Monday, May 27, 2013

ஈழத்து வன்னியர் செப்புப்பட்டயம் - சித‌ம்ப‌ர‌ம் கைலைவ‌ன்னிய‌னார் ம‌ட‌மும், நிலங்களும் எங்கே?




ஈழ‌த்தில் வ‌ன்னிமையை ஆண்ட‌ வ‌ன்னிய‌ சிற்ற‌ர‌ச‌ர்க‌ளின் செப்புப்ப‌ட்ட‌ய‌மொன்று யாழ்ப்பாண‌த்த‌ர‌ச‌ன் ப‌ர‌ராச‌சேக‌ர‌னால் சித‌ம்ப‌ர‌ம், த‌மிழ்நாட்டில் அமைக்க‌ப்பட்ட‌ ம‌ட‌த்தைப் ப‌ற்றியும், வ‌ன்னிப் ப‌குதிக‌ளை ஆண்ட‌ வ‌ன்னிய‌ அர‌சர்க‌ளில் ஒருவ‌ராகிய‌ கைலாய‌வ‌ன்னிய‌னாரால் அமைக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ட‌த்தைப் ப‌ற்றிய விவ‌ர‌ங்க‌ளையும் தெளிவுப‌டுத்துகிற‌து.

சிதமபரத்தில் யாழ்ப்பாண‌த்து அர‌ச‌ர்க‌ளால் அமைக்க‌ப்ப‌ட்ட‌ இராச‌கால்த‌ம்பிரான் ம‌ட‌த்தினதும், வ‌ன்னிய‌ரச‌ன் கைலாயவ‌ன்னிய‌னால் அமைக்க‌ப்ப‌ட்ட‌ கைலாய‌வ‌ன்னியனார் ம‌ட‌த்துக்கும் அத‌ன் நில‌புலங்க‌ளின‌தும்‌, சொத்துக்க‌ளின‌தும் இன்றைய‌ நில‌வ‌ர‌ம் தெரியாது.

குல‌சேக‌ர‌ம் வைர‌முத்து ப‌ண்டார‌வ‌ன்னிய‌ன்
வ‌ன்னிம‌ண்ணின் க‌டைசி அர‌ச‌ன் 
யாழ்ப்பாண‌ம், ந‌ல்லூர் க‌ள்ளிய‌ங்காட்டைச் சேர்ந்த குடும்ப‌ம் ஒன்றின் பாதுகாப்பிலிருந்த செப்புப்ப‌ட்டய‌ங்க‌ள் Dr. குண‌சிங்க‌ம், பேராசிரிய‌ர் ப‌த்ம‌நாத‌ன் ஆகியோரால் ஆராயப்ப‌ட்டு, செப்புப்ப‌ட்ட‌ய‌த்திலுள்ள‌ விட‌ய‌ங்க‌ள் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. யாழ்ப்பாண‌த்து ந‌ல்லூரிலுள்ள‌ க‌ள்ளிய‌ங்காடு என்ற‌ கிராம‌த்தின் பெயரில் சித‌ம்ப‌ர‌த்திலுள்ள‌ ம‌ட‌மொன்று இன்று அழிவ‌டைந்த‌ நிலையில் உள்ள‌து.

ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளால் சித‌ம்ப‌ர‌த்தில் நிறுவ‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌ ம‌ட‌ங்க‌ளின‌தும் அறக்க‌ட்ட‌ளைக‌ளின‌தும் அந்த‌ அற‌க்க‌ட்ட‌ளைக‌ளுக்காக‌ ஒதுக்க‌ப்ப‌ட்ட‌ நில‌ங்க‌ளின‌தும் விவ‌ர‌த்தை அறியும் வ‌கையில் க‌ண‌க்கெடுப்பைத் த‌மிழ்நாடு அர‌சு ந‌ட‌த்த‌ வேண்டும். அதை‌ த‌மிழ்நாடு ச‌ட்ட‌ச‌பையில் விவாதித்து சட்டத்தின் மூல‌ம் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ப‌ழ‌மையான‌ ம‌ட‌ங்க‌ளையும் அற‌க்க‌ட்ட‌ளையும் பாதுகாப்ப‌துட‌ன் அவ‌ற்றை ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌, வர‌லாற்றுச் சின்ன‌ங்க‌ளாக‌ அறிவிப்ப‌துட‌ன், அவ‌ர்க‌ளுக்கும் த‌மிழ்நாட்டுக்குமுள்ள‌ தொட‌ர்பை எடுத்துக்காட்டும் நிலைய‌ங்க‌ளாக‌ மாற்ற வேண்டும் என சித‌ம்ப‌ர‌த்திலுள்ள‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் அற‌க்க‌ட்ட‌ளைக‌ளுட‌ன், ம‌ட‌ங்க‌ளுட‌னும் தொட‌ர்புக‌ளையுடைய‌ இல‌ங்கையிலும், புல‌ம்பெய‌ர்ந்து வாழும் த‌மிழ‌ர்க‌ளும் த‌மிழ்நாடு அர‌சைக் கேட்டுக்  கொள்கின்ற‌ன‌ர்.

சித‌ம்ப‌ர‌த்தில் அழிந்து கொண்டிருக்கும் ம‌ற்றும் ஆக்கிர‌மிக்க‌ப்ப‌ட்டிருக்கும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ மட‌ங்க‌ள் மீண்டும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் க‌ட்டிட‌க் க‌லையை, அத‌ன் ப‌ழ‌மையை வெளிக்காட்டும் வ‌கையில் புதுப்பிக்க‌ப்ப‌ட்டு அவ‌ற்றை ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌த்தைக் காட்டும் அருங்காட்சிய‌க‌ம், ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் த‌மிழ்த்தொண்டைக் காட்டும் நூல‌க‌ம் அல்ல‌து  இல‌ங்கையிலும், வெளிநாடுக‌ளிலுமிருந்து சித‌ம்ப‌ர‌த்துக்குச் செல்லும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு த‌ங்குவ‌தற்கான‌ நிலைய‌ங்க‌ளாக‌ மாற்ற‌ப்ப‌ட‌ வேண்டும். அவை புல‌ம்பெய‌ர்ந்த‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் இர‌ண்டாவ‌து த‌லை முறையின‌ருக்கும் த‌ம‌து முன்னோர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌த்தையும்  அறிய‌ உத‌வும்.

புல‌ம்பெய‌ர்ந்த‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளும் அவ‌ர்க‌ளின் க‌லாச்சார,‌ தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ளும்  இந்த‌ கோரிக்கையை த‌மிழ்நாடு அர‌சுக்கு வைப்ப‌துட‌ன் த‌மிழ்நாடு அர‌சுட‌ன் க‌ல‌ந்தாலோசித்து, த‌மிழ்நாடு அர‌சின் இணைந்து செய‌ல‌மைப்புக் குழுவை நிறுவி இந்த‌ திட்ட‌த்தைச் செய‌ல்ப‌டுத்த‌ வேண்டும். த‌மிழ்நாட்டிலுள்ள‌ த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ளும், அபிமானிக‌ளும் இந்த‌ திட்ட‌ம் நிறைவேற‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு உதவ‌ வேண்டும்.

க‌ள்ளிய‌ங்காடு செப்புப்ப‌ட்ட‌ய‌ம்


செப்புப்ப‌ட்ட‌ய‌த்தில்(courtesy: Pathmanathan. S., Vanniyar, 1972) அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ தாவ‌து 22ம் நாள் சித்திரை மாத‌ம் சுப‌கிருது வ‌ருட‌ம் சாலிவாக‌ன‌ம் ஆண்டு 1644, வியாழ‌க்கிழ‌மை பூர‌ணை நாளில், ச‌ந்திர‌ன் சுவாதி ந‌ட்ச‌த்திர‌த்துட‌ன் இணையும் ந‌ன்னாளில் அதாவ‌து கிறித்துவுக்குப் பின் April-May 1722 CE. இந்த‌ அற‌க்க‌ட்ட‌ளை நிறுவ‌ப்ப‌டுகிற‌து. இந்த‌ அற‌க்க‌ட்ட‌ளையின் ப‌டி விளை நில‌ங்க‌ள் சித‌ம்ப‌ர‌த்தில் நிறுவ‌ப்பட்ட‌ கையிலைவ‌ன்னிய‌னார் ம‌ட‌த்துக்கு அளிக்க‌ப்ப‌டுகிற‌து


 ஈழ‌த்து வ‌ன்னியை ஆண்ட‌ வ‌ன்னிய‌ர் சிற்ற‌ர‌ச‌ர்க‌ளும், ப‌ன‌ங்காம‌ம், க‌ரிக்க‌ட்டுமூலை, தென்ன‌ம‌ர‌வாடி, மேல்ப‌ற்று, முள்ளிய‌வ‌ளை, ம‌யிலாத்தை, ப‌ச்சிலைப்ப‌ள்ளி போன்ற‌ வ‌ன்னிப்ப‌குதிக‌ளில் வாழ்ந்த‌ கிராம‌ மக்க‌ளும் ஒன்றிணைந்து சித‌ம்ப‌ர‌த்து ஆட‌வ‌ல்லானின் பெய‌ரில் சித‌ம்ப‌ர‌ம் த‌மிழ்நாட்டில் ம‌ட‌த்தை நிறுவிய‌தாக‌க் குறிப்பிடுகிற‌து க‌ள்ளிய‌ங்காடு செப்புப்ப‌ட்ட‌ய‌ம். 

இந்த‌ அற‌க்க‌ட்ட‌ளைக்கு விளை நில‌ங்க‌ளை சித‌ம்ப‌ர‌த்தில் நிறுவ‌ப்பட்ட‌ கையிலைவ‌ன்னிய‌னார் ம‌ட‌த்துக்கு அளிக்க‌ப்ப‌டுகிற‌து.  யாழ்ப்பாண‌ அர‌ச‌ன் ப‌ரராச‌சேக‌ர‌னால் வ‌ன்னிய‌ர் ம‌ட‌த்துக்கு முன்பாக‌ நிறுவ‌ப்ப‌ட்ட‌ இராச‌கால் ம‌ட‌த்துக்குப் பொறுப்பாக‌ நிய‌மிக்க‌ப‌ப்ட்ட‌ சூரிய‌மூர்த்தி த‌ம்பிரானையே வ‌ன்னிய‌ர‌ச‌ர்களும் சித‌ம்ப‌ர‌த்திலுள்ள‌ கைலைவ‌ன்னிய‌னார் ம‌ட‌த்துக்கு பொறுப்பாக‌ நிய‌மிக்க‌ப்ப‌டுகிறார்.





இந்த‌ ம‌ட‌த்துக்கும் அற‌க்க‌ட்ட‌ளைக்கு உத‌வுப‌வ‌ர்க‌ள், சிவ‌னுக்கு உக‌ந்த‌ இர‌ண்டாம் சாம‌த்தில் சித‌ம்ப‌ர‌த்தில் ஆட‌வ‌ல்லானைத் தரிசித்த‌ புண்ணிய‌த்தை பெறுவ‌துட‌ன், இந்த‌ ம‌ட‌த்துக்கு தீ வைப்ப‌வ‌ர்க‌ள் சிவால‌ய‌த்தை எரித்த‌ பாவ‌த்தையும‌டைவ‌ர். இப்ப‌டியான‌ அற‌ங்க‌ளைச் செய்ப‌வ‌ர்க‌ளை விட‌, இந்த‌ ம‌ட‌த்தைப் பாதுகாப்ப‌வர்க‌ளும், ஊக்குவிப்ப‌வ‌ர்க‌ளும் ப‌த்து ம‌ட‌ங்கு ப‌ல‌ன்க‌ளைப் பெறுவ‌ர் என்கிற‌து க‌ள்ளிய‌ங்காடு செப்புத்த‌க‌டு.


சித‌ம்ப‌ர‌த்தில் ஈழத்த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரியத்தை பாதுகாக்குமாறு கம்யூனிஸ்ட் கட்சி த‌மிழ்நாடு அர‌சிட‌ம் கோரிக்கை.

M.T. Ramachandran MLA
சித‌ம்ப‌ர‌த்திலுள்ள‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ம‌ட‌ங்க‌ளையும், நில‌ங்க‌ளையும் மீட்டு ஈழ‌த்த‌மிழ‌ர்களின் பார‌ம்ப‌ரிய‌த்தை வெளிப்ப‌டுத்தும் வகையில் ஈழ‌த்த‌மிழ‌ர் க‌லாச்சார‌ நிலைய‌த்தை நிறுவுமாறு கேட்டுக் கொண்டார்  இந்திய‌க் க‌ம்யூனிஸ்ட்க‌ட்சியின் த‌மிழ்நாடு ச‌ட்ட‌ச‌பை உறுப்பின‌ர் திரு. M.T ராம‌ச்ச‌ந்திர‌ன் அவ‌ர்க‌ள்.  April  26, 2013 இல் ச‌ட்ட‌ச‌பையின் வ‌ர‌வு செல‌வுத்திட்ட‌ விவாத‌த்தில் உரையாற்றும் போது அவ‌ர் இந்த‌க் கோரிக்கையை முன்வைத்தார், அவ‌ருக்கு ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ரும் ந‌ன்றியைத் தெரிவிக்க‌ வேண்டும்.


சித‌ம்ப‌ர‌த்தில் யாழ்ப்பாண‌ம் ஞானப்பிர‌காச‌ர் கட்டிய‌ ஞானப்பிர‌காச‌ர் குள‌ம் ப‌குதியைச் சுற்றிக் காண‌ப்ப‌டும், யாழ்ப்பாண‌த்த‌ர‌ச‌ன் ப‌ர‌ராச‌சேக‌ர‌னால் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ம‌ட‌ம் தொட‌ங்கி, வ‌ன்னிய‌ அர‌ச‌ர்க‌ளாலும் யாழ்ப்பாண‌ம் ஆறுமுக‌நாவ‌லராலும் சித‌ம்பர‌த்தில் நிறுவ‌ப்ப‌ட்ட‌ ம‌ட‌ங்க‌ளைப் பாதுகாத்து அவ‌ற்றை ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ நிலைய‌ப்ப‌குதியாக‌ அறிவுக்குமாறு கேட்டுக் கொண்டார் த‌மிழ்நாடு ச‌ட்ட‌சபை உறுப்பின‌ர் திரு, எம்.டி ராமச்ச‌ந்திர‌ன் அவ‌ர்க‌ள். அவ‌ர‌து கோரிக்கை த‌மிழ்நாடு ச‌ட்ட‌ச‌பையின் அறிக்கையில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. அவ‌ருக்கு ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ரும் த‌ம‌து ந‌ன்றியைத் தெரிவிக்க‌  க‌ட‌மைப்ப‌ட்டுள்ளார்க‌ள்.




சித‌ம்ப‌ர‌த்தில் அழிவுற்றும் ஆக்கிர‌மிக்க‌ப்ப‌ட்டும் போன‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ச்சின்ன‌ங்க‌ளாகிய‌ குள‌ம், ம‌ட‌ங்க‌ள், பாட‌சாலைக‌ள், என்ப‌வ‌ற்றைப் ப‌ற்றிய‌ மேல‌திக‌ விவ‌ர‌ங்க‌ளை இந்த‌ப் ப‌திவில் காண‌லாம்.





Courtesy: Tamilnet


No comments: