Wednesday, May 22, 2013

சீமான் மீது மட்டும் ஏனிந்த‌க் கொல‌வெறி?என்ன‌வோ கார‌ண‌த்துக்காக‌ அல்ல‌து அவ‌ர‌து அர‌சிய‌ல் ஆலோச‌க‌ர்க‌ளின் ஆலோச‌னையின் ப‌டி காஸ்மீரிய‌ பிரிவினைவாதியாகிய‌ யாசீன் மாலிக்கை ஈழ‌விடுத‌லைப் போராட்ட‌த்தில் உயிர் நீத்த‌ த‌மிழ‌ர்க‌ளின் நினைவு நாளில் அழைத்து வ‌ந்து த‌மிழ்நாட்டில் ஒரே மேடையில் தோன்றினார் வ‌ள‌ர்ந்து வ‌ரும் த‌மிழ் அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளில் ஒருவராகிய‌ சீமான் அவர்க‌ள்.


இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌த்துட‌ன் த‌மிழீழ‌ ஆத‌ர‌வு த‌லைவ‌ர்களின் கூட்டும் ந‌ட்புற‌வும், ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ந‌ல‌ன்க‌ளை அவ‌ர்க‌ளின் போராட்ட‌த்தைப் பாதிக்கும் என்ப‌தால் நான் கூட‌ அதை எதிர்த்துக் க‌ண்டித்து எழுதினேன். அப்ப‌டியான ப‌ய‌ம், எங்க‌ளுக்கு, ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு இருப்ப‌து நியாய‌மான‌தே என்ப‌தை எல்லோரும் ஒப்புக்கொள்வ‌ர். த‌மிழீழ‌ ஆத‌ர‌வு மேடையில் இஸ்லாமிய‌ பிரிவினைவாதிக்கும் இட‌ம் கொடுத்து, ஈழ‌ விடுத‌லைப் போராட்ட‌த்துக்கு இஸ்லாமிய‌ தீவிர‌வாதத்துக்கும் தொட‌ர்பிருப்ப‌தாக‌, ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் எதிரிக‌ளும், த‌மிழ‌ரல்லாத‌ இந்திய‌ர்க‌ளும் நினைக்கும் வ‌கையில் செய்து விட்டாரே என்ற‌ ஆத‌ங்க‌ம் எங்க‌ளுக்கு ஏற்ப‌டுவ‌து த‌விர்க்க‌ முடியாத‌து.


காய்த்த‌ ம‌ர‌த்துக்குத் தான் க‌ல்லெறி விழும்?


ஆனால் புற்றிலிருந்து ஈச‌ல் வெளிவ‌ருவ‌து போல் சீமானை எதிர்த்தும் க‌ண்டித்தும் ப‌ல‌ க‌ட்டுரைக‌ள் வெளிவ‌ருகின்ற‌ன‌. இது தான் சாட்டு என்று சில‌ர் த‌ர்மஅடியும் கொடுக்கின்ற‌ன‌ர் போல் தெரிகிற‌து.  அதில் பெரும்பான்மையின‌ரின் க‌ண்ட‌ன‌ம் எல்லாம் காஸ்மீரிய‌ அர‌சிய‌ல்வாதி யாசீன் மாலிக்கை த‌மிழ்நாட்டுக்கு அழைத்து வ‌ந்து விட்டார் சீமான் என்ப‌து தான். சீமானைப் போன்றே யாசீன் மாலிக்கும் ஒரு இந்திய‌க் குடியுரிமையுள்ள‌ இந்திய‌ர் அவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் ச‌னநாய‌க‌ வ‌ழியில், இந்திய‌ ஆத‌ர‌வு அர‌சிய‌ல் ம‌ட்டும‌ல்ல‌, இந்திய‌ எதிர்ப்பு அர‌சிய‌ல் ந‌ட‌த்தும் உரிமையை இந்திய‌க் குடிய‌ர‌சின் அர‌சிய‌ல‌மைப்பு அளிக்கிற‌து என்பதை எவ‌ராலும் மறுக்க‌ முடியாது.


இதே போன்ற‌ நிலை நாம் தமிழர் கட்சி தமது ஆவணத்தை வெளியிட்ட நாட்க‌ளிலும் இருந்த‌து.  அப்பொழுதும் நான்கு திசைகளிலிருந்தும் விச‌ம‌த்த‌ன‌மான‌ விமர்சனங்கள் குவிந்த‌ன‌. அவரைப் பாசிசவாதியென்போர் ஒருபுறம், சிவசேனாவின் தளபதி என்போர் மறுபுறம், இல்லை, இல்லை அவனொரு இனவாதியென்றொரு குரல் இன்னொருபுறம் எனக் கூக்குரலிடுவார் கூட்டத்துக்கு குறைவிருக்க‌வில்லை. ஆனால் நாம் தமிழர் ஆவணத்தை முழுமையாகப் படித்த எவருமே அந்த ஆவணத்தின்  சாரம் "தமிழ்நாடு தமிழருக்கே", என்பதாகும் என ஒப்புக்கொள்வர். இதைத் தான் பெரியாரும் முத‌லில் சொன்ன‌தாக‌ ப‌ல‌ர் இன்றும் கூட்ட‌ம் போட்டுச் சொல்கிறார்க‌ள். ஆனால் நாம் த‌மிழ‌ர் ஆவ‌ண‌ம் வெளிவ‌ந்த‌ கால‌த்திலும் இப்ப‌டியான‌ கொல‌வெறி சீமானுக்கு எதிராக‌ப் ப‌ல‌ராலும் க‌ட்ட‌விழ்த்து விட‌ப்ப‌ட்ட‌தை நாம‌றிவோம்.


உண்மையில் சீமானின் திடீர் வ‌ள‌ர்ச்சி பலருக்கும் பொறாமையை ஏற்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌து எல்லோருக்கும் தெரியும். பெரியாரிஸ்டுக‌ள் ஒருப‌க்க‌ம், திராவிட‌ம் பேசினால் தான் தமிழ்நாட்டைத் த‌ம‌து க‌ட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க‌ முடியுமென்ப‌தை உண‌ர்ந்த‌ தமிழ‌ர‌ல்லாத‌ திராவிட‌ வீர‌ர்க‌ள் ஒருப‌க்க‌ம், த‌மிழ‌ர்க‌ள் அனைவரும் நாம் த‌மிழ‌ர்க‌ளாக‌ ஒன்றுப‌டுவ‌தை விரும்பாத‌ இந்திய‌ தேசிய‌வாதிக‌ள் ஒருப‌க்க‌ம் சீமானைப் ப‌ழிவாங்க‌ த‌ருண‌ம் பார்த்திருந்தார்க‌ள். இந்த‌ யாசின் மாலிக் ச‌ம்ப‌வ‌ம், சும்மா வெறுவாயை மென்று கொண்டிருந்த‌ சீமானின் எதிரிக‌ள் எல்லோருக்கும் அவ‌ல் கிடைத்த‌ மாதிரிப் போய்விட்ட‌து. காய்த்த‌ ம‌ர‌த்துக்குத் தான் க‌ல்லெறி விழும் என்பார்க‌ளே அது போன்ற‌து தான் இதுவும் போலும்.


சீமான் அவ‌ர்க‌ள் யாசீன் மாலிக்கை த‌மிழ்நாட்டுக்கு அழைத்து வ‌ந்த‌மைக்கான‌ கார‌ண‌த்தை, முறையான‌தொரு விள‌க்க‌த்தை இந்திய‌ர்க‌ளாகிய‌ த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ளுக்கு அளித்து விட்டார், ஆனால் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் விடுத‌லைப் போரில் உயிரிழ‌ந்த‌ ம‌க்க‌ளின் நினைவுக் கூட்ட‌த்தில் எத‌ற்காக‌ இஸ்லாமிய‌ பிரிவினைவாதியை அழைத்து வ‌ந்தார் என்ப‌த‌ற்கு ம‌ட்டும‌ல்ல‌,  என்ன கார‌ண‌த்துக்காக‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌த்துக்கும் காஸ்மீர் பிரிவினைவாத‌த்துக்கும் முடிச்சுப் போட்டார் என்ப‌த‌ற்கான‌ விள‌க்க‌த்தையும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கும் அளிப்பார் என‌ ந‌ம்புவோம்.


சீமானின் விள‌க்க‌ம்

காஷ்மீர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவரான யாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. அது இன்றளவும் சுதந்திரமாக இயங்கி வருகிறது. யாசின் மாலிக்கும்அவரது இயக்கமும் காஷ்மீர் மக்களின் அரசியல் உரிமைக்காக போராடி வருகிறார்கள். அது காங்கிரஸ்பா.ஜ.க. போன்ற கட்சிகளுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த கட்சிக்கும்அதன் அரசியல் தலைமைக்கும் இந்திய நாட்டில் எங்கு சென்றும் கருத்துக்களை கூற உரிமை இருக்கிறது. அது இந்திய அரசியல் சட்டப்பூர்வமானது.

காஷ்மீர் சகோதரன்

காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாதுதமிழ்நாட்டைபோல காஷ்மீரும் இந்திய நாட்டின் ஒரு அங்கம்தானேகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒரே நாடு என்று நீங்கள்தானே முழங்கினீர்கள். அது உண்மையானால் எனது காஷ்மீர் சகோதரனை இங்கே அழைத்து வந்த பேச வைப்பதில் உங்களுக்கு என்ன சங்கடம்?

அவர் பிரிவினைவாத தலைவர் என்கிறீர்கள். அப்படியானால்காஷ்மீர் சென்றபோது இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்அவரை காஷ்மீர் சட்டப்பேரவைக்கு வெளியே சந்தித்துப் பேசியது ஏன்காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண பிரதமராக இருந்த வாஜ்பாய் முதல் இன்றுள்ள பிரதமர் வரைநீங்கள் கூறக்கூடிய அந்த பிரிவினைவாத தலைவர்களுடன் பேச அனுபவம் வாய்ந்த இந்திய அரசு அதிகாரியை நியமித்து பேசி வருவது ஏன்நாங்கள் அழைத்து பேச வைத்தால் குற்றம்இந்திய மத்திய அரசு அவர்களோடு பேசினால் சரியா?

இனப்படுகொலைகாரன் ராஜபக்சே வருவது இந்தியாவுக்கு பெருமையா?

இது என்ன தலைக்கு ஒரு சீயக்காய்தாடிக்கு ஒரு சீயக்காய்ஈழத்தில் தடை செய்யப்பட்ட குண்டுகளை போட்டு ஒன்றே முக்கால் லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேயை அழைத்துரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கிறீர்களேஅது இந்த தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா?

கடந்த 35 ஆண்டுகளாக கச்சத்தீவு கடற்பகுதியில் 544 மீனவர்களை கொன்று குவித்துள்ள சிங்கள கடற்படையின் தலைவரான ராஜபக்சவிற்கு ராஜ உபசாரம் செய்வது தமிழர்களை வெறுப்பேற்றாதாபிரிவினைக்கு வித்திடாதாதமிழீழத்தில் எம் தமிழினம் எப்படி திட்டமிட்டு இன்றளவும் அழிக்கப்பட்டு வருகிறதோஅதேபோல் காஷ்மீரிலும் நாங்கள் நசுக்கப்படுகிறோம் என்று யாசீன் மாலிக்  கூறினாரேஅதற்கு உங்கள் பதில் என்ன?

இந்திய படைகள் தங்கள் மண்ணில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறிஅம்மக்கள் நடத்திய பெரும் போராட்டம் இந்த நாட்டிற்கே தெரியும். அரசமைப்புப் பிரிவு 370ன் கீழ் காஷ்மீருக்கு அதிகமான சிறப்பு சலுகைகளை கொடுத்து அம்மாநிலம் செழிப்புடன் உதவி வருவதாக பொன் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

அப்படியானால் அந்த மக்கள் இந்திய அரசுக்கு எதிராக போராடி வருவது ஏன்? அம்மாநிலத்தில் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம் எனும் காட்டுமிராண்டித்தனமான சட்டத்தை நடைமுறைப்படுத்திஇந்திய ராணுவம் எந்த வீட்டில் வேண்டுமானாலும் நுழைந்து யாரை வேண்டுமானாலும் விசாரணைக்குத் தூக்கி செல்லலாம் என்கிற நிலையை இன்று வரை அனுமதிக்கிறீர்களே ஏன்?

ராணுவத்தால் அம்மாநிலத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் பத்தாயிரம் பேருக்கு மேல் இன்று வரை என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பு கூறியதே அதற்கு இந்த தேச பக்தர்களின் பதில் என்ன?

காஷ்மீராகட்டும்பழங்குடியினரை வேட்டையாடும் தண்டகாரண்ய காடுகள் ஆகட்டும்இந்த நாட்டில் எங்கெல்லாம் மக்கள் அடக்குமுறைக்கும்ஒடுக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டாலும் நாம் தமிழர் கட்சி அதை எதிர்க்கும்ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக அவர்களோடு நின்று உரிமைக் குரல் கொடுக்கும்.

8 comments:

Anonymous said...

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுற இந்த புத்தியால் தான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவா பேச பெரும்பாலோர் விரும்புவதில்லை.

viyasan said...

//பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுற இந்த புத்தியால் தான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவா பேச பெரும்பாலோர் விரும்புவதில்லை.//

ம‌ன்னிக்க‌வும், நீங்க‌ள் த‌வ‌றாக‌ப் புரிந்து கொண்டீர்க‌ள். அதுவ‌ல்ல‌ என்னுடைய‌ நோக்க‌ம். நாங்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் த‌வ‌றுக‌ளைச் சுட்டிக்காட்ட‌த் த‌ய‌ங்க‌ மாட்டோம், அதே வேளையில் அடிக்க‌டி கூடார‌த்தையும் மாற்ற‌ மாட்டோம். :)

வவ்வால் said...

தலைவரே,

பதிவெழுதி உருட்டுக்கட்டையடி கொடுத்தது யாரோ? ஒரு வேளை கருத்து சொல்லும் உரிமை உங்களுக்கு மட்டும் தான் இருக்கோ?

சீமான் யாசின் மாலிக்கை அழைத்து இலங்கையில் கூட்டம் போட்டிருக்கலாம் ,இல்லை ஜம்மு காஷ்மீரில் போட்டிருக்கலாம்,என்ன எழவுக்கு கடலூரில் போட்டாரோ அங்கு ஈழத்தமிழர்களும் இல்லை காஷ்மீரிகளும் இல்லை ,அங்கு வசிப்பவர்கள் எல்லாம் காஷ்மீர் இந்தியா வுடன் இருப்பதை விரும்புபவர்கள் தான்!

மகாராஷ்ட்ரா மராத்தியருக்கேனு சொன்ன பால்தாக்கரேவை ஆதரிப்பவர்களால் தான் சீமானின் கோஷத்தினையும் ஆதரிக்க முடியும், உங்களுக்கு பால் தாக்கரே ஓகேனா சீமானும் ஓகே தான் :-))

ஆனால் எனக்கு ரெண்டுமே தேவையில்லாத ஆட்கள்!

viyasan said...

//பதிவெழுதி உருட்டுக்கட்டையடி கொடுத்தது யாரோ? ஒரு வேளை கருத்து சொல்லும் உரிமை உங்களுக்கு மட்டும் தான் இருக்கோ?//

ஐயா பஞ்சாய‌த்து,
உருட்டுக்க‌ட்டை எல்லாம் உங்க‌ ஊர்ப்ப‌ழ‌க்க‌ம். எங்க‌ளின் நாட்டில் எல்லாம் Automatic weapons தான். அப்ப‌டி ஒன்றும் ந‌ட‌க்க‌வில்லை அத‌னால் தான் ப‌திலெழுத முடிகிற‌து. :))

viyasan said...

//சீமான் யாசின் மாலிக்கை அழைத்து இலங்கையில் கூட்டம் போட்டிருக்கலாம் ,இல்லை ஜம்மு காஷ்மீரில் போட்டிருக்கலாம்,என்ன எழவுக்கு கடலூரில் போட்டாரோ அங்கு ஈழத்தமிழர்களும் இல்லை காஷ்மீரிகளும் இல்லை ,அங்கு வசிப்பவர்கள் எல்லாம் காஷ்மீர் இந்தியா வுடன் இருப்பதை விரும்புபவர்கள் தான்!//
உங்க‌ளுக்கு ஒரு இழ‌வும் புரிய‌வில்லை. க‌ட‌லூருக்கு வ‌ருவ‌த‌ற்கு யாசீன் மாலிக்கிற்கு விசா எதுவும் தேவைப்ப‌ட‌வில்லை. அதாவ‌து க‌ட‌லூருக்கு ம‌ட்டும‌ல்ல‌, க‌ட‌ப்பாவில் போயும் யாசீன் மாலிக் கூட்ட‌ம் போட‌லாம், பிரிவினைவாதியாக‌ இருந்தாலும் அவ‌ரைத் த‌டுக்க‌ யாராலும் முடியாது. அவ‌ரிட‌ம் இந்திய‌க் குடியுரிமையுள்ள‌து அதனால் உங்க‌ளின் வாத‌ம் வீண்வாத‌ம், அத‌ற்கு சீமான் ப‌தில‌ளித்து விட்டார். ஆனால் எத்ற்காகா ஈழ‌த்தில் யுத்த‌த்தில் இற‌ந்த‌வ‌ர்க‌ளின் நினைவுநாளில் யாசீன் மாலிக்கை அழைத்து வ‌ந்து, ஈழ‌விடுத‌லைப் போராட்ட‌த்துக்கும், காஸ்மீரின் பிரிவினைவாத‌த்துக்கும் முடிச்சுப் போட்டார் என்ப‌த‌ற்கு விளக்க‌த்தை சீமான் அளிப்பார் அல்ல‌து அடுத்த‌ முறை அவ‌ர‌து வெளிப்ப‌ய‌ண‌த்தில் அவர் விள‌க்க‌ம் கொடுக்க‌ நேரிடும்.

viyasan said...

//மகாராஷ்ட்ரா மராத்தியருக்கேனு சொன்ன பால்தாக்கரேவை ஆதரிப்பவர்களால் தான் சீமானின் கோஷத்தினையும் ஆதரிக்க முடியும், உங்களுக்கு பால் தாக்கரே ஓகேனா சீமானும் ஓகே தான் //

சீமானுக்கு முன்பே "த‌மிழ்நாடு த‌மிழ‌ருக்கே" என்று கோச‌ம் போட்ட‌வ‌ர் பெரியார் தானாம். அப்ப‌டியானால் பால்தாக்க‌ரேவையும் பெரியாரையும் அல்ல‌வா ஒப்பிட‌ வேண்டும். அதைத் தான் சீமான் இன்று அப்ப‌டியே ஒப்பிக்கிறார். எய்த‌வ‌னிருக்க‌ அம்பை நோவ‌து எப்ப‌டி ஐயா நியாய‌ம். :)

R.Puratchimani said...

"தமிழ்நாடு தமிழருக்கே" என்பதே முட்டாள்தனமான முழக்கம்.

எந்த மொழியை சார்ந்தவனாக இருந்தாலும் தமிழ்நாட்டை ஆளலாம், தமிழ்நாட்டில் வசிக்கலாம்.


//அவர் பிரிவினைவாத தலைவர் என்கிறீர்கள். அப்படியானால், காஷ்மீர் சென்றபோது இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், அவரை காஷ்மீர் சட்டப்பேரவைக்கு வெளியே சந்தித்துப் பேசியது ஏன்? காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண பிரதமராக இருந்த வாஜ்பாய் முதல் இன்றுள்ள பிரதமர் வரை, நீங்கள் கூறக்கூடிய அந்த பிரிவினைவாத தலைவர்களுடன் பேச அனுபவம் வாய்ந்த இந்திய அரசு அதிகாரியை நியமித்து பேசி வருவது ஏன்? நாங்கள் அழைத்து பேச வைத்தால் குற்றம், இந்திய மத்திய அரசு அவர்களோடு பேசினால் சரியா?//
சிறு பிள்ளைத்தனமான கேள்வி.

அவர்கள் பிரிவினைவாதம் வேண்டாம் என்று கூற பேசுகிறார்கள். நீங்களும் அதையா பேசினீர்கள் சீமான்?

யாசின் மாலிக் சேகுவாரா அல்ல என்பதை சீமான் புரிந்துகொள்ளவேண்டும். காஷ்மீரை தனி நாடாக்கி காலத்திற்கு ஒவ்வாத இசுலாமிய சட்டத்தை நிறுவ முயற்சிக்கும் செயல் நடைபெற துளியும் அனுமதிக்க இயலாது.

சிந்தனையை மாற்றுங்கள் சீமான். உங்களிடம் திறமை உள்ளது. மக்களை மனிதத்தின் கீழ் ஒன்றிணைக்க முயலுங்கள்.

வவ்வால் said...

தலைவரே,

ஆட்டோமேட்டிக் வெப்பன் வேலை செய்யலை போல ,ஆனால் உருட்டுக்கட்டை எப்பொழுதும் வேலை செய்யும் :-))

// க‌ட‌லூருக்கு வ‌ருவ‌த‌ற்கு யாசீன் மாலிக்கிற்கு விசா எதுவும் தேவைப்ப‌ட‌வில்லை. அதாவ‌து க‌ட‌லூருக்கு ம‌ட்டும‌ல்ல‌, க‌ட‌ப்பாவில் போயும் யாசீன் மாலிக் கூட்ட‌ம் போட‌லாம், பிரிவினைவாதியாக‌ இருந்தாலும் அவ‌ரைத் த‌டுக்க‌ யாராலும் முடியாது. //

யாசின் மாலிக் தானாக எங்கே வேண்டும்னா வந்து போகட்டுமே, ஈழம் பேசும் சீமான் ஏன் இழுத்துக்கிட்டு அலையுறார்னு தான் அதை சொன்னேன்,அதுக்கூட புரியாமல் பேசிக்கிட்டு இருக்கீர்.

அப்புறம் தனிநாடு கேட்டு இந்தியாவில் யாரும் பேசுவதற்கோ ,பிரச்சாரம் செய்வதற்கோ உரிமை இல்லை அரசியல் சட்டப்ப்படி தவறு.

முந்தைய எனது பதிவிலும் சொல்லி இருக்கிறேன்,

காண்க,

கி.பி 1962 இல் இந்திய அரசியல் சட்டத்தின் 19 ஆம் பிரிவில் ஒரு திருத்தம் கொண்டு வந்தார்கள், இதனை பதினாராவது அரசியல் சட்டத்திருத்தம் அல்லது தனிநாடு தடைச்சட்டம் என்றார்கள். மேலும் இதனடிப்படையிலேயே பதவிப்பிரமாணமும் எடுக்க வேண்டும்.

இச்சட்டத்திருத்தத்தின் படி , இந்தியாவில் இயங்கும் எந்த ஒரு அமைப்போ, தனிநபரோ தனி நாடு என கோரிக்கை வைத்து இயங்கக்கூடாது, அப்படி செய்தால் தேர்தலில் போட்டியிடத்தடை விதிக்கப்படும், தேவைப்பட்டால் நிரந்தர தடையே விதிக்கப்படும்.

சட்ட திருத்த விவரங்களுக்கு காண்க...

http://indiacode.nic.in/coiweb/amend/amend16.htm

இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் கூட தனிநாடுனு வாயத்தொறந்தா உள்ளத்தூக்கிப்பொட்டுருவாங்க :-))

# பெரியார் கோஷம் போட்டு செல்லாமல் போனது அறியாமலா மீண்டும் சீமான் கோஷம் போடக்கிளம்பி இருக்கார் :-))

பெரியாருக்கே செல்லாமல் போச்சு ,அப்போ சீமானுக்கும் செல்லாமல் தான் போகும்னு சொன்னால் தப்பா ?