல்ல‌. எப்பொழுது த‌மிழ‌ர்க‌ள் சாதியை ம‌ற‌க்கிறார்க‌ளோ அன்றைக்குத் தான் த‌மிழின‌த்தில் ஒற்றுமை நில‌வும்.

viyasan said...

ச‌கோ. நிரோச‌ன்,
உங்க‌ளின் வ‌ருகைக்கு ந‌ன்றி.

அருண் பிரசாத் ஜெ said...

nalla padihuvu .... Otrumaiyaiyai valiyuruthum vagaiyil ulladhu...

Good and keep it up ...

Arun Prasath J
Madurai