Tuesday, May 14, 2013

சிங்கள‌வ‌ர்கள் கேலிசெய்யும் சென்னை விமானநிலையம்.


த‌மிழ்நாடு என்ற‌தும் அத‌ன் வ‌ர‌லாறு, ப‌ழ‌மையான‌ கோயில்க‌ள், வான‌ளாவிய‌ கோபுர‌ங்க‌ள், ம‌சூதிக‌ள், தேவால‌ய‌ங்க‌ள் அர‌ண்ம‌னைக‌ள், கோட்டைக‌ள் என‌ அத‌ன் ப‌ழ‌மையும் பெருமையும் நினைவுக்கு வ‌ந்தாலும், அவ‌ற்றை எல்லாம் விட்டு, த‌மிழ்நாட்டைக் கேலி செய்ய‌ விரும்புகிற‌வ‌ர்க‌ள், அதிலும் குறிப்பாக‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் த‌ம‌து கையில் எடுக்கும் ஆயுத‌ம் இந்திய‌ நக‌ர‌ங்க‌ள் எல்லாவ‌ற்றிலும் காணப்ப‌டும் அழுக்கு, குப்பை, க‌ண்ட‌ இட‌த்திலும் காண‌ப்ப‌டும் ம‌ல‌ம், சிறுநீர் க‌ழிவுக‌ளைத் தான்.தமிழ்நாட்டின் ந‌வீன‌ க‌ட்டிட‌ங்க‌ள் கூட‌ துப்புர‌வாக‌ இருப்ப‌தில்லை, க‌ட்டப்ப‌ட்டு முத‌ல் சில‌ மாத‌ங்க‌ள் துப்புர‌வாக‌ அழ‌காக‌ இருக்கும் அத‌ன் பின்னால் ப‌ழைய‌ குருடி கத‌வைத் திறவ‌டி தான். அத‌ற்கென்று துப்புர‌வுத் தொழிலாளிக‌ள் இருந்தாலும் அவ‌ர்க‌ளிட‌ம் அழ‌காக‌, துப்புர‌வாக‌ வைத்திருப்ப‌த‌ற்காக‌ உப‌க‌ர‌ண‌ங்க‌ள் இருப்ப‌தில்லை அல்ல‌து முறையான‌ ப‌யிற்சி அவ‌ர்களுக்குக் கிடையாது. ஒரு சிறிய‌ இட‌த்தில் இருக்கும் அழுக்கை அப்ப‌டியே, கொஞ்சம் த‌ண்ணீரைக் கொட்டி அதை எல்லா இட‌மும் ப‌ர‌ப்பிக் காய‌வைத்து விட்டுப் போகும் அழ‌கைச் சென்னை விமான‌ நிலைய‌த்தில் நான் கூட‌ பார்த்திருக்கிறேன்.இந்தியாவைப் ப‌ற்றி சிங்க‌ள‌வ‌ர்க‌ள் கேலி செய்யும் போது என‌க்கென்ன‌ போச்சு என்றிருக்கும் ஈழ‌த்தமிழ‌ர்க‌ள், த‌மிழ்நாட்டை அவ‌ர்க‌ள் கேலி செய்யும் போது அவ‌ர்க‌ளுக்கு விட்டுக் கொடுப்ப‌தில்லை, த‌மிழ்நாட்டுக்காக‌ அவ‌ர்க‌ளுட‌ன் வாதாடுவ‌தைப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் எங்களுக்கு இயற்கையாகவே உள்ள பற்றை நாங்க‌ள் வெளியிலே காட்டிக் கொள்ளாது விட்டாலும் "தானாடாவிட்டாலும் ச‌தையாடும்" என்பார்க‌ளே அது போல் தான் இதுவும். ஆனால் சில‌ வேளைக‌ளில் த‌மிழ்நாட்டின் ந‌க‌ர‌ங்க‌ளில் நிறைந்துள்ள‌ அழுக்கும், ம‌க்க‌ளின் ஏனோ தானோ என்ற‌ சுயந‌ல‌ம் நிறைந்த‌ செய‌ல்க‌ளும், க‌ண்ட‌ப‌டி குப்பைகளை வாரி வீசும் ப‌ழ‌க்க‌மும் நியாய‌ப்ப‌டுத்த‌வே முடியாத‌ள‌வுக்கு மோச‌மாக‌ இருப்ப‌துண்டு.


இன்று இல‌ங்கையின் இணைய‌த்த‌ள‌ங்க‌ளில் ஒன்றில் த‌மிழ்நாட்டைக் கேலி செய்ய‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் எடுத்திருக்கும் விட‌ய‌ம் புதிதாகக் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ சென்னை உள்நாட்டு விமான‌ நிலைய‌ம். இல‌ங்கையில் கொழும்பு விமானநிலைய‌த்தின் அழ‌கையும், தூய்மையையும் பார்த்த‌ எவ‌ருமே சிங்க‌ள‌வ‌ர்க‌ள் த‌மிழ்நாட்டைக் கேலி செய்வ‌திலுள்ள‌ நியாய‌த்தை நிச்ச‌ய‌மாக‌ உண‌ர்வ‌ர்.  நிர்ண‌யிக்க‌ப்ப‌ட்ட‌ கால‌த்தை விட‌க் கூடுதலான‌ கால‌த்தை க‌ட்டி முடிக்க‌ எடுத்த‌து ம‌ட்டும‌ன்றி, ஊழ‌ல், த‌ர‌ம‌ற்ற‌ வ‌கையில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து போன்ற பிர‌ச்ச‌னைக‌ளுட‌னும், முறைப்பாடுக‌ளுட‌னும் புதிதாக‌ 2,300 கோடி ரூபாய் செல‌வில் க‌ட்டி முடிக்க‌ப்பட்ட‌ சென்னை உள்நாட்டு விமான‌ நிலைய‌ம் அத‌ன் உண்மையான‌ நிலையை வெளிக்காட்டியுள்ளது. விமான‌ நிலைய‌த்தின்  40 உள்ள‌க‌ கூரைக‌ள் அப்ப‌டியே விழுந்து விட்ட‌ன‌. அதிர்ஸ்ட‌வ‌ச‌மாக‌, இந்த‌ வெட்க‌க்கேடான ச‌ம்ப‌வ‌ம் ச‌ன‌ந‌ட‌மாட்ட‌ம் குறைவான‌ அதிகாலையில் ந‌டைபெற்ற‌தால் ப‌ய‌ணிக‌ள் எவ‌ரும் காய‌த்துக்குள்ளாக‌வில்லை. மூன்று வேலையாட்க‌ள் ம‌ட்டும் சிறிய‌ காய‌ங்க‌ளுக்குள்ளானார்க‌ள்.  ஜன‌வ‌ரி 2011 இல் ம‌க்க‌ளின் பாவ‌னைக்குத் திற‌க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ புதிதாகக் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ சென்னை உள்நாட்டு விமான‌ நிலைய‌ம் சென்ற‌ மாத‌ம் தான் க‌ட்டி முடிக்க‌ப்ப‌ட்டுத் திற‌ந்து வைக்க‌ப்ப‌ட்ட‌து. வெளியிலிருந்து பார்ப்ப‌த‌ற்கு க‌ண்ணாடியினாலும் உருக்கினாலும் அமைக்க‌ப்ப‌ட்டு அழ‌காக‌க் காட்சிய‌ளிக்கும் க‌ட்டிட‌த்தில் மோச‌மான‌ த‌ர‌க்குறைபாடுக‌ள் இருப்ப‌தாக‌ ஊட‌க‌ங்க‌ள் ஏற்க‌ன‌வே க‌ருத்து வெளியிட்டிருந்த‌ன‌ என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.அசாதார‌ண‌மாக‌ செங்குத்தான‌ இற‌ங்கு பாதைக‌ள், தேவைய‌ற்ற‌ நீண்ட‌ ந‌டைபாதை, கிரீச்சிடும் அடிப்ப‌டைக் க‌ட்டிட‌ங்க‌ள் போன்ற‌ தொழில்நுட்ப‌ குறைபாடுக‌ளையும் ஊட‌ங்கள் சுட்டிக் காட்டியிருந்த‌ன‌. விமான‌ நிலைய‌ம் புதிதாக‌த் திற‌க்க‌ப்ப‌ட்ட‌போது த‌ண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கும் க‌ழிப்ப‌றைக‌ள், நீர் வ‌டிந்து கொண்டிருக்கு குளிரூட்டிக‌ள், உடைந்து போன‌ த‌ள‌ங்க‌ள், ஒடுக்க‌மான‌ அறைக‌ள், தூசு ப‌டிந்த‌ க‌திரைக‌ளைப் பார்த்து ப‌ய‌ணிக‌ள் அதிர்ச்சி அடைந்த‌ன‌ர். க‌ண்க‌ளைக் கொள்ளை கொள்ளும் டெல்லி, மும்பாய் விமான‌ நிலைய‌ங்க‌ள் த‌னியார் துறையின‌ரால் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌வை ஆனால் இந்திய‌ விமான‌நிலைய‌ ஆணைய‌ம் சென்னை விமான‌நிலைய‌த்தைக் கட்டும் பொறுப்பை த‌னியார் கைக‌ளில் விடாம‌லிருக்க‌ப் போராடிய‌து. இந்திய‌ விமான‌ நிலைய‌ ஆணைய‌ம் இந்த‌ ஊட‌ங்க‌ளின் முறைப்பாடுக‌ளை ம‌றுத்த‌துட‌ன் இந்த‌ த‌வ‌றுக‌ளுக்கு தொழில்நுட்ப‌ ரீதியாக‌ விள‌க்க‌ம‌ளித்துள்ள‌து.


புதிய‌ ச‌ர்வ‌தேச‌ விமான‌ நிலைய‌ம் இனிமேல் தான் திற‌க்க‌ப்ப‌ட‌வுள்ள‌து.  மே மாத‌த்தின் ந‌டுப்ப‌குதியில் திற‌க்கப்ப‌ட‌விருந்த‌ ச‌ர்வ‌தேச‌ விமான‌நிலைய‌ம், அடிப்ப‌டை வ‌ச‌திக‌ள் எதுவுமில்லாத‌ கார‌ண‌த்தால் குறிப்பிட்ட‌ நாளில் திற‌க்க‌ப்ப‌டாது போகும்.

த‌மிழ்நாட்டு மக்க‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்தில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ "உல‌க‌ த‌ர‌முடைய‌" விமான‌ நிலைய‌த்தின் உண்மையான‌ நிலையைப் பாருங்க‌ள். இதைப் பார்த்து சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் த‌மிழ்நாட்டைக் கேலி செய்கிறார்க‌ள்.

Ref: 

http://www.firstpost.com/photos/chennais-new-airport-is-a-disaster-these-pictures-tell-the-story-777229.html

13 comments:

புத்தளத்தான் said...

இந்த தகவலை எழுதியவர் சென்னை விமான நிலைய குறைபாடை சொல்ல சும்மா இலங்கை சிங்களவர்களை தமிழ் நாட்டு மக்களுடன் கோர்த்து விட முயற்சிப்பது நன்றாக புலப்படுகிறது .

viyasan said...

@புத்த‌ள‌த்தான்,

கோர்த்து விடுவ‌து, சேர்த்து விடுவ‌து என்றெல்லாம் உள‌றாம‌ல், எந்த‌ இணைய‌த்த‌ள‌த்தில் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் கேலி செய்கிறார்க‌ள் என்று ஒழுங்காக‌க் கேட்டிருக்க‌லாமே. :) http://www.lankanewspapers.com/news/2013/5/82843_space.html

நந்தவனத்தான் said...

//சிங்களவர்களை தமிழ் நாட்டு மக்களுடன் கோர்த்து விட முயற்சிப்பது நன்றாக புலப்படுகிறது

அதானே, தமிழ்நாட்டுக்கு வர்ற சிங்களகனுக்கெல்லாம் நாங்க கிடா வெட்டி கறிச்சோறு போடாம அனுப்பவோ மாட்டாம். இப்படி அண்ணன் தம்பியா பழகுற பயலுகள கோர்த்து விட்டா எப்புடி?

viyasan said...

//இப்படி அண்ணன் தம்பியா பழகுற பயலுகள கோர்த்து விட்டா எப்புடி?//

ச‌கோ.ந‌ந்த‌வ‌ன‌த்தான்,

வ‌ருகைக்கு ந‌ன்றி. "கோர்த்து விடுவ‌து" என்றால் க‌ருத்து, ப‌ங்காளிக‌ளுக்குள் ச‌ண்டை மூட்டி விடுவ‌து போல் என்ப‌து இப்பொழுது தான் புரிகிற‌து. சிங்க‌ள‌வ‌ர்க‌ள் புத்த‌ள‌த்தானுக்குப் ப‌ங்காளிக‌ளாக‌ இருக்க‌லாம், யார் க‌ண்ட‌து. :)

Anonymous said...

"சிங்க‌ள‌வ‌ர்க‌ள் புத்த‌ள‌த்தானுக்குப் ப‌ங்காளிக‌ளாக‌ இருக்க‌லாம், யார் க‌ண்ட‌து."

புத்தளத்தான் என்ற பெயரில் வருபவர் ஒரு துலுக்கர்

Rasu Krishanthan said...

இலங்கையின் உண்மை நிலை என்னவென்றால்?
இங்குள்ள அரசியல்வாதிகள்தான் எம்மக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் இனவாதத்தை தூண்டிவிட்டு இலாபம் பார்கிறார்கள். இந்தியாவிலும் இதே நிலைமைதான், உணமையாகவே பெரும்பாலான சிங்களவர்கள் எம்முடன் தோழமையுடனேயே பழகுகின்றார்கள்.
சில இனவாதிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள், தமிழர்களிலும் இருக்கின்றார்கள் தானே?
(இது நான் பார்த்ததொரு சூழ்நிலை அல்ல, நான் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு ஒன்றுபட்டு வாழ நினைக்கும் ஒரு சமூகத்தின் நிலை)

வேகநரி said...

நல்லதை பார்த்து நாங்களும் நல்லவற்றை கற்று கொள்வது நல்லது.ஆனா இலங்கை சுண்டைக்காயளவு அதனாலே நாங்க தான் தமிழகத்தில் வசதியான வாழ்கைவாழுறவங்க சிறந்தவங்க என்ற கனவில் பலர் மிதக்கிறார்கள்.

வேகநரி said...

@நந்தவனத்தான்
சகோ எங்கே நீண்ட நாட்களா காணல? உங்க கருத்துக்களை காணாம பட்டரி சார்ஜ் செய்யபடாத மின்கருவி மாதிரி ஆகிவிட்டோம்.

ஜோதிஜி திருப்பூர் said...

வருத்தமான உண்மைகள் தான்

Tamilan said...

// A fowl engaged in a battle with an elephant of the king's army and defeated it - Uraiyur,Tamil Nadu //

I do not believe that this blogger would engage in the act of "கோர்த்து விடுவ‌து". As a Tamilan, I too feel ashamed for sate of affairs in Chennai airport.

viyasan said...

@Rasu Krishanthan,

த‌னிப்ப‌ட்ட‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் எங்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ ந‌ட்பு, அனுப‌வ‌ங்க‌ளை முழுச் சிங்க‌ள‌ இனவாத‌த்தை அள‌க்கும் அள‌வுகோலாக்கிய‌ த‌வ‌றை சேர். இராம‌நாத‌ன் போன்ற‌ த‌லைவ‌ர்க‌ள் இழைத்த‌தால் தான் நாங்க‌ள்- ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள், இன்று இந்த‌ நிலையில் உள்ளோம். அத‌னால் தான் சிங்க‌ள‌த்த‌லைவ‌ர்க‌ளின் உறுதி மொழிக‌ளை ந‌ம்பி, சோல்ப‌ரி அர‌சிய‌ல‌மைப்பை எதிர்ப்ப‌தை சேர். இராம‌நாத‌ன் கைவிட்டார்.

என்னுடைய‌ பெற்றோருக்கும் நிறைய‌ சிங்க‌ள ந‌ண்ப‌ர்க‌ள் உண்டு. த‌னிப்ப‌ட்ட‌ முறையில் ந‌ட்புக்கு சிங்க‌ள‌வ‌ர்க‌ளைப் போல் யாரும் கிடையாது என்பார்க‌ள். ஆனால் கூட்டாக‌ சிங்க‌ள‌ இன‌ம் என்று கொள்ளும் போது அவ‌ர்க‌ள் இன‌வாதிக‌ள். சிறிய‌ வய‌திலிருந்து அவ‌ர்க‌ளுக்கு புத்த‌ பிக்குக‌ளால் ம‌காவ‌ம்ச‌ம் ந‌ஞ்சு ஊட்ட‌ப்ப‌டுவ‌தால், இன‌ம், நாடு என்று வ‌ரும்போது, ப‌டித்த‌, ந‌ற்குண‌ங்க‌ள் நிறைந்த‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் கூட‌,த‌மிழ‌ர்க‌ளுட‌ம் ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌ இன‌த்துக்கும் இல‌ங்கையில் ச‌மவுரிமை கொடுக்க‌த் த‌ய‌ங்குவார்க‌ள். இத‌னால் தான் ஒவ்வொரு தேர்த‌லிலும் எந்த‌க் க‌ட்சி த‌மிழ‌ர்க‌ளைக் கூடுத‌லாக‌ எதிர்க்கிற‌தோ, த‌மிழ‌ர்க‌ளின் உரிமைக‌ளை ம‌றுத்து, வ‌ட‌க்கு, கிழ‌க்கில் சிங்க‌ளவர்க‌ளையும் குடியேற்றும் கொள்கையைக் கொண்ட‌தோ அந்த‌க் க‌ட்சியைத் தான் சிங்கள‌வ‌ர்க‌ள் ஆட்சியில் அம‌ர்த்துவார்க‌ள். அத‌னால் த‌னிப்ப‌ட்ட சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் எங்க‌ளுக்குள்ள‌ த‌னிப்ப‌ட்ட‌ ந‌ட்பை முழுத் த‌மிழின‌த்தின், உரிமைக‌ளைப் ப‌ற்றிப் பேசும் போது, க‌லந்து குழ‌ப்பிய‌டிக்க‌ கூடாது.

viyasan said...

//நல்லதை பார்த்து நாங்களும் நல்லவற்றை கற்று கொள்வது நல்லது.//

சகோ.வேக‌ந‌ரி,

முற்றிலும் உண்மை. த‌மிழ்நாடு இல‌ங்கையிடமிருந்து க‌ற்றுக் கொள்ள வேண்டிய‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ள் உண்டு.

viyasan said...

Tamilan, ஜோதிஜி,Anonymous அனைவ‌ருக்கும் ந‌ன்றி.