Saturday, April 20, 2013

க‌த்தோலிக்க‌ம‌த‌த்தால் தான் த‌மிழ்ப்ப‌ர‌த‌வ‌ர்கள் சிங்க‌ள‌ ம‌ய‌மானார்க‌ள்.



இல‌ங்கையின் க‌ரையோர‌ங்க‌ளில் ம‌ன்னார் தொட‌க்க‌ம் மாத்தறை வ‌ரை வாழ்ந்த‌ த‌மிழ்ப்பர‌த‌வ‌ர்க‌ள் ம‌ன்னார் மாவ‌ட்ட‌ம் த‌விர்ந்த‌ ஏனைய‌ ப‌குதிக‌ளில் ஏன் சிங்க‌ள‌மயமானார்க‌ள் என்று விய‌க்கும் சில‌ர் அத‌ற்கும் யாழ்ப்பாண‌த்த‌மிழ‌ர்க‌ள் தான் கார‌ண‌ம் என்றும் வாதாட‌ முனைய‌லாம், ஆனால் ப‌ர‌த‌வ‌ க‌த்தோலிக்க‌ த‌மிழ‌ர்க‌ள் சிங்க‌ளமயமான‌த‌ற்குக் கார‌ண‌மே க‌த்தோலிக்க‌ம‌த‌மும், பெரும்பான்மைச் சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் க‌ட்டுப்பாட்டிலுள்ள‌ இல‌ங்கைத் திருச்ச‌பையும், சில‌ சிங்க‌ள ஆய‌ர்க‌ளும் (பிஸப்) தான். 
St. Francis Xavier, in a 
19th-century colored lithograph
இல‌ங்கையில் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் இன்று த‌மிழ‌ர்க‌ளை விட‌ அறுதிப்பெரும்பான்மையின‌ராக‌ இருப்ப‌த‌ற்குக் கார‌ண‌ம் போத்துக்கேய‌ரின் வ‌ருகையும், க‌த்தோலிக்க‌ம‌த‌மும் தான்  என்றால் அது மிகையாகாது. போத்துக்கேய‌ரால் ஈழத்த‌மிழ‌ர்க‌ள் த‌ம‌து யாழ்ப்பாண‌ அர‌சை இழ‌ந்த‌து ம‌ட்டும‌ல்ல‌ ம‌ன்னார் தொட‌க்க‌ம் புத்த‌ள‌ம், குதிரைம‌லை தாண்டி சிலாப‌ம் நீர்கொழும்பு, மாத்த‌றை வ‌ரை வாழ்ந்த‌ அவர்களின் த‌மிழ்ப்ப‌ர‌த‌வ‌ சகோத‌ர‌ர்க‌ளையும் க‌த்தோலிக்க‌ ம‌த‌த்துக்கு இழ‌ந்தன‌ர். அவ‌ர்க‌ள் க‌த்தோலிக்க‌ ம‌த‌த்துக்கு மாறிய‌ கார‌ண‌த்தால் தான் நாள‌டைவில் சிங்க‌ள‌வ‌ர்க‌ளாயின‌ர். சிங்க‌ள‌வ‌ர்க‌ளாக மாறிய அந்த‌ த‌மிழ‌ர்க‌ள் தான் இன்று தாம்,  2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, த‌மிழ‌ர்க‌ளுட‌ன் போரிட்ட‌  சிங்க‌ள‌ அர‌ச‌ன் துட்ட‌கைமுனுவின் நேர‌டி வாரிசுகளென‌க் க‌ற்ப‌னை செய்து கொண்டு சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து கொண்டு த‌மிழ‌ர்க‌ளை அழிக்க‌ நிற்கிறார்க‌ள்.

இல‌ங்கையின் வ‌ர‌லாற்றுத் தொட‌க்க‌த்திலிருந்தே பெள‌த்த‌ம‌த‌த்தை அடிப்ப‌டையாக‌க் கொண்ட‌, புத்த‌ம‌த‌த்தை ஆத‌ரிக்கும் அர‌சிய‌ல் சூழ‌லில் வாழ்ந்த‌தால், த‌மிழ‌ர்க‌ள் பலர்   புத்த‌ம‌த‌த்தைத் தழுவி நாளடைவில் சிங்க‌ள‌வ‌ர்க‌ளாகின‌ர். ஆனாலும் போத்துக்கேய‌ர் இல‌ங்கையை அடைவ‌த‌ற்குப் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளுக்கு முன்பாக‌வே, யாழ்ப்பாண‌ அர‌சின் கீழ்  த‌ம‌து த‌னித்துவ‌த்தை இழ‌க்காம‌ல் த‌ம்மை ஒரு த‌னியொரு அர‌சிய‌ல் அடையாள‌ம் கொண்டவர்களாக உருவாக்கிக் கொள்ள‌ தமிழர்களால் முடிந்த‌து. யாழ்ப்பாண‌ அர‌சு யாழ்ப்பாண‌க் குடாநாட்டுக்குள் ம‌ட்டும‌ன்றி, யாழ்ப்பாண‌த்தின் தீவுக‌ள், மன்னார், வ‌ன்னிப்ப‌குதி தொட‌ங்கி முத்துக்க‌ள் நிறைந்த‌ மேல்மாகாண‌த்தின் குதிரைம‌லை, புத்த‌ள‌ம் வ‌ரை ப‌ர‌ந்து விரிந்திருந்த‌து. யாழ்ப்பாண‌ அர‌சு த‌மிழ‌ர்க‌ளுக்கு தம‌து த‌னித்துவ‌த்தையும், த‌மிழ் அடையாள‌த்தையும் பேணிக்காக்க‌வும், சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் க‌ல‌ந்து காணாம‌ல் போகாம‌லிருக்க‌வும் (Assimilation) வாய்ப்ப‌ளித்த‌து.

பரதவர்களும் முத்துக்குளிக்கும் முக்குவர்களும்


ஒருகால‌த்தில் வ‌ட‌க்கில் ம‌ன்னார் தொட‌ங்கி இல‌ங்கையின்  க‌ரையோர‌ம் முழுவ‌தும் பிழைப்பு தேடி த‌மிழ்நாட்டிலும், கேர‌ளாவிலிருந்தும், தென்னிந்தியாவின் ஏனைய‌ ப‌குதிக‌ளிலிருந்தும் இல‌ங்கையின் க‌ட‌ல்வ‌ள‌ம் நிறைந்த‌ கரையோர‌ங்க‌ளில் குடியேறிய ப‌ர‌தர், ப‌ர‌த‌வ‌ர், ப‌ர‌வ‌ர் என‌ அழைக்க‌ப்ப‌டும் சாதியின‌ரும், முத்துக்குளிக்கும் சாதியின‌ராகிய‌ முக்குவ‌ர்க‌ளும் வாழ்ந்தனர். அவ‌ர்க‌ளின் தொழில் மீன்பிடித்த‌ல், முத்துக்குளித்த‌ல், க‌ள்ளிற‌க்குத‌ல் அத்துட‌ன் க‌றுவாப்ப‌ட்டை சீவுத‌ல் என்ப‌னவாகும். இவ‌ர்க‌ளில் சில‌ர் சிங்க‌ளச் சிற்ற‌ர‌ச‌ர்க‌ளின் அடிக்க‌டி ந‌டைபெற்ற‌ ச‌கோத‌ர‌ச்சண்டைக‌ளில் போர்வீர‌ர்க‌ளாக‌ப் ப‌ணிபுரிந்து அத‌னால் நில‌ங்க‌ளை மானிய‌ங்க‌ளாக‌ப் பெற்று சிங்க‌ள‌ப் பெண்க‌ளை ம‌ண‌ந்து சிங்க‌ள‌வ‌ர்க‌ளாக‌ மாறியுமுள்ளார்க‌ள். இன்று அவ‌ர்க‌ள் தான் த‌மிழ‌ர்க‌ளுக்கு உண்மையான‌ வில்ல‌ன்க‌ள். 

இன்று இவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் த‌ம‌து த‌மிழ்நாடு, தென்னிந்திய‌ பார‌ம்ப‌ரிய‌த்தை எவ்வ‌ள‌வு பாடுப‌ட்டு ம‌றைத்தாலும் நடுநிலையான வ‌ர‌லாற்றாசிரிய‌ர்க‌ளுக்கு உண்மை தெரியும்.  ம‌ன்னார் தொட‌க்க‌ம் மாத்த‌றை வ‌ரை வாழ்ந்த‌ இந்த‌ த‌மிழ்நாட்டு, தென்னிந்திய‌ குடியேறிக‌ள் அனைவ‌ரும் த‌மிழ‌ர்க‌ளாக‌, த‌மிழ்பேசும் ம‌க்க‌ளாக‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுட‌ன் க‌ல‌ந்திருந்தால் இன்று த‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கையில் சிறுபான்மையின‌ராக‌ இருந்திருக்க‌ மாட்டார்க‌ள்.


இன்றைய சிங்கள கத்தோலிக்க கரையார்களின் (பரதவர்கள்) புகழ்பெற்ற தமிழ்முன்னோர்கள்:


போத்துக்கேய‌ரின‌தும் க‌த்தோலிக்க‌த்தின‌தும் ப‌ங்க‌ளிப்பு


சிங்க‌ள‌வ‌ர்க‌ளைப் பெரும்பான்மையின‌ராக்குவ‌தில் போத்துக்கேய‌ர் செய்த‌ ப‌ங்க‌ளிப்பு எதுவென்றால் அவ‌ர்க‌ள் க‌ரையோர‌ச்சிங்க‌ள‌வ‌ர்க‌ளையும், க‌ரையோர‌த்த‌மிழ‌ர்க‌ளையும் க‌த்தோலிக்க‌ ம‌தத்துக்கு ம‌த‌மாற்ற‌ம் செய்து அவ‌ர்க‌ளிடையே இருந்த‌ ச‌மூக‌, மத இடைவெளியைக் குறைத்து விட்ட‌ன‌ர். அர‌சிய‌ல், சோழர்  ப‌டையெடுப்பு, இன‌, மொழி, மத அடையாள‌ விழிப்புண‌ர்வு ஆகிய‌வ‌ற்றால் த‌டைப‌ட்டிருந்த‌ த‌மிழ்- சிங்க‌ள இன‌க்க‌ல‌ப்புக்கு கத்தோலிக்க‌ ம‌த‌ம் மீண்டும் உயிர்கொடுத்த‌து.

அதேவேளையில் த‌மிழ‌ர்க‌ளேயில்லாத‌ த‌னிச்சிங்க‌ள‌க் கிராம‌ங்க‌ளில் ப‌ல‌ நூறு ஆண்டுக‌ளாக‌ வாழ்ந்து வ‌ரும் முஸ்லீம்கள் இன்றும் த‌மிழையே பேசுவ‌தும் தமது அடையாளத்தை இழக்காதிருப்பதும் இன்றும் த‌மிழ்பேசும் ம‌க்க‌ளாக‌ இருப்ப‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து. ஏனென்றால் அவ‌ர்க‌ளுக்கும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்குமிடையே ம‌த‌ம் என்ற‌ இடைவெளி தொட‌ர்ந்து இருந்ததால் அவ‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் க‌ல‌ந்து சிங்க‌ள‌வ‌ர்க‌ளாக‌ மாறி விட‌வில்லை.


சாதியும் த‌மிழ்க்க‌த்தோலிக்க‌ர்க‌ளும்


இல‌ங்கையில் க‌த்தோலிக்க‌ ம‌த‌த்தில் கூட‌ சாதிப்பிள‌வுக‌ள் இருந்த‌ன‌. ஒரு கால‌த்தில் இல‌ங்கையிலுள்ள‌ த‌மிழ்க்க‌த்தோலிக்க‌ர்க‌ளின் ஆய‌ர்க‌ள்(பிஸப்) அனைவ‌ரும் யாழ்ப்பாண‌த்திலுள்ள‌ க‌ர‌ம்ப‌ன் என்ற‌ கிராம‌த்தைச் சேர்ந்த வெள்ளாள‌ர்க‌ள். இல‌ங்கையில் இன்றும் த‌ம‌து குடும்ப‌ப்பெய‌ர்க‌ளில் பிள்ளை ப‌ட்ட‌த்தைத் தொட‌ர்ந்து கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் த‌மிழ்க்க‌த்தோலிக்க‌ர்க‌ள் தான். ஏனைய‌ க‌ரையார், ப‌ர‌த‌வ‌ர் போன்ற‌ சாதியின‌ர் தான் க‌த்தோலிக்க‌ ம‌த‌த்தில் பெரும்பான்மையாக‌ இருந்தும், ஆய‌ர்க‌ள் அனைவ‌ரும் வெள்ளாள‌ர்க‌ளே. அதை விட‌ கிராமப்பகுதிகளில் ஒவ்வொரு குறிப்பிட்ட‌ சாதிக்கும் த‌னியாக‌ கத்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளும் இருந்த‌ன‌. ஆனால் இப்ப‌டியான‌ சாதிப்பிள‌வுக‌ள் சிங்களவ‌ர்க‌ளிட‌மிருந்தாலும் கூட‌த் த‌மிழ‌ர்க‌ளை விட‌க் குறைவாக‌ இருந்த‌தும் த‌மிழ்க்க‌த்தோலிக்க‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் க‌ல‌ந்து சிங்க‌ள‌வ‌ர்க‌ளாக‌ மாறுவ‌த‌ற்கு ஏதுவாக‌ அமைந்த‌து.



த‌மிழ்க்க‌த்தோலிக்க‌ர்க‌ளின் சிங்க‌ள‌ம‌ய‌மாக்க‌ல்


ஆர‌ம்ப‌கால‌த்தில் இன்றுபோல் த‌ம‌து த‌மிழ் அடையாள‌த்தை பெரும்பாலான‌ த‌மிழ்க்க‌த்தோலிக்க‌ர்க‌ள் முன்னிலைப்ப‌டுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை ஆனால் சிங்கள தேசியம் சிங்களக் கிறித்தவர்களை ஒருங்கிணைத்தது. சுத‌ந்திர‌த்துக்குப் பின்னாலும் கூட‌ த‌ம‌து மொழியையும், த‌மிழ‌ர் என்ற‌  அடையாள‌த்தையும் பெருமையுட‌ன் பாதுகாத்துக் கொண்டிருந்த‌ க‌ரையோர‌ த‌மிழ்ப்பரதவர்கள் சிலாப‌ம், புத்த‌ள‌ம், நீர்கொழும்பு, மாத்த‌றை போன்ற‌ ப‌குதிக‌ளில் இருந்த‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ளை திட்ட‌மிட்டு, சிங்கள கத்தோலிக்க குருமார்களின் உதவியுடன் சிங்க‌ள‌வ‌ர்க‌ளாக்கிய‌து இல‌ங்கை அர‌சு. சில‌ அர‌சிய‌ல் இன‌வெறி பிடித்த‌ சிங்க‌ள‌க் க‌த்தோலிக்க‌ குருமார், த‌ம‌து சிங்க‌ள அடையாள‌த்தை த‌மிழ‌ர்க‌ள் மேல் திணிக்க‌த் தய‌ங்க‌வில்லை. அதில் மோச‌மான‌ துவேச‌ம் பிடித்த‌வ‌ர்க‌ளில் ஓருவ‌ர் சிங்கள‌ பிஸ‌ப் எட்ம‌ண்ட‌ பீரிஸ்.

நீர்கொழும்பு - ‍ சிங்க‌ள‌ம‌ய‌மாக்க‌ப்ப‌ட்ட‌ த‌மிழ்- ‍கேர‌ள‌ முக்குவர்களும் ப‌ர‌த‌வ‌ர்க‌ளும் - (கரையார்) 


'த‌மிழ்பேசும் சிங்க‌ள‌வ‌ர்க‌ள்' ‍-- தமிழ்க்கலாச்சாரப் படுகொலை


வ‌ட‌மாகாண‌ க‌த்தோலிக்க‌ ம‌றைமாவ‌ட்ட‌த்திலிருந்து சிலாப‌ம் ம‌றைமாவ‌ட்ட‌ம் உருவாக்க‌ப்ப‌ட்ட‌போது அதிலிருந்த‌ பெரும்பான்மையாக இருந்தவர்கள் பரதவ க‌த்தோலிக்க‌ த‌மிழர்கள். சிலாப‌ம் ம‌றைமாவ‌ட்ட‌ த‌மிழ்க் க‌த்தோலிக்க‌ர்க‌ளுக்கு "த‌மிழ்பேசும் சிங்க‌ள‌வ‌ர்க‌ள்" என‌ப் புதுப்பெயரையும், அடையாள‌த்தையும் உருவாக்கினார் சிங்க‌ள‌ பிஸ‌ப் எட்ம‌ண்ட் பீரிஸ். அத்துட‌ன் அதுவ‌ரை த‌மிழை ம‌ட்டும் ஊட‌க‌மாக‌ப் ப‌யின்று வ‌ந்த‌ த‌மிழ்ப்ப‌ர‌த‌வ‌ர்களின்  48 த‌மிழ்ப்பாட‌சாலைக‌ளை ஒரே இர‌வில், சிங்க‌ள‌ அர‌சின் உத‌வியுட‌ன் த‌னிச்சிங்க‌ளப் பாடசாலைக‌ளாக்கினார் பிஸ‌ப். பீரிஸ்.

அதாவ‌து அங்கிருந்த‌ த‌மிழ்க் க‌த்தோலிக்க‌ர்க‌ளின் குடும்ப‌ங்க‌ளில் பாட்ட‌னுக்கும், பாட்டிக்கும் த‌மிழ் ம‌ட்டும் தான் எழுத‌வும், பேச‌வும் தெரியும், ஆனால் பேர‌க்குழ‌ந்தைக‌ளால் சிங்க‌ள‌ம் ம‌ட்டும் தான் எழுத‌, வாசிக்க‌த் தெரியும். ஆனால் இவ‌ர்க‌ளுக்கிடையில் பெற்றோர்கள் இர‌ண்டும் கெட்ட‌ நிலையில். உதார‌ண‌மாக முன்னாள் பேராய‌ர் (Archbishop) நிக்கொல‌ஸ் மார்க்க‌ஸ் பெர்னாண்டோவின்  தாயார் புத்த‌ள‌த்தில் முந்த‌ல் என்னும் த‌மிழ்க்கிராம‌த்தைச் சேர்ந்த‌ த‌மிழ்ப்பெண், அவருக்கு த‌மிழ் ம‌ட்டும் தான் தெரியும். ம‌க‌னும் அவ‌ருக்கு த‌மிழில் தான் க‌டித‌ம் எழுதி வ‌ந்தார். ஆனால் இப்பொழுது அவ‌ரின் அடையாள‌மும் கூட சிங்க‌ளவர் தான்)


ம‌தத்தின் பெயரால் இன‌ அடையாள‌த்தை இழ‌ந்த‌ ப‌ரிதாப‌ம்



தமிழ்க்கிறித்தவர்கள், வ‌ங்காலை  

த‌மிழ்ப்ப‌ர‌த‌வ‌ர்க‌ள் என்ற‌ அடையாள‌த்திலிருந்து சிங்க‌ள‌வ‌ர்க‌ளாக‌, பாடசாலைக‌ளில் க‌ல்வி க‌ற்பிக்கும் ஊட‌க‌த்தை மாற்றுவ‌த‌ன் மூல‌ம் சிறுபான்மையின‌ரை அவ‌ர்கள‌து அடையாள‌ங்க‌ளை இழ‌க்க‌ச் செய்து பெரும்பான்மையின‌ருட‌ன் க‌ல‌க்க‌ச்செய்யும் வெற்றிக‌ர‌மான‌ திட்ட‌த்துக்கு இது ந‌ல்ல‌ உதார‌ண‌மாகும். ஆனால் வ‌ட‌க்கில் ம‌ன்னார் ம‌றைமாவ‌ட்ட‌த்தைச் சேர்ந்த‌ வ‌ங்காலையிலும் பேசாலையிலுமுள்ள‌ த‌மிழ்ப்ப‌ர‌த‌வ‌ர்க‌ள் இந்த‌ சிங்க‌ள மயமாக்குவ‌தில் அக‌ப்ப‌டாம‌ல் த‌ப்பிய‌தால் இன்றும் அட‌ங்காத, தமிழுணர்வு நிறைந்த த‌மிழ‌ர்க‌ளாக விள‌ங்குகின்ற‌ன‌ர். அதேவேளையில் ம‌த‌த்தின் பெயரால் இன அடையாள‌த்தை இழ‌ப்ப‌தை அமைதியாக‌ ஏற்றுக் கொண்ட‌வ‌ர்க‌ள் த‌மிழ்க்க‌த்தோலிக்க‌ர்க‌ள் என்ற‌ உண்மையையும் ம‌றுக்க‌ முடியாது.

இல‌ங்கைத் த‌மிழ்க்க‌த்தோலிக்க‌ர்க‌ளுக்கு த‌னிப்ப‌ட்ட‌ த‌மிழ்த்திருச்ச‌பை?


உண்மையில் இல‌ங்கைத் த‌மிழ்க்க‌த்தோலிக்க‌ர்க‌ள் விழிப்புண‌ர்வுட‌ன் இருந்திருந்தால் த‌ம‌க்கென‌ த‌னியான வ‌ட‌க்கு, கிழ‌க்கு இணைந்த‌ த‌னித்த‌மிழ் ம‌றைமாவ‌ட்ட‌த்தை  ரோமிட‌மிருந்து பெற்றிருக்க‌லாம்.  உதார‌ண‌மாக‌ த‌மிழ்நாடு, ஒரே மொழியைப் பேசும் மாநில‌மாக இருந்தும் கூட சென்னையிலும், ம‌துரையிலும் இர‌ண்டு த‌னியான‌ ம‌றைமாவ‌ட்ட‌ங்க‌ளுண்டு.  எப்ப‌டி த‌மிழ‌ர்க‌ளின் அர‌சிய‌ல் த‌லைமை சுத‌ந்திர‌த்தின் போது த‌மிழ‌ர்க‌ளுக்கென‌ த‌னிமாநில‌ம் கேட்க‌ த‌வ‌றினார்க‌ளோ அப்ப‌டியான‌ த‌வ‌றைத் தான் த‌மிழ‌ர்க‌ளின் க‌த்தோலிக்க‌ ஆய‌ர்க‌ளும் ஆரம்பத்திலேயே த‌மிழ‌ர்களுக்கென‌ த‌னி ம‌றைமாவ‌ட்ட‌ம் கேட்க‌ த‌வ‌றி விட்ட‌ன‌ர். 

ஆனால்  எவ்வாறு தமிழர்கள் ஏமாற்றப்பட்டார்கள் என்ற‌ வ‌ர‌லாறு அறிந்த யாழ்ப்பாண ஆய‌ர்(பிஸப்) வ‌ண‌......தியோகுப்பிள்ளை 1976 இல் த‌மிழ‌ர்க‌ளுக்கென‌ த‌னிப்ப‌ட்ட‌ Arch Diocese ஐ அமைக்குமாறு கேட்டார் ஆனால் சிங்க‌ள ஆய‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒன்று சேர்ந்து அவ‌ரைத் த‌னிமைப்ப‌டுத்தி அந்த‌ வேண்டுகோளை திரும்ப‌ப் பெற்றுக் கொள்ள‌ச் செய்து விட்டார்க‌ள். அதிலும் வ‌ட்டுக்கோட்டை த‌மிழீழப்பிர‌க‌ட‌ன‌த்தின் பின்பு யாழ்ப்பாண‌ ஆய‌ரால் அந்த‌க் கோரிக்கை வைக்க‌ப்ப‌ட்ட‌தால், த‌னிநாட்டுக்கோரிக்கையின் ஒரு அங்க‌மாக‌ அதை மாற்றி, ஆய‌ர் தியோகுப்பிள்ளையைப் பிரிவினைவாதியாக்க‌ சிங்க‌ள ஆய‌ர்க‌ளால் முடிந்த‌து. 


ஆகவே இன்று சிங்களவ‌ர்க‌ள்  அறுதிப் பெரும்பான்மையின‌ராக இருப்ப‌த‌ற்கு  க‌ரையோர‌த்த‌மிழ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் சிங்க‌ள‌ பெள‌த்த‌ர்க‌ளாக‌வும், சிங்க‌ள‌க் கிறித்த‌வ‌ர்க‌ளாக‌வும் மாறிய‌து தான் கார‌ண‌மாகும். ஆனால் இந்த‌ மாற்ற‌ங்க‌ள் எல்லாவ‌ற்றிலும், அதாவ‌து போத்துக்கேய‌ர் வ‌ருகையினாலும் க‌த்தோலிக்க‌ம‌த‌ மாற்ற‌ங்க‌ளாலும் இழ‌ந்த‌வ‌ர்க‌ள் யாரென்றால் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் தான்.  த‌மிழ‌ர்க‌ள் த‌ம‌து யாழ்ப்பாண அர‌சை இழ‌ந்த‌து ம‌ட்டும‌ல்ல‌, த‌ம‌து த‌மிழின‌ச் ச‌கோத‌ரர்க‌ளையும் க‌த்தோலிக்க‌த்துக்கு இழ‌ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் புத்த‌ள‌த்திலிருந்து மாத்த‌றை வ‌ரை இன்று சிங்க‌ள‌ அடையாள‌த்தை அமைதியாக‌ ஏற்றுக் கொண்ட‌ன‌ர். 

அத‌னால் இன்று கொழும்பிலும், நீர்கொழும்பிலும் வாழும் முன்னாள் த‌மிழ்ப்ப‌ர‌த‌வ‌ர்க‌ளும் இன்று சிங்க‌ள‌ப்ப‌ர‌த‌வ‌ர்க‌ளாகி அல்ல‌து இர‌ண்டும் கெட்டான் நிலையில் சிங்க‌ள‌ம‌ய‌ப்ப‌ட்டிருக்கும் பெர்னாண்டொ புள்ளே வ‌கைய‌றாக்க‌ள் எல்லோரையும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் அல்ல‌து குறிப்பாக‌ யாழ்ப்பாண‌த் த‌மிழ‌ர்க‌ள் ஒதுக்க‌வில்லை, அவ‌ர்க‌ள் தான் திட்ட‌மிட்ட‌ சிங்கள‌ அர‌சின் திட்ட‌ங்களை ஏற்று, அமைதியாக, ம‌கிழ்ச்சியாக‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளாகி ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கெதிராக‌ சிங்க‌ள‌ அர‌சுட‌ன் கைகோர்த்து நிற்கிறார்க‌ள்.



ந‌ன்றி:  DBSJ and Colombo Telegraph

18 comments:

சார்வாகன் said...

வணக்கம் சகோ வியாசன்,
நல்ல பதிவு.
காலத்தால்,சூழலால் மொழி மாறும் சகோ!!

அதுவும் திட்டமிட்டு மாற்றினால் சீக்கிரம் நடக்கும்!!

சிங்களர்களில் பெரும்பான்மையோர், மொழி மறந்த தமிழர்களே என்றாலும் அந்த வரலாறு மறைக்க, ம்றக்கடிக்க படுகிறது.

இப்போது கத்தோலிக்கம் போல், முன்பு பலர் பவுத்த மதமும் மாறினார்.

ஆமாம் அவர்கள் திட்டமிட்டே , சகல வித தந்திரங்களும் செய்தே சிங்களர் பெரும்பானமை நாடு ஆகினார்!!

ஏமாறுபவன் இருக்கும் வரை, ஏமாற்றுபவனும் இருப்பான்!!

மன்னிக்கவும் நம் தவறுகளில் இருந்து பாடம் கற்காமல் வீழ்ந்தவர்கள் எழ முடியாது!!

நாம் என்ன செய்வோம்?

சாதி மேட்டிமை விடமாட்டோம்!!

வடக்கு, கிழக்கு,மலையகம், உயர் சாதி, தாழ்ந்த சாதி, மதம் ,மலையகம் என் பிரிந்து நிற்போம்.

அவன் பிரிந்து வருபவர்களை சேர்த்து பெரும்பான்மை ஆகிவிட்டான்!!

சிங்கள தலைகள் பலர் தமிழ் கிறித்தவர் ஆகி ,சிங்களனாக பரிணமித்த‌வர்களே!!!

சாதி உயர்வு தாழ்வு உள்ளிட்டு இதர பிரிவினைகளை தவிர்த்தால் மட்டுமே தமிழர்கள் மீண்டும் தலை எடுக்க முடியும்!!

சிந்திக்க மாட்டீர்களா!!!

நன்றி!!!

viyasan said...

//நாம் என்ன செய்வோம்?

சாதி மேட்டிமை விடமாட்டோம்!!

வடக்கு, கிழக்கு,மலையகம், உயர் சாதி, தாழ்ந்த சாதி, மதம் ,மலையகம் என் பிரிந்து நிற்போம்.

அவன் பிரிந்து வருபவர்களை சேர்த்து பெரும்பான்மை ஆகிவிட்டான்!!

சிங்கள தலைகள் பலர் தமிழ் கிறித்தவர் ஆகி ,சிங்களனாக பரிணமித்த‌வர்களே!!!

சாதி உயர்வு தாழ்வு உள்ளிட்டு இதர பிரிவினைகளை தவிர்த்தால் மட்டுமே தமிழர்கள் மீண்டும் தலை எடுக்க முடியும்!!

சிந்திக்க மாட்டீர்களா!!!

நன்றி!!!//


ச‌கோ. சார்வாக‌ன்,

உங்க‌ளின் அறிவுரைக்கு ந‌ன்றி. ஆனால் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளிடையேயுள்ள‌ சாதிப்பிரிவுக‌ளும், ஏனைய‌ பிள‌வுக‌ளும் த‌மிழ்நாட்டுட‌ன் ஒப்பிடும் போது, முற்றாக‌ இல்லை என்றே கூறிவிட‌லாம். நீங்க‌ள் நினைப்ப‌து போல‌ல்லாம‌ல், ம‌லைய‌க‌, ஈழ‌த்த‌மிழ‌ர் பிள‌வுக‌ள் கூட‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளிட‌ம் இப்போது கிடையாது. ம‌லைய‌க‌த் த‌மிழ‌ர்க‌ளின் த‌லைவ‌ர் ம‌னோக‌ணேச‌னுக்கு வ‌ட‌க்கு, கிழ‌க்கில் உள்ள‌ ஆத‌ர‌வும், ம‌திப்பும் த‌மிழ‌ர் தேசிய‌ முன்ன‌ணிக்குக் கூட‌ இல்லை. புல‌ம்பெய‌ர் த‌மிழ‌ர்க‌ளின் இர‌ண்டாவ‌து த‌லைமுறையில் அக‌முறைம‌ண‌ங்க‌ள் முற்றாக‌ இல்லாம‌ல் போய்க் கொண்டிருக்கின்ற‌ன‌. க‌ருணா அல்ல‌து பிள்ளையான் பிரிந்த‌துக்கு சாதியும், பிர‌தேச‌வாத‌மும் கார‌ண‌ம‌ல்ல‌, அப்ப‌டிக் கூறுவ‌து, இந்திய‌ ‍ இல‌ங்கை ப‌த்திரிகையாள‌ர்க‌ளின‌தும், இந்தியாவிலுள்ள‌ த‌மிழெதிரிக‌ளின‌தும் பிர‌ச்சார‌ யுக்தி. அதாவ‌து ஈழ‌த்த‌மிழ‌ர்களின் அழிவுக்கு ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் தான் காரணமென‌க் காட்டி அவ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்திய‌தை ம‌றைப்ப‌த‌ற்காக‌ச் செய்யும் பிர‌ச்சார‌ம், அதை உங்க‌ளைப் போல் த‌மிழ‌ர்க‌ள் அப்ப‌டியே ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு க‌ருணாவையும், பிள்ளையானையும் விட‌ எத்த‌னையோ ஆயிர‌ம் அன்னை பூப‌திக‌ள் கிழ‌க்கில் உள்ளார்க‌ள். க‌டைசியாக‌ ந‌ட‌ந்த‌ தேர்த‌லில் கூட‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்புத் த‌மிழ‌ர்க‌ள‌னைவ‌ரும் த‌மிழ‌ர் தேசிய‌ முன்ன‌ணிக்குத் தான் வாக்க‌ளித்தார்க‌ள்.

க‌ரையோர‌த்த‌மிழ‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ளான‌துக்குக் கார‌ண‌ம் சிங்க‌ள‌க் க‌‌த்தோலிக்க‌ திருச்ச‌பையும், சிங்க‌ள‌ அர‌சும் செய்த‌ திட்ட‌மிட்ட‌ ச‌தி, அதில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு எந்த‌வித‌ ப‌ங்குமில்லை. வ‌ட‌க்கு கிழ‌க்கிலுள்ள‌ இந்துக்க‌ளும் கிறித்த‌வ‌ர்க‌ளும், ம‌த‌ வேறுபாட்டை ம‌ற‌ந்து த‌மிழ‌ர்க‌ளாக‌ எப்பொழுதே இணைந்து விட்டார்க‌ள். வ‌ன்னியில் இற‌ந்த‌ ஒவ்வொரு த‌மிழ‌னும் இந்துவாக‌வோ அல்ல‌து கிறித்துவ‌னாக‌வோ இற‌க்க‌வில்லை, த‌மிழ‌னாக‌ ம‌ட்டும் தான் த‌ன்னுயிரை அர்ப்ப‌ணித்தார்க‌ள்.

ம‌ன்னிக்க‌வும், நான் இவ்வள‌வு வெளிப்ப‌டையாக‌ச் சொல்வ‌தையிட்டு என்னுட‌ன் கோபிக்க‌க் கூடாது, ஆனால் த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் த‌ம‌து சாதிம‌றுப்பு அறிவுரைக‌ளை த‌மிழ்நாட்டில் இன்னும் இர‌ட்டைக்குவ‌ளையும், தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் குடிசைக‌ளை எரிப்ப‌தும், ம‌ல‌ம் தீற்றுவ‌தும் போன்ற‌ கொடுமைக‌ள் ந‌டைபெறும் கிராம‌ங்க‌ளுக்கும் போய் எடுத்துரைக்க‌ வேண்டும் என்ப‌து தான் என்னுடைய‌ ஆவ‌ல். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் மத்தியில் அப்படி எதுவும் ந‌ட‌ப்ப‌தேயில்லை.

ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்குள்ள‌ பிர‌ச்ச‌னை, சாதிப்பிர‌ச்ச‌னையல்ல‌, நில‌ப்பிர‌ச்ச‌னை. தமிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் த‌ம‌க்கென‌ ஒரு மாநில‌த்தையும் ஆட்சியையும் கொண்டிருப்ப‌தால், த‌மிழ‌ர‌ல்லாத‌வ‌ர்கள் திட்ட‌மிட்ட‌ குடியேற்றங்க‌ளால் த‌ம‌து சொந்த‌ ஊரிலேயே த‌ம்மை சிறுபான்மையின‌ர்க‌ளாக்கி விடுவார்க‌ளோ என்ற‌ ப‌ய‌ம் த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ளிட‌மில்லை ஆனால் அது ஈழத்த‌மிழ‌ர்க‌ளிட‌ம் உண்டு. அது ம‌ட்டும் தான் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் இன்றைய‌ பிர‌ச்ச‌னையும் அவ‌ர்க‌ளின் அச்ச‌முமாகும். இப்பொழுதுள்ள‌ இக்க‌ட்டான‌ நிலையில், ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு, இன‌ அழிவிலிருந்து த‌மிழின‌த்தைக் காப்பாற்றும் வ‌கையில் ஒரு மாநில‌ம் அமைந்தால் கூட‌, த‌மிழ்நாட்டிலுள்ள‌து போன்று சாதி, ம‌த‌, ஏழ்மை ச‌ம்ப‌ந்த‌மான‌ பிர‌ச்ச‌னைக‌ளில்லாத‌ செழிப்பான‌ பூமியாக‌ வ‌டக்கு, கிழ‌க்கு உருவாகிவிடும்.

வேகநரி said...

கிறிஸ்தவர் பங்கு புதிய தகவல். தற்போது இலங்கை துண்டாக்கபட வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ பெரிய புள்ளிகள் ரொம்ப ஆர்வம் காட்டுகிறார்கள்.
//இல‌ங்கையின் க‌ரையோர‌ம் முழுவ‌தும் பிழைப்பு தேடி த‌மிழ்நாட்டிலும் கேர‌ளாவிலிருந்தும் தென்னிந்தியாவின் ஏனைய‌ ப‌குதிக‌ளிலிருந்தும் இல‌ங்கையின் க‌ட‌ல்வ‌ள‌ம் நிறைந்த‌ கரையோர‌ங்க‌ளில் குடியேறிய ப‌ர‌தர் ப‌ர‌த‌வ‌ர் ப‌ர‌வ‌ர் என‌ அழைக்க‌ப்ப‌டும் சாதியின‌ரும்//
ஹி ஹி ஹி தமிழகத்தின் பிரபல பதிவர் எழுதியிருக்கார் வாழ்கை தரம்,கல்வி எல்லாவற்றிலும் தமிழகம் இலங்கையை விட மேல் என்று அப்படியிருக்க நீங்க சொன்னதை நான் எப்படி நம்ப முடியும்?

viyasan said...

//ஹி ஹி ஹி தமிழகத்தின் பிரபல பதிவர் எழுதியிருக்கார் வாழ்கை தரம்,கல்வி எல்லாவற்றிலும் தமிழகம் இலங்கையை விட மேல் என்று அப்படியிருக்க நீங்க சொன்னதை நான் எப்படி நம்ப முடியும்?//

என்னுடைய‌ வ‌லைப்ப‌திவுக்கு வ‌ய‌து வெறும் மூன்றரை மாத‌ம் தான், அத‌னால் யார் பிர‌ப‌ல‌மான‌ ப‌திவ‌ர், யார் பிர‌ப‌ம‌ல்லாத‌வ‌ர் என்பதெல்லாம் என‌க்குத் தெரியாது. நீங்க‌ளும் பெரிய‌ பிர‌ப‌ல‌மான‌ ப‌திவ‌ர் என்று தான் நான் நினைக்கிறேன். :-)

வேகநரி said...

நீங்களும் அவர் எழுதியதை படித்தீர்கள் வேறு யார் பொரும் பதிவர் கொங்கு நாட்டான் தான்.

வவ்வால் said...

வியாசர்,

//ம‌த‌த்தின் பெயரால் இன அடையாள‌த்தை இழ‌ப்ப‌தை அமைதியாக‌ ஏற்றுக் கொண்ட‌வ‌ர்க‌ள் த‌மிழ்க்க‌த்தோலிக்க‌ர்க‌ள் என்ற‌ உண்மையையும் ம‌றுக்க‌ முடியாது.//

இன அடையாளத்தினை மதமாற்றத்தின் மூலம் இழந்துவிட்டார்கள் தமிழ் பரதவர்கள் என இப்படி புலம்ம்பியிருக்கிறீர்கள்,

ஆனால் ஏன் அப்படியானர்கள் என்பதற்கான பதில் உங்கள் பதிவிலேயே இருக்கிறது.

// ஏனைய‌ க‌ரையார், ப‌ர‌த‌வ‌ர் போன்ற‌ சாதியின‌ர் தான் க‌த்தோலிக்க‌ ம‌த‌த்தில் பெரும்பான்மையாக‌ இருந்தும், ஆய‌ர்க‌ள் அனைவ‌ரும் வெள்ளாள‌ர்க‌ளே. அதை விட‌ கிராமப்பகுதிகளில் ஒவ்வொரு குறிப்பிட்ட‌ சாதிக்கும் த‌னியாக‌ கத்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளும் இருந்த‌ன‌. ஆனால் இப்ப‌டியான‌ சாதிப்பிள‌வுக‌ள் சிங்களவ‌ர்க‌ளிட‌மிருந்தாலும் கூட‌த் த‌மிழ‌ர்க‌ளை விட‌க் குறைவாக‌ இருந்த‌தும் த‌மிழ்க்க‌த்தோலிக்க‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் க‌ல‌ந்து சிங்க‌ள‌வ‌ர்க‌ளாக‌ மாறுவ‌த‌ற்கு ஏதுவாக‌ அமைந்த‌து.//

பஞ்சமர் பிரிவினர் கல்விக்கற்க தடை, நில உரிமை இல்லை, ராஜ காரியை செய்ய வேண்டும் என நிர்பந்தம்.ராஜ காரியை என்பது வர்ணாசிரம பாணியில் விதிக்கப்பட்ட வேலை, துணி துவைப்பவர் ,முடிதிருத்துவோர், பறையடிப்பவர், துப்புறவு தொழில் என பிறப்பால் தொடர்ந்து செய்யப்பட வேண்டும் என விதிப்பது. இதனை நீங்கள் சொல்லாமல் நழுவுவதேன்.

இப்படியான சூழலில் போர்ச்சுகீசியர்/டச்/வெள்ளையர் வருகை , மதம் மாறினால்,கல்வி அரசு வேலை, ராஜ காரியை இல்லை,என சுதந்திரம் கிடைக்கிறது,மாறாமல் என்ன செய்வார்கள்.

இதற்கெல்லாம் யார் காரணம் நீங்கள் ஆண்ட பரம்பரை என்று பீற்றிக்கொள்ளும் வெள்ளாலர்கள் தானே.

ஆடுகள் முகாம் மாறி சுதந்திரம் ஆகிறதே என வெள்ளாளர்களும் மதம் மாறி கிருத்துவத்திலும் ஆதிக்கத்தினை நாட்டியதால் தான் ஆயர்கள் எல்லாம் அவர்களே.

//த‌மிழ்நாட்டிலுள்ள‌து போன்று சாதி, ம‌த‌, ஏழ்மை ச‌ம்ப‌ந்த‌மான‌ பிர‌ச்ச‌னைக‌ளில்லாத‌ செழிப்பான‌ பூமியாக‌ வ‌டக்கு, கிழ‌க்கு உருவாகிவிடும்.//

ஹி...ஹி இப்போக்கூட ஆண்ட பரம்பரை என சொல்லிக்கொள்வதில் தான் பேரார்வம் கொண்டு இல்லாத ஆதாரங்களை தேடி பதிவெல்லாம் போடுறிங்க,, அப்புறம் எப்படி சாதி,மத,ஏழ்மை இல்லாமல் செய்வோம், தமிழ்நாட்டில் தான் இருக்குனு சொல்லிக்கிட்டு இருக்கீங்க?

தமிழ்நாட்டில் சாதியம் இருக்கு,கொடுமை நடக்குது,ஆனால் இங்கு இருத்தல் என்பதே பிரச்சினை இல்லை,ஆனால் இருந்தலே பிரச்சினையாக இருக்கும் ஒரு நிலத்தில் சாதியம் பேசியே அழிந்த/அழியும் மக்களை என்னவென்பது?

------------------

நரிக்குட்டி,

இங்கேயுமா/

//ஹி ஹி ஹி தமிழகத்தின் பிரபல பதிவர் எழுதியிருக்கார் வாழ்கை தரம்,கல்வி எல்லாவற்றிலும் தமிழகம் இலங்கையை விட மேல் என்று அப்படியிருக்க நீங்க சொன்னதை நான் எப்படி நம்ப முடியும்?//

ஹி ...ஹி ராசபக்சே இதான் சொல்கிறார்,அப்போ அவ்வளவு தரமான வாழ்வை அளித்த ராசபக்சேவை ஏன் எதிர்க்க வேண்டும், அவர் சொல்வதை தானே நீரும் சொல்கிறீர் என கேட்டேன் ஏன் பதிலே சொல்லவில்லை.

ஒரு பக்கம் ராச பக்சே தமிழர்களை அழிக்கிறார்,வாழ்வாதாரம் போய்விட்டது என்பது இன்னொரு பக்கம் பார்த்தீர்களாக இலங்கையில் வசதியான வாழ்க்கை இருக்கு என்பது?

நீரும் ,வியாசரும் இதே போல பேசுகின்றீர்கள் எனி அண்டர்கிரவுண்ட் கனெக்‌ஷன் :-))
--------------------------

viyasan said...

//இன அடையாளத்தினை மதமாற்றத்தின் மூலம் இழந்துவிட்டார்கள் தமிழ் பரதவர்கள் என இப்படி புலம்ம்பியிருக்கிறீர்கள்//

ம‌ன்னிக்க‌வும், பஞ்சாய‌த்து தலைவ‌ர் வெள‌வால் அவ‌ர்க‌ள் க‌ண்ணாடியை ம‌ற‌ந்து போய் வீட்டில் வைத்து விட்டு, இங்கு வ‌ந்து புல‌ம்புகிறார் போலிருக்கிற‌து. :‍-)

நான் கூறிய‌து "ம‌த‌த்தின் பெயரால் இன அடையாள‌த்தை இழ‌ப்ப‌தை அமைதியாக‌ ஏற்றுக் கொண்ட‌வ‌ர்க‌ள் த‌மிழ்க்க‌த்தோலிக்க‌ர்க‌ள் என்ற‌ உண்மையையும் ம‌றுக்க‌ முடியாது". என‌து க‌ருத்து என்ன‌வென்றால், சிலாப‌ம் ம‌றைமாவ‌ட்ட‌த்தில், சிங்க‌ள‌ ஆய‌ர்க‌ளால், த‌மிழ் மொழி ஊட‌க‌ப் பாடசாலைக‌ள் எல்லாம் (ஒன்ற‌ல்ல‌ 48)சிங்க‌ள‌ப்பாட‌சாலைக‌ளாக‌ மாற்ற‌ப்ப‌ட்ட‌ போது, சிங்க‌ள‌ம் அவ‌ர்க‌ள் மீது திணிக்க‌ப்ப‌ட்ட‌ போது( உதார‌ண‌மாக‌ தேவால‌ய‌ங்க‌ளில் சிங்க‌த்தில் ம‌ட்டும் பூசை) அதை எதிர்க்காம‌ல், சிங்க‌ள‌ ஆய‌ர்க‌ளின் திட்ட‌மிட்ட‌ ச‌தியை உணராம‌ல், ம‌த‌த்தின் பெயரால் இன‌ அடையாள‌ மாற்ற‌த்தை த‌மிழ்க்க‌த்தோலிக்க‌ ப‌ர‌த‌வ‌ர்க‌ள் அமைதியாக‌ ஏற்றுக் கொண்டார்க‌ள் என்ப‌து தான்.

viyasan said...

//பஞ்சமர் பிரிவினர் கல்விக்கற்க தடை, நில உரிமை இல்லை, ராஜ காரியை செய்ய வேண்டும் என நிர்பந்தம்.ராஜ காரியை என்பது வர்ணாசிரம பாணியில் விதிக்கப்பட்ட வேலை, துணி துவைப்பவர் ,முடிதிருத்துவோர், பறையடிப்பவர், துப்புறவு தொழில் என பிறப்பால் தொடர்ந்து செய்யப்பட வேண்டும் என விதிப்பது. இதனை நீங்கள் சொல்லாமல் நழுவுவதேன்.//
உங்க‌ளுக்கு இல‌ங்கையில் அதுவும் தென்னில‌ங்கையில் அதிக‌ள‌வில் ந‌டைமுறையிலிருந்த‌ ராச‌காரிய‌த்தைப் ப‌ற்றித் தெரியாது போல் தெரிகிற‌து. அதைப்ப‌ற்றி எதிர்வ‌ரும் ப‌திவுக‌ளில் பார்ப்போம். அத‌ற்கும் வ‌ர்ணாசிர‌ம‌த்துக்கும் தொட‌ர்பில்லை. ராச‌காரிய‌ம் சாதியை வ‌லியுறுத்த‌வில்லை. ராச‌காரிய‌ம் என்ப‌து நாட்டிலுள்ள‌ நில‌ம் எல்லாம் அர‌ச‌னுக்குச் சொந்த‌மான‌து, அதில் ம‌க்க‌ள் அனைவ‌ரும் த‌ம‌க்குரிய‌ ப‌ங்கு வேலையைச் செய்ய‌ வேண்டும். அதே வேளையில் சிர‌ம‌தான‌ முறையில் பொதுச்சொத்துக்க‌ளாகிய‌ குள‌ங்க‌ள், அணைக‌ள், கோயில்க‌ள் என்ப‌வ‌ற்றைத் திருத்த‌ அல்ல‌து க‌ட்ட‌ வேண்டும். கிட்ட‌த்த‌ட்ட‌ த‌மிழ்நாட்டில் ந‌டைமுறையிலிருந்த‌ வைகைக்கு அணை க‌ட்டுவ‌தில், ஒவ்வொருவ‌ரும் த‌ம‌து ப‌ங்கைச் செய்யாது விட்டால் பிர‌ம்ப‌டி கிடைக்கும் என்ற க‌தை போன்ற‌து தான் ராச‌காரிய‌ம், உங்க‌ளுக்கு இப்பொழுது புரிந்திருக்குமென‌ ந‌ம்புகிறேன்.

//இப்படியான சூழலில் போர்ச்சுகீசியர்/டச்/வெள்ளையர் வருகை , மதம் மாறினால்,கல்வி அரசு வேலை, ராஜ காரியை இல்லை,என சுதந்திரம் கிடைக்கிறது,மாறாமல் என்ன செய்வார்கள்.//

உண்மை, யாழ்ப்பாண‌த்தில் ப‌ல‌ர் ம‌த‌ம்மாறிய‌த‌ற்குக் கார‌ண‌ம் ச‌லுகைக‌ளுக்காக‌வும், க‌ல்வி, உத்தியோக‌ம், கிறித்த‌வ‌ர‌ல்லாதாருக்கு விரித்த‌ வ‌ரிக‌ள், அர‌ச‌ தொந்த‌ர‌வு என்ப‌வ‌ற்றைத் த‌விர்த்துக் கொள்ளுவ‌த‌ற்காக‌, அத‌னால் தான் ஆங்கிலேய‌ர் கால‌த்தில் பெரும்பாலானோர் மீண்டும் சைவ‌ர்க‌ளாகி விட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ளை யாழ்ப்பாண‌த்தில் ப‌ஞ்சாட்ச‌ர‌க் கிறித்த‌வ‌ர்க‌ள். அதாவ‌து ச‌‍- ம்- ப‌- ள‌- ம் (ப‌ஞ்சாட்ச‌ர‌ம்) ச‌ம்ப‌ள‌ம் என்ற‌ ப‌ஞ்ச‌ அட்ச‌ர‌ங்க‌ளுக்காக‌ கிறித்த‌வ‌த்துக்கு ம‌த‌ம் மாறிய‌வ‌ர்க‌ள். :-)

viyasan said...

//இதற்கெல்லாம் யார் காரணம் நீங்கள் ஆண்ட பரம்பரை என்று பீற்றிக்கொள்ளும் வெள்ளாலர்கள் தானே.//
நான் ஒன்றும் பீற்றிக் கொள்ள‌வில்லை, உண்மை சில‌ருக்குக் க‌ச‌க்க‌த்தான் செய்யும். எங்கென்றாலும் பொய்யான‌ பிர‌ச்சார‌ங்க‌ளை உட‌னடியாக‌ சுட்டிக்காட்டுவ‌தில் தவறில்லை.

//வெள்ளாளர்களும் மதம் மாறி கிருத்துவத்திலும் ஆதிக்கத்தினை நாட்டியதால் தான் ஆயர்கள் எல்லாம் அவர்களே.//
அண்மைக்கால‌ம் வ‌ரை இல‌ங்கையிலிருந்த‌ த‌மிழ் ஆய‌ர்கள் அனைவ‌ரும் க‌ர‌ம்பொன் கிராம‌த்தைச் சேர்ந்த‌ வெள்ளாள‌ர்க‌ள். என்ன‌ கார‌ண‌மோ என‌க்குத் தெரியாது. சாதியை எதிர்த்து உருவாகிய‌ புத்த‌ரின் போத‌னைக‌ளே இல‌ங்கையில் சாதியடிப்ப‌டையில் பிரிந்து கிட‌க்கிற‌து.

// அப்புறம் எப்படி சாதி,மத,ஏழ்மை இல்லாமல் செய்வோம், தமிழ்நாட்டில் தான் இருக்குனு சொல்லிக்கிட்டு இருக்கீங்க?//
நான் என்ன‌ இல்லாத‌தையா சொல்கிறேன், த‌மிழ்நாட்டில் இன்றும் ந‌டைபெறும் சாதிக்கொடுமைக‌ளை நினைத்தாலே எங்க‌ளுக்கு த‌மிழ‌ர் என்ற‌ முறையில் வெட்க‌மாக‌ ம‌ட்டும‌ல்ல‌ அருவ‌ருப்பாகவும் இருக்கிற‌து. அந்த‌ இல‌ட்ச‌ண‌த்தில் த‌மிழ்நாட்டார் சாதியைப் ப‌ற்றி ஈழ‌த்தமிழ‌ர்க‌ளுக்குப் போத‌னை செய்வ‌து வெறும் வேடிக்கை தான்.

//ஆனால் இருந்தலே பிரச்சினையாக இருக்கும் ஒரு நிலத்தில் சாதியம் பேசியே அழிந்த/அழியும் மக்களை என்னவென்பது?//

ஈழ‌த்த‌மிழ‌ர் பிர‌ச்ச‌னை சாதிப்பிர‌ச்ச‌னைய‌ல்ல‌. இல‌ங்கைத் த‌மிழ‌ர் பிர‌ச்ச‌னை ப‌ற்றி நீங்க‌ள் இன்னும் அதிக‌ம் அறிய‌ வேண்டியிருக்கிற‌து. சில இல‌ங்கைத் த‌மிழ் வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளால், இணைய‌த்த‌ள‌ங்க‌ளில் ஆதிக்க‌ம் செலுத்தும் த‌மிழ்நாட்டுத் த‌லித்துக்க‌ளின் ஆத‌ர‌வைப் பெற்றுப் புக‌ழ‌டைவ‌தற்காக, வில்ல‌ன்க‌ளாக்க‌ப்ப‌ட்ட‌ யாழ்ப்பாண வெள்ளாள‌ர்க‌ள் கூட‌ வெள்ளாள‌ரல்லாத‌ பிர‌பாக‌ர‌னைத் த‌ம‌து த‌லைவ‌னாக‌ முழும‌ன‌தாக‌ ஏற்றுக்கொண்டு ஆத‌ரவ‌ளித்தார்கள் என்ற‌ உண்மையை இங்கே ம‌ற‌ந்து விட‌க் கூடாது.

சார்வாகன் said...

சகோ வியாசன்,
தமிழ்நாட்டிலும் சாதி உயர்வு ,தாழ்வு பிரச்சினை உண்டு.இதனையும் எதிர்க்கிறோம், ஆதிக்க சாதி பெருமை பேசும் பதிவுகளுக்கு பதில் கொடுக்கிறோம்.

உங்கள் பதிவில் இலங்கை பற்றி பேசியதால் மட்டுமே தமிழகம் பற்றி குறிப்பிடவில்லை.

ஈழ தமிழர்கள் ,கிறித்துவம் வழியாக சிங்களர் ஆனது, நேரடியாக பவுத்த சிங்களர் ஆனதும் ஏன்? என்பதே நம் கேள்வி!!

எனக்கு இலங்கை சூழல் பற்றி தனிப்பட்ட அனுபவம் இல்லை, எல்லாம் இலங்கைத் தமிழர்கள் எழுதும் விவரங்கள்தான்.

சாஸ்திரி,பண்டார நாயகே ஒப்பந்தப் படி துரத்தப்பட்ட மலையக் தமிழர்களை ,அப்போது ஈழ தமிழர் கைவிட்டார்.

பாருங்கள் 1983 கலவரத்தால் கொழும்பில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் சில பள்ளிக் கூடங்களில் தங்க வைக்கப்பட்ட போது கூட சாதிரீயாக பிரிந்து இருந்தார் என இப்பதிவில் படித்தேன்!!! நான் என்ன புரிவேன்
http://kalaiy.blogspot.com/2009/07/1983.html
இந்துக் கல்லூரி அகதிமுகாமில், இரண்டு மாடிகளில் இருந்த வகுப்பறைகளில் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அனேகமாக அனைவரும் உடுத்த உடையுடன் வந்திருந்தனர். அவர்களில் பலர் வசதியாக வாழ்ந்தவர்கள். டாக்டர்கள், பொறியியலாளர்கள் என்று கௌரவமான பதவிகளை வகித்தவர்கள். சேர்த்து வைத்திருந்த, நகைகள், பணம் எல்லவாற்றையும் பறி கொடுத்து விட்டு வந்திருந்தனர். முகாமில் நிலவும் வசதிக் குறைபாடுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, ஓரிடத்தில் சலசலப்பு காணப்பட்டது. சனங்கள் இரண்டு பகுதியாக பிரிந்து வாக்குவாதப் பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு விசாலமான மண்டபம். அகதிகள் சுவர்ப்பக்கமாக இரண்டு குழுக்களாக பிரிந்து நின்று வாய்ச் சமரில் ஈடுபட்டனர்.

நடுப்பகுதி மட்டும் வெற்றிடமாக இருந்தது. அங்கே 'சாக்' கட்டியால் கோடு கீறப்பட்டிருந்தது. எனக்கு உடனே அசோகவனத்தில் சீதை கிழித்த கோடு ஞாபகம் வந்தது. கோட்டுக்கு அந்தப்பக்கமும், இந்தப்பக்கமுமாக இரண்டு பிரிவுகளாக இருந்தனர். அவர்களுக்குள் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை. அங்கே என்ன நடக்கின்றது என்பது, ஒரு சில நிமிடங்களில் புரிந்தது. தம்மை உயர்சாதியாக கருதிக் கொள்ளும் ஒரு பிரிவினர், பிறரை தீண்டத்தகாதவர்களாக கோட்டிற்கு மறுபக்கம் இருத்தி இருந்தனர். சிங்களவனிடம் அடிவாங்கினாலும், அனைத்தையும் இழந்த போதும், யாழ்ப்பாணத் தமிழர்கள் சாதி அடையாளத்தை மட்டும் இழக்க மாட்டார்கள் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்.
**
Thank you!!!

viyasan said...

ச‌கோ.சார்வாக‌ன்,

//ஈழ தமிழர்கள் ,கிறித்துவம் வழியாக சிங்களர் ஆனது, நேரடியாக பவுத்த சிங்களர் ஆனதும் ஏன்? என்பதே நம் கேள்வி!!//

அத‌ற்குப் ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள். அவ‌ற்றில் ஒன்றை, அதாவ‌து சிங்க‌ள‌ அர‌சு சிங்க‌ள‌ ஆய‌ர்க‌ளின் ஆத‌ர‌வுட‌ன் திட்ட‌மிட்டு, பாட‌சாலைக‌ளில் த‌மிழைக் க‌ற்பிப்ப‌தை நிறுத்திய‌தால், அடுத்த‌ த‌லைமுறையின‌ர், தமிழையே அறியாததாலும், ஒரே ம‌த‌த்தைச் சார்ந்த‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் ம‌த்தியில் வாழ்ந்த‌தாலும் அவ‌ர்க‌ளுட‌ன் க‌ல‌ந்து காணாம‌ல் போன‌தை இந்த‌ப்ப‌திவில் பார்த்தோம்.



//சாஸ்திரி,பண்டார நாயகே ஒப்பந்தப் படி துரத்தப்பட்ட மலையக் தமிழர்களை ,அப்போது ஈழ தமிழர் கைவிட்டார்.//

இந்த‌ விட‌ய‌த்திலும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கெதிராக‌ ந‌ச்சுத்த‌ன்மைமிக்க‌ பொய்ப்பிர‌ச்சார‌ங்க‌ள் செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌, அதையும் பின்பு பார்ப்போம்.

//பாருங்கள் 1983 கலவரத்தால் கொழும்பில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் சில பள்ளிக் கூடங்களில் தங்க வைக்கப்பட்ட போது கூட சாதிரீயாக பிரிந்து இருந்தார் என இப்பதிவில் படித்தேன்!!! நான் என்ன புரிவேன் http://kalaiy.blogspot.com/2009/07/1983.//

1983 க‌ல‌வ‌ர‌த்தைப் ப‌ற்றியெல்லாம் நானும் உங்க‌ளைப் போல் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் நூல்க‌ளையும், க‌ட்டுரைக‌ளையும் ப‌டித்துத் தான் அறிந்து கொண்டேன். ஆனால் நீங்க‌ள் மேலே குறிப்பிட்ட‌ வ‌லைப்ப‌திவாள‌ர் நேரடி அனுப‌வ‌த்தைச் சொல்கிறாரோ அல்ல‌து யாரோ சொன்ன‌தை அவ‌ரும் கொஞ்ச‌ம் கூட்டிக் குறைத்து ஒப்புகிறாரோ என‌க்குத் தெரிய‌வில்லை. எல்லா ச‌முதாய‌த்திலும் சாதி வெறிய‌ர்க‌ள் உண்டு. நான் முன்பே கூறிய‌து போல், சில இல‌ங்கைத் த‌மிழ் வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளால், இணைய‌த்த‌ள‌ங்க‌ளில் ஆதிக்க‌ம் செலுத்தும் த‌லித்திய‌க்க‌ங்களின‌தும், பெரியாரிஸ்டுக்க‌ளின‌தும் ஆத‌ர‌வைப் பெற்றுப் புக‌ழ‌டைவ‌தற்காக, த‌ம்மைப் பாதிக்க‌ப்பட்ட‌வ‌ர்க‌ளாக‌க் காண்பித்து அவர்க‌ளின் அனுதாப‌த்தைப் பெறுவ‌த‌ற்காக‌, வில்ல‌ன்க‌ளாக்க‌ப்ப‌ட்ட‌ யாழ்ப்பாண வெள்ளாள‌ர்க‌ள் கூட‌ வெள்ளாள‌ரல்லாத‌ பிர‌பாக‌ர‌னைத் த‌ம‌து த‌லைவ‌னாக‌ முழும‌ன‌தாக‌ ஏற்றுக்கொண்டு ஆத‌ரவ‌ளித்தார்கள் என்ற‌ உண்மையை நாம் இங்கே ம‌ற‌ந்து விட‌க் கூடாது.

Anonymous said...

//
//இல‌ங்கையின் க‌ரையோர‌ம் முழுவ‌தும் பிழைப்பு தேடி த‌மிழ்நாட்டிலும் கேர‌ளாவிலிருந்தும் தென்னிந்தியாவின் ஏனைய‌ ப‌குதிக‌ளிலிருந்தும் இல‌ங்கையின் க‌ட‌ல்வ‌ள‌ம் நிறைந்த‌ கரையோர‌ங்க‌ளில் குடியேறிய ப‌ர‌தர் ப‌ர‌த‌வ‌ர் ப‌ர‌வ‌ர் என‌ அழைக்க‌ப்ப‌டும் சாதியின‌ரும்//

ஹி ஹி ஹி தமிழகத்தின் பிரபல பதிவர் எழுதியிருக்கார் வாழ்கை தரம்,கல்வி எல்லாவற்றிலும் தமிழகம் இலங்கையை விட மேல் என்று அப்படியிருக்க நீங்க சொன்னதை நான் எப்படி நம்ப முடியும்?//

அவர்கள் எந்தக் காலத்தில் இலங்கைக்குச் சென்றிருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் நரி அய்யா?

கி. பாரதிதாசன் கவிஞா் said...

வணக்கம்!

இன்றுதான் உங்கள் இடுகைகளைக் கண்ணுற்றேன்!
நன்றுதான் உங்கள் நறுந்தமிழ்! - வென்றுநாம்
வாழ வழிகள் வகுத்திடுவோம்! நம்பகையை
அழப் புதைப்போம் அடித்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

மரபுக்கவிதை கற்க விருப்பம் உள்ளதாக எழுதியுள்ளீா்

என் வலையில் மரபு இலக்கணத்தை எழுத உள்ளேன் தொடா்ந்து படித்து பயன்பெறவும்

viyasan said...

இன்றுஇங்கு உங்க‌ள் வ‌ருகைக‌ண்டு இன்புற்றேன்
தென்ற‌லிங்கு உங்க‌ள் தேன்த‌மிழ்! ‍- என்றென்றும்
அன்னைத‌மிழ் அவ‌ளை ஆள‌வைக்க! ந‌ம்ப‌கையை
சொன்ன‌ப‌டி புதைப்போம் அடித்து!


ஐயா பார‌திதாச‌ன்

வ‌ண‌க்க‌ம்

உங்க‌ள் வ‌ருகைக்கும் என‌து விருப்ப‌த்தை ஏற்றுக் கொண்ட‌மைக்கும் ந‌ன்றி. (என்னுடைய‌ ம‌ர‌புக்க‌விதையில் பிழையிருந்தால் திருத்த‌ம் செய்ய‌வும்)

வேகநரி said...

//வில்ல‌ன்க‌ளாக்க‌ப்ப‌ட்ட‌ யாழ்ப்பாண வெள்ளாள‌ர்க‌ள் கூட‌ வெள்ளாள‌ரல்லாத‌ பிர‌பாக‌ர‌னைத் த‌ம‌து த‌லைவ‌னாக‌ முழும‌ன‌தாக‌ ஏற்றுக்கொண்டு ஆத‌ரவ‌ளித்தார்கள் என்ற‌ உண்மையை நாம் இங்கே ம‌ற‌ந்து விட‌க் கூடாது.//
இந்த விஷயத்தில் நீங்க ரொம்ப தான் குழப்பிறிங்க அல்லது நீங்க தான் குழப்பி போய்யிருக்கறீர்களோ தெரியல்ல. தமிழகத்தில் கருணாநிதி தாழ்தபடுத்தபட்ட ஜாதியை சேர்ந்தவர் என்றாலும் தமிழகம் அவரை தலைவராக ஏற்று கொண்டுள்ளது. அதே போல் திராவிட பகுந்கறிவுவாதிகளால் ஜாதிரீதியாக விமர்சிக்கபட்ட ஜெயலலிதாவையும் தமிழகம் தலைவராக ஏற்று கொண்டுள்ளது. அதே போல் சம்பந்தர் இலங்கை தமிழர்கள் தலைவராக ஏற்று கொண்டுள்ளார்கள் உண்மை. இலங்கை தமிழர்கள் தலைவராக தான் வர வேண்டும் என்பதிற்கா முன்னைய உண்மையான இலங்கை தலைவர் அமுதலிங்கத்தை படுகொலை செய்தவர் பிரபாகரன்.

வேகநரி said...

//நீரும் வியாசரும் இதே போல பேசுகின்றீர்கள் எனி அண்டர்கிரவுண்ட் கனெக்‌ஷன் :-))//
வவ்வால், இலங்கையில் வாழும் உறவுகள் சிலரோடு எனக்கு சொந்த உறவு முறையுள்ளது. இதனாலே தான் இலங்கை மீது பொருளாதார தடை கொண்டுவரும்படி கேட்கும் தமிழக கோமாளித்தனமான அரசியல் ஆதாயம் கெண்ட போராட்டங்களின் போது பதறி விடுகிறேன். நான் எனது 12வது வயது தொடக்கம் இலங்கை பல தடவை சென்றிருக்கிறேன். இதை தவிர இலங்கையை சேர்ந்த அருமையான நண்பர்கள் சிலரை வெளிநாடுகளில் பெற்றுள்ளேன்.

viyasan said...

ச‌கோ. வேக‌ந‌ரி,

நீங்க‌ள் என்ன‌ சொல்ல‌ வ‌ருகிறீர்கள் என்ப‌தே தெரிய‌வில்லை, குழ‌ப்ப‌மாக‌ இருக்கிற‌து. அமிர்த‌லிங்க‌மும் இல‌ங்கைத் த‌மிழ‌ர் தான் அவ‌ருக்கும் இந்தியாவுக்கும் எந்த‌ தொட‌ர்பும் கிடையாது. அவ‌ரும், ச‌ம்ப‌ந்த‌னும் கூட‌ சாதியடிப்ப‌டையில் வெள்ளாள‌ர்க‌ள் தான். நான் சொல்வ‌து என்ன‌வென்றால், த‌மிழ்நாட்டுச் சாதிப்பிர‌ச்சனைக‌ளில் ஊறித் திளைத்த‌ த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் சில‌ர் இல‌ங்கையில் த‌மிழ்நாட்டில் போல‌ சாதிப்பிர‌ச்ச‌னைக‌ளும், சாதிக்கொடுமைக‌ளுமிருப்ப‌தாக‌க் காட்டிக் கொள்வ‌து ம‌ட்டும‌ல்ல‌, இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளில் பெரும்பான்மையின‌ராகிய‌ யாழ்ப்பாண‌ வெள்ளாள‌ர்க‌ளை வில்ல‌ன்களாக‌ காட்டவும் முய‌ல்கிறார்க‌ள். ஆனால் அதே பெரும்பான்மை வெள்ளாள‌ர்க‌ள், சாதிப்பாகுபாடின்றி வெள்ளாள‌ர‌ல்லாத பிர‌பாக‌ர‌னைத் த‌லைவ‌ராக‌க் கூட‌ ஏற்றுக் கொண்டார்க‌ள் என்ப‌து தான்.

NilaMaaran said...
This comment has been removed by a blog administrator.