Sunday, May 19, 2013

சீமானின் அர‌சிய‌ல் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு உத‌வுமா?


நாம் தமிழர் மேடையில் காஸ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்!"தான் போக‌ வ‌ழி தெரியாத‌ மூஞ்சூறு விள‌க்குமாத்தையும் தூக்கிக் கொண்டு கிழ‌ம்பிச்சுதாம்" என்ற‌ இல‌ங்கைப் ப‌ழ‌மொழி போன்ற‌து தான் த‌மிழீழ‌ விடுத‌லை அர‌சிய‌ல் செய்யும் சீமான் அவ‌ர்க‌ள், காஸ்மீரின் இஸ்லாமிய‌ தீவிர‌வாதிக‌ளையும் துணைக்க‌ழைத்துக் கொண்டு ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் விடுத‌லைக்கு உத‌வ‌ நினைப்ப‌தும். 

க‌ட‌லூரில் இன்று ந‌டைபெற்ற‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் பொதுக்கூட்ட‌த்துக்கு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவரும், பிரிவினைவாதியுமான‌ யாசின் மாலிக், கலந்துகொண்டு "காஸ்மீர் போராட்ட‌மும், த‌மிழ் ம‌ண் போராட்ட‌மும் ஒன்று தான்" என்று கூறியிருக்கிறாராம். அது ஒன்றே போதும் முழு இந்தியாவையும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கெதிராக‌வும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு ஆதர‌வாக‌வும் திருப்புவ‌த‌ற்கு.


இப்பொழுதே Times of Indiaவில் த‌மிழ்நாடு த‌விர்ந்த‌ இந்தியாவின் ஏனைய‌ மாநில‌த்த‌வ‌ர்க‌ளெல்லாம் ஈழத்த‌மிழ‌ர்க‌ளையும், ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌த்தையும், காஸ்மீரின் இஸ்லாமிய‌ பிரிவினைவாத‌த்துட‌னும், தீவிர‌வாத‌த்துட‌னும் தொட‌ர்பு ப‌டுத்தி ஈழ‌த்த‌மிழ‌ர்களின் விடுத‌லைப் போராட்ட‌த்தை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக‌ப் பேச‌த் தொட‌ங்கி விட்டார்க‌ள். இப்ப‌டியான‌ த‌மிழ்நாட்டுக்கு வெளியேயுள்ள‌ இந்திய‌ர்க‌ளின் சிந்த‌னை தான் இந்தியாவை சிங்கள‌வ‌ர்க‌ளுக்கு உத‌வி, இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த‌ வித‌ பாதிப்புமேற்ப‌டுத்தியிருக்காத‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் நியாய‌மான‌ விடுத‌லைப் போராட்ட‌த்தை ந‌சுக்கிய‌து. சீமான் போன்ற‌ த‌மிழீழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளின் முஸ்லிம் வாக்குப் பிடிக்கும் ஸ்ட‌ண்டுக‌ள் எதிர்ம‌றை விளைவுக‌ளை ஈழ‌த்தமிழ‌ர்க‌ளுக்கு ஏற்ப‌டுத்தும் என்ப‌தில் ஐய‌மில்லை. தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் த‌மிழ‌ர‌ல்லாத‌ இந்திய‌ர்க‌ளின் ந‌ல்லெண்ண‌ம் தான் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் விடுத‌லைப் போராட்ட‌ம் வெற்றிய‌டைய‌த் தேவையேய‌ல்லாம‌ல், இந்தியாவிலுள்ள‌ பிரிவினைவாதிக‌ளின் ஆத‌ர‌வ‌ல்ல‌.

"இந்தியாவை அலட்சியம் பண்ணி நாம் ஒருபொழுதும் எந்த அரசியல் தீர்வையும் அடைய முடியாது. இந்தியாவை பகைக்க வேண்டும் என எண்ணுபவர்கள் யாவரும் சிறிலங்காவின் மறைமுக நிகழ்ச்சி நிரல்களுக்கு துணை போகிறவர்கள்."

ஆர‌ம்ப‌ கால‌த்திலிருந்தே ஈழ‌விடுத‌லைப் போராட்ட‌ த‌லைவ‌ர்க‌ளும் தொண்ட‌ர்க‌ளும் விட்ட‌ பெரிய‌ த‌வ‌று எதுவென்றால் த‌மிழ்நாட்டிலுள்ள‌ திராவிட‌ உதிரிக்க‌ட்சிக‌ள் ஈழ‌விடுத‌லைப் போராட்ட‌த்தைக் க‌ட‌த்திக் கொண்டு போக‌ அனும‌தித்த‌து தான். அவ‌ர்க‌ளால் த‌மிழ்நாட்டில் ஒர‌ள‌வுக்கு ஆதர‌வைப் பெற்றுத்த‌ர‌ முடிந்தாலும், இந்தியாவின் ம‌த்திய அரசில் எதையும் சாதிக்க முடிய‌வில்லை. த‌மிழ்நாட்டிலேயே கட்டுப்ப‌ண‌த்தைக் காப்பாற்றிக் கொள்ள‌ முடியாத‌ இந்த‌க்க‌ட்சிக‌ள் எல்லாம் த‌மிழீழ‌ப் போராட்ட‌த்தைத் த‌ம‌து அர‌சிய‌ல் ந‌ல‌ன்க‌ளுக்காக‌ உப‌யோகித்துக் கொண்டார்க‌ளே த‌விர‌ இவ‌ர்க‌ளால் இந்திய‌ ம‌த்திய‌ அர‌சின் வெளியுற‌வுக் கொள்கைக‌ளில் எந்த‌ மாற்ற‌த்தையும் கொண்டு வ‌ர‌முடிய‌வில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளே மத்திய அரசில் தமது செல்வாக்கைப் பாவித்து ஈழத்தமிழர்களுக்காதரவாக எதையும் செய்ய முடியவில்லை.

என்னுடைய‌ அனுப‌வ‌த்தில், த‌மிழ‌ர‌ல்லாத‌ இந்திய‌ ந‌ண்ப‌ர்க‌ள் இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னையைப் ப‌ற்றிக் கூறுவ‌தெல்லாம், "இல‌ங்கையில் த‌மிழர்க‌ள் மிக‌வும் கொடுமைக்குள்ளாக்க‌ப்படுகிறார்க‌ள்கொல்ல‌ப்ப‌டுகிறார்கள், அதனால் பிரிவினை தான் ச‌ரியான‌ தீர்வாக‌க் கூட‌ இருக்க‌லாம் ஆனால் எங்க‌ளின் நாட்டில் காஸ்மீர் பிரிவினையை நாங்க‌ள் எதிர்த்துக் கொண்டு, எப்படி அய‌ல் நாட்டில் பிரிவினையை ஆத‌ரிக்க‌ முடியும் ப‌ங்க‌ளாதேஸ் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ போதிருந்த‌ உல‌க‌ அர‌சிய‌ல் நிலை வேறு" என்ப‌து தான்.
இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்க‌ள் கூட‌, இந்துக்க‌ளைப் பெரும்பான்மையாக‌க் கொண்ட‌ த‌மிழீழ‌த்துக்கு உத‌வ‌த் த‌ய‌ங்குவ‌த‌ற்குக் கார‌ண‌ம் இந்தியாவில் தீர்க்க‌ப்ப‌டாம‌லிருக்கும் காஸ்மீர் பிரிவினைக் கோரிக்கை தான். இந்த‌ இல‌ட்ச‌ண‌த்தில் இந்திய‌ அர‌சின் ம‌ட்டும‌ல்ல‌, பெரும்பான்மை இந்திய‌ர்க‌ளின் வ‌யிற்றெரிச்ச‌லைக் கொட்டிக் கொள்வ‌து போல், இல‌ங்கையில் உயிரிழ‌ந்த‌வ‌ர்க‌ளின் நினைவு நாள் கூட்ட‌த்தில் காஸ்மீர் போராட்ட‌மும், த‌மிழ் ம‌ண் போராட்ட‌மும் ஒன்று தான் என்று காஸ்மீர் விடுத‌லை இயக்க‌த் த‌லைவ‌ரின் பேச்சு  நிச்ச‌ய‌மாக‌ இந்தியாவின‌தோ அல்ல‌து இந்திய‌ர்க‌ளின‌தோ ஆத‌ர‌வை ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்குப் பெற்றுத் த‌ர‌ப்போவ‌தில்லை.


சிங்க‌ளவர்க‌ள் த‌மிழீழ‌ விடுத‌லைப் போராட்ட‌த்தையும் இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌த்தையும் இணைத்து விட‌ எத்த‌னையோ புல‌னாய்வுத் த‌ந்திர‌ங்க‌ளையும், வ‌த‌ந்திக‌ளையும் அவிழ்த்து விட்டும் அவ‌ர்க‌ளால் அதில் வெற்றி கொள்ள‌ முடிய‌வில்லை. த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ள் உள்ள‌வ‌ரை இஸ்லாமிய‌ தீவிர‌வாதிக‌ளுட‌ன் ஈழ‌விடுத‌லைப் போராட்ட‌த்தைத் தொட‌ர்பு ப‌டுத்த‌ யாராலும் முடிய‌வில்லை, அத‌ற்கு விடுத‌லைப் புலிக‌ள் அவ‌ர்க‌ளுக்கு வாய்ப்பு அளிக்க‌வில்லை. அத‌னால் தான் அமெரிக்க‌ ஜ‌னாதிப‌தி தேர்த‌லுக்குப் போட்டியிட்ட‌ Hillary Clinton  தேர்த‌லில் உச்ச‌க்க‌ட்ட‌ நேர‌த்திலும், அமெரிக்கா தீவிர‌வாதத்துக்கு எதிராக‌ப் போரிட்டுக் கொண்டிருந்த‌ போதும் கூட‌ விடுத‌லைப் புலிக‌ளுக்கும், இஸ்லாமிய‌ தீவிர‌வாதிக‌ளுக்கும் இடையில் வேறுபாடுக‌ள் உண்டு என‌க் கூறினார். ஆனால் சீமான் போன்ற‌வ‌ர்க‌ளின் இப்ப‌டியான‌ செய‌ல்க‌ள் இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளின் நியாமான‌ உரிமைப் போராட்ட‌த்தை இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌த்துட‌ன் தொட‌ர்பு ப‌டுத்த‌ சிங்க‌ள‌ அர‌சுக்கு நிச்ச‌ய‌மாக‌ உத‌வ‌ப் போகிற‌து.

இந்தியாவை அலட்சியம் பண்ணியோ, எதிர்த்தோ அல்ல‌து இந்திய் அர‌சைச் சீண்டிப் பார்த்தோ ஈழத் தமிழர்கள் ஒருபொழுதும் எந்த அரசியல் தீர்வையும் அடைய முடியாது. இந்திய‌ அர‌சின் உத‌வியுட‌ன் த‌மிழீழ‌ ம‌ண்ணைத் திட்ட‌மிட்ட‌ சிங்க‌ள‌க் குடியேற்ற‌ங்க‌ளிலிருந்து காப்பாற்றினால்  ம‌ட்டும்தான் என்றோ ஒருநாள் த‌மிழீழ‌ம் ம‌ல‌ர‌முடியும். ஆனால் புல‌ம்பெய‌ர்ந்த‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் தமிழீழ‌ம்,த‌மிழீழ‌ம் என்று புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளிலிருந்து க‌த்துகிறார்க‌ள். த‌மிழ்நாட்டிலும் த‌மிழீழ‌ம் அமைப்போம் என்று உதிரிக்க‌ட்சிக‌ள் முழ‌க்க‌ம் இடுகின்ற‌ன‌. ஆனால் முக்கிய‌மான‌ இர‌ண்டு க‌ட்சிக‌ளும் அதைப்ப‌ற்றி மூச்சு விடுவ‌தில்லை. ஆனால் சிங்க‌ள‌வ‌ர்க‌ளோ கொஞ்ச‌ம், கொஞ்ச‌மாக‌ திட்ட‌மிட்டு த‌மிழீழ‌ ம‌ண்ணை சிங்க‌ள‌க் குடியேற்ற‌ங்க‌ளால் விழுங்கிக் கொண்டு வ‌ருகிறார்க‌ள். த‌மிழ‌ர்க‌ள் த‌ம‌து சொந்த‌க் கிராம‌ங்க‌ளிலேயே சிறுபான்மையின‌ராக்க‌ப்ப‌டுகிறார்க‌ள்.

காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றல்ல‌


காஸ்மீர் போராட்ட‌த்துக்கும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின்  போராட்ட‌த்துக்குமிடையே பாரிய‌ வேறுபாடுக‌ள் உண்டு.  காஸ்மீரிக‌ளை இந்தியாவில் யாரும் இரண்டாந்த‌ர‌ப் பிர‌சையாக‌ ந‌ட‌த்துவ‌தில்லை. அவ‌ர்களின் மொழி அழிக்கப்படவில்லை, நிலம்  ஆக்கிரமிக்க‌ப்ப‌ட‌வில்லை, அவ‌ர்க‌ளின் நில‌த்தில் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் திட்ட‌மிட்டுக் குடியேற்ற‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ள் த‌ம‌து சொந்த‌ கிராம‌ங்க‌ளிலும், ந‌க‌ர‌ங்க‌ளிலும் சிறுபான்மையின‌ர்க‌ளாக்க‌ப்ப‌ட‌வில்லை. உண்மையில் இந்தியாவின் இந்துக்க‌ள் விரும்பினாலும் கூட‌, காஸ்மீரீல் சொந்த‌மாக‌ நில‌ம் வாங்கிக் குடியேற‌ முடியாது. காஸ்மீரின் முஸ்லீம் பெரும்பான்மையை மாற்றும் வ‌கையில் இந்தியா எதுவும் செய்ய‌ முடியாத‌ள‌வுக்கு இந்திய‌ அர‌சிய‌ல‌மைப்பில் அவ‌ர்க‌ளுக்கு உரிமைக‌ள் வழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.  எல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ தனி மாநில‌ம், த‌னியாக‌ மாநில‌ அர‌சு, முத‌ல‌மைச்ச‌ர், அமைச்ச‌ர‌வை எல்லாமே காஸ்மீரிக‌ளுக்குண்டு. இப்ப‌டி எதுவுமேயற்று, ஒவ்வொரு நாளும் திட்ட‌மிட்ட‌ சிங்க‌ள‌க் குடியேற்ற‌ங்க‌ளாலும், இராணுவ‌ ஆக்கிர‌மிப்பாலும் த‌ம‌து சொந்த‌,பார‌ம்ப‌ரிய‌ கிராம‌ங்க‌ளிலேயே சிறுபான்மையின‌ராக்க‌ப்ப‌டும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளை ஒப்பிடுவ‌து வெறும் அப‌த்த‌ம்.

த‌மிழீழ‌ ம‌ண் முழுவ‌தையும் திட்டமிட்ட சிங்க‌ள‌க் குடியேற்ற‌ங்களால் சிங்களவர்கள் க‌ப‌ளீகர‌ம் செய்த‌ பின்பு அங்கு த‌மிழீழ‌ம் எப்ப‌டி அமைய‌ முடியும்? அதனால் எம‌து குறிக்கோள் த‌மிழீழ‌மாக‌ இருந்தாலும், இன்று எம‌க்கு முன்னால் உள்ள‌ மிக‌வும் முக்கிய‌மான‌ விட‌ய‌ம்  திட்ட‌மிட்ட‌ சிங்கள‌க் குடியேற்ற‌ங்க‌ளை, எம‌து பார‌ம்ப‌ரிய‌ ம‌ண்ணில் ந‌டைபெறும் இன‌ச்சுத்திக‌ரிப்பை த‌டுப்ப‌த‌ற்கான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளாக‌ இருக்க‌ வேண்டுமே த‌விர‌ வெறும் த‌மிழீழ‌ கோச‌ம‌ல்ல‌.

வ‌ட‌மாகாண‌ம் முழுவ‌தும் இராணுவ‌ம‌ய‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து ம‌ட்டும‌ன்றி, த‌மிழ‌ர்க‌ளின் வீடுக‌ளும் நில‌ங்க‌ளும் பாரிய‌ இராணுவ‌க் குடியிருப்புக‌ள் அமைப்ப‌த‌ற்காக‌ த‌மிழ‌ர்க‌ளிட‌மிருந்து ப‌றிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. வ‌ன்னியில் த‌மிழ‌ர்க‌ள் காடுக‌ளிலும், வீதியோர‌ங்க‌ளிலும் வாழ அவ‌ர்க‌ளின் விளைநில‌ங்க‌ள் அனைத்தும் சிங்க‌ள‌ இராணுவ‌த்தால் விவ‌சாய‌ம் செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌...

இல‌ங்கை சுத‌ந்திர‌ம‌டைந்த‌ கால‌த்திலிருந்து கிழ‌க்கில் ந‌டைபெற்ற‌ திட்ட‌மிட்ட‌ சிங்க‌ள‌க் குடியேற்ற‌ங்க‌ளால் அம்பாறை மாவ‌ட்ட‌த்தில் த‌மிழ‌ர்க‌ள். முஸ்லீம்க‌ளுக்கும், சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கும் அடுத்த‌தாக‌ மூன்றாவ‌து சிறுபான்மையிராக‌ விட்ட‌ன‌ர்.  அதே போல் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பிலும்  சிறுபான்மையின‌ராகி விட்ட‌ன‌ர். அத‌னால் தான் முஸ்லீம்க‌ளின் ஆத‌ர‌வுட‌ன் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் கிழ‌க்கு மாகாண‌த்தில் ஆட்சியைக் கைப்ப‌ற்றிக் கொண்ட‌ன‌ர். இதே நிலை வ‌ட‌க்கிலும் ஏற்ப‌ட்டுக் கொண்டிருக்கின்ற‌து.

காஸ்மீர் பிரிவினைவாதிக‌ளின் ஆதர‌வு ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்குத் தேவைய‌ற்றது


இந்தியாவின் ஆத‌ர‌வில்லாம‌ல் த‌மிழீழ‌ம் ஒருபோதும் அமைய‌ப் போவ‌தில்லை, அதை இந்தியா அனும‌திக்க‌ப் போவ‌துமில்லை.  இந்தியா ம‌ன‌து வைத்தால் ம‌ட்டும் தான் சிங்களக் குடியேற்ற‌ங்க‌ளால் த‌மிழ‌ர்க‌ளின் பாரம்ப‌ரிய‌ பூமி சிங்க‌ளமயமாக்கப்படுவ‌தைத் த‌டுத்து நிறுத்த‌ முடியும். இப்பொழுது எம‌க்கு முன்னாலுள்ள‌ பிர‌ச்ச‌னை அதுதான். அத‌னால் காஸ்மீரி பிரிவினைவாதிக‌ளின் த‌மிழீழ‌ ஆதரவுக் கோச‌ம் இந்தியாவின் ஆத‌ர‌வை எம‌க்குப் பெற்றுத் த‌ராது. எந்தளவுக்கு அவர்களிடமிருந்து எம்மை விலக்கிக் கொள்கிறோமோ அது தான் நல்லது.  

தமிழ்நாட்டு முஸ்லிம்களின் வாக்குகள் சீமானுக்குத் தேவை அதற்காக ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் காஸ்மீர் பிரிவினைவாதத்துடன் இணைப்பது கண்டிக்கப்பட வேண்டும். அத‌னால் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் நாடு காக்கும் போராட்ட‌த்தை இந்தியாவிலுள்ள‌ இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ இய‌க்க‌ங்க‌ளுட‌ன் தொட‌ர்புப‌டுத்தி, சும்மாவே த‌மிழ‌ர்க‌ள் என்றாலே வெறுக்கும் த‌மிழ‌ர‌ல்லாத பெரும்பான்மை இந்திய‌ர்க‌ளை முற்று முழுதாக‌ சிங்க‌ள‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளாக‌ மாற்றுவ‌த‌ற்கு சீமான் போன்ற‌வ‌ர்க‌ள் உத‌வ‌க் கூடாது என்ப‌து தான் என்னுடைய‌ வேண்டுகோள். இப்படியே விட்டால் நாளைக்கு அல்கொய்தாவிலிருந்தும்  யாரையாவது அழைத்து வந்து, த‌மிழ் ம‌ண் போராட்ட‌த்துக்கு அவ‌ர்க‌ளும் ஆத‌ர‌வு என்பார் சீமான், அத்த‌னை மேற்குல‌க‌நாடுக‌ளின் ஆத‌ர‌வையும் இழ‌ந்து விடுவார்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள். ஆனால் எந்தப்பக்கம் சாய்ந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்று தெரிந்த இலங்கை முஸ்லிம்கள் மட்டும், சிங்களவர்கள் எப்படி எட்டி உதைத்தாலும், உதையை வாங்கிக் கொண்டு அவர்களின் காலடியிலேயே கிடப்பார்கள்.

என‌க்கு உண்மையிலேயே அர‌சிய‌லில் பெரிய‌ ஈடுபாடு கிடையாது. போர் ந‌டைபெற்ற‌ கால‌த்தில் நான் ஈழ‌த்தில் வாழ்ந்த‌துமில்லை. ஆனால் ஈழ‌த்த‌மிழ‌ன் என்ற‌ வ‌கையில் த‌மிழீழ‌ விடுத‌லைக்கு எம‌து ம‌க்க‌ளுக்கு அமைதியான‌ சுதந்திரமான, வாழ்க்கை அமையவேண்டும் என நினைக்கும் ப‌ல்லாயிர‌க்க‌ணக்கான‌ சாதார‌ண‌ புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்களின் நிலைப்பாடு தான் என்னுடையதும் ஆனால் என‌க்கே காஸ்மீர் விடுத‌லைக்குப் போராடும் தீவிர‌வாத‌ இய‌க்க‌த்தின் த‌லைவ‌ர், த‌மிழீழ ஆத‌ர‌வாள‌ர்க‌ள் என‌க் க‌ருத‌ப்ப‌டும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கூட்ட‌த்தில் க‌ல‌ந்து கொண்டு "காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே" என்ற‌தும் இப்ப‌டியான‌ ந‌ட்புறவும் பேச்சுக்க‌ளும் இந்தியாவையும், தமிழரல்லாத இந்திய‌ர்க‌ளையும் ஒட்டு மொத்த‌மாக‌,  இப்பொழுது உள்ள‌தை விட‌ மோசமான‌ நிலையில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கெதிராக‌ திருப்ப‌ப் போகிறது என்ற‌ உண‌ர்வு தான் ஏற்ப‌டுகிற‌து. 

21 comments:

வவ்வால் said...

தலைவரே,

சீமான் விடயத்தில் நம்ம கருத்தோட ஒத்துப்போறிங்க, சீமானின் ஈழ பாசம் எப்போல இருந்து பொங்கிச்சுனு பார்த்தாலே அவரோட திடீர் அவதாரத்தின் நோக்கம் புரியும்.

உண்மையில் சீமானுக்கு இலங்கை அரசியல் என்றில்லை உள்ளூர் தமிழக அரசியல் குறித்து கூட போதுமான அறிவில்லை. தமிழகத்தில் கழக அரசியல் பிடிக்காத மக்கள் நிறைய பேர் குறிப்பாக இளைஞர்கள் நிறைய இருப்பதால் யாராவது புதுசா அரசியலுக்கு வந்து மாற்றம் வராதானு ஏங்குவதால் இவர் பின்னாலும் கொஞ்சம் பேர் போறாங்க, மற்றபடி இவரு கடை யாவாரம் கூடிய சீக்கிரம் படுத்துக்கும்.

இந்திய அதுவும் வட இந்திய அறிவு சீவிக்கள் அவ்வப்போது ஈழத்தையும் ,காஷ்மீரையும் முடிச்சு போட்டு ஒரே அடியாக குழப்புவதுண்டு, அதே வேலையை சீமான் செய்து நீங்கள் சொல்வது போல ஒட்டுமொத்தமாக ஈழ பிரச்சினைக்கு எதிர்மறையான நிலையை உருவாக்க தான் பார்க்கிறார்.

இஸ்லாமிய வாக்கு வங்கி தமிழக அரசியலைப்பொறுத்த வரையில் ஒரு சில தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்க வல்லவையே தவிர ,ஒட்டு மொத்தமாக ஆள்வோரை தேர்ந்தெடுக்கும் வகையில் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தினை உருவாக்கியதே இல்லை, எனவே சொற்ப இஸ்லாமிய வாக்குகளை கவர சீமான் இப்படி செய்கிறார் என்றால் ,அவருக்கு அரசியல் அரிச்சுவடியே தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

viyasan said...

//தலைவரே,//

huh த‌லைவ‌ரா? நீங்க‌ள் தானே ப‌ஞ்சாய‌த்துத் த‌லைவ‌ர். :- ) சீமான் மீது ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் பல‌ர் அபார‌ந‌ம்பிக்கை வைத்திருக்கிறார்க‌ள் (நான் உட்ப‌ட‌). இந்த‌ முடிவுக்கு த‌வ‌றான‌ ஆலோச‌க‌ர்க‌ள் கார‌ண‌மாக‌வும் இருக்க‌லாம். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ம‌ண்காக்கும் போராட்ட‌த்தை, காஸ்மீரிக‌ளின் பிரிவினைவாத‌த்துட‌ன் இணைப்ப‌த‌ற்கு சீமான் போன்ற‌ த‌மிழீழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே மேடைய‌மைத்துக் கொடுப்ப‌து ஆப‌த்தான‌ அர‌சிய‌ல், இத‌னால் முழு இந்தியாவும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கெதிராக‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு உத‌வ‌லாம்.

தமிழானவன் said...

இப்படியொரு பதிவை உங்களிடமிருந்து எதிர்பாக்க வில்லை வியாசன். யாசின் பிரிவினைவாதத்தீவிரவாதி என்றால் புலிகள் யார் ?

சீமான் அரசியலில் எனக்கு ஆதரவே கிடையாது. ஆனால் அவரது இந்த நடவடிக்கை நேர்மையான ஒன்று. இந்தியாவை இன்னமும் நம்பறீங்க. முஸ்லிம் ஓட்டுக்காக காஷ்மீரை ஆதரிக்கிறாரா நல்லது. காஷ்மீரை ஆதரித்தால் முஸ்லிம் ஓட்டுக் கிடைக்கும் என்று யார் சொன்னார்கள். தமிழ்நாட்டில் ஈழ ஆதரவை வைத்து எந்தக் கட்சியும் வெல்ல முடியாது என்பது போலவே காஷ்மீரை வைத்தும் முஸ்லிம்களின் ஓட்டைப் பெற முடியாது.

//முழு இந்தியாவையும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கெதிராக‌வும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு ஆதர‌வாக‌வும் திருப்புவ‌த‌ற்கு.// இப்போது மட்டும் இந்தியா நமக்கு ஆதரவாக இருக்கிறதா ?

//காஸ்மீர் விடுத‌லை இயக்க‌த் த‌லைவ‌ரின் பேச்சு நிச்ச‌ய‌மாக‌ இந்தியாவின‌தோ அல்ல‌து இந்திய‌ர்க‌ளின‌தோ ஆத‌ர‌வை ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்குப் பெற்றுத் த‌ர‌ப்போவ‌தில்லை.// உங்களது இந்திய ஆதரவும் மேற்குலக ஆதரவும் தமிழீழ விடுதலையைப்பெற்றுத் தரப்போவதில்லை. போரை நடத்தி இனத்தை அழித்த இந்தியாவை இன்னும் நீங்கள் ஏற்றிப் போற்றுகிறீர்கள்.

காஷ்மீரில் போர் நடைபெறவில்லை. ஆனால் இந்தியராணுவத்தின் ஆக்ரமிப்பில்தான் இருக்கிறது. அது இந்தியாவின் மாநிலமாக இல்லாமல் இன்னொரு நாடாக இருந்தது. அதன் உரிமைகள் மீறப்பட்டதால்தான் போராட்டம் வெடித்தது. அதற்கு அத்தனை உரிமைகள் இருப்பதும் அதனால்தான். ஈழத்தமிழர்கள் இந்திய வந்தேறிகள் என்று நம்புவதும், காஷ்மீர் இந்தியாவின் மாநிலம் என்று நம்புவதும் ஒன்றே. ஒரே மூட நம்பிக்கை.

//இலங்கை முஸ்லிம்கள் மட்டும், சிங்களவர்கள் எப்படி எட்டி உதைத்தாலும், உதையை வாங்கிக் கொண்டு அவர்களின் காலடியிலேயே கிடப்பார்கள்.// இப்படியும் சொல்வீர்கள். இந்தியாவின் உதை தாங்காமல் போராடினால் இஸ்லாமியப் பிரிவினைவாதத் தீவிரவாதி என்பீர்கள்.

R.Puratchimani said...

//"காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே" என்ற‌தும் இப்ப‌டியான‌ ந‌ட்புறவும் பேச்சுக்க‌ளும் இந்தியாவையும், தமிழரல்லாத இந்திய‌ர்க‌ளையும் ஒட்டு மொத்த‌மாக‌, இப்பொழுது உள்ள‌தை விட‌ மோசமான‌ நிலையில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கெதிராக‌ திருப்ப‌ப் போகிறது என்ற‌ உண‌ர்வு தான் ஏற்ப‌டுகிற‌து. //

100% உண்மை.
சீமானின் தாலிபான் ஆதரவே அவரை காட்டிக்கொடுத்து விட்டது....

viyasan said...

//இப்படியொரு பதிவை உங்களிடமிருந்து எதிர்பாக்க வில்லை வியாசன். யாசின் பிரிவினைவாதத்தீவிரவாதி என்றால் புலிகள் யார் ? //

ச‌கோ. த‌மிழான‌வ‌ன்,

மன்னிக்க‌வும். என்னுடைய‌ க‌ருத்து என்ன‌வென்றால் சீமான் போன்ற தமிழீழ‌ அர‌சிய‌ல் செய்ப‌வ‌ர்கள், த‌ம‌து அரசிய‌ல் ந‌ட்புற‌வுக‌ள், அவ‌ர்க‌ள் கொண்ட‌ அர‌சிய‌ல் நோக்க‌த்துக்கு உத‌வுமா என்ப‌தை ஆய்ந்து ந‌ட்புக் கொள்ள‌வேண்டும் என்ப‌து தான். புலிக‌ளும் ஆயுத‌மேந்திய‌ தீவிர‌வாதிக‌ள் தான், த‌லிபான்க‌ளும் ஆயுதமேந்திய‌ தீவிர‌வாதிகள் தான், ஆனால் ஹில்ல‌றி கிளின்ர‌ன் எப்ப‌டி இர‌ண்டையும் வேறுப‌டுத்தினார்க‌ள் பார்த்தீர்க‌ளா. அந்த‌ வேறுபாட்டை இல்லாம‌ல் செய்யும் வ‌கையில் காஸ்மீரில் இஸ்லாமிய‌ எல்லை தாண்டிய‌ தீவிர‌வாத‌த்துட‌ன், த‌மிழீழ‌ விடுத‌லைப் போராட்ட‌த்தை, ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் அனும‌தி இல்லாம‌லே, இணைக்கும் சீமானின் செய‌ல் க‌ண்டிக்க‌த்த‌க்க‌து. இத‌னால் அவ‌ர் உண்மையிலேயே ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் விடுத‌லைப் போராட்ட‌த்தை மேலும் பின்ன‌டையச் செய்கிறார் என்ப‌து தான் என்னுடைய‌ க‌ருத்தாகும்.

viyasan said...

//முழு இந்தியாவையும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கெதிராக‌வும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு ஆதர‌வாக‌வும் திருப்புவ‌த‌ற்கு.// இப்போது மட்டும் இந்தியா நமக்கு ஆதரவாக இருக்கிறதா ? //

சகோ. த‌மிழான‌வ‌ன்,

இல்லை, இப்ப‌டியான‌ செய‌ல்பாடுக‌ள், உதார‌ண‌மாக‌, ஆர‌ம்ப‌ கால‌த்திலிருந்தே ஈழவிடுத‌லைப் போராட்ட‌த் த‌லைவ‌ர்க‌ளும், தொண்ட‌ர்க‌ளும் பெரியாரிச‌, திராவிட‌த் த‌லைவ‌ர்க‌ளின் சால்வைத் த‌லைப்பில் தொங்கிய‌தால், எவ்வாறு முழு இந்தியாவும், அசைக்க‌ முடியாத‌ பெரும்பான்மை இந்துக்க‌ளாகிய‌ ஈழத்த‌மிழ‌ர்க‌ளின் விடுத‌லைப் போராட்ட‌த்தை, பெரியாரின் இந்து ம‌றுப்பு, ஆரிய‌ எதிர்ப்பு, திராவிட‌க் கொள்கையின் அங்க‌மாக‌ப் பார்க்க‌த் தொட‌ங்கி எங்களுக்கு ஆத‌ர‌வு கொடுக்க‌வில்லையோ அதை விட‌ மோச‌மான‌ நிலையை, இந்த‌ காஸ்மீரி பிரிவினைவாத‌த்துட‌னான‌ ந‌ட்புற‌வு ஏற்படுத்தலாம்.

viyasan said...

//போரை நடத்தி இனத்தை அழித்த இந்தியாவை இன்னும் நீங்கள் ஏற்றிப் போற்றுகிறீர்கள்.//

இந்தியாவின் மீது என‌க்கு எந்த‌வித‌மான‌ ப‌ற்றும் கிடையாது, உண்மையில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் எவ‌ருக்குமே கிடையாது என்று கூற‌லாம். இந்தியாவின் மீதுள்ள‌ எங்க‌ளின் பாச‌மும், ப‌ற்றும் வேங்க‌ட‌த்தின் குன்றுக‌ளைத் தாண்டியவுட‌ன் இல்லாம‌ல் போய்விடும். ஆனால் ய‌தார்த்த‌மான‌ உண்மைக‌ளை நாம் ம‌றுக்க‌ முடியாது, இந்தியாவைப் ப‌கைத்துக் கொண்டு அல்ல‌து இந்தியாவின் ஆத‌ர‌வில்லாம‌ல் நாம் எதையும் சாதிக்க‌ முடியாது. இப்பொழுது வ‌ட‌ கிழ‌க்கில் ந‌டைபெறும் திட்ட‌மிட்ட‌ சிங்க‌ள‌க் குடியேற்ற‌ங்க‌ளை நிறுத்த‌ வேண்டும் அல்ல‌து த‌மிழீழ‌மும் கிடையாது ஒரு ம‌ண்ணும் இருக்காது. அது இந்தியாவால் ம‌ட்டும் தான் முடியும். இந்த‌ வேளையில் இந்தியாவின் பிரிவினை இய‌க்க‌த்துட‌ன் த‌மிழீழ‌விடுத‌லை ஆத‌ர‌வாள‌ர்க‌ளின் ந‌ட்பு இந்தியாவை அல்ல‌து த‌மிழ‌ர‌ல்லாத‌ இந்திய‌ ம‌க்க‌ளை எங்க‌ளுக்கு உத‌வ‌த் தூண்டாது.

viyasan said...

//காஷ்மீரில் போர் நடைபெறவில்லை. ஆனால் இந்தியராணுவத்தின் ஆக்ரமிப்பில்தான் இருக்கிறது. அது இந்தியாவின் மாநிலமாக இல்லாமல் இன்னொரு நாடாக இருந்தது. அதன் உரிமைகள் மீறப்பட்டதால்தான் போராட்டம் வெடித்தது. அதற்கு அத்தனை உரிமைகள் இருப்பதும் அதனால்தான். //

காஸ்மீர் பிர‌ச்ச‌னை நீங்க‌ள் சொல்வ‌தை விட‌ச் சிக்க‌லான‌து. ஆர‌ம்ப‌த்திலேயே காஸ்மீரிக‌ள‌ல்லாத‌ பாகிஸ்தான் தீவிர‌வாதிக‌ள், பாகிஸ்தானிய‌ அர‌சின் ஆத‌ர‌வுட‌ன் அத்துமீறி உழ்நுழைந்து கல‌வ‌ர‌த்தை ஏற்ப‌டாமலிருந்திருந்தால், காஸ்மீர் பிர‌ச்ச‌னையே உருவாகியிருக்காது. காஸ்மீர் ம‌க்க‌ளுக்கு ம‌னித‌வுரிமை ச‌ம்ப‌ந்த‌மான‌ பிர‌ச்ச‌னைக‌ள் இல்லை என்று நான் வாதாட‌வில்லை ஆனால் அவ‌ற்றை ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னையுட‌ன் ஒப்பிட‌ முடியாது. அதை விட‌ காஸ்மீரிக‌ளின் துன்ப‌ங்க‌ளுக்கு முக்கிய‌ கார‌ண‌ம் பாகிஸ்தான் ஆத‌ரவு எல்லை க‌ட‌ந்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் தான்.

viyasan said...

//இப்படியும் சொல்வீர்கள். இந்தியாவின் உதை தாங்காமல் போராடினால் இஸ்லாமியப் பிரிவினைவாதத் தீவிரவாதி என்பீர்கள்.//
நான் கூற‌ வந்த‌தென்ன‌வென்றால், சீமான் போன்ற‌வ‌ர்க‌ள் த‌மிழீழ‌ அர‌சிய‌ல் ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ள், காஸ்மீர் முஸ்லீம்க‌ளுட‌ன் கூட்டுச் சேர்வ‌தை விட‌, இல‌ங்கை முஸ்லிம்க‌ளுட‌ன் கூட்டுச்சேர‌ முய‌ற்சிக்க‌லாம், அத‌னால் ஓர‌ள‌வு த‌மிழீழ‌ விடுத‌லைக்கு ந‌ன்மை ஏற்ப‌ட‌லாம். ஆனால் அது அவர்க‌ளால் முடியாது, ஏனென்றால் இல‌ங்கை முஸ்லீம்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் கால‌டியை விட்டுச், சிங்க‌ள‌வ‌ர்க‌ள் உதைத்தாலும் எழும்ப‌ மாட்டார்கள். ஏனென்றால் அது ஒன்று தான் இல‌ங்கையில் பிழைக்கும் வ‌ழி, அது இல‌ங்கை முஸ்லீம்க‌ளுக்கு ந‌ன்றாக‌த் தெரியும் என்ப‌து தான்.

viyasan said...

@R.Puratchimani

ச‌கோ.புர‌ட்சிம‌ணி,

உங்க‌ளின் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

நந்தவனத்தான் said...

ஈழத்தமிழர்களுக்கு தமிழக எல்லை தாண்டி இருக்கும் இந்தியாவை பிடிக்காது என்கிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டுகாரனுவளுக்கு இந்தியாவை இன்னமும் பிடித்துதான் இருக்கிறது. இந்திய எதிர்ப்பு கடை வைத்தால் தமிழகத்தில் தலையில் துண்டைப் போட்டு கொண்டு போக வேண்டியதுதான். உள்ளுர் பிரச்சனை பேசாமல் ஈழத்தை தமிழகத்தில் முன்னிறுத்தி அரசியல் செய்த வைகோ எம்பி தேர்தலில்கூட வெல்ல இயலாமல் தோற்றார். இது தெரிந்தும் ஏன் சீமான் இதை செய்கிறார்? கருணாவையும் ஜெயாவையும் எதிர்த்து அரசியல்களத்தில் வெல்ல இயலும் என சீமானுக்கு நம்பிக்கையில்லை. ஆனால் வண்டி ஓட காசு தேவை. அது அவருக்கு புலம் பெயர்ந்த புலி ஆதரவாளரிடையே இருந்துதான் வருகிறது. அவர்களோ இந்தியாவின் மீது சொல்லனாத வெறுப்பில் இருக்கிறார்கள். அவர்களுக்கு சீன் போட்டு காட்டுகிறார் சீமான்! அதாவது காசுக்கு வித்தை காட்டுகிறார்,அவ்வளவுதான். என்னதான் இருந்தாலும் சீமானின் தொழிலே வித்தை காட்டுவதுதானே(சினிமா). இதுவரை தமிழகத்துக்கு வரும் அப்பாவி சிங்களவரை தாக்கும் நாடகம் போட்டார்கள், இப்போது காஷ்மீர்-ஈழம் டிராமா போடுகிறார்கள்.

சுஜாதா சொன்னது போல தமிழ்நாட்டை ஈழத்தமிழர்கள் நம்புவது முட்டாள்தனம். பிளாக்குகளில் ஈழத்தை ஆதரித்தும் இந்தியாவை எதிர்த்தும் முழங்கும் டுபாக்கூர் பதிவர்களை நம்பி வீணாகாதீர்கள். இந்தியாவில் தமிழ்நாட்டில் ஜனநாயகம் ஓரளவிற்காவது இன்னமும் இருக்கிறது. ஈழத்தை எதிர்த்தால் சிங்களவனை ஆதரித்தால் தமிழ்நாட்டில் மக்கள் ஆதரவை சுத்தமாக இழந்துவிடுவோம் என்கிற நிலமை இருந்தால் காங்கிரசும் திமுகவும் சிங்கள ஆதரவு மற்றும் ஈழத்தமிழரை கண்டு கொள்ளாத நிலைப்பாட்டினை ஒரு போதும் எடுத்திருக்காது. ராஜீவ் கொலை எனும் முட்டாள்தனத்தை புலிகள் செய்த பிறகு தமிழ்நாட்டில் சாதாரண பொதுமக்களிடையே ஈழம் பற்றிய கவலை சுத்தமாக போய்விட்டது. புலிகள் அழிவு நடக்கவே நடக்காது என்ற நம்பிக்கை பிழைத்த பின்பு ஈழ ஆதரவு தற்போது தலைதூக்குகிறது. அதை சுயநலத்திற்காக நசுக்குகிறார் இந்த சீமான். இவரை நம்பி வீணாப்போக இருப்பது இவரது கட்சிக்காரர்களும் புலம் பெயர்ந்தோரும்.

viyasan said...

//புலிகள் அழிவு நடக்கவே நடக்காது என்ற நம்பிக்கை பிழைத்த பின்பு ஈழ ஆதரவு தற்போது தலைதூக்குகிறது. அதை சுயநலத்திற்காக நசுக்குகிறார் இந்த சீமான்.//

சகோ. ந‌ந்த‌வ‌ன‌த்தான்,

முற்றிலும் உண்மை. உங்க‌ளுடைய‌ க‌ருத்து தான் என்னுடைய‌தும் ஆனால் சீமான் இதை அறிந்து தான் செய்கிறாரென‌ நான் ந‌ம்பவில்லை. அர‌சிய‌லில் புதுமுக‌ங்க‌ளை இய‌க்குவ‌து அவ‌ர்க‌ளின் ஆலோச‌க‌ர்க‌ள் தான் அங்கு தான் ஏதோ கோளாறு ந‌ட‌க்கிற‌து. சீமான் அவ‌ர்க‌ள் இந்திய‌ன் என்ற‌ முறையில் ச‌ன‌நாய‌க‌ நாடான‌ இந்தியாவில், இன்னொரு இந்திய‌ரான‌ யாசின் மாலிக்குட‌ன் இணைந்து இந்திய‌ எதிர்ப்பு அர‌சிய‌ல் செய்ய‌ அவ‌ருக்கு முழு உரிமை இருக்கிற‌து ஆனால் அவ‌ர் த‌மிழீழ‌ அர‌சிய‌லும் சேர்த்துச் செய்கிறார், அதனால் அவ‌ர‌து இந்திய‌ எதிர்ப்பு ஈழ‌ அர‌சிய‌ல் ஈழத்த‌மிழ‌ர்க‌ளின் ந‌ல‌ன்க‌ளுக்கு அழிவை ஏற்படுத்தி, சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் க‌ர‌ங்க‌ளைப் ப‌ல‌ப்ப‌டுத்தும் என்ப‌து என்னுடைய‌ க‌ருத்தாகும்.

viyasan said...

//ஈழத்தமிழர்களுக்கு தமிழக எல்லை தாண்டி இருக்கும் இந்தியாவை பிடிக்காது என்கிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டுகாரனுவளுக்கு இந்தியாவை இன்னமும் பிடித்துதான் இருக்கிறது.//

ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு த‌மிழ‌க‌த்துக்கு வெளியே இந்தியாவைப் பிடிக்காது என்ப‌த‌ல்ல‌ என்னுடைய‌ க‌ருத்து. நான் சொல்வ‌தெல்லாம் திருவேங்க‌ட‌த்துக்கு அப்பால் எங்க‌ளுக்கும் இந்தியாவுக்கும் எந்த‌ வித‌ emotional attachment உம் கிடையாது என்ப‌து தான். ஆனால் த‌மிழ்நாட்டுக்குள் நாங்க‌ள் ப‌ய‌ண‌ம் செய்யும் போது, நாங்க‌ள் எந்த‌ வித‌ ப‌ய‌த்தையோ அல்ல‌து அன்னிய‌நாடாக‌வோ உண‌ர்வ‌தில்லை. அது த‌மிழ‌ர்க‌ளின் ம‌ண், அத‌ன் ப‌ண்பாட்டிலும் பார‌ம்ப‌ரிய‌த்திலும், வ‌ர‌லாற்றிலும் எங்க‌ளுக்கும் ப‌ங்குண்டு என்ற உணர்வு தான் ஏற்படுகிறது. சில‌வேளைக‌ளில் எங்க‌ளின் முன்னோர்க‌ள் கூட‌ த‌மிழ்நாட்டின் ஏதாவ‌தொரு கிராம‌த்திலிருந்து சோழ‌ர் ப‌டைக‌ளுட‌ன் இல‌ங்கைக்குப் போயிருக்க‌லாம், யார் க‌ண்ட‌து. ஆனால் அப்ப‌டியொரு எண்ண‌ம் அல்ல‌து க‌ற்ப‌னை கூட‌ எங்க‌ளுக்கு த‌மிழ்நாட்டு எல்லைக‌ளைத் தாண்டிய‌தும் வ‌ராது, அதைத் தான் நான் குறிப்பிட்டேன்.

த‌மிழ்நாட்டுக்கார‌ர்க‌ள் விரும்பினாலும். விரும்பாது விட்டாலும் இந்தியா அவ‌ர்க‌ளின் நாடு, அவ‌ர்க‌ளுக்கு நாட்டுப்ப‌ற்று இருப்ப‌து இய‌ற்கையே. உதார‌ண‌மாக‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் த‌மிழெதிர்ப்பு அர‌சிய‌லையும், சிங்க‌ள‌ இராணுவ‌த்தையும் வெறுக்கும், இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ள் கூட இல‌ங்கைத்தீவை வெறுப்ப‌தில்லை.ஏனென்றால் என்ன தானிருந்தாலும் அது எங்க‌ளின் தாய்நாடு.

நந்தவனத்தான் said...

இன்னொரு இந்திய‌ரான‌ யாசின் மாலிக்குட‌ன் இணைந்து இந்திய‌ எதிர்ப்பு அர‌சிய‌ல் செய்ய‌ அவ‌ருக்கு முழு உரிமை இருக்கிற‌து//

சகோ வியாசன், யாசின் மாலிக் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கலாம். மும்பாய் தாக்குதலுக்கு காரணமான சையத் போன்ற பயங்கரவாதிகளுடம் உறவாடும் நபர் ஒரு கோடாரி காம்பாகத்தான் கருதுகிறோம். காஷ்மீரின் சுதந்திரத்திற்காக மட்டும் பாடுபடுபவர் என்றால் நான் அவரை மதித்திருப்பேன். ஆனால் அவரோ பாகிஸ்தான் பயங்கரவாதிகளோடு தொடர்பு கொண்டவர். அவருடன் உறவு வைக்கும் சீமானும் இனி கோடாரி காம்பாகவே கருதப்படுவார். மணிவண்ணன் மகன் விவகாரத்தில் தாழ்ந்த சீமான் மீதான மதிப்பு, தமிழ் நடிகை விஜயலட்சுமியை ஏமாற்றிய உடனே முற்றிலும் என்னிடமிருந்து விலகிவிட்டது. அவரின் நீங்கள் வைத்துள்ள மரியாதையை கொஞ்சமாவது அவர் காப்பாற்றினால் மகிழ்ச்சிதான்.

தமிழ்நாட்டுகாரனுவளுக்கு இந்தியாவை இன்னமும் பிடித்துதான் இருக்கிறது என நான் எழுதிய காரணம், பல தமிழக பதிவர்கள் தமிழகத்தை இந்தியா வஞ்சிப்பதாக இந்திய எதிர்ப்புணர்வினால் கொதித்து எழுதுவதை படிக்கும் ஈழத்தமிழர் உண்மையை உணரவே. தமிழகத்தில் இந்திய எதிர்ப்பாளர்கள் 1% தேறினாலே அதிகம் என்பது எமது கருத்து. சுமார் 10 வருடத்திற்கு முன்பு ஸ்டாலின் தலைமையில் கடைசியான இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆளே தேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக மக்கள் இந்திய தேசபக்தியினால் பொங்குகிறார்கள் என்பதல்ல நான் சொல்ல வருவது. ஆனால் இந்திய எதிர்ப்பையும் அவர்கள் விரும்ப இல்லை என்பது உண்மை. அதாவது இந்தியாவுடன் தமிழகம் இணைந்திருப்பதை விரும்புகின்றனர், ஆனால் அதே நேரத்தில் இந்திய பற்றும் கொடிகட்டி பறக்கவில்லை. தமிழ் பற்றே அதிகமில்லை என்பதுதான் உண்மை. சுயநலப்பற்றும் சாதி பற்றும்தான் அதிகமாகவிட்டது. :(

viyasan said...

ச‌கோ.ந‌ந்தவ‌ன‌த்தான்,

சீமானிட‌ம் என‌க்கு ம‌ட்டும‌ல்ல‌ ப‌ல‌ ஈழத்த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌ரியாதையுண்டு. அதே ம‌ரியாதை இந்திரா காங்கிர‌ஸ் கூட்ட‌ணியில் இணையும் வ‌ரை திருமாவ‌ள‌வ‌னுக்கும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் ம‌த்தியில் இருந்த‌து தான். என‌க்கு சீமானில் எந்த‌ கோப‌மோ, காழ்ப்புண‌ர்வோ கிடையாது, இந்த‌, யாசின் மாலிக் விட‌ய‌த்தில் அவ‌ர் எடுத்த‌ முடிவு ச‌ரியில்லை என்ற‌ வ‌ருத்த‌ம் ம‌ட்டும் தான்.

உண்மையில் சீமானின் திடீர் வ‌ள‌ர்ச்சி ப‌ல‌ருக்கு பொறாமை ஏற்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌து எல்லோருக்கும் தெரியும். பெரியாரிஸ்டுக‌ள் ஒருப‌க்க‌ம், திராவிட‌ம் பேசினால் தான் தமிழ்நாட்டைத் த‌ம‌து க‌ட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க‌ முடியுமென்ப‌தை உண‌ர்ந்த‌ தமிழ‌ர‌ல்லாத‌ திராவிட‌ வீர‌ர்க‌ள் ஒருப‌க்க‌ம், த‌மிழ‌ர்க‌ள் நாம் த‌மிழ‌ர்க‌ளாக‌ ஒன்றுப‌டுவ‌தை விரும்பாத‌ இந்திய‌ தேசிய‌வாதிக‌ள் ஒருப‌க்க‌ம் சீமானைப் ப‌ழிவாங்க‌ த‌ருண‌ம் பார்த்திருந்தார்க‌ள். இந்த‌ யாசின் மாலிக் ச‌ம்ப‌வ‌ம், சும்மா வெறுவாயை மென்று கொண்டிருந்த‌ சீமானின் எதிரிக‌ள் எல்லோருக்கும் அவ‌ல் கிடைத்த‌ மாதிரிப் போய்விட்ட‌து. :)

viyasan said...

//மணிவண்ணன் மகன் விவகாரத்தில் தாழ்ந்த சீமான் மீதான மதிப்பு, தமிழ் நடிகை விஜயலட்சுமியை ஏமாற்றிய உடனே முற்றிலும் என்னிடமிருந்து விலகிவிட்டது.//

புக‌ழ்பெற்ற‌வ‌ர்க‌ள் அல்ல‌து அர‌சிய‌லில் வ‌ள‌ர்ந்து வ‌ருகிற‌வ‌ர‌க்ள் மீது பொய்க்குற்ற‌ச்சாட்டுக‌ள் சும‌த்த‌ப்ப‌டுவ‌து இந்தியாவில் ந‌ட‌க்காத‌ ஒன்ற‌ல்ல‌. நிரூபிக்க‌ப்ப‌டாத‌ குற்ற்ச்சாட்டுக்க‌ளுக்காக‌, சீமானுக்குத் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்கும் நீங்கள், எத்த‌னையோ நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌, த‌ண்டிக்க‌ப்பட்ட‌ கிரிமின‌ல்க‌ள் இந்திய‌ப்பாராளுமன்ற‌த்தில் இருக்கிறார்கள் என்கிறார்க‌ளே, அத‌ற்காக‌ இந்திய‌ ச‌ன‌நாய‌க‌த்தை வெறுக்கிறீர்க‌ளா?


//தமிழ் பற்றே அதிகமில்லை என்பதுதான் உண்மை. சுயநலப்பற்றும் சாதி பற்றும்தான் அதிகமாகவிட்டது. :(//

த‌மிழ்நாட்டு ம‌க்க‌ளிட‌ம் ஆங்கில‌ மோக‌மும், மேல்நாட்டு மோக‌மும், வெள்ளைத்தோல் மோக‌மும் அள‌வுக்க‌திக‌மாக‌ உள்ள‌து. அதை விட‌ திரைப்ப‌ட‌ங்க‌ளும், தொலைக்காட்சியில் ந‌ட‌த்த‌ப்ப‌டும் நிக‌ழ்ச்சிக‌ளும் அவ‌ற்றை மோச‌மாக்கி, த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ளிட‌ம் த‌மிழ், த‌மிழ‌ர் என்ற‌ விட‌ய‌ங்க‌ளில் ஒருவ‌கையான‌ சுயவெறுப்பை ஏற்ப‌டுத்தி விட்ட‌ன‌. அத‌ற்கு த‌மிழ்நாட்டில் உண்மையான‌ த‌மிழ் த‌லைவ‌ர்க‌ள் இல்லாமலிருப்ப‌தும் கார‌ண‌ம். எல்லோரும் ஏதோ ஒருவ‌கையில் த‌மிழ‌ர்க‌ள் அல்லாத‌ திராவிட‌க் க‌ல‌ப்பின‌த்த‌வ‌ர் அல்ல‌து சாதிவெறி பிடித்த‌ சாதித்த‌லைவ‌ர்க‌ள். அந்த‌க் குறையைத் தான் சீமான் தீர்த்து வைப்பார் என‌ நினைத்தோம், அந்த‌ நினைப்பிலும் ம‌ண் விழுந்து விட்ட‌து போல் தெரிகிற‌து.

ஜோதிஜி திருப்பூர் said...

சொல்ல வரும் விசயங்கள் மிகத் தெளிவாக அழகாக ஆழமாக சொல்லக்கூடிய எழுத்துக்கலை உங்களிடம் உள்ளது.

நன்றி.

viyasan said...

ந‌ன்றி ஜோதிஜி அவ‌ர்க‌ளே, என்னால் இய‌ன்ற‌வ‌ரை தெளிவாக‌ச் சொல்ல‌ முய‌ற்சிக்கிறேன், அவ்வ‌ள‌வு தான். :)

Anonymous said...

செபாஸ்டின் சீமான் என்பதுதானே அவரது முழு பெயர்

ruban said...

@viyasan புலிகள் தீவிர வாதிகளா என்ன????????............. தீவிரவாதம் என்ன என்பதயும், மக்கள் போராட்டம் என்ன என்பதயும் பிரித்து பார்க்க தெரியாத நீங்கள் இப்படி கருத்துகள் சொல்லுவது மிகவும் வேடிக்கை தான்..... சீமானை விடுங்கள் காஷ்மீர் வரலாறு தெரியுமா என்ன உன்களுக்கு??? கஷ்மீர் இந்தியவின் ஒரு மாநிலமா என்ன சொலுங்கள் முதலில்?????

ruban said...

உங்கள் கருத்துகள் பார்வைகள் எல்லாம் நரி தமானாக இருகிறதே தவிர...வேற உண்மையை பிரித்து பார்க்கும் அளவு இல்லை... உங்கள் கருத்தகளை பார்த்தல் சீமானை ஜாதி, மதம், வெறியன், இப்படி தான் பர்கிரீகள்....... மக்களுகாக ஒரு குரல், போராட்டம், பண்ணாமல் குறுக்கு வழில் பதவிக்கு வந்த வர்களால் பற்றி பதிவு போடா மடீர்கள்...... ஆனால் மக்களுகாக போராடி சிறைக்கு செல்லும் மக்களை தருமாரக விமர்சனம் செய்வீர்கள்..... களத்தில் போராடும் தமிழ் உணவலர்களுக்கு, உங்கள் அதரவு கொடுக்க வேண்டாம், தயவுசெய்து இப்படி பட்ட விமர்சனகளை தவிருங்கள்
புலிகளை தீவிராதி என்று சொல்லும் உங்கள் கருத்து கண்டிக தக்கது, புலிகளை தீவிரவாதி என்று சொல்லும் உங்கள் கருத்து உங்கள் அறியாமையை தான் சொல்லுகிறது ..... என் கருத்தை நீங்கள் பதிவு செய்ய வில்லை என்றாலும் வருத்தம் இல்லை....