Saturday, April 6, 2013

இல‌ங்கை முஸ்லீம்க‌ளும் இப்ப‌டி இருந்திருந்தால்....இந்த‌ த‌மிழ்நாட்டு முஸ்லீம் ச‌கோத‌ர‌ன், தானும் த‌மிழ‌ன் என்ற‌ வ‌கையில் த‌ன‌து உண‌ர்வை, ஆத‌ர‌வை ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்குத் தெரிவிக்கும் வ‌கையில் உருவாக்கியிருக்கும் காணொளி த‌மிழ‌ர்க‌ள‌னைவ‌ரும் பார்க்க‌ வேண்டிய‌தொன்று. 

இல‌ங்கையின் த‌மிழ் பேசும் முஸ்லீம்க‌ளும்  த‌மிழ‌ர்க‌ளுட‌ன் இணைந்து அவ‌ர்க‌ளின் விடுத‌லைப் போராட்ட‌த்துக்கு உத‌வாது விட்டாலும், குறுகிய‌ சுய‌ந‌ல‌ நோக்க‌ங்க‌ளுக்காக‌ த‌மிழ‌ர்களின் எதிரிக‌ளுட‌ன் இணைந்து, அவ‌ர்க‌ளுக்காக‌ உள‌வு பார்த்து, ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்தியிராது விட்டால், வ‌ட‌க்கிலிருந்து முஸ்லீம்க‌ள் வெளியேற்ற‌ப்ப‌ட்டிருக்க‌வும் மாட்டார்க‌ள், கிழ‌க்கில் முஸ்லீம்க‌ள் த‌மிழ‌ர்க‌ளைப் ப‌டுகொலை செய்திருக்க‌வும் மாட்டார்க‌ள். நிச்ச‌ய‌மாக‌த் த‌மிழ் பேசும் ம‌க்க‌ளுக்கென‌வொரு நாடு இல‌ங்கையில் ம‌ல‌ர்ந்திருக்கும். வ‌ட‌க்கு ‍கிழ‌க்கில் வாழும் த‌மிழ்பேசும் ம‌க்க‌ள் அனைவ‌ரும் ஒன்றிணைந்திருந்தால், எம‌து எதிரிக‌ள் அனைவ‌ரையும் நாம் வென்றிருக்க‌லாம். இன்று பொது ப‌ல‌ சேனா (Bodu Bala Sena) இல‌ங்கை முஸ்லீம்க‌ளைத் தொந்த‌ர‌வு  செய்யும‌ள‌வுக்கு துணிச்ச‌ல் பெற்றிருக்காது.  அத்துட‌ன் ஈழ‌த்தமிழ‌ர்க‌ள் 1000 வருட‌ங்க‌ளுக்கு முன்பாக‌ ம‌ட்டும் அல்ல‌, இல‌ங்கையின் வ‌ர‌லாற்றின் ஆர‌ம்ப‌கால‌த்திலிருந்தே அங்கு வாழ்கிறோம், த‌மிழ‌ர்க‌ளுக்கென த‌னிய‌ர‌சு இருந்த‌து என்ப‌தை யாராவ‌து த‌மிழ்நாட்டு மாண‌வ‌ர்க‌ளுக்குத் தெரிய‌ப்ப‌டுத்த‌ வேண்டும்.

இந்த‌ வீடியோவை த‌ன்னைத் த‌மிழ‌னாக‌ நினைத்து த‌ன்னுடைய‌ ஈழ‌த்த‌மிழ்ச்ச‌கோத‌ர‌ர்க‌ளுக்காக‌ உண‌ர்ச்சிக‌ளைக் கொட்டியிருக்கும் த‌மிழ்நாட்டுச் ச‌கோத‌ர‌ன் ராஷிம் க்கு ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள‌னைவ‌ரும் ந‌ன்றியைத் தெரிவிக்க‌ வேண்டும். உண்மையில்,இந்த‌ வீடியோ குறும்ப‌ட‌மாக‌‌ இருந்தாலும் கூட‌ இப்ப‌டியும் த‌மிழுண‌ர்வுள்ள‌ முஸ்லீம்க‌ள் த‌மிழ்நாட்டில் இருக்கிறார்க‌ள் என்ப‌து என‌க்கும் புதிய‌து தான் என்ப‌தை நான் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். இந்த‌ காணொளியை ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள‌னைவ‌ருட‌னும் ப‌கிர்ந்து கொள்ள‌வும்.

3 comments:

இக்பால் செல்வன் said...

இலங்கை முஸ்லிம்கள் சிங்களவர்களால் விரட்டப்பட்டால் எங்கு அடைக்கலம் கோருவர். தாம் தமிழரில்லை, இந்தியரில்லை என்றனரே..

இன்றைய ஈழத்தமிழர்களின் மூதாதையர்கள் 12, 000 ஆண்டுகளாக இலங்கையில் வாழ்ந்த பொது மூதாதையர், இந்தியாவின் தெற்கில் இருந்து குடியேறியவர்கள், வங்காளிகள் ஆகிய மூவினக் கலப்பும் இருக்கின்றது ..

இதேக் கலப்பு சிங்களவர்கள், இலங்கை முஸ்லிம்களிடமும் இருக்கின்றது.

மொழி ரீதியாக இலங்கை முஸ்லிம்கள் பெரும்பான்மையானோரும் ஈழத்தமிழர்களே என்பதை அவர்கள் ஏற்க மறுப்பதன் விளைவு, பிற்காலங்களில் முற்றாக தனிமைப்படுத்தப்பட்டும் நிலை ஏற்படலாம். உதா.

இலங்கை முஸ்லிம்கள் சிங்களவர்களால் விரட்டப்பட்டால் எங்கு அடைக்கலம் கோருவர். தாம் தமிழரில்லை, இந்தியரில்லை என்றனரே..

சிங்களவர்களுக்கோ இலங்கைத் தீவில் ஒரு பிடி உள்ளது, தமிழர்களுக்கு தமிழகத்தில் ஒரு பிடி உள்ளது. இடைநிலையில் அங்குமில்லாமல் இங்குமில்லாமல் போனவர்களுக்கு கடைசி வரை எந்தவொரு மத்தியக் கிழக்கு நாடும் உதவப் போவதில்லை என்பதை மட்டும் ஆழமாக இங்கு பதிவு செய்கின்றேன்..

புலிகள், அஸ்ரப் என்ற பழைய துரோக காலங்களை களைந்துவிட்டு புதிய பாதையில் இரு இனமும் பயணிக்க வேண்டும், ஒன்றாக ..

Anonymous said...

இலங்கை முஸ்லிம்கள் என்று தமது மொழி தமிழ் தாமும் தமிழர் என்று எண்ணுகின்றார்களோ அன்று அவர்களின் துரோகச் செயல்களை மன்னித்து அவர்களுடன் கை கோர்க்க ஈழத்தமிழர் தயாராக உள்ளார்கள். தமது சுயநலன்களுக்காக இனத்தைக் காட்டிக் கொடுத்ததன் பலனைத்தான் இப்போது அனுபவிக்கின்றார்கள்.

viyasan said...

//புலிகள், அஸ்ரப் என்ற பழைய துரோக காலங்களை களைந்துவிட்டு புதிய பாதையில் இரு இனமும் பயணிக்க வேண்டும், ஒன்றாக //

இன்னும் சில‌ முஸ்லீம்க‌ள் ம‌த்திய‌கிழ‌க்கு நாடுக‌ள் த‌ம்மை அர‌வ‌ணைக்குமென‌ ந‌ம்புகின்ற‌ன‌ர். ஆனால் ம‌த்திய‌கிழ‌க்கு தொழில் பார்க்க‌ப் போய் அர‌புக்க‌ளின் குண‌த்தை அறிந்த‌வ‌ர்க‌ள் முஸ்லீமாக‌ இருந்தாலும் அர‌புக்க‌ள் காட்டும் இன‌வெறியை உண‌ர‌த் தொட‌ங்கியிருக்கிறார்க‌ள். இல‌ங்கை முஸ்லீம்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் விரும்பாது விட்டாலும், நாங்க‌ள் ந‌ட‌ந்த‌ க‌ச‌ப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ம‌ற‌ந்து ஒன்றுப‌ட‌ வேண்டிய‌ கால‌த்தின் க‌ட்டாய‌ம் ஏற்படும் போல் தான் தெரிகிற‌து. பொறுத்திருந்து பார்ப்போம். பிர‌ச்ச‌னை வ‌ட‌க்கு கிழ‌க்கில் வாழும் முஸ்லீம்க‌ளல்ல‌, தென்னில‌ங்கையில் த‌ம‌து அர‌சிய‌ல், பொருளாதார‌ ந‌ல‌ன்க‌ளை அடிப்ப‌டையாக‌க் கொண்ட‌, வ‌ட‌ கிழ‌க்கைச் சேராத‌ முஸ்லீகளின் த‌லைமை தான்.