Thursday, May 2, 2013

திருந‌ங்கைக‌ள் க‌ட‌த்திய‌ வ‌ன்னிய‌ர் திருவிழா.


வ‌ருடாவ‌ருட‌ம் அர‌வாணிக‌ள் என அழைக்க‌ப்ப‌டும் திருந‌ங்கைக‌ள் விழுப்புர‌ம் மாவ‌ட்ட‌த்திலிருக்கும் அர‌வான் அல்ல‌து கூத்தாண்ட‌வ‌ர்
கோயிலில் கூடிகூத்தாண்ட‌வ‌ரை ம‌ண‌ந்து அடுத்த‌ நாள் கூத்தாண்ட‌வ‌ர் ப‌லியிட‌ப்ப‌ட்ட‌தும் தங்களின் தாலியை அறுத்துக் கொண்டுவித‌வை வேட‌த்தில் ஒப்பாரி வைப்பார்க‌ள் என்று அனைவருக்கும் தெரியும். ப‌ல‌ வெளிநாட்டுப் ப‌த்திரிகைக‌ளில் கூட‌ கூவாக‌ம் கூத்தாண்ட‌வ‌ர் கோயில் திருவிழாவில் அர‌வாணிக‌ள் தாலிய‌றுப்ப‌தைக் காட்டிஅதை அர‌வாணிக‌ளின் திருவிழாவாக‌க் குறிப்பிடும் க‌ட்டுரைக‌ளும் வெளிவ‌ந்துள்ள‌ன‌.

உண்மையில் கூவாக‌ம் கூத்தாண்ட‌வ‌ர் கோயிலுக்கும் திருநங்கைகளுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அந்தக் கோயிலில் ஆண்க‌ள், பெண் வேட‌மிட்டு கூத்தாண்ட‌வ‌ருக்கு நேர்த்திக் க‌ட‌ன் செலுத்துவ‌தும் அடுத்த‌ நாள் த‌ம‌து தாலியை அறுத்து ஒப்பாரி வைப்ப‌தும் வ‌ன்னிய‌ர் அல்ல‌து பள்ளி சாதி ம‌க்க‌ளின் வ‌ழ‌க்க‌மாகும். அது ம‌ட்டும‌ல்ல‌ கூத்தாண்ட‌வ‌ர் கோயில் வ‌ன்னிய‌ர்க‌ளுக்குச் சொந்த‌மான‌து. ம‌காபார‌தக் க‌தைக‌ளைப் பார‌ம்ப‌ரிய‌மாக‌ அந்த‌க் கோயிலில் வாசிப்ப‌தும் வ‌ன்னிய‌ர்க‌ள் தான். 

அரவான் அல்ல‌து கூத்தாண்ட‌வ‌ரின் ம‌காபார‌த‌க் க‌தையின் ப‌டி,  பார‌ம்ப‌ரியமாக‌ அங்கு ஆண்க‌ள் தான் பெண் வேட‌மிட்டு  நேர்த்திக்க‌ட‌னைச் செலுத்தி வ‌ந்தார்க‌ளேய‌ன்றி திருந‌ங்கைக‌ள‌ல்ல‌... ஆனால் அண்மைக் கால‌மாக‌ அந்த‌க் கோயிலைச் சார்ந்த‌ வ‌ன்னிய‌ர் சாதி ம‌க்க‌ள் த‌ம‌து பார‌ம்ப‌ரிய‌ ச‌ட‌ங்குக‌ளை அர‌வாணிக‌ளிட‌ம் இழ‌ந்து விட்ட‌ன‌ர் போல் தெரிகிற‌து. இன்று திருந‌ங்கைக‌ள் அந்த‌க் கோயிலில் வ‌ன்னிய‌ர்க‌ளின்  பார‌ம்பரிய‌ ச‌ட‌ங்கைத் த‌ம‌தாக்கிக் கொண்டது மட்டுமல்ல, வன்னியர்களின் தெய்வமாகிய‌  அந்த‌க் கோயிலில் உறையும் அர‌வானைத் த‌ம‌தாக்கி த‌ம‌க்கு அர‌வாணிக‌ள் என‌ப் பெயருமிட்டுக் கொண்ட‌ன‌ர்.

வ‌ன்னிய‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ ப‌ல   
த‌மிழ்நாட்டுச் சாதிக் குழுவின‌ர்க‌ளும் ம‌காபார‌த‌ம்,  இராமாய‌ண‌ம்வட‌ நாட்டு வேத‌ங்க‌ள் என்ப‌வ‌ற்றுட‌ன் த‌ம்மைத் தொட‌ர்பு ப‌டுத்திப் ப‌ல‌ க‌தைக‌ளை இய‌ற்றியுள்ளார்க‌ள்.  இந்த‌ ச‌ம‌க்கிருத‌ம‌ய‌மாக்க‌லினால் (Sanskritization) அதாவது சமுதாயத்தின் அடிமட்டத்திலுள்ள சாதியினர் அல்லது குழுவினர் தம்மை மேல்சாதியினராக அல்லது மேல்மட்டத்தினராகக் காட்டுவதற்காகதம்மை உயர்த்துவதற்காகஉயர்ந்த சாதியினரின் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடைப்பிடிப்ப‌தும்தமது சாதியினரை ஏதாவது புராணம‌காபார‌த‌க்கதைகளுட‌ன் தொடர்பு படுத்திதமது மூதாதையர் அந்தப்புராண காலக் கடவுளின் பரம்பரையினர் அல்ல‌து நெருப்பில் இருந்தோ அல்ல‌து நீரிலிருந்தோ வ‌ந்த‌வ‌ர்க‌ள் எனப் புருடா விடுவ‌தையும் எல்லாச் சூத்திரர்களும் செய்வ‌தைத் தமிழ்நாட்டில் காணலாம்.

உண்மையில் இவ‌ர்க‌ளின் இந்த‌க் க‌தைக‌ளின்ப‌டி பார்த்தால், அதாவ‌து ம‌காபார‌த‌மும், இராமாய‌ண‌மும், வேத‌ங்க‌ளாலும் தான் இவ‌ர்க‌ளின் மூதாதைய‌ர்க‌ளின் தோற்ற‌த்துக்கு ஆதார‌ம் காட்ட‌ முடியுமென்றால் அப்ப‌டியான‌ சாதிக்குழுவின‌ர் எவ‌ருமே த‌மிழ‌ர்க‌ளாக‌ இருக்க‌ முடியாது, ஏனென்றால் ஆரிய‌ர்க‌ளின் மகாபார‌த‌த்திலிருந்து த‌மிழ‌ர்க‌ள் உருவாகியிருக்க‌ முடியாத‌ல்ல‌வா?



Re: Castes and Tribes of Southern India, Volume 2. By Edgar Thurston, K. Rangachari


1 comment:

தமிழானவன் said...

புதிய தகவல்கள். ஆனால் அங்கீரமில்லாத சிறுபான்மையினரான அவர்கள் எப்படி இதை வன்னியரிமிருந்து பெற்றிருக்க முடியும். புரியலையே ?