Saturday, May 25, 2013

ஈழத்த‌மிழ‌ர்க‌ளும், சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் இய‌க்க‌ர், நாக‌ர் வ‌ழிவ‌ந்த‌வர்கள்!


ம‌காவ‌ம்ச‌த்தின் அடிப்ப‌டையில் இல‌ங்கைத்தீவு கெள‌த‌ம‌ புத்த‌ரால் தேர‌வாத‌ பெள‌த்த‌த்தைப் பாதுகாப்ப‌த‌ற்காக‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌துட‌ன், இல‌ங்கையின் முதற்குடிக‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் எனும் ந‌ம்பிக்கையுமே முழு இல‌ங்கையையும் சிங்க‌ள‌ பெள‌த்த‌ நாடாக‌ மாற்றுவ‌த‌ற்கு சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு உந்துகோலாக‌ இருக்கும் கார‌ணிக‌ளாகும். 
                                                                   
அதற்குப் பதிலாக, விஜ‌ய‌னின் வ‌ருகைக்கு முன்பே இல‌ங்கையில் வாழ்ந்த இய‌க்க‌ர், நாக‌ர் போன்ற‌ பூர்வீக‌ குடிக‌ள் எல்லாம் சிங்கள‌வ‌ர்க‌ளின் ம‌காவ‌ம்ச‌ம் கூறுவ‌து போல‌ பேய்க‌ளும், அர‌க்க‌ர்க‌ளும‌ல்ல‌, அவ‌ர்கள் திராவிட‌ இன‌த்தைச் சேர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளின் முன்னோர்க‌ள், அவ‌ர்க‌ள் பேசிய‌து த‌மிழ்.  பெள‌த்த‌ம் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் வ‌ரையில் அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் சிவமதத்தவர்கள், இலங்கை - சிவபூமி-   தான் என்பது ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ந‌ம்பிக்கை.


இந்த‌ இர‌ண்டு ந‌ம்பிக்கைக‌ளுக்கும் இடையிலான மோதல் தான் இல‌ங்கையில் ந‌டைபெறும் த‌மிழ் சிங்க‌ள‌வர்களுக்கான இனப்பிரச்சனைக்கு முக்கிய‌ காரண‌ங்க‌ளாகும்.  


நாகபூசணி அம்மன் கோயில் (64 சக்தி பீடங்களிலொன்று) , நாகனார் தீவு (நயினாதீவு)



சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ஆரிய‌ர்க‌ள், அவ‌ர்க‌ள் வ‌ட‌ இந்தியாவிலிருந்து 700 ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் இல‌ங்கைக்கு வ‌ந்த‌ விஜ‌ய‌னின் ப‌ர‌ம்ப‌ரையின‌ர், அவ‌ன் தான் சிங்க‌ள‌ இன‌த்தின் முன்னோடி எனவும், வ‌ங்காள‌ தேச‌த்திலுள்ள‌ சிங்க‌புர‌த்திலே, ஒரு சிங்க‌த்துக்கும் அந்த‌ நாட்டின் இள‌வ‌ர‌சிக்கும் பிற‌ந்த‌ சிங்க‌பாகுவின் ப‌ர‌ம்ப‌ரையில் வ‌ந்த‌வ‌னே விஜ‌ய‌ன் என‌வும் ம‌காவ‌ம்ச‌த்திலேயுள்ள‌ ந‌ம்ப‌ முடியாத‌ க‌தைக‌ளையெல்லாம், வ‌ட‌ இந்தியர்க‌ளை ம‌கிழ்ச்சிப்ப‌டுத்த‌ இன்றும் சில சிங்க‌ள‌வ‌ர்க‌ள் உள‌றினாலும், ப‌டித்த‌ அதிலும் இன‌வெறி பிடித்த‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் அவ‌ற்றையெல்லாம் இப்பொழுது முணுமுணுப்ப‌து கூட‌ இல்லை. ஏனென்றால் விஜய‌னின் வ‌ருகை உண்மையான‌ ச‌ம்ப‌வ‌ம் என‌ ஒப்புக் கொண்டால், இல‌ங்கையில் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் வ‌ந்தேறு குடிக‌ள் அதாவ‌து க‌ள்ள‌த்தோணி என்றாகி விடுகிற‌து.

க‌ள்ள‌த்தோணியில் இல‌ங்கைக்கு வ‌ந்திற‌ங்கிவிட்டு, இல‌ங்கையின் ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ள் நாங்க‌ள் தானென‌ வாதாடும்  த‌மிழ‌ர்க‌ளுட‌ன், அதிலும் நாங்க‌ள் தான் இல‌ங்கையின் பூர்வீக‌ குடிக‌ள், இது எம‌து பார‌ம்ப‌ரிய‌ பூமி என்ப‌தில் அசைக்க‌ முடியாத‌ நம்பிக்கையுட‌ன் முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளை இல‌ங்கையில் மூன்றில் இர‌ண்டு ப‌ங்கு க‌ரையோர‌த்தில் கால் வைக்க‌ முடியாத‌வாறு த‌டுத்த‌ த‌மிழ‌ர்க‌ளுட‌ன் வாதாடி வெல்ல‌ முடியாத‌தையுண‌ர்ந்த‌ சிங்க‌ளவர்க‌ள், இப்பொழுது, அவ‌ர்க‌ள் விஜ‌ய‌ன் வ‌ழிவ‌ந்த‌வ‌ர்க‌ள‌ல்ல‌, அது வெறும் க‌ட்டுக்க‌தை, அக்கால‌ப் புத்த‌ பிக்குக‌ளின் வெறும் க‌ற்ப‌னை, சிங்க‌ள‌ இனத்தின் உண்மையான‌ முன்னோர்க‌ள் ச‌ரித்திர‌கால‌த்துக்கு முற்ப‌ட்ட‌ இய‌க்க‌ர், நாக‌ர் என‌ அழைக்க‌ப்பட்ட‌ பூர்வீக‌ குடியின‌ர், அவ‌ர்க‌ள் பேசிய‌ எலு(Hela) மொழியின‌தும் பாளி மொழியின‌தும் க‌ல‌ப்பிலிருந்து உருவான‌து தான் சிங்க‌ள‌ மொழி என‌ வாதாடுகின்ற‌ன‌ர்.

இல‌ங்கையின் பூர்வீக‌ குடியின‌ராகிய‌ இந்த‌ இய‌க்க‌ர்க‌ள், நாக‌ர்க‌ள் அனைவ‌ரும் ஆரிய‌ர்க‌ள‌ல்ல‌ திராவிட‌ர்க‌ள் என்ப‌தை யாவ‌ரும‌றிவ‌ர். அந்த‌ பூர்வீக‌ குடிக‌ளின் வ‌ழித்தோன்ற‌ல்க‌ள் தான் பெரும்பாலான‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் என்ப‌து இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளின் க‌ருத்தாகும்.

இயக்கர்களும் நாக‌ர்க‌ளும் த‌மிழ் பேசிய‌ திராவிட‌ர்க‌ள்

                                                                                     Nagatheevu, Sri Lanka


ம‌காவ‌ம்சத்திலுள்ள‌ க‌தைக‌ளின் அடிப்ப‌டையிலேயே இல‌ங்கைத் தீவு முழுவ‌தும் சிங்க‌ள‌வர்க‌ளுடைய‌தென‌ வாதாடுகிறார்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ள். சிங்க‌ள‌ இன‌த்தின் முன்னோடியாகிய‌ விஜ‌ய‌ன் இல‌ங்கையில் க‌ள்ள‌த்தோணியில் வ‌ந்திற‌ங்கிய‌ போது  இய‌க்க‌ர், நாக‌ர் என்ற‌ பூர்வீக‌ குடிக‌ள் இல‌ங்கையில் வாழ்ந்த‌ன‌ர் என‌த் தெளிவாக‌க் குறிப்பிடுகிற‌து சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் ம‌காவ‌ம்ச‌ம். 

இல‌ங்கையின் தெற்கிலும், ம‌த்திய‌ ம‌லைப்ப‌குதிக‌ளில் இய‌க்க‌ர்க‌ளும், வ‌ட‌க்கிலும், மேற்கிலும் நாக‌ர்க‌ளின் குடியிருப்புக‌ளும் காண‌ப்ப‌ட்ட‌ன‌. இய‌க்க‌ர்க‌ள் குள‌ங்க‌ள், அணைக‌ள் என்ப‌வ‌ற்றைக் க‌ட்டுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌த் திகழ்ந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் சூரிய‌னைக் க‌ட‌வுளாக‌ வ‌ழிப‌ட்ட‌ன‌ர்.

இந்தியாவின் காப்பிய‌ங்க‌ளிலொன்றாகிய‌ ம‌காபார‌த‌ம், இல‌ங்கையின் வ‌ட‌பகுதியில் வாழ்ந்த‌ நாக‌ர்க‌ளைப் ப‌ற்றிக் குறிப்பிடுகிறது. இந்திய‌ உப‌க‌ண்ட‌த்தின் தெற்கிலுள்ள‌ கோவில்க‌ளுக்கு தீர்த்த‌ யாத்திரை செய்த‌ அர்ச்சுன‌ன் ‌ இல‌ங்கைக்குச் சென்று யாழ்ப்பாண‌த்திலுள்ள‌ கீரிம‌லை தீர்த்த‌த்தில் நீராடி, ந‌குலேஸ்வ‌ர‌த்திலுள்ள‌ சிவ‌பெருமானைத் த‌ரிசித்ததாக‌வும் அவ‌ன் நாக‌ இள‌வர‌சியை வ‌ட‌ இல‌ங்கையில் ம‌ண‌ந்த‌தாக‌வும் குறிப்பிடுகிற‌து. நாக‌ர்க‌ள் இல‌ங்கையின் வ‌ட‌க்கில் ம‌ட்டும் வாழ‌வில்லை, அவ‌ர்க‌ளின் குடியிருப்புக‌ள் இல‌ங்கையின் தென்ப‌குதியிலும் காண‌ப்ப‌ட்ட‌ன‌ என்ப‌தை அக‌ழ்வாராய்ச்சிக‌ள் அறிய‌த்த‌ருகின்ற‌ன‌. 
 

நாக‌ர்க‌ள், திராவிட‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் பேசிய‌ மொழி த‌மிழ் என்கிறார் அண்ணல் அம்பேத்க‌ர்.





இந்தியா முழுவ‌துமே நாக‌ர்க‌ளின் குடியிருப்புக‌ள்காண‌ப்ப‌ட்ட‌ன‌.  இந்தியாவில் காஸ்மீர் முத‌ல் க‌ன்னியாகும‌ரி வ‌ரை நாக‌ர்க‌ள் வாழ்ந்ததாக‌வும், அவ‌ர்க‌ளால் இந்தியா முழுவ‌தும் பேச‌ப்ப‌ட்ட‌ ப‌ழ‌மையான‌ மொழி த‌மிழ் என‌வும் குறிப்பிடுகிறார் அண்ண‌ல் அம்பேத்கர்.

அவ‌ர் ம‌ட்டும‌ன்றி, உல‌க‌ம் முழுவ‌தும் பய‌ண‌ம் செய்த‌வ‌ரும், வானசாத்திரத்திலும், புவியிய‌லிலும் வ‌ல்லுன‌ராக‌வும் திக‌ழ்ந்த‌  புக‌ழ் பெற்ற‌ கிரேக்க‌ அறிஞராகிய‌ தொல‌மி அவ‌ர்க‌ள், கோர‌ம‌ண்ட‌ல் (சோழ‌ம‌ண்ட‌ல‌ம்) க‌ரையோர‌ ந‌க‌ர‌ங்க‌ளாகிய‌ நாகூர், நாகப்ப‌ட்டண‌ம் என்ப‌வ‌ற்றை நாக‌ர் குடியிருப்புக‌ளாக‌க் குறிப்பிடுகிறார். நாக‌ர்க‌ள் சிற‌ந்த‌ க‌ட‌லோடிக‌ள் என‌வும் அவ‌ர்க‌ளின் மிக‌வும் ப‌ழ‌மையான‌ துறைமுக‌த் தீவுக‌ளிலொன்று யாழ்ப்பாண‌க் குடாநாட்டிலுள்ள‌தாக‌வும் குறிப்பிடுகிறார் தொல‌மி.

உண்மையில் இல‌ங்கையின் வ‌ட‌க்கிலும், த‌மிழ்நாட்டிலுமிருந்த‌ Early Iron Age குடியிருப்புக‌ளுக்கிடையேயு‌ ஒரே மாதிரியான‌ த‌ன்மைக‌ள், வ‌டிவ‌மைப்புகளும், அக‌ழ்வாராய்ச்சியில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட‌ த‌ட‌ய‌ங்க‌ளும் அவை நாக‌ர்க‌ளின் குடியிருப்புக‌ள் என்ப‌தைக் காட்டுகின்ற‌ன‌.


யாழ். மணிபல்லவம் அல்லது நாகதீபத்துக்கு புத்தரின் வருகையும் அங்கு வாழ்ந்த  நாகர்களும் -  ஈழத்தமிழர்களினதும் சிங்களவர்களினதும் முன்னோர்கள் .





யாழ்ப்பாண‌த்தில் ஆனைக்கோட்டையில் அக‌ழ்வாராய்ச்சியில் நாக‌ர் குடியிருப்பில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ மிக‌ முக்கிய‌மான‌ த‌ட‌ய‌மாகிய‌ பெண் க‌ட‌வுளின் சிலை நாக‌ர்க‌ள் சைவர்க‌ள் என்ப‌தை உறுதிப்ப‌டுத்துகின்ற‌து. அவ‌ர்க‌ள் நாகத்தை முக்கிய‌ தெய்வ‌மாக‌ வ‌ழிப‌ட்டு வ‌ந்த‌ன‌ர். நாக‌ர்க‌ளின் வ‌ழிபாட்டு ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ள் இன்றும் இல‌ங்கையில் தமிழ்ச்சைவர்க‌ளிட‌மும், சிங்கள பெள‌த்த‌ர்க‌ளிட‌மும் வ‌ழ‌க்க‌த்திலுள்ள‌ன‌. இன்றும் வ‌ட‌ இல‌ங்கையில் ம‌ட்டும‌ல்லாம‌ல் த‌மிழ‌ர்க‌ள் வாழும் எல்லா இட‌ங்க‌ளிலும் நாக‌த‌ம்பிரானுக்குக் கோயில்க‌ள் உண்டு.

ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் முன்னோர்க‌ளின் வ‌ழியில் இன்றும் நாகபாம்பை வ‌ண‌ங்குகிறார்க‌ள். சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் த‌மிழ‌ர்க‌ளும் க‌ழுகின் ப‌ட‌த்தை த‌ம‌து வீடுக‌ளில் மாட்டுவ‌தில்லை ஏனென்றால் அவை நாக‌பாம்புக்கு எதிரிக‌ளாகக் கருதப்படுகின்றன. இல‌ங்கைத் தீவு முழுவ‌திலும் ப‌ழ‌ங்கால‌க் குகை எழுத்து வ‌டிவ‌ங்க‌ளில் நாகா என்ற‌ பெய‌ர் உள்ள‌தைக் காணலாம். இல‌ங்கையின் ப‌ழ‌மையான‌ த‌லைந‌க‌ராகிய‌ அனுராத‌புர‌த்தில் கி.பி 135- 248 இல் ஆண்ட‌ ப‌த்து அர‌ச‌ர்க‌ளில் ஆறு பேர் நாகா என்ற‌ பெய‌ரைக் கொண்ட‌வ‌ர்க‌ள்.


இல‌ங்கைச் சிவ‌பூமி


ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் சைவப்பார‌ம்ப‌ரிய‌த்தின் ப‌டி இல‌ங்கையின் பூர்வீக குடிக‌ளாகிய‌ இய‌க்க‌ர்க‌ளும், நாக‌ர்க‌ளும் சிவ‌ வ‌ழிபாட்டையும் க‌டைப்பிடித்த‌ன‌ர். குறிப்பாக‌ நாக‌பாம்பையும் சிவ‌னையும் தொட‌ர்புப‌டுத்தும் ஐதீக‌க் க‌தைக‌ள் இல‌ங்கையின் ப‌ழ‌மை வாய்ந்த‌ ஐந்து ப‌ழ‌ம்பெரும் சிவால‌ய‌ங்க‌ளுக்குமுண்டு. 

இல‌ங்கைத்தீவை க‌ட‌ல் கோளிலிருந்தும், இய‌ற்கையின் சீற்ற‌த்திலிருந்தும் காப்ப‌த‌ற்காக‌ இல‌ங்கைத் தீவின் நான்கு திசைக‌ளிலும் ஐந்து சிவால‌ய‌ங்க‌ளை நிறுவின‌ர் இல‌ங்கையின் பூர்வீக குடிக‌ள். அவை மேற்கில் முன்னேஸ்வ‌ர‌மும்,(வ‌ட‌மேற்குதிருக்கேதீஸ்வ‌ர‌மும்,  வ‌ட‌க்கில் ந‌குலேஸ்வ‌ர‌மும், கிழ‌க்கில் கோணேஸ்வ‌ர‌மும், தெற்கில் தொண்டேஸ்வ‌ர‌முமாகும்.


இல‌ங்கைக்குப் புத்த‌ரின் வ‌ருகை.

இல‌ங்கையின் பூர்வீக‌ குடிக‌ளாகிய‌ இய‌க்க‌ர்க‌ளும், நாக‌ர்க‌ளும் பெளத்த‌த்துக்கு மாறிய‌ சைவர்கள் அல்லது சிவமத்தினர் என்ப‌தை சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் ம‌காவ‌ம்ச‌மும் ஒப்புக் கொள்கிற‌து. இல‌ங்கைக்கு புத்த‌ர் மூன்று முறை வ‌ருகை த‌ந்த‌தாக‌ சிங்க‌ள‌ பெள‌த்த‌ர்க‌ள்  ந‌ம்புகின்ற‌ன‌ர். புத்த‌ரின் முத‌ல் வருகை கிறித்துவுக்கு முன் 528  இல் ஒரு பெள‌ர்ண‌மி நாளில் ந‌டைபெற்ற‌தாக‌வும், மகிய‌ங்க‌னை என்ற‌ இட‌த்தில் பூர்வீக குடிகளில் ஒன்றாகிய இய‌க்க‌ர்க‌ளைச் ச‌ந்தித்து அவ‌ர்க‌ளைத் த‌ன‌து போத‌னையின் மூல‌ம் பெள‌த்த‌மத‌த்துக்கு மாற்றினார் என‌வும் அந்த‌ இட‌த்தில் இன்று ம‌கிய‌ங்க‌னை விகாரை இருப்ப‌தாக‌ ந‌ம்புகின்ற‌ன‌ர் சிங்கள‌வ‌ர்க‌ள்.

த‌ன‌து இர‌ண்டாவ‌து வ‌ருகையில் இன்று யாழ்ப்பாண‌த்தில் ந‌யினாதீவு (நாகனார்தீவு) என்ற‌ழைக்க‌ப்ப‌டும் நாக‌தீவு அல்ல‌து நாக‌தீப‌ம் அல்ல‌து ம‌ணிப‌ல்லவ‌த்துக்கு வ‌ந்த‌ புத்த‌ர் இரண்டு நாக‌ அர‌ச‌ர்க‌ள், மாம‌னும், ம‌ரும‌க‌னதும், சிம்மாச‌ன‌ப் ப‌த‌விப்போட்டியைத் தீர்த்து வைத்தாராம்.


இர‌ண்டாம் நூற்றாண்டில் எழுத‌ப்ப‌ட்ட‌ ஐம்பெருங்காப்பிய‌ங்க‌ளில் ஒன்றாகிய‌ ம‌ணிமேக‌லையும் புத்த‌ர் ம‌ணிப‌ல்ல‌வ‌ம் (நாக‌தீவுக்கு) வ‌ருகை த‌ந்த‌தை விவ‌ர‌மாக‌க் குறிப்பிடுகிற‌து.  இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ள் மட்டும‌ல்ல‌, கோர‌ம‌ண்ட‌ல் க‌ரையிலிருந்த நாக‌ர் குடியிருப்புக‌ளில் இன்று வாழும் த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் கூட‌ நாக‌ர்க‌ளின் வ‌ழிவ‌ந்த‌ த‌மிழ‌ர்க‌ள் தான். 

நாக‌ர்க‌ள் பேசிய‌து த‌மிழ் அத‌னால் தான் ஈழ‌த்தமிழ‌ர்க‌ளும் த‌மிழ் பேசுகிறார்க‌ள்.


இன்றைய‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளில் ப‌ல‌ர் சேர, சோழ, பாண்டிய நாடுகளிலிருந்து வெவ்வேறு காலக‌ட்ட‌ங்க‌ளில் ஈழ‌த்துக்கு குடிபெய‌ர்ந்திருக்க‌லாம். ஆனால் எங்க‌ளில் ஒரு ப‌குதியின‌ர் இல‌ங்கையின் பூர்வீக‌ குடிக‌ளாகிய‌ இய‌க்க‌ர்க‌ளின‌தும்,நாக‌ர்க‌ளின‌தும் வழிவ‌ந்த‌வ‌ர்க‌ளாகக் கூட‌ இருக்க‌லாம் என்ப‌த‌ற்கு ஆதார‌ங்க‌ள் உண்டு. அப்ப‌டியானால் நாக‌ர்க‌ளின் வ‌ழிவ‌ந்த‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் ஏன் த‌மிழ்நாட்டைப் போல் த‌மிழில் பேசுகிறோம் என்ற கேள்விக்குப் பதில் என்னவென்றால் இல‌ங்கையில் வாழ்ந்த‌ பூர்வீக குடிக‌ளும் திராவிட‌ர்க‌ள் தான் அவ‌ர்க‌ளும் ப‌ழ‌ந்த‌மிழைத் தான் பேசினார்க‌ள், அதனால் தான் நாங்களும் தமிழைப் பேசுகிறோம். 


 நாக‌தீப‌ம் (நாகனார்தீவு) நாகம்மாள் கோயில் குடமுழுக்கு - 2012 , இல‌ங்கை



                                                                                                                                       
பார‌ம்ப‌ரிய‌ வ‌ழ‌க்க‌ப்ப‌டி, இல‌ங்கையிலும், இந்தியாவிலும் வாழும் த‌மிழ‌ர்க‌ள் இய‌க்க‌ர்க‌ளின‌தும் நாக‌ர்க‌ளின‌தும் வழிவ‌ந்த‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளின் அடையாள‌ம் அல்ல‌து இல‌ச்சினை நாக‌ம். இன்றும் இல‌ங்கையிலும், இந்தியாவிலும் சைவ-விண்ணவத் தமிழ‌ர்க‌ள் நாக‌ வ‌ழிபாட்டை இந்துக் க‌ட‌வுளர்க‌ளில் ஒன்றாக‌ வ‌ழிப‌டுகின்ற‌னர்.  இன்றும் நாக‌   த‌ம்பிரானுக்கு கோயில்க‌ள் வ‌ட‌ இல‌ங்கையின் மூலை முடுக்குக‌ளிலெல்லாம் உண்டு. அதே போல் இய‌க்க‌ர்க‌ளும் அர‌க்க‌ர்க‌ளோ அல்ல‌து ேய்க‌ளோ அல்ல‌ அவ‌ர்கள் பேய்க‌ளை வ‌ழிப‌ட்ட‌வ‌ர்க‌ள்.இக்கால‌த்திலும் பேய்க‌ளைத் திருப்திப்ப‌டுத்துவ‌தும், அவ‌ர்க‌ளின் கோப‌த்துக்குட்ப‌டாம‌லிருக்க‌ வ‌ழிபாடுக‌ளைச் செய்யும் வ‌ழ‌க்க‌ம் பாக்குநீரிணையின் இருப‌க்க‌த்திலுமுள்ள‌ த‌மிழ‌ர்க‌ளிடையே நில‌வி வ‌ரும் வ‌ழ‌க்க‌மாகும்.

உல‌க‌ப்ப‌ய‌ண‌ம் மேற்கொண்ட‌ கிரேக்க‌ அறிஞர் தொல‌மியின் க‌ருத்துப்ப‌டி, இல‌ங்கையின் வ‌டக்கில் நாக‌தீப‌த்தில்,வாழ்ந்த‌ த‌மிழ் நாக‌ர்க‌ளின் ஆண்க‌ளும் பெண்களும் பெரிய‌ காதுகளைக் கொண்டிருந்த‌ன‌ர். அதில் விலைம‌திக்க முடியாத‌‌ க‌ற்கள் இழைக்க‌ப்ப‌ட்ட‌ காத‌ணிக‌ளை அணிந்திருந்த‌ன‌ர் என‌ வ‌ர்ணிக்கிறார். ஆண்க‌ளும் பெண்க‌ளும் காத‌ணிக‌ளை அணியும் வ‌ழ‌க்க‌ம் யாழ்ப்பாண‌க் கிராம‌ங்க‌ளில் சென்ற நூற்றாண்டின் முற்ப‌குதி வ‌ரை பர‌வ‌லாக‌ வ‌ழ‌க்க‌த்திலிருந்த‌து. விலையுய‌ர்ந்த‌ காத‌ணியை வாங்க‌ முடியாத‌வ‌ர்க‌ள் த‌ம‌து காதுக‌ளில் ப‌னையோலையை செருகியிருந்த‌ன‌ர். அத‌னால் தான் காத‌ணிக்கு, காதோலை என்ற‌ த‌மிழ்ச்சொல் உருவாகிய‌து.

அண்மையில் ப‌ண்டைய‌ நாக‌ர்க‌ளின் குடியிருப்புக‌ளிருந்த‌ நாக‌தீவு பிர‌தேச‌ங்க‌ளாகிய‌ சிலாப‌த்திலிருந்து திருகோண‌ம‌லையூடாக‌ அனுராத‌புர‌ம் வரை ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ அகழ்வாராய்ச்சியில், Megalithic மெகாலித்திக் ம‌க்க‌ளின்  ப‌டிம‌ங்க‌ள், இற‌ந்த‌வ‌ர்க‌ளைப் புதைக்கும் வ‌ழ‌க்க‌ம், ஈம‌த்தாளிக‌ள், இரும்பு ஆணிக‌ள், பித்த‌ளை வ‌ளையங்க‌ள், அம்புக‌ள், ஈட்டிக‌ள் என்பன‌ க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ன‌. அவை  த‌மிழ்நாட்டில் கண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ பூர்வீக‌ குடிக‌ளின் க‌லாச்சார‌ அடையாள‌ங்க‌ளை ஒத்துள்ள‌ன‌. இல‌ங்கையில் பூன‌க‌ரியிலும், பொம்ப‌ரிப்பிலும் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ பூர்வீக‌ குடிக‌ளின் ப‌டிம‌ங்க‌ள் த‌மிழ்நாட்டின் கோர‌ம‌ண்ட‌ல் க‌ரையில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌ட‌ய‌ங்க‌ளை ஒத்தவை.

அப்ப‌டியானால் சிங்களவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?


 இன்றைய‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் முன்னோர்க‌ள் தான் இல‌ங்கையில் வாழ்ந்த‌ இய‌க்க‌ர் நாக‌ர் போன்ற‌ *பூர்வீக‌ குடிக‌ள் என்றால் எப்ப‌டி சிங்கள‌வ‌ர்க‌ள் என்ற‌ இன‌ம்  இல‌ங்கையில் உருவான‌து என்ற‌ கேள்வி எழுகிற‌து. 

(*இல‌ங்கையில் இன்று வாழும் வேட‌ர்க‌ள் அட‌ர்ந்த‌ காடுக‌ளில் வாழ்ந்த‌ நாக‌ரீக‌ம‌டையாத‌ த‌னிப்ப‌ட்ட‌ சிறிய‌ள‌விலான‌ பூர்வீக குடியின‌ர், அவ‌ர்க‌ளில் கூட தமிழ்பேசும் வேட‌ர்க‌ள் கிழ‌க்குமாகாண‌த்தில் உள்ள‌ன‌ர்.)

கிறித்துவுக்கு முன் 3ம் நூற்றாண்டிலே( 247 இல்) இந்தியாவிலிருந்து வ‌ந்த‌ ம‌கிந்த‌ தேரோவால் புத்த‌ச‌ம‌ய‌ம் இல‌ங்கைக்கு அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. பெள‌த்த‌ ச‌ம‌ய‌த்துக்கு ம‌த‌மாறிய‌ இந்திய‌ ச‌க்கர‌வ‌ர்த்தி பெள‌த்த‌த்தைப் ப‌ர‌ப்பும் நோக்க‌மாக‌ அவ‌ன‌து ம‌க‌ன் ம‌கிந்த‌வை இல‌ங்கைக்கு அனுப்பியதாக‌க் கூறுகிற‌து சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் ம‌காவ‌ம்ச‌ம்.



அக்கால‌த்தில் அனுராத‌புர‌த்தையாண்ட‌ த‌மிழ‌ர‌ச‌ன் தேவ‌ந‌ம்பிய‌தீச‌ன் (நாகர்குல‌ம்)புத்த‌பிக்குக‌ளின் போத‌னையில் ம‌ய‌ங்கி பெள‌த்த‌ம‌த‌த்தை ஏற்றுக் கொண்டான். ம‌கிந்த‌ தேரோவும் அவ‌ர‌து சீட‌ர்க‌ளும் வட‌ இந்தியாவிலிருந்து வான‌த்தில் ப‌ற‌ந்து வ‌ந்து இல‌ங்கையில்‌ மிகிந்த‌லை (மெய்யின் த‌லை, என்ற‌ த‌மிழ்ப்பெய‌ரின் திரிபு. அதாவ‌து உண்மையின் இட‌ம், அங்கு தான் பெள‌த்த‌ த‌ர்ம‌த்தின் உண்மை முத‌லில் உரைக்க‌ப்ப‌ட்ட‌ இட‌ம்) செங்குத்தான‌ குன்றில் இற‌ங்கிய‌தாக‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் கூறினாலும், அவ‌ர் ப‌ற‌ந்து வ‌ர‌வில்லை, த‌மிழ்நாட்டில் நாகப் ப‌ட்டண‌த்திலிருந்து ப‌ட‌கில் தான் வ‌ந்த‌தாக‌க் கூறுகிறார் பெள‌த்த‌ ஆராய்ச்சியாள‌ராகிய‌ ஜ‌ப்பானிய‌ பேராசிரிய‌ர் ஹிக்கொசாக்கா.

சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு முன்பாகவே‌ பெள‌த்த‌ ம‌த‌த்தை புத்த‌ரின் சீட‌ர்க‌ளிட‌மிருந்து நேர‌டியாக‌ப் பெற்றுக் கொண்ட‌வ‌ர்க‌ள் த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள். ம‌கிந்த‌ தேரோ த‌மிழ்நாட்டில் போத‌னை செய்து விட்டு வ‌ந்த‌தால் அவ‌ரால் இல‌ங்கைத் த‌மிழ‌ர‌ச‌ன் தேவ‌ந‌ம்பிய‌தீச‌னுக்கும் த‌மிழில் போத‌னை செய்ய‌ முடிந்த‌து. தேவ‌ந‌ம்பிய‌தீச‌ன் சிங்க‌ள‌வ‌னாக‌ இருந்திருந்தால், எவ்வாறு ம‌கிந்த‌ தேரோ அர‌ச‌னுட‌ன் பேசியிருக்க‌ முடியும். தேவ‌ந‌ம்பிய‌ தீச‌ன் கால‌த்தில் சிங்க‌ள‌மொழி உருவாக‌வேயில்லை.

அர‌ச‌ன் எவ்வ‌ழியோ குடிக‌ளும் அவ்வ‌ழி என்ற‌ அக்கால‌ வ‌ழ‌க்க‌ப்ப‌டியே அர‌ச‌னைப் போன்றே ம‌க்க‌ளும் பெள‌த்த‌ ம‌த‌த்தைத் த‌ழுவின‌ர். த‌மிழ‌ர்க‌ளின் சைவ‌ச‌ம‌ய‌ம் பொறுமையும், ச‌கிப்புத்த‌ன்மையும், ம‌ற்ற‌மத‌ப் ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ளும் ம‌த‌ம் ம‌ட்டும‌ல்ல‌, பெளத்த‌ம், இந்தும‌த‌த்தின் பிரிவாகவும் இருந்ததால், பெள‌த்த‌மத‌ம் இல‌ங்கையில் விரைவாக‌ப் ப‌ர‌வ‌த் தொட‌ங்கிய‌து.


ஈழத்த‌மிழ‌ர்க‌ளும், சிங்க‌ள‌வ‌ர்க‌ளும்  ஒரு ம‌ர‌த்தின் கிளைக‌ள்.



வ‌ட‌ இந்தியாவிலிருந்து பெள‌த்த‌ ம‌த‌த்தைப் போதிக்க‌ வ‌ந்த‌ அசோக‌ச‌க்க‌ர‌வ‌ர்த்தியின் ம‌க‌ன் ம‌கிந்த‌தேரோ பெள‌த்த‌ ம‌த‌த்தை ம‌ட்டும் கொண்டுவ‌ர‌வில்லை, வ‌ட‌ இந்திய‌ர்க‌ளின் பாளி மொழியையும் பெள‌த்த‌ போத‌னைக‌ளையும், வட இந்திய ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளையும், புராண‌ அதாவ‌து க‌ற்ப‌னை மிகுந்த‌ புத்த‌ ஜாதக‌க்க‌தைக‌ளையும் இல‌ங்கை ம‌க்க‌ளுக்கு அறிமுக‌ப்ப‌டுத்தினார்.

பாளி மொழி, ஆரிய‌ர்க‌ளின் மொழி ம‌ட்டும‌ல்ல‌, ஆரிய‌ரின் வ‌ருகைக்கு முன்பே இந்தியாவில் வாழ்ந்த குடியினராகிய‌ ப‌ல‌ திராவிட இன‌ பூர்வீக குடிக‌ளை தெற்கு நோக்கி விர‌ட்டிய‌வ‌ர்க‌ளின் மொழி. ம‌த்திய‌ கால‌ப்ப‌குதிக‌ளில் ஐரோப்பாவில் கிறித்த‌வ‌ குருமார்க‌ளால் எவ்வாறு ல‌த்தீன் மொழி க‌ற்க‌ப்ப‌ட்டு, உப‌யோக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தோ அவ்வாறே பாளி மொழியும் புத்த‌ பிக்குக‌ளால்  இல‌ங்கையில் முன்னிலைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து.

ஆனால் இல‌ங்கையில் புத்த‌ச‌மய‌ம் அறிமுக‌ப்ப‌டுத்த‌ முன்னர், அதாவ‌து கி.மு 247 இல் சிங்க‌ள‌வ‌ர் என‌ ஒரு இன‌மக்க‌ள் இல‌ங்கையில் இருந்த‌மைக்கோ அல்ல‌து சிங்க‌ள மொழி என‌ ஒன்று இல‌ங்கையில் இருந்த‌மைக்கோ எந்த‌ வித‌ ஆதாரமும் கிடையாது.
 The Encyclopaedia Britannica states:

"The earliest surviving specimens of the (Sinhalese) language are brief inscriptions on rock, in Brahmi letters, of which the earliest date from c 200 BC. The language of these inscriptions does not appear to be greatly different from the other Indian Prakrits (i.e. chronologically Middle Indo Aryan languages) of the time."
ஆனால் இதேகால‌ க‌ட்ட‌த்தில் த‌மிழ் முழுமையாக‌ வ‌ள‌ர்ச்சிய‌டைந்த‌ மொழியாக‌விருந்த‌து என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. 

 
சிங்க‌ளவ‌ர்க‌ள் புத்த‌ச‌ம‌ய‌த்தை ஏற்றுக்கொண்டு ஒழுகினாலும் கூட‌, அவ‌ர்க‌ளின் முன்னோர்க‌ளின் சைவ/திருமாலியத்  த‌மிழ் ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌, வ‌ழிபாட்டு முறைக‌ளிலிருந்து முற்றாக‌ விடுபட்டுக் கொள்ள‌ அவ‌ர்க‌ளால் முடிய‌வில்லை. அத‌னால் அவ‌ர்க‌ள் த‌ம‌து த‌மிழ் முன்னோர்க‌ளைப் போன்றே க‌திர்காம‌ முருக‌னையும், த‌மிழ்ப்பெண் க‌ண்ணகியையும், ஐய‌னாரையும் இன்றும் தொட‌ர்ந்து வ‌ழிபடுகிறார்க‌ள். இவ்வ‌ள‌வுக்கும் விக்கிர‌க‌ வ‌ழிபாட்டை முழுமையாக‌ எதிர்த்த‌வ‌ர் கெள‌த‌ம‌ புத்த‌ர்.

 
சிங்க‌ள‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளின் சாதியையும், சாதிப்பாகுபாடுக‌ளையும் புத்த‌ச‌ம‌ய‌த்தைத் த‌ழுவினாலும், அவ‌ர்க‌ளின் த‌மிழ் முன்னோர்க‌ளின் சாதியையும், சாதிப்பாகுபாடுக‌ளையும்  சிங்க‌ள‌வ‌ர்க‌ளால் விட்டு உத‌ற‌ முடிய‌வில்லை. சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் சாதி இன்றும் முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கிற‌து, புத்த‌ச‌ம‌ய‌ம் சாதிப் பாகுபாட்டை எதிர்த்தாலும், த‌மிழ‌ர்க‌ளைப் போல‌வே சிங்க‌ள‌வ‌ர்க‌ளாலும் சாதிப்பிரிவுக‌ளை முற்றாக‌ விட்டொழிக்க‌ முடிய‌வில்லை.

புதிதாக‌ அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ம‌தத்தினால் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ம‌தவெறியும், அதை ஊக்குவிக்கும் புத்தம‌த‌ பிக்குக‌ளும், அத்துட‌ன் இன்னொரு மொழிய‌டையாள‌த்தின் உருவாக்க‌மும், இல‌ங்கையில் வாழ்ந்த‌ பூர்வீக‌ குடிக‌ளுக்கிடையே மேலும் பிரிவினைக‌ளை ஏற்படுத்திய‌து. த‌மிழைத் தொட‌ர்ந்து பேசி, பூர்வீக‌ ம‌த‌மாகிய சைவ‌ச‌ம‌ய‌த்தை தொட‌ர்ந்து க‌டைப்பிடித்த‌ த‌மிழ‌ர்களுக்கும், சிங்க‌ள‌ம் பேசும் முன்னாள் த‌மிழ‌ர்க‌ளுக்குமிடையே புத்த‌ம‌த‌த்தின் வ‌ருகையால் நிர‌ந்த‌ர‌ இடைவெளி உருவாக்கப்ப‌ட்ட‌து. 

அன்று ஆர‌ம்பித்த‌து தான் த‌மிழ் - சிங்க‌ள இன‌வாதம். முற்கால‌த்தில் இல‌ங்கை முழுவ‌தும் ப‌ர‌ந்து வாழ்ந்த‌ சைவ‌ப் பூர்வீக‌ குடிக‌ள், த‌மிழ‌ர்க‌ள் என்ற மொழி அடையாள‌த்துட‌ன் வ‌ட‌க்கை நோக்கி ந‌க‌ர‌த் தொட‌ங்கினார்க‌ள். 

அத‌னால் இல‌ங்கைக்குப் புத்த‌ச‌ம‌ய‌த்தின் வ‌ருகையாலும், பாளி மொழியின் அறிமுக‌த்தாலும், புதிதாக‌ மத‌ம் மாறிய‌வ‌ர்க‌ளிட‌ம் இய‌ற்கையாக‌வே காண‌ப்படும் ம‌த‌வெறி மிகுந்த‌ பிக்குக‌ளாலும் தான் சிங்க‌ள மொழியும், அத‌ன் மூலம் தனிப்ப‌ட்ட‌ சிங்க‌ள‌ இன‌மும் உருவாகிய‌தேய‌ல்லாம‌ல் அவ‌ர்க‌ள் ஆரிய‌ர்க‌ளல்ல‌, தமிழர்களைப் போன்றே, சிங்களவர்களிலும் கணிசமானோர்  வெளியிலிருந்து வ‌ர‌வுமில்லை, அவ‌ர்க‌ளும் புத்த‌ம‌த‌த்தை ஏற்றுக்கொண்ட, பாளி,எலு, த‌மிழ், ச‌ம‌க்கிருத‌ம் போன்ற மொழிக‌ளின் க‌ல‌ப்பினால் உருவாகிய‌ ஒரு மொழியைப் பேசும் முன்னாள் த‌மிழ‌ர்க‌ளே.


Ref: Various sources. 

8 comments:

வேகநரி said...

சகோ வியாசன், நாகர் இயக்கர் பற்றி உங்க விபரமான விளக்கத்திற்கு(நான் ஏற்று கொள்ளவிட்டாலும்) நன்றி.
//இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ள் மட்டும‌ல்ல‌ கோர‌ம‌ண்ட‌ல் க‌ரையிலிருந்த நாக‌ர் குடியிருப்புக‌ளில் இன்று வாழும் த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் கூட‌ நாக‌ர்க‌ளின் வ‌ழிவ‌ந்த‌ த‌மிழ‌ர்க‌ள் தான்//
உங்க நம்பிக்கைகளை,இலங்கை தமிழ் சிங்கல நம்பிக்கைகளை உண்மையாக்குவதற்காக த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ளையும் நாக‌ர்களாக்கிட்டிங்க :)

viyasan said...

ச‌கோ. வேக‌ந‌ரி,

என்னை ந‌ம்பாது விட்டால் ப‌ர‌வாயில்லை ஆனால் இந்தியாவின் அர‌சிய‌ல‌மைப்பையே உருவாக்கிய‌ அண்ண‌ல் அம்பேத்காரின் க‌ருத்தைக் கூட‌வா நீங்க‌ள் ஏற்றுக்கொள்ள‌வில்லை. தீர்க்க‌மாக‌ ஆராயாம‌ல், பூர்வீக‌ குடிக‌ளாகிய‌ நாகர்க‌ள், த‌மிழ் பேசிய‌ த‌மிழ‌ர்க‌ளே என்று அம்பேத்கார் கூறியிருப்பார் என்று நீங்க‌ள் நினைக்கிறீர்க‌ளா?

R.Puratchimani said...

ஒன்றே குலம்

viyasan said...

ச‌கோ.புர‌ட்சிம‌ணி,

முற்றிலும் உண்மை. நாங்க‌ள் த‌மிழ‌ர்க‌ளும் சிங்க‌ள‌வர்க‌ளும் வ‌ர‌லாற்றின்ப‌டி ஒரே குல‌ம் தான் ஆனால் அந்த‌ ஒற்றுமையெல்லாம் விட்டுப் போய் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாகி விட்ட‌ன‌. அவ‌ர்க‌ள் பெள‌த்த‌ர்க‌ளாக‌ மாறிய‌ பின்ன‌ர், சிங்க‌ள‌வ‌ர்க‌ள் தான் த‌மிழ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்று எதிரிகள் என்ப‌தை உறுதிப்ப‌டுத்த‌வும் நிறைய‌ ஆதார‌ங்க‌ள் உண்டு. அரபுக்க‌ளும் யூத‌ர்க‌ளும் ஆபிர‌காமின் குழ‌ந்தைக‌ள் அவ‌ர்க‌ள் ச‌கோத‌ர்க‌ள், ஆனால் இன்று எதிரிக‌ள். அது போன்ற‌து தான் இதுவும்.

வேகநரி said...

//அரபுக்க‌ளும் யூத‌ர்க‌ளும் ஆபிர‌காமின் குழ‌ந்தைக‌ள் அவ‌ர்க‌ள் ச‌கோத‌ர்க‌ள் ஆனால் இன்று எதிரிக‌ள்//
சகோ வியாசன்,
இங்கே மிக முக்கியமான பிரச்சனையாக இவர்கள் ஒன்றாவதுற்கு தடையாக இருப்பது இஸ்லாம் என்ற மதம். பிற மக்களை வெறுத்து அவர்களை அடிமையாக்கும் அதனுடைய மத கோட்பாடுகளேயாகும். இது யூத‌ர்க‌ளோடு மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் இவர்கள் பிற மக்களோடு சேர்ந்து ஒற்றுமையா வாழ பெரிய தடையாக இன்று இருக்கிறது. ஆனா உங்க சிங்கலவர்கள் பின்பற்றுவது இந்து மதத்தின் அடிப்படையில் தோன்றிய பௌத்தம். அவர்கள் தமிழகத்தில் இந்து ஆலயங்களை வழிபட வருபவர்கள் என்று அறிந்திருக்கிறேன். இப்படி வரும் அப்பாவிகளை தாக்கிய சீமான் கூட்டத்தின் கொடுமையையும் அறிந்திருக்கிறேன்.ஆனா நான் நேரில் கண்டி கொழும்பில் அவர்கள் இந்து ஆலயங்களில் வழிபட்டதை நான் நோரிலே பார்த்திருக்கிறேன்.

இஸ்லாமிய அரபிய ஆக்கிரமிப்பு கோட்பாடுகளுடன் செயல்படும் அரபிகளை எமது பிரதேச உணர்வுடன் செயல்படும் ஒரு பிரிவு மக்கள் மீது பொருத்தி பார்ப்பது நியாயமல்ல சகோ.

viyasan said...

//ஆனா உங்க சிங்கலவர்கள் பின்பற்றுவது இந்து மதத்தின் அடிப்படையில் தோன்றிய பௌத்தம். அவர்கள் தமிழகத்தில் இந்து ஆலயங்களை வழிபட வருபவர்கள் என்று அறிந்திருக்கிறேன்//

ச‌கோ.வேக‌ந‌ரி,

உங்க‌ளின் க‌ருத்துக்கு ந‌ன்றி. இல‌ங்கை விட‌ய‌த்தில் இவ்வ‌ள‌வு அக்க‌றை காண்பிக்கிறீர்களே. இல‌ங்கையுட‌ன் குடும்ப‌ம் அல்ல‌து பொருளாதார‌ தொட‌ர்புக‌ளும் உண்டா?

சிங்க‌ளவ‌ர்க‌ள் இந்துக் க‌ட‌வுள்களை வ‌ழிப‌ட்டாலும் அவ‌ர்க‌ளிட‌ம் இந்து எதிர்ப்பும் உண்டு. இல‌ங்கையில் இந்தும‌த‌ம் த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ அடையாள‌மாக‌ப் பார்க்க‌ப்படுகிற‌து. அத‌னால் தான் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ப‌ழ‌மையான‌ இந்துக் கோயில்க‌ளை ஆக்கிர‌மித்தும், அவ‌ற்றை புத்த‌ கோயில்க‌ளாக‌ மாற்ற‌வும் செய்கிறார்க‌ள். அவ‌ற்றை விவ‌ர‌மாக‌ என‌க்கு நேர‌மிருக்கும் போது எழுதுகிறேன்.

சிங்க‌ள‌வ‌ர்க‌ள் இந்தும‌த‌க் க‌ட‌வுள்க‌ளை வ‌ண‌ங்குவ‌த‌ற்குக் கார‌ண‌ம் குறுக்கு வ‌ழியில் இல‌குவாக‌ த‌ம்முடைய‌ வேண்டுத‌ல்க‌ளைப் பெற்றுக் கொள்வ‌த‌ற்காக‌, உண்மையில் இந்து மத‌த்தில் அவ‌ர்க‌ளுக்கு ஈடுபாடு கிடையாது. இது இந்துக்க‌ள் வேளாங்க‌ண்ணி மாதா கோயிலுக்குப் போவ‌து போன்ற‌து, அவ‌ர்க‌ளுக்கும் க‌த்தோலிக்க‌ ம‌த‌த்தில் ஈடுபாடு கிடையாது, வேளாங்கண்ணி மாதா புதுமையான‌வ‌ர் அவ‌ரிட‌ம் ம‌ன்றாடினால் நாங்கள் வேண்டுவ‌தைத் த‌ருவார், அது போன்ற‌து தான் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் சில‌ இந்துக் கோயில்க‌ளுக்குப் போவ‌தும். உண்மையான‌ புத்த‌ச‌ம‌ய‌த்தில் க‌ட‌வுளும் கிடையாது இப்ப‌டியான வேண்டுத‌ல்க‌ளுக்கும் இட‌மில்லை. ஆனால் சிங்க‌ள் பெள‌த்த‌ர்க‌ளின் ந‌ம்பிக்கையின் ப‌டி இந்துக்க‌ட‌வுள்க‌ள் எல்லோரும் புத்த‌ருக்கு வேலைக்கார‌ர்க‌ள், அவ‌ர்க‌ள் மூலமாக‌ புத்த‌ரை வேண்டிக் கொள்கிறார்க‌ள் அவ்வ‌ள‌வு தான். ஆனால் அதைப்பார்த்து விட்டு, இந்தியாவின் Anti Tamil இந்துக்க‌ள் எல்லோரும்,குறிப்பாக‌ இந்தியாவின் ஏனைய‌ மாநில‌ இந்துக்கள் எல்லாம், ஆகா, சிங்க‌ள‌வ‌ர்க‌ள் இந்துக்க‌ள் என்று பூரிப்ப‌தையும், ஆனால் த‌மிழ்நாட்ட‌வ‌ர்க‌ள் எல்லாம் இந்தும‌த‌த்தை எதிர்க்கும் பெரியாரிஸ்டுக்கள் என்று கூறுவ‌தையும் நான் பார்த்திருக்கிறேன்.

Anonymous said...

புத்தம் என்பது மதமல்ல அது ஒரு போதனை என்பதாகவே அறிந்துள்ளேன். புத்தர் பிறவிக் கடலைக் கடப்பதற்கான போதனைகளை செய்தாரே ஒழிய மதத்தைப் பரப்பவில்லை. அவரின் சீடகளே அவரின் மறைவிற்குப் பின் மதத்தை பரப்பினார்கள். ஈழம் சார்ந்த வரலாறுகள் பலவாறாக பேரினத்தால் திரபு படுத்தப்பட்டுள்ளது. இதிகாசங்களும் அதையே பின்பற்றியுள்ளன.

வேகநரி said...

//த‌மிழ்நாட்ட‌வ‌ர்க‌ள் எல்லாம் இந்தும‌த‌த்தை எதிர்க்கும் பெரியாரிஸ்டுக்கள் என்று கூறுவ‌தையும் நான் பார்த்திருக்கிறேன்//
சகோ வியாசன், பெரியாரின் வழிவந்த கட்சியின் தலைவர்கள் தமிழகத்திலே இன்று இருவர். கருணாநிதி, ஜெயலலிதா. இந்த ஜெயலலிதா தமிழக ஆலயங்கள் எல்லாம் வணங்கி திரிவது இந்தியா முழுவதும் தொலைகாட்சிகளில் காட்டபடுகிறது. கருணாநிதியோ இலங்கையிலே நல்லாயிருக்கும் இந்து ஆலயங்கள சிங்கலவங்க இடிச்சிட்டாங்க என்று கண்ணீர் வடிக்கிறார். இப்படியிருக்க இந்தும‌த‌த்தை எதிர்க்கும் பெரியாரிஸ்டுக்கள் தமிழகத்திலே இருக்கிறார்கள் என்று இந்திய இந்துக்கள் நினைக்கமாட்டாங்க.
இந்தியாவின் Anti Tamil இந்துக்க‌ள் என்று இந்தியாவில் கிடையவே கிடையாது.தமிழங்க இந்தியாவில் ஒன்றுக்குள் ஒன்றுங்க சகோ.

அப்புறம்உங்க பிறைவேட் விசாரணைக்கான பதில்கள்
//இல‌ங்கை விட‌ய‌த்தில் இவ்வ‌ள‌வு அக்க‌றை காண்பிக்கிறீர்களே//
இல‌ங்கையுட‌ன் குடும்ப‌ம் கிடையாது.
இலங்கைக்கு போகும் போது ஒவ்வொரு தடவையும் நண்பர்கள் உறவினங்க ஏதோ பிரச்சனை நடந்திடுமோ என்று பயப்பிடுவாங்க ஆனா மலேசியா சிங்கபுர் தாய்லாந்து போனா அப்படியல்ல.அவ்வளவு பிரசாரங்க தமிழ்நாட்டில்